சிக்கிமுக்கி 59

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"கோபத்துல அப்படி சொல்லிட்டேன்.." என்று அன்பு வருத்தத்தோடு சொன்ன நேரத்தில் அபிநயா தூரமாக நடந்துக் கொண்டிருந்தாள்.

விடுதிக்கு வந்த பிறகு அன்பு தன்னிடம் சொல்லியதை பற்றி மீனாவிடம் சொன்னாள் அபிநயா.

"அவனுக்கு இது தேவைதான். ஆனா அவனை மறந்துட்டியா நீ.?" தன் சந்தேகத்தை கேட்டாள் மீனா.

அபிநயா பதில் பேசவில்லை.

"உன் மன கஷ்டம் எனக்கும் புரியுது அபி.. அவன் மேல இருக்கும் கோபம் தீர்ந்ததும் மறக்காம அவனோட லவ்வை ஏத்துக்கோ.." என்றாள் அவள். அபிநயா மௌனத்தை மட்டுமே கடை பிடித்தாள்.

அன்பு தன் விடுதி அறை ஜன்னலை திறந்து விட்டு அதன் எதிரே அமர்ந்து அபிநயாவின் விடுதியையே வெறித்தான். அவளுடைய கோபத்தை சரி செய்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

மறுநாள் அவன் கல்லூரிக்கு வந்தபோது அபிநயா தனது இருக்கையில் அமர்ந்துக் கொண்டிருந்தாள்.

"அபி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்‌‌.." என அவன் சொன்ன நேரத்தில் பேராசிரியர் ஒருவர் வகுப்பிற்கு வந்தார்.

அன்பு சென்று தன் இருக்கையில் அமர்ந்தான். வகுப்பு எப்போது முடியும் என்று காத்திருந்தான். வகுப்பு முடிந்ததும் நேராக எழுந்து அபிநயாவிடம்தான் வந்தான். "அபி.." என்றான்.

மீனாவும் சுவேதாவும் அபிநயாவை கடந்து வந்து அன்புவின் முன்னால் நின்றனர். "உனக்கு என்ன வேணும்.?" என்று கேட்டாள் மீனா.

"மீனு.. அவளோடு பேச வந்தேன் நான்.." என்றவனை கோபத்தோடு பார்த்தவள் "அன்னைக்கு நீ அவளோடு பேசியதே இன்னும் அவ மனசுல அழியாமதான் இருக்கு. நீ புதுசா சொல்ல எதுவும் இல்ல.." என்றாள்.

"நான் சாரி கேட்கறேன் மீனு.." என்றவனின் காலில் ஓங்கி மிதித்தாள் சுவேதா. அன்பு வலியோடு காலை தூக்கி கொண்டு அவளை குழப்பமாக பார்த்தான்.

"இப்ப இந்த மிதியை தந்துட்டு சாரி கேட்டா இது மறந்துடும். ஆனா அதே நான் ஒரு கத்தியை எடுத்துட்டு வந்து உன் நெஞ்சுலயே குத்தி உன்னை கொன்னுட்டு சாரி கேட்டா அது சரியா போகுமா.?" என்றாள்.

அவள் சொன்னதில் சிறிது கூட நியாயம் இல்லையென்றாலும் கூட தனது வார்த்தைகள் அபிநயாவின் நெஞ்சத்தை தாக்கியிருக்கிறது என்பதை மட்டும் புரிந்துக் கொண்டான்.

"அபி.. செகண்ட் சான்ஸ் தர மாட்டியா.?" என்றான் சோக குரலில்.

தன் இருக்கையிலிருந்து எழுந்த அபிநயா "சேர்ந்து வாழ்வோம்ன்னு நம்பிக்கை இருந்தா செகண்ட் சான்ஸ் தரலாம். ஆனா பிரிய போறவங்களுக்கு ஏன் சான்ஸ் தரணும்.? உன்னோடு கடைசி வரை லவ்ல இருப்பேன்னு நம்பிக்கை இல்ல அன்பு.." என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

சாரியோ சாரி மக்களே..🙏 எதிர்பாராத ஒரு வேலையால் எனக்கு இன்னைக்கு நேரம் இல்லாம போயிடுச்சி. இன்றைக்கு ஒருநாள் மட்டும் இந்த குட்டி யூடியை அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN