54

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யதிரா சொல்லி சென்றதையே யோசித்தபடி அமர்ந்திருந்தான் முகில்.தன் மனைவி வீரமானவளாகவும் கோபக்காரியாகவும் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டிருந்தவனுக்கு நான் அப்படிதான் இருக்கிறேன். ஆனால் அதை வெளிக்காட்ட விரும்பவில்லை என்று யதிரா சொல்லி சென்றது அவனுக்கு ஆச்சரியத்தை தந்து விட்டது.மூன்று வருடங்களாக காத்திருந்த காரணம் முட்டாள்தனம் அல்ல காதல் மட்டுமே என அவள் சொன்னதை நினைத்து பார்த்தான். அவளின் காதலை முட்டாள்தனமா நினைக்கும் ஒவ்வொரு கணமும் அந்த இடத்தில் தன்னையே தான் தர குறைவாக நினைத்ததை புரிந்துக் கொண்டான். அவளின் காதல் கிடைக்க பெற்றதில் தான்தான் அதிர்ஷ்டசாலி என்பது இப்போதுதான் அவனுக்கு புரிந்தது.யதிராவின் காதலை முழுமையாக யோசித்து பார்த்த பிறகு அவளை கட்டியணைக்க வேண்டும் போல இருந்தது.யதிரா வீட்டிற்கு திரும்பி வந்தபோது கே.கே எதையோ சமைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்."நானே சமைக்கிறேன் கே.கே.." என்று குரல் தந்தவள் தனது கை பையை கழட்டி வைத்து விட்டு சமையலறைக்குள் புகுந்தாள்."இன்னைக்கு என்ன வரும்போதே மேடத்தோட கண்ணெல்லாம் மின்னிட்டு இருக்கு.?" என கேலியாக கேட்டாள் கே.கே."என் புருசனுக்கு புத்தி சொல்லிட்டு வந்தேன்.." என்ற யதிரா கே.கேவின் கையில் இருந்த கத்தியை வாங்கிக் கொண்டாள்."புருசனுக்கா.? அந்த அளவுக்கு முன்னேறிட்டியா.?" சந்தேகமாக கேட்ட கே.கேவிடம் நடந்ததை சொன்னாள் யதிரா.அவள் சொன்னது கேட்டு கை தட்டினாள் கே.கே. "எல்லாமே ஓகே‌.. ஆனா கடைசி சொன்னதுதான் தப்பு.. அவனை இன்னும் கொஞ்சம் அலைய விட்டிருக்கணும்.." என்றாள்.யதிரா பெருமூச்சோடு அவளை பார்த்தாள். "அவரை அலைய விடுற ஒவ்வொரு முறையும் அந்த இடத்துல நானும்தான் ஏமாந்து போவேன்‌‌.. இது இரண்டு பேர் ஆடுற வாழ்க்கை. ஒருத்தரை ஆட்டத்துக்குள்ள விடாம தடுக்கற ஒவ்வொரு நாளும் எதிராளியோட நாட்களும்தான் வீணாகும். இதை நான் புரிஞ்சிக்கிட்டேன். அவரும் அதை புரிஞ்சிட்டு இருந்திருந்தா இப்படி ஒரு பிரச்சனையே வந்திருக்காது.." என்றவள் கொதித்துக் கொண்டிருந்த குழம்பில் காய்களை கொட்டினாள். உப்பு சரியாக உள்ளதா என ருசி பார்த்தாள்."ஓ.. கே.கே‌‌.. எதுக்கு இவ்வளவு காரம் போட்டு வச்சிருக்க.?" என்றாள் முகம் சுளித்தபடி.கே.கே எண்ணையை அதில் ஊற்றினாள். யதிரா அவள் கையிலிருந்த எண்ணெயை வாங்கி தூர வைத்தாள்."இப்ப என்ன பண்ண.?" என்றாள்."நீதானே காரமா இருக்குன்னு சொன்ன.? அதான் அதை குறைக்க டிரை பண்ணேன்.." என கே‌.கே சொல்ல யதிரா நெற்றியில் அடித்துக் கொண்டாள்."நீ என்ன கால் ஸ்பூனா அதிகம் போட்டிருக்க சரி செய்ய‌.? நாலு ஸ்பூன் அதிகம் போட்டிருக்க.. இதை எதாலும் சரி செய்ய முடியாது.. நீ எப்படிதான் வாழ்வியோ தெரியல.. உன் வருங்காலத்தை நினைச்சாலே எனக்கு கவலையா இருக்கு.." என்றாள்.கே.கே சோகமானாள். அவளது முகம் வாடி போனது. "ஐ மிஸ் மைத்தி.." என்றாள்.யதிரா அவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள். இந்த ஒரு வாரத்தில் கே.கே தன்னை பற்றியும் மைத்ரேயி பற்றியும் நிறைய அவளிடம் சொல்லி விட்டாள். அவர்களின் நட்பு யதிராவுக்கு பிடித்திருந்தது. கே.கே மீண்டும் சென்று மைத்ரேயியோடு இணைய வேண்டும் என்று ஆசைப்பட்டாள்‌. ஆனால் கே.கேதான் தான் செய்த தவறுக்கு இனி எப்போதும் மைத்ரேயிடம் திரும்பி செல்ல போவதாக இல்லை என சொல்லி விட்டாள்."நான் வேணா அவளோடு பேசி பார்க்கட்டுமா.?" என கேட்டாள் யதிரா.கே.கே வேண்டாமென தலையசைத்தாள். "அவளை இப்படி மிஸ் பண்றது ரொம்ப பிடிச்சிருக்கு.. ஐ லவ் திஸ் பெயின்.." என்றாள்.யதிரா அவளின் தோளில் அறைந்தாள். "லூசா நீ.? நட்பும் இரு பக்க விளையாட்டுதான். ஆட்டத்துக்குள்ள ஒருத்தரை நீ விடாம இருந்தா நீயும் விளையாடாம நேரத்தை வீணாடிக்கறதாதான் அர்த்தம்.." என்றாள்.கே.கே சிரித்தாள். "ஆனா இந்த ஆட்டமும் எனக்கு பிடிச்சிருக்கே.." என்றாள்."ஆனா அவளுக்கு இந்த விளையாட்டு பிடிக்காம இருந்தா.." என யதிரா கேட்க குழம்பி போய் அவளை பார்த்தாள் கே.கே."நீங்க ஏன் எப்பவும் உங்க மனசை மட்டுமே பார்க்கறிங்க..? எதிராளி மனசை பத்தி யோசிக்க கூட மாட்டேங்கிறிங்க.." என்றாள் சிறு கோபத்தோடு.கே.கே யோசித்தாள். அவளின் யோசனை கண்டதும் யதிராவுக்குள் நிம்மதி பரவியது. இனியாவது கே.கேவும் மகிழ்ச்சியாக இருப்பாள் என்ற நம்பிக்கை தோன்றியது.மறுநாள் அலுவலகம் வந்த யதிராவின் முன்னால் வந்து நின்றான் முகில்."ஐயம் சாரி.. உன்னை தப்பா எடை போட்டது என் தப்புதான்.. இனி அந்த தப்பை பண்ண மாட்டேன்.. என்னோடு வாழ வரியா‌.?" என்றான்.'அதுக்குள்ள புத்தி வந்துடுச்சா.?' என சந்தேகித்தாள் யதிரா."மறுபடியும் கேம் ப்ளே பண்றிங்களா.?" என்றாள் புருவம் நெரித்து. முகில் முகம் மாறியது. அவன் திரு திருவென விழித்தான். யதிரா கோபத்தில் பற்களை கடித்தாள்."யோவ்.. நீ மனுசனாயா.? நானென்ன உனக்கு கம்ப்யூட்டர் கேமா..? இப்படி வாழ்க்கை முழுக்கவா இம்சை பண்ணுவ.?" என்றாள் எரிச்சலோடு."சாரி யதி.. இது அப்படி இல்ல‌.." என்றவனை முறைத்தாள்."வேற என்ன கருமம்.?" என்றாள்.அவளின் கேள்வி அவனை ஆச்சரியப்படுத்தியது."எங்க அம்மாவும் அப்பாவும் இப்ப நம்ம வீட்டுலதான் இருக்காங்க.. உன்னால அவங்களை சமாளிக்க முடியுதான்னு ஒரு சின்ன டெஸ்ட்.." என்று இழுத்தான் அவன். யதிரா மேஜை மீது இருந்த மர ஸ்கேலை எடுத்தாள். அவன் தோள் மீது ஓங்கி அடித்தாள்."ஸ்.. அப்பா.. ஏன் அடிச்ச.?" என கேட்டவனுக்கு மீண்டும் அடியை தந்தாள்."நான் ஒன்னும் சோதனை சாவடி எலி கிடையாது.. அவங்க உங்க அப்பா அம்மாதானே.? நான் மட்டும் ஏன் தனியா சமாளிக்கணும்.? அப்புறம் உங்களுக்கு என்ன வேலை.? இப்பவே செத்து போங்க.. அப்புறம் வேணா நானே போய் அவங்களை சமாளிக்கறேன்.." என்றாள். அவன் முகம் பேயறைந்தார் போல் ஆகி விட்டது."ஓ.. என் வார்த்தை உங்க மனசை சுடுதோ.? இந்த வெட்டு ஒன்னு துண்டு இரண்டுகாகதானே இத்தனை நாளா நீங்களும் வெயிட் பண்ணிட்டு இருந்திங்க.. அப்புறம் என்ன.?" என கேட்டாள்.முகிலுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆமாம். அவள் சொன்னதைதான் அவனும் ஆசைப்பட்டான். ஆனால் அது நடக்கும்போது அல்லவா மனம் வலிக்கிறது‌.? அனைத்தையும் ஆசைப்படலாம். ஆனால் ஆசைப்பட்ட அனைத்தும் நிஜத்தில் நடக்கையில் பெரும்பாலும் எதிர்மறை வினையாக அல்லவா அமைகிறது.?"சா.." முகில் ஆரம்பிக்கும் முன்பே அவனது வாயை பொத்தினாள் யதிரா."இனியும் சாரி கேட்காதிங்க.. அந்த வார்த்தையே வெறுத்து போச்சி. ஒரு மனுசனுக்கு வாழ்க்கையில் ஒரு முறையோ இல்ல வருசத்துல ஒரு முறையோ இந்த வார்த்தையை கேட்டா ஆகும். ஆனா இப்படி தினம் பத்து முறை கேட்கும்போது அது சாரி மாதிரி தெரியல‌‌.. வேற ஏதோ ஒன்னு மாதிரி தோணுது.." என்றாள்."நான் என்ன பண்ணட்டும்.?" என்றான் முகில்."போய் உங்க வேலையை பாருங்க சார்.. எனக்கும் நிறைய வேலை இருக்கு.. உங்க அப்பா அம்மாவையும் சமாளிக்க என்னால முடியும்ன்னு நிரூபிச்சி காட்டுறேன்.. அதை விட முக்கியமா உங்களையும் சமாளிக்க முடியும்ன்னும் நிரூபிக்கிறேன்.." என்றவள் சென்று தனது இருக்கையில் அமர்ந்தாள்.முகில் அவளையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு சென்று தன் இருக்கையில் அமர்ந்தான். அன்று முழுவதும் அவனுக்கு வேலையே ஓடவில்லை. யதிராவை பார்த்தபடிதான் இருந்தான்‌.அம்மா அவனது வீட்டிற்கு வந்த மூன்றாம் நாள் அப்பாவும் அங்கே வந்தார். அம்மாவிடம் மன்னிப்பு கேட்டார். அம்மா முகிலை பார்த்தாள். அவன் முகத்தை திருப்பி கொண்டு சென்று விட்டான். அப்பா அங்கிருந்து போய் விட்டார்.மீண்டும் அவர் இன்று காலையிலும் வந்தார். முகிலிடமே மன்னிப்பு கேட்டார். நேற்று இரவு யதிரா பேசியதையே மனதில் வைத்திருந்தவனுக்கு அவரை வெறுக்க மனம் வரவில்லை. அதனால் தன் வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டான். அப்படி அவரை தங்க சொன்ன போது கூட அவனுக்குள் யதிராவின் பலத்தை சோதிக்க கிடைத்த வாய்ப்பு இது என்ற எண்ணம்தான் இயல்பாக தோன்றியது. ஆனால் அதையும் யதிராவிடம் உளறி கொட்டியதுதான் சிறப்பு என அவன் மனம் வேறு அவனை கிண்டலடித்தது.சிறையில் அமர்ந்திருந்தாள் சௌந்தர்யா. அவளின் அருகிலேயே மேக்னாவும் அமர்ந்திருந்தாள். இருவர் முகத்திலும் ரத்தம் சொட்டி கொண்டிருந்தது. முகத்தில் ஆங்காங்கே வீக்கம் இருந்தது. அந்த வரிசையில் இருந்த சிறை அறைகளை பார்வையிட்டுக் கொண்டே வந்தார் சிறை வார்டன். இவர்களின் அறை முன்னால் வந்து நின்றவர் எரிச்சலோடு அந்த கம்பி கதவுகளின் மீது தன் லத்தியை ஓங்கி தட்டினார்‌.காவலுக்கு நின்றிருந்த மற்றோரு சிறை காவலர் இவரது கோபம் கண்டு ஓடி வந்தார். "என்ன ஆச்சி மேடம்.?" என்றார். சிறை அறையையும் திரும்பி பார்த்தார். அவருக்கும் கோபம் வந்தது.அந்த அறை கதவை திறந்தார் வார்டன் . இருவரும் உள்ளே சென்றார்கள்."உங்களுக்கு ஒரு தடவை சொன்னா அறிவு வராதா.? இந்த வாரத்துல மட்டும் இதோடு நாலாவது முறையா சண்டை போட்டு இருக்கிங்க.." என்று கர்ஜித்தார் வார்டன்.இருவரும் தரையை பார்த்தபடி அமர்ந்தினர். சௌந்தர்யா சிறை பிடிக்கப்பட்ட மறுநாளே மேக்னாவும் கைதாக்கபட்டு சிறையில் அடைக்கப்பட்டாள். நீதிமன்றத்தில் வழக்கு வாதாடப்பட்டுக் கொண்டிருக்கிறது‌. அதுவரை இவர்களும் ரூபனும் சிறை காவலில் இருக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.சிறைக்கு வந்த நாளில் இருந்தே இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருந்தது. வார்டனும் பலமுறை எச்சரித்து பார்த்து விட்டார். ஆனால் அவர்களின் சண்டை ஓயவே இல்லை."இவங்களை தனி தனி செல்லுல போட்டுடலாமா மேடம்.?" என்று கேட்டார் காவலர்."இவங்க இரண்டு பேரும் சேர்ந்துதான் கொலை பண்ணி இருக்காங்க.. சேர்ந்து ஒரே அறையில் இருக்கறதுதான் நியாயம்.." என்றார் அவர்."இல்ல.. இவளும் ரூபனும்தான் கொலைக்காரங்க.. நான் வெறும் ஐடியா மட்டும்தான் சொன்னேன்.. இவதான் என் தங்கச்சியை கொன்னுட்டா.." என்று கதறினாள் மேக்னா.வார்டன் தன் லத்தியை சுவரில் ஓங்கி அடித்தார். மேக்னா தன் அழுகையை அப்படியே அடக்கி கொண்டாள்."அப்பாவி மனுசனை கொல்ல ஐடியா தந்தாயே.. அப்பவே தெரியாதா இவ ஒரு கொலைக்காரின்னு.. ஊர்ல ஒருத்தனை கொன்னா அப்ப பரவால்ல.. ஆனா உன் தங்கச்சியை கொன்னா மட்டும் வலிக்குதோ.?" என்று கேட்டார் வார்டன்.மேக்னா முகத்தை மூடிக் கொண்டு ஓசையில்லாமல் அழுதாள்."குற்றத்துக்கு உடந்தையா இருப்பதும் குற்றம்தான்.. ஒரு கொலைக்கு உடந்தையா இருந்திருக்க.. சட்டத்துக்கு புறம்பா ஒரு பொண்ணோட விருப்பமே இல்லாம அவளோட கருவை அழிச்சிருக்க.. அப்பாவியான ஒருத்தனுக்கு ப்ளட் கேன்சர்ன்னு பொய் ரிப்போர்ட் தந்திருக்க.. நீ செஞ்ச எல்லாமே தப்புதான்.. ஆனா இது அத்தனையையும் விட பெரிய தப்பு.. இந்த உலகத்தையே அச்சுறுத்துற ஒரு தீவிரவாத கும்பலோடு தொடர்பு வச்சிக்கிட்டு அவங்களோட ப்ளாக் மார்கெட்ல இருந்து விஷ மாத்திரைகளை வாங்கியிருக்க.. நான் சொன்ன கடைசி குற்றத்துக்கு உனக்கான தண்டனை என்ன தெரியுமா.? இந்தியாவுக்கு மட்டுமில்ல இந்த உலகத்துல இருக்கற பல நாடுகளுக்கும் நீ எதிரி.. ஒரு துரோகி.." என்றார்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1104எபிசோட் பிடிச்சா VOTE பண்ணுங்கஎபிசோட் படிக்கையில் ஏதாவது மனசுல தோணினா அதை COMMENT பண்ணுங்கஇதை மத்தவங்களும் படிக்க ஆசைப்பட்டா உங்க பேஜ்ல SHARE பண்ணுங்க. உங்க பாலோவர்ஸ்க்கும் இந்த கதை பத்தி தெரியட்டும் 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN