சிக்கிமுக்கி 66

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்புவின் கையில் ரேகைகள் அழிந்து விட்டது. ஆனாலும் காதல் ரேகை மட்டும் அவன் மனதில் தெளிவாகவே இருந்தது.

அபிநயாவும் ஆனந்தியும் அவனை பார்க்க சென்றபோது அவன் வீட்டிலிருந்தோர் இவர்களை வரவேற்றார்கள். அன்பு தன் அறையில் இருந்த கட்டிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். ஆனந்தி அவனின் நலம் விசாரித்துவிட்டு அந்த அறையை விட்டு கிளம்பினாள்.

அபிநயா அன்புவிடம் நன்றிகள் சொன்னாள். "என் சொத்தை நான் காப்பாத்தினேன். இதுக்கு நீ ஏன் தேங்க்ஸ் சொல்ற.?" என்று சினிமா வசனம் பேசினான் அவன். அர்ச்சனா அதே நேரத்தில் அபிநயாவுக்கு காப்பியை கொண்டு வந்தாள். அன்பு சொன்னது கேட்டு தொண்டையை செருமினாள். அன்பு சட்டென்று எழுந்து அமர்ந்தான்.

அம்மா காப்பி கோப்பையை அபிநயாவிடம் தந்தாள். அபிநயா தயக்கமாக கோப்பையை கையில் எடுத்தாள். அர்ச்சனா தன் மகனை கேலியாக பார்த்துவிட்டு வெளியே நடந்தாள். அபிநயா மட்டும் அங்கே இல்லாமல் இருந்திருந்தால் குலுங்கி குலுங்கி சிரித்திருப்பாள் அவள்.

"காப்பி எப்படியிருக்கு.?" என்றான் அன்பு.

"நல்லாருக்கு.." என்றவளின் கையை பற்றினான். "நான் வந்து பொண்ணு கேட்டா இப்ப உங்க அப்பா கட்டி தருவாரா.?" என்று கேட்டான் நம்பிக்கையோடு.

அபிநயா மறுப்பாக தலையசைத்தாள். "கண்டிப்பா மாட்டாரு.. அவரோட பொண்ணை கட்டணும்ன்னா அதுக்குன்னு பல தகுதிகள் இருக்குப்பா.. காலேஜ் பையனுக்கு பொண்ணு கேட்டா யார்தான் தருவாங்க. படிச்சி முடிச்சி வேலைக்கு போகணும். அப்பவும் நீ வந்து கேட்டா தர மாட்டாரு. உன் பேரண்ட்ஸ் வந்துதான் கேட்கணும். அதுவும் இல்லாம தன் பொண்ணுக்கு நிகரான அழகும் அறிவும் இருக்கற பையனுக்குதான் பொண்ணை கட்டி தரணும்ன்னுதான் எல்லா அப்பாவும் ஆசைப்படுவாங்க. அந்த விசயத்துலதான் எங்க அப்பா அட்ஜஸ்ட் பண்ணனும் போல.." என்றாள்.

அன்பு பொத்தென்று தலையணையின் மீது சாய்ந்தான். "இதுக்கு நீ எனக்கு விஷம் தந்திருக்கலாம்.. குட்ட கத்திரிக்கா. மங்குனி மட சாம்பிராணி. நீயெல்லாம் அழகை பத்தியோ அறிவை பத்தியோ பேசலாமா.?" என்றான் கேலியாக.

"அழகு உயரத்துல இல்ல. அறிவு நீ வாங்குற பர்சண்டேஜ்ல இல்ல.." என்று உதட்டை சுழித்தவளை இடது கையால் அருகில் இழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் அவனருகே வந்து விழுந்தாள் அபிநயா. "ஏன்டா கோணக்காலா.?" என்றவளிடம் "அதே போலதான் அழகும் அறிவும் உன்கிட்ட இல்ல. அந்த நினைப்பு உனக்கு இருந்தா அதை மறந்துடு. அழகா இருக்கோம்ன்னோ அறிவா இருக்கோம்ன்னோ பொய்யான கர்வத்துல இருக்காத.." என்றான். அபிநயா அதற்கும் உதட்டை சுழித்தாள். அன்பு கண்களை மூடி பெருமூச்சு விட்டான். பின்னர் சட்டென்று அவளின் உதட்டில் முத்தம் தந்தான்.

அபிநயாவின் முகம் மாறி போனது. அன்புவின் காலில் ஓங்கி உதைத்தவள் அவனை தள்ளி விட்டுவிட்டு எழுந்து நின்றாள். "எவ்வளவு சொன்னாலும் உனக்கு புத்தியே வராது இல்லையா.? இனி எப்பவும் என் கூட பேசாதே.." எரிந்து விழுந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அன்பு தன் உதைப்பட்ட காலை நீவிக் கொண்டே எழுந்து நின்றான். "இவ ஒருத்தி.." புலம்பலாக காலை உதறிக் கொண்டான்.

அதன் பிறகு வந்து நாட்களில் இரண்டு குடும்பங்களும் ஓரிரு வார்த்தைகளில் பேச ஆரம்பித்து விரைவில் கதை கதைக்கும் அளவுக்கு நெருங்கியது. ஆனந்திக்கு காய்ச்சல் வந்த நாட்களில் அர்ச்சனா வந்து இங்கே சமையல் செய்து தந்து விட்டு போனாள். அர்ச்சனாவும் ஆறுமுகமும் வெளியூர் சென்ற நாட்களில் பாட்டிக்கு இந்த வீட்டிலிருந்து உணவு சென்றது.

அபிநயாவும் அன்புவும் கல்லூரியிலும் ஊடலாகவே இருந்தனர். "ஒரு முத்தம் தந்தது குத்தமா.?" என்று அவளை பார்க்கும்போதெல்லாம் புலம்பினான் அன்பு.

வார இறுதி நாட்களில் அன்புவை அழைத்து செல்ல வந்த ஆறுமுகம் அபிநயாவை தன்னோடு அழைத்துச் சென்றார். "இவ்வளவு நாளா நான் உட்கார்ந்து போன இடம்.. இன்னைக்கு இவளை கூட்டி போறாங்க.‌." என்று குணா வருந்தினான்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக சென்றது. பாடத்தில் சந்தேகம் கேட்க மட்டும் அன்புவின் அருகே வந்தாள் அபிநயா. அவனோடு சண்டை போட காரணம் கிடைக்க கூடாது என்று கவனமாக இருந்தாள் அவள்‌. அதற்காகவே விலகி இருந்தாள்.

அவளின் காரணம் புரிந்து இருந்தாலும் கூட அவளின் பின்னால் சுற்றிக் கொண்டுதான் இருந்தான் அன்பு. அவள் விலகி இருக்கையில் தானும் விலகி இருந்தால் காதலில் விரிசல் வந்து விடுமோ என்று பயந்தான் அவன்.

மாதங்கள் சென்றது. அன்புவும் அபிநயாவும் முதுகலைக்கு சந்தனக்கொடிக்காலில் சேர்ந்து படித்தனர். குணா மீனாவோடு இருக்க வேண்டும் என்று அதே கல்லூரியில் சேர்ந்துக் கொண்டான்.

கல்லூரி காதலர்கள் என்று கல்லூரிக்கு வெளியிலேயும் அன்புவை பற்றியும் அபிநயாவை பற்றியும் பலர் தெரிந்து வைத்திருந்தனர். இருவரும் அன்னியோன்யமாக சேர்ந்து சுற்றாததால் அவர்களின் காதல் வினோத்திற்கு உறுத்தலை தரவில்லை.

இரண்டு ஆண்டுகள் சென்ற மாயமே தெரியவில்லை இருவருக்கும். படித்து முடித்து வந்தவர்களுக்கு வீட்டில் இருந்தவர்கள் ஆரத்தி சுற்றினார்கள்.

சுவேதாவிற்கு படிப்பு போதும் என்று சொல்லி அவளை சஞ்சய்க்கே திருமணம் செய்து வைத்தார்கள். உடன் இருந்தவர்கள் அவர்களுடையது அரேஞ்ச் மேரேஜ் என்று கடைசி வரையிலும் பேசிக் கொண்டார்கள்.

குணா தன் வீட்டில் மீனாவை பற்றி சொன்னான். அவளின் வீட்டில் உடனே ஒத்துக்கொள்ளவில்லை. அவளின் தந்தையின் மனம் மாறும்வரை காதலித்து கொண்டிருக்கலாம் என்று சொல்லி குணாவும் மீனாவும் தங்களின் காதலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.

அன்புவும் அபிநயாவும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்கள். அன்பு வேலைக்கு சென்றபடியே ஆராய்ச்சி படிப்பை தொடர்ந்தான். அபிநயாவும் மீனாவும் ஒன்றாய் இணைந்து கெமிக்கல் இல்லாத அழகு சாதன பொருட்கள் தயாரிக்க முயன்றுக் கொண்டிருந்தார்கள். அன்புவும் அவ்வப்போது அவர்களுக்கு உதவி செய்தான்.

ஒன்றாய் பணி புரிந்த ஒரு நாளில் ஆசையின் மிகுதியில் காதலிக்கு முத்தமிட்டான் அன்பு. அவள் அன்றைய நாள் வரையிலுமே தனது கட்டுப்பாட்டை உடைக்கவில்லை. முத்தம் தந்தவனின் மூக்கின் மீதே குத்து விட்டாள். அன்புவிற்கு கோபம் அதிகமாகி விட்டது. அதே கோபத்தில் சென்று தன் வீட்டில் பேசி அபிநயாவை பெண் கேட்டு சென்றான்.

ஊரே அறிந்த காதலுக்கு நாம் என்ன தடை போடுவது என்று எண்ணிய வினோத் அழைப்பிதழை அச்சடிக்க தகவல் சொன்னார்.

அவர்களின் திருமணத்திற்கு நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் வந்து கலந்துக் கொண்டார்கள்.

முறைத்துக் கொண்டே அபிநயாவும் அன்புவும் மணமேடை ஏறினர். பெரியோர்களின் ஆசிர்வாதத்தோடு அபிநயாவின் கழுத்தில் தாலி கட்டினான் அன்பு.

அஞ்சனாவும் பன்னீரும் திருமணம் முடிந்த மாலையில் ஊருக்கு கிளம்பி சென்றனர். மீனாவின் அப்பா திருமண வீட்டிலும் குணாவை முறைத்தபடியே இருந்தார். ஆனால் அதை குணாவும் மீனாவும்தான் கண்டுக்கொள்ளவில்லை.

மாமன் மகளை விரும்புவதாக தன் சீனியரிடம் சொல்லி வெட்கப்பட்டான் ஜீவா. அவனும் வளர்ந்து விட்டதாக தோழிகளிடம் சொன்னாள் ஸ்வேதா.

ஆக மொத்தம் அனைவரும் நலம். கதை சுபம்தான். ஆனால் சில வருடங்களுக்கு பிறகு..

"நான் என்ன செய்யணும்ன்னு நீ சொல்லாதே.." என்று படுக்கையறையின் சுவரில் எதிரொலிக்கும் அளவுக்கு கத்தினாள் அபிநயா.

"நீ என் பொண்டாட்டி.. நான் சொல்வேன்.. உன் வீட்டுல இப்படிதான் உனக்கு சொல்லி கொடுத்து வளர்த்தாங்களா.?" என அன்புவும் அவளுக்கு சமமாக கத்தினான்.

"என் வீட்டை பத்தி பேச நீ யாரு.?" என கேட்டபடி அவனின் முகத்தில் குத்தினாள் அபிநயா. அன்பு கோபத்தில் ஒரு அறை விட்டான். அவள் பதிலுக்கு ஒரு உதை விட்டாள்.

"குழந்தைங்க எழுந்துட போகுது.. கொஞ்சம் நேரம் அமைதியா இருந்து தொலைய மாட்டிங்களா.?" என்று ஹாலில் இருந்து கத்தினாள் அர்ச்சனா.

"இப்ப கூட உங்களுக்கு உங்க பேர புள்ளைங்கதான் முக்கியம். நான் இல்ல.." என்று கத்திய அன்புவின் முதுகில் அறைந்தாள் அபிநயா.

"உனக்கு திட்டணும்ன்னா நேரா என்னை திட்டு. ஏன் அனாவசியமா அத்தையை திட்டுற.?" என கேட்டாள்.

"உன் கூட மனுசன் வாழுவானாடி.?" என கேட்டவன் அவளை தன்னிடமிருந்து தூர தள்ளினான்.

"மனுசன் வாழ முடியாது. அதனாலதான் நீ வாழ்ந்துட்டு இருக்க.." என்றவள் தன்னை தாண்டி சென்றவனின் காலை தட்டி கீழே விழ வைத்தாள்.

அன்பு பொத்தேன்று கீழே விழுந்தான். மூக்கு உடனடியாக சிவந்து போனது.

அவன் அபிநயாவிடம் திரும்பி வந்தான்‌. அவளின் தலை முடியை அவன் பற்றிய அதே நேரத்தில் அவளும் அவனின் தலைமுடியை பற்றி விட்டாள். இருவரும் தலைமுடியை பிய்த்துக் கொள்ள இருந்த நேரத்தில் அவர்களின் அறை கதவை ஓங்கி தட்டினார் ஆறுமுகம்.

"சண்டை போடுறதா இருந்தா தெருவுல போய் சண்டை போடுங்க.. வீட்டுல மனுச மக்க குடியிருக்கறதா வேண்டாமா.?" என்று அதட்டினார்.

அன்பு அபிநயாவை விலக்கி தள்ளி விட்டு வெளியே நடந்தான். அபிநயா அவனை முந்திக் கொண்டு தன் வீட்டிற்கு நடந்தாள்.

"இதுக்குதான் நான் அப்பவே அவனை கட்டிக்க மாட்டேன்னு சொன்னேன்‌. என் வார்த்தையை யார் கேட்டிங்க.?" என புலம்பியபடி வீட்டிற்குள் நுழைந்த மகளை கவனித்த வினோத் தான் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளுக்கே பார்வையை திருப்பிக் கொண்டார். இவளின் கோபத்தை நம்பி முதல் சண்டையிலேயே அன்புவிடம் நியாயம் கேட்க வரிந்துக் கட்டிக் கொண்டு சென்றார் அவர். ஆனால் மறுநாளே அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டார்கள். பாவம் அவர்தான் மருமகனோடு இரண்டு மூன்று வருடங்களுக்கு முகம் கொடுத்து கூட பேசவில்லை. மருமகனுடனான தன் மகளின் கோபம் இலவம் பஞ்சை போன்றது. காற்றடித்தால் பறந்துவிடும் என்பதை புரிந்து வைத்திருந்தார் அவர். அதனாலேயே அவர்களின் சண்டையில் குறுக்கே நுழையாமல் இருந்தார்.

அன்பு சோகத்தோடு கோவில் குளத்தின் படிக்கட்டில் இறங்கி அமர்ந்தான். "அவளை கட்டிக்கிட்டதுக்கு பதிலா குளத்துல கூட இறங்கியிருக்கலாம்.." என்று புலம்பினான்.

"அன்பு சார்.." என்று குரல் ஒன்று கேட்டது. திரும்பி பார்த்தான். அவனுக்கு கீழ் வேலை செய்யும் ஒருவன் தன் மனைவியின் தோளில் கை போட்டு அணைத்தபடி குளத்தின் கரையில் நின்றிருந்தான். அவன் மனைவி கையில் பூஜை கூடை இருந்தது.

"உங்க மூக்குக்கு என்ன ஆச்சி சார்.?" என அவன் கேட்டதில் குளத்துப் படிக்கட்டில் அமர்ந்திருந்த ஒன்றிரண்டு பேர் அன்புவை திரும்பி பார்த்தார்கள். "கதவுல இடிச்சிக்கிட்டேன் பரசு.. கோவிலுக்கு வந்திங்களா.. நடை சாத்திட போறாங்க.. போய் சாமியை கும்பிடுங்க.." என்றான். அவர்கள் இருவரும் கிளம்பிய பிறகு தண்ணீரை பார்த்தவாறு திரும்பி அமர்ந்தான்.

"எல்லாருக்கும் நல்ல பொண்டாட்டிதான் அமைஞ்சிருக்கு. ஆனா எனக்குதான் இப்படி ஒரு தலையெழுத்து. ராட்சசியோடு குடும்பம் நடத்தணும்ன்னு விதி.." என்று முனகினான் எரிச்சலாக.

குளத்தின் தண்ணீர் தொடும் படிக்கட்டில் படுத்திருந்த சாமியார் ஒருவர் இவன் சொன்னது கேட்டு சிரித்தார்.

"என் நிலமையை பார்த்தா உங்களுக்கு கூட சிரிப்பா வருதா சாமி.?" என்றான் அன்பு.

சாமியார் சிரித்தபடி எழுந்து அமர்ந்தார். "நீயும் உன் பொண்டாட்டியும் ஜென்ம எதிரிகளா பிறந்தவங்க.." என்றார் அவர்.

"கஞ்சா அடிச்சிட்டு உளறாம அமைதியா தூங்குங்க சாமி.." என்றவனை பார்த்து சிரித்தவர் "உங்க இரண்டு பேரையும் சின்ன வயசிலிருந்து பார்த்துட்டு இருக்கேன் நான். உங்க முகத்தை பார்த்தே உங்க விதியை படிச்சவன் நான்.."

அன்பு அதிர்ச்சியோடு அவரை பார்த்தான். அவரருகே வந்து அமர்ந்தான். "என்ன சொல்றிங்க.? நிஜமாவா.?" என்றான்.

"ஆமா.. நீயும் அவளும் ஜென்ம எதிரிங்க.. ஆன்ம ஜோடிகளும் கூட. சண்டை போட்டாலும் பிரிய முடியாது உங்களால. சேர்ந்தே இருந்தாலும் சண்டை போடாம இருக்க முடியாது உங்களால.." என்றார்.

அவர் சொல்வதை இப்போது நம்பலாம் என்று தோன்றியது அவனுக்கு. அவனின் வாழ்க்கையே அப்படிதான் போய் கொண்டிருந்தது.

"இதுக்கு பரிகாரம் இருக்கா சாமி.. எதுவா இருந்தாலும் செய்றேன் நான்.‌." என்றவனை பார்த்து சிரித்தவர் "எந்த பரிகாரத்தாலும் உங்க விதியை மாத்த முடியாது.. அன்பையே அடை மழையா பொழிஞ்சாலும் கண்டிப்பா சண்டை வரும். வெட்டிக்கிட்டும் குத்திக்கிட்டும் சாக பிழைக்க கிடந்தாலும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு ஆசை வரும். இதான் உங்க விதி.." என்றார்.

அன்பு தலையை பிடித்துக் கொண்டான். "நாங்க சண்டை போடாம இருக்கணும் சாமி.. நிறைய நேரத்துல பயமா இருக்கு.." என்றான் கவலையோடு.

அவனின் தலையை வருடி விட்டார் அவர். "ஒரு விசயத்தை மாத்த முடியலன்னா அந்த விசயத்தோடு சேர்ந்து பயணம்தான் பண்ணியாகணும். இங்கே நீங்க மட்டும்தான் அப்படின்னு நினைக்காத.. இந்த பூலோகத்துல பிறந்த பாதி பேருக்கு இதே விதிதான். வீட்டுல தினமும் சண்டையும் இருக்கும். மோக சங்கீதமும் இருக்கும். எவனும் அதை பெருசு பண்றது கிடையாது. சண்டையும் அளவோடு போட்டுக்கிட்டா நல்லதுதான். உனக்கு அந்த பாக்கியம் இல்ல. ஆனா உனக்கு மட்டும்தான் அந்த பாக்கியம் இல்லன்னு நினைக்கிற பாரு. அந்த இடம்தான் தப்பு. உன் கண் முன்னாடி இருக்கற எல்லா தம்பதிகளையும் ஒரு நொடி பாரு. வாசற்படி இல்லாத வீடு கூட இருக்கும். சண்டை இல்லாத குடும்பம் இருக்காது. எல்லாத்தையும் தூசா தட்டி விட்டுட்டு போயிட்டே இருக்கணும்.." என்றவர் எழுந்து மேலே நடந்தார்.

அன்பு குழப்பத்தோடு எழுந்து வீட்டுக்கு நடந்தான்.

"உன் இஷ்டபடி என்னால இருக்க முடியாது.." என்று ஒரு வீட்டுக்குள் இருந்த பெண் கத்திக் கொண்டிருந்தாள்.

"உங்க அப்பன் சம்பாதிச்ச சொத்துன்னு நினைச்சா என்னை கேள்வி கேட்கற.?" என்று அதற்கடுத்த வீட்டில் இருந்த ஆண் கத்திக் கொண்டிருந்தான்.

"உனக்கு அறிவே இல்ல குட்டி.." என்று சாலையில் நடந்தபடி காதலியின் தலையில் கொட்டினான் ஒரு காதலன்.

"அதுதான் சண்டை போட்டுட்டு போயிட்ட இல்ல. இனி பின்னாடி வந்தா செருப்பாலயே அடிப்பேன் நான்.." என்று தன் காதலனை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள் ஒரு காதலி.

அனைவரையும் விந்தையோடு பார்த்தபடி தன் வீட்டுக்குள் நுழைந்தான் அன்பு.

"டேய் கோணக்காலா.. அம்மா பால்கோவா செஞ்சிருக்காங்க. உனக்கும் வேணுமாடா.?" என கேட்டபடி பால்கோவா பாத்திரத்தோடு சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் அபிநயா.

கலைந்த தலையை சீவி இருந்தாள். கன்னத்தில்தான் இவனின் கை அச்சு இருந்தது. அது ஒருநாளில் மறைந்து விடும் ஆனால் தன் மூக்கின் வீக்கம் குணமாக நான்கு நாட்கள் ஆகும் என்று தன்னையே சமாதானம் செய்துக் கொண்டான் அவன்.

"இன்னொரு முறை இந்த வீட்டுல இருந்து சத்தம் வந்தா நாங்க போலிஸ்ல கம்ப்ளைண்ட் தருவோம்ன்னு சொல்றான் பக்கத்து வீட்டுக்காரன்.." என்று புலம்பியபடி வீட்டுக்குள் வந்தார் ஆறுமுகம்.

"யாருன்னு சொல்லுங்க மாமா.. எங்க அப்பாக்கிட்ட சொல்லி அவன் பல்லை உடைக்க சொல்றேன்.." அன்புவிற்கு ஒரு ஸ்பூன் பால்கோவாவை ஊட்டி விட்டபடி சொன்னாள் அபிநயா.

"கம்ப்ளைண்ட் தருவேன்னு சொன்னதே உங்க அப்பாதான்.." என்று அவர் சொல்ல அபிநயாவின் முகம் அதிர்ச்சியில் உறைந்தது.

"ஊருல நாட்டுல எல்லாம் உங்களை போலவா சண்டை போட்டுட்டு இருக்காங்க.?" என்று சலித்தபடியே பேர குழந்தைகளோடு விளையாட சென்றார் அவர்.

"ஊருல நாட்டுல எல்லாம் சண்டை போட்டுக்கிட்டுதான் இருக்காங்க. என்ன அவங்க டீசன்டா வாயால சண்டை போடுறாங்க. நாங்க இன்டீசன்டா கையாலயும் காலாலயும் சண்டை போடுறோம்.. அவ்வளவுதானே.? இன்னும் கொஞ்சம் வருசம் போனா எல்லாம் சரியா போயிடும்.." என்ற அன்பு மனைவியை இழுத்து அருகில் அமர வைத்தான். "பால்கோவா நல்லாருக்கு.." என்றுவிட்டு உண்ண ஆரம்பித்தான்.

"கொஞ்சம் வருசம் போனா நீங்க இரண்டு பேரும் இப்படி சண்டை போட முடியாது.. ஏனா உங்க புள்ளைங்களே உங்களை வீட்டை விட்டு துரத்தி விட்டுடுவாங்க.. ஊர் உலகத்துல இருப்பவங்களை பத்தி நீ பேசாதடா.. எவனுமே உங்களை போல இருக்க மாட்டாங்க.." என்று சமையலறையிலிருந்து குரல் தந்தாள் அர்ச்சனா.

"எங்களை போல இல்லன்னா என்ன அத்தை.. நாங்க விதிவிலக்காதான் இருந்துட்டு போறோமே.. இந்த உலகத்துல எங்களை போல எத்தனை விதிவிலக்கோ பாவம்.." என்ற அபிநயா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அன்புவின் உதட்டில் முத்தமிட்டாள்.

"புது லிப்ஸ்டிக் போட்டிக்கேன்.." என்றாள்.

அன்பு அவளின் பின்னலை பற்றி அருகே இழுத்தான். அவளின் இதழில் அழுத்தமாக முத்தம் பதிக்க முயன்ற நேரத்தில் அவளின் மூக்கோடு தன் மூக்கை உரசியதில் வலி ஏற்பட்டு "அம்மா.." என முனகியபடி பின்னால் நகர்ந்தான்.

"மூக்கு வலிக்குது.." என்றான் இருக்கையில் சாய்ந்தபடி.

"என் பேச்சை கேட்டிருந்தா இப்படி ஆகியிருக்குமா.?" என கேட்டவள் அவனின் மூக்கை பிடித்து ஆட்டினாள். அன்பு அவளின் கையை தட்டினான்.

"டோன்ட் டச் மீ.." என்றான்.

"ஏன் வேற எவளையாவது உசார் பண்ண போறியா.?" முறைப்போடு கேட்டாள் அபிநயா.

"நானே அழுந்து புரண்டாலும் உன்னோட இருக்கும் என் விதி மாறாது.." எரிச்சலோடு சொன்னவனின் மூக்கில் முத்தமிட்டவள் "குட் பாய்.." என்றாள். அன்புவிற்கு மூக்கின் காயம் எரிந்தது. பற்களை அரைத்தான். "இப்படிலாம் விதியை படைச்சானே அந்த ஆண்டவனைதான் அடிக்கணும்.." என்றான் கோபத்தோடு.

அனைத்து கடவுள்களும் ஒரே மேஜையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள். காதற் கடவுளும் பகையின் கடவுளும் மட்டும் உணவருந்தியபடியே இரும்பினார்கள். தலையில் தட்டிக் கொண்டார்கள். "யாரோ திட்டுறாங்க போல.." என்றார்கள் ஒரே நேரத்தில்.

முற்றும்.

"நோ.. கதையை ரீவைண்ட் பண்ணுங்க.." என்று ஒரு திடீர் குரல்.

"யாருங்க அது.?"

"நான்தான் அன்பின் தேவதை ஆதி.‌."

"நீங்க வேறயா.? சரி ரீவைண்ட் பண்றேன்.."

அன்பு கோவில் குளத்தின் நீரை சோகமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

"எல்லாருக்கும் நல்ல பொண்டாட்டிதான் அமைஞ்சிருக்கு. ஆனா எனக்குதான் இப்படி ஒரு தலையெழுத்து. ராட்சசியோடு குடும்பம் நடத்தணும்ன்னு விதி.." என்று முனகினான் எரிச்சலாக.

குளத்தின் தண்ணீர் தொடும் படிக்கட்டில் படுத்திருந்த சாமியார் ஒருவர் இவன் சொன்னது கேட்டு சிரித்தார்.

"என் நிலமையை பார்த்தா உங்களுக்கு கூட சிரிப்பா வருதா சாமி.?" என்றான் அன்பு.

"இல்லப்பா உங்க அறியாமையா நினைச்சாதான் சிரிப்பு வருது.. நீங்க இரண்டும் பேரும் ஆன்ம ஜோடிகள்ப்பா.." என்றார் அவர்‌.

"கஞ்சா குடிச்சிட்டு உளறாதிங்க சாமி.." என்றான் அன்பு மென்மையாக.

"உண்மைதான்ப்பா.." என்றவர் எழுந்து அவனருகே வந்து அமர்ந்தார். "நீயும் உன் மனைவியும் ஆன்ம ஜோடிங்க. உங்களுக்குள்ள எப்போதுமே சண்டை வராது.. அதுக்கும் மேல சண்டை வந்தா அது பைசா பிரயோசன் இல்லாத காரணமாதான் இருக்கும். இதுக்கெல்லாம் சண்டை போடணுமான்னு நீ நினைச்சிட்டாலோ இல்ல இதெல்லாம் ஒரு விசயமான்னு அவ நினைச்சிட்டாலோ உங்களுக்குள்ள எப்பவுமே சண்டை வராது.." என்றார்.

"அவதான் சாமி வேணும்ன்னே சண்டைக்கு இழுக்குறா.." என்றவனின் தலையை வருடி விட்டவர் "அவளுக்கு அன்பால பதில் சொல்லு நீ.. அவ கத்துற வரைக்கும் கத்தட்டும். கத்தி முடிச்ச பிறகு நீ உன் பக்க நியாயத்தை சொல்லு.." என்றார். அன்பு எதையோ பேச முயன்றான்.

"ரியாலிட்டிக்கு ஒத்து வர மாதிரி பேசுங்கன்னு சொல்ல போறியா.?" என கேட்டவரிடம் ஆச்சரியத்தோடு ஆமென தலையசைத்தான் அன்பு.

"ரியாலிட்டி எப்போதுமே மேஜிக்கால நிறைஞ்சதுதான். நீ பிறக்கும் முன்னாடி என்ன செஞ்ச.. இறந்த பிறகு என்ன செய்வ.. எதுவுமே உனக்கு தெரியாது. இந்த மாபெரும் உலகமே மேஜிக்கால நிறைஞ்சது. அந்த மேஜிக்ல நீயும் சந்தோசமா பயணம் செய்யணும்ன்னா அதுக்கு தினம் கொஞ்சம் அன்பை பயன்படுத்து. அன்பை விட சிறந்த சக்தி எதுவுமே இல்ல. அன்பை விட சிறந்த மேஜிக் எதுவுமே இல்ல. அன்பு நம்பி பாரு.. மனதின் கோபத்தை தூக்கியெறிஞ்சிட்டு அன்பை மட்டும் நம்பி பாரு.." என்றவர் மேலே நடந்தார்.

அன்பு குழப்பத்தோடு எழுந்து வீடு நோக்கி நடந்தான்.

"உன்னை போல சமைக்க இந்த உலகத்துலயே யாராலும் முடியாது தங்கம்.." என்றபடி வாசல் திண்ணையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த கணவனுக்கு இன்னும் ஒரு கரண்டி குழம்பை விட்டாள் மனைவி ஒருத்தி.

"சாக்லேட்டா.? எனக்கா வாங்கி வந்திங்க.? இது எனக்கு ரொம்ப பிடிக்கும்.‌." என ஆச்சரியப்பட்ட ஒரு மனைவி தன் கணவன் கையிலிருந்த ஆசை சாக்லேட்களை ஆசையோடு அள்ளினாள்.

"அந்த பையன் கெட்டவன் பாப்பா.. நீ இனி அவனோடு பேசாத.. அவன் உன்னோடு பேச வந்தா என்கிட்ட சொல்லு.. நான் உங்க அப்பாகிட்ட சொல்லி அவனை மிரட்ட சொல்றேன்.." என்று இளைஞன் ஒருவன் தன் கல்லூரி காதலியிடம் சொல்லியபடி அன்புவை தாண்டி நடந்து போனான்.

"உனக்கு அறிவேயில்லையா.? ஏன் இப்படி பரட்டை தலையோடு சுத்துற. நாளைக்கு உன் தலை முடியெல்லாம் நரைச்சி போச்சின்னா என்ன செய்றது.? கொஞ்சமா எண்ணெய் வையேன்.." என்று சலித்து கொண்ட காதலி ஒருத்தி தன் காதலின் தலைமுடியை கோதி விட்டாள்.

அன்பு வீட்டிற்கு நுழைந்தான்.

"பால்கோவா வேணுமா அன்பு.? அம்மா செஞ்சாங்க.." என்றபடி பால்கோவா பாத்திரத்தோடு ஹாலுக்கு வந்தாள் அபிநயா. அவளின் கன்னத்தை கண்டவன் "சாரி.." என்றான்.

அபிநயா ஆச்சரியமாக அவனை பார்த்தாள். "இல்ல நான்தான் சாரி.." என்றாள் வருத்தமாக.

அன்பு பால்கோவாவை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான். சாரி சொல்வதை காட்டிலும் சண்டையை போடாமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றியது அவனுக்கு.

ஆன்ம ஜோடிகள் என்பதால்தான் இத்தனை சண்டைகள் வந்த பிறகும் உடனே பேசிக் கொள்கிறோம் என்பதை புரிந்துக் கொண்டான். ஆன்ம ஜோடிகள் என்பது எப்படிப்பட்ட வரம். அதை சின்ன சின்ன சண்டைகளுக்கு பலியிடலாமா என்று தன்னையே கேட்டுக் கொண்டான். பொக்கிஷத்தை பாதுகாக்க சில சண்டைகள் தவிர்த்தால் நல்லது என்று தோன்றியது அவனுக்கு.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவளின் இதழில் முத்தமிட்டான். அவள் முகத்தில் புன்னகை அதிகமானது.

அவனோடு சண்டையிட்டுவிட்டு தன் வீடு சென்றவளின் கனவில் "நீங்கள் இருவரும் ஆன்ம ஜோடிகள்.. சண்டையிடுவது முட்டாள்தனம். எவ்வளவு சண்டை வந்தாலும் உங்களை பிரிக்க இயலாது. முட்டாள்தனத்தால் வரத்தை சாபமாக்கி விடாதே.." என்று பெண்மணி ஒருத்தி வந்து சொல்லி சென்றாள்.

குழப்பத்தோடு எழுந்து அமர்ந்த அபிநயா இப்போது வரை அதைதான் யோசித்துக் கொண்டிருந்தாள்.

பிரிக்க இயலாத பந்தத்திற்கு வீணான சண்டைகள் எதற்கு.? என யோசித்தபடி நிமிர்ந்தவள் அன்புவின் மூக்கை கண்டு மனம் வாடினாள். சிறு சிறு கோபங்களை கட்டுப்படுத்தினால் வாழ்க்கை இதை விட அதிக வண்ணமயமாகும் என்றால் அந்த கோபத்தை ஏன் ஒரேடியாக ஒதுக்கி வைக்க கூடாது என்று எண்ணினாள்.

யோசனையோடு அவனின் மூக்கின் மீது முத்தம் தந்தாள்.

ஊடல் முக்கியமே.. ஆனா அதை விட அன்பு அதிக முக்கியம் என உணர்ந்துக் கொண்ட இருவரும் இனி அன்பையே அதிகம் பயன்படுத்துவார்கள் என்று நாமும் நம்புவோம்.

"எப்போதும் ப்ளஸ்க்கு முக்கியத்துவம் தந்து அதையே அதிகரிச்சா மைனஸ் இல்லாமலேயே போயிடும்.." என்று அவர்களை பார்த்தபடி சொன்னாள் அன்பின் தேவதை ஆதி.

முற்றும் மக்களே..

அடுத்த கதையில் சந்திக்கலாம்‌ நட்புள்ளங்களே..

இக்கதை ஜஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் பர்போஸ்க்காக எழுதப்பட்டது. இந்த கதையின் காட்சிகள் கற்பனை என்றும், வாழ்வியலுக்கு துளியும் ஒத்து வராத கற்பனை என்றும் முழுசா புரிஞ்சிக்கங்க.

நீங்கள் யாரையாவது தாக்க நினைத்தால் அதற்கும் முன் உங்களை நீங்களே காயப்படுத்தி பாருங்க முதல்ல. கண்டிப்பா வலிக்கும். உங்களுக்கு வலிச்ச மாதிரியே அவங்களுக்கும் வலிக்கும். ஸோ வயலன்ஸ் என்பது மனித குலத்திற்கு எதிரி. யாரும் அதை பயன்படுத்தாதிங்க. உங்களால முடிஞ்சா மத்தவங்களுக்கு சிறு புன்னகையை மட்டும் அன்பளிப்பா கொடுங்க. அதுவே அவங்களுடைய நாளை சிறப்பாகும். காதலன் அல்லது காதலியோடு சண்டை போடாமல் இருப்பது வரம். அந்த வரம் உங்களுக்கு கிடைச்சிருப்பதா நினைச்சி வாழ்ந்து பாருங்க. எல்லாமே நல்லாருக்கும்.

இதுவரை இந்த கதைக்கு ஆதரவளித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.. நீங்க தந்த ஒவ்வொரு வோட்க்கும் ஒவ்வொரு கமெண்ட்க்கும் ரொம்ப நன்றிகள்.

கதை ரொம்ப பிடிச்சிருந்தா உங்க பிரெண்ட்ஸோடு ஷேர் பண்ணுங்க.

எனது அடுத்தடுத்த கதைக்கான நோட்டிபிகேஷனை பெற மறக்காம சைட்டை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க.

நாளை காலையில் ஓர் ஆன்மாவின் குறிப்பேட்டின் முதல் அத்தியாயம் வெளியாகும். எல்லோரும் அந்த கதைக்கும் உங்க ஆதரவை கொடுங்க. அப்படியே மௌனமாய் சில மரணங்கள் இந்த கதைக்கும் ஆதரவு கொடுங்க நட்புக்களே

நான் நூறு வருசம் கழிச்சி இறந்து போன பிறகு எனக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசே தந்தாலும் அது என்னை சேராது. ஆனா உங்களோட விமர்சனம் உடனுக்குடன் என் கை சேரும். அதனாலதான் சொல்றேன் நட்புக்களே விமர்சனம் ரொம்ப முக்கியம்ன்னு‌.

நன்றிகளுடன் உங்கள்

CRAZY WRITER♥️
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN