முகவரி 16

P Bargavi

New member
அனு கட்டில் விளிம்பில் ஒதுங்கவும்... மிக சுவாதீனமாக அவள் முகத்தருக்கே தன் முகத்தைக் கொண்டு சென்றவன், “என்ன?.. உன் வீட்டில் கொண்டு வந்து விடவும், நான் இப்படியே உன்னை விடுவேன்னு நினைச்சிடியா? இல்லை… நீ செய்ததை தான் மறந்திடுவேன்னு நினைச்சிடியா? வாய் ரொம்பத் தான் நீளுது. ஏற்கனவே கை நீண்டதுக்குத் தான் உன்னைக் கடத்திட்டுப் போனேன். இப்போ இப்படி பேசுறதுக்கு சும்மா விட்டுடுவேனு நினைக்கதே?” குரல் உயர்த்தாமல் இவன் நிதானமாய் கேட்க

அவளின் உடலோ உதறியது. கூடவே அவள் முகத்தில் அருவருப்பைப் கண்டவன், கை முஷ்டி இறுக, இன்னும் அனுவிடம் அவன் நெருங்க... அதேநேரம் “ப்பா...” என்ற வார்த்தையுடன் புரண்டு படுத்து அவனின் நோக்கத்தைத் தடுத்தாள் மான்வி.

அதில் கலைந்தவன், “பேபிக்கு நீ காணாமல் போனதிலிருந்து உன்னைத் தேடி காய்ச்சல் வந்துடுச்சு. என்ன தான் டாக்டர் வந்து பார்த்தும் பேபி சரியாகல. உன்னை அதிகம் தேடினா.... அதான் உன்னைக் கடத்தியதை தற்காலிகமா கைவிட்டு இங்கு திரும்ப அழைச்சிட்டு வந்தேன். இல்லைனா உன்னை சும்மா விடுறவன் கிடையாது இந்த மிருடவாமணன்!” இவன் தன்னிலை விளக்கம் தர

அவளோ முகத்தைத் திருப்பவும், “ரொம்ப திருப்பாதே... உன் உடல் தேறணும்னு தான் இப்பவும் உன்னை இங்கே விட்டு வைக்கிறேன். திரும்ப உன்னைக் கடத்திடுவேன்... ஏன்னா, இன்னும் என் டீல் அப்படியே தான் இருக்கு...”

“அப்பொழுதும் என் மகள் என்னைக் காப்பாற்றுவா...”

இவளின் பதிலில் கண்கள் ஒளிர, “பேபியை என் அக்கா வீட்டு அனுப்பிட்டு உன்னைக் கடத்துவேன். என்ன, செய்ய மாட்டேன்னு நினைக்கிறியா? பார்க்கறீயா...” இவன் சவால் விட அவளோ தலை குனிய.

“உன் கிட்ட அப்போதிருந்து இப்போது வரை ஒன்று மட்டும் மாறலை. இந்த அவசரம்... இதனால் நீ உன் வாழ்க்கையை இழந்து கூட நீ உன்னை திருத்திக்கவில்லை?”

“திருந்த வேண்டியவங்களே இன்னும் திருந்தாமல் இருக்கும் போது... நான் மட்டும் திருந்தணும்னு எதிர்பார்த்தா எப்படி?”

“ரைட்... நான் இன்னும் அதே பழைய மிருடவாமணன் தான்! அப்படியே தான் இருக்கேன்... மாற்றிக்க தோணலை... மாறவும் மாட்டேன்”

அவனின் பதிலில், ‘அட லூசே.. நான் சொன்னது திருந்தச் சொல்லி... மாறச் சொல்லி இல்லை..’ இவள் தனக்குள் சொல்லிக் கொள்ள…

அவளின் எண்ண ஓட்டத்தைப் படித்தவன் போல், “உன் கிட்டவும் எதுவுமே மாறல அனுதிஷிதா... நீயும் அப்படியே தான் இருக்க” என்று உதடு வளைய சிரிப்புடன், பொருள் விளங்கா பார்வையுடன் அவளைப் பார்த்துச் சொன்னவன், அடுத்த கணம் எழுந்து நின்று தன் மொபைலை நோண்டியபடி, “கொஞ்ச நாள் ரெஸ்ட்ல இரு… நான் திரும்ப வந்து உன்னைக் கடத்துறேன்... அதுவரை நீ உனக்கான வேலையை மட்டும் தான் செய்யணும். போலீஸ்க்கு போறேன்னு முன்னே மாதிரி எவனையாவது அழைச்சிட்டு வந்தா... நீ அழைச்சிட்டு வர்ற போலீஸ வைத்தே உன்னைக் கடத்திடுவேன்.

அதற்கான ட்ரையல் பார்க்க உனக்கு ஆசைனா... தாராளமா போலீஸ் கிட்ட போ. அப்போ உன்னை நான் என்ன செய்வேன்னு அங்கே சொல்கிறேன். அதுவரை கெட் வெல் சூன்... பை பை...” என்றவன் தான் வந்த வேலை முடிந்தது போல் அடுத்த நொடி அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான் மிருடன்... அனுவைத் திரும்பியும் பார்க்காமல் தான்!

அனுவுக்குள் பல குழப்பங்கள்... அவளால் போலீஸுக்கும் போக முடியாத நிலை... வீட்டு வேலைக்கும், தோட்ட வேலைக்கும் சில ஆட்களை வேலைக்கு வைத்திருந்தான் பரணி. மிருடனிடம் இவள் என் தங்கை என்று அனுவை சொன்னதிலிருந்து... அவன் உதவிகளை மறுக்க முடியாமல் ஏற்றுக் கொள்கிறாள் இவள்.

அதனால் மிருடன் சொன்னது போல் இப்போதெல்லாம் முழு ஓய்வில் தான் இருக்கிறாள் அனு. மான்விக்கு உடல்நிலை சரியாகி விட்டாலும், தாயைப் பிரிந்திருந்ததால் அவளையே சுற்றி வந்தது அந்த மான் குட்டி.

அனுவுக்கும் மிருடன் விஷயமாக போலீஸிடம் போக விருப்பம் இல்லை. ஆனால் அவனை சும்மா விடவும் மனம் இல்லாதவளாக, அவன் திரும்ப கடத்த வாய்ப்பை அளிக்க விரும்பாதவளாக தன் வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தாள் இவள்.

நாட்கள் நகர… ஒரு நாள் வெளியே விளையாடச் சென்ற மான்வியைக் காணவில்லை. ஆமாம், பந்து விளையாடிக் கொண்டிருந்த மான்வி என்ற மான் குட்டியை காணவில்லை.

விளையாடும்போது பந்து வெளிவாசலுக்குச் சென்று விட.... அதை அவள் எடுக்கச் சென்ற நேரம் அனுவுக்குப் போனில் அழைப்பு வர... அதனை இவள் எடுத்துக் கொண்டு பின்புறம் சென்ற நேரம்... மகள் முன் வாசலுக்குச் சென்று விட்டாள். இதில் ஒரு சிறு தவறு என்னவென்றால், அனுவுடன் மான்வி பாப்பா இருப்பதாக பார்வதியும்... பார்வதியுடன் மகள் இருப்பதாக அனுவும் நினைத்திருக்க... அவள் கடத்தப்பட்ட ஒரு மணிநேரம் கடந்த பிறகு தான் அப்படி அவள் கடத்தப்பட்டிருக்கிறாள் என்பதே தெரிய வந்தது அனு வீட்டாருக்கு.

பின் அனு, தாய்க்கே உள்ள பரபரப்பில் பதட்டத்துடன் மகளைத் தேட... பலன் என்னமோ பூஜ்யம் தான். பரணிக்கு போன் செய்து இவள் விஷயத்தைச் சொல்ல நினைக்க... அவன் ஒரு கேஸ் விஷயமாக வெளியூர் சென்றிருப்பதாக சொன்னார்கள். அதில் இவள் பதட்டத்தில் மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் சரிந்து அமர்ந்து அழ...

“அனும்மா, பாப்பா எங்கேயும் போயிருக்க மாட்டா.... இங்கே தான் இருப்பா. நீ இப்படி சோர்ந்து போகாத... நீ காணாமல் போனப்ப கூட பக்கத்து வீட்டு தம்பி தானே உன்னை கண்டுபிடித்து கூட்டி வந்துச்சு.... அது மாதிரி பாப்பாவையும் கண்டு பிடித்து கூட்டி வந்துடும்... நீ அந்த தம்பி கிட்ட ஒரு வார்த்தை சொல்லும்மா” பார்வதி வெள்ளந்தியாய் சொல்ல

அப்போது தான், அனுவின் மண்டைக்குள் சுளீர் என்று ஒன்று உறைத்தது. “அவன் அவன்... ஏன்... அவன் என் மகளை கடத்தி இருக்கக் கூடாது? ஆமாம் அவன் தான் கடத்தி இருக்கணும்...” வாய்விட்டு முணுமுணுத்தவள் அடுத்த நொடி ஓட்டமும், நடையுமாய் மிருடனின் வீடு நோக்கி பறந்தாள் அனு.

இவள் சென்ற நேரம் அங்கு வீட்டில் வேறு ஆட்கள் யாரும் இல்லாமல் இருந்ததால்... வீட்டு ஹாலில் அமர்ந்து மிருடன் ஏதோ ஃபைலில் மூழ்கி இருந்தவனைப் பார்த்தவள்... உள்ளே நுழைந்து,

“டேய்... என் மகளை எங்க டா மறைத்து வைத்திருக்க? காலையிலிருந்து என் மகளைக் காணோம் டா” இவள் ஆங்காரமாய் அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு கேட்க

அவனோ அவளை இயல்பாய் நிமிர்ந்து பார்த்தவன்… பின் தன் வேளையில் மூழ்க, “கேட்கிறேன் இல்லை… என் மகளை எங்கே கடத்தி வைத்திருக்க?” என்று கத்தியவள் ஆவேசத்துடன் அவன் கையிலிருந்த கோப்புகளை வெடுக்கென்று இழுத்து தூர வீச

“ஏய்...” இருக்கையிலிருந்து எழுந்தவன், “என் பேபியை நானே கடத்துவேனா? பைத்தியம் மாதிரி உளராமல் இங்கிருந்து போ...” என்றவனின் சட்டையை மறுபடியும் கொத்தாகப் பிடித்தவள், “நீ தான் அவளைக் கடத்திருக்க... எனக்கு தெரியும். நான் அவளைக் காணோம்னு சொல்கிறேன்… நீ கூலா உட்கார்ந்துட்டிருக்க...” இவள் அவனைப் பிடித்து உலுக்க

ஒரு மெச்சுதல் பார்வையை அவளை நோக்கி வீசியவன், “கரெக்ட்.... நான் தான் பேபியைக் கடத்தினேன். இவ்வளவு தெரிந்த உனக்கு ஏன் கடத்தினேன்னு தெரியலையா? So sad… ச்சு... ச்சு...” இவன் போலியாய் அனுதாபப்பட

“நான் தான் அன்றே சொல்லிட்டனே... என் அப்பா சம்பந்தப்பட்ட ஃபைல் எதுவும் என் கிட்ட இல்லைன்னு...”

“ச்சு...” அவளைத் தீர்க்கமாக பார்த்தவன்... “நானும் அன்றே அந்த ஃபைல் பேச்சை முடிச்சிட்டேன். ஆனா அதற்குப் பிறகு உனக்கு ஒரு டீல் வச்சனே… அது உனக்கு ஞாபகம் இல்லையா?” இவன் அது என்ன என்பதைத் தன் பார்வையால் நினைவுபடுத்த

உடல் கூச அருவருத்தவள், “ச்சீ... ஒரு குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து... நீ நினைத்ததை சாதிக்க நினைக்கிறீயே... உனக்கு அசிங்கமா இல்லை?” இவள் அவன் முகத்தில் காறிஉமிழாத குறையாக கேட்க

“இல்லை...” உடனே ஒற்றுக் கொண்டவன், “இதில் அசிங்கப் பட என்ன இருக்கு... நான் ஒண்ணும் காலம் முழுக்க உன்னை எனக்கு ஆசை நாயகியா இருக்கச் சொல்லலையே! ஒரு நாள்…. ஜஸ்ட் ஒரே ஒரு நாள் மட்டும் தான் நீ எனக்கு முழுசா வேணும். அது இன்றே என்றாலும் நாளைக்கே உன் மகளை விட்டுடறேன்”

“ச்சீ... த்தூ... நீ எல்லாம் மனுஷனே இல்லை டா...” என்றபடி இவள் தன் காலில் உள்ள செருப்பைக் கழற்றி அவனை அடிக்க கையை ஓங்கியிருந்த நேரம்... அதை அவள் செய்ய விடாமல் மிருடனின் கை தடுத்தது... ஆனால் அப்போது உண்மையிலேயே ஒரு கை மிருடனின் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது. ஆமாம்…. யாரோ அவனை அறைந்திருந்தார்கள்!

மிருடனோ, தன்னை அறைந்தது யார் என்று அதிர்ச்சியுடன் பார்க்க... அனுவோ நிம்மதியிலும் ஆராய்ச்சியிலும் நோக்க... அங்கு காளியென நின்றிருந்தார் வெண்பா. அவள் நின்ற தோற்றமே... இங்கு நடந்த அனைத்தையும் முழுவதுமாக கேட்டு விட்டாள் என்பதை மிருடன், அனு இருவருக்குமே பறைசாற்றியது.

“ச்சீ... நீ எல்லாம் ஒரு மனுஷனா டா? மிருகம் டா நீ... பாசமா உன் காலையே சுற்றி வந்த குழந்தையைக் கடத்திட்டு... மிருகம் மாதிரி நடந்துக்கிற... ச்சீ....” ஆத்திரம் அடங்காமல் தன் கை ஓயும் மட்டும் வெண்பா மிருடனை அடிக்க, அவனோ கல்லென அசையாமால் அனைத்து அடியையும் வாங்கிக் கொண்டிருந்தான். அவளே சோர்ந்து போய் தரையில் அதிர்ச்சியுடன் அமர்ந்த நேரம்…

“அக்கா....” என்று இவன் அவளிடம் ஏதோ சொல்ல முற்பட...

“என்னை அப்படி கூப்பிடாத டா... அப்படி கூப்பிடாத. உண்மையிலே நீ என்னை அக்காவா நினைத்திருந்தா... என் அப்பா, அம்மாவை உன் அப்பா அம்மாவா நினைத்திருந்தா... நாங்க வளர்த்த பாசம் உனக்கு கொஞ்சமாவது இருந்திருந்தா... இப்படி ஒரு பெண்ணை பார்த்து அசிங்கமே இல்லாமல் இவ்வளவு கேவலமா கேட்டிருக்க மாட்ட. நீ அநாதை தானே டா? அதான் உன் புத்தி இப்படி போகுது. அதுவும் கணவனை இழந்து நிற்கிற பெண்ணைப் பார்த்து இப்படி கேட்க உனக்கு நாக்கு கூசலயாடா?”

அக்கா தன்னை அநாதை என்றதும் இவனுக்குள் கோபம் எழ, “ நான் ஒன்னும் அநாதை இல்லை. எனக்கும் குடும்பம் இருந்தது... இப்பவும் இருக்கு. அப்புறம் என்ன கேட்டீங்க… அசிங்கமா? இதில் என்னக்கா இருக்கு... அதான் புருஷன் செத்துட்டானே! பிறகு நான் கேட்டதில் எதுக்கு நா கூசனும்?” கூர் ஆயுதம் என வெளி வந்த அவன் வார்த்தலயில் அனு தலையில் அடித்துக் கொண்டு அழ... இப்போது மறுபடியும் வெண்பா அவனை அடிக்க கை ஓங்க... அங்கு வந்த கஜேந்திரன் மனைவியைத் தடுக்கவும்...

“ஏங்க... இவனை என் கிட்ட பேச வேண்டாம்னு சொல்லுங்க... இனி இவன் எப்போதும் என் முகத்தில் முழிக்கக் கூடாதுங்க. நான் வளர்த்த பிள்ளையாங்க இவன்... எப்படிங்க இப்படிப்பட்ட பொறுக்கியா மாறினான்?” வெண்பா நம்ப முடியாத அதிர்ச்சியில் தன் மார்பிலே அடித்துக் கொண்டு அரற்ற...

“நீ உள்ள வந்து கொஞ்ச நேரம் உட்கார்... பிறகு பேசிக்கலாம்” என்றபடி கஜேந்திரன் மனைவியை உள் அறைக்கு அழைத்துச் சென்றார் அவர்.

அவர்கள் அகன்றதும் மிருடன் அனுவை ஒரு வெட்டும் பார்வை பார்த்தவன், “என் அக்கா முன்னால் என்னை பொறுக்கியா காட்டி, அசிங்கப்படுத்திட்ட இல்லல? என் அக்கா கிட்டயிருந்து என்னை பிரிச்சிட்ட தானே? அப்போ, நான் இப்போ சொல்றதையும் நல்லா கேட்டுக்கோ... இன்றே மான்வி உன் வீடு தேடி வந்திடுவா. ஆனா, நாளையிலிருந்து எண்ணி மூன்று நாள்... தினத்துக்கு ஒரு உனக்கு பிரச்சனையைக் கொடுப்பேன். நான் கொடுப்பதைத் தாங்க முடியாமல்... மூன்றாம் நாள் மாலை நீயே நான் கேட்டதற்கு சம்மதித்து... என்னைத் தேடி வரீயா இல்லையான்னு பாரு. உன்னை வர வைப்பேன் டி நான்! அதுவரை... என் கண் முன்னாடி வந்திடாதே… வந்த…” வெறுப்புடன் அவளைப் பார்த்து மொழிந்தவன் அடுத்த நொடி தன் அறைக்குள் சென்று கூண்டு புலியென அடைபட்டான் மிருடன். அவன் குரல், தான் சொன்னதைச் செய்வேன் என்று அனுவுக்குள் உணர்த்த... அவளோ ஒரு கேவலுடன் அவன் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தாள் அவள்… கண்ணீருடன் தான்!

சில நாட்களுக்கு முன்பு மகன் ஜீவாவைக் கொண்டு சென்று வெண்பாவிடம் விட்டிருந்தான் மிருடன். கொஞ்ச நாள் அத்தை வீட்டில் இருந்த ஜீவா… தன் தந்தையையும், மான்வியையும் கேட்டு அடம் பிடிக்க... அனுவை யாரோ கடத்தியதைப் பற்றி அறிந்த வெண்பா... அனுவை நேரில் காண ஆசை கொண்டு... இங்கு வர நினைத்தவள் இது குறித்து தம்பியிடம் எந்த வித தகவலையும் சொல்லாமல் அவள் குடும்பத்துடன் வந்து நிற்க... ஊருக்கு வந்ததும் பிள்ளைகள் அனைவரும் மான்வியைப் காண வேண்டும் என்று அடம் பிடிக்க... குழந்தைகளைக் கணவனுடன் அனு வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு... வெண்பா தன் தம்பியை முதலில் காண வேண்டும் என்ற ஆவலில் மிருடன் வீட்டுற்கு வர... அதன் விளைவால் நடந்தது தான் அவன் தம்பி வீட்டில் அவன் வாய் மொழியாகவே இன்று நடந்த அனைத்து கூற்றுகளையும் கேட்க முடிந்தவைகள்.

அதுவும் என்ன மாதிரி வார்த்தைகள் அவை! கணவனை இழந்த ஒரு பெண்ணிடம்… என் தம்பியா? அவனா இப்படி?? இப்படியான வார்த்தைகளை சொன்னான்.. தன் தம்பி வாய் மொழியாக நேரடியாக கேட்காமல் வேறு யாராவது இப்படி என்று சொல்லி இருந்தால் நிச்சயம் வெண்பா நம்பியிருக்க மாட்டாள். ஆனால் இன்று கேட்ட பிறகு... அவளால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஆனால் இவை உண்மை தானே!... அதனால் தான் அந்த இடத்தில் ஒரு தாய் எப்படி நடந்து கொள்வாளோ... அதே வேகத்தில் தன் தம்பியை அடித்து விட்டாள்... அவளுக்கு அனுவை அணைத்து சமாதானப் படுத்த விருப்பம் தான். ஏனோ அவளை நெருங்கி... அவள் முகத்தைக் காணக் கூட வெண்பாவுக்கு அசிங்கமாக இருந்தது.


இதில்… ஆணோ, பெண்ணோ... நல்ல முறையில் பிள்ளைகளை வளர்க்கவில்லை என்றால் ஒவ்வொரு தாயும் இப்படி தான் அசிங்கப் படவேண்டும். அதைத் தான் இன்று படுகிறாள் வெண்பா. தற்போது கணவன் இங்கு வரவில்லை என்றால் தம்பியை இன்னும் என்ன செய்திருப்பாளோ அவள்? தன் தமக்கை கேட்கக் கூடாத வார்த்தையைக் கேட்டுத் தெரிந்து கொண்டதில் மிருடனுக்குக் கூட வருத்தம் தான். ஆமாம், வருத்தம் மட்டும் தான். அதற்காக அசிங்கம் எல்லாம் படவில்லை தி கிரேட் மிருடவாமணன். இப்படியான இவன் எல்லாம் என்ன டிசைனோ தெரியவில்லை!...
Nice
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN