முகவரி 18

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மிருடவாமணன் தான் சொன்ன படி ஏதோ சில பிரச்சனைகளைக் கொடுப்பான் என்று தான் அனு முதலில் நினைத்தாள். ஏனென்றால் அவன் குணம் தெரிந்தவள் தானே இவள்... முதல் இரண்டு தினங்கள் அவன் கொடுத்த கஷ்டங்களை இவளால் சமாளிக்கவும் முடிந்தது. ஆனால் முனீஸ்வரன் விஷயமாக இவளுக்குப் பிரச்சனை கொடுத்த போது நெஞ்சை நிமிர்த்தி நின்று வாழ்வேன் என்று உறுதி எடுத்தவளால்... ஏனோ இதில் அப்படி இருக்க முடியவில்லை.

அவளைச் சுற்றி இருப்பவர்களுக்கு ஒன்று என்றதும்... அதுவும் இத்தனை நாள் அவளுக்குப் பாதுகாப்பாகவும்... உறவாகவும் இருந்தவர்களுக்கு ஒன்று என்றதும்... எல்லா சராசரிப் பெண்களைப் போல மரணம் என்ற முடிவை ஒரு வினாடி அனுவின் மனம் நினைத்தது என்னமோ உண்மை தான்.

ஆனால் அடுத்த நொடியே, “ச்ச்ச்சே... நான் ஏன் சாகணும்? அந்த அயோக்கியனின் உயிரைத் தான் எடுக்கணும். ஆமாம்... எடுத்து தான் ஆகணும்… எடுக்கத் தான் போறேன். இனி அவன் உயிரோடவே இருக்கக் கூடாது. அவன் என்ன எனக்கு மாலை ஆறு மணி வரை கெடு கொடுப்பது... நான் கொடுக்கிறேன் பார் அவனுக்கு கெடு...’ என்று திடத்துடன் பல எண்ணங்களுடன் வீடு நோக்கி பயணித்தாள் பழைய அனுதிஷிதாவாக அவள்.

இவள் வீட்டிற்குள் நுழைய, அனுவை கண்டதும்… “என்ன ஆச்சு அனும்மா… அவரை விட்டுட்டாங்களா? எங்க அவர் பின்னாடி வராங்களா... என்னங்க.... என்னங்க...” பார்வதி நம்பிக்கையுடன் தன் கணவனைத் தேடி வெளிவாசலை நோக்கிச் செல்ல,

“ஆன்ட்டி... ஆன்ட்டி... நில்லுங்க! அது… என்னால் அங்கிளை ஜாமீனில் எடுக்க முடியல...” குற்ற உணர்வில் சொன்னவள், “ஆனா, எப்படியாவது அவரை வெளியே எடுத்திடுவேன் ஆன்ட்டி... என்னை நம்புங்க” இவள் நம்பிக்கை தர

“ஐயோ! அப்போ அந்த மனுஷன் வரலையா... இனி வரவே மாட்டாரா? பொய்யா கேஸ் போட்டு இப்படி அவரை உள்ளே வச்சிட்டானுங்களே படுபாவிங்க! என்னையை உலகம் தெரியாத மனுஷின்னு எப்போதும் திட்டிகிட்டே இருப்பாரே... திட்டுனாலும் என் ராசா என் பக்கத்திலே இருப்பாரே... இனி என்னை திட்ட மாட்டாரா... அவர் இல்லாம மக்கு மனுஷி நான் எப்படி இந்த உலகத்தில் வாழப் போறேன்?” உடல் தளர்ந்து தரையில் அமர்ந்து கதறி அழுத பார்வதி... அவரைத் தாங்க வந்த அனுவின் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டு, “அனும்மா... என்னை அவர் கிட்ட கூட்டிட்டு போயேன்... இல்லனா என்னையும் அவர் கூடவே ஜெயிலில் போடச் சொல்லு அனும்மா… நானும் அவர் இருக்கிற இடத்தில் இருந்துக்கிறன்…” அவர் கதற, அனுவுக்கும் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.
‘நேற்று என்னைத் தாங்கியவரா இவர்?’ பார்வதியைப் பார்த்தவளுக்கு மனது வலித்தது. ‘ச்சே... என்னுடைய பிடிவாதத்தால்... எனக்கும், அவனுக்கும் நடக்கிற பிரச்சனையால் இவங்க ஏன் இப்படி கஷ்டப்படணும்? இதற்கு அவனிடம் பேசி தீர்வு கண்டால் என்ன?’ என்று நினைத்த அடுத்த நொடி தன் கைப்பேசியில் மிருடனை அழைத்திருந்தாள் அனு.

வேண்டுமென்றே இரண்டு அழைப்புக்குப் பிறகு இவளின் அழைப்பை எடுத்தவன், “சொல்லுங்க மேடம்... இன்று தான் தங்களுக்கு என்னை அழைக்கணும்னு தோன்றியதோ?” இவன் எள்ளல் குரலில் கேட்க

“நீ என்ன செய்தாலும் உன்னை அழைக்கக் கூடாதுன்னு தான் இருந்தேன். ஆனா... நீ செய்யறது எதுவும் சரியில்லை” இவள் கோபத்தில் மொழிய

“நானும் சரின்னு சொல்லலையே...”

“உனக்கும் எனக்கும் தானே பிரச்சனை? அங்கிளை எதுக்கு பழிவாங்கற?”

“உன் அப்பன் அப்படி நினைத்தானா?” இவனுடைய பதில் நேரடியாக அவளைத் தாக்க

ஒரு நிமிடம் கண்களை இருக்க மூடித் திறந்தவள், “இன்னும் எத்தனை நாள் இதையே சொல்லப் போற… அவர் ஊழல் செய்து மக்களை ஏமாற்றிய அரசியல்வாதியா இருந்திருக்கலாம் ஆனா எனக்கு அவர் நல்ல அப்பாவாகத் தான் இருந்தார்” இவள் தன் தந்தையை விட்டுக் கொடுக்காமல் பேச

“அப்போ இதையே உன் மகள் சொன்னா நீ ஏற்பாயா?” அடுத்த நொடி வில்லென பாய்ந்து வந்தது அவனிடமிருந்து இப்படி ஒரு கேள்வி.

அவன் கேள்வியைத் தவிர்த்தவள் “நாம் பேசித் தீர்த்துக்கலாம் மிருடன்” இவள் இறுதியாய் சமாதானத்திற்கு வர…

“ஹா.. ஹா... பேசித் தீர்த்துக்கலாமா… எதை?” நகைத்தவன், “அப்புறம், நீ இந்தப் பிறவியில் சாகும் வரை உன் அப்பன் பாவம் உன்னைத் தொடரும்… அதாவது என் மூலமாக. அதனால் நோ சமாதான உடன்படிக்கை” இவன் அழுத்தம் திருத்தமாய் மறுக்க

“வேண்டாம் மிரு... நீ செய்வது மகாபாவம்... அன்று நீ செய்த‌ அநியாயத்தால்‌ தான் இன்று யாரும் இல்லாமல் தனியா நிற்கிறேன் நான்...” இவள் கெஞ்ச

அதில் அடுத்த நொடி “என்ன அப்படி கூப்பிடாதடி...” என்று கோபத்தில் கர்ஜித்தவன், “அதான் உன் புருஷன் உயிரை நீயே கொன்னுட்டீயே... பிறகு என்ன?” என்று இவன் முடிக்க

அங்கு அனுவிடம் ஒரு நிமிடம் அமைதி நிலவி… “இதைத் தவிர வேற தீர்வு இல்லையா?” இவள் மறுபடியும் கெஞ்சலாக கேட்க

அந்தக் குரல் அவனை அசைத்ததோ…. “என்ன இருக்கு? அதையும் நீயே சொல்லு” இவன் பதில் கேள்வி கேட்க

“அது... அது வந்து...” சற்றே தயங்கியவள் அவன் மறுபுறம் அமைதியாக இருப்பதை உணர்ந்து, “நாம் இரண்டு பேரும் திருமணம் செய்திக்கலாம் மிரு” இவள் திக்கித் திணறி வேண்டா வெறுப்பாய் சொல்லி முடிக்க…

மறுபுறம் இருந்த அவனுக்கு கோபத்தில் கண்கள் சிவந்தது. அதில் பல்லைக் கடித்தவன், “நெவெர்.... அந்த இடமும், அதற்கான தகுதியும் என் உயிரான மனைவிக்கு மட்டும் தான். உனக்கு என்றும் உன் அப்பனுக்கான தண்டனை தான். நீ எனக்கு ஒரு நாள் வேணும்... அது போதும்! வேற ஆப்ஷன் உனக்கு இல்லை” பிசிரற்ற குரலில் அவனின் பதில் வரவும்… வெறுப்புடன், செய்வது அறியாமல் அழைப்பைத் துண்டிக்க நினைத்தவள் பின் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “மாலை ஆறு மணிக்கு... என் வீட்டுக்கு வா...” இவள் மெல்லிய குரலில் மொழிய

“வாட்!” தான் கேட்டது சரியோ என்பது போல் அந்தப் பக்கம் அதிர்ந்தவன், “அப்போ உனக்கு சம்மதமா?” இவன் ஆழ்ந்த குரலில் கேட்க

“வீட்டுக்கு வாங்க பதில் சொல்கிறேன்...”

“என்ன டி... ஏதாவது ஒரு வகையில் என்னை மாட்டி விடலாம்னு பார்க்கறீயா?”

“அதெப்படி என்னால் முடியும்? ஒரு சராசரிப் பெண்ணானா என்னால் அப்படி செய்ய முடியுமா? தி கிரேட் மிருடவாமணன் ஆச்சே நீங்க! உங்களுக்கு தான் இந்திய பிரதமரிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி வரை தெரியுமே! அப்படி நான் உங்களை ஏதாவது செய்தா இல்லை இல்லை நினைத்தா கூட … என்னை சும்மாவா விடுவீங்க?” இவளின் அழுத்தம் திருத்தமான பதிலில்...

“அது நினைவிருந்தா சரிதான்... Evening 6’O clock i will be there டார்லிங்....” இவனின் கொஞ்சலில் பட்டென அழைப்பைத் துண்டித்தாள் அனு...

இவனிடம் பேசி இருக்கவே கூடாது என்று நினைத்தவள், சுருண்டு படுத்திருந்த பார்வதியைப் பார்க்கும் போது எல்லாம்... ‘பேசித் தான் ஆகணும்’ என்று தோன்றியது. அவரைப் பார்த்ததில், ‘எனக்கு நேற்று தைரியம் சொன்னவரா இவர்?’ என்று அனுவுக்கு மனது பதபதைக்க. இவளுக்கு தெரிந்த வக்கீல் மற்றும் மதர் என்று இன்னும் இவளுக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் இவள் உதவி கேட்க... சொல்லி வைத்தது போல் எல்லோரும் இது சிக்கலான கேஸ் என்றே விலகினார்கள்.

நேரம் செல்லச் செல்ல... நம்பிக்கையை இழந்தாள் அனு. உணவு, தண்ணீர், ஆகாரம் இல்லாமல் அலைந்து திரிந்து வீட்டுக்கு வந்தவள்... எதிர்பார்ப்புடன் பார்த்த பார்வதியிடம், “ஆன்ட்டி, நான் எல்லாம் முடிச்சிட்டேன். அங்கிள் இன்றே வந்திடுவார். நீங்க போய் சாப்பிடுங்க... எனக்கு உள்ளே கொஞ்சம் வேலை இருக்கு” என்று அவருக்கு பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து விட்டு அனு உள்ளே வந்தவள்…

தான் வாங்கி வந்த பொருளை மறைத்து வைத்து விட்டு... பின் முகம் கழுவி வந்தவள் வாங்கி வந்த உணவைத் தட்டில் வைத்து பார்வதிக்கு ஊட்டி விட, “அங்கே அவர் பசியா இருப்பாரே அனும்மா….” என்று கணவன் மேல் பாசம் கொண்டவராக இவர் மறுக்க...

“நான் சொன்னதை நீங்க நம்பலையா ஆன்ட்டி? அங்கிள் இன்றே வந்திடுவார் பாருங்க. அவருக்கும் உணவு வாங்கி கொடுத்திட்டு தான் வந்திருக்கேன். அவர் உங்களை சாப்பிடச் சொன்னார். அங்கிள் வரும்போது நீங்க தெம்பா இருக்கணும் இல்ல... சாப்பிடுங்க ஆன்ட்டி” இப்படி ஏதேதோ சொல்லி அவருக்கு உணவை ஊட்டியவள் பின் உணவை முடித்து இவள் எழுந்திருக்க...

“அனும்மா, நீ சாப்பிடல?” அந்த நிலையிலும் பாசமாய் கேட்ட பார்வதியின் கேள்விக்கு,

“நான் சாப்பிட்டு தான் ஆன்ட்டி உங்களுக்கு வாங்கி வந்தேன். பாப்பா தோட்டத்தில் தானே விளையாட்டிட்டு இருக்கா? நீங்க கொஞ்ச நேரம் படுங்க. எனக்கு உள்ளே கொஞ்சம் வேலை இருக்கு ஆன்ட்டி. அங்கிள் வந்ததும் என்னை எழுப்புங்க. அதுவரை நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்… சரியா?” என்றவள் உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டு அதன் மேலேயே சாய்ந்து சிறிது நேரம் அழுது தீர்த்தவள்... பின் ஒரு முடிவுடன் ஒரு காகிதத்தில் அவளின் மன வலியை எல்லாம் எழுத ஆரம்பிக்க… நேரம் போவது தெரியாமல் எழுதியவளுக்கு…

வெளியில் பார்வதி, “ஐயையோ அனும்மா! நம்ம மான்வி பாப்பாவை வண்டி இடிச்சிடுச்சாம்... குழந்தை பேச்சு மூச்சு இல்லாம இருக்கா… வெளியே வாயேன்...” என்றபடி அவர் கதவைப் படபடவென தட்ட....

எல்லாம் எழுதி இவள் கையெழுத்திட இருந்த நேரம்… இப்படியான வார்த்தைகளைத் தன் காதில் வாங்கியவள்... தன் எண்ணத்தையும் தான் எழுதிய கடிதத்தையும் மறந்தவளாக... இவள் எழுந்து வெளியே ஓட... இனி எனக்கு இங்கு வேலை இல்லை என்பது போல் காற்றில் பறந்து சென்று பீரோ கீழே தஞ்சம் புகுந்தது அவள் எழுதிய வைத்த கடிதம்.

இவர்கள் வீட்டுத் தெரு முனைக்கு அனு வந்து மகளை பார்க்க… உண்மையிலேயே ரத்த வெள்ளத்தில் அடி பட்டு மூச்சு பேச்சுயில்லாமல் இருந்தாள் மான்வி.

“மான்வீஈஈஈ....” இவள் தாவிச் சென்று மகளை அணைத்துக் கொள்ள...

“மேடம், என் மேல் தான் மேடம் தப்பு... நாய் குறுக்க வரவோ... எனக்கு கொஞ்சம் பேலன்ஸ் தப்பிடுச்சு. இப்பவே ஹாஸ்பிடல் வாங்க மேடம், முழுச் செலவையும் நானே பார்த்துக்கிறேன்... வாங்க மேடம்” பதினேழு வயது இளம்பெண் உண்மையான அக்கறையுடன் விழிகளில் கண்ணீருடன் அழைக்க... அதே நேரம் அங்கு வந்தது வெண்பாவின் கார்.

மிருடனும் அங்கில்லாமல்... அனுவையும் பார்க்க முடியாமல் இருந்ததால் வெண்பா... தன் தோழி வீட்டுக்குச் சென்று விட்டவள்... முனீஸ்வரனின் விஷயம் தெரிந்து தற்போது இங்கு வர... அவள் கண்டது என்னவோ நினைவிழந்து இருந்த மான்வியையும்... எதுவும் புரியாமல் மகளை மடியில் சாய்த்துப் பித்துப் பிடித்தவள் போல் அமர்ந்திருந்த அனுவையும் தான்... உடனே அங்கிருந்த நிலையைப் புரிந்து கொண்டவள்... தங்கள் காரிலேயே இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல... அந்தோ பரிதாபம்! இவர்கள் குழந்தையுடன் மருத்துவமனை செல்லவே ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. ஒரு அவசரதிற்கு அங்கு எதுவும் உயர்தர சிகிச்சை வசதி கொண்ட மருத்துவமனை இல்லை என்பதால் அந்த நிலைக்கு தள்ளப்பட்டனர் அவர்கள். உடனே ஆதிக்கு விஷயம் சொல்லப் படவும், அங்கு இவர்கள் சென்று சேர்வதற்குள் அனைத்து ஏற்பாட்டையும் மருத்துவமனையில் செய்திருந்தான் அவன்.

அது தனியார் மருத்துவமனை என்பதால் அங்கே இருந்த மருத்துவர்கள் உடனே மான்வியைப் பரிசோதித்துப் பார்த்தவர்கள், “ரத்தம் அதிகம் போயிருக்கு... தலையில் தையல் போடும் அளவுக்கு காயம் ஏற்பட்டிருக்கு... ஆனா காலில் ஒரு ஆப்ரேஷன் செய்து தான் ஆகணும். அது செய்யலனா, எதிர்காலத்தில் குழந்தைக்கு கால் செயல் இல்லாமல் போக வாய்ப்பிருக்கு. சோ, ஆப்ரேஷன் இஸ் மஸ்ட். ஆனா அதற்கான மருத்துவர் இங்கில்லை.

பெட்டர் நீங்க சென்னை போவது தான். அதற்கு முன்னே இப்போ உடனடியா குழந்தைக்கு ரத்தம் தேவைப்படுது. இங்கு குழந்தையோட பிளட் குரூப் ஸ்டாக் இல்லை. சோ, வெளியே வாங்கிட்டு வாங்க. எவ்வளவு சீக்கிரம் குழந்தைக்கு ரத்தம் செலுத்துகிறமோ அவ்வளவு சீக்கிரம் நல்லது.. பிறகு குழந்தையோட நீங்க இன்றே சென்னை கிளம்பணும்... அதனால் சீக்கிரம் அந்த குரூப் பிளட் வாங்கிட்டு வாங்க” டாக்டர் தன் கடமையென சொல்லி விட்டுச் செல்ல...

அங்கிருந்த அனைவரும் தங்கள் ரத்தத்தைக் கொடுக்க முன்வர... ஆனால் யாருடைய ரத்தமும் மான்வியின் ரத்தத்தோடு ஒத்து போகவில்லை. அனு, வெளியில் தனக்கு வேண்டியவர்களிடம் கேட்டுத் தவிப்புடன் நிற்க...

அப்போது மான்வி அறையிலிருந்து வெளியே வந்த நர்ஸ், “இன்னும் ரத்தம் கிடைக்கலையா மேடம்? அங்கே குழந்தைக்கு பல்ஸ் இறங்கிட்டு இருக்கு... சீக்கிரம் ஏற்பாடு செய்ங்க... இல்லனா குழந்தையைத் தூக்கிட்டு கிளம்புங்க. ஏதாவது ஆச்சுன்னா பிறகு டீன் வந்து எங்களைத் தான் திட்டுவார்...” என்று கத்த

“குழந்தைக்கு ரத்தம் தாங்க தேடிட்டு இருக்கேன்... எங்கேயும் கிடைக்கலை. தாயான என் உதிரமும் அவளுக்கு ஒத்துப் போகலையே...” அனு ஆற்றாமையில் உடைந்து அழ…

“குழந்தையோட அப்பாவை வரச் சொல்லுங்க... ஒருவேளை அவர் பிளட் மேட்ச் ஆகுதான்னு பார்க்கலாம்...” நர்ஸ் சுள்ளென சொல்லி விட

அனுவின் நிலை உணர்ந்ததால், “எங்களுக்குத் தெரியும்ங்க… நீங்க போங்க...” நர்ஸ்க்கு பதில் கொடுத்த வெண்பா ஆதரவாக அனுவை அணைத்து தன் பக்கத்தில் அமரவைத்துக் கொள்ள,

“அக்கா... உங்க தம்பிக்குப் போன் செய்ங்க...” அனு கண்ணீருடன் சொல்லவும்

“அட ஆமாம்! நடந்த விஷயத்தில் நான் அவனை மறந்துட்டேனே... அவன் கிட்ட சொன்னா ரத்த வங்கியே இங்கு கொண்டு வந்து நிறுத்திடுவான். ஏன் ஆதி நீ உன் பாஸ் கிட்ட இதை சொல்லலையா?” என்று கேட்ட படி இவள் தன் போனை எடுத்து தம்பிக்கு அழைப்பு விடுக்க முனைய

“இல்லை மேம்... காலையிலிருந்து சார் செம்ம டென்ஷன். அவர் கிட்டவே நெருங்கவே முடியல” இவன் உண்மையை உரைக்க

அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வெண்பா அழைப்பை விடுத்ததும் மொபைலைத் தன் காதுக்கு கொடுக்க…

“என் கிட்ட போனைக் கொடுங்க அக்கா...” அனு கை நீட்ட

மொபைல் அனுவிடம் சென்ற நேரம்… அந்தப்பக்கம், “ஹெலோ...” என்றது மிருடனின் அழுத்தமான நிதானமான குரல்.

இங்கு அனுவோ எதுவும் சொல்ல முடியாத நிலையில் தேம்ப... அழைத்தது யார் என்று தெரிந்ததும்…. இவன்,
“ஷிதா...” என்று ஒற்றை அழைப்பில் அவளை அழைக்க…. அடுத்த நொடி,


“மிரு... மிரு... நம்ம மகளுக்கு விபத்து... பிளட் தேவையாம்... ஒரு அம்மாவா என்னால் நம்ம மகளைக் காப்பாற்ற முடியல. நீ... நீங்க... நம்ம மகளுக்கு பிளட் கொடுக்க இங்கே வாங்க” அழுகையுடனே தன் கணவனுக்கு கட்டளையுடன் அழைப்பு விடுத்தாள் தி கிரேட் மிருடவாமனின் மனைவி அனுதிஷிதா!


பி. கு : தோழமைகளே... நான் கொஞ்சம் பிஸி.... அதனால் திங்கள் அன்று அடுத்த பதிவோடு வருகிறேன்.... love u all :love: :love: heart beatheart beat
 
Last edited:
ரெண்டு பேரும் husband and wife தானா..... Appram ஏன் இவ்வளவு சண்டை avan ஏன் avala அவ்வளவு torture பண்றான்....ava அப்பா எதோ panni இருக்கான் போல..... Avalaala onnume panna முடியாமல்.... enna vaangi kitu வந்து vechitu letter ezhuthina.... Maanvi ku accident ஆயிடுச்சி.... Avanga பசங்க தான் appo ஜீவா yum maanvi yum... Super Super maa
 

அனிதா கண்ணன்

Guest
என்னது! திங்கள்கிழமையா?..அது வரை 😔
 
V

Vasumathi

Guest
அந்த குரலுக்கு சொந்தக்காரன் மிருடனா😱 sema twist dr😍
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ரெண்டு பேரும் husband and wife தானா..... Appram ஏன் இவ்வளவு சண்டை avan ஏன் avala அவ்வளவு torture பண்றான்....ava அப்பா எதோ panni இருக்கான் போல..... Avalaala onnume panna முடியாமல்.... enna vaangi kitu வந்து vechitu letter ezhuthina.... Maanvi ku accident ஆயிடுச்சி.... Avanga பசங்க தான் appo ஜீவா yum maanvi yum... Super Super maa
நன்றிங்க சிஸ்😍😍😍😍💜💜💜💜💜💜🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹💝💝💝💝💝💝
love you chiththu sis :love: :love: :love: :love:
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN