51

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யதிராவின் திடீர் மாற்றம் கண்டு முகிலின் அப்பா குழம்பி விட்டார். ஏற்கனவே மனைவியின் எதிர்ப்பை பார்த்தவருக்கு யதிராவின் எதிர்ப்பை கண்டதும் மொத்தமாக குழப்பம் உண்டானது.யதிராவின் மாற்றம் கண்டு முகிலுக்கு சிறு நிம்மதி பிறந்தது."உங்க பொண்ணுக்கு வக்காலத்து வாங்க வந்தா அதை பத்தி மட்டும் பேசுங்க சார்.. தேவையில்லாம வார்த்தையை விடாதிங்க.." என்று எச்சரித்தார் இன்ஸ்பெக்டர்.இங்கே நடந்த விசயங்கள் சௌந்தர்யாவுக்கு கோபத்தை தந்தது."முகில்.. நீ அவளுக்காக என்னையே பழி வாங்குறியா.?" என்றாள் கம்பி கதவின் பின்னால் இருந்தபடிமுகில் காதில் வாங்காதவன் போல நின்றான். யதிரா கோபத்தோடு சௌந்தர்யாவின் அருகே வந்தாள்."எங்க அப்பா உன்னை தன் பொண்ணா நினைச்சாரு.. ஆனா நம்பியவரோட கழுத்தையே அறுத்துட்ட இல்ல.? அதுக்கான தண்டனை உனக்கு கிடைக்கும். அதுக்கு நான் கேரண்டி.." என்றாள்.சௌந்தர்யா நக்கலாக அவளை பார்த்தாள். "நீயா.? அந்த பக்கம் போடி அழுமூஞ்சி.." என்றவள் உள்ளே இருந்த மேடை மீது சென்று அமர்ந்தாள். சௌந்தர்யாவின் வார்த்தை யதிராவின் மனதை சுட்டு விட்டது. ஆனாலும் அந்த வலியை வெளி காட்டவில்லை யதிரா."உனக்கு ஏன்ம்மா இந்த வேலை.? நீ இதுல தலையிடாம விலகி இரு‌‌.." என்று வருத்தம் நிறைந்த குரலில் சொன்னாள் அவளின் அம்மா.யதிரா அம்மாவை நேர்கொண்டு பார்த்தாள். "இல்லம்மா.. இனியும் நான் அப்படி இருக்கறதா இல்ல.. என்னால முடிஞ்ச அளவுக்கு போராட போறேன்.." என்றாள். இவள் சொல்வதை கேட்டு முகிலுக்கு விசிலடிக்க வேண்டும் போல இருந்தது."பொம்பள புள்ளையா அடக்க ஒடுக்கமா இரு.." என்று எரிச்சலோடு சொன்னான் ரூபன்.யதிராவுக்கு வேதனையிலும் கூட சிரிப்புதான் வந்தது. "இதை நீ ஏன் உன் இறந்தகால பொண்டாட்டிக்கிட்ட சொல்லல.?' என்றாள் கோபத்தோடு.ரூபன் எதையோ சொல்ல முயன்றான். ஆனால் யதிரா வாய்ப்பளிக்கவே இல்லை. "இவளை போல ஒருத்தி உனக்கு நாயகியா தெரிவா.. ஆனா உன்னை நம்பி உன் நிழல்ல வாழ்ந்த நானும், அம்மாவும் நீலா அண்ணியும் உன்னை நம்பி பிறந்த உன் குழந்தையும் உனக்கு கேவலமானவங்களா தெரியறோம் இல்லையா.? உன்னால கையாளாகாதுன்னு முதல்லயே சொல்லிட்டு பிரிஞ்சி போய் தொலைய வேண்டியதுதானே.? ஏன் இப்படி பொய்யான நம்பிக்கை தந்து எல்லோருக்கும் துரோகம் செய்யணும்.?" என்றாள் ஆத்திரத்தோடு. நடுவில் கம்பிகளால் அமைத்த கதவு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவனுக்கு நாலு அறையே விட்டிருப்பாள். அந்த அளவுக்கு அவன் மீது கோபம் இருந்தது அவளுக்கு."என்னடி புதுசா நிறைய சீன் போடுற.?" என கேட்ட அண்ணனின் சட்டையை இந்த பக்கம் இருந்தே பற்றி விட்டாள் யதிரா."மரியாதை கொடுத்து மரியாதை வாங்குடா.. இல்லன்னா பெரியவன்னு கூட பார்க்காம கெட்ட வார்த்தை கூட யூஸ் பண்ணிடுவேன்.." என்றாள். அவளின் சிவந்திருந்த கண்களின் வழி தெரிந்த கோபம் கண்டு ரூபனுக்கு பேச்சு தடுமாறியது."யதிரா.. இந்த பக்கம் வா.." என்று அவளை பின்னால் நகர்த்தி வந்தான் முகில். யதிராவின் பத்ரகாளி வேடம் கண்டு அவனுக்கே சற்று பயமாகத்தான் இருந்தது.ரூபன் தன் சட்டையை சரிசெய்துக் கொண்டு ஓரடி உள்ளே தள்ளி நின்றான்."நீங்க எல்லாம் என்னை ஏன் நம்பினிங்க.? உண்மையான காதலா பாசமா அன்பா.?" என நக்கல் குறையாமல் கேட்டான் ரூபன்."உங்களை பொருத்தவரை நான் ஒரு பணம் சம்பாதிச்சி தர மெஷின்தானே.?" என்றான் புருவம் சுருக்கி.யதிரா முகிலின் கைப்பிடியிலிருந்து புயலாக கிளம்பி அண்ணனின் அருகே வந்தாள். அவனை கொல்ல வேண்டும் போல இருந்தது அவளுக்கு. "யாரு நீ..? பணம் சம்பாதிச்சி தந்த.? அப்பா சம்பாதிச்சி தந்த பணத்தை செலவு பண்ணிட்டு அதிக பணம் வேணுமேன்னு அவரையே கொன்ன நீ இதை பத்தி பேசலாமா.? உன்னை நேர்ல பார்க்க பார்க்க உன்னை கொல்லணும் போலவே இருக்கு.." என்றாள் ஆத்திரத்தோடு.அவளை தன் பக்கம் இழுத்து அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் முகில். "டென்சன் ஆகாத யதி.." என்றான் மென்மையாக.யதிரா அவனை பிடித்து பின்னால் தள்ளி விட்டாள். "நீயும் யோக்கியம் கிடையாது.. தள்ளி போ.." என்றவள் சக்தியிடம் வந்தாள்."மேடம்.. இவங்க இரண்டு பேரும் ஆயுளுக்கும் ஜெயில்லயே இருக்கணும்.. அதுக்கு நான் என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க.. நான் செய்றேன்.." என்றாள்.அவளின் கோபத்தை சாந்தப்படுத்த முயல்வதை போல ஜன்னல் வழியே வீசியது சிறு தென்றல். முகத்தில் வந்து மோதிய காற்றால் யதிரா சற்று மன அமைதி அடைந்தாள். காதோரம் பறந்த கூந்தலை சரிசெய்துக் கொண்டு அவள் மீண்டும் இன்ஸ்பெக்டரை பார்த்தபோது அவளின் கையை பற்றினாள் நீலா.யதிரா திரும்பி பார்த்துவிட்டு "என்ன அண்ணி.?" என கேட்டாள்."அவரை விட்டுடு யதி.. பாவம் அவர்.. அவர் இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல.." என்றாள் கண்ணீரோடு.நீலாவின் கண்ணீர் துளியில் யதிராவுக்கு தன் இறந்தகாலம் தெரிந்தது. 'அவர் இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல..' என கதறிய அப்பாவி பெண் யதிரா தெரிந்தாள்."அண்ணி ப்ளீஸ்.. இவன் உங்களுக்கு வேணாம்.. கஷ்டம்ன்னு தெரிஞ்ச பிறகும் கட்டியழ நினைக்காதிங்க.. வலிகளை விரும்பி ஏத்துக்கிட்டாலும் கூட நமக்கு கிடைக்கற பட்டம் என்னவோ ஏமாளி கோமாளிதான்.. நாம இனியும் இருக்கறது இன்னும் அறுபது வருசமோ ஐம்பது வருசமோ தெரியாது.. ஆனா இருக்கற வரைக்கும் சந்தோசமா வாழ முடியலன்னாலும் பரவால்ல.. அட்லீஸ்ட் அழுகையோடு வாழாம இருப்போம்.. உங்களுக்கு தேவையான பண உதவியை நான் செய்றேன்.. நீங்க உங்களுக்கு விருப்பம் இருந்தா இன்னொரு கல்யாணம் கூட பண்ணிக்கங்க.. உங்க குழந்தையை நான் படிக்க வச்சி நல்லபடியா வளர்த்தி கல்யாணம் பண்ணி தரேன்.. ஆனா இவனுக்காக நீங்க உங்க வாழ்க்கையை அடமானம் வச்சிடாதிங்க.. இவனோடு கூட பிறந்த பாவத்துக்கு நான்தான் வலியை அனுபவிக்கணும்ன்னா நம்பி வந்த பாவத்துக்கு நீங்களும் உங்க ஆயுளை அடகு வைக்காதிங்க.." என்றாள் கையெடுத்து கும்பிட்டபடி.யதிரா சொன்னது கேட்டு அதிகமாக அழுதாள் நீலா. யதிரா சொல்வதில் இருந்த உண்மை அவளுக்கும் புரிந்தது. வலியென்று தெரிந்தால் கூட பரவாயில்லை. ஆனால் துரோகத்தை எப்படி மடியில் சுமப்பது என்பதுதான் அவளுக்கும் தெரியவில்லை. தன்னோடு வாழ்ந்தபடியே வேறு ஒருவளோடு குழந்தை பெற்றுக் கொண்டவனை நம்பி அதிகப்பட்சமாக ஓரடி எடுத்து வைக்க கூட பயமாக இருந்தது அவளுக்கு.நீலாவின் அழுகை கண்டு அவளின் அம்மா அவளின் அருகே வந்தாள்."அழாதம்மா.. உனக்கு நான் இருக்கோம்.. ஒரு பொண்ணோட வாழ்க்கைக்கு புருசன் ரொம்ப முக்கியம். ஆனா அவனே நம்ம வாழ்க்கைக்கு எமனா மாறும்போது விலகிடுறது தப்பு இல்ல.. என் ஒரே வாரிசு நீ.. இவனை நம்பி உன் வாழ்க்கை நாசமா போவதை நான் எப்படி ஏத்துப்பேன்.? என்னோட சின்ன வயசுலயே நான் உங்க அப்பாவை இராணுவத்துல பலி தந்தேன். அவர் உயிர் போனதுக்கு கூட ஒரு நியாயம் இருக்கு‌. ஆனா உன் வாழ்க்கை வீணா போனா அதுல எந்த அர்த்தமும் இல்ல.. நீ என்னோடு வந்துடு.. உன் மொத்த வாழ்க்கைக்கும் நான் கேரன்டி தரேன்.. உனக்கான ஹேப்பியான வாழ்க்கையை தர முடியுமான்னு எனக்கும் தெரியல.. ஆனா கண்டிப்பா உன் கண்ணுல கண்ணீர் வராத அளவுக்காவது பார்த்துப்பேன்.." என்றாள்.நீலா முகத்தை மூடிக் கொண்டு விம்மியழுதாள். அவளால் எதையுமே நம்ப முடியவில்லை. தன் வாழ்க்கையின் தரைத்தளமே பாதத்தை விட்டு போனது போல இருந்தது அவளுக்கு.நீலாவின் அம்மா அவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள். நீலா அழுதுக் கொண்டே இருந்தாள்."அத்தை இவங்களை அந்த பக்கமா கூட்டிப்போங்க.. அழுது ஓயும் வரை தொந்தரவு பண்ணாதிங்க. அதே சமயம் இவங்க வேற எந்த முடிவும் எடுத்துடாத அளவுக்கு பத்திரமா பார்த்துக்கங்க.." என சொல்லி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தாள் யதிரா.தனக்கென வருகையில் உடைந்து அழும் மனம் தான் விரும்பும் ஒருவருக்கும் அதே நிலை வருகையில் ரோசம் கொண்டு விடுகிறது என்பதை இன்றுதான் புரிந்துக் கொண்டாள் யதிரா. லாக்கப்பில் இருந்தபடி முறைக்கும் அண்ணனை கேவலமான பார்வை பார்த்தாள்."அம்மா.. வா நாம வீட்டுக்கு போகலாம்.. உன் மகனை இவங்களும் ரொம்ப நல்லாவே பார்த்துப்பாங்க.." என்ற யதிரா அம்மாவின் கையை பற்றினாள். அம்மா தன் மகனை நொடிக்கொரு முறை திரும்பி பார்த்தபடியே நடந்தாள்.முகிலின் அப்பா இன்னமும் அவளை முறைத்தார். ஆனால் அவள் கண்டுக்கொள்ளாதவள் போல அவரை கடந்து நடந்தாள்‌. தோளில் சாய்ந்து உறங்கி கொண்டிருந்த குழந்தையோடு அமர்ந்திருந்தான் சௌந்தர்யாவின் கணவன். அவனை காணுகையில் யதிராவுக்கு எதையாவது வெட்டி சாய்க்க வேண்டும் போல கோபம் வந்தது. ஏற்கனவே நீலாவும் அவளது குழந்தையும் யதிராவின் மனதில் தாங்க இயலா துக்கத்தை தந்து விட்டனர். இப்போது அவர்களை போலவே இங்கே ஒரு ஏமாளி ஆணும் குழந்தையும் அமர்ந்திருப்பது அவளுக்கு இன்னும் அதிகமான வேதனையை தந்தது.சௌந்தர்யாவின் கணவன் அருகே வந்தாள் யதிரா. "நீங்க இங்கே இருக்க வேணாம் அண்ணா.." என்றாள் கரகரத்த குரலில்.அவனோ இவளை சோகமாக பார்த்தான். "வாழ்க்கையே இந்த இடத்துல ஸ்டக் ஆகி நின்ன மாதிரி இருக்கும்மா.. யார் எங்களை நம்பி உங்களை இருக்க சொன்னதுன்னு கேட்கறாங்க அவங்க.. ஆனா அடிப்படை நம்பிக்கையில்தான் எந்தவொரு உறவும் உருவாகுதுன்னு இவங்க ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க.? நம்பிக்கை இல்லாத இடத்துல வாழ வேண்டிய அவசியம் என்ன நமக்கு.? இவங்க நம்ம சொந்த ரத்தம் கிடையாது. பணத்துக்காக போட்டுக்கிட்ட அக்ரிமெண்ட்ல வாழுறவங்களும் கிடையாது.. நம்பிக்கை ஒன்னேதான் இவங்களோடு நம்மளை பிணைச்சி வச்சிருக்குன்னு புரியாம அந்த நம்பிக்கையை மிஸ் யூஸ் பண்ணிட்டு பழியை தூக்கி நம்ம மேல போடுறாங்க.." என்றவன் பெருமூச்சோடு எழுந்து நின்றான்.சௌந்தர்யா கணவன் கேட்ட கேள்விகள் முகிலுக்கு அடியை தந்து விட்டன. தான் ஏதோ ஒரு இடத்தில் தவறாக யோசித்து விட்டதை உணர்ந்து கொண்டான் அவன்.உறவு என்பது கண்ணாடி பாலம் போல‌. அது தன்னை தாங்கும் என நம்பி நடக்க ஆரம்பிக்கும் துணைக்கு பாதுகாப்பு கவசம் வழங்குவது மட்டும்தான் சரியான வழியே தவிர நான்கைந்து முறை கீழே விழ வைத்து எழுப்பி எந்த இடத்தில் உறவு உடைந்தாலும் பிழைத்து கொள் என சொல்வது சரியில்லை போல என எண்ண தொடங்கியது அவன் மனம்."இவளை போல கொலைக்காரியோடு இத்தனை வருசம் வாழ்ந்ததை நினைச்சா லேசா பயம் வருதும்மா.." என்ற சௌந்தர்யாவின் கணவன் குழந்தையை தோள் மாற்றி போட்டுக் கொண்டான்.'இந்த குழந்தை உங்களுக்கு பிறந்தது அல்ல அண்ணா..' என சொல்ல துடித்தது அவளது நா. ஆனால் குழப்பமெனும் குட்டையில் முழுதாக நனைந்து இருந்தவளுக்கு இந்த விசயத்தை சொல்ல மனம் தயங்கியது.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1053VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN