சிக்கிமுக்கி 23

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கல்லூரி காலம் அருமையாக சென்றுக் கொண்டிருந்தது.

அபிநயா அரைகுறையாக படித்தாள். அன்பு அனைத்தையும் திட்டமிட்டு படித்தான். மீனா விழுந்து விழுந்து படித்தாள். குணாவோ மீனாவை படிக்க முயற்சித்தான்.

அந்த அரை நிர்வாண புகைப்பட நிகழ்ச்சி முடிந்த பிறகு அபிநயா அன்புவிடம் எதுவும் வம்பு இழுப்பதில்லை. அன்புவிற்கு தான் மட்டும் உயிரோட்டம் இல்லாமல் நடமாடுவதை போல இருந்தது. ஆனால் காரணமே இல்லாமல் அவளிடம் வம்பிழுக்கவும் அவனுக்கும் மனம் வரவில்லை.

"நண்பா உனக்கும் மெச்சூரிட்டி வந்துடுச்சிடா.. அதனால்தான் நீ அவளோடு சண்டை போடுறது இல்ல.." என்று அவனை பாராட்டினான் குணா.

அபிநயா உண்மையிலேயே திருந்து விட்டாளா என்று மீனாவும் குழம்பி போனாள். தனியாக இருக்கும் பல வேளைகளில் "நீ ஏன் அவனோடு சண்டை போடுறது இல்ல.?" என்று தோழியிடம் கேட்டாள்.

"அவன் பேயா மாறி வந்து என்னை பயமுறுத்திட்டான். எனக்கு பேய்ன்னா ரொம்ப பயம்ப்பா.. அவன் மறுபடியும் இதே மாதிரி பயமுறுத்த சான்ஸ் இருக்கு.. நான் இதுல ரிஸ்க் எடுக்க விரும்பல.." என்று சொன்னாள் அபிநயா.

மீனா அவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள். தோழி எவ்வளவு பயந்துள்ளாள் என்பதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

"அதுவும் இல்லாம நான் டிரெஸ் மாத்தியதை வேற அவன் பார்த்திருக்கான். நான் இன்னும் குட்டிப்பொண்ணு இல்லையே.. அதனால அதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியுதுப்பா. இவ்வளவு நாள் நாங்க போட்டுக்கிட்ட எல்லா சண்டையுமே உடம்பை காயப்படுத்திய ஒன்னுதான். ஆனா இது என் மனசையே காயப்படுத்திடுச்சி. ஐ ஹேட் தட்.. அவனோடு சும்மா பேச கூட எனக்கு விருப்பம் இல்ல. சாதாரண சண்டையும் போட வேணாம். பிறகு அவன் என்ன செய்வானோன்னு கவலைப்படவும் வேணாம். இரண்டு பேரும் இரு வேற பாதையில் போவதால் யாருக்கும் நஷ்டமாக போறது இல்ல.." என்றாள்.

அபிநயாவின் முடிவு மீனாவிற்கு நிம்மதியை தந்தது. ஆனால் அபிநயாவிற்கோ இதை சொல்லும்போதே மனம் இரு துண்டாய் உடைவது போல இருந்தது.

அன்பு தினமும் வகுப்பில் பக்கத்தில் அமர்ந்தபடியே அபிநயாவை ஏக்கமாக பார்த்தான். அவளும் அவன் பார்க்காத நேரங்களில் அவனை பார்த்தாள். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் மனதுக்குள் வெறுமையை உணரத்தான் செய்தனர்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN