சிக்கிமுக்கி 48

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
விடுதி அறையை யாரோ தட்டும் சத்தம் கேட்டு சென்று கதவை திறந்தான் குணா. "அன்புவோட போன் ரொம்ப நேரமா ரிங்காகுது. இதை அவன்கிட்ட கொடுத்துடு.." விடுதியின் வார்டன் கைபேசியை குணாவிடம் தந்துவிட்டு சென்றார்.

"புது நம்பரா இருக்குடா.." என்றபடியே வந்து நண்பனிடம் கைபேசியை தந்தான் குணா.

"ஹலோ.." அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான் அன்பு.

"நான் அஞ்சனா.." எதிர்முனையில் அஞ்சனா பேச ஆரம்பித்ததும் அன்புவின் முகத்தில் புன்னகை உதித்தது.

"அஞ்சனா நல்லாருக்கியா.?" என்றான். அவளாகவே அழைத்தது அன்புவிற்கு சந்தோசமாக இருந்தது.

"ம்.. உங்ககிட்ட பேசி ரொம்ப நாளாச்சேன்னு போன் பண்ணேன்.. ம்.. நீங்க எப்படி இருக்கிங்க.?" தயங்கி தயங்கி பேசினாள் அவள்.

"நல்லாருக்கேன்.. ஊருல அம்மா தாத்தா பாட்டி மாமா எல்லாம் எப்படி இருக்காங்க.?" என்று விசாரித்தவனிடம் "எல்லாம் நல்லா இருக்காங்க.. உங்ககிட்ட ஒரு ஹெல்ப் கேட்கலாம்ன்னுதான் போன் பண்ணேன். தப்பா எடுத்துக்காதிங்க.. அபியோட போன் நம்பர் சொல்றிங்களா.? அவங்க நம்பர் என்கிட்ட இல்ல.." என்றாள்.

"அ.. அபியோட நம்பரா.? எதுக்கு.?"

"லாஸ்டா ஒரு டாக்டர்கிட்ட கவுன்சிலிங் போனேன்.. பிரெண்ட்ஸ் கூட அடிக்கடி மனம் விட்டு பேசிட்டு இருந்தா சூஸைட் தாட்ஸோ.. செல்ப் ஹார்ம் தாட்ஸோ வராதுன்னு சொன்னாங்க.. எனக்கு கேர்ள்ஸ்ல அபி, மீனு, சுவேதாவை தவிர வேற யாரையும் தெரியாது.. அவங்களே நிறைய முறை கூப்பிட்டு பேசி இருக்காங்க.. நான்தான் எதுலேயும் கலந்துக்காம இருப்பேன். இனி என் லைப்காகவாவது நார்மலா பிகேவ் பண்ண டிரை பண்ணலாம்ன்னு இருக்கேன். அம்மா தினம் அழறாங்க. மனசுக்கு சங்கடமா இருக்கு. எனக்காக வாழுறவங்க அவங்க. அவங்களுக்காகவாது நானும் நல்லபடியா வாழ ஆசைப்படுறேன்.." என்றாள். இதை சொல்லி முடிக்கவே அவளுக்கு ஐந்து நிமிடங்களுக்கு மேலாகி விட்டது. அவனிடம் இதை சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கி தயங்கிதான் பேசிக் கொண்டிருந்தாள்.

அவள் கேட்டது அன்புவிற்கு ஆச்சரியத்தை தந்து விட்டது. அவளின் மாற்றம் பிடித்திருந்தது. ஆனால் அபிநயாவின் எண்ணை தரத்தான் தயக்கமாக இருந்தது. அபிநயா தன் மேல் உள்ள கோபத்தில் அவளிடம் சரியாக பேசாவிட்டால் என்ன செய்வது என்று கவலைப்பட்டான்.

"இரும்மா.. நான் பத்து நிமிசத்துக்குள்ள அவ நம்பரை சென்ட் பண்றேன்.." என்று போனை வைத்தவன் நண்பனை பார்த்தான்.

"அபிநயாவுக்கு போன் பண்ணி தரேன்.. நீ பேசுறியா அவளோட.?" என்றான்.

"ஏன்.?" எதிரே இருந்த கட்டிலில் அமர்ந்தபடி இவனை பார்த்து கேட்ட குணாவிற்கு தான் ஏன் அவளோடு பேச வேண்டும் என்று குழப்பமாக இருந்தது.

"அஞ்சனா அபி கூட பேச ஆசைப்படுறா.." என்றவன் அஞ்சனாவின் மாற்றம் பற்றி நண்பனிடம் விவரித்தான்.

"ஆனா அபிகிட்ட நான் என்ன பேசட்டும்.?" என்று கேட்ட குணாவிடம் அவன் பேச வேண்டியதை சொல்லினான் அன்பு.

"அபி உனக்கு போன் வந்திருக்கு.." அவளின் அறையை தாண்டி சென்ற சக மாணவி ஒருத்தி உள்ளே வந்து அவளிடம் போனை தந்துவிட்டு சென்றாள்.

"அப்பா பண்ணியிருப்பாரு.." என்றபடியே போனை பார்த்த அபிநயா "இவன் ஏன் எனக்கு போன் பண்ணியிருக்கான்.?" என்று கோபப்பட்டாள்.

"யாரு.?" என‌ கேட்ட மீனாவின் திசையில் போனை திருப்பி‌ காட்டினாள் அபிநயா.

"கோணக்காலன்.." என்று திரையில் இருந்த பெயரை படித்தவள் "அதானே.. இவன் ஏன் உனக்கு போன் பண்ணியிருக்கான்.? போனை கொடு. நான் பேசுறேன்.." என்று போனை வாங்கினாள் மீனா.

"ஹலோ.." என்றாள் கட்டை குரலில். அதே நேரத்தில் "அபி நான் குணா.." என்று எதிர் முனையிலிருந்து குரல் கேட்டது.

"நான் மீனா.." என்றாள் இவள்.

"மீனு.. நீதானா.?" என்றா பெருமூச்சு விட்டவன் "ஒரு சின்ன ஹெல்ப்.. அபிநயாகிட்ட கேட்க சொன்னான் அன்பு. மெஸேஜை அவகிட்ட பாஸ் பண்ணிடுறியா.?" என்றான்.

மீனா ஸ்பீக்கரை இயக்கினாள்.

"அஞ்சனா பிரெண்ட்ஸ் கூட பேசி பழகணும்ன்னு கவுன்சிலிங்ல டாக்டர் சொன்னாங்களாம்.. அவளுக்கு உங்களை தவிர வேற பிரெண்ட்ஸ் கிடையாது. உங்ககிட்ட பேசணும்ன்னு அபி நம்பர் கேட்டு அன்புவுக்கு போன் பண்ணா.. அன்பு உங்ககிட்ட கேட்டுட்டு நம்பர் தரதா சொல்லியிருக்கான்.." என்றவனை முறைத்தான் அன்பு. 'அவளோடு பேச முடியுமா முடியாதான்னு கேட்டு சொல்லுடான்னா இவன் என்ன தனி ரூட்ல பேசிட்டு இருக்கான்.?' என்று கோபப்பட்டான்.

அபிநயாவும் மீனாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அபிநயா சரியென கையை ஆட்டினாள். தோழியாய் நினைத்து நம்பி பேச முயற்சிப்பவளிடம் மறுத்து சொல்ல மனம் வரவில்லை அவளுக்கு.

"சரி கொடுங்க.. இல்லன்னா அவ நம்பரை சொல்லு.. நானே பண்ணி பேசுறேன்.." என்றாள் மீனா.

குணா நம்பரை சொன்னான்.

"என் மேல இருக்கற கோபத்துல அவளை ஏதாவது திட்டி வச்சிட போறா.." என்ற அன்புவின் மீது தலையணையை தூக்கி வீசிய குணா போன் இணைப்பை துண்டித்துக் கொண்ட பிறகு நிமிர்ந்து பார்த்தான்.

"உன்னை மாதிரி ஒருத்தனை நான் பார்த்ததே இல்ல. அபியும் மீனுவும் நல்லவங்கதான். ஆனா நீயும் அந்த அஞ்சனாவும்தான் சரி இல்ல.." என்றவன் போனை தூக்கி எதிர் கட்டிலின் மீது வீசிவிட்டு புத்தகத்தை கையில் எடுத்தான்.

அன்பு எழுந்து சென்று ஜன்னல் வழியே பார்த்தான். அபிநயாவின் அறை ஜன்னல் மூடியிருந்தது. அபிநயா அஞ்சனாவிடம் என்ன பேசுவாளோ என்ற யோசனை அவனை குழப்பியது. மன உறுதி இல்லாத பெண்ணை இவள் எதையாவது திட்டி வைத்து விடுவாளோ.. அதன் காரணமாக அவள் மீண்டும் தவறான முடிவுக்கு சென்று விடுவாளோ என்று பயமாக இருந்தது.

"அஞ்சனா நான் மீனு.." என்று மீனாதான் முதலில் அவளோடு பேச ஆரம்பித்தாள்.

"ம்.. ஹாய் மீனு.. நீங்க.. ம்.. நல்லா.. இருக்கிங்களா.. ம்..?" என்று இழுத்தாள் அஞ்சனா.

"நல்லாருக்கேன் அஞ்சு.. நீ என்ன பண்ற.?" என்றாள் மீனா.

"பாட்டி ஆட்டுக்குட்டியை கட்டி வைக்க சொன்னாங்க. ஆனா அது எங்கிட்ட இருந்து தப்பிச்சி போயிடுச்சி. நான் அதை தேடினேன் கிடைக்கல. அதை தேடிக்கிட்டே உன்னோடு பேசிட்டு இருக்கேன்." என்றாள்.

"ஆட்டுக்குட்டியெல்லாம் இருக்கா.?" என்ற மீனா அரை மணி நேரத்திற்கு அதையும் இதையும் பேசிவிட்டு போனை வைத்தாள்.

"நாளைக்கு நீ பேசுவ.." என்றாள் அபிநயாவிடம். அபிநயா சிரிப்போடு சரியென தலையசைத்தாள்.

மறுநாள் மீனாவும் அபிநயாவும் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே அவர்களின் அருகே வந்தான் அன்பு.

"அஞ்சனாகிட்ட பேசினிங்களா.?" என்றான் மீனாவிடம். அபிநயா தன் இருக்கையை நோக்கி அவனை கடந்து சென்றாள். அவளை ஓரக்கண்ணால் கவனித்தவனுக்கு தனக்கு பதில் சொல்லாமல் போகிறாளே என்று அபிநயா மீது கோபம் வந்தது.

"நான் பேசினேன். அரை மணி நேரம்தான் பேசினேன். அதுக்குள்ள அவ ஆட்டுக்குட்டியை கண்டுபிடிச்சிட்டான்னு போனை கட் பண்ணிட்டு போய்ட்டா.. இதை ஏன் நீ கேட்கற.?" என்றாள். அன்புவின் பின்னால் நின்றிருந்த குணா நண்பனை சுட்டிக்காட்டி பைத்தியம் என்று சைகை காட்டினான். மீனா பொங்கி வரும் சிரிப்பை அடக்கியபடி நகர்ந்தாள்.

"நான் ஏன்னா.." பதில் சொல்ல சொல்ல அதை கூட கேட்காமல் சென்றுவிட்ட மீனாவின் முதுகை முறைத்தான் அன்பு.

"பிரெண்ட்ஸ்குள்ள பேசிக்கறதையெல்லாம் நீ ஏன்டா கேட்கற.?" என்றான் குணா.

மாலை வேளையில் குணாவை தேடி வந்தான் ஜீவா. "அண்ணா உங்ககிட்ட பேசணும்.." என்றான்.

"அடேய் ஆர்வ கோளாறு.. என்கிட்ட என்ன பேச போற.?" என்று வியப்போடு கேட்டான் குணா.

"அன்பு அண்ணா சீனியரை இன்னும் மறக்கலதானே.? அப்புறம் ஏன் நீங்க அவங்களை சேர்த்து வைக்கல.." என்றான்.

"சேர்த்து வைக்க டிரை பண்ணோம். ஆனா அவங்கதான் எங்க பேச்சை கேட்கல.. அவங்க இரண்டு பேருமே ஒரு மாதிரி. நடுவுல யார் சிக்கினாலும் அவங்களைதான் இம்சை செய்வாங்க.. இப்ப கூட போய் அவன்கிட்ட அவளை பத்தி கேளு.. கெட்ட வார்த்தை மட்டும்தான் யூஸ் பண்ண மாட்டான். மத்த எல்லா அனிமல்ஸ் நேமையும் யூஸ் பண்ணி அபியை திட்டுவான். ஆனா அவனுக்கும் முன்னால நீயே அவளை திட்ட ஆரம்பிச்சா அவளை ஏன்டா திட்டுறன்னு கேட்டு உன் மூக்கை உடைச்சி விட்டுடுவான். அவக்கிட்டயும் இதேதான்.. நீ பத்திரமா தப்பிச்சி ஓடிடு.. அவங்ககிட்ட சிக்கிடாதே.." என்று அறிவுறுத்திவிட்டு நகர்ந்தான் குணா.

"வித்தியாசமானவங்கதான்.." என்று முணுமுணுத்த ஜீவா திரும்பி நடந்தபோது அன்புவும் அபிநயாவும் ஒருத்தரை ஒருத்தர் முறைத்தபடி கல்லூரியை விட்டு வெளியே நடந்துக் கொண்டிருந்தனர்.

அபிநயாவும் மீனாவும் தினமும் மாலை வேளைகளில் அஞ்சனாவோடு போனில் பேசினார்கள். மருத்துவரின் ஆலோசனைக்காகதான் இவர்களோடு பேச ஆரம்பித்தாள் அஞ்சனா. ஆனால் விரைவிலேயே சாதாரணமாக நட்போடு உரையாடும் அளவுக்கு நெருங்கி விட்டாள் அஞ்சனா. ஏற்கனவே இவர்களோடு பேசி பழகாமல் போனோமே என்று கவலைப்பட்டாள் அவள்.

மற்ற பெண்களை போல வாழவும் மகிழ்ந்திருக்கவும் ஆசைக்கொண்டவளுக்கு அபிநயாவும் மீனாவும் தங்களின் உதவிகளை அன்பான உரையாடல்கள் மூலம் செய்தனர். சுவேதாவும் வீட்டிற்கு வந்தபிறகு அஞ்சனாவிற்கு போன் செய்து பேசினாள்.

தினம் என்ன உண்பது, எதையெல்லாம் உடுத்துவது என்று சிறு பிள்ளைதனமான பேச்சுகள் கூட அவர்களின் நட்பை நெருக்கமாக்கியது.

"அபி உனக்கு ஒரு விசயம் சொல்லட்டா.?" என்று வெட்க குரலில் கேட்டாள் அஞ்சனா.

"சொல்லுப்பா.." என்றாள் இவள்.

"எ.. எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ண போறாங்க.." அஞ்சனா சொன்னதை அபிநயாவால் நம்பவே முடியவில்லை.

"ஹேய்.. என்ன சொல்ற.? நிஜமாவா.?" என்றவளிடம் "ஆமா.. இங்கே ஊர்லதான்.. நான் ஆட்டுக்குட்டிக்கு புல் அறுக்க போவேன். அங்கே அந்த காட்டு பக்கத்துல அவனோட வீடு.. என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லி மாமாகிட்ட கேட்டானாம். மாமா என்கிட்ட கேட்டாரு. எனக்கு தெரியல மாமான்னு நான் சொல்லிட்டேன்.. தினமும் என்னோடு பேசுவான். என்னை லவ் பண்றேன்னு சொல்லி ஓவரா வெட்கப்பட்டு பேசுவான்.. உங்ககிட்ட தினம் பேசி பேசி பேச பழகிட்டேனா. அதனால அவனோடவும் பேசினேன். பேச பேச அவனை பிடிச்சிருந்தது. பழகி பார்த்தேன். என்னை பத்தி சொன்னேன்.. அப்பவும் என்னை பிடிச்சிருப்பதா சொன்னான். நம்பிக்கை.. அவனோடு பேசும்போதும் பழகும்போதும் அந்த நம்பிக்கை மனசுல இருக்கு. அந்த நம்பிக்கையை நம்பி நானும் சரின்னு சொல்லிட்டேன். இப்போதைக்கு நிச்சயத்தார்த்தம்.. அப்புறமா கல்யாணம்ன்னு பேசியிருக்கோம்.. இன்னும் மூணு வாரத்துல நிச்சயதார்த்தம்.. நீயும் மீனுவும் கண்டிப்பா வரணும்.." என்றாள்.

அபிநயாவிற்கு அவளை நினைத்து சந்தோசமாக இருந்தது. இந்த நிச்சயதார்த்தமும் காதலும் அவளை இன்னும் உறுதிப்படுத்தும் என்று நம்பினாள்.

"கண்டிப்பா வரோம்.. நாங்க இல்லாம நிச்சயதார்த்தமா.? உங்க ஊரையே கலக்க போறோம் நாங்க.‌" என்று குதூகலத்தோடு சொன்ன அபிநயா போனை மீனாவிடமும் தந்தாள். விசயம் அறிந்து மீனாவிற்கும் சந்தோசமாக இருந்தது.

ஆனால் அன்புவிற்கு இந்த நிச்சயதார்த்தம் மகிழ்ச்சியை தரவில்லை. அஞ்சனாவை இன்னொருத்தன் புதிதாய் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் என்று நம்பினான் அவன்.

"அது எப்படி உன்னால அவனை நம்ப முடியுது.? விகேஷை போல இன்னொரு ஏமாத்துக்காரனைதான் நீ பிடிச்சிருப்ப. அவனும் விகேஷை போல ஏமாத்திட்டு போனா என்ன செய்வ.? இந்த உலகமே ஏமாத்துகாரர்களால் நிரப்பப்பட்டது. நீ ஏன் அதை மறந்துட்ட.? அதுக்குள்ள காதல்ல விழ உனக்கு எப்படி மனசு வந்தது.?" என்று போனிலேயே அவளை திட்டினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN