முன்னுரை

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Polish_20210328_143858513.jpg


ஓர் ஆன்மாவின் குறிப்பேடு என்ற எனது புது நாவலுக்கான முன் அறிவிப்பு நட்புக்களே..

ஆன்மா ஒன்றின் தேடல் இது.. யாருடைய ஆன்மா அது என்பது எனது தேடல்.. வாருங்கள் அதன் குறிப்பேட்டை அவ்வப்போது படித்துப்பார்த்து நாமும் கண்டறியலாம்.

நான் இந்த போரை விரும்பவில்லை. நான் யாரின் இறப்பையும் வரவேற்கவில்லை. எனது தேடல் சாந்தவி மட்டும்தான்.

அவளுக்காக நான் எது வேண்டுமானாலும் செய்வேன்.. அவளுக்காய் இந்த சாம்ராஜ்ஜியத்தை கூட விட்டு தருவேன். அவள் விரும்பினால் இந்த சாம்ராஜ்ஜியத்தில் உள்ள ஒவ்வொரு தூணிலும் அவளின் உருவத்தை சிற்பமாக வடிப்பேன். அவளின் காலை நெருடும் மணலையும் அள்ளி எறிந்துவிட்டு பளிங்கு கற்களில் பாதை அமைப்பேன். அவளுக்காய்தான் இந்த சாம்ராஜ்‌ஜியத்தில் பூக்கள் பூக்கின்றன. அவளுக்காகதான் இந்த சாம்ராஜ்ஜியத்தில் நிலவு உதிக்கிறது. இதை நீங்கள் நம்பாமல் போகலாம். ஆனால் அது உண்மை. அவள்தான் என் உலகம். அவள்தான் என் வாழ்க்கை. அவளின் கண் அசைவிற்காக ஆண்டாண்டு காலமாக காத்திருந்தேன். ஆனால்..

என் உயிர் என் மடியில் படுத்த வண்ணம் தன் உயிரை விட்டுக் கொண்டிருந்தது. ஆம். என் கண்மணி சாந்தவி கொஞ்சம் கொஞ்சமாக இறந்துக் கொண்டிருந்தாள். அவளின் உயிரை பிடித்து வைக்கும் சக்தி இந்த சாம்ராஜ்ஜியத்தில் யாருக்குமே இல்லை என்ற உண்மை அறிந்து கதறிக் கொண்டிருக்கிறேன் நான்.

"சாந்தவி என்னை விட்டு போகாதே.." என்று அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தேன். அவள் சிரித்தாள். அவளின் கடைசி சிரிப்பு. நிம்மதி கலந்த ஆனந்த சிரிப்பு.

"உங்களை போன்ற ஒரு கொடுங்கோலரிடம் இருந்து தப்பிக்க எனக்கு இப்போதுதான் வாய்ப்பு கிடைத்துள்ளது.. உங்களின் தொல்லை இனி இல்லை என நினைக்கையில் மகிழ்கிறேன்.." என்று சொன்னவளின் வார்த்தைகளை நான் துளியும் நம்பவில்லை. அவள் என்னை நிச்சயம் நேசிப்பாள். இன்று இல்லாவிட்டால் என்ன.. நாளையோ நாளைய மறுநாளோ நிச்சயம் நேசிப்பாள்.

"சாந்தவி‌‌.." என்றேன் கண்ணீரோடு. ஆனால் நாளைய நாளிலாவது நான் அவளின் மனம் மாற்ற அவள் இல்லை. இறந்துக் கொண்டிருந்தாள். என் மடியிலேயே இறந்தும் விட்டிருந்தாள்.

"சாந்தவி.." என நான் கதறிக் கொண்டேயிருந்தேன்.

என் சாம்ராஜ்ஜியத்தை தொலைத்துவிட்டேன் நான். சாந்தவி இல்லாத நாடு எனக்கு வேண்டாம். சாந்தவி இல்லா வாழ்வும் எனக்கு வேண்டாம். ஆனால்.. சாந்தவி வேண்டும் எனக்கு. அதற்காக எது வேண்டுமானாலும் செய்வேன் நான்.. ஆமாம் இந்த சாம்ராஜ்ஜியத்தையே அழித்தாயினும் சாந்தவியை அடைவேன் நான்‌...

புதுசா ஒரு ஹாரர்‌ நாவல் நட்புக்களே.. மூன்று வருடங்களுக்கு முன்னால் ஒருமுறை நாற்பது பக்கங்கள் எழுதி கவனமின்றி தீயில் இட்ட கதை. மீண்டும் ஆரம்பித்து இருக்கிறேன்.. கதை எப்போது வரும்ன்னு எனக்கும் தெரியாது. ஆனா நிச்சயம் சிக்கிமுக்கி முடிந்ததும் தொடங்கி விடுவேன்..
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN