60

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யதிரா தன் முன் வந்து நின்ற தன் மாமனாரை பார்த்தாள்."ஆரம்பத்துல இருந்தே எனக்கு உங்க மேல சந்தேகம்தான். உங்க பொண்ணை எந்த இடத்திலயும் விட்டு தராதவர் நீங்க. அதிசயமா இந்த வீட்டுக்கு வந்ததே எனக்கு எக்கச்சக்கமான சந்தேகத்தை தந்துச்சி. ஆனா உங்க பொண்ணு ஜெயிலுக்கு போனதால கடன்காரங்க உங்க வீட்டை வந்து சீஸ் பண்ணிட்டதால உங்களுக்கு வேற வழி இல்லாம வந்துட்டிங்களோன்னு நினைச்சேன்.." என்றவள் வெற்று சிரிப்போடு தன் மாமனாரை வெறித்தாள்."அவங்களுக்கு உதவி செய்யதான் இந்த வீட்டுக்கு வந்திங்களா நீங்க.? உங்களுக்கு ஏன் என் மேலயும் என் புருசன் மேலயும் அவ்வளவு கோபம்.? நாங்க மட்டும் என்ன தப்பு செஞ்சோம்.? நீங்கதானே இரண்டு பேருக்கும் கல்யாணத்தை பண்ணி வச்சிங்க.? உங்க பொண்ணை விட நாங்க எந்த வித்ததுல தாழ்த்தி.? இல்ல எங்களை விட உங்க பொண்ணு எந்த வித்ததுல உசத்தி.?" என்றாள் கோபத்தோடு.மாமனார் சிலையாக நின்றிருந்தார். அவரை பார்த்தால் குற்ற உணர்ச்சியில் மூழ்கி நின்றவரை போல தெரியவில்லை. மாறாக அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து நின்றதை போல தெரிந்தது."அவளை கொல்லுங்கப்பா.." என வலியோடு முனகினாள் சௌந்தர்யா.யதிராவின் மாமனார் ஏதாவது ஆயுதம் கிடைக்கிறதா என அங்கும் இங்குமாக தேடினார். யதிராவின் வெற்று சிரிப்பு அதிகரித்தது."உங்களை போல ஒருத்தரையும் நம்பி வீட்டுக்குள்ள விட்டது எங்க தப்புதான். இந்த மனசாட்சி என்பதெல்லாம் உங்களுக்கு சுத்தமா வேலை செய்யாது இல்லையா.?" என கேட்டவள் பெருமூச்சோடு காலடியில் கிடந்த துடைப்பத்தை கையில் எடுத்தாள்."யாரையும் துடப்பதால அடிக்க கூடாதுன்னு எங்க அம்மா சொல்வாங்க. ஆனா அவங்களே என்னை அடிச்சதெல்லாம் பாவ கணக்கு இல்ல பாச கணக்குன்னு தெரியும். துடைப்பம் பாதியா பிஞ்சிடுச்சி. இதை முழுசா பிஞ்சிடலன்னா நான் செத்துடுவேன். துடைப்பத்தால அடிச்சா பாவம் வந்து சேரும்ன்னா முழு பாவமும் என்னை வந்து சேரட்டும். எனக்கு நீங்க பண்ண கொடுமைக்கு இன்னைக்கு நான் பழி வாங்கிக்கிறேன். என்னை பிடிச்ச பாவம் நாளைக்கு வந்து என்னை பழி வாங்கட்டும்.." என்றவள் சொல்லிக் கொண்டே அவரை நோக்கி நடந்தாள்.மாமனார் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வாசலுக்கு ஓடினார். அங்கே இருந்த கற்களை கையில் அள்ளியவர் வீட்டை விட்டு வெளியே வாசலுக்கு வந்த யதிராவின் மீது எறிந்தார்.அவர் எறிந்ததில் முதல் கல்லே யதிராவின் நெற்றியில் மோதியது. பயங்கரமாக வலியெடுத்தது. நெற்றியில் இருந்த வழிந்த ரத்தம் கண்ணின் இமைகளை நனைத்து பார்வையை தடுத்தது.வீட்டுக்குள் இருந்து வெளியே வந்துவிட்டதே தனக்கான பெரிய வெற்றி என நினைத்தாள் யதிரா. அந்நினைவில் தலையின் வலி கூட பெரியதாக தெரியவில்லை. யதிராவின் மாமனார் அடுத்த கல்லை எறியும் முன் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஒருவர் உள்ளே ஓடி வந்தார்."ஏய் பைத்தியமாய்யா நீ.? எதுக்கு அந்த பொண்ணை கல்லால அடிக்கற.?" என்றார்.மூன்றாவது ஆள் உள்ளே வந்ததும் யதிராவிற்கு இன்னும் கொஞ்சம் தைரியம் கிடைத்தார் போல இருந்தது. மாமியாரும் சிரமத்தோடு வாசலுக்கு வந்தாள். தன் கணவனை கோபத்தோடு பார்த்தாள்.யதிராவின் மாமனார் தன்னை கேள்வி கேட்ட மனிதனையும் தன் முன்னால் இருக்கும் வீட்டையும் மாறி மாறி பார்த்தார். தன் மகள் வீட்டுக்குள் இருக்கிறாள். அவளை யாராவது பார்த்தால் போலிஸ்க்கு தகவலை சொல்லி விடுவார்கள் என நினைத்து பயந்தார் அவர்.யதிரா அவரை குழப்பமாக பார்த்தாள். அவளின் மாமியார் தன் கணவனின் பார்வையை உணர்ந்துக் கொண்டாள். சென்று அந்த வீட்டின் கதவை சாத்தி தாளிட்டாள் அவள்.தன்னை கேள்வி கேட்ட மனிதனை தூர தள்ளி விட்டார் அவளின் மாமனார். பின்னர் அந்த வீட்டை நோக்கி ஓடி வந்தார். அவருக்குள் இப்போது ஏகப்பட்ட குழப்பம் இருந்தது. வெளியாட்களுக்கு தன் மகளை பற்றி தெரிந்தால் பிரச்சனை வருமோ என பயந்தார்.யதிராவின் மாமனார் தள்ளி விட்டதில் கீழே விழுந்த மனிதரை ஓடி வந்து தூக்கி விட்டார் இன்னொரு வழிப்போக்கர்.யதிராவின் மாமனார் அந்த வீட்டின் கதவை தாழ் திறக்கும் நோக்குடன் முன்னால் வந்தபோது அவரை துடைப்பத்தோடு வழிமறித்து நின்றாள் யதிரா. அவளுக்குள் இருந்த கோபம் நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டிருந்தது."உங்க பொண்ணு தன் மொத்த வாழ்க்கையையும் ஜெயில்லதான் வாழப்போறா.. நீங்களும்தான் மாமனாரே.." என்றவளை விலக்கி நிறுத்தினாள் அவளின் மாமியார்."நீ தூர போம்மா.. இனி நான் பார்த்துக்கறேன்.." என்றவள் மருமகள் கையில் இருந்த துடைப்பத்தை கையில் வாங்கினாள்."என்னடி புரட்சி செய்றியா.? உள்ளே இருக்கறது நம்ம புள்ளடி.. அவளை விட இவ உனக்கு முக்கியமா.?" என்றார் அவர்.மாமியார் கசந்ததொரு சிரிப்பை சிரித்தாள்."அவ என் மகன்னா அப்ப இவ யாரு.?" என்றாள் யதிராவை காட்டி."இவளும் எனக்கு மகதானே.?ஒருத்திக்காக இன்னொருத்தியை நான் பலி தர மாட்டேன்.." என்றவள் துடைப்பத்தால் மாமனாரின் முகத்திலேயே ஓங்கி அடித்தாள். அந்த தாக்குதலை அவர் எதிர்ப்பார்க்கவில்லை. அதனால்தான் அசட்டையாக நின்று விட்டிருந்தார். துடைப்பத்தில் விழுந்த அடி சற்று அதிகம்தான். அவரின் உதட்டில் காயம் பட்டு ரத்தம் வழிந்தது.அந்த அடியை விடவும் அவருக்கு அதிக அதிர்ச்சி தந்தது தன் மனைவியே தன்னை அடித்ததுதான். அதிர்ச்சியில் இருந்தவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த யதிராவின் போனை வெடுக்கென எடுத்தாள் மாமியார். யதிராவிடம் போனை நீட்டினாள்."போலிஸ்க்கு போன் பண்ணு.." என்றாள்.யதிரா போனை ஆன் செய்த நேரத்தில் அந்த வீட்டின் வாசலில் வந்து நின்றது முகிலின் கார். அவனின் காரை உரசியபடி வந்து நின்றது போலிஸ் ஜீப்.ஜீப்பில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் சக்தியை ஆச்சரியமாக பார்த்தான் முகில்."சாரி முகில்.. உங்க சிஸ்டர் இங்கேதான் இருக்கான்னு நான் யூகிக்கிறேன். அவங்க பீச் ரெசார்ட்ல இருக்காங்கன்னு போன்ல ஒருத்தர் தகவல் சொன்னார் இல்லையா.? அவர் பேசிய போன் சிக்னல் இந்த ஏரியாவுல இருந்துதான் கிடைச்சிருக்கு.." என்றார்.முகில் பயத்தோடு வீட்டின் பக்கம் திரும்பினான். யதிரா நெற்றியில் ரத்தம் வழிய நின்றிருந்தாள். பயந்து போனவன் அவளருகே ஓடினான். அவளை அணைத்துக் கொண்டான்."யதிரா.. உனக்கு என்ன ஆச்சி.?" என்றான் பயத்தோடு.யதிரா அவனை விட்டு விலகி நின்றாள். தன் நெற்றியை துடைத்துக் கொண்டாள்."எனக்கு ஒன்னும் ஆகல. ஆனா அத்தைக்குதான் அடி பட்டுட்டிச்சி.." என்றவள் அவனின் பின்னால் வந்த இன்ஸ்பெக்டரிடம் "மேக்னாவும் சௌந்தர்யாவும் வீட்டுக்குள்ளதான் இருக்காங்க மேடம்.." என்றாள்.தடுமாறி நின்ற தன் அம்மாவை அவசரமாக சென்று தாங்கி பிடித்துக் கொண்டான் முகில்.இன்ஸ்பெக்டர் தன்னோடு வந்தவர்களிடம் சைகை காட்டினார். காவலர்கள் விலங்கோடு வீட்டுக்குள் ஓடினர்.அந்த வீட்டின் முன் கூடி விட்ட கூட்டம் அங்கு நடந்ததை தங்களுக்குள் விவரித்து சொல்ல ஆரம்பித்தது.யதிராவின் மாமனார் திருட்டு முழி விழித்தபடி அங்கும் இங்கும் பார்த்தார்."இவரையும் அரெஸ்ட் பண்ணுங்க மேடம்.. அவங்களுக்கு திட்டம் போட்டு தந்து அவங்களுக்கு எல்லா வகையிலும் உதவியா இருந்தவர் இவர்தான்.." என்றாள்.அவர் மறுத்து தலையசைக்க கூட நேரம் தராமல் அவரின் கையில் விலங்கை பூட்டினார் இன்ஸ்பெக்டர்."அந்த போன் வந்தவுடனே எனக்கு முதல்ல சந்தேகம் வந்ததே இவர் மேலதான்.." என்றார் இன்ஸ்பெக்டரும்.சௌந்தர்யாவையும் மேக்னாவையும் ஒரே விலங்கில் பூட்டி வெளியே அழைத்து வந்தனர் காவலர்கள். அவர்களின் நிலை கண்டு முகில் அதிர்ந்து போனான்."என்ன ஆச்சி இவங்களுக்கு.?" என்றார் இன்ஸ்பெக்டர்."நான்தான் மேடம் தற்காப்புக்காக அவங்களை அடிச்சேன்.." என்ற யதிரா தன் நெற்றியையும் தோளையும் சுட்டிக் காட்டினாள்."அவங்கதான் முதல்ல என்னை தாக்கினாங்க. என் ரூம்க்கு நெருப்பு வைக்க முயற்சி பண்ணாங்க. நீங்க ஆதாரத்தை பார்த்துக்கலாம்.." என்றவளை அருகே வந்து அணைத்துக் கொண்டாள் கே.கே."உனக்கு வேற எங்கயாவது அடி பட்டிருக்கா.?" என்றாள் கவலையோடு."இல்ல.. கையிலும் நெத்தியிலும்தான். நெத்தி காயத்துக்கு காரணம் இவர்தான்.." என்று மாமனார் பக்கம் கை காட்டினாள் யதிரா."இவருக்கு நாங்க ஸ்பெஷல் கவனிப்பு காட்டுறோம். நீ கவலைப்படாதம்மா.. உங்க காயத்துக்கெல்லாம் மருத்துவம் பார்த்துட்டு அப்புறமா ஸ்டேசன் வந்து இவர் மேல கம்ப்ளைண்ட் எழுதி கொடுங்க.." என்ற இன்ஸ்பெக்டர் யதிராவின் மாமனாரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.சௌந்தர்யா தன் தம்பியை கொலை வெறியோடு முறைத்துக் கொண்டே போலிசோடு இணைந்து நடந்தாள். அவரகள் மூவரையும் அங்கிருந்து அழைத்து சென்றபின் தன் மனைவியின் பக்கம் திரும்பினான் முகில்."யதி அவங்களை நீ அடிச்சியா.? இல்ல எங்க அம்மா அடிச்சாங்களா.?" என்றான் சந்தேகத்தோடு.யதிரா அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள். அவனின் தலையில் ஒரு தட்டு தட்டினாள் கே.கே."இதை என் செல்லக்குட்டிதான் பண்ணியிருக்கா.. உன்னால நம்ப முடியலன்னா அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்.?" என கேட்டாள்.யதிரா கே.கேவை கட்டிக் கொண்டாள். "கே.கே.." என்றவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.தான் நம்பாமல் விட்டதால்தான் அழுகிறாளோ என பயந்து போனான் முகில்."இவங்க அக்கா என்னை எப்படி அறைஞ்சா தெரியுமா.? இங்க பாரு என் கன்னமெல்லாம் சிவந்து போய் வலிக்குது.." என்று தன் கன்னத்தை தொட்டுக் காட்டினாள்.அவள் சொன்னது போலவேதான் அவளின் இரு பக்க கன்னங்களும் கரும் சிவப்போடு கன்னி போய் இருந்தது."நல்லாயிடும்.. நீ அழாத.." என்று சொன்ன கே.கே அவளின் கன்னத்தை ஊதி விட்டாள்."எனக்கு எவ்வளவு பயமா இருந்தது தெரியுமா.? அவங்க கதவுக்கு நெருப்பு வச்சிட்டாங்க.. சௌந்தர்யா சேர்லயே என்னை அடிச்சிட்டா தெரியுமா.. எனக்கு பயத்துல உயிரே போயிடுச்சி.." என்றாள் யதிரா அழுகையை நிறுத்தாமல்.அவளை இறுக்கமாக கட்டிக் கொண்டாள் கே.கே. "ஒன்னும் ஆகல.. நீ எதுக்கும் கவலைப்பட வேணாம். நீ இந்த நாளை கடந்துட்ட.. யூ ஆர் க்ரேட்.." என்றாள் சமாதான குரலில். அவளுக்கு தெரியும் யதிராவின் மொத்த பயமும் இந்த அழுகையின் வழியே வெளி வந்தால் ஒழிய யதிராவின் மனதில் உள்ள பயம் போகாது என்று. அதனால்தான் அவள் அழட்டும் என்று அப்படியே விட்டு விட்டாள்."அப்புறமா அழலாம். இப்ப ஹாஸ்பிட்டல் போகலாம் வா.." என்றான் முகில். தன் அம்மாவின் கையை பிடித்து அழைத்தபடி காரை நோக்கி நடந்தான். கே.கே அழுதுக் கொண்டிருந்த யதிராவை தன்னோடு அணைத்தபடியே அழைத்துச் சென்றாள்.மருத்துவமனையில் யதிராவுக்கும் அவளது மாமியாருக்கும் மருத்துவம் பார்க்கப்பட்டது. யதிரா தேம்பிக் கொண்டே இருந்தாள்."இன்ஜெக்சன் பண்ணது வலிக்குதாம்மா.?" என கேட்டார் மருத்துவர்.இல்லையென்று தலையசைத்தவள் தன் தேம்பலை நிறுத்தவே இல்லை."அவ கொஞ்சம் பயந்துட்டா டாக்டர்.. கொஞ்ச நேரம் அழுதா சரியாகிடுவா.." என்றான் முகில்."நான் ஒன்னும் பயப்படல.." என்று உடனடி பதில் சொன்ன யதிராவை தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டாள் கே.கே."ஆமா நீ பயப்படல.. அந்த லூசு பையன் சொல்றதை காதுல வாங்காத.." என்றாள்.தான் எதை தவறாக சொல்லிவிட்டோம் என குழம்பி போனான் முகில். முகிலின் குழப்பம் கண்டு அம்மாவிற்கு சிரிப்பு வந்தது.முகில் அம்மாவை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே நடந்தான்."போலிஸ் ஸ்டேசன் போகலாம் வா.." என்று யதிராவை அழைத்துக் கொண்டு முகிலின் பின்னால் நடந்தாள் கே.கே."நான் இருந்த ரூம்ல துடைப்பத்தை தவிர வேற எதுவுமே இல்ல. ஏதாவது ஒரு நல்ல ஆயுதமா வாங்கி கூடவே வச்சிக்கணும்.." என்றாள் யதிரா.அவளின் முன்னால் நடந்துக் கொண்டிருந்த முகில் தன் மீது யாரோ வந்து மோதியதால் அப்படியே நின்று விட்டான். அவனின் அம்மா "கடவுளே.." என்று அலறினாள்.யதிரா குழப்பத்தோடு முகிலின் முதுகை பார்த்தாள். முகில் அவளின் முன்னால் மண்டியிட்டான். இடுப்பை பற்றியிருந்த அவனது கை யதிராவின் பார்வைக்கு வந்தது. கை முழுக்க ரத்தமாக இருந்தது. யதிரா கலங்கும் விழிகளோடு முகிலின் எதிரே நின்றிருந்தவனை பார்த்தாள். அவனை இதற்கு முன் எங்கும் பார்த்தோம் என யோசித்தாள். கலங்கும் விழியிலிருந்து கண்ணீர் கீழே சிந்திய பின்னே அவளுக்கு பார்வை தெளிந்தது.தன் அப்பா கொலைக்கான சாட்சிகளை மறைத்து, சௌந்தர்யாவிடம் அம்பது லட்சம் லஞ்சம் வாங்கிய போலிஸ் ரத்தினம்தான் அவன் என கண்டறிந்துக் கொண்டவளுக்கு வலியில் துடிக்கும் முகிலை காணுகையில் மூளை சிந்திக்க மறுத்தது.யதிராவை போலவேதான் கே.கேவும் அதிர்ச்சியில் இருந்தாள்."ஒன்னா சேர்ந்து சரக்கடிக்க வரியா.?" என கேட்ட ரத்தினம் கே.கேவை நெருங்கி அவளை கத்தியால் குத்த முயன்றான். அதே நேரத்தில் அவனின் கையில் வந்து சொருகியது மற்றொரு கத்தி.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புக்களே..Word count 1231VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN