58

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யதிரா அரை தூக்கத்தில் இருந்தாள். மருத்துவரை பார்த்து வந்தபின் அவளுடைய வயிற்றுவலி சற்று குறைந்திருந்தது."என்னம்மா முகமெல்லாம் இவ்வளவு காயம்.?" மாமனார் யாரிடமோ கேட்கும் குரல் யதிராவுக்கு கேட்டது. ஆனால் தூக்கம் முழுதாக கலையாததால் அப்படியே திரும்பி படுத்துக் கொண்டாள்."இவதான் அடிச்சிட்டாப்பா.. அங்கேயிருந்து தப்பிக்க இதை விட்டா வேற சான்ஸும் இல்ல. அதான் இப்படி மாறி மாறி அடிச்சிக்கிட்டோம்.." சௌந்தர்யா தன் தந்தையிடம் இதை சொல்வதை கேட்டு விலுக்கென்று எழுந்து அமர்ந்தாள் யதிரா. இது கனவுதானே என நினைத்தாள். அவளின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. அரை தூக்கத்திலிருந்து எழுந்த காரணத்தால் மூளையில் சட்டென யோசனைகள் வர மறுத்தது. பயம் மட்டுமே பிடித்துக் கொண்டது."எங்கே அவ..?" என்று ஒரு குரல் கேட்டது. அது மேக்னாவின் குரல்தான் என்பதை யதிரா அறிந்த மறுநொடியே அவளின் பயம் இன்னும் அதிகரித்தது."இவங்க இரண்டு பேரும் இங்கே என்ன பண்றாங்க.?" என யோசித்தபடியே எழுந்து நின்றாள்."அடுத்து என்னம்மா பண்ண போறிங்க.? உன் மேல நான் ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தேன் சௌந்தர்யா.. இப்படி பண்ணிட்டியே.. இனி உனக்கு வாழ்க்கையே இல்ல‌‌.." என்றார் அப்பா கவலை நிறைந்த குரலில்."வாழ்க்கையெல்லாம் இருக்குப்பா.. நீங்க இப்படி புலம்புவதை நிறுத்துங்க.. போலிஸ் இங்கே வரும் முன்னாடி நாங்க இங்கிருந்து போயாகணும்.. நாங்க சொன்ன மாதிரியே போலிஸ்க்கு ஃபோன் பண்ணிட்டிங்களா.?" என்றாள் சௌந்தர்யா."மறந்துட்டேன்ம்மா.. இரு உடனே பண்ணிட்டு வரேன்.." என்ற அப்பா வெளியே ஓடினார்.சௌந்தர்யா அந்த வீட்டை சுற்றி முற்றி பார்த்தாள். அரையாய் சாத்தி இருந்த கதவை பார்த்தவள் நக்கல் சிரிப்போடு அதன் அருகே சென்றாள்."கூட பிறந்தவளை விட எவளோ ஒருத்தி முக்கியமா போயிடுச்சா அவனுக்கு.. நல்ல பாடத்தை நான் கத்து தரேன்.." என்ற சௌந்தர்யா அந்த கதவை திறந்தாள். ஆனால் அதே சமயத்தில் கதவை உள் பக்கம் இருந்து சாத்தி தாளிட்டாள் யதிரா. தாளிட்ட கரங்கள் வியர்வையில் பிசுபிசுத்தது."அட இந்த யதிரா பேபிக்கு என்னை எதிர் கொண்டு பார்க்க பிடிக்கலையா.?" என கேட்டாள் சௌந்தர்யா.யதிரா தன் போன் எங்கே என்று தேடினாள். அலமாரியிலும் பாயின் ஓரங்களிலும் தேடியவளுக்கு சில நொடிகளுக்கு பிறகே ஃபோனை தன் மாமனார் காலையிலேயே ஏதோ காரணம் சொல்லி வாங்கி கொண்டது நினைவிற்கு வந்தது.நெற்றியில் அறைந்துக் கொண்டவள் அங்கேயே சரிந்து அமர்ந்தாள்.சௌந்தர்யா அறை கதவை ஓங்கி அறைந்தாள். "கதவை திறடி.." என கர்ஜித்தாள்."வெயிட் பேபி.. கத்தாதே.. உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணாத.. நாம போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கு.." என்ற மேக்னா கிச்சனுக்கு சென்று எதாவது கிடைக்கிறதா என தேடினாள். அவசரத்திற்கு உதவும் என முகில் வாங்கி வைத்திருந்த மண்ணெண்ணெயையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு வந்தாள்."தள்ளிக்க பேபி.." என்றவள் கதவின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி நெருப்பை பற்ற வைத்தாள்.சோர்ந்து அமர்ந்திருந்த யதிரா மண்ணெண்ணெய் வாசம் வந்ததும் பதற்றத்தோடு எழுந்து நின்றாள். அருகே இருக்கும் ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். வீட்டை சுற்றி இருந்த காம்பவுண்ட்தான் தெரிந்தது. இங்கிருந்து கத்தினாலும் யாருக்கும் கேட்காது என தெரியும். ஆனாலும் "யாராவது காப்பாத்துங்க.. ப்ளீஸ்.." என பெருங்குரலெடுத்து கத்தினாள்."கத்துடி கத்து.. இங்கே யார் உன்னை காப்பாத்த வராங்கன்னு பார்க்கறேன்.." என்ற சௌந்தர்யா எரியும் கதவை வன்மத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.சௌந்தர்யா ஜெயிலுக்குள் போன இரண்டாம் நாளே அவளுக்கு துணை என மேக்னாவும் வந்து விட்டாள். இருவரும் முதலில் நிறைய சண்டை போட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த சண்டையை விட முக்கியம் அந்த ஜெயிலில் இருந்து தப்பித்து வெளியே செல்வதுதான். அதற்காக யோசித்து திட்டம் தீட்டியவர்கள் தினம் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர். அவர்களின் திட்டப்படியே இருவருக்கும் உடலில் பல காயங்கள் உண்டாகியது. ஜெயில் அதிகாரிகளும் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மருத்துவமனையில் காவலுக்கு இருந்த காவலர்களை ஏமாற்றி இருவருமே அங்கிருந்து தப்பி வந்து விட்டனர்.சௌந்தர்யாவுக்கும் மேக்னா மீது ஆத்திரம்தான். மேக்னாவுக்கும் சௌந்தர்யா மீது கொலை வெறிதான்.தனக்கு மாத்திரைகள் சப்ளை செய்த தீவிரவாத குழுவோடு சேர முடிவெடுத்துதான் மேக்னா தப்பித்தாள். சௌந்தர்யாவுக்கும் அங்கே பாதுகாப்பு அளிப்பதாக சொல்லி அழைத்து வந்தவளின் திட்டமே போகும் வழியிலேயே சௌந்தர்யாவை கொல்வதுதான்.தீவிரவாத குழுவோடு இணைய சம்மதம் என சொல்லி மேக்னாவோடு வந்த சௌந்தர்யாவின் திட்டம் தீவிரவாத குழுவை சந்திக்கும் முன்பே மேக்னாவை கொன்று விடுவதுதான்.யதிராவின் கத்தல் சத்தம் வெளியே இருந்த மனிதர்கள் யாருக்கும் கேட்கவில்லை‌. ஆனால் மொட்டை மாடியில் துணி காய வைத்துக் கொண்டிருந்த அவளின் மாமியாருக்கு கேட்டு விட்டது. மாமியார் துணிகளை அப்படியே விட்டுவிட்டு கீழே இறங்கி ஓடி வந்தாள்.எரியும் கதவு.. அதனால் உண்டான கரும்புகை.. தலையிலும் உடம்பிலும் கட்டுப்போட்டபடி கந்தல் உடையை உடுத்தியிருந்த இரு பெண்கள்.. தன் பார்வையில் இருந்தவற்றை நம்புவதற்கே சில நொடிகள் பிடித்தது அவளுக்கு."சௌந்தர்யா.." மகளை கண்டதும் அதிர்ந்து போனவள் "போலிஸ்ல இருந்து தப்பிச்சி வந்துட்டுயா.? கொலைக்கார பாவி.. அந்த கதவை ஏன்டி பத்த வச்சிருக்க.?" என்றாள் கோபத்தோடு.சௌந்தர்யா அம்மாவின் அருகே வந்தாள். "நாங்க இரண்டு பேரும் ஜெயில்ல இருந்து தப்பிச்சி வந்துட்டோம்.. எங்க வாழ்க்கை இப்படி சின்னா பின்னமாக காரணம் உன் பையன்தான். அவனை எதாவது பண்ணா அவனுக்கு உடனே மறந்துடும். ஆனா இவளை கொன்னா அவனுக்கு காலத்துக்கும் வலிக்கும்.. அதனால்தான் அவளை வெளியே கொண்டு வர இதை பண்ணிட்டு இருக்கேன்.." என்றாள் சௌந்தர்யா.

அம்மாவின் பார்வையில் மகள் ராட்சசியை போலதான் தெரிந்தாள்."இதெல்லாம் தப்புடி.. ஜெயில்ல இருந்து நீ திரும்பி வரவே முடியாத மாதிரி மேலும் மேலும் தப்பை பண்ணாத.." என்றாள் அம்மா கெஞ்சலாக.சௌந்தர்யா அம்மாவை முறைத்தாள். "நீயும் அவங்க பக்கம் சேர்ந்துட்டியா.?" என்றாள் சந்தேகமாக.எரியும் கதவை பார்த்துவிட்டு மகள் பக்கம் திரும்பினாள் அம்மா‌. "வேண்டான்டி.. இது பாவம்.." என்றாள்."அம்மா உன் செல்ல புள்ளை நான்தானம்மா.. இன்னைக்கு ஏன் மாத்தி பேசுற.. அன்னைக்கு நீ எனக்காகதானே கறுப்பு கயிறெல்லாம் மந்திருச்சி வாங்கிட்டு வந்த.. மூணு வருசம் முன்னாடி கூட இவ வந்து கர்ப்பமா இருக்கேன்னு சொன்னபோது நீ எனக்கு சப்போர்ட் பண்ணிதானே அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பின.. அதெல்லாம் மறந்து போயிட்டியாம்மா.? நான் உன் செல்ல குட்டிம்மா.. உங்க அழகு புள்ளை.. அவ யாரும்மா.. உதவாக்கரை கழுதை.." என்று தன் அம்மாவின் கையை பற்றிக் கொண்டு சொன்னாள் சௌந்தர்யா.அவள் பேசுவதை காணும்போது அம்மாவிற்கு தன் மகள் பைத்தியமாகி விட்டாளோ என்று சந்தேகமாக இருந்தது.சௌந்தர்யா தன் அம்மாவின் கையை விட்டுவிட்டு யதிரா இருந்த அறை நோக்கி நடந்தாள். அவளை கை பிடித்து நிறுத்தினாள் அம்மா."வேணாம் சௌந்தர்யா.. போலிஸ்கிட்ட சரணைஞ்சிடு.. இதுக்கும் மேலயும் தப்பு பண்ணாத.. உன்னோட தவறுகளுக்கு இத்தனை நாளா சப்போர்ட் பண்ணது எவ்வளவு பெரிய பாவம்ன்னு எனக்கே இப்பதான் தெரியுது.. நீயும் என்னை போல காலம் போன கடைசியில் வருத்தப்பட்டுடாத.." என்றாள்.அம்மாவின் பிடியிலிருந்து தன் கையை உருவினாள் சௌந்தர்யா. "என் கஷ்டம் உனக்கு புரியாது.. அந்த ஜெயில்ல நான் வாங்கிய அடி உனக்கு தெரியாது.. பொம்பள புள்ளைன்னு கூட பார்க்காம எவ்வளவு அடி உதை தெரியுமா.?" என கேட்டவளின் கன்னத்தில் பளீரென ஒரு அறையை விட்டாள் அம்மா."எந்த தப்புமே செய்யாம உன் அப்பன்கிட்ட கூடத்தான் நான் அடி உதை வாங்கினேன். ஆனா தப்பே செய்யலன்னு நான் நினைச்சதுதான் தப்பு.. உன்னை மாதிரி ஒருத்தியை பெத்ததுக்கு கழுவேறினாலும் தண்டனை போதாதுன்னு இப்போதுதான் புரியுது. நீயெல்லாம் உன்னை பெண் இனத்தோடு சேர்த்துக்காத.. அது எங்களுக்குதான் அவமானம்.." என்றாள்.சௌந்தர்யா தன் கன்னத்தை பிடித்தபடி சிரித்தாள். மேக்னாவிடம் திரும்பி தன் அம்மாவை கை காட்டினாள்."என் அம்மா திருந்திட்டாங்களாம்.." என்றாள் அவளிடம்.தன் மகளுக்கு முழு பைத்தியமே பிடித்துவிட்டது என அம்மா நினைத்தபோது அம்மாவின் பக்கம் திரும்பிய சௌந்தர்யா அருகே இருந்த நாற்காலியை எடுத்து அம்மாவின் தலை மீது அடித்தாள்.பிளாஸ்டிக் நாற்காலி என்றபோதும் கூட அடி பலம் என்பதால் அம்மாவின் தலையில் ஆழமான காயம் உண்டானது. தலையிலிருந்து உடனடியாக ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. அங்கேயே மயங்கி சரிந்தாள் அவள்.மேக்னா அந்த கதவில் நெருப்பு எரிந்து கொண்டிருந்த இடத்தில் கடப்பாரையை வைத்து தட்டினாள். அதன் தாழ்ப்பாள் இருந்த பகுதி சில்லு சில்லாக உடைந்து போனது. ஒரு குடம் தண்ணீரை கொண்டு வந்து அந்த கதவின் மீது ஊற்றினாள் மேக்னா.பிளாஸ்டிக் குடத்தை தூர எறிந்தவள் அந்த கதவை உதைத்து திறந்தாள்."பேபி கதவு திறந்தாச்சி.." என்றாள் சௌந்தர்யாவிடம்.சௌந்தர்யா திறந்திருந்த கதவின் வழி உள்ளே நுழைய முயன்றாள். அதே நேரத்தில் அவளின் முகத்தில் பளீரென அடி ஒன்று விழுந்தது. "ஆ.." என்று வலியோடு முனகியபடி நிமிர்ந்து பார்த்தாள். யதிரா துடைப்பத்தோடு அந்த அறையில் நின்றுக் கொண்டிருந்தாள்.வெளியே இத்தனை கலவரம் நடந்துக் கொண்டிருந்த வேளையில் உள்ளே யதிரா தன் மனதோடு கலவரத்தில் ஈடுபட்டு இருந்தாள்‌.'இரண்டு பெண்களை பார்த்து ஏன் பயப்படுற யதி.? இவங்களும் உன்னை போலவே பெண்கள்தான். கொஞ்சம் பலமானவங்க உன்னை விட. ஆனா அதுக்காக நீ அவங்ககிட்ட தோத்துடுவன்னு அர்த்தம் இல்லையே. அப்படியே தோத்தாலும் கூட தப்பு இல்லையே. போராடினா வெற்றி தோல்வி இரண்டு இருக்கும். ஆனா நீ இப்படி பயந்து போய் உட்கார்ந்திருந்தா தோல்வி மட்டும்தான் கிடைக்கும்.. மாமா ஆசைப்பட்டது தைரியசாலியைதானே தவிர உன்னை போல கோழையை அல்ல.. பூமியில் வாழ்க்கையே போராட்டம்தான்‌. ஒவ்வொரு நொடியிலும் உயிரை பிடிச்சி வச்சிட்டு இருக்கறது கூட போராட்டம்தான். அந்த போராட்டத்தில் இன்னைக்கு ஸ்பெஷலா ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் கலந்திருக்கு. அதுக்காக நீ இந்த நாளை ஸ்கிப் பண்ணவா முடியும்.? முடியாது இல்லையா.? அப்புறம் ஏன் தயங்கி உட்கார்ந்திருக்க.. இந்த நாளை கடந்தே ஆகணும்.. நாளைய நாளில் உன் கல்லறை மீது யாராவது மலர் வளையம் கூட வைக்கலாம். ஆனா நீ நினைச்சா அந்த நாளைய நாளை தள்ளி போட முடியும்..' தனக்கு தானே நம்பிக்கை சொல்லி கொண்டவள் படபடக்கும் இதயத்தோடு எழுந்து நின்றாள்.மனதிற்கு ஆயிரம் தன்னம்பிக்கை சொல்லிக் கொண்டாளும் பயம் மட்டும் தீரவே இல்லை. 'அது ஒரு பக்கம் இருக்கட்டும். நீ ஒரு பக்கம் போராடு..' என சொல்லிக் கொண்டவள் அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தபோது அந்த அறையில் ஆயுதமென எதுவுமே கிடைக்கவில்லை. காலையில் குப்பையை கூட்டும்போது அறையிலேயே மறந்து விட்டுவிட்ட துடைப்பம் மட்டும்தான் இருந்தது.நடுங்கும் கைகளோடு அந்த துடைப்பத்தை கையில் எடுத்தாள். சிறு வயதில் தன் அம்மாவிடம் ஒரு முறை இதே போன்ற ஒரு துடைப்பத்தால் அடி வாங்கியதை நினைத்து பார்த்தாள். அந்த அடி இன்னமும் வலித்தது."வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.. என்னை போன்ற பெண்களுக்கு துடைப்பமும் ஆயுதமே.." என்றவள் துடைப்பத்தை தலைகீழாக திருப்பி பிடித்தாள்.கதவு திறக்கப்பட்டதும் எதிரே இருந்தவளின் மீது பளீரென அடியை விட்டாள். அவள் முனகியதில் இருந்தே அடி உறைக்கிறது என்பதை புரிந்துக் கொண்டாள் யதிரா.புடவையை மேலே தூக்கி சொருகி கொண்டாள்.'இவங்க காணாம போனது போலிஸ்க்கும் தெரிஞ்சிருக்கும். எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க இங்கே வந்துடுவாங்க. அதுவரைக்கும் மட்டும் இவங்களை சமாளிக்கணும்..' என மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் ஆத்திரத்தோடு முறைக்கும் சௌந்தர்யாவையும் மேக்னாவையும் எதிர்க்க தயாரானாள். அப்படியே அடுத்த ஆயுதமாக எதை பயன்படுத்தலாம் என்றும் ஓரக்கண்ணால் கவனிக்க ஆரம்பித்தாள்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1163VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN