முகவரி 20

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மகளைப் பார்த்து விட்டு கிளம்பும் போது, “வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க ஆதி? ஜீவா என்னைத் தேடினானா?” மிருடன் விசாரிக்க

“all are fine பாஸ்... உங்க அத்தான் நேற்று நைட்டே இங்கு வந்துட்டார்” அவன் தகவல் தர

“oh... i see...” என்றபடி இவன் மனைவியைக் காண.. அவள் முகமோ ஜீவா என்ற பெயரில்... வாடிப் போயிருந்தது. அதைக் கவனித்தவன், “நாம் கிளம்பலாம் ஷிதா...” என்றபடி வெளியே வந்தவன் “கேன்டீன் போய் காபி சாப்பிட்டுப் போகலாமா?” இவன் மனைவியிடம் சகஜமாய் கேட்க

“ஆஹ்ங்...” தன் சிந்தனையில் இருந்தவள், “வேண்டாங்க... ப்ரெஷ் செய்யாமல்... நான் எப்போ சாப்பிட்டு இருக்கேன்” பட்டும் படாமல் பதில் தந்தவள் விறுவிறுவென முன்னே நடக்க... யோசனையுடன் மனைவியைப் பின் தொடர்ந்தவன்...

பின் கைப்பேசியில் யாருக்கோ அழைத்துப் பேசியபடி வெளியே வந்தவன்.. காரைக் கொண்டு வந்து அனு முன் நிறுத்த, காரில் ஏறியவள் கணவனைத் திரும்பியும் பார்க்காமல் சீட்டில் தலை சாய்த்துக் கொள்ள... சற்று நேரத்திற்கு எல்லாம் இவர்களின் காரோ ஒரு உயர்தர ஹோட்டல் முன் நின்றது. அதில் இவள் கேள்வியாய் கணவனைக் காண...

“வீட்டுக்குப் போக ரொம்ப நேரம் ஆகும். இறங்கு... ஃபிரெஷ் ஆகி ஒரு காபி சாப்பிட்டுப் போகலாம்...” என்றவனை

“இல்லை வீட்டுக்கே போகலாம் கிளம்புங்க...” இவள் மறுக்க

“நான் உன்னை இறங்க தான் சொன்னேன். வரீயா… வரலையான்னு சீட்டு எடுத்துப் போடச் சொல்லலை...” காட்டமான பதிலுடன் இவன் இறங்கி விட, வேறு வழியில்லாமல் தானும் இறங்கினாள் அனு. இவர்கள் உள்ளே நுழைய ரிசப்ஷன் ஹாலிலேயே ஒரு பையுடன் காத்திருந்த ஒருவன், மிருடனைக் கண்டதும்... அவன் புக் செய்திருந்த அறைக்கு அழைத்துச் சென்று பையை அவனிடம் கொடுத்து விட்டுச் செல்ல...

“இந்த பேகில் சோப்பு, பேஸ்ட், டவல், சீப்புன்னு எல்லாம் இருக்கு. பிரெஷ் ஆகிட்டு வா... கீழ போய் சாப்பிடலாம்”

அவள் மறுப்பாய் ஏதோ சொல்ல வர, “எனக்குப் பசிக்குது ஷிதா...” அவ்வளவு தான்... அடுத்த நொடி கணவன் சொன்னதை எல்லாம் எடுத்துக் கொண்டு இவள் குளியல் அறைக்குள் புகுந்து கொள்ள... சின்ன சிரிப்புடன் அந்த அறையை விட்டு வெளியேறினான் மிருடன்.

முகம் கழுவி பிரெஷ்ஷாகி வந்தவள், காரிடாரில் நின்ற கணவனைப் போகச் சொல்லியவள்... பின் அங்கேயே சிறிது நேரம் நின்று வெளித் தோட்டத்தை இவள் வெறித்துக் கொண்டிருந்த நேரம், “மேம் டிபன் எடுத்து வந்திருக்கேன்...” என்று உணவு ட்ரேயுடன் அங்கு வந்து நின்றான் அந்த ஹோட்டல் சிப்பந்தி.

“இல்லை… நாங்க ஆர்டர் செய்யலை... ரூம் மாறி வந்துட்டீங்க போல...”

“இல்லை மேம்... சரியா தான் வந்திருக்கேன். Mr. மிருடவாமணன் சார் தான் ஆர்டர் செய்தார்... ரூம் நம்பர் 75...” வந்தவன் விளக்க...

‘கீழே போகலாம்னு சொல்லிட்டு... பிறகு அறைக்கே ஆர்டர் செய்துட்டார் போல’ என்று மனதுக்குள் நினைத்தவள்

“oh... உள்ளே வைங்க...” இவள் கட்டளைக்கு அவன் செயல்பட்டு செல்ல

சிறிது நேரத்திற்கு எல்லாம் இன்னோர் பணியாள் அவளிடம் வந்தவன், “மேம்... சாரோட டிரெஸ்...” என்று ஒரு கவரை அவள் முன் நீட்ட…

“oh…” என்றபடி பெற்றுக் கொண்டவள்... ‘எதையும் சொல்றது இவ்லை’ என்ற கடுப்பில் உள்ளே வந்தவள்…

“மிரு...” இவள் பாத்ரூம் கதவைத் தட்ட... தண்ணி விழும் சத்தத்தில் உள்ளே இருப்பவனுக்கோ கேட்காமல் போக... “மிரு... ஏங்க...” இவள் பலமாய் கதவைத் தட்ட,

“என்ன டி ஆச்சு... ஆஸ்பிட்டலிருந்து போன் ஏதாவது வந்ததா?” நீர் சொட்டச் சொட்ட கதவைத் திறந்தவன் இடுப்பில் துண்டை முடித்துக்கொண்டு அடுத்த நொடி பதட்டமாய் கேட்க

“இல்லைங்க... சாரிங்க…. அது அப்படி எதுவும் வரலைங்க. உங்க டிரெஸ் எடுத்து வரச் சொன்னீங்களா...” இவள் குரல் தந்தி அடிக்க

“ச்சு...” இதற்கு தானா?” அவன் நிம்மதியாய் மூச்சு விட

“நீங்க குளித்தீங்களா?” கணவனின் தோற்றத்தையும்... அவன் மேலிருந்து வந்த சோப்பின் வாசத்தாலும் இவள் கேட்க

மனைவியை வியப்பாய் நோக்கியவன், “ம்ம்ம்... என் பொண்டாட்டி கை தொட்டு... அவ முகத்தில் இழைந்த சோப்பு... அவ வாசத்தால் என்னை வா... வான்னு கூப்பிட்டுதா... அதான் குளித்தேன்” கணவனின் நக்கல் பதிலில் இவள் கப் சிப் என்று மாறி மவுனமாய் விலகி விட... அவனோ தன்னவளைத் தான் ஆழ்ந்து தன் பார்வையில் நிரப்பிக் கொண்டிருந்தான்.

உடை மாற்றிய பிறகு... இவன் தனக்கும் அவளுக்குமாய் பரிமாற... அதே மவுனத்துடனே உணவைக் கொறித்தாள் அனு. மனைவியை ஒரு பார்வை பார்த்தவன், “எனக்கு மான்வி எப்படியோ... அப்படி தான் ஜீவா” இவன் திடீரென சொல்ல…. அவளிடம் அதே மவுனம் மட்டுமே

“அப்போ அவன் உனக்கும் மகன் தான்...”

“நான் அவனை வெறுக்கலை...”

“அதற்காக... அவனை நீ மகனாவும் ஏற்றுக்கலையே?”

“உங்களுக்கு ரொம்ப தெரிந்திருக்கு போல...” இவள் சூடாய் கேட்க

“பிறகு ஏன் டி காலையில் ஜீவா பற்றி பேசும் போது... உன் முகம் வாடிப் போச்சு?”

கணவன் தன்னைக் கண்டு கொண்டான் என்பதை உணர்ந்தவள், “அது...” என்று இவள் தயங்க

“ம்ம்ம்... அது... சொல்லு...”

“அது... ஜீவா அம்மா எங்கே இருக்காங்க?” இவள் கேட்டே விட

கண்ணில் ஒரு வித சுவாரசியத்துடன் மனைவியையே இவன் நோக்க... கணவனிடமிருந்து பதில் இல்லை என்றதும் இவள் அவனை நிமிர்ந்து காண உடனே தன் முக பாவனைகளை மாற்றியவன்,

“புருஷன்... நான் உயிரோட இருக்கும் போதே... செத்துட்டதா சொல்லி வாழ்ந்தவ நீ! பிறகு என் வாழ்க்கையில் யார் வந்து போனா உனக்கு என்ன டி? ஜீவா அம்மா விஷயம் மட்டும் இல்ல... வேற எந்த விஷயத்தையும் கேட்க உனக்கு எந்த உரிமையும் இல்லை...”

கணவனின் பதிலில் முகம் வாட, “oh...” சற்றே அதிர்ந்தவளின் மனதில் ‘இவன் இன்னும் மாறவே இல்லையா?’ என்று எண்ணம் எழ... அதில் இவள் தலை குனிய

“ஆமாம்... oh... தான்... வேற ஏதாவது தெரியணுமா?” இவன் ஆழ்ந்த குரலில் கேட்க

“ம்ஹும்...” இவள் தலையை உருட்ட

“ஒன்றுமே இல்லையா?” இவன் மறுபடியும் விடாமல் கேட்க

அவன் கேள்வியைத் தவிர்த்தவள், “உங்க அக்கா கிட்ட நம்ம விஷயமா என்ன சொல்லப் போறீங்க? ரொம்ப கோபமா போனாங்க...” என்று இவள் அடுத்த கேள்விக்கு தாவ

“நான் யாருக்கும் இது வரை விளக்கம் கொடுத்தது இல்லை... இனியும் அப்படி தான்... அப்படியேனாலும் உண்மையைச் சொல்லிடப் போறேன்... நம்ம விஷயத்தில் மறைக்க என்ன இருக்கு? அக்கா கோபம் எல்லாம் நான் வீட்டுக்குப் போனதும் ஒன்றும் இல்லாமல் போய்டும்...”

அவன் பதிலில் கணவனை ஆச்சரியமாய் இவள் நோக்க... ‘என்ன?’ என்று இவன் ஒற்றைப் புருவம் உயர்த்தி பார்வையாலே கேள்வி கேட்கவும்,

“அது... நீங்க என் கிட்ட அப்படி கேட்டதற்கே அவங்க கோபப் பட்டாங்க... இன்னும் நீங்க எனக்கு செய்தது தெரிந்தா?”

“தெரிந்தா... சொல்லித் தான் பாரேன்... என் அக்கா என்னை என்ன செய்திடுவாங்கனு உனக்கு தெரிந்திடப் போகுது... நிச்சயம் உன்னை மாதிரி இருக்க மாட்டாங்க” இவன் நம்பிக்கையாய் சீற்றத்தோடு சொல்ல

“ரொம்பத் தான் நம்பிக்கை...” இவள் கணவனைக் குட்ட வேண்டும் என்பதற்காக சொல்ல

“நிச்சயமா... ஏன்னா... அவங்க என் அக்கா!” என்றவன் பேச்சு முடிந்தது என்பது போல் உணவில் கவனத்தை செலுத்த, அவளும் தன் உணவில் கவனத்தை செலுத்தினாள்.

பின்னே அனுவை அவள் வீட்டில் விட்டவன்... “குளித்து விட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. நான் சில வொர்க் முடிச்சிட்டு வந்திடுறேன்... பேபி கண் விழிக்கறதுக்குள்ள நாம் அங்கே இருக்கணும்...”

கணவனின் வார்த்தைக்கு இவள் தலை அசைத்தபடி உள்ளே வர, “அனும்மா பாப்பா இப்போ எப்படி இருக்கா?” என்று கேட்ட படி வந்து நின்றார் முனீஸ்வரன்.

அவரைக் காணவும் தான் நேற்றைய விஷயங்கள் அவளுக்கு நினைவு வர, “அங்கிள்... சாரி அங்கிள்... உங்க விஷயத்தை நான் மறந்திட்டேன். எப்போ வந்தீங்க? பாப்பாவுக்கு பயப்படும் படி ஒன்றும் இல்லைங்க அங்கிள்” இவள் படபடக்க

“பொறுமை அனும்மா…. உன் நிலைமை எனக்குத் தெரியாதா? நேற்றே மிருடன் தம்பி நான் வெளியே வர எல்லாம் செய்து விட்டார்”

“oh...”

“டிபன் இருக்கு… சாப்பிடுறியா அனு?” பார்வதி கேட்க

“வேணாம் ஆன்ட்டி... சாப்டேன்... குளித்து விட்டு கொஞ்ச நேரம் படுத்து எழுந்து திரும்ப பாப்பாவை பார்க்கப் போகணும்...”

“நான் கூட வரவா அனும்மா?” முனீஸ்வரன்

“இல்லை… வேண்டாம் அங்கிள்... ஆஸ்பிட்டல் ரொம்ப தூரம். சோ, நீங்களும் ஆன்ட்டியும் வர வேண்டாம். இரண்டு நாளிலே பாப்பா வந்துடுவா...” என்றபடி இவள் உள்ளே சென்று விட

அங்கு…. மிருடன் வீட்டின் உள்ளே நுழைந்தவன் ஷோபாவில் அமர்ந்திருந்த கஜேந்தினைக் கண்டு, “வாங்க அத்தான்...” என்று அழைக்க

“இப்போ பாப்பா எப்படி இருக்கா மிருடன்?” அவர் விசாரிக்க

“she is normal now... டூ டேஸ்லே வீட்டுக்கு வந்திடுவா அத்தான்...”

மிருடன் பதிலில், “யாரு வீட்டுக்குன்னு கேளுங்க...” வெண்பா கேட்ட படி அங்கு வர, கஜேந்திரன் மனைவியைப் காண, “அட! என் முகத்தை ஏன் பார்க்கறீங்க? புருஷன் ஒரு வீடு... மனைவி ஒரு வீடு... அதிலும் பக்கத்து பக்கத்து வீடு. ஒரு புள்ள சென்னையில்... அப்போ இந்த குழந்தை எங்கே இருக்கும்னு தானே கேட்கிறேன்! ஒருவேளை… இவன் வீட்டில் ஒரு மணிநேரம், அவ வீட்டில் ஒரு மணி நேரம்னு தங்க வைப்பாங்களோ?” வெண்பா நக்கலாய் கேட்க

“அக்கா... என் பொண்ணு என் வீட்டிலே தான் இருப்பா...” மிருடனின் பதிலில்

“இவன் செய்த காரியத்துக்கு இவனை என் கிட்ட பேச வேண்டாம்னு சொல்லுங்க...” என்றவள், “இப்படி எங்க இரண்டு பேர் வாயை பார்க்கவா உங்களை கிளம்பி உடனே இங்கே வரச் சொன்னேன்? இவனை என்னனு நாலு கேள்வி கேளுங்க...” வெண்பா தன் கணவனைத் தனக்கும் தன் தம்பிக்கும் இடையில் மத்தளமாய் வைத்து வாசிக்க

அந்நேரம் அனு வீட்டில், “ஏய்... அண்டங் காக்கா.. வெளியே வாடி. நான் கொஞ்ச நாள் ஜெயிலில் போய் உட்கார்ந்தா... உனக்கு துளிர் விட்டுப் போய்டுமா? எவன் டி அவன்? எவன் கூடவோ காரிலே சுற்றுறியாமே... கூப்பிடுடிஈஈஈஈ” அவ்வளவு தான் வாசலில் நின்று வாய் சவடால் அடித்த ஜோதியின் பின்புறம் மிருடன் எட்டி உதைத்ததில், “தொப்பப்ப்ப்ப்....” என மண்ணில் போய் விழுந்தான் அவன்.

இவன் பேச்சை எல்லாம் தன் வீட்டிலிருந்தே கேட்டதால் ரவுத்திரத்துடன் வெளியே வந்தவன், தோட்டத்திலிருந்த இரும்பு ராடை எடுத்துக் கொண்டு வரவும் மறக்கவில்லை…. அவன் விழுந்ததும் “நச்...” என்று ஜோதி முதுகில் மிருடன் அதைக்கொண்டு அடிக்க... ஜோதியின் விலா எலும்போ அந்த வினாடியே உடைந்தது.

“யார டா… டி போட்டுப் பேசுற? என் பொண்டாட்டியவா? இனி நீ பேச வாயே உனக்கு இருக்கக் கூடாது டா” என்றவன் அதே வெறியோடு அவன் தாடையில் ஒன்று போட... முடிந்தது ஜோதியின் வாய் ஜோலி! அடுத்து மிருடன் அவன் கழுத்தைக் குறிபார்த்து கையை ஓங்க...

கஜேந்திரன், “டேய் மாப்ள... நிறுத்துடா...” ஓடி வந்து தடுத்தவர், “செத்துடப் போறான் மிருடா....” இன்னும் திமிறியவனை அவர் தடுக்க,

“சாகட்டும் அத்தான்... இந்த நாய் என் பொண்டாட்டியை என்ன பேச்சு பேசுறான்! விடுங்க அத்தான்… இன்று இவனை சாகடிக்காம விட மாட்டேன்” மிருடன் அவரிடமிருந்து எகிற

“அவனை சாகடிச்சிட்டு... என்னையும் பாப்பாவையும் மறுபடியும் நீங்க பிரிந்திருக்கப் போறீங்களா?” என்று ஓங்கி அங்கு இடை புகுந்தது அனுவின் குரல்.

அடுத்த நொடி மிருடன் அமைதியாகிட... ‘டேய் இவ்வளவு நேரம் நான் தடுத்தேனே டா... அப்போ எல்லாம் சீறும் காளையா இருந்திட்டு... பொண்டாட்டி சொன்ன உடனே அடங்கிட்டியே டா...’ கஜேந்திரனின் மைண்ட் வாய்ஸ் தான் இது! பாவம் அவரும் தான் என்ன செய்வார்.

“எல்லாம் உன்னால் தான் டி.. உன்னால் தான்... உன் பிடிவாதத்தால் தான்! இனி நீ ஒரு நிமிஷம் கூட தனியாவே இருக்கக் கூடாது… கிளம்பு என் வீட்டுக்கு” மிருடன் அதிகாரம் செய்ய

“அதான்… உங்க வீடுன்னு சொல்லிட்டீங்களே... பிறகு என்ன? நான் அங்டக வரல...” அனுவும் பிடிவாதம் பிடிக்க

மனைவியிடம் நெருங்கி அவள் கழுத்தைப் பிடித்தவன், “என்னை கொலைகாரனா மாற்றிடாதே டி... ஐந்து வருடத்திற்கு முன்பு நாம் பிரியும் போது நான் என்ன சொன்னேன்? உனக்கு நினைவு இருக்கில்ல?” இவன் உறுமலாய் கேட்க


அதை எப்படி மறப்பாள் அனு... மறக்கக் கூடிய வார்த்தைகளையா கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டார்கள்?...

பி. கு : தோழமைகளே... எனக்கு தற்சமயம் typhoid fever வந்துள்ளது... அதனால் உடல் தேறும் வரை... வாரத்தில் செவ்வாய்... மற்றும் வெள்ளி என்று இரண்டு பதிவுகளை தருகிறேன் ப்பா.... கொஞ்சம் adjust karo friends heart beat heart beat heart beat heart beat
 
Last edited:
Takecare maa.... Odambu seri யான பிறகே episode கொடுங்க onnum பிரச்சனை.... Takecare your health first.... Super Super maa... Semma episode....
 

அனிதா கண்ணன்

Guest
என்ன பேசினாங்க?😥...
சரி உடம்பு தான் முக்கியம்..நல்லா ரெஸ்ட் எடுங்க ..செவ்வாய் கிழமை பாக்கலாம்..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN