சிக்கிமுக்கி 16

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தனது பின்னலுக்கு ரப்பர் பேண்ட் போட்டுக் கொண்ட மீனா தன் கையிலிருக்கும் கடிகாரத்தை பார்த்தாள்.

"கிளாஸ் ஆரம்பிச்சிடுவாங்க.. சீக்கிரம் வா அபி.." என்று அழைத்தாள்.

"இதோ வந்துட்டேன் மீனு.." என்று ஓடி வந்தாள் அபிநயா.

"குளிக்கத்தானே போன.? அதுக்கு ஏன் இவ்வளவு லேட்டு.?" என்று கேட்டாள் மீனா.

"என் வாட்ச் ரிப்பேர்.. டைம் இருக்குன்னு நினைச்சி மெதுவா குளிக்க போயிட்டேன். அதான் லேட்டு.." என்றவள் தனது சீப்பை கையில் எடுத்து அவசரமாக தலையை வார ஆரம்பித்தாள்.

"சரி. சீக்கிரம் கிளம்பு.." என்ற மீனா தனது பேக்கை எடுத்துக் கொண்டு வந்து கட்டிலின் மீது அமர்ந்தாள்.

"நீ ரெடியாகும் வரைக்கும் நான் என் பேக்கை க்ளீன் பண்றேன்.." என்றாள்.

"இன்னமும் பள்ளிக்கூடத்துல இருக்கறதாவே நினைப்பு.. நீ க்ளீன் பண்ற அளவுக்கு அந்த பேக்ல என்ன குப்பை இருந்துட போகுது.?" என சிரிப்போடு கேட்ட அபிநயா ஈர தலைமுடியை வேகமாக பின்னிக் கொண்டாள்.

"நேத்துல இருந்து ஒரு டவுட்.. கேட்கட்டுமா.?" என புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டு கேட்டாள் மீனா.

"ம்.. கேளு.."

மீனா தயக்கத்தோடு தோழியை பார்த்தாள். "நீயும் அன்புவும் சண்டை போட்டுக்கும்போது உங்க மைண்ட் உங்ககிட்டயே இருக்காதுன்னு கேள்விப்பட்டேன்.. நிஜமாவா.?" என்றாள்.

அபிநயா ஆச்சரியத்தோடு தோழியை பார்த்துவிட்டு ஆமென தலையசைத்தாள். "அவனோடு சண்டை போடும்போது நான் என் புத்தியிலயே இருக்க மாட்டேன்.. வேற ஒரு டைமன்ஸ்ல இருக்கற மாதிரி பீல் ஆகும். அவனோடு சண்டை போடுன்னு மூளை சொல்லிக்கிட்டே இருக்கும். என்னாலயும் அந்த பேச்சை மீறவே முடியாது. என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு கூட எனக்கு தெரியாது.." என்றாள்.

மீனாவுக்கு அவளை பார்த்து பாவமாக இருந்தது. "எப்போதுமே இப்படிதானா.?" என்றாள்.

"ம். ஆமா.. எப்போதும் இப்படிதான். அவனோடு சண்டை போடாம என்னால இருக்கவே முடியாது.." என்றவள் தனது பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள்.

"போகலாமா.?" என்றாள்.

"ம்.." என்ற மீனா அபிநயாவோடு சேர்த்து கிளம்பினாள்.

அபிநயாவும் மீனாவும் கல்லூரிக்கு வந்தபோது வகுப்பு ஆரம்பித்து விட்டதற்கான அறிகுறியாக மொத்த கல்லூரியும் அமைதியாக இருந்தது.

"லேட் நாம.." என்ற மீனா வகுப்பு இருந்த முதல் தளத்திற்கு செல்வதற்காக வேகமாக படிகளில் ஏறினாள்.

மீனாவின் பின்னால் ஓடி வந்த அபிநயா முதல் படியில் காலை வைக்கும்போதே அவளின் செருப்பு நழுவி விழுந்தது. இவளை கவனிக்காமல் மேலேறி சென்று விட்டாள் மீனா. அபிநயா அவசரமாக தனது காலணியை மாட்டிக் கொண்டு மேலே ஏறினாள். படிகளின் வளைவுகளில் வேகமாக திரும்பியவள் எதிரே வந்த உருவம் கண்டு பயந்து ஓரடி பின்னால் நகர்ந்தாள்.

வேகமாய் ஓடி வந்ததின் விளைவாய் மூச்சிரைத்தது. திடீரென வந்து மோதிய உருவத்தால் பயந்து விட்டவளுக்கு இதயம் வேறு அதிகமாக துடித்தது.

நெஞ்சின் மீது கையை வைத்துக் கொண்டு எதிரே இருப்பது யாரென்று நிமிர்ந்து பார்த்தாள். அன்பு கைகளை கட்டியபடி அவளை ஒரு தினுசாக பார்த்தபடி நின்றான்.

"கோணக்கால் எருமை.. எதுக்காக என்னை இப்படி பயமுறுத்துற.?" என கேட்டவளின் அருகே புயலாய் நெருங்கினான். அவன் வந்த வேகம் கண்டு பயந்து அபிநயா ஓரடி பின்னால் தள்ளி சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

"என்ன வேணும் உனக்கு.? நாம இனி சண்டை போட கூடாதுன்னு நேத்தே அருள் குமரன் சார் சொல்லிட்டார் இல்ல.?" என்றவளின் தாடையை பற்றியவன் "உனக்கெதுக்கு ஃபோன்.?" என்றான்.

அபிநயா அவனை குழப்பமாக பார்த்தாள். "என்ன ஃபோன்.?" என்றாள்.

"நீ காலேஜ்தானே படிக்கிற.? உனக்கு எதுக்கு ஃபோன்.? யார் கூட ரகசியமா பேச ஃபோன் வச்சிருக்க.?" என்றான் மிரட்டலாக.

"ஃபோன் எங்க அப்பா வாங்கி தந்தாரு.. அவரோடு பேசத்தான் ஃபோன் வச்சிருக்கேன்.." என்றவள் அவனின் கையை தட்டி விட்டாள்.

"லூசு மாதிரி கேள்வி கேட்காம இரு.." என்றுவிட்டு மேலே ஏறினாள். அவளின் கையை பற்றி நிறுத்தியவன் "உங்க அப்பா உன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காரு.. அதனால நீயும் நல்ல பொண்ணா நடந்துக்க.. பசங்களை பார்த்தாலே பல் இளிச்சிட்டு இருக்காம எல்லார்க்கிட்டயும் இருந்து பத்தடி தள்ளியே இரு.." என்றான். அபிநயா அவனை முறைக்க முயன்றபோது அவளின் கையை விட்டுவிட்டு அவளை தாண்டி மேலே நடந்தான்.

"பைத்தியமா இவன்.?" என குழம்பியவள் கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு அவசரமாக படிகளில் ஏறினாள்.

வகுப்பறை வாசலில் ஓடி வந்து நின்றவள் "மே ஐ கம் இன் மேம்.?" என்றாள்.

பேராசிரியை இவளை பார்த்துவிட்டு உள்ளே வர சொல்லி சைகை காட்டினார். "இவ்வளவு நேரம் இரண்டு பேரும் என்ன பண்ணிங்க.? கிளாஸ் ஆரம்பிச்சி பத்து நிமிசத்துக்கு மேல ஆகுது.. இனியாவது சீக்கிரம் வர பாருங்க.." என்றார்.

"இரண்டு பேரா.?" என்றபடி திரும்பி பார்த்தாள் அபிநயா. அவளின் பின்னால் வந்த அன்பு அவளை தாண்டிச் சென்று தனது இடத்தில் அமர்ந்தாள். அவனை விசித்திரமாக பார்த்தபடியே வந்து தனது இருக்கையில் அமர்ந்தாள் அபிநயா.

"என்னோடுதானே வந்த நீ.? திடீர்ன்னு அவனோடு சேர்ந்து வர.. இரண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருந்திங்க.?" என்றாள் மீனா கிசுகிசுப்பாக.

அதிர்ந்து போய் அவளை பார்த்த அபிநயா இல்லையென தலையசைத்தாள். "அவன் எப்படி என் பின்னால வந்து நின்னானே தெரியாது.." என்றாள். அன்பு தன்னிடம் எச்சரித்ததை மட்டும் தோழியிடம் சொல்லவில்லை இவள். ஏனெனில் இவளே அவனின் மிரட்டல் கண்டு குழம்பி போய் இருந்தாள்.

அன்பு அடிக்கடி அவளை பார்த்தான். இது இவளின் பார்வைக்கும் தென்பட்டது. இவன் ஏன் தன்னை இப்படி பார்க்கிறான் என்று குழம்பினாள்.

அன்று உணவு இடைவேளையின் போது இவள் எங்கு சென்றாலும் அவனும் பின்தொடர்ந்தான். அவள் எங்கே திரும்பினாலும் இவன்தான் இருந்தான். அவள் எப்போது திரும்பி பார்த்தாலும் இவன் இவளையே தவறாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

மாலையில் விடுதியை நோக்கி கிளம்பியவள் அதற்கும் மேல் பொறுக்க முடியாமல் இவனிடம் வந்தாள். "என்னை பாலோவ் பண்றியா.?" என்றாள் அவனிடம்.

இல்லையென தலையசைத்தவன் மீனாவை நோக்கி கை காட்டினான். "குணா அவளை பாலோவ் பண்றான். நான் கருணாவை பாலோவ் பண்றேன்.." என்றான்.

அபிநயா மீனாவை திரும்பி பார்த்தாள். பின்னர் குணாவை பார்த்தாள். "நீ ஏன் அவளை பாலோவ் பண்ற.?" என்றாள்.

"ஏனா அவ என் பிரெண்ட்.. நான் அவளுக்கு துணையாக வர டிரை பண்றேன்.." என்றான் குணா தரையில் காலை தேய்த்தபடியே.

இதைப்பற்றி மீனாவிடம் கேட்கலாம் என நினைத்து திரும்பியவள் மீனாவும் குணாவை போலவே வெட்கப்பட்டு தரையில் கோலம் வரைவதை கண்டு மானசீகமாக நெற்றியில் அடித்துக் கொண்டு திரும்பினாள்.

"இதுக்கு மேல அவளுக்கு நானே துணையா இருந்துக்கறேன்.. நீ அப்படியே திரும்பி உங்க ஹாஸ்டலுக்கு கிளம்பு.." என்றாள்.

குணா மறுப்பாக தலையசைத்தான். "நானும் அவளும் குறுக்கு வழியில் ஹாஸ்டலுக்கு போக போறோம்.." என்றான்.

"குறுக்கு வழியா.?" என ஆச்சரியமாக அபிநயா கேட்க, அவன் பதில் சொல்லாமல் நடந்தான். அபிநயா அவன் எங்கு செல்கிறான் என்று பார்த்தாள். மீனாவின் அருகே சென்றவன் தன் கையை அவளிடம் நீட்டினான். அவள் இமைகள் படபடக்க தன் கையை அவனின் கையில் வைத்தாள். அபிநயா வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே இருவரும் வலது பக்கமாக இருந்த வழியில் நடக்க தொடங்கினர்.

"ஹேய்.. அந்த வழியில ஹாஸ்டலுக்கு போக முடியாது.." என்றவள் அவர்கள் பின்தொடர முயன்றபோது அவளின் கையை பிடித்து இழுத்து நிறுத்தினான் அன்பு.

"கையை விடு அன்பு.." என்றவள் தன் கையை விடுவித்துக் கொள்ள முயற்சித்தாள்.

அவனின் பிடி இறுகியது. "என் பேர் நல்லா இருக்கு.." என்றான் மென்மையாக.

அபிநயா குழம்பிப்போய் அவனை பார்த்தாள்.

"நீ பேர் சொல்லி கூப்பிடும்போது என் பேர் நல்லா இருக்கு.." என்றான்.

அபிநயா அவனை ஏற இறங்க பார்த்தாள். "காலையில இருந்து பைத்தியம் மாதிரியே பண்ற.. மோகினி ஏதாவது பிடிச்சிருச்சோ என்னவோ.. பத்திரமா ஹாஸ்டலுக்கு போய் சேரு.." என்றவள் தன் கையை உருவிக்கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடினாள்.

அன்பு சிலையாக நின்று அவளை பார்த்தான். பத்து வருடங்களுக்கு பிறகு அவள் முதல்முறையாக தன்னை திட்டாமல் சாதாரணமாக பெயர் சொல்லி அழைத்துள்ளாள் என்பது அவனை என்னவோ செய்தது. அவள் இப்படி அழைத்தது பிடித்திருந்தது.

விடுதி அறைக்கு வந்ததும் பைனாக்குலரோடு மேஜையின் மீது ஏறி அமர்ந்தான் அன்பு. அபிநயாவின் விடுதி அறையை பார்த்தான். அபிநயா தன் பின்னலை அவிழ்த்து விட்டாள். மாற்று உடையை கையில் எடுத்தாள். அணிந்திருந்த துப்பட்டாவை கழட்டி படுக்கையின் மீது வீசினாள். சுடிதார் டாப்பினை அவள் கழட்ட முயற்சிக்கையில் சட்டென பைனாக்குலரை கீழே வைத்தான் அன்பு.

"மெண்டல்.." என்றவன் இரு கைகளாலும் தன் முகத்தை மூடிக் கொண்டான். நெற்றியின் ஓரங்களில் வியர்வை முத்துக்கள் அரும்பியது. சில நொடிகள் அப்படியே அமர்ந்திருந்தவன் மனதில் சந்தேகம் ஒன்று எழவும் அவசரமாக அங்கிருந்து எழுந்து வெளியே ஓடினான்.

அபிநயா தன் அப்பாவிற்கு ஃபோன் செய்யலாம் என நினைத்த நேரத்தில் சக மாணவி ஒருத்தி தேடி வந்தாள். "உன்னை பார்க்க யாரோ வந்திருக்காங்க அபிநயா.." என சொல்லிவிட்டு சென்றாள்.

அப்பாதான் வந்துள்ளாரோ என்று யோசித்தபடி சென்றாள் அபிநயா. விடுதியின் பெரிய கேட்டை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள். எங்கிருந்தோ பாய்ந்து வந்த அன்பு அவளை இழுத்துக் கொண்டு காம்பவுண்டு சுவரின் அருகே உள்ள மறைவான இடத்திற்கு வந்தான்.

'இவன் ஏன்..' அவளுக்கு யோசிக்க கூட நேரம் தரவில்லை அவன்.

"நீ என்ன பெரிய ரதியா இல்ல ரம்பாவா‌.? டிரெஸ் மாத்தும்போது ஜன்னலை சாத்தணுங்கற அறிவு கூட இல்லையா உனக்கு.? எதிரில் பாய்ஸ் ஹாஸ்டல் இருக்கே.. யாராவது பார்க்க சான்ஸ் இருக்குன்னு கூட தெரியாதா உனக்கு.?" என்று சீறினான்.

அபிநயாவின் கரங்கள் தானாய் நடுங்கியது. "எ.. என்ன சொன்ன.? பாய்ஸ் ‌ஹாஸ்டல்ல இருந்து பார்த்தா எங்க ரூம் தெரியுதா.?" என்றாள் தடுமாற்ற குரலில். எப்போதும் ஜன்னலை சாத்துபவள்தான், ஆனால் இன்று ஏதோ நினைவில் மறந்து விட்டாள். இல்லை.. இந்த செங்கல் சைக்கோவின் நினைவில் ஜன்னலை பற்றியே யோசிக்காமல் மறந்து விட்டாள். அதுவும் இல்லாமல் அவ்வளவு தொலைவில் உள்ள மாணவர் விடுதியில் இருந்து பார்த்தாலும் தங்களது அறை தெளிவாக தெரிய வாய்ப்பில்லை என்பது அவளது எண்ணம்.

அன்பு கோபத்தை கட்டுப்படுத்த முயற்சித்தான். பற்களை கடித்தபடி கையை இறுக்கியவன் "ஆமா.. அப்படியே தெரியுது.. நீ உன் துப்பட்டாவை கழட்டி ஸ்டைலா கட்டில் மேலே வீசியது கூட தெரிஞ்சது.." என்று சொல்ல அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.

"பொய் சொல்லாத.. அவ்வளவு தூரத்துல இருந்து பார்க்கும்போது இவ்வளவு கிளியரா தெரியாது.." என்றவள் சந்தேகமாக அவனை பார்த்தாள்.

"நான் துப்பட்டா கழட்டி ஸ்டைலா வீசியது உனக்கு எப்படி கிளியரா தெரிஞ்சது.? என்னை வாட்ச் பண்றியா நீ.?" என்றாள் அதிர்ச்சியோடு.

"நான் சொல்ல வருவது உனக்கு புரியுதா.?" என கேட்டவனின் முன்னால் கையை நீட்டி மறித்தவள் "நீ என்னை ரகசியமா உளவு பார்க்கிறியா.?" என்றாள்.

அன்பு இல்லையென தலையசைத்தான். "உன்னை ரகசிய உளவு பார்க்க நீ என்ன என் லவ்வரா இல்ல நான்தான் சைக்கோ கொலைக்காரனா.?" என்றான்.

அவன் லவ்வரா என கேட்டது இவளின் இதயத்திற்கு காயத்தை தந்தது. ஏன் இந்த வலி என்று அவளுக்கு புரியவில்லை.

"நீதான் சைக்கோ கொலைக்காரனாச்சே.." என்றவள் அவனை கடுப்போடு பார்த்தாள். "பாய்ஸ் ஹாஸ்டல்ல இருந்து பொண்ணுங்க ரூமை வாட்ச் பண்றன்னு நான் உன் மேல கம்ப்ளைண்ட் தரபோறேன்.." என்றாள்.

அன்பு அவளை முறைத்தான்.

"ஹாஸ்டல் நிர்வாகத்துக்கு பதில் சொல்ல தயாரா இரு.." என்றவள் தனது விடுதிக்கு செல்ல திரும்பினாள். அவள் செல்லும் முன்பே அவளை தன்னருகே இழுத்த அன்பு "முட்டாள் போல நடந்துக்காத.. நான் உன் நல்லதுக்குதான் சொல்றேன்.." என்றான்.

தன்னை விட ஓரடி உயரமாய் இருந்தவனை கோபம் குறையாமல் பார்த்தவள் "என் நல்லதுக்கா.? அதுவும் நீயா.? நீயும் நானும் பரம எதிரி.. இதை மறந்துடாத.." என்று அவனின் நெஞ்சில் விரலால் குத்தி சொல்லிவிட்டு விடுதிக்குள் சென்றாள்.

தனது அறைக்குள் வந்தவள் முதலில் சென்று ஜன்னலைதான் சாத்தினாள். இனி இந்த மூன்றாண்டுகள் முடியும் வரையிலும் அந்த ஜன்னலுக்கு விடுதலையே தரக்கூடாது என்று எண்ணிக் கொண்டாள்.

அன்பு எதிரே இருந்த அறையிலிருந்து மூடிய ஜன்னலை வெறித்தான். அந்த ஜன்னல் திறக்கப்படாமல் இருப்பதே நல்லதுதான் என்று தோன்றியது. இந்த கட்டிடத்தில் உள்ளவர்கள் யாரும் எதேச்சையாக கூட எதிரில் இருக்கும் கட்டிடத்தை பார்க்க கூடாது என்று நினைத்தான்.

அபிநயா முகத்தை மூடிக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள். 'நீ துப்பட்டாவை கழட்டி ஸ்டைலா வீசின..' என்று அன்பு சொன்னதே அவளின் மூளையில் திரும்ப திரும்ப ஓடிக் கொண்டிருந்தது. எவ்வளவு தூரம் பார்த்திருப்பான் என்று நினைத்து கவலைக்கொண்டாள். எதேச்சையோ இல்லை திட்டமிடப்பட்டதோ நிச்சயம் இதற்கு பழி வாங்கியே தீர வேண்டும் என்று மனதிற்குள் சூளுரைத்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN