சிக்கிமுக்கி 42

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிநயா கவிதை வாசித்து முடித்த பிறகு அடுத்த திறமையாளர் மேடையில் தோன்றினார்.

அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் ஆரவாரத்தோடு நடந்தன. பேராசிரியர்கள் தங்களது அறிவுரைகளையும் வாழ்த்துகளையும் மாணவர்களுக்கு வழங்கினார்கள்.

விழா முடிந்து கல்லூரியை விட்டு கிளம்பினர் பெற்றோர்களும் மாணவர்களும்.

"அபியோட பிரெண்ட் மேஜிக் நல்லா பண்ணா இல்ல.?" என்றார் வினோத் தன் மனைவியிடம்.

"ஆமாங்க.. நல்லா இருந்தது.." என்றாள் ஆனந்தி.

"அம்மா.. அப்பா.." அபிநயாவின் குரல் கேட்டு திரும்பி பார்த்தனர் இருவரும். அபிநயா அவர்களின் அருகே ஓடி வந்தாள்.

"அதுக்குள்ள கிளம்பிட்டிங்களா.?" என்றாள் ஓடி வந்த மூச்சிரைப்போடு.

"பஸ்க்கு டைம் ஆச்சி.. நாங்க கிளம்பறோம்.. நீ பத்திரமா இரு.." அவளின் தலையை வருடி விட்டபடி சொன்னார் வினோத்.

ஆனந்திக்கு தன் கணவனின் மூளையில் என்ன ஓடுகிறதோ என்று நினைத்து பயமாக இருந்தது. முன்னால் சென்றுக் கொண்டிருந்த அர்ச்சனா ஆறுமுகத்தோடு பேசிக்கொண்டிருந்தான் அன்பு. அவனை பார்த்துவிட்டு மகள் பக்கம் திரும்பிய ஆனந்திக்கு இவர்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறார்களா என்று சந்தேகமாக இருந்தது. எப்போதும் சண்டை போடுபவர்களுக்கு காதலிக்க எப்போது சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் என்று யோசித்தாள். கடந்த சில மாதங்களாக இருவரும் சண்டை போட்டுக்கொள்ளாததற்கு காரணம் இந்த காதல்தானா என்று எண்ணி ஆச்சரியப்பட்டாள். இந்த வாரத்தில் அபிநயா வீட்டிற்கு வந்ததும் வினோத் என்னவெல்லாம் செய்ய போகிறாரோ என்று பயந்தாள்.

"பாய் ப்பா.." என்ற அபிநயா வினோத்திடமிருந்து விலகி நின்றாள்.

"கவிதை செமையா இருந்தது. என் பொண்ணுக்கு கவிதை கூட எழுத தெரியும்ன்னு இன்னைக்கேதான் எனக்கு தெரிஞ்சது.." என்றார் பாதி கர்வமும் பாதி கிண்டலுமுமாக.

"தேங்க்ஸ் ப்பா.." என்றவளுக்கு கவிதையை அப்பாவே பாராட்டி விட்டாரே என்று பெருமையாக இருந்தது.

பேருந்து நிலையம் நோக்கி நடந்தவர்களை பார்த்தபடி நின்றிருந்தாள் அபிநயா.

"உங்க பேரண்ட்ஸ்ம் கிளம்பிட்டாங்களா.?" என்றபடி அவளருகே வந்து நின்றான் குணா.

"ம். கிளம்பிட்டாங்க.." என்று திரும்பியவள் குணாவின் கோமாளி உடையை கண்டதும் அவனின் தலையிலிருந்த குல்லாவை எடுத்தாள்.

"பங்சன் முடிஞ்சிடுச்சி இல்ல. அப்புறமும் இதை ஏன் போட்டுட்டு இருக்க.?" என்றாள் குல்லாவை எடுத்து தன் தலையில் வைத்தபடி.

"ரூம்க்கு போன பிறகுதான் டிரெஸ் மாத்தணும்.. உன் கவிதை சூப்பர்.." என்றான்.

"உன் கருத்து கோமாளி வேஷமும் நடிப்பும் கூட சூப்பர்.." என்றவளின் தோளில் விழுந்தது ஒரு கரம்.

"நிகழ்ச்சி தொகுப்பாளர் எப்படி பெர்பாமன்ஸ் பண்ணாரு.?" என்று தலை சாய்த்து கேட்டான் அன்பு.

"சில பேரோட நேம்ஸை திக்கி சொன்ன.. மத்தபடி ஓகேதான்.." என்றாள்.

"அபி டைம் ஆச்சி.. வா ஹாஸ்டலுக்கு போகலாம்.." என்று தூரத்தில் இருந்து கத்தி அழைத்தாள் மீனா.

"நாம நாளைக்கு பார்க்கலாம்.." என்று இவர்களிடம் கையசைத்துவிட்டு மீனாவை நோக்கி ஓடினாள் அபிநயா.

"அன்புவுக்கு கவிதை பிடிச்சிருந்ததா.?" தோழி அருகே வந்ததும் கேட்டாள் மீனா. அன்புவை திரும்பி பார்த்தாள் அபிநயா. அவன் குணாவின் தோளில் கை போட்டபடி ஆண்கள் விடுதியை நோக்கி நடந்துக் கொண்டிருந்தான்.

"இல்ல. அவன் எதுவும் சொல்லல.." என்றாள் சோகத்தோடு. "கவிதை அவனுக்குன்னு தெரியாது இல்லையா. அதான் அமைதியா போய்ட்டான் போல.." என்றாள்.

"சரி விடு. அவன் பாராட்டலன்னா என்ன.? எங்க எல்லோருக்கும் பிடிச்சி இருந்தது.." என்ற மீனா விடுதி அறைக்குள் வந்ததும் தன் கோட்டை அவிழ்க்க ஆரம்பித்தாள். கோட்டின் உள்ளிருந்த வண்ண பந்துகள் கீழே கொட்டின. "அட இதை மறந்துட்டேன்பா.." கீழே கிடந்த பந்துகளை கையில் எடுத்த வண்ணம் சொன்னாள்.

"விடு. அடுத்த வருசம் பங்சன்ல அசத்திடுவ.." அபிநயா அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கட்டிலில் அமர்ந்தாள். தோழிகளின் கை வண்ணத்தில் பின்னலிடப்பட்ட ஜடையை அவிழ்க்க ஆரம்பித்தாள்.

"எங்க அம்மா என்னை ஒரு மாதிரியாவே பார்த்தாங்க மீனு.. நானும் கோணக்காலனும் பேசிட்டு இருந்து அதை அவங்க பார்த்து இருப்பாங்களோ‌.?" என்றாள் சந்தேகத்தோடு.

"அப்படியெல்லாம் இருக்காது. நீயும் அவனும் இன்னைக்கு பேசிக்க கூட இல்ல. பங்சன்ல கலந்துக்கிட்ட களைப்பா இருக்கும் அவங்களுக்கு.." சமாதானம் சொல்லினாள் மீனா.

அஞ்சனா வீட்டிற்கு வந்ததும் அவளின் அம்மா நிகழ்ச்சியை பற்றி விசாரித்தாள். "ஏதோ ஆடினேம்மா.." என்றவளின் குரலிலிருந்தே அவளின் மனதை கணித்துவிட்ட அம்மா அதன்பிறகு எதுவும் கேட்கவில்லை.

இரவில் கூரையை பார்த்தபடி படுத்திருந்த அன்புவை பார்த்து கிண்டலாக சிரித்த குணா "அம்மணியோட கவிதையே மனசு முழுக்க இருக்கறதால தூக்கம் வரலையோ.?" என்றான்.

அன்பு சிரிப்போடு திரும்பினான். கழுத்தில் கை பதித்தபடி தலையை தூக்கினான். "குட்டச்சி எனக்காக ஐ லவ் யூ ன்னு எழுதி தந்தாலே நாலு நாளைக்கு தூக்கம் வராது. இன்னைக்கு கவிதையாவே வாசிச்சிட்டாளே.. எப்படிடா தூக்கம் வரும்.?" என்றான் மீண்டும் தலையை கட்டிலில் சாய்த்தபடி. அருகே இருந்த தலையணையை எடுத்து நெஞ்சோடு கட்டிக் கொண்டான். தலையணையோடு கட்டிலில் புரண்டான்.

"பைத்தியம் போல என்னவோ செய்.. நான் தூங்கறேன்.." என்ற குணா உறங்க ஆரம்பித்தான். ஆனால் அன்புவிற்குதான் இரவு நெடுநேரம் வரையிலும் உறக்கமே வரவில்லை.

அடுத்த நாள் பிற்பகல் வேளையில் மரத்தடியில் அமர்ந்திருந்தார்கள் அபிநயாவும் அவளின் நட்பு கூட்டமும். எதிரே இருந்த மைதானத்தில் சஞ்சயின் டீமும் மற்றொரு மாணவர்கள் டீமும் எதிரெதிரே கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். விளையாட்டை பார்த்தபடி அன்புவின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் அபிநயா.

"அன்பு.." என்றாள் சில நிமிடங்களுக்கு பிறகு.

"ம்.." என்றவனிடம் "என் கவிதை நல்லா இருந்ததா.? கடவுளுக்கு எழுதியது.." என்றாள்.

"ம். நல்லா இருக்குன்னு கடவுளே என்கிட்ட வந்து சொல்லிட்டு போனாரு.." என்றான்.

"ஓ.. அப்படின்னா சரி.." என்றவள் பந்தாட்டத்திற்கு மீண்டும் பார்வையை திருப்பினாள்.

பந்தாட்ட சுவாரசியத்தில் மூழ்கி இருந்த அன்புவின் தோளை தட்டினான் குணா.

"என்னடா.?" என்றபடி திரும்பியவனிடம் "அஞ்சனா ரொம்ப நேரமா உன்னை பார்த்துட்டே நின்னுட்டு இருக்கா.." என்றான்.

அன்பு எழ முயன்றான்‌. அபிநயாவின் கை அவனின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு இருந்தது. "எங்கே கிளம்பற.?" என்றாள் திரும்பி பார்த்து.

"அஞ்சனா வெயிட் பண்றா.. ஒரு நிமிஷம் இரு பேசிட்டு வந்துடுறேன்.." என்றவன் அங்கிருந்து எழுந்து சென்றான்.

"இப்பவெல்லாம் உன்னை விட அவளோடுதான் அவன் டைம் அதிகம் செலவு பண்றான்.." என்று அபிநயாவிடம் குற்றம் சாட்டினாள் சுவேதா.

"காலை சுத்திய பாம்பைதான் இவளோடு சேர்த்து ஒப்பிட தோணுது எனக்கு.." என்றாள் மீனா.

"அஞ்சனா.. கேம் பார்க்க வரியா.?" தன் அருகே வந்து கேட்டவனிடம் மறுப்பாக தலையசைத்த அஞ்சனா "உங்ககிட்ட தனியா பேசணும்.." என்றாள்.

அன்பு அவளோடு இணைந்து நடந்தான்.

"இந்த பொண்ணை புரிஞ்சிக்கவே முடியல.. அவன்கிட்ட மட்டும் பேசுறா.. அவனும் அவக்கிட்ட ஸ்பெஷலா கேர் எடுத்து பழகறான்.." என்று அவர்களை பார்த்தபடி சொன்னான் சஞ்சயின் நண்பன் ஒருவன்.

அபிநயாவால் அதற்கு மேல் அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை. எழுந்து அவர்களை தேடி சென்றாள்.

பாதையோரம் இருந்த பெஞ்சில் வந்து அமர்ந்தனர் அன்புவும் அஞ்சனாவும்.

"சொல்லு.." என்றவனிடம் காகிதம் ஒன்றை தயக்கத்தோடு நீட்டினாள் அவள்.

"எங்க அம்மாவோட புது போன் நம்பர் இது. உங்களோடு பேசணும்ன்னு சொன்னாங்க.." என்றாள் தயக்கமாக.

அன்பு போன் நம்பர் இருந்த தாளை வாங்க இருந்த நேரத்தில் அந்த தாளை தன் கையில் வாங்கினாள் அபிநயா. அவளை கண்டதும் திகைத்து எழுந்தாள் அஞ்சனா.

"சாரி அபி.. இது எங்க அம்மா நம்பர்தான்.. பிராமிஸ்.." என்றாள்.

அவளின் பேச்சு வழக்கம் போல அபிநயாவிற்கு எரிச்சலையே தந்தது. "உன் அம்மா நம்பரை நான் வாங்கியதுல என்ன தப்பு.? நானும் அவங்களோடு பேசுறேன்.." என்றாள்.

"வேணாம்.. நீங்க ஏதாவது சொல்லிட்டா எங்க அம்மா பீல் பண்ணுவாங்க.." என்றாள்.

அபிநயாவிற்கு கோபம் வந்தது. "என்னை பார்த்தா கோள் மூட்டி போல இருக்கா.?" என்றாள். அஞ்சனாவிற்கு கால்கள் நடுங்கியது. அன்பு அதை கவனித்து விட்டு அபிநயா பக்கம் திருப்பினான். "அதை கொடு அபி.. நான் கொஞ்ச நேரத்துல திரும்பி வந்துடுறேன்.. நீ போய் மேட்சை பாரு.." என்றான்.

"இவ என்னை இன்சல் பண்றா அன்பு.." என்று அஞ்சனாவின் பக்கம் விரல் நீட்டி கோபத்தோடு சொன்னாள் அபிநயா. அஞ்சனாவின் கண்கள் கலங்கின.

"அபி.. ப்ளீஸ்.. இங்கிருந்து கிளம்பு.." கெஞ்சலோடு கேட்டான் அன்பு.

"இது எங்கே போய் முடிய போகுதோ தெரியல.." அபிநயா தன் கையிலிருந்த காகிதத்தை கசக்கி அன்புவின் மீது எறிந்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

"அபிக்கு எப்பவும் விளையாட்டு.. நீ அதை பெருசா எடுத்துக்காத.." என்ற அன்பு பேப்பரை சரிபடுத்தினான். அவன் பேப்பரை சட்டை பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்த இருந்த நேரத்தில் அந்த காகித தாளை பிடுங்கி கொண்டாள் அஞ்சனா.

"இல்ல வேணாம்.. சாரி.. நான் இந்த நம்பரை உங்ககிட்ட தந்திருக்க கூடாது. தப்பு என் மேல்தான்.. அம்மாவோடு நீங்க எதுவும் பேச வேணாம்.. நான் அவங்ககிட்ட சொல்லிக்கறேன்.." என்றபடி எழுந்து நின்றாள் அஞ்சனா. அவளோடு இணைந்து எழுந்த அன்பு "அபி மேல கோபப்படாத.. அவ ரொம்ப நல்ல பொண்ணு.." என்றான்.

"தெரியும். அவங்க ரொம்ப நல்ல பொண்ணுதான்.. ஆனா நான்தான் கெட்டவ.. என்னால உங்களுக்கு பிரச்சனை வர வேணாம்.. சாரி இத்தனை நாளா உங்க நேரத்தை வீணடிச்சதுக்கு.." என்றவள் எதிர் திசையில் திரும்பி நடந்தாள்.

அன்பு நெற்றியை பற்றினான். அவளை அழைத்தாலும் நிற்க மாட்டாள் என்பதை புரிந்துக் கொண்டவன் விளையாட்டு நடந்துக் கொண்டிருந்த இடத்திற்கு திரும்பி நடந்தான். அபிநயா சுவேதாவோடு எதையோ பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்.

அபிநயாவின் மறுபக்கத்தில் வந்து அமர்ந்தவன் "உன்னை யார் அங்கே வர சொன்னது.?" என்றான்.

அபிநயா திரும்பி பார்த்தாள். "அங்கே நீங்க இரண்டு பேரும் சட்டத்துக்கு புறம்பான செயலா செஞ்சிட்டு இருந்திங்க நான் வராம இருக்க.?" என்றாள்.

"அபி.. அந்த பொண்ணு ரொம்ப சென்சிடிவ் டைப்.. அவ என்கிட்டயே தயங்கி தயங்கிதான் பேசுறா.. நீ குறுக்கே வந்ததும் பயந்துட்டா.." என்றவனை முறைத்தாள் அபிநயா.

"இது ரொம்ப தப்பு தெரியுமா.? அண்ணன் மாதிரி இருப்பவனோடு தயங்கி தயங்கி பேச வேண்டிய அவசியமே கிடையாது.. அவ மனசுல வேற ஏதோ இருக்கோன்னு எனக்கும் இப்ப சந்தேகம் வருது. அவங்க அம்மாக்கிட்ட நான் பேசினா என்ன.? இனியொரு முறை அவ தனியா கூப்பிட்டான்னு நீ போய் பேசினால் அப்புறம் நான் அவங்க அம்மாவை தேடி போய் 'உங்க பொண்ணு என் ஆள் கூட கடலை போடுறா.!'ன்னு சொல்லிட்ட வந்துடுவேன்.." என்றவள் தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அன்பு பெருமூச்சோடு விளையாட்டை கவனிக்க ஆரம்பித்தான். "கொஞ்ச நாளைக்கு அவளுக்கு டைம் கொடேன்.." விளையாட்டை பார்த்துக் கொண்டே சொன்னவனை திரும்பி பார்த்து முறைத்தவள் "உனக்கு அவ்வளவு அக்கறையா இருந்தா இனி அவளை என்கிட்ட வந்து பேச சொல்லு.. நீ அவளோடு எதுவும் பேச வேணாம்.. அவளோடு மனம் விட்டு பேசவும் அவளுக்கான குட்டி குட்டி ஹெல்பையும் நானே பண்றேன்.." என்றாள்.

அஞ்சனாவிற்கு நேரம் கொடு என கேட்பதற்கு பதிலாக அபிநயாவிற்கு நேரம் தந்தால் போதும்.. அபிநயாவின் கோபம் குறைந்துவிடும் என்று நம்பினான் அன்பு.

அன்று மாலையில் தோழியோடு சேர்ந்து விடுதி நோக்கி சென்றுக் கொண்டிருந்த அபிநயாவின் முன்னால் தயக்கத்தோடு வந்து நின்றாள் அஞ்சனா.

"அபி.. உங்களுக்கு என் மேல ஏன் கோபம்ன்னு தெரியல. ஆனா நான் அன்புவை அண்ணனாதான் பார்க்கறேன். நம்புங்க.." என்றாள். அபிநயா தன்னை தவறாக நினைத்திருப்பாளோ என்று பெரிதும் பயந்து போயிருந்தாள் அவள்.

அபிநயாவிற்கு அவளை பார்க்கவே பிடிக்கவில்லை. "நீ உண்மையிலேயே நல்லவளா இருந்தா இப்படி வந்து என்கிட்ட ப்ரூப் சொல்லிட்டு இருக்க மாட்ட.. உன் மனசுல கள்ளம் இருப்பதால்தான் உன்னை நான் தப்பா நினைச்சிடுவேன்னு நினைக்கிற.." என்றவளின் தோளில் தட்டினாள் மீனா.

"விடு அபி.. இவ ஒரு கிறுக்கு.. இவளால நீ டென்சன் ஆகாதே.." என்றாள்.

"இல்ல மீனு.. இவளுக்கே மனசாட்சி இருக்கணும் இல்ல.? எப்ப பார்த்தாலும் அன்புவை தனியா கூப்பிட்டே பேசுறா.. பேசி தொலைஞ்சாலும் பரவால்லன்னு விடலாம். ஆனா நான் தப்பா நினைப்பேன்னு ஒவ்வொரு முறையும் பழியை தூக்கி என் மேலயே போட்டா எப்படி சொல்லு.. எனக்கே இரிடேட்டிங்கா இருக்கு.. அந்த விகேஷ் எப்படித்தான் இவளையெல்லாம் கரெக்ட் பண்ணானோ.. சத்தியமா இவளோடு ஒரு நாளை கூட என்னால ஸ்பென்ட் பண்ண முடியாது.." முகம் சுளித்தபடி சொன்னவள் முன்னால் திரும்பி பார்த்தபோது அஞ்சனாவின் கண்கள் இரண்டிலும் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.

"என்ன இப்ப.. இதுக்கும் நான்தான் காரணம்ன்னு சொல்ல போறியா.? உன் நடிப்பை அன்புவோடு நிறுத்திக்க. என்கிட்ட காட்டாதே.." என்ற அபிநயா அவளை தாண்டிக் கொண்டு நடந்தாள்.

அபிநயாவின் முதுகை அழுதபடியே பார்த்தாள் அஞ்சனா.

"இவளால என் மூட் அப்செட் ஆகிடுச்சி.." என்று சலித்துக் கொண்ட அபிநயா விடுதி அறையின் ஜன்னலை திறந்து எதிரே இருந்த கட்டிடத்தை பார்த்தாள். அன்பு வழக்கம்போல மேஜையின் முன்னால் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான். அவனின் உருவம் நிழல் போல தெரிந்தது இவளுக்கு.

"எல்லாம் இவனால வந்தது. அவளுக்கு ஆபத்பாந்தவனா மாற போய்தானே என்னை இரிடேட் பண்ணிட்டு இருக்கா அவ.." என்றாள் எரிச்சலோடு.

"இன்னமும் அவளையே நினைச்சிட்டு இருக்கியா.? விடு அவளெல்லாம் மேட்டரா.?" என்ற மீனா தன் நோட்டை எடுத்து வைத்து கேள்விகளுக்கான பதில்களை எழுதி பார்க்க ஆரம்பித்தாள்.

"என்னடா அன்பு.. உன் ஆளு அந்த அஞ்சனாவை காச்சி எடுத்துட்டா போல.." இரவு உணவு உண்ணும்போது சக மாணவன் சொன்னது கேட்டு குழம்பிய அன்பு "என்ன சொல்றிங்க சீனியர்.?" என்றான்.

"கடைக்கு போய்ட்டு வரும்போது பார்த்தேன்.. அபி என்னவோ திட்டவும் அந்த அஞ்சனா பொண்ணு அழுதுட்டு நின்னுட்டு இருந்தா.." என்றவன் உணவு தட்டோடு நகர்ந்து செல்ல அன்புவிற்கு மனம் அடித்துக் கொண்டது. 'பாவம் அஞ்சனா.. அவளை ஏன் இந்த குட்ட அழ வச்சா.?' என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

"ஏன்டி இந்த பையன் அபியை லவ் பண்ணிட்டுதான் இருப்பானோ.?" இரவு விளக்கை அணைத்து விட்டு வந்து கட்டிலில் சாய்ந்த மனைவியிடம் கேட்டார் ஆறுமுகம்.

"எனக்கு மட்டும் என்ன தெரியும்.? எப்பவும் சண்டை போட்டுட்டு இருப்பாங்க. திடீர்ன்னு லவ் பண்றாங்களோ என்னவோ.?" என்றவளுக்கு பக்கத்து வீட்டாரோடு மீண்டும் சண்டை வர போகிறதோ என்று கவலையாக இருந்தது.

"இந்த காலத்து புள்ளைகளை புரிஞ்சிக்கவே முடியல. திடீர்ன்னு சண்டை போடுறாங்க. திடீர்ன்னு லவ் பண்றாங்க.. அப்பா நான் அந்த பொண்ணை லவ் பண்றேன்னு சொல்லிட்டு வரட்டும். அவன் தோலை உரிச்சிடுறேன்.." என்றார் அவர் பொய் கோபத்தோடு.

"தோளுக்கு மேல வளர்ந்த புள்ளைக்கு புத்தி சொல்றதோடு நிறுத்துங்க.. என் புள்ளை மேல கை வச்சிங்கன்னா உங்க கையை உடைச்சி வச்சிடுவேன் நான்.." என்று எச்சரித்துவிட்டு உறங்கினாள் அர்ச்சனா.

"அந்த பையன் குட்டிசுவரா போக காரணமே நீதான்.."என்று மனைவியை திட்டினார் அவர்‌.

கல்லூரிக்கு வந்ததும் முதல் வேலையாக அஞ்சனாவை தேடித்தான் சென்றான் அன்பு. அவள் சிவந்து போன கண்களோடும் வீங்கி போன முகத்தோடும் இருந்தாள். விடிய விடிய அழுதிருக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டவன் "அஞ்சனா இங்கே வா.." என்றான் அவளின் வகுப்பறை வாசலில் நின்றபடி. அஞ்சனா எழுந்து வெளியே நடந்ததை கண்டு வகுப்பில் இருந்த ஓரிரு மாணவர்கள் ரகசியமாக சிரித்தனர். அவர்களின் சிரிப்பை காண்கையில் அஞ்சனாவிற்கு மேலும் மனம் வாடியது.

"அன்பு எங்கே காணோம்.?" குணாவிடம் கேட்டாள் அபிநயா.

"அவன் அஞ்சனாவை பார்க்க போயிருக்கான்.. நேத்து நீ அவளை திட்டிடன்னு உனக்கு பதிலா அவனே சமாதானம் செய்ய போயிருக்கான்.." என்றவன் தன்னிடமிருந்த கேட்பெரியை மீனாவிடம் நீட்டினான்.

அபிநயாவிற்கு திடீர் சோர்வு வந்தது. தன்னிடம் கூட ஒரு வார்த்தை கேட்காமல் என்ன நடந்தது என்பதையும் விசாரிக்காமல் அவளை சமாதானம் செய்ய போயிருக்கிறானே என்று அன்பு மீது கோபம் வந்தது. அவன் தன் மீது கொண்ட நம்பிக்கை அவ்வளவுதானா என்று நினைத்து உள்ளம் நொந்தாள்.

"எதுக்காக இப்படி அழுதிருக்க.? உன்னை அபி ரொம்ப திட்டிட்டாளா.?" என்று கேட்ட அன்புவிடம் மறுப்பாக தலையசைத்த அஞ்சனா "நீங்க இனி என்னை பார்க்க வராதிங்க.." என்றாள் விம்மலோடு.

வகுப்பறையில் ஐந்தாறு மாணவர்கள்தான் அமர்ந்திருந்தார்கள். அவர்களும் இருந்த இடத்திலிருந்து அஞ்சனாவை கவனித்தனர்.

"என்ன ஆச்சின்னு சொல்லு அஞ்சனா.. உனக்கு துணையா நான் இருக்கேன்‌. அப்புறம் ஏன் நீ அழற.?" என்றான் அன்பு.

தரையை பார்த்தபடி தன் கண்களை துடைத்துக் கொண்ட அஞ்சனா "எனக்கு வயித்து வலி.. அதனாலதான் அழறேன்.." என்றாள் விக்கியபடி.

அவள் பொய் சொல்கிறாள் என்பது புரிந்ததும் ஓரடி விலகி நின்றான் அன்பு. "சரி நீ போய் ரெஸ்ட் எடு.." என்றுவிட்டு தங்களது வகுப்பறை இருந்த கட்டிடம் நோக்கி நடந்தான்.

அஞ்சனா வகுப்பறைக்குள் வந்ததும் "அடுத்த ஆளை பிடிச்சிட்டியா அஞ்சு.?" என்று கிண்டலாக கேட்டான் சக மாணவன் ஒருவன்.

அஞ்சனா குனிந்த தலையை நிமிர்த்தவில்லை. அவளின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.

"இவ படிக்கவா காலேஜ் வந்தா.? எந்த பசங்க கிடைப்பாங்களோன்னு அலையுறா.." என்று இன்னொருத்தி கிண்டலடித்தாள்.

அஞ்சனா தன் இருக்கையில் அமர்ந்து மேஜை மேல் தலை வைத்து படுத்தாள். கண்ணீர் ஆறாக பெருகியது.

தனது வகுப்பறைக்கு வந்த அன்பு அபிநயாவை தேடினான். அவள் அமரும் இடம் காலியாக இருந்தது.

"அபி எங்கே.?" என்று மற்றவர்களை பார்த்து கேட்டான்.

"ரெஸ்ட் ரூம் போயிருக்கா.." என்று அவனுக்கு தகவலை சொன்ன சுவேதா மீண்டும் மீனாவோடு உரையாட ஆரம்பித்தாள்.

அந்த தளத்தின் கடை கோடியில் இருந்தது பாத்ரூம்‌.

அபிநயா பெண்களுக்கான பாத்ரூமை விட்டு வெளியே வந்தபோது எதிரே இருந்த சுவரில் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான் அன்பு. அவனை திடீரென கண்டதும் திடுக்கிட்ட அபிநயா நெஞ்சில் கை வைத்தாள்.

"இங்கே என்ன பண்ற நீ.? அதுவும் லேடிஸ் டாய்லெட் முன்னாடி.." என்றாள்.

சுவற்றில் சாய்ந்திருந்த அன்பு நேராக நின்றான். அருகே வந்து அவளின் கையை பற்றி அழைத்துக் கொண்டு பக்கத்திலிருந்த படிகளில் ஏறினான்.

"கிளாஸ் ஆரம்பிக்க போகுது.. நீ ஏன் என்னை மொட்டை மாடிக்கு கூட்டி போற.?" என்றவளின் கையை படிகளிலேயே விட்டவன் "அஞ்சனாவை என்ன சொன்ன.?" என்றான்.

அபிநயாவிற்கு கோபத்தில் மூக்கு சிவந்து போனது. "நீ என்ன நடந்ததுன்னு கேட்காம நேரடியா நான்தான் என்னவோ சொன்னன்னு கேட்கற.." என்றாள்.

"ஆமா.. ஏனா அவதான் அழுதிருக்கா.. அவ ரொம்ப அப்பாவி. உன்னை எதுவும் சொல்லி இருக்க மாட்டா.. நீ ஏன் அவளை திட்டின.. அவ நைட்டெல்லாம் அழுதிருக்கா.. அவளை பார்த்தாலே பாவமா இருக்கு.." என்றவனின் முன்னால் கை காட்டி நிறுத்தினாள் அபிநயா.

"என்னை விட அவ முக்கியமா போயிட்டா.." என்றவளுக்கு தொண்டை அடைத்தது.

"நான் அப்படி சொல்ல வரல.."

"போதும் அன்பு.. என்கிட்ட கேட்காம நீ நேரா போய் அவக்கிட்ட பேசும்போதே உன் நம்பிக்கை என்னன்னு தெளிவா புரிஞ்சி போச்சி. லவ்வுல நம்பிக்கை எவ்வளவு முக்கியம் தெரியுமா.?" என்றவளிடம் "நம்பிக்கை எனக்கெல்லாம் இருக்கு. உனக்குதான் இல்ல‌. அதனாலதான் நானும் அவளும் பேசிட்டு இருக்கும்போது குறுக்கே வந்த நீ.." என்றான் கோபத்தோடு அன்பு.

அபிநயா வேதனையோடு சிரித்தாள். "உங்க இரண்டு பேருக்குள்ளயும் அண்ணன் தங்கை உறவு இருக்குன்னு இதுநாளை வரைக்கும் நானும் நம்பிட்டுதான் இருந்தேன். ஆனா இனியும் அப்படி நம்ப மாட்டேன்.. அவ வீட்டுக்கு நீ அடிக்கடி போக காரணம் கூட அவளோடு.." அவள் முழுதாக முடிக்கும் முன் அவளின் கன்னத்தில் அறைந்தான் அன்பு.

அபிநயா கன்னத்தை பிடித்தபடி அவனை பார்த்தாள். "உன் புத்தியே இப்படித்தான் இருக்குமா.?" என்று எரிச்சலோடு கேட்டவன் அவள் அதிர்ந்து பார்த்து நின்றபோதே அங்கிருந்து திரும்பி நடந்தான்.

அபிநயாவின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் வழிந்து கன்னத்தில் உருண்டது.

அன்பு வகுப்பறைக்குள் வந்தது அமர்ந்ததும் அவனின் முகத்தில் இருந்த கோபத்தை கண்டு குழம்பி போனார்கள் நண்பர்கள். அவனிடம் விசயத்தை கேட்டு அறியும் முன்பே பேராசிரியை வகுப்பறைக்குள் வந்தார்.

"அபி பாத்ரூம்ல இன்னும் என்ன பண்றா.?" என்று சுவேதாவிடம் கிசுகிசுத்திள் மீனா.

பத்து நிமிடத்திற்கு பிறகு வகுப்பறை வாசலில் நிழல் ஆடியது. "மே ஐ கம் இன் மேம்.?" என்று கரகரத்த குரலோடு கேட்டாள் அபிநயா.

"எங்கே போன இவ்வளவு நேரம்.?" என்றபடி அவளை உறுத்து பார்த்தார் பேராசிரியை.

"ரெஸ்ட் ரூம் போயிருந்தேன் மேடம்.." என்று சொன்னவள் உடனடியாக உதட்டை அழுத்தமாக கடித்துக் கொண்டாள். அவளை உள்ளே வர சொல்லி சைகை காட்டினார் அவர்.

அபிநயா குனிந்த தலையோடு உள்ளே வந்தாள். அவளின் குரலை வைத்தே அவள் அதிகம் அழுதுவிட்டாள் என்பதை புரிந்துக் கொண்டான் அன்பு. வீராப்போடு புத்தகத்தில் கண்ணாக இருந்தவன் நிமிர்ந்தபோது அபிநயா அவனை கவனிக்காமல் சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள். அவன் அறைந்த தடம் அவளின் கன்னத்தில் அப்படியே இருந்தது. தன் மீதே கோபம் வந்தது. அவளிடம் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றியது. முட்டாள்தனமாக அவளை ஏன் அடித்தோம் என்று தன்னையே திட்டிக் கொண்டான்.

ஆனால் அவள் தன்னையும் அஞ்சனாவையும் சேர்த்து வைத்து பேசியது சரியா என்று கேட்டு அவள் மீதும் கோபப்பட்டான். அவள் ஏதோ கோபத்தில்தான் அப்படி கேட்டுவிட்டாள் என்பது இவனுக்குமே புரிந்தது. ஆனால் இதற்கு காரணம் அபிநயாவின் முன்புத்திதான் என்று நம்பியவன் இன்னும் இரண்டு நாள் கழிந்த பிறகு அவளை சமாதானம் செய்யலாம் அப்போதுதான் இன்னொரு நாளைக்கு இப்படி எதையும் சொல்ல மாட்டாள் என்று சொல்லி தன்னையே சமாதானம் செய்து கொண்டான்.

அபிநயாவின் சிவந்த கன்னத்தையும் அழுத கண்களையும் கண்டு அன்புவின் மீது கோபம் கொண்டனர் அவளின் தோழிகள். இதற்கு முன்னால் நடந்த ஆயிரம் சண்டையிலும் கூட அவன் அபிநயாவை அடித்திருக்கிறான். ஆனால் அது அத்தனையிலும் அபிநயா எதிரியாக இருந்தே மோதியிருக்கிறாள். ஆனால் இப்போது காதலியாய் கரம் பிடித்தவளை அடித்தது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று நண்பன் மீது குணாவும் கோபம் கொண்டான்.

மதிய உணவு இடைவெளியின் போது அபிநயாவை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பினர் தோழிகள் இருவரும்.

"என்ன ஆச்சி.?" மாணவர்கள் யாரும் இல்லாத தனி வகுப்பறைக்கு வந்ததும் அபிநயாவிடம் கேட்டாள் மீனா.

"நேத்து நான்தான் அஞ்சனாவை திட்டினேன்னு சொல்லி அன்பு அடிச்சிட்டான்.." என்றவள் சுவற்றை வெறித்தாள். அவளின் கண்களில் இருந்து துளி துளியாக கண்ணீர் முத்துகள் கொட்டியது.

சுவேதா அவளை தன்னோடு கட்டிக் கொண்டாள். "அழாதே.. கோணக்காலன் காலை நாங்க இரண்டு பேரும் உடைச்சி வைக்கிறோம்.." என்றாள்.

"அவனுக்கு என் மேல ஒன் பர்செண்ட் கூட நம்பிக்கை இல்ல சுவேதா.. எவளோ ஒருத்தியை நம்புறான்.. ஆனா என்கிட்ட என்ன நடந்துச்சின்னு கூட கேட்கல.." என்றவளுக்கு துக்கத்தில் நெஞ்சம் வெடிப்பது போல இருந்தது. சுவேதாவின் கழுத்தை கட்டியபடி அழுது தீர்த்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN