55

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஜெயில் வார்டனை முறைப்படி நின்றிருந்தாள் சௌந்தர்யா."முறைக்கறதெல்லாம் வேற எங்காவது வச்சிக்க.." என எச்சரித்தார் வார்டன். ஆனால் அவளது முறைப்பு மாறவேயில்லை."இவளும் ஒரு அடிக்ட்தான் மேடம்.. டிரிங் அடிக்ட், டிரக் அடிக்ட் மாதிரி இவ கேம்ப்ளிங்க்ல அடிக்ட். நாம என்ன சொன்னாலும் இவளுக்கு புரியாது.." என்றார் அங்கு நின்றிருந்த காவலர்."ஆனா இது நம்மளோட இடம்.. இங்கே இவ நம்ம பேச்சை கேட்டு நடக்கலன்னா அப்புறம் நாம இவளை இந்த ஜெயிலுக்கே அடிக்ட் ஆக்க வேண்டி வருமே.." என்ற வார்டன் அவளை முறைத்து விட்டு அங்கிருந்து வெளியே நடந்தார்‌.அவர்கள் கண் மறைவில் இருந்து மறைந்ததும் மேக்னாவின் வயிற்றில் உதைத்தாள் சௌந்தர்யா."நீ மட்டும் காட்டி கொடுக்காம இருந்திருந்தா நான் இங்கே வந்திருக்க மாட்டேன்.." என்றாள் ஆத்திரத்தோடு. மீண்டும் அவளுக்கு ஒரு உதை தந்தாள்.மேக்னாவும் அவளை திருப்பி உதைத்தாள். சௌந்தர்யாவின் முகத்திலேயே ஐந்தாறு குத்துகளை விட்டாள்."நீ ஏன் என் தங்கச்சியை கொன்ன.? அவ சின்ன பொண்ணு.. அவளை கொல்ல உனக்கு எப்படி மனசு வந்துச்சி.?" என கேட்டவள் அவளை விடாமல் தாக்கினாள்."ஏனா உன் தங்கச்சி என்னை என் தம்பிக்கிட்ட மாட்டி விட பார்த்தா.. அதனாலதான் நான் அவளை கொன்னேன்‌‌.." என்ற சௌந்தர்யாவுக்கு மூக்கின் மீதே ஒரு குத்து விட்டாள் மேக்னா."என் தங்கச்சியை கொன்னுட்டு அதுக்கு உதவாத காரணம் வேற சொல்றியா நீ.?" என கேட்டவள் சௌந்தர்யாவிற்கு மேலும் அடிகளை தந்தாள்‌.முகில் வீட்டிற்கு வந்தபோது அம்மாவும் அப்பாவும் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தனர்."என்ன ஆச்சிம்மா.?" என்றான் அவன் தனது பேக்கை ஓரமாக வைத்தபடி."இவளுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு..." என்றார் அப்பா."என்ன.?" என்றான் இவன் புரியாமல்.அம்மா எழுந்து நின்றாள் "நான் டைவர்ஸ் வாங்கிக்கலாம்ன்னு இருக்கேன்.." என்றாள்.முகிலுக்கு இதென்னடா வில்லங்கம் என்று தோன்றியது. "நீயுமாம்மா.? ஏம்மா.?" என்றான். இப்போதுதான் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்தது போல் இருந்தது அவனுக்கு‌. இப்போது அம்மா புது பூகம்பத்தை கிளப்புவது அவனுக்கு திகிலாக இருந்தது."இத்தனை வருசத்துல என் காசுலதான் நீ சாப்பிடுறன்னு அவர் சொல்லாத நாளே இல்ல.. எங்களுக்குள்ள இந்த காதல் கருமமெல்லாம் எப்பவுமே இல்ல.. அவரோட பணத்தை ஒருநாள் கூட நான் என் பணமா நினைக்கிற அளவுக்கு வாழ்ந்ததே இல்ல.. ஒரு புடவை வாங்கும்போது கூட யாரோ ஒருத்தரோட சம்பாத்தியத்துல இந்த சேலையை கட்டுறமேன்னு மனசு வலிக்கும்.. வெளியே வேலைக்கு போகவும் விடல.. அதே சமயம் வீட்டுல என் இஷ்டப்படி நடக்கவும் விடல.. ஒரு கைதி மாதிரிதான் வாழ்ந்தேன்னு தோணுது எனக்கு.. வருசம் முழுக்க புள்ளைங்க புருசன்னு நானேதான் அட்ஜஸ்ட் பண்ணேனே தவிர இவர் பொண்டாட்டின்னு பார்க்கல.. என்னை சுத்தி இருக்கும் பெண்களோட வாழ்க்கையை நானும் பார்த்து இருக்கேன். வாரம் ஒரு பட்டு மாசம் ஒரு நகைன்னு புருசனை கசக்கி அவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்திருக்காங்க.. ஆனா நான்தான் பைத்தியம் போல ஊமையாவே இருந்தேன்.. என் புருஷன் வச்சதுதான் சட்டம்ன்னு வாழ்ந்து மட்டும் நான் என்ன சாதிச்சேன்.? இவர்க்கிட்ட காட்ட முடியாத வெறுப்பையும் கோபத்தையும் உங்ககிட்ட திசை மாத்தி விட்டேன்.. ஒரு மனைவிக்கு சரியான முறையில் புருசன் அமைஞ்சிட்டா அவளுக்கு மருமகளை கொடுமை பண்ண அவசியம் இருக்காது.." என்றாள்.அப்பா அவளை கிண்டலாக பார்த்தார். அந்த பார்வை அம்மாவிற்கு வருத்தத்தைதான் அதிகரித்தது."போதும்ன்னு நினைக்கிற அளவுக்கு ஒருத்தியோட தேவைகளை அவளோட புருசன் நிறைவேத்திட்டா அவ ஏன் தன் புள்ளைங்க கையை எதிர்பார்க்கணும்.? திமிர் பிடிச்சி வம்பு பண்ற ரகம் இல்லையே நானும்‌‌.. என்னோட மன அழுத்தத்தை வெளி காட்ட வேற வழி கிடைக்காமதானே அதை புள்ளைங்க மேலயும் மருமக மேலயும் காட்டுறேன்.. தப்பு முழுக்க இவர்கிட்ட இருக்கும்போது நான் ஏன் முழு பழியையும் சுமக்கணும்.?" என்றாள்.அப்பா முகத்தில் இருந்த நக்கல் சிரிப்பு குறையவேயில்லை‌. எதையோ சொல்ல நினைத்து முகில் பக்கம் பார்த்தவர் கதவின் அருகே நின்றிருந்த யதிராவை அதிர்ச்சியோடு பார்த்தார்.அவர் பார்வை போன திசையில் முகிலும் பார்த்தான். யதிரா கையில் இரண்டு சூட்கேஸ்களோடு நின்றுக் கொண்டிருந்தாள்."யதி.." முகில் அவளருகே சென்றான். அவள் கையில் உள்ள சூட்கேஸை வாங்கிக் கொண்டான். அவள் வீடு வந்து சேர்ந்ததில் அவனுக்கு மிகுந்த சந்தோசம்."இந்த பொம்பளைங்களை நம்பாதடா.. எல்லாமே விசம்.. காலம் முழுக்க நம்ம சம்பாதியத்துலயே வாழ்ந்துட்டு கடைசியில நம்மளையே குறை சொல்வாங்க.." என்றார் அப்பா.யதிரா தன் அத்தையின் அருகே வந்தாள். "இந்த உலகம் இரண்டே விதம்தான். புருசன் பணத்தை சரியா பயன்படுத்திக்காம போனா கஞ்ச பிசினாரி, புருசன் மேல அக்கறை இல்லாதவ அதனாலதான் அவன் பணத்தை தனியா பிரிச்சி பார்க்கறா, சரியான திமிர்க்காரின்னு சொல்லும். அதுவே புருசன் பணத்தை செலவு பண்ணா ஆடம்பரக்காரி, ஒட்டுண்ணின்னு சொல்லும்.. இது இரண்டுத்துக்கும் இடையில் வாழ ஒரு சிலரால மட்டும்தான் முடியும் அத்தை.. ஆனா இத்தனை விசயத்தையும் சரி செய்ய ஒன்னே ஒன்னாலதான் முடியும். அதுதான் காதல்.. ஆயிரத்தெட்டு முரண்பாடுகளோடும், தினம் நூறு சண்டைகளோடும் கூட சேர்ந்து வாழ இந்த காதலால மட்டும்தான் முடியும்.. உங்களுக்கு அவர் மேல கோபமா இருந்தா நாலு அறை விடுங்க.. தப்பு இல்ல.. ஆனா காதலை மனசுல வச்சிக்கிட்டே பழி வாங்க நினைச்சி பிரிஞ்சி போகாதிங்க.. ஏனா அதுல நீங்களும்தான் பலி தரப்படுவிங்க.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். இனி உங்க இஷ்டம்.." என்றவள் குளியலறைக்குள் நுழைந்தாள்.அவள் ஈர முகத்தை துடைத்துக் கொண்டு திரும்பி வந்தபோது முகிலின் அம்மா உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். முகில் அறைக்குள் ஏதோ வேலையாக இருந்தான். மாமனாரை எங்கோ காணவில்லை. அத்தையை ஆச்சரியமாக பார்த்தபடியே வந்து அமர்ந்தாள் யதிரா."அதுக்குள்ள சமாதானம் ஆகிட்டிங்களா.?" என்றாள் அத்தையை பார்த்து.அத்தை அவளை பார்த்து புன்னகைத்தாள்."சமாதானம் இல்லம்மா.. இது சும்மா ஒரு பொய் சண்டை.. அட்ஜஸ்ட் பண்றதுன்னா பொண்ணா பிறந்தவளுக்கு கூடவே பிறந்த விதி.. முழுசா தப்பு சொல்ல முடியாது.. ஆனா அதனால பொண்ணா பிறந்தவ மனசு உடைய கூடாது இல்லையா.? இந்த ஆளு புரிஞ்சிக்காம விட்டதை இவனாவது புரிஞ்சி உனக்கான மரியாதை தரட்டுமேன்னுதான் இப்படி ஒரு சண்டையை பண்ணேன்‌. முடிஞ்ச பிறகு இப்படி வாழ்ந்திருக்கலாமேன்னு நீயும் நினைக்க கூடாது.. உனக்கு இன்னும் சிறந்த வாழ்க்கையை அமைச்சி தந்திருக்கலாமேன்னு அவனும் நினைச்சிட கூடாது.. இருக்கற காலத்தையே சிறப்பா வாழணும்.." என்றாள்.'கொடுமைடா.. மகனை போலவே இப்ப அம்மாவும் டிராமா பண்ண கத்துட்டு இருக்காங்க. இதுல நான் வேற இதையெல்லாம் உண்மைன்னு நம்பி அட்வைஸ் வேற பண்ணி வச்சேன்.. இவங்களுக்கு இடையில நான் வந்து சிக்கியதுதான் என் விதி..' என மனதுக்குள் புலம்பினாள் யதிரா."நீங்க இரண்டு பேரும் சாப்பிடுங்க.. நாங்க இரண்டு பேரும் மொட்ட மாடிக்கு போய் சாப்பிடுறோம்.." என்ற அம்மா இரண்டு தட்டுகளில் உணவை பரிமாறி எடுத்துக் கொண்டு வெளியே இருந்த படிகளை தேடி நடந்தாள்.முகில் மாற்று உடையோடு ஹாலுக்கு வந்தான். யதிரா இரண்டு தட்டுகளை கொண்டு வந்து தரையில் வைத்தாள்."அவங்க எங்கே.?" என கேட்டபடியே வந்து அமர்ந்தான் முகில்."அவங்க மாடிக்கு போய் நிலா சோறு சாப்பிடுறாங்களாம்.." என்றவள் உணவை உண்ண ஆரம்பித்தாள்."நீ வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.." என்றான். யதிரா வந்து விட்டதில் தாயும் தகப்பனும் போட்டுக் கொண்ட சண்டையை பற்றி நினைக்க கூட அவனுக்கு நேரம் இல்லை."நாலு வருசம் ஆனாலும் நான்தானே வந்து வாழணும்.? அதனாலதான் டக்குன்னு வந்துட்டேன்.." என்றாள்.முகில் அவளை சந்தேகமாக பார்த்தான். "ஆனா நீ இப்பவும் அப்படிதான் இருக்க.. கூப்பிட்ட உடனே வந்துட்ட.. சுயமா யோசிக்கவே மாட்டேங்கிற.." என்றான் சிணுங்கலாக.யதிரா உணவு தட்டோடு எழுந்தாள். முகில் அவளின் புடவையை பற்றினான்."அதுக்காக கோவிச்சிட்டு சாப்பிடாம இருக்க போறியா.?" என்றான்.யதிரா அவனை முறைத்தாள். "குழம்பு பத்தல.. கிச்சனுக்கு போய் கொஞ்சம் விட்டுட்டு வரேன்.." என்றாள். முகில் அவளது புடவையை சட்டென விட்டான்.யதிரா குழம்பை ஊற்றி கொண்டு வந்து அமர்ந்தாள். "இப்ப ரோட்டுல போற ஒருத்தன் வந்து கூப்பிடுறான்னு வச்சிக்குவோம். நான் அவனோடு உடனே கிளம்பினாதான் தப்பு.. நான் விரும்பற ஒருத்தனோடு வாழ வருவது தப்பு இல்ல.. அலைஞ்சான் கேஸ் கிடையாது. ஓவர் லவ்வு.. சுயமா சிந்திக்க தெரியாம சுயமரியாதை இழக்கறது இல்ல.. ஒன்லி லவ்வு.." என்றவள் உணவை பிசைந்தாள். வாய் திறந்து பார்த்திருந்தவனுக்கு ஊட்டி விட்டாள்."நான் முன்ன மாதிரி இல்ல.. மாறிட்டேன்தான். அதுக்கு காரணம் நீங்க விட்டுட்டு போனது இல்ல.. கே.கே துணையா நின்னது.. அவ நிறைய விசயங்களை புரிய வச்சா.. நிறைய பெண்களோட லைப்பை கவனிக்க வச்சா.. எங்க அம்மா என் அண்ணன் மேல வச்ச பாசத்தால அவனுக்கு அடங்கி போனாங்க.. நீங்க உங்க அம்மா மேல வச்ச பாசத்தால அவங்களுக்கு அடங்கி போனிங்க.. இங்கே எல்லாம் ஆள்வது தப்பு, அடிமை தப்புன்னு மட்டும்தான் பார்க்கறிங்க.. நடுவுல இருக்கற பாசத்தை கவனிக்கிறதே இல்ல.. பாசம் எங்கெல்லாம் முட்டாள்தனமாக்கப்படுதோ அப்போதுதான் இந்த அடிமைங்கற நினைப்பே வருது‌. அதுவரைக்கும் அதை பத்தி யோசிக்க கூட மாட்டோம்.." என்றவள் யோசிப்பவனை அவன் போக்கிலேயே விட்டு விட்டாள்.ஒரு மணி நேரம் கடந்தபிறகு ஹாலில் இரண்டு பாய்களை விரித்து ஆளுக்கொரு மூலையில் படுத்துக் கொண்டார்கள் அம்மாவும் அப்பாவும்.யதிரா படுக்கையறைக்கு வந்தபோது முகில் சுவற்றோடு சாய்ந்து அமர்ந்திருந்தான். யதிரா அவன் முன் வந்து அமர்ந்தாள்.அவளின் கையை பற்றினான் முகில். யதிரா அவனது முகம் பார்த்தாள்."என்னை மன்னிச்சி என்னோடு வாழ வந்ததுக்கு தேங்க்ஸ்.." என்றான்.யதிரா இல்லையென தலையசைத்தாள். "இன்னும் ஒரு மாசம்.. அப்புறம் இது அத்தனையும் நாடகம்ன்னு சொல்லிட்டு நான் கிளம்பிடுவேன்.." என்றாள். முகில் அதிர்ச்சியோடு அவளை பார்த்தான்.‌ அவள் முகத்தில் கேலி கிண்டல் ஏதுமில்லை. முகில் சட்டென தன் கையை உருவிக் கொண்டான். இரு கைகளாலும் தலையை பிடித்தான்."இப்பவே போயிடு.." என்றான்.யதிரா தலையணையை எடுத்து பாயின் மீது வைத்தாள். தலையணையில் தலை சாய்த்தபடி கூரையை பார்த்தாள்."சொல்லும்போதே வலிக்குதா.? அனுபவிச்ச எனக்கு எப்படி இருக்கும்.?" என கேட்டவள் ஒருக்களித்து படுத்தாள். கையை ஊன்றி உள்ளங்கையில் தலையை வைத்தபடி அவனை பார்த்தாள். "யதிரான்னா என் மனசுல அவ ஒரு மென்மை மனசுள்ள நாயகி.. அவ செத்தாலும் ஒருத்தரோட மனசை உடைக்க மாட்டா.. அதனால பயப்படாம வந்து தூங்குங்க.. உங்களை போல நான் இருப்பேன்னு நினைக்கறதை நிறுத்துங்க.. உங்க அம்மா மாதிரி என்னையும் வருங்காலத்துல புலம்ப வைக்காம என்னை நல்லபடியா கவனிச்சிகங்க.. உங்களோட நலனை நான் பார்த்துக்கறேன்.. என்னோட லைப்பை நீங்க பாருங்க.. நாளைக்கு நீங்க செத்துட்டா உங்களை கவனிக்கற வேலை எனக்கு இருக்காது. அதனால உங்களை கவனிச்சிக்கிட்டது போல உங்க காதலான என்னை நான் உங்களை கவனிச்சிக்கிட்ட மாதிரி கவனிச்சிக்கிறேன்.." என்றாள்.முகில் முகத்தில் புன்னகை பரவியது. அவள் மீது தாவினான்."இவர் என்னை கொல்லுறாரு.." என கத்த முயன்றவளின் சத்தம் உதடு தாண்டி வரவேயில்லை.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1117VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN