48

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யதிரா அந்த வீட்டை விட்டு செல்ல முயன்றாள்‌. ஆனால் முகில் அவள் முன் மறித்து நின்றான்."என்னை தயவு செஞ்சு விட்டுட்டுங்க.." என்றாள் அவள் தரையை பார்த்தபடி."நான் ஒருவேளை செத்திருந்தா இன்னேரம் நீ என்ன பண்ணியிருப்ப..? இந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்டு வெளியே போ.." என்றான் முகில்.யதிரா அவனை நிமிர்ந்து பார்த்தாள். "செத்து போயிருப்பேன். நீங்க செத்த உடனே நானும் செத்திருப்பேன்.." என்றாள்.முகில் அவளை ஆத்திரத்தோடு பார்த்தான். "ஆனா காதலுக்காக செத்திருக்க மாட்டா.. உன்னால இந்த பூமியில நிலைச்சி வாழ முடியலன்னு கோழை போல செத்திருப்ப.. அதுக்கு புனிதமான காதல்ன்னு பேரும் வச்சிருப்ப.." என்றான்.யதிராவின் முகம் இருளடைந்தது. அவன் சொன்னது உண்மை என அவளுக்கும் புரிந்தது. அதை மறுத்து பேச அவளால் முடியவில்லை."இதுதான் நீ யதி.. சின்ன சின்ன பிரச்சனையை கூட சமாளிக்க முடியாம ஓடுற.. என் பொண்டாட்டி இப்படி இருக்கறது எனக்கு பிடிக்கல. அதனாலதான் நானே உனக்கு வலியை தந்தேன். நான் தந்த வலியை என்னால ஆற வைக்க முடியும்ன்னு நம்பினேன் நான். அதனாலதான் இப்படி ஒரு கிறுக்குதனமான முடிவை எடுத்தேன்.. இது உனக்கு இவ்வளவு வலியை தரும்ன்னு நான் நினைக்கல. சாரி.. ஆனா ப்ளீஸ் என்னை விட்டு போகாதே.. எதுவா இருந்தாலும் இங்கேயே இருந்து பேசு.. எவ்வளவு வேணாலும் சண்டை போடு.. நம்ம பிரச்சனையை நாமளே பேசி தீர்க்கலாம். ப்ளீஸ் இனிமேலும் ஓடாதே.." என்றான்.யதிரா அவனை குழப்பத்தோடு பார்த்தாள். அது முகிலுக்கு சிறு நம்பிக்கையை தந்தது. அவளின் கை பற்றி அழைத்து சென்று சோஃபாவில் அமர வைத்தான்."யதிரா.. நான் நடந்த எல்லாத்தையும் சொல்றேன். கேட்டுக்கோ.. என் அக்காவும் உன் அண்ணனும் கேம்ப்ளர்ஸ். அவங்க இரண்டு பேருக்கும் பணம் தேவைப்பட்டதாலதான் நமக்கு கல்யாணத்தையே பண்ணி வச்சாங்க. அதே அவங்களுக்கு பணம் தேவைப்பட்டதாலதான் உங்க அப்பாவை கொலை பண்ணி நம்மையும் பிரிச்சி வச்சாங்க.. நமக்கான எதிரிகள் அவங்க. அவங்க முன்னாடி நாம வாழ்ந்து காட்டணுமே தவிர பிரிஞ்சி போக கூடாது.. நான் உன்னை விட்டுட்டு என் வீட்டுக்கு போக காரணம் எங்க அக்கா மனசுல நம்பிக்கையை வர வைக்கதான்.." என்றான்.யதிரா அவனை கோபத்தோடு முறைத்தாள். "ஆனா இதை என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாமே.." என்றாள்."சாரி.. ஆனா எனக்கு அப்போதைக்கு இருந்த ஆப்சன் அதுதான். உன்னை பிரியணும்ன்னு நானும் நினைக்கல. இது டெம்ரவரின்னு எனக்கு தெரியும். உங்க பிரிவு அப்படியே நிலைச்சி போயிட சான்ஸ் இருக்குன்னு கே‌.கே கூட என்கிட்ட சொன்னா.. நான் எடுத்த ரிஸ்க் என்னன்னு எனக்கே நல்லா தெரியும். ஆனா எனக்கு வேற வழியே தெரியல.. என் இடத்துல இருந்து ஒரு செகண்ட் யோசிச்சு பாரு.. என்னோட பயத்தையும் வலிகளையும் பத்தி நினைச்சி பாரு.." என்றான்.யதிரா வேதனையோடு சிரித்தாள். "என் இடத்துல இருந்து நீங்க யோசிச்சி பாருங்களேன்.. எல்லாரும் கை விட்ட பொண்ணு நான்.. எத்தனை வலிகளை நான் அனுபவிப்பேன்னு நீங்க யோசிச்சி பார்த்திங்களா.?" என்றாள் கண்களை துடைத்தபடி."சாரி யதி.." என்றான் இவன்."இல்ல மாமா.. உங்களுக்கு என் வேதனை சுத்தமா புரியாது. இனியும் சேர்ந்து வாழ்ந்தா கூட அது என்னோட சகிப்புத்தன்மையால மட்டும்தான் இருக்குமே தவிர வேற ஏதும் இருக்கும்ன்னு நம்பிக்கை இல்ல.." என்றவளை கவலையோடு பார்த்தான் முகில்."அப்படி சொல்லாதே யதி.." என்றான்."இதான் உண்மை மாமா.. எதுவும் நிச்சயம் இருக்கா இல்லையாங்கறது விசயமே இல்ல.. ஆனா நான் நம்பினேன்னா இல்லையாங்கறதுதான் விசயமே. என்னோட அத்தனை நம்பிக்கையும் உடைஞ்சி போச்சிங்கறதுதான் இங்கே முக்கியம்.." என்றாள் அவள்.முகில் புரிந்துக் கொண்டதாக தலையசைத்தான்."நான் போறேன் மாமா.. இது வேணாம்.. நீங்க உங்களுக்கு ஏத்த ஒரு பொண்ணை பாருங்க.. நல்லபடியா வாழுங்க.." என்றாள்.கே.கே அவளை கவலையோடு பார்த்தாள். யதிரா அவளை பார்த்து மென்மையாக புன்னகைத்தாள். கதவை நோக்கி நடந்தாள்."மிஸ் யதிரா.." முகிலின் அழைப்பில் மீண்டும் நின்றாள் அவள். திரும்பி பார்த்தாள். முகில் தன் பேண்டின் இரு பக்க பாக்கெட்டிலும் கை விட்டபடி சுவற்றில் ஒரு புறமாக சாய்ந்து நின்றிருந்தான்."என்னோட கம்பெனியில் நீங்க மூணு வருசம் வேலை செய்றதா சொல்லி சைன் பண்ணி இருக்கிங்க.. நீங்க இடை நின்னா அப்புறம் நான் உங்க அம்மாவைதான் கோர்டுல நிறுத்துவேன்‌.." என்றான்.யதிராவுக்கு மொத்த உடம்பும் கோபத்தால் எரிந்தது. அவனை ஆத்திரத்தோடு பார்த்தாள்."நீங்க ரொம்ப ஓவரா போறிங்க.." என்றாள்.முகில் தன் கையை விரித்துக் காட்டினான். "எனக்கு வேற வழி தெரியல யதி.. என்னோட சின்சியாரிட்டை உன்கிட்ட நிரூபிக்க நினைக்கிறேன் நான்.. அதுக்காக என்கிட்ட இருக்கற ஒரே வழி இதுதான்.. நீ என்னை எப்போதும் பிரிய கூடாது.. பிரியவும் விட மாட்டேன்.. எனக்கு சாவுன்னு ஒன்னு வந்தா கூட அந்த நேரத்துல நீ நிம்மதியா வாழும்படி சந்தர்ப்ப சூழ்நிலைகளை அமைச்சி தந்துட்டுதான் சாவேன்.. என்னோட ஒரே குறிக்கோள் அதுதான்.." என்றான்.அவன் சக்கரையாகதான் பேசினேன். ஆனால் அது யதிராவுக்கு கசப்பைதான் தந்தது.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..Word count 513VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN