50

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வணக்கம் நட்புக்களே.. மீண்டும் பழைய பார்ம்ல வந்துட்டேன்‌.. சில நாளா ஆஃப் டே வொர்க்தான் இங்கே தந்தேன். இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டிங்க நீங்க. தேங்க்ஸ்ப்பா..யதிரா சொல்லி சென்றதை நினைத்து ஆச்சரியத்தில் இருந்தான் முகில்."என் பொண்டாட்டிக்கு சொரணை வந்துடுச்சி போல கே.கே.." என்றான்.கே.கே சோஃபாவில் இருந்த தலையணை ஒன்றை எடுத்து அவன் மீது வீசினாள். "பைத்தியகாரா.. உங்க சண்டையில் என் மண்டையையும் போட்டு ஏன் உருட்டுறிங்க.?" என்றாள்."ஏன்ம்மா.? என்ன இருந்தாலும் நீ தோழிப்பெண்.. எனக்கும் தோழி.. அவளுக்கும் தோழி.. இடிப்பாடுகளையும் மிதிப்பாடுகளையும் தாங்குறவங்கதானே நண்பர்கள்.?" என கேட்டபடி அவளருகே வந்து அமர்ந்தான் அவன்.கே.கே அவனை முறைப்பாக பார்த்தாள். "இனி நான் அவளுக்குதான் சப்போர்ட் பண்ண போறேன்.. மகனே நீ தக்காளி சட்னி ஆக போற.. ஏன்டா யதிராவை பகைச்சிக்கிட்டோம்ன்னு புலம்ப போற.." என்றாள்."அதுக்காகத்தான் வெயிட்டிங் பேபி.." என்று பெருமூச்சோடு சொன்னான் முகில்.முகில் சொன்னது அறைக்குள் அமர்ந்திருந்த யதிராவிற்கு வேதனை மிகுந்த சிரிப்பைதான் தந்தது. "இவங்க பார்வையில் நான் ஒரு பொம்மை போல தெரியறேன் போல. அதனாலதான் சில மாற்றம் செஞ்சிடலாம்ன்னு நினைக்கிறாங்க.. ஆனா ரத்தம் சதையோட இருக்கற மனுசங்களுக்கு சொந்தமாவே மனசுன்னு ஒன்னு இருக்கறதை மறந்துட்டாங்க.. மனசு இயல்பா அமையறது. அதை சில விசயங்களை வச்சி விஷமா மாத்த நினைக்கிறது முட்டாள்தனம்ன்னு ஏன் இவங்களுக்கு புரியல.." என தனக்குதானே கேட்டுக் கொண்டாள்.உணவு சமைத்து முகிலுக்கு தந்தாள் கே.கே. உணவை பார்த்த பிறகே முகிலுக்கு பசி உண்டானது. கே.கேவோடு விவாதித்தபடியே உணவை உண்டு முடித்தான்.நேரங்கள் கடந்த பிறகு தன் கை கடிகாரத்தை பார்த்துக் கொண்டே எழுந்து நின்றான் முகில். "நான் ஸ்டேசன் போகணும் கே.கே.. என் மாமனார் கொலை கேஸ்ல தேவைப்படும் தகவல்களை சொல்றதா சக்தி மேடம்க்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன். நான் கிளம்பணும்.." என்றான்.கே.கே சரியென தலையசைத்தாள். முகில் அங்கிருந்து கிளம்பியபோது அவசரமாக கதவை திறந்துக் கொண்டு தன் அறையிலிருந்து வெளியே வந்தாள் யதிரா."ஸ்டேசன் நானும் வரேன்.." என்றாள்.முகிலும் கே.கேவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். "நீ அங்கே வேணாம்.." என்றான் முகில்.யதிரா ஹாலில் இருந்த தன் கைப்பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள். "உங்ககிட்ட நான் எப்ப அனுமதி கேட்டேன்.? வரேன்னு தகவல்தானே சொன்னேன்.?" என்றவள் முகிலை தாண்டிக் கொண்டு வெளியே நடந்தாள்.முகில் அதிர்ச்சியோடு கே.கேவை பார்த்தாள். கே.கே தன் வாயை ஒரு கையால் பொத்திக்கொண்டு சிரித்தாள்."நீ ஆசைப்பட்ட ஒரு கேரக்டராவே மாறிட்டா அவ.. அப்புறம் ஏன் அதிர்ச்சி ஆகுற.?" என கேட்டாள்.முகில் பெருமூச்சோடு வெளியே ஓடினான்.யதிரா சாலையில் செல்லும் வாகனங்களை பார்த்தாள்‌. தூரத்தில் வரும் ஆட்டோ ஒன்றை கவனித்தவள் அதில் ஏறி செல்லலாம் என நினைத்து கை காட்டிய நேரத்தில் அவளருகே வந்து நின்றது முகிலின் கார்.யதிரா அவனை கோபத்தோடு பார்த்தாள்."வா.. வந்து கார்ல ஏறு.." என்றான் முகில். யதிரா அவனை முறைத்தபடியே வந்து காரின் முன்சீட்டில் ஏறி அமர்ந்தாள்.கார் மீண்டும் வேகம் பிடிக்க ஆரம்பித்தது."யதி சா.." அவன் முழுதாக ஆரம்பிக்கும் முன்பே யதிரா "அடுத்த பொய் எதாவது இருந்தா சொல்லுங்க.." என்றாள் எரிச்சலோடு.முகில் சட்டென வாயை மூடிக் கொண்டான்."இந்த கார் உங்க பிரெண்டோடது.. ரைட்.?" என கேட்டவள் அந்த காரை முன்னும் பின்னும் பார்த்தாள்."யதி அது.." என்று மீண்டும் எதையோ சொல்ல ஆரம்பித்தான் முகில்."கார் இருக்கு.. சொந்தமா கம்பெனி இருக்குன்னு தெரிஞ்சா நான் உங்க பணத்தையெல்லாம் ஏமாத்தி எடுத்துட்டு போயிடுவேன்.. ரைட்.? இதானே நீங்க சொன்ன கணக்கு.?" என்றாள் தாடையில் கை வைத்து யோசிப்பதாக காட்டிக் கொண்டே.முகில் மறுப்பாக தலையசைத்தான். "உனக்கு சிக்கனத்தை கத்து தர நினைச்சேன்.. எப்படி ஒரு சூழ்நிலை வந்தாலும் நீ நிலைச்சி வாழணும்ன்னு ஆசைப்பட்டு இப்படி செஞ்சேன்.." என்றான் அவன்."நோ.. நான் ஏன் அப்படி எடுத்துக்கணும்.? கண்டிப்பா நான் சொன்னதுதான் சரின்னு நான் வாதாடுவேன். அதனால நீங்க வேஸ்டா டிரை பண்ணாதிங்க.. நீங்க பிடிச்ச முயலுக்கு மூணு காலோ இல்லையோ.. ஆனா இனி நான் பிடிச்ச முயலுக்கு மூணே மூணு காலுதான்.. யதிரா அழறா.. யதிரா தண்டச்சோறா இருக்கா.. யதிராவுக்கு ஒன்னும் தெரியாது.. எவ்வளவு அடிச்சாலும் வாங்கிப்பா.. ஆனா எதுவுமே செய்ய மாட்டான்னுதானே நினைச்சிங்க.. ஆனா இனி பாருங்க.. என்னை எடை போட்டதுக்காகவே நீங்க எவ்வளவு பீல் பண்ண போறிங்கன்னு.?" என்றவள் ஸ்டேசன் முன் வண்டி நின்றதும் முதல் ஆளாக இறங்கினாள்.ஸ்டேசனுக்குள் நுழைந்தவள் எந்த பக்கம் செல்வதென தெரியாமல் நின்றிருந்த வேளையில் அவளின் அருகே வந்து அவளின் கையை பற்றினான் முகில். "நான் கூட்டி போறேன்.." என்றான்.யதிரா தன் கையை வெடுக்கென பின்னிழுத்துக் கொண்டாள். "கையை பிடிக்காமலேயே கூட்டி போகலாமே.." என்றாள்.முகில் தன் கையை பின்னே இழுத்துக் கொண்டான். அவளுக்கு வழி காட்ட வேண்டுமே என அவளுக்கும் முன்னால் நடந்தான். யதிரா தனக்கு முன்னால் செல்பவனின் முதுகை முறைத்தாள்.ஸ்டேசனுக்குள் இருந்த மேஜையின் மீது சௌந்தர்யாவின் கணவனும், நீலாவின் பெற்றோரும் அமர்ந்திருந்தனர். மூவரின் முகமும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தன.ஸ்டேசனில் இருந்த இரண்டு லாக்கப்களில் தனி தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் ரூபனும் சௌந்தர்யாவும்.ரூபனின் செல்லின் முன்பு அம்மாவும் நீலாவும் நின்றிருந்தனர். சௌந்தர்யா செல்லின் முன் அவளின் அப்பாவும் அம்மாவும் இருந்தனர்."அப்பாவுக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய உனக்கு எப்படிடா மனசு வந்தது.?" என்று அழுகையோடு கேட்டுக் கொண்டிருந்தாள் யதிராவின் அம்மா. ரூபன் சிலை போல நின்றுக்கொண்டிருந்தான்."ஒத்த பொம்பளப்புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா சௌந்தர்யா.? உன் மேல நான் வச்சிருந்த மொத்த நம்பிக்கையையும் நாசம் பண்ணிட்ட நீ.. இனி நான் எப்படி நம்ம சொந்தக்காரங்க முகத்துல விழிப்பேன்.?" என்றார் முகிலின் அப்பா சௌந்தர்யாவிடம்.அப்பா சொன்னது காதில் விழுந்ததும் முகிலுக்கு மனம் முழுக்க கசப்பாக இருந்தது. அதெப்படி ஒருவர் இப்படி ஒரு சூழ்நிலையிலும் தன் கௌரவத்தை மட்டும் கருத்தில் கொள்கிறாரோ என ஆச்சரியமும் பட்டான்.முகில் அங்கு வந்த சில நொடிகளிலேயே இன்ஸ்பெக்டர் சக்தியும் தன் அறையிலிருந்து வெளியே வந்தார்‌.யதிராவை பார்த்த உடனேயே அவள்தான் முகிலின் மனைவி என்பதை சக்தியால் புரிந்துக் கொள்ள முடிந்தது. யதிரா முகத்தில் இருந்த கோபத்தை தாண்டி தெரிந்த அப்பாவிதனத்தை பார்த்த உடனே கண்டுக் கொண்டார் அவர்.வாங்க முகில்.." என்றார் சக்தி முகிலை பார்த்து.இன்ஸ்பெக்டர் குரல் கேட்டு திரும்பி பார்த்த முகிலின் அப்பா கோபத்தோடு இவனருகே வந்தார்."கூட இருந்தே குழி பறிக்கிறியா நீ.? துரோகி.." என்றவர் அவனின் கன்னத்தில் பளீரென ஒரு அறையை விட்டார்.முகிலுக்கு அறை விழுந்த உடனே யதிரா கண்களில் கண்ணீர் உற்பத்தியாகி விட்டது.முகில் தன் கன்னத்தை பிடித்தபடி அப்பாவை முறைத்தான். அவரின் அறை சற்று பலமாகவே விழுந்து விட்டது. முகிலுக்கு கன்னம் எரிந்தது. அவர் எந்த அளவிற்கு வேகமாக அறைந்துள்ளார் என்பது அடிப்பட்ட அவனுக்கு மட்டும்தான் தெரியும்.அவர் மீண்டும் அறைய முயன்றபோது அவரின் கையை பற்றினார் இன்ஸ்பெக்டர்."போலிஸ் ஸ்டேசன்லயே நீங்க உங்க அராஜகத்தை காட்டுறிங்களா.? நான் நினைச்சா இப்பவே உங்க முட்டியை உடைக்க முடியும்.." என எச்சரித்தார் இன்ஸ்பெக்டர்.முகிலின் அப்பா தன் கையை உருவிக்கொண்டார். முகிலை முறைத்தார்.முகிலும் அவருக்கு சமமாக அவரை முறைத்தான்."துரோகி நான் இல்ல.. உங்க பொண்ணுதான்.. மருமகள்ன்னு நம்பி வீட்டுக்கு கூட்டி வந்தவரையே கொன்னிருக்கா.. கூட பிறந்த என் வாழ்க்கையவே நாசம் பண்ணியிருக்கா.." என்றான் கோபத்தோடு.அவனின் அப்பா ஆத்திரத்தோடு அவனை நெருங்கினார். "உன் பொய் குற்றச்சாட்டை முதல்ல நிறுத்து.. இந்த மேனாமினுக்கியோடு உன்னால சேர்ந்து வாழ முடியலங்கறதுக்காக என் பொண்ணு மேல பொய்யா பழி சுமத்தாத.. உன்னை மாதிரி ஒருத்தனை பெத்ததுக்கு பதிலா உன் அம்மா செத்தே போயிருக்கலாம்.." என்றார் பற்களை அரைத்தபடி.முகிலுக்கு கோபம் மட்டும்தான் அதிகமானது. கண்களை திறந்தபடியே பொய் சித்திரத்தை உண்மை என நம்புவரை என்ன செய்வதென அவனுக்கே புரியவில்லை. அவரின் வார்த்தையால் அவனின் அம்மாவுக்கும் யதிராவுக்கும் கூட கோபம் வந்துவிட்டது."உங்க பொண்ணு பண்ண தப்புக்கு என் பையனை பத்தி ஏன் நீங்க குறை சொல்றிங்க.? ஏதோ நான் இவனை வேற எவனுக்கோ பெத்த மாதிரிதான் பேசுறிங்க நீங்க.. இவனை பெத்துக்க பிடிக்கலன்னா நீங்க செத்து போகலாமே.. என்னை ஏன் சாகணும்ன்னு சொல்றிங்க.? உங்களை நம்பி கை பிடிச்சதுக்கு இன்னும் எத்தனை வார்த்தைகளைதான் நானும் இந்த காதால கேட்கட்டும்.? ச்சே.. இப்படி ஒரு மனுஷனுக்கு கட்டி வச்ச என் பெத்தவங்களைதான் சொல்லணும்.." என்ற அம்மா அங்கிருந்து கிளம்பி சென்றாள். அவளின் பேச்சால் அப்பா ஒரு கணம் திக்பிரமை பிடித்தது போல நின்று விட்டார். எப்போதும் போலதான் அவர் இன்றும் திட்டினார். ஆனால் எப்போதும் வாய் மூடி நிற்கும் அம்மா இன்று காய்ந்து எடுத்து விட்டாள். கொலைக்காரியாக மகள் இருப்பதே அவளின் மனதிற்கு மிக பெரிய பாரம் என்பதை இவர்தான் புரிந்துக் கொள்ளவில்லை. அந்த பாரத்தின் மீது தன் கொடுஞ்சொற்களால் அதிக பாரத்தை ஏற்றிவிட்டார் அவர்‌. அதனால்தான் அம்மா தன் மனதின் காயத்தை வார்த்தைகளால் அப்படியே கொட்டி விட்டாள்.யதிரா அவரின் முன்னால் வந்து நின்றாள். அவளுக்கு ஏற்கனவே பல கோபம் இருந்தது. எதை எப்படி வெளி காட்டுவது என்றே தெரியாமல் குழம்பி கொண்டிருந்தவளுக்கு மேனாமினுக்கி என்ற வார்த்தை பயங்கர கோபத்தை தந்து விட்டது."மேடம் இவர் என்னை மேனாமினுக்கின்னு பேசினார்.. இந்த வார்த்தை என் மனசை ரொம்ப காயப்படுத்திடுச்சி.. இதை நான் அவதூறு வழக்கா தொடுக்கலாம்ன்னு இருக்கேன். நீங்க இந்த கேசை எடுத்துக்கலன்னா எனக்கு அவமானத்தால தற்கொலை பண்ணிக்கறதை தவிர வேற வழியே தெரியல.. இவரோட வார்த்தையால் பாதிக்கப்பட்டு நான் பண்ணிக்கப்போற தற்கொலையின் ஆதாரத்துக்காக எழுத போற கடிதத்துல இவரோட பேரை மென்சன் பண்றேன்.. தயவுசெஞ்சி அப்போதாவது அதை கேஸா பைல் பண்ணுங்க.." என்ற யதிரா கண்ணீர் கசியும் தன் கண்ணின் இமைகளை துடைத்துக் கொண்டாள்.இவளின் பேச்சால் சக்தியே உறைந்து போனார்‌. "தற்கொலை பண்ணிக்கிறது குற்றம்மா.. அதுக்காக நான் உன்னைதான் அரெஸ்ட் பண்ணனும்.. நீ எங்களை நம்பு.. இவருக்கு நல்ல அட்வைஸா நாங்க தரோம்.. நீ ஏன் தற்கொலை வரைக்கும் போற.?" என கேட்டார் சக்தி.யதிரா சரியென தலையசைத்து தன் கண்களை மீண்டும் துடைத்துக் கொண்டாள்."நல்லா நடிக்கிறா இவ.." என்றார் முகிலின் அப்பா."மைன்ட் யுவர் வேர்ட்ஸ் சார்.. இத்தனை காவலர்கள் இருக்கும்போதே இந்த பொண்ணை இப்படி கொடுஞ்சொற்களால திட்டுறிங்க நீங்க.. ஆள் இல்லா நேரத்துல என்னவெல்லாம் செய்ய மாட்டிங்க.?" என்றார். இன்ஸ்பெக்டரின் மிரட்டல் கண்டு திகைத்து போனார் முகிலின் அப்பா.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..Word count 1076 (without description)VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN