நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

கானல் - 6

im_dhanuu

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னைத் உறங்க வைக்கும் தலையனையும் நீதான்
தூக்கம் கலைத்து விடும் கனவுகளும் நீதான்
இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீதான்



இளமை நனையவரும் பூமழையும் நீதான்



வேர்க்க வைத்தாய் நீதான் நீதான்
விசிரி விட்டாய் நீதான் நீதான்
தேடி வந்தாய் நீதான் நீதான்



தேட வைத்தாய் நீதான் நீதான்




சில்லென்ற தென்றல் தன் மேனியைத் தழுவ கீழே கார்டனுக்கு வந்தவள் அவளுக்கு பிடித்த அந்த ரோஜாக்களின் அருகே அமர்ந்து கொண்டாள்.


தன்னை மறந்து அதன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளின் கண்கள் விரிந்தது அங்கு நடந்த நிகழ்வினைப் பார்த்து.


கிழக்கிலிருந்து வீசிய அந்த கொண்டல் காற்றில் இதழ்கள் நிறைந்த பூ தன் இதழை உதிர்க்கும் தருவாயில் அதன் அழகில் விழுந்த சிலந்தி தன் வலையால் அதனை அணைத்துக் கொள்ள அதனைக் கண்டு அழகாக சிரித்தது அந்த மஞ்சள் வண்ண ரோஜாப்பூ


என்னவொரு காதல் அந்த பூவின் மேல்...
காணுமெங்கிலும் காதலைக் காண்பவளுக்கு இதுவும் காதலாகத் தான் தெரிந்தது...
பெண்ணவளை இத்தனை நாள் உயிர்ப்புடன் வைத்திருப்பதும் அவள் அவன் மேல் கொண்ட காதல் தான்.


ஏனோ இன்று கண்ட நிகழ்வு மனதுக்கு இதமாக இருக்க அறைக்குச் சென்றவள் வான நிற அனார்க்களியில் நெற்றியில் சிறிய பொட்டு வைத்து அந்த மீன் போன்ற விழிகளுக்கு மை தீட்டி காற்றில் விரிந்த கூந்தலை சிறிய க்ளிப் போட்டு அடக்கி புன்னகை மயமாக வெளியே வர அவளைக் கண்ட தோழிகள் மயங்கி விழாத குறை தான்.


"அழகா இருக்க சாஹீ " என்ற மானுவிடம் ஒரு புன்னகையை பரிசாக தந்தவள் " கிளம்பலாமா" எனக் கேட்க
"இதோ வரேன்" என்றவளும் கிளம்பி வர கல்லூரிக்குப் புறப்பட்டனர்.


வகுப்பறையின் உள்ளே நுழைந்தவளை வரவேற்றது துருவ்வின் புன்னகை முகம் தான்.
(ஹாஹா...சத்தியமா அவன் சாஹீயைப் பார்த்து சிரிக்கல)


துருவ் ஏதோ பேசிக் கொண்டிருக்க அதை பூஷன் சுவாரசியமாக கவனித்துக் கொண்டிருந்தான்.


"இன்னைக்கும் அவன் கனவு காரிகை பத்தி தான் பேசிட்டு இருக்காங்க போல" என்ற மானுவிடம்
"இருக்கலாம் " என்பது போல சாஹீ தலையாட்ட


"அதுக்கு ஏன் பூஷனைத் தொந்தரவு பண்ணனும் பாரு அவன் நான் உள்ளே வந்ததிலிருந்து என்னைப் பார்க்கவே இல்லை" என்றவள் முகத்தை சுளித்து கோபமாக இருப்பது போல் பாவனை செய்ய


மானுவின் செயலில் சிரித்தவள் அவள் ஏதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்து "என்ன பண்ணலாம்னு இருக்க " என்று கேட்ட சாஹீயிடம்


"லவ் பண்ணலாம்னு இருக்கேன்" எனக் கூறிக் கண்ணடிக்க


அதிர்ச்சியில் கண்களை விரித்த சாஹீயின் கன்னத்தைப் பிடித்து கிள்ளியவள் அவள் கண்கள் கேட்ட கேள்விக்கு "ஆம்" என பதிலலித்தாள்.


" பண்ணுங்க பண்ணுங்க காசா பணமா"என்ற சாஹீயிடம் ஈஈ என்று பல்லைக் காட்ட


"முடியல" என்று மேசையின் மீது கவிழ்ந்த சாஹீ " ப்ராஜெக்ட்க்கு என்ன பண்ணலாம்னு இருக்கேனு கேட்டேன்" என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு கூறினாள்.


"ஹாஹா " என்று சிரித்தவள் அவள் அருகில் தலையை வைத்துக் கொண்டு அப்படியே திரும்பி பூஷனைப் பார்த்தாள்.


கன்னங்கள் ஒவ்வொன்றும் ஆப்பிள் போல் இருக்க அதில் விழும் குழியில் தான் புதைந்து விட மாட்டோமா என்பது போல் இருந்தது மானுவுக்கு...
கொழுகொழுவன்று இருக்கும் அவனைப் பார்த்தவளுக்கு வெள்ளை பூசணி நியாபகம் வர "நீ பூசணி மாதிரி இருக்கனால தான் உனக்கு பூஷன்னு நேம் வெச்சுருப்பாங்களோ?" என்று அவனைப் பார்த்துக் கொண்டே மானு யோசிக்க


தன்னை யாரோ பார்ப்பது போல் ஓர் உணர்வு தோன்ற திரும்பி பார்த்தவனின் விழிகள் விழுந்தது கண்களை சிமிட்டாமல் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் மானு தான்.


" இந்த லட்டு ஏன் நம்மளை இப்படி பார்க்குறா..." என்றவன் என்ன என்பதைப் போல் புருவம் உயர்த்த
அதில் சுயநினைவுக்கு வந்தவளுக்கு வெட்கம் வர கன்னங்கள் அவனின் ஆப்பிள் நிற கன்னங்கள் போல் ஆக


" ஒரு நிமிஷம் டா " என்று கிருஷ்ணாவிடம் கூறிவிட்டு
மானுவிடம் வந்தவன்


" என்ன மானுக்குட்டி உன் கன்னம்லாம் பிங்க்கா இருக்கு...இப்படி இருக்காதே எப்போவும் ஏதோ அலர்ஜி போல வா நம்ம ஹாஸ்பிட்டல் போகலாம்" என்றவனைக் கொலைவெறி கொண்டு முறைத்தவள்


" ரோஸ் பவுடர் அதிகமா போட்டுட்டேன் போதுமா...போ" என்றவள்
"ட்யூப் லைட் ட்யூப் லைட் " என்று முணுமுணுத்தாள்.


" என்னாச்சு மானுக்குட்டி ஏன் கோவப்படுற" என்றவன் முகத்தைக் கண்டவள்


" அய்யோ பூசணி இப்படி வைக்காத டா...உன் கன்னத்தை பிடிச்சு கிள்ளணும்போல இருக்கு " என்று மனதினுள் அவனைக் கொஞ்சியவள்


" ம்ம்...இங்கே என்ன வேலை போ போ" என்றவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு சிரித்தாள்.


" இந்த லட்டுக்கு என்னாச்சு...நம்மளையே பார்த்துட்டு இருந்தா...அவ கன்னம் பிங்க்கா இருந்துச்சுனு தானே நான் கேட்டேன்.
ஏதாவது அலர்ஜி வந்தா அவ தானே பாவம்...கேட்ட பாவத்துக்கு என்னையே திட்டுறா போடி " என்று திட்டிக் கொண்டே சென்றவன்
மறுபடியும் வந்து அவள் முன்னால் நிற்க " என்ன" என்று கேட்டவள் கையை பிடித்தவன் வெளியே இழுத்துக் கொண்டு போனான்.


"கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான்
காதல் என் காதல் பூபூகுதம்மா " என்று மானுவின் மனசாட்சி பாட அய்யோ இவன் வெள்ளையா இருக்கானே என்று மானு கூற ஆமால
"வெள்ளையான கைய்யாலே என்னை புடிச்சான்
காதல் என் காதல் பூபூகுதம்மா " என்று மறுபடியும் மனசாட்சி பாட "ச்சி ச்சி நல்லாவே இல்லை " என்றவள் மனசாட்சியை கண்டுகொள்ளாமல்
அவன் பிடித்திருக்கும் கைகளையேப் பார்த்திருந்தாள்.


அவன் பிடித்த அந்த கைக்கு வலிக்குமோ என்பது போல் மென்மையாக பிடித்திருந்தான்.
அவனை நிறுத்தியவள் முறைத்துக் கொண்டே அவன் பிடித்திருக்கும் கைகளை காமிக்க அவளைப் பார்த்து புன்னகைத்தவன்
"லட்டு கொஞ்சமே கொஞ்சம் என்னை லவ் பண்ணேன் ப்ளீஸ் " எனக் கேட்க


அதில் தன் மேனி முழுவதும் சிலிர்ப்பதை உணர்ந்தவள் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மறுபடியும் முறைத்தாள்.


"மானுக்குட்டி உனக்கு ஏதோ அலர்ஜி தான் போல பாரு மறுபடியும் கன்னம் பிங்க் கலர்ல ஆயிடுச்சு...." என்றவனை என்ன செய்யலாம் என்பது போல் பார்த்திருக்க


மானுவைக் காணாது தேடிய சாஹீ அவர்களில் அருகில் வர
"சாஹீ இங்கே பாரேன் மானுவோட முகத்தை...ஏதோ அலர்ஜி போல " என்றவனைக் கண்டு சத்தமாக சிரித்தவள்


" சத்தியமா உனக்கு லவ் செட் ஆகாது அவ வெட்கப்படுறானு கூட கண்டுபிடிக்க முடியல உன்னெல்லாம்" என்ற சாஹீ


"டி மானு இவனை நல்ல டியூசனா பார்த்து சேத்தி விடு " எனக் கூறிச் சிரித்துக் கொண்டே சென்றுவிட
பூஷன் பாவமாக மானுவைப் பார்க்க மானு அவனை ஏகத்துக்கும் முறைத்தாள்.


இப்போதும் அவள் தன்னால் தான் வெட்கப்பட்டாள் என்பதை உணராமல்
" நீ ஏன் மானுக்குட்டி வெட்கப்பட்ட" என்று கேட்டவனை இப்போது பாவமாக பார்ப்பது மானுவின் முறையாயிற்று.


" லட்டு...லட்டு...லட்டு....லவ் யூ" என பூஷன் கூற


இதுவரை அவனுக்குத் தன்னைப் பிடிக்கும் காதலிக்கிறான் என அவன் செயல்களில் கண்டுகொண்டவள் அவனின் இந்த வார்த்தையில் இதயத்துடிப்பு அதிகமாக அதை கட்டுப்படுத்த வழி அறியாமல் அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க


"லவ் யூ டி லட்டு"


" ஸ்ஸ் " என்று அவன் வாய் மேல் கை வைத்தவள் சுற்றி முற்றி பார்க்க


அவள் கைகளை விலக்கியவன் மறுபடியும் "லவ் யூ டி லட்டு" என்று கூற


"வேற ஏதாச்சும் சொல்லேன்..." என அவள் ஒருவித தவிப்பில் கூற
என்ன சொல்லலாம் என்று யோசித்தவன் சிரித்தவாறே " லட்டு ஐ லவ் யூ" எனக் கூற அவனின் இந்த செயலில் சிரித்தவள் அவன் கன்னங்களை பிடித்து கிள்ளி
"அய்யோ என் செல்ல பூசணி " எனக் கொஞ்சி விட்டு ஓடிவிட்டாள்.


"ம்ம்ம்க்கும் இவளுக்கு நம்ம மேல லவ்வே வராது போல" என்றவன் சோகமாக அங்கே இருக்கும் பென்ச்சில் அமர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்( நிஜமா சொல்றேன் நீ கடைசி வர சிங்கிள் தான் டா)


தன் அருகில் வந்த மானுவைக் கண்டு சிரித்த சாஹீ "ம்ம்ம் கலக்குங்க மானுக்குட்டி" எனக் கூற


போடி என்றவள் "உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை...ப்ராஜெக்ட் பத்தி பேசாம ஆளு கூட மொக்கை போட்டுட்டி இருக்க நீ" என்று மானு சாஹீயைப் பார்த்து கேட்க


"யாரு நானு " என்ற சாஹீ மானுவை முறைக்க


ஈஈஈஈ என்று பல்லைக் காட்டியவள் "நீயே தான் " எனக் கூறி "சரி வா வா நம்ம ப்ராஜெக்ட் பத்தி பேசலாம்" என்று மானு கூற அதை பற்றி யோசிக்க ஆரம்பித்தனர்.


அவர்களுக்கு தோன்றும் எண்ணத்தைக் கூறிக் கொண்டே இருக்க " இது ரிஜெக்டட்" "இது நல்லா இல்ல" என மாற்றி மாற்றி கூறிக் கொண்டிருந்தவர்கள் தலையில் கை வைத்து என்ன செய்வது எனத் தெரியாமல் அமர்ந்திருக்க
உடனே சாஹீ மானுவைப் பார்த்து சிரித்தாள்.


" என்னாச்சு டி ஏன் லூசு மாதிரி சிரிக்கிற " என்ற மானுவைக் கண்டுகொள்ளாமல் "வெயிட்" என்றவள் பூஷனுக்கு அழைப்பு விடுத்தாள்.


"பூஷ் எனக்கு எந்த ஐடியாவும் இல்லை...நான் துருவ் கிட்ட கேட்கவா?"
என்றவளைக் கண்டு சிரித்தவன்


"உனக்கு தான் அவன் கிட்ட பேசுனாலே காற்று தான் வரும் வாய்ல...நீ பேச போற...அது சரி" என்ற பூஷனிடம்


" பேசுறேன் பேசிக் காட்டுறேன் " என்றவளிடம்
"என்கிட்ட மட்டும் வாய் கிழிய பேசுவ அவன் கிட்ட கோட்டை விட்டுருவ " என்றவனிடம் அதற்கு மேல் பேசாமல் கட் செய்தவள் துருவைத் தேடிச் சென்றாள்....


"டேய் பூஷ்....நம்ம போற இடத்துக்கு மோகன் வேணாம் டா...நம்ம உயிருக்கே உத்திரவாதம் இல்லை..நீயே வேணாம்னு தான் சொல்லலாம்னு இருந்தேன்" என்ற கிருஷ்ணாவை பார்த்து பூஷன் முறைக்க


" சரி சரி....நம்ம போலாம் அவன் வேணாம் " எனக் கூறிக் கொண்டு இருந்தவன் பூஷன் பார்வை எங்கோ இருப்பதை உணர்ந்தவன் திரும்பிப் பார்க்க அங்கே சாஹீ கைகளை பிசைந்தவாறு நின்றிருந்தாள்.


அவளைக் கண்டுகொள்ளாமல் பூஷனிடம் பேச ஆரம்பிக்க
"துருவ் " என்று அவள் அழைப்பதைக் கேட்டவன் கடுப்பாகி " என்ன " என்றுக் கேட்க


"அது....அது " என்றவள் அவன் கண்களைப் பார்க்க அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை...
சாதரணமாகவே பேசுவதற்கு யோசிப்பவள் இன்று தமிழே தெரியாத பேதைப் போல் திருத்திருவென முழிக்க


"இப்போ என்ன வேணும் உனக்கு" என்றவனின் குரலில் தெரிந்த எரிச்சலில்


" ப்ராஜெக்ட்க்கு ஏதாச்சும் ஐடியா தரியா...ஒன்னும் தோணல " என்று திக்கித்திணறிக் கூறி முடிக்க


"ஆமா எனக்கு வேற வேலை இல்ல பாரு கண்ணு முன்னாடி நிக்காத...உனக்கு யாரு முதல்ல நான் இருக்க இடத்தை சொன்னது " என்றவன் திரும்பி பூஷனை பார்க்க
அவன் வராத அழைப்பை வந்தது போல் காதில் மொபைலை வைத்துக் கொண்டு ஹலோ ஹலோ என்க
அவனின் செயலில் பல்லைக் கடித்தவன்


" நீ இன்னும் போகலயா" எனக் கத்தியவன் திரும்பிக் கொண்டான்.


ஒரு சிலர் அவளைப் பார்த்து சிரிக்க
அனைவரின் முன்பும் அவமானப்பட்டு வேறு வழியில்லாமல் கண்கள் கலங்கிய நிலையில் திரும்பியவள் நடக்க ஆரம்பிக்க


"எப்போ நீ என்னை பாப்பா
எப்போ என் பேச்ச கேப்பா
எப்போ நான் பேச
கெட்ட பையா
எப்போடா கோவம் கொறையும்
எப்போடா பாசம் தெரியும்
எப்போ நான் பேச
கெட்ட பையா " என்ற பாடல் அருகில் ஒலிக்க


அதைக் கேட்டு புன்முறுவல் செய்தவள்
"இந்த மானம்கெட்ட மனசு இருக்கே ஏன் தான் இப்படி அவனை மட்டும் நினைக்குதோ...எவ்ளோ அசிங்கம் பட்டாலும் மீசைல மண் ஒட்டலங்கிற மாதிரி சிரிக்கிறியே சாஹீ...யு ஆர் க்ரேட் " என்று காலர் இல்லாத சுடிதாரை தூக்கி தன்னைத் தானே புகழ்ந்து கொண்டவள் அவனின் நினைவுகளை சுமந்து கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்தாள்.


மென்டர் எவ்வளவு கூறியும் அதை சிறிதும் கண்டுகொள்ளாமல் "நாங்க அந்த ப்ராஜெக்ட் தான் செய்வோம் அந்த இடத்துக்கு போகத்தான் போகிறோம்" என்றவர்கள் நாளை மாலை கிளம்புவதாக கூற அவர்கள் மென்டர் எவ்வளவு தடுத்தும் அதை கேட்டபாடில்லை.


இனி வாழ்க்கையை விதியின் கைகளில் ஒப்படைத்தவர்கள் அடுத்து தங்களுக்கு பிடித்த டீ கடை, பேருந்து நிறுத்தம், கோவில் , புறாக்கள் என
தங்களின் நேரத்தை செலவிட்டு ஒரு வித பதட்டத்துடன் இரவின் பிடியில் தங்களை ஒப்படைத்தனர்.


அந்த காலைப் பொழுது அழகாக விடிய அது இனிமேல் அழகாக இருக்குமா என்பது சந்தேகம் தான்.


மறுபடியும் புறாக்களிடம் சென்று அமரந்தவன் அவற்றையே ஒரு வித ஏக்கத்துடன் பார்த்து விட்டு தன் மடிக்கணினியை உயிர்ப்பித்தான்.


அந்த இடத்தைப் பற்றி மேலும் அறிந்து கொண்டவன் எல்லத்தையும் பேக் செய்து விட்டு பூஜையறைக்கு சென்றவன் " எனக்கு என்ன ஆனாலும் பரவால...பூஷ், மோகனுக்கு ஒன்னும் ஆகிட கூடாது" என்று வேண்டியவன் " தன் காரிகையைக் காணப் போகிறோம் என்று ஒரு சந்தோஷத்துடன் கல்லூரிக்குச் சென்றான்.


இப்போதும் மென்டர் வேணாம் எனக் கூற அதைக் கேட்காமல் அவரை நோக்கி ஒரு புன்னகையை சிந்தியவன் மோகனுக்காக காத்திருக்க அவனை நோக்கி வந்ததோ சாஹீதா.


கண்கள் விரிய அவளைப் பார்த்தவன் தன் அனல் கக்கும் பார்வையை பூஷனிடம் செலுத்த
"உன் கனவு பன்னி...ச்ச ச்ச உன் கனவு கன்னியை அவளும் பார்க்கணுமாம் " என்றவன் தன் கன்னங்களை பிடித்துக் கொண்டான்.(பின்ன யாரு அடி வாங்குவா அவன் கிட்ட)


உனக்கு துணையா நான் வருவேன் துருவ் நீ எனக்கு ரொம்ப முக்கியம்...ஆபத்துனு தெரிஞ்சே உன்னை நான் அங்கே தனியாக அனுப்ப மாட்டேன் என்று மனதில் நினைத்தவள் அவனைக் கண்டு கொள்ளாமல் திரும்பி நின்று கொண்டாள்.
அவன் இருக்கும் கோபத்திற்கு அடித்தாலும் அடித்து விடுவான்.
(ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைத் தான்)


காதல் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு இதுதான் உதாரணம்.
காதலுக்காக காதலியை காண்பதற்காக எதற்கும் துணிந்துவிட்டான்.


ஆம் அவனின் காதல் இப்போது அவனை அழைத்துச் செல்கிறது சாத்தானின் முக்கோணம் என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்திற்குள்...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Attachments

  • IMG-20200622-WA0063.jpg
    IMG-20200622-WA0063.jpg
    494.8 KB · Views: 6

Author: im_dhanuu
Article Title: கானல் - 6
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Note:DONT NOT POST YOUR STORY HERE,ONLY COMMENTS SHOULD BE POST HERE

Sri Ram

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Ayooo eruma dhruv alien lam vendam ...Saahi irruka unaku...booshan yen da ipdi tube light uhh irruka
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top