சிக்கிமுக்கி 38

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்பு மூன்று நாட்களுக்கு கல்லூரிக்கே வரவில்லை. அபிநயாவிற்கு அவனை காணாமல் மனம் வாட்டமுற்றது. தினம் காலையிலும் மாலையிலும் ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு எதிரே இருந்த கட்டிடத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த எதிர் ஜன்னல் திறக்கவேயில்லை.

நான்காம் நாள் கல்லூரிக்கு வந்த குணாவின் முன்னால் சென்று அவனை மறித்தாள் அபிநயா. "கோணக்காலன் எங்கேதான் போனான்.? அவனை காணாம நான் எவ்வளவு பீல் பண்றேன் தெரியுமா.? நாலு நாளா அவனுக்கு அப்படி என்ன தலைவலி.?" என்றாள் கோபத்தோடு.

"நான் உன்கிட்ட எதையும் சொல்லி புரிய வைக்க முடியாது. அங்கே வரான் பாரு உன் கோணக்காலன். நீ அவன்கிட்டயே கேள்வியை கேட்டுக்கோ.." என்ற குணா அவளை தாண்டி சென்றான்.

குணா கை காட்டிய திசையை பார்த்தாள் அபிநயா. கல்லூரியின் கேட்டை தாண்டி வந்துக் கொண்டிருந்தான் அன்பு. அபிநயாவின் முகத்தில் சட்டென்று புன்னகை மலர்ந்தது. ஆனால் அதுவும் சட்டென்று மறைந்து போனது. அன்புவின் கையை பற்றி நடந்து வந்துக் கொண்டிருந்தாள் இளங்கலை தமிழில் முதல் வருடம் படிக்கும் மாணவி ஒருத்தி. அபிநயா அன்புவையும் அவளையும் மாறி மாறி பார்த்தாள். அவர்களின் இணைந்திருந்த கரங்கள் அவளுக்குள் காயத்தை தந்தன. அவனின் நிழலில் கூட மற்ற பெண்களின் நிழல் விழுவதை விரும்பவில்லை அபிநயா.

"குட்ட.." அன்பு இவளை கண்டதும் முப்பத்தியிரண்டு பற்களும் தெரியும்படி புன்னகைத்தான். நான்கு நாட்களுக்கு பிறகு அவளை சந்தித்தது அவனுக்குள் சந்தோசத்தை தந்தது. வேக நடையோடு இவளருகே வந்தான். அவளை அணைத்துக் கொள்ள சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தது அவனின் மனம். ஆனால் சுற்றியிருந்த மாணவர்களை பார்த்து தன்னைதானே கட்டுப்படுத்திக் கொண்டான்.

அபிநயா அவனின் கையை பற்றியபடி நின்றிருந்த பெண்ணையே விழியசைக்காமல் பார்த்தாள். அன்பு அவளின் பார்வை புரிந்தவனாக "இது அஞ்சனா. பர்ஸ்ட் இயர் பி.ஏ தமிழ்.." என்றான். அபிநயா உதட்டை கடித்தபடி அவனை பார்த்தாள்.

"இது அபிநயா.. மை ஒன் ஒன்லி.." என்றான் அபிநயாவின் அருகே வந்து அவளின் தோளை பற்றியபடி. அஞ்சனா அபிநயாவை நோக்கி தன் கையை நீட்டினாள். ஆனால் அபிநயா தன் கையை உயர்த்தவும் இல்லை. அவளோடு கை குலுக்கவும் இல்லை. அன்பு அவளை சந்தேகமாக பார்த்தான்.

"அபி.." என்றான்.

"நாலு நாளா உனக்கு என்ன ஆச்சி.?" என்றாள்.

அஞ்சனா அன்புவை தயக்கமாக பார்த்தாள். "நீ உன் கிளாஸ்க்கு போப்பா.. நாம அப்புறம் பார்க்கலாம்.." என்றான். அஞ்சனா வலுக்கட்டாயமாக வரவைக்கப்பட்ட சிறு புன்னகையோடு அவனை கடந்துச் சென்றாள்.

"உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் அபி.." என்ற அன்பு அவளை அழைத்துக் கொண்டு கல்லூரியின் பின்னால் இருந்த மரத்தடிக்கு சென்றான்.

அபிநயா அவனிடமிருந்து தன் கையை உருவிக் கொண்டாள். "நாலு நாளா உனக்கு தலைவலின்னு குணா சொன்னான்.. ஆனா நீ ஏதோ ஒரு பொண்ணு கூட சேர்ந்து வந்துட்டு இருக்க.. நாலு நாள் கேப்ல இன்னொருத்தியை பிடிச்சிட்டியா.?" என்று கோபமாக கேட்டாள்.

அங்கே யாராவது இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான் அன்பு. நல்லவேளையாக யாருமே அங்கே இல்லை.

'எல்லோரும் கிளாஸ்க்கு போயிட்டாங்க போல இருக்கு..' என நினைத்தான்.

"உனக்கு என் மேல லவ்வும் இல்ல. சாதாரண பாசமும் கூட இல்ல.. டைம் பாஸ்க்கு என்னோடு லவ் பண்ணிட்டு இருந்திருப்ப போலிருக்கு.. நமக்கே இன்னும் கல்யாணம் ஆகல. ஆனா நீ அதுக்குள்ள சின்ன வீடு செட்டப் பண்ணிட்ட.." என்ற அபிநயா கலங்கும் தன் விழிகளை துடைத்துக் கொண்டாள்.

"நான் மட்டும்தான் உன்னை நினைச்சி உருகிட்டு இருக்கேன். ஆனா நீ அதுக்குள்ள என்னை மறந்துட்ட. நான் உனக்கு முக்கியமானவளா இல்லாம போயிட்டேன்.. யூ ஆர் ஜஸ்ட் எ சீட்ட.." அவள் முழுதாக முடிக்கும் முன் அவளின் முகத்தை பற்றி நிமிர்த்திய அன்பு அவளின் உதட்டில் தன் உதட்டை பதித்தான். சிலையாகி போன அபிநயா அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

அபிநயாவின் இரு கண்களிலும் கண்ணீர் தளும்பிக் கொண்டிருந்தது. அவளின் கண்களின் வெள்ளை பகுதிகளில் சிவப்பு நிற மின்னல் கோடுகள் ஓடின. அன்பு அவளின் இடையை பற்றினான். அவளின் இதழ்களிலிருந்து தன் இதழை விலக்கிக் கொண்டவன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். கலங்கியிருந்த அபிநயாவின் விழிகளில் இருந்து கண்ணீர் முத்துகள் இமையெனும் கரையை தாண்டி உருண்டது. அன்பு தன் சுட்டு விரலால் அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான்.

"அந்த பொண்ணு எனக்கு தங்கச்சி மாதிரி.. உன்னை தவிர வேற எந்த பொண்ணையும் காம கண்களோடு பார்க்க மாட்டேன். உன்னை தவிர வேற யாரையும் மோகத்தோடு சேர்ந்த காதலோடு காண மாட்டேன். நம்பு.." என்றான்.

அபிநயாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் அவனின் கண்களை தவிர வேறு எங்கும் பார்க்க முடியவில்லை அவளால்.

"நான் இந்த நாலு நாளா ஒரு வேலையா இருந்தேன். அது என்ன வேலைன்னு குணாவுக்குமே தெரியாது. அதனாலதான் அவன் இப்படி எனக்கு தலைவலின்னு உன்கிட்ட பொய் சொல்லி வச்சிருக்கான்.." என்றான் அவன்.

அபிநயா சந்தேகத்தோடு பார்த்தாள். "அப்படி என்ன வேலையா போன.? நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா.?" என கேட்டவளுக்கு மீண்டும் குரல் உடைந்தது. அன்பு சட்டென்று அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவளின் நெற்றி வகிட்டின் மீது முத்தமிட்டான்.

"சாரி.. ஆன நானும் உன்னை மிஸ் பண்ணேன்.." என்றான்.

அபிநயா மூச்சை இழுத்து விட்டுக் கொண்டே அவனை விட்டு விலகி நின்றாள். "நீ முதல்ல விசயத்தை சொல்லு.." என்றாள்.

"விகேஷ் உன்கிட்டயும் என்கிட்டயும் பிரச்சனை செஞ்சான் இல்லையா.?" என்று கேட்டவனிடம் "ஆமா அதான் தெரியுமே... அவனை எதுக்காக வேற ஒரு கேஸ்ல ஜெயில்ல போட்டாங்க.?" என்றாள் அபிநயா.

"அது கொஞ்சம் பெரிய கதை.. நடுவுல டிஸ்டர்ப் பண்ணாம கேளு.." என்றவன் அங்கிருந்த மரத்தின் வேரின் மீது அமர்ந்தான்.

"கிளாஸ் நடந்துட்டு இருக்கு போல.. வா நாம போகலாம்.. இதை அப்புறமா பேசிக்கலாம்.." என்றவளின் கையை பற்றி தன்னருகே அமர வைத்தான் அவன்.

"ஐயா இப்ப வி.ஐ.பி.. ஒன் ஹவர் கிளாஸ்க்கு போகலன்னா என்ன போகுது.?" என்றவனை குழப்பமாக பார்த்தாள் அபிநயா.

"பர்ஸ்ட்.. அவன் உன் மேல தெரியாம இடிக்கல. அவன் பிரெண்ட்ஸோடு பெட் கட்டி வேணும்ன்னேதான் இடிச்சிருக்கான்.."

அபிநயா அதிர்ந்துப் போனாள்.

"அவனை நான் அடிச்சதால அவன் உன்னையும் என்னையும் பழி வாங்க நினைச்சிருக்கான். அதுக்காக உன்.. என் போட்டோவை மார்பிங் பண்ண இருந்தான். ஆனா அவன் இதை பேசிட்டு இருக்கும்போதே நான் போய் அவனை அடிச்சிட்டேன். அதுல அவனுக்கு இன்னும் அதிக கோபம் வந்துடுச்சி. அதுக்காக உன் போனை ஹேக் பண்ணி அதுல இருந்த என் போட்டோவை எடுத்து புரபொசர்ஸ்க்கு அனுப்பி வச்சிருக்கான். ஆனா அதுல நான் சிக்கிக்கல. அவன் நினைச்ச மாதிரி நானும் இந்த காலேஜை விட்டு வெளியனுப்ப படல. அந்த நேரத்துலதான் அவன் உனக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கான். அன்னைக்கு நைட் பதினொன்றைக்கு அவன் உங்க ரூம்க்கு வரல. அதுக்கு முன்னாடி வந்துட்டான். அவன் அதுக்கும் முன்னாடியே சிலமுறை உங்க ஹாஸ்டலுக்குள்ள வந்த அனுபவம் இருந்திருக்கு.." அபிநயா அதிர்ச்சியில் எழுந்தே நின்று விட்டாள். கை காலெல்லாம் உதறியது அவளுக்கு. அன்பு அவளை மீண்டும் அமர வைத்தான்.

"நீ பயப்படும் அளவுக்கு ஒன்னும் இல்ல. அவன் இதுக்கு முன்னாடி சிலரை லவ் பண்ணி இருக்கான். அவங்களை மீட் பண்ணதான் உங்க ஹாஸ்டலுக்குள்ள வந்திருக்கான். ஆனா கட்டிடத்துக்குள்ள அதுவும் ஒரு ரூம் வரைக்கும் வந்தது இதுதான் முதல் தடவை.." அபிநயா புரிந்துக் கொண்டதாக தலையசைத்தாள்.

"அவனுக்கு உன் கேரக்டரை கேவலப்படுத்த திட்டம். அதுக்குதான் அத்தனை ரிஸ்க் எடுத்து வந்திருக்கான். அவன் சுத்தமான பொறுக்கி. நீயும் மீனாவும் சாப்பிட போன சமயத்துலயே உங்க ரூம்க்குள்ள நுழைஞ்சிட்டான். நீங்க சரியா கவனிக்காம தூங்கிட்டிங்க.." என்றவனுக்கு அந்த இரவை நினைக்கையில் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. பழி வாங்குகிறேன் பேர்வழி என்று அபிநயாவை ஏதாவது செய்திருந்தால் என்னவாயிருக்கும் என்று நினைத்து உள்ளம் நடுங்கினான். அவன் சொன்ன தகவல் அபிநயாவுக்கும் பயத்தை தந்து விட்டிருந்தது.

"நீங்க அவனை பார்த்து கத்துவிங்கன்னு காத்துட்டு இருந்திருக்கான். மீனா அந்த டைம்க்கு எழுந்து சத்தம் போடலன்னா அவனாவே அவளை எழுப்பி கத்த வச்சிருப்பான்.." என்றவன் அபிநயாவின் கேசத்தை ஒதுக்கி விட்டான். "சாரி.. அன்னைக்கு நான் அவனை அடிக்க போனதாலதான் உனக்கு இவ்வளவு பிரச்சனை. ஆனா இறந்த காலத்துக்கு போனாலும் கூட அவனை இதே மாதிரிதான் அடிச்சி இருப்பேன்.." என்றான். அபிநயா அவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

"உங்க ஹாஸ்டல்ல இருந்து அவனை கூட்டி வந்ததும் எங்க வார்டன் அவனை விசாரிக்க ஆரம்பிச்சசாரு. அப்பதான் அவனோட போனை என்கிட்ட தந்தாரு. நான் உன்னை பத்திய தகவலுக்காகதான் போன்ல தேடினேன். ஆனா நான் அந்த போன்ல பார்த்தது என் போட்டோ.. என்னோட ஆப் நியூட் போட்டோ.. நீ அனுப்பி வச்சது.."

"நான் இல்ல.." என்றவளின் கையை பற்றி விரல்களின் மீது முத்தமிட்டவன் "நீ இல்லன்னு தெரியும். ஆனா நான் என் போட்டோவை மட்டும் அதுல ஆப் நியூடா பார்க்கல.. இன்னும் நிறைய பேரோட போட்டோஸையும் அப்படிதான் பார்த்தேன். என்ன வித்தியாசம்ன்னா அந்த போட்டோஸ் பொண்ணுங்களுக்கு சொந்தமானது.."

அபிநயா அதிர்ச்சியில் வாய் மீது கை வைத்தாள். அன்பு பெருமூச்சி விட்டான்.

"அவனுக்கு அதேதான் வேலை அபி.. அவன் சுத்தமான பொறுக்கி.. பணம் இருந்தா எதை செஞ்சாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டாங்கன்னு ஒரு நினைப்பு அவனுக்கு.. பணம் இருந்தா போதும்ன்னு நினைக்கற பொண்ணுங்கதான் அவனோட குறியே.. பணத்தையும் ஸ்டைலையும் பார்த்ததும் தன் கூட வர பொண்ணுங்களை தன் இஷ்டத்திற்கு யூஸ் பண்ணிட்டு இருந்திருக்கான். இவன் பின்னாடி போன பொண்ணுங்களும் டேக் இட் ஈஸி கேர்ள்ஸ்தான். அதனால இவன் அவங்களை யூஸ் பண்ண மாதிரி அவங்களும் இவனை யூஸ் பண்ணிட்டு கடந்து போயிட்டாங்க.." என்றவனின் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அபிநயா.

"அஞ்சனா இருக்கா இல்லையா.? அவ ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு.. அப்பா இல்ல. அம்மா மட்டும்தான். சிண்டரெல்லா டைப் கதைகளையெல்லாம் நிஜம்ன்னு நம்பிட்டு இருப்பவ.. தன்னோட ராஜா தனக்கான அன்பையும் பாசத்தையும் அளவில்லாம தருவான்னு சில வருசங்களாவே நம்பிட்டு இருப்பவ. ஒருநாள் அவளோட பஸ் சார்ஜ்க்கான பணம் காணாம போகவும் கலங்கி நின்னுட்டு இருந்திருக்கா.. யாராவது ஒரு புரபொசர்கிட்ட போய் கேட்டாலே போதும் அவங்க உடனே தந்திருக்க போறாங்க. ஆனா இவ என்ன செய்றதுன்னு தெரியாம இருந்தபோது விகேஷ் வந்து அவக்கிட்ட பஸ் சார்ஜ் பணத்தை தந்திருக்கான். அது என்னவோ அவளுக்கு உயிர் போற கஷ்டம் போலவும் ஐம்பது ரூபா காசை தந்தவன் கடவுள் போலவும் தோணியிருக்கு. செண்டிமெண்டல் பைத்தியம்.." என்றவனுக்கு அஞ்சனா மீதும் கோபம் வந்தது.

"ஆனா அவன் நல்லவன் கிடையாது. இவ கண்ணை திறந்து சுத்தி பார்க்காமலேயே அவனோட உலகத்துக்குள்ள ஈசியா நுழைஞ்சிட்டா. அப்புறம் என்ன அவன் எல்லா பொண்ணுங்களை போலவும் இவளையும் ஒரு பொம்மையா நினைச்சி விளையாட ஆரம்பிச்சிருக்கான். கதையில படிக்கறதுக்கும் படத்துல பார்க்கறதுக்கும் நிஜத்துல நடக்கறதுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் நிறைய பேருக்கு தெரியல அபி.. நியூஸ்ல எந்த நாயகனை பத்தியும் எழுதுறது இல்ல. ஆனா நிறைய நிறைய காம கொடூரர்களையும் பாலியல் குற்றவாளிகளையும் சைக்கோ கொலைக்காரங்களை பத்தியும் தினம் எழுதுறாங்க. நியூஸ் உண்மை. கதை பொய்யுன்னு கூட தெரியறது இல்ல. அஞ்சனாவும் அப்படிதான். அவனை தன்னோட எல்லாமேன்னு நினைச்சிட்டு இருந்திருக்கா.. ஆனா அவன் வழக்கம்போல தன் யூஸ் முடிஞ்சதும் அவளை த்ரோ பண்ணிட்டான்.." என்றவன் தன் தலையை கோதி விட்டுக் கொண்டான்.

"அஞ்சனா ரொம்ப அப்பாவி. சரியான மெச்சூரிட்டி கூட இல்ல. தனக்கு என்ன நம்பர் செருப்பு கரெக்டா இருக்கும்ன்னு கூட தேர்ந்தெடுக்க தெரியாதவ.. ஆனா விகேஷால காலேஜ் டேஸ்லயே பிரகனென்ட் ஆகியிருக்கா.."

இதுவரை கேட்ட தகவலை விடவும் இது அதிக அதிர்ச்சியை தந்துவிட்டது அபிநயாவிற்கு.

"இந்த வயசுலயே ஒருத்தனை லவ் பண்ணி, அவனும் ஏமாத்திட்டு போய், அந்த பொண்ணு பிரகனென்ட் ஆகி, அதையும் வீட்டுல இருந்த தன் அம்மாக்கிட்ட சொல்ல கூட தைரியம் வராம இவன்கிட்டயே அழுது கெஞ்சி, இவன் கூட்டிப்போய் அதை கலைச்சிட்டு அவளை நடுரோட்டுலயே விட்டுட்டு வந்து, அவ தன் வீட்டுக்குள்ளயே ஒரு ரூம்ல தன்னைதானே சிறை கைதியை தனிமைப்படுத்திக்கிட்டு, அவளோட மொத்த லைப்பும் அழிஞ்சி போச்சின்னு நினைச்சி கதறி அழுந்துட்டு இருந்த நேரத்துல மறுபடியும் இவன் தேடி போய் அவளை மறுபடியும் யூஸ் பண்ணிக்க நினைச்சி கூப்பிட்டு, அவ முடியாதுன்னு மறுத்த நேரத்துல அவளோட மொத்த லைப்பையும் கெடுக்கற அளவுக்கு தன்கிட்ட ஆதாரம் இருக்குன்னு இவன் தன் போனை காட்ட அவ மறுபடியும் உடைஞ்சி அழுது என்ன பண்றதுன்னு கூட தெரியாம குழம்பி இருந்த நேரத்துலதான் அந்த வீணா போனவனோட வழியில நாம போய் குறுக்க புகுந்திருக்கோம்.." என்றான் அன்பு.

அபிநயா அதிர்ச்சியிலிருந்து விடுபடாமலேயே அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். "அப்புறம் என்ன ஆச்சி.?" என்றாள்.

"அவன் போனை நான் ஒரு காரணத்துக்காக கையில எடுக்க இன்னொரு பிரச்சனை வந்து மாட்டிக்கிச்சி. எங்க வார்டனோடு சேர்ந்து பேசினேன். அவரே யோசிச்சி பார்த்துட்டு முடிவு பண்ணாரு. அஞ்சனாவோட பிரச்சனைகளை கொண்ட எல்லா ஆதாரத்தையும் அழிச்சிட்டு அவன் போனை போலிஸ்ல தந்துட்டோம். 'ஏன்டா பொண்ணுங்களை நியூடா போட்டோ எடுக்கறியாடா.?'ன்னு கேட்டு போலிஸ் அவனை பிடிச்சிட்டு போயிட்டாங்க. எங்க வார்டனுக்கு போலிஸ்ல ஹையர் ஆபிசர்ஸெல்லாம் குளோஸ் பிரெண்ட்ஸாம். இவனை தூக்கிட்டு போய் நல்லா கும்மி எடுத்துட்டாங்க. பாரின்ல இருந்த வந்த அவனோட பேரண்ட்ஸ் அவங்க பையனோட வண்டவாளம் தெரிஞ்சதும் இன்னும் நல்லா கவனிங்கன்னு சொல்லி அங்கிருந்து கிளம்பி போய்ட்டாங்க.. காலேஜோட நிர்வாகமும் அவன் மேல தனியா புகார் தந்திருக்காங்க. கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தாலும் இந்த காலேஜையே இழுத்து மூட வேண்டி இருந்திருக்கும்ன்னு பயந்துட்டாங்க.. எனக்கும் வார்டனுக்கும் தேங்க்ஸ் சொன்னாங்க.. என் போட்டோவோடு சேர்ந்து வந்த ஆபாச மெஸேஜை சரியான முறையில் கையாளலன்னு நம்ம பிரின்சிபாலுக்கு கூட செம டோஸ் விழுந்துச்சி.." என்றான் பெருமூச்சோடு.

"நானும் எங்க வார்டனும் அஞ்சனா வீட்டுக்கு போனோம். வார்டன் அவளோட அம்மாக்கிட்ட உண்மையை சொன்னாரு.."

"எதுக்கு உண்மையை சொன்னிங்க.?" அவசரமாக கேட்ட அபிநயாவை முறைத்தான் அன்பு.

"வேற என்ன பண்ண சொல்ற.? அவங்க அவளோட அம்மா. அவ இதை அவங்கிட்ட மறைச்சது ரொம்ப தப்பு. அவளை நம்பி இத்தனை வருசமா வாழுறாங்க இவங்க. தான் இன்னொரு புருசனை கட்டிக்கிட்டா தன் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையாம போயிடுமோங்கற பயத்துல இன்னொரு கல்யாணம் கூட பண்ணிக்கல அவங்க. அவங்களை இவ ஏமாத்தி இருக்க கூடாது. எங்க வார்டன் உண்மையை சொன்ன பிறகும் கூட தன் பொண்ணு எப்படி கஷ்டப்பட்டிருப்பாளோன்னுதான் அழுதாங்க அவங்க.. அப்புறம் அவளையே கூப்பிட்டு பேசினார் வார்டன். அவளுக்கு தான் செஞ்ச தப்போ தான் ஏமாந்ததோ கூட பெரிய பிரச்சனையா தெரியல. ஆனா தான் செஞ்ச தப்பை சமூகம் அறிஞ்சா தன்னை பத்தி என்ன நினைக்குமோ தன்னை கேவலமா பார்க்குமோன்னுதான் அதிகம் பயந்துட்டு இருந்திருக்கா.. சமூகத்தை பத்தி பயப்படாதன்னு எங்க வார்டனும் நிறைய முறை சொல்லி பார்த்தாரு. ஆனா அவ கேட்டுக்கல. அழுதுட்டே இருந்தா. எல்லா ஆதாரத்தையும் அழிச்சாச்சி. இனி அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு புரிய வச்ச பிறகுதான் அழுகையை நிப்பாட்டினா. அவளோட அம்மாவோட கனவே அவதான்னு தெரிஞ்சதும் வார்டன் அவளுக்கு நிறைய புத்திமதி சொன்னாரு. அப்புறம்தான் மறுபடியும் காலேஜ்க்கு வரவே ஒத்துக்கிட்டா. அதுவும் அவளுக்கு இந்த காலேஜ்ல நானும் என் பிரண்ட்ஸான நீங்களும் துணையா இருக்கறதா வாக்கு தந்திருக்கேன் நான். அதனாலதான் அவ இவ்வளவு நம்பிக்கையோடு இங்கே வந்திருக்கா.." என்று சொன்னான் அன்பு.

அபிநயா அவனின் கையை பற்றினாள். தோளில் சாய்ந்த வண்ணமே அவனின் விரல்களோடு தன் விரல்களை கோர்த்தாள்.

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. அவன் மேலயும் தப்பு. இவ மேலயும் தப்பு. அவ தனக்கான தண்டனையை ஏற்கனவே அனுபவிச்சிட்டா.. அவன் அவனுக்கான தண்டனையை இனியாவது அனுபவிக்கட்டும்.." என்றாள்.

"அந்த பொண்ணை மறுபடியும் காலேஜ்க்கு வர வைக்கிறதுக்கு நானும் வார்டனும் ரொம்ப கஷ்டப்பட்டோம். அதனால இப்ப நான் உன்கிட்ட சொன்ன விசயம் எதையும் மத்தவங்ககிட்ட சொல்லிடாத.. யாராவது கிண்டல் பண்ணிட்டாங்கன்னா அப்புறம் அஞ்சனா மறுபடியும் காலேஜை விட்டு நின்னுடுவா.. அவளுக்கான தைரியம் வரவரைக்குமாவது நாம அவளுக்கு ஹெல்ப் பண்ணலாம்.." என்றான். அபிநயா சரியென்று தலையசைத்தாள். "நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.." என்றாள்.

"ஆனா எனக்கு ஒரு விசயம் புரிய மாட்டேங்குது அபி.." என்றவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

"என்ன.?"

"தான் செய்றது தப்புன்னு தெரிஞ்சே ஏன் செய்யணும். அப்புறம் அந்த தப்பு வெளியே தெரிஞ்சா தன் மானம் போயிடுமேன்னு ஏன் பயப்படணும்.? சமூகத்தை கண்டு பயமில்லைன்னா எந்த தப்பை வேணாலும் செய்யலாமா என்ன.? இல்ல சமூகத்துக்கு தெரிய போவது இல்லங்கற ஒரு வாய்ப்பு கிடைச்சா அப்பவும் எவ்வளவு வேணாலும் தப்பு செய்யலாமா.?" என்றான் குழப்பத்தோடு.

"நானே ஒரு மக்கு. என்கிட்ட போய் இதையெல்லாம் கேட்கறியே உனக்கு அறிவிருக்கா.?" என கேட்டு சிரித்தாள் அவள். அன்பு ஆச்சரியத்தோடு அவளை பார்த்தான்.

"என்னவொரு அதிசயம். குட்ட தன்னை ஒரு மக்குன்னு ஒத்துக்கிட்டாளே.." என்றான் அவள் சொன்னதை நம்ப இயலாமல்.

"உன்னை லவ் பண்ண ஆரம்பிக்கும்போதே நான் மக்குதான்னு உனக்கு புரியலையா.? அறிவு இருந்தா உன்னை லவ் பண்ணுவேன்னா.?" என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டவளின் கழுத்தோடு கட்டிக் கொண்டான் அன்பு.

"அதிசயமா காமெடி பண்ணியிருக்க.. ஆனா சிரிப்பு வர மாட்டேங்குதே செல்லம்.." என்றவன் அவளின் நெற்றியில் தன் நெற்றியை மோதியபடி அவளை பார்த்து சிரித்தான். அபிநயாவும் அவனின் சிரிப்போடு இணைந்துக் கொண்டாள்.

"காலேஜ்ல இருந்து யாராவது பார்த்தாங்கன்னா நம்மளை பத்தி என்ன நினைப்பாங்க.?" என்றாள் அவனின் நெஞ்சில் சாய்ந்தபடியே.

"நிச்சயம் தப்பாதான் நினைப்பாங்க. ஆனாலும் இந்த காலேஜ்ல இருந்த பெரிய பொறுக்கியை கண்டுபிடிச்சி யாருக்கும் தெரியாம, யாருக்கும் டிஸ்டர்ப் இல்லாம ஜெயிலுக்கு அனுப்பி வச்சிருக்கேன். ஒரு பத்து நிமிசம் என் லவ்வர் பொண்ணு கூட பேச கூட உரிமை இல்லையா எனக்கு.?" என்றான் சிணுங்கலாய்.

அபிநயா நிமிர்ந்து அவனது மூக்கை பிடித்து ஆட்டினாள். "நீ பேச வேற நேரமே கிடைக்கலையா.? கிளாஸ் போயிட்டு இருக்கும். உன்னால எனக்கு எக்ஸாம்ல மார்க் குறைய போகுது.." என்றாள்.

"அடி பிராடு.. இல்லன்னா மட்டும் நீ எக்ஸாம்ல பர்ஸ்ட் மார்க் வாங்கிடுவியா என்ன.?" என்றான் கிண்டலாக.

"நம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி ராசா.. எழுந்து வா அடுத்த கிளாஸ்க்காவது போய் சேரலாம்.." என்றபடி எழுந்து நின்றாள். அன்புவும் அவளோடு இணைந்து எழுந்தான். அவனின் மின்னும் விழிகளை ஆசையோடு பார்த்தவள் அவனின் தோள்பட்டையின் மீது விழுந்திருந்த இலை ஒன்றை எடுத்து கீழே எறிந்தாள்.

"அடுத்த முறை எங்கேயாவது போவதா இருந்தா என்கிட்ட சொல்லிட்டு போ.. ப்ளீஸ்.. நான் உன்னை ரொம்பவுமே மிஸ் பண்ணேன்.." என்றாள். அவளின் கன்னத்தை பற்றியவன் "சாரி.. இனி இப்படி சொல்லாம விட்டு போக மாட்டேன்.." என்றான்.

அவர்கள் வகுப்பிற்கு வந்தபோது வகுப்பில் எந்த ஆசிரியரும் இல்லை. "இப்பதான் மேம் போனாங்க. அடுத்த சார் வரும் முன்னாடி கரெக்டா வந்து சேர்ந்துட்டிங்க போல.." என்று கிண்டலடித்தாள் மீனா.

அபிநயா அவளுக்கு மறுமொழி சொல்ல இருந்த நேரத்தில் அடுத்த வகுப்பிற்கான பேராசிரியர் வந்து சேர்ந்தார். பாடத்தை கவனித்துக் கொண்டே அவ்வப்போது அன்புவும் அபிநயாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவர்களை அறியாமலேயே புன்னகையை வளர்த்தனர்.

மாலையில் கல்லூரி முடிந்து செல்லும்போது இவர்களின் கூட்டத்தோடு அஞ்சனாவும் வந்து சேர்ந்துக் கொண்டாள். தயங்கி தயங்கி நின்றவள் அபிநயாவும் அன்புவும் அக்கறை எடுத்து பேசவும் இயல்பாகி கொண்டாள்.

"எங்க வார்டன் என் போனை வாங்கி வச்சிக்கிட்டாங்க.." வருத்தத்தோடு சொன்னாள் அபிநயா.

"ஆமா.. எங்க வார்டன் சார்தான் புது கண்டிசன் போட்டிருக்காரு.. போனை யாரும் அவங்களோட ரூம் வரைக்கும் எடுத்துட்டு போக முடியாது.. போனால நிறைய பிரச்சனை வருது. நாமளோ சின்ன பசங்க. பிரச்சனைகளை கூட ஒழுங்கா கையாள தெரியாதபோது ஏன் போனை யூஸ் பண்ணனும்ன்னு நினைக்கிறார் அவரு.. நம்மோட இடத்துல இருந்து பார்த்தா அவர் சில்லிதனமா யோசிக்கறதா தோணும். ஆனா அவர் நம்மோட பாதுகாப்புக்காதான் இப்படி ஒரு ரூல்ஸை போட்டிருக்காரு.." என்ற அன்பு மெயின்ரோடு வந்ததும் அஞ்சனா பக்கம் பார்த்தான்.

"நாளைக்கு பார்க்கலாம்.." என்று கையசைத்தான். அபிநயாவும் கையசைத்தாள். அவள் புன்னகைத்துவிட்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள்.

அன்பு பெண்கள் விடுதியின் அருகே வந்ததும் அபிநயாவை பார்த்தான். "இனி நாம போன்ல பேச முடியாது. ஆனா மனசோடு பேசிக்கலாம்.." என்றான். அபிநயா சரியென தலையசைத்தாள்.

இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த குணா கேலியாய் புன்னகைத்தான். "நானும் என் ஆளும் இத்தனை மாசமா இப்படிதான் பேசிட்டு இருக்கோம்.." என்று முணுமுணுத்தான்.

"டேக் கேர்.." என்ற அன்பு குணாவோடு சேர்ந்து ஆண்கள் விடுதியை நோக்கி நடந்தான்.

அபிநயா தனது அறைக்குள் நுழைந்ததும் கதவை தாழிட்டுவிட்டு வந்த மீனா "யாரு அந்த புது கேரக்டர் அஞ்சனா.?" என்றாள்.

அபிநயா தனக்கு தெரிந்ததை அவளிடம் சொன்னாள். "காலேஜ் முடியும்வரை அந்த பொண்ணுக்கு நாம துணையாவும் பிரெண்ட்ஸாவும் இருப்போம்.." என்றாள்.

"கண்டிப்பா.." என்ற மீனாவுக்கு அஞ்சனாவை நினைத்து பரிதாபமாக இருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE

COMMENT

SHARE

FOLLOW

வணக்கம் நட்புக்களே.. திடீர்ன்னு நேத்து செங்காந்தளோட நியாபகம் வந்துடுச்சி. அது ஏன்னா.. நேத்து காலையில் எட்டு மணி சுமாருக்கு காட்டு யானை ஒன்னு ஊருக்குள்ள புகுந்துடுச்சி. எங்க வீட்டை தாண்டி மறுபடியும் காட்டுக்குள்ளயே போயிடுச்சி. அந்த யானையை பார்த்ததுல இருந்து கரட்டு நினைவும் செங்கா நினைவுமாவே இருக்கு..😊

செங்கா நாவலையும் காதலிழையில் நாவலையும் இன்னும் இரண்டு வாரத்துல இங்கிருந்து எடுத்துடுவேன்ப்பா. யாராவது படிக்க ஆசைப்பட்டா இந்த இரண்டு வார டைம்க்குள்ள படிச்சிக்கங்க.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN