47

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உடைந்து அழுத யதிராவை பார்த்துக் கொண்டு நின்றிருந்த முகிலுக்கு மூளை கூட செயல்பட மறுத்தது‌."யதிரா.. ஏன் இப்படி அழற.? இவ்வளவு சோகம் ஏன்.?" என கேட்டு அவளின் தோளை பற்றினாள் கே.கே.ஆறாக ஓடும் விழியினை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் நிமிர்ந்தாள் யதிரா. "உங்க இரண்டு பேருக்குமே ஏன் புரியல கே‌.கே.. என்னோட மைன்ட் செட்டை விடவும் இது எல்லாமே ரொம்ப அதிகமா இருக்கு.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. என்னோட உலகத்துல என் மனசை புரிஞ்சிக்கிட்டது என் அப்பாவும் இவரும்தான். நான் கடவுளா நம்பியதும் இவரையும் என் அப்பாவையும்தான்.. ஆனா என்னோட உலகத்துல நான் நம்பியவங்க இரண்டு பேருமே என்னை கை விட்டு போயிட்டாங்க.. என் அப்பா இறந்து போயிட்டாரு.. இவரோ என்னை விட்டுட்டு போயிட்டாரு.. ஒரு அழுமூஞ்சியாவும், வீக்கான கேரக்டராவும் இருக்கணும்ன்னு எனக்கு மட்டும் ஆசையா.? நான் இதுதான் கே.கே.." என்றவள் குலுங்கி அழுதாள்.கே.கே அழும் யதிராவையும் சிலையாக நிற்கும் முகிலையும் மாறி மாறி பார்த்தாள்."முகி.." என்று அமர்ந்தவண்ணமே அவனது கையை பற்றினாள்.அவனது முகத்தில் எந்தவித உணர்ச்சியுமே இல்லை."யதி அழாம இரு.." என்றாள் மீண்டும்."எப்படி அழாம இருக்க சொல்ற கே.கே.?" என கேட்டவள் முகத்தை துடைத்துக் கொண்டு அவளை பார்த்தாள்‌."நான் அழறது பிடிக்கலன்னு சொல்ற நீ.. ஆனா நான் எப்படி அழாம இருக்கறதுன்னு நீ சொல்லு.. என் வாழ்க்கையே பொய்.. என் வாழ்க்கையில் நான் சந்திச்ச மனுசங்க எல்லோரும் பொய்.. என்னை மாதிரி ஒரு நிலமையில் யாரா இருந்தாலும் தற்கொலை பண்ணிப்பாங்க கே.கே.‌. நான் இவ்வளவு நாளும் தாக்கு பிடிச்சி வாழ்ந்ததே பெரிய விசயம் போல் தோணுது எனக்கு.." என்றாள்.அவளின் வார்த்தைகள் நெஞ்சை தாக்கும் ஒவ்வொரு நொடியும் செத்து பிழைப்பதை போல உணர்ந்தான் முகில்."நான் பலவீனமா இருந்தா அதுக்கு இவர் என்னை விட்டுட்டுதான் போகணுமா.? வேற வழியே இல்லையா கே.கே.? பக்கத்துல இருந்து வாழும் வழியை சொல்லி தந்திருக்க கூடாதா.? வலியால நான் பலமாவேன்னு எதிர்ப்பார்த்தார் இவரு‌.. ஆனா அந்த வலியால நான் உடைஞ்சி விழுந்துடுவேன்னு ஒரு செகண்ட் கூட நினைக்கலையா.?" என்றாள் கெஞ்சல் கலந்த அழுகையோடு."இவரு விட்டுட்டு போன கொஞ்ச நாள் கழிச்ச உடனே நான் என் குழந்தையவே இழந்துட்டேன்.. அதை விடவுமா இது வலி.? வலிகள் மொத்தமும் என்னை உடைக்கத்தான் செய்யுமே தவிர என்னை பலமாக்காது.. இது ஏன் உங்களுக்கு புரியல.? உங்களோட ஒவ்வொரு செயலும் என் மனசை ரணமா மட்டும்தான் மாத்துது. நானென்ன மெஷினா அதிக பவர் தந்தா சிறப்பா செயல்பட.? மனுசிப்பா.. தொட்டா உடையற கண்ணாடியா மனசு. இந்த மனசுல நெருப்பு பந்தை தூக்கி எறிய உங்களுக்கு எப்படி மனசு வந்தது.?" என கதறியபடி கேட்டாள்.யதிராவின் கேள்விகள் கே.கேவையும் உடைத்தது. மனம் அழுதது அவளுக்கு.கைவினைக்காக வளைக்கப்பட்ட உயர் ரக மூங்கில் படீரென உடைந்து போனது போன்ற அதிர்ச்சியில் இருந்தான் முகில். தான் போட்ட கணக்கின் அடிப்படையே தவறு என இப்போது புரிந்துக் கொண்டான்.அவள் கேட்ட கேள்வி அவனை உலுக்கியது. 'நான் பலவீனா இருந்தா அதுக்கு இவர் என்னை விட்டுட்டுதான் போகணுமா.? வேற வழியே இல்லையா.?' என யதிரா கேட்டது அவனது காதுகளிலேயே சுழன்றுக் கொண்டிருந்தது. 'சந்தர்ப்பங்கள் அமையும்போது கொஞ்சமாக நேரம் தந்து இருந்தால் இந்த விசயம் சுலபமாக முடிந்திருக்குமோ.?' என இப்போது எண்ணினான். இதை ஏன் முன்பே யோசிக்கவில்லை என்று தன்னையே நொந்துபோய் கேட்டுக் கொண்டான்."சாரி யதி.." என்றான்.யதிரா அழுதபடியே தலையசைத்தாள். "சாரி ஏன் சொல்றிங்க.? இன்னும் உடைங்க.. அப்பத்தான் உங்களுக்கு நிம்மதியா இருக்கும். வாடி சேர்ந்து வாழலாம்ன்னு கூப்பிடுங்க. இரண்டு குழந்தை பிறந்த பிறகு வாழ்ந்த வாழ்க்கை அத்தனையும் ஒத்திகைன்னு சொல்லிட்டு கூட போங்க.. நான் முட்டாள்தானே.? அதையும் நம்பி மறுபடியும் வாழ்க்கையை தொலைக்கிறேன்.." என்றாள்.முகில் கவலையோடு தன் தலை முடியை கோதிக் கொண்டான். அவள் முன்னால் வந்து நின்றான்."ஒருவேளை நான் விட்டுப்போகாம செத்து போயிருந்தா என்ன பண்ணியிருப்ப.?" என்றான் கோப குரலில்.யதிராவின் அழுகை சட்டென நின்றது. அவனை குழப்பமாக பார்த்தாள்."மூணு வருசத்துக்கு முன்னாடியே நான் செத்துட்டேன் யதி.." என்றவன் தலையை பிடித்தபடி அவள் முன் மண்டியிட்டான்.யதிரா இன்னும் அதிகமாக குழம்பி போனாள். "எனக்கு பிளட் கேன்சர்ன்னு டாக்டர் சர்ட்டிபிகேட் தந்துட்டாங்க.. அதனால்தான் நான் உன்னை விட்டு பிரிஞ்சி போனேன்.. ஆனா அது முழுக்க முழுக்க சௌந்தர்யாவோட பிளான்னு எனக்கு அப்ப தெரியாது.." என்றவன் நடந்த அத்தனையையும் அவளிடம் சொன்னான்.முகில் கடந்து வந்த சோதனையை கேட்டவளுக்கு பரிதவிப்பாக இருந்தது."நான் உன்னை விட்டுட்டு போக நினைக்கல யதி.. ஆனா நான் செத்து போனா அதை நீ தாங்கிக்க மாட்டன்னு நினைச்சிதான் விட்டுட்டு போனேன்.. உனக்கு இரண்டாவது கல்யாணம் ஆயிடுச்சின்னு எங்க அப்பா மட்டும் போய் சொல்லாம இருந்திருந்தா நான் உடனே உங்கிட்ட ஓடி வந்திருப்பேன். மூணு வருசமா நான் பட்ட கஷ்டமும், என்னோட தனிமையும் ஏக்கமும் உனக்கு புரியாது யதி.. நீயும் என்னை விட அதிகமா கஷ்டப்பட்ட.. நான் இல்லன்னு சொல்லல.. நான் இல்லாதபோது நீ இந்த கஷ்டத்தை படக்கூடாதுன்னு நினைச்சிதான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன் நான்.." என்றவனின் குரலில் சோகம் அதிகமாக இருந்தது."ஒருவேளை உண்மையிலேயே நான் திடீர்ன்னு செத்து போயிட்டா நீ என்ன செய்வியோன்னு யோசிச்சேன். பயமா இருந்தது. அதனாலதான் இரண்டாவது முறை உன்னோடு வாழ்ந்தபோது வாழ்க்கையை வேற விதமா வாழ வச்சேன்.. உன்னை கஷ்டப்படுத்தினேன். நாளைக்கே நான் திடீர்ன்னு இறந்து போனாலும் நீ நிம்மதியா வாழணும்ன்னு நினைச்சிதான் உனக்கு சிக்கனத்தை பத்தி கத்து தர நினைச்சேன்.. நீ உன் சொந்த காலுல நிற்கணும்ன்னுதான் உன்னை வேலைக்கு போக வச்சேன். கஷ்டத்தை நீ எதிர்க்கொள்ள கத்துகணும்ன்னுதான் நீ கேட்ட உடனே உன்னை வேலைக்கு அனுப்பாம உன்னை அலைய விட்டு கெஞ்ச வச்சேன்.. நான் கையாண்ட முறை தப்புதான் யதி.. ஆனா என் நோக்கம் கரெக்ட் யதி.. என்னை நீயே புரிஞ்சிக்கலன்னா வேற யார் புரிஞ்சிப்பாங்க.?" என்றான்.யதிரா மறுப்பாக தலையசைத்துவிட்டு அவனின் நெஞ்சில் கை வைத்து விலக்கி தள்ளினாள். "எங்க அப்பா இயற்கையா சாகல, கொல்லப்பட்டார்ன்னு தெரிஞ்சும் இன்னைக்கு கூட நான் அவரை நினைச்சி அழாம உங்களை பத்தி நினைச்சி அழறேன்.. ஏனா அந்த அளவுக்கு நீங்க எனக்கு கஷ்டத்தை தந்திருக்கிங்க.. மீளாவே முடியாத சோகம் மாமா என்னோடது. தூரத்துல இருந்து கருத்து பேசுற உங்களுக்கு இது புரியாது. பொய்யாலும், துரோகத்தாலும் வலியை அனுபவிச்ச நீங்க அந்த வலி எனக்கு வர கூடாதுன்னுதான் நினைச்சிருக்கணுமே தவிர அதே வலியால் நான் துடிச்சி அழணும்ன்னு நினைச்சிருக்க கூடாது.." என்றவள் கண்களை துடைத்துக் கொண்டாள். எழுந்து நின்றாள்."என்னை விட்டுடுங்க மாமா.. நான் அழுமூஞ்சியா இருக்க கூடாதுன்னு எதிர்ப்பார்க்கறது உங்க தப்பு கிடையாது. ஆனா நீங்க எதிர்பார்க்கற பர்மெக்சன்ல நான் இல்ல. நீங்க வேற ஆளை பார்த்துக்கங்க.. ப்ளீஸ்.." என்றாள் கையெடுத்து கும்பிட்டபடி.இந்த முறை முகில் பயந்து போனான்."யதி.. ரொம்ப சீரியஸ் ஆக வேணாம். ப்ளீஸ்.." என்றான்.யதிரா தன் தொண்டையில் சேர்த்து வைத்த அதே அழுகை குரலோடு சிரித்தாள். "இனி ஆக எதுவுமே இல்ல மாமா.. எல்லாமே முடிஞ்சிடுச்சி.. என் லைஃப் காலி.. இனி கனவுல கூட எந்த நிம்மதியும் இருக்காது.." என்றாள்.தன் அறைக்கு சென்றவள் தனது பர்சை கையில் எடுத்தாள். அதில் பணம் உள்ளதா என சோதித்து பார்த்து பத்திரப்படுத்திக் கொண்டாள். அந்த அறையிலிருந்து அவள் வெளியே செல்லும் முன் உள்ளே வந்தான் முகில். கதவை தாளிட்டான். அவளை நேராக பார்த்தான்."யதி.. என்ன பண்ற நீ.?" என்றான் கோபமாக."என் லைஃப்ல தலையிடாதிங்க.." என்றவள் அந்த அறையின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.கே.கேவின் அருகில் வந்தவள் அவளின் கையை பற்றினாள். "ரொம்ப நன்றி கே.கே.. உன் உதவி இல்லன்னா இன்னைக்கு நான் இருந்திருக்கவே மாட்டேன்.. உன் நட்பும் பொய்.. நீ என் கூட பேசிக்கிட்ட எல்லாமே பொய்யுன்னு எனக்கும் தெரியும். ஆனா உன் உதவியை என்னால எப்பவுமே மறக்க முடியாது. நீ இல்லன்னா இன்னைக்கும் கூட நான் சுயமரியாதை இல்லாமதான் வாழ்ந்துட்டு இருந்திருப்பேன். அதுக்காக உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. உன் வீட்டுல தங்க வச்சி பார்த்துக்கிட்டதுக்கும் ரொம்ப நன்றி.." என்றவள் அந்த வீட்டின் கதவை நோக்கி நடந்தாள்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..Word count 864VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN