முகவரி 36

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மறுநாள் காலையில்... சில கோப்புகளுடன் மிருடனின் வீட்டிற்கு வந்து விட்டான் பரணிதரன். நேற்றே அனு, இது தான் விஷயம் என்று சொல்லி அதற்கான உதவியை அவனிடம் கேட்டிருந்ததால்... அது சம்பந்தமாய் சில தகவல்களைச் சேகரித்து இருப்பதாக சொல்லியிருந்தவன் இதோ வந்து விட்டான் வீட்டிற்கு.

இவள் வரவேற்று, கெஸ்ட் ரூமுக்கு அழைத்துச் செல்ல, “அங்கு வேண்டாம் அனு... நாம் மிருடன் அலுவலக அறைக்குப் போகலாம்” என்றவனை

மறுக்காமல் அனு அங்கு அழைத்துச் செல்ல, ஷோஃபாவில் அமர்ந்ததும் அவள் முன் கோப்புகளை வைத்தவன், “அன்று நடந்த சம்பவம்... உங்களுக்கு நினைவு இருக்கா இல்லை மறந்திட்டிங்களா அனு?” கேட்க

“ஒருமையிலே பேசுங்க… அப்புறம், அன்றைய சம்பவத்தை நான் மறக்கல... நிச்சயம் சாகற வரை எனக்கு மறக்காது. அதற்காக என் வாழ்நாள் வரை தினந்தினம் நினைவில் ‌இருக்கிற அளவுக்கு... அந்த சம்பவத்திற்கு நான் முக்கியத்துவமும்... கொடுக்கலை” அனு தெளிவாக பதில் தர...

பிறகு எதற்கு இதைத் கிளறனும் என்பதாய் அவன் நினைக்க.. அதை அறிந்து கொண்டவள், “பிறகு எதற்கு செத்த பிணத்திற்கு ஜாதகம் பார்க்கணும்னு கேட்கறீங்களா... இதில் என் கணவர் சம்பந்தப்பட்டு இருக்கிறரே...” தலை குனிந்து கோர்த்திருந்த தன் விரல்களின் மேல் பார்வையை பதித்த படி சொல்லியவள் பின் தலை நிமிர்ந்து,

“உண்மையாவே அன்றைய சம்பவத்தை நான் பெருட்டாகவே எடுத்துக்கலை. இதே... டிவி பேப்பர்னு என் புகைப்படம் வந்திருந்தாலும் நான் இதே உறுதியுடன் தான் இருப்பேன்... நிச்சயம் என் பெண்மைக்கோ... ஒழுக்கத்துக்கோ கிடைத்த களங்கமா நினைத்திருக்க மாட்டேன். அன்றைய நிகழ்வால் நான் அடைந்த வலி... வேதனை... வாங்கின பேச்சுகள் அதிகம். அதான் கொஞ்சம் மறக்க முடியலை” மறுபடியும் இவள் தெள்ளத்தெளிவாய் பதில் தர... அவளை வியந்து தான் பார்த்தான் பரணி.

உண்மை தானே... அந்த பதினேழு வயதில் தனக்கு நடந்ததை யாரிடமாவது சொல்லி அடைக்கலம் ஆக வேண்டும் என்று நினைத்தாளே தவிர அன்று அவள் தவறான எந்த முடிவையும் எடுக்கவில்லையே.

“அந்த நிகழ்வு சம்பந்தமாக யாரையாவது நியமித்து, எங்க… ஏது… எப்படி ஆரம்பித்தது என்று விசாரிக்க செய்தாயா?”

இவள் இல்லை என்பதாய் தலை அசைக்க

“ஆனா உன் தாத்தா அன்றே அதை செய்திருக்கார். அன்றைய D.C.P இடம் இது சம்பந்தமாய் ஒப்படைத்து... ரகசியமாய் சில விஷயங்களைச் சேகரித்து... ஆரம்ப முடிச்சு எது என்று பார்க்கச் சொல்லியிருக்கார். அதன் படி விசாரித்து அந்த D.C.P அதிகாரி எழுதி வைத்த ஃபைல் தான் இது” அவன் ஒரு ஃபைலை தனியே எடுத்துக் காட்ட

அவளோ அசையாமலே அமர்ந்திருந்தாள். அதைக் கண்டவன், “நல்லா யோசிச்சு பாரு அனு… அன்றைக்கு உனக்கு இருந்த மனநிலையில் மிருவை நீ குற்றம் சொல்ல எது காரணம்னு இன்றைய சூழ்நிலையில் தெளிவா யோசி”

பரணி சொன்னதற்கு அனு கண்கள் மூடி அனைத்தையும் மனத்திரையில் ஓட விட்டவளுக்கு கடைசியாக மிருடன் சொன்ன வார்த்தை காதில் ஒலிக்கவும், இப்போதும் அதன் வலி தாங்க முடியாதவளாக கைகளில் முகத்தை மூடிக் கொண்டு அவள் அழவும்... பரணியால் ஒன்றும் செய்ய முடியாத நிலை. என்ன சொல்லி அவன் எப்படி சமாதானம் செய்வான்... அப்படி இவன் செய்தால் தான் அவளின் அழுகை அடங்கிவிடுமா... இவன் செய்வது அறியாது தவிக்க... அவளின் அழுகையோ நீடித்தது.

சிறிது நேரத்திற்கு எல்லாம் பரணியின் கைப்பேசிக்கு அழைப்பு வர… அதை எடுத்து மெல்லிய குரலில் பேசியவன் பின் அனு முன் தன் கைப்பேசியை வைத்து விட்டு இவன் வெளியே சென்று விட... இது எதையும் உணராமல் அழுது கொண்டிருந்தாள் அனு.

“ஷிதா” மிருடனின் குரல் ஒலிக்க, ம்ஹும்.. அவள் நிமிரவே இல்லை.

“செல்லம்மா... என்னை பாரு டி. நான் உன் முன்னாடி தான் டி இருக்கேன்” மறுபடியும் அவன் குரல் ஒலிக்க, இப்போது இவள் நிமிர்ந்து பார்க்க… பரணியின் கைப்பேசி வழியே வீடியோ அழைப்பில் இருந்தான் அவள் கணவன்.

“செல்லம்மா... அழறியா டி... எனக்கு தண்டனை கொடுக்கணும்னு சொன்னவ அழலாமா?” அவன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே போனை இவள் தன் கையில் எடுக்க... “இப்படி அழுவேன்னு தெரிந்திருந்தா உன் டாஸ்க்கை இரண்டு நாளில் முடிக்கச் சொல்லியிருப்பேன்... சரி போகட்டும். இப்போ அழுததற்கு, என் தண்டனை நூறு முத்தம்… எங்க எனக்கு கொடு பார்ப்போம்” என்று அவன் சகஜமாய் சொல்ல... இவள் அழுகையை நிறுத்தி முறைக்க

“ஹப்பா... என் பொண்டாட்டி ஃபார்முக்கு வந்துட்டா” என்றவன் “be strong டி செல்லம்மா.. நான் இருக்கேன் டி” என்க...

‘எப்போ சொல்ல வேண்டிய வார்த்தையை இவர் எப்போ சொல்கிறார் பார்’ என்று நினைத்தாள் அனு. பின் அழைப்பைத் துண்டித்து விட்டு இவள் வெளியே சென்று பரணியை அழைக்க... அனுவைப் பார்த்தவனுக்கோ ஆச்சரியம்.

‘கொஞ்ச நேரத்தில் அப்படி அழுத பொண்ணா இது?’ என்று நினைத்தவன்... ‘அதே போல் இங்கு நடப்பதை யாரும் சொல்லாமலே... யாரும் அழைக்காமலே... எப்படி சரியாக மிருடன் போன் செய்து… அவ அழறாளா என்று கேட்டான்? அந்த அளவுக்கு அன்னியோன்ய தம்பதிகளா இவர்கள் இருவரும்?’ நடந்தவைகளைக் கண்டு இப்படியாக நினைத்தது பரணியின் உள்ளம்.

பின் பேசிக் கொண்டுருந்த விஷயத்திற்கு வந்தவன், “அப்போ மிருடன் வாய் மொழியா சொன்னது தான் உனக்கு தெரியும்... வேறு எதுவும் தெரியாது இல்லையா?” இவன் கேட்க, அவன் இல்லை என்றதும்

“அப்போ இந்த ஃபைல்ஸ் எல்லாம் படித்துப் பார் அனு… உனக்கு புரியும்”

“ஊஹும்...” கை உயர்த்தி தடுத்தவள் “நான் எதையும் படித்து தான் தெரிந்துக்கனும் நினைக்கலை... அதற்கு அவசியமும் இல்ஙல. எனக்கு உங்க மேல் நம்பிக்கை இருக்கு… என்ன நடந்துதுன்னு நீங்களே சொல்லுங்க அண்ணா” இவள் மறுத்துவிட, ஒரு பெருமூச்சுடன் சொல்ல ஆரம்பித்தான் பரணி…

“உன் அப்பா அரசியலில் பெரும் புள்ளி மட்டும் இல்லை... அரசியலில் மிகவும் செல்வாக்கான ஆளும் கூடத் தான். அது, மக்களுக்கு அவர் நல்லது செய்து பெற்ற பெயரோ புகழோ கிடையாது… முழுக்க முழுக்க கட்சியில் நல்ல பெயர் எடுத்து வாங்கினது தான் அது. மொத்தத்தில் கட்சிக்காக அவர் என்ன வேணாலும் செய்வார்... அவர்களுக்கு அவ்வளவு நம்பகமான மனுஷன் அவர்.

பல பேர் இருக்க… கட்சியில் ஒருத்தர் மட்டும் நல்ல பேர் எடுத்து புகழோட இருந்தா... பகையும், விரோதமும், பூசலும் வரத் தானே செய்யும்... கட்சியில் இருக்கறவங்களே உன் அப்பா பெயரைக் கெடுக்க நினைத்தாங்க... அதிலும் உனக்கு அன்று போன் செய்து உன்னை அந்த இடத்திற்கு வரவழைத்தவர் ரொம்ப தீவிரமா இருந்தார். அந்த நேரம் அவர் எதிர் கட்சிக்கு வேற விலைக்குப் போயிட்டார். போகிறதுக்குள்ள உன் அப்பா பேரைக் கெடுக்கணும்.. அது மட்டும் தான் அவர் குறிக்கோள்.

உன் அப்பாவை எல்லா வகையிலும் நெருங்கிப் பார்த்தாங்க... முடியல. அடுத்து உன்னை நெருங்கினாங்க... அதாவது உன்னை ஓர் இடத்தில் வரவழைத்து நீ லஞ்சம் வாங்குற மாதிரி... இது எப்படினா உன் அப்பாவுக்கு பதில் நீ அங்கு வந்து பணம் வாங்குவது மாதிரி தான் அவங்க முதலில் திட்டம் போட்டது. ஆனா... கட்சியில் இருந்து இன்னும் விலகாமல் அங்கேயே அந்த மந்திரி இருக்கவும்... நாளை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எங்கே கட்சி ஆட்களை உன் அப்பா கை காட்டிவிடுவாரோன்னு நினைத்து... பயந்து கடைசி நிமிடம் மாறினது தான் உன் பெயரில் கலங்கம் வர வைக்க வேண்டும் என்று செய்தது.

உனக்கு நடந்ததற்கு முழுக்க முழுக்க உன் அப்பாவோட இருந்த கட்சி ஆளுங்க தான் காரணம். இது விசாரணையில அன்றே தெரிந்து விட்டது. நிச்சயமா... இதில் மிருடன் சம்மந்தப்படவே இல்லை. இதை நான் அவன் நண்பனா சொல்லலை… ஒரு போலீஸ் அதிகாரியா... உன் அண்ணனா.. சொல்கிறேன்” பரணி முடித்து விட.... சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது.

அனு... நிச்சயம் இதை எதிர்பார்க்கவில்லை. அதிலும் அவளின் தந்தை நண்பர்கள் இப்படி செய்திருப்பார்கள் என்று யோசிக்க கூட இல்லை அவள். அவளுக்குத் தொண்டை அடைத்தது. அதை சீர் செய்தவள்,
“இன்னும் வேற யாராவது இதில் சம்மந்தப்பட்டு இருக்காங்களா?”

அவன் இல்லை என்றதும், “அப்போ இதில் மிரு எந்த வகையிலும் சம்மந்தப்படலையா?”

“இல்லை... இந்த கேசை எடுத்து விசாரித்த D.C.Pயையும், அந்த அரசியல்வாதியையும் நீ சந்தித்தால்... இன்னும் உனக்கு தெளிவாகும்... நம்பிக்கையும் வரும்”

“நம்பிக்கைக்கு இல்லை... நான் யாரையும் சந்திக்க விரும்பலை... வேண்டாம் விட்டுடுங்க” அனு மறுக்க

“இல்லை… நீ அவங்க இருவரையும் சந்தித்தே ஆகணும் என்பது மிருடனின் உத்தரவு. இன்று D.C.P கிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன். அந்த அரசியல்வாதிகிட்ட நாளைக்கு தான் அப்பாய்ன்மெண்ட் கிடைத்திருக்கு. நாளைக்குப் போய் வரலாம் அனு” பரணியின் குரல் தன்மையாகவே ஒலித்தது. ஆனால் உறுதியாக ஒலித்தது.. மனமே இல்லாமல் தலை ஆட்டினாள் அனு.

இவள் அங்கு சென்ற போது... அந்த D.C.P இவளை அன்பாகவே வரவேற்று நல்ல முறையிலே நடத்தினார்.
“உன் அப்பா... தாத்தா இருவரும் எனக்கு நல்லாவே பழக்கம் மா. உன் தாத்தா ரொம்ப நல்லவர். என் பேத்தி பச்ச மண்ணு டா... யாரோ தொழில்முறை விரோதி தான் இப்படி செய்திருக்கணும்னு சொல்லி... அன்றைய விஷயத்தை என் கிட்ட தான் உன் தாத்தா கொடுத்தார்.

உன்னை வெளிநாடு அனுப்பி படிக்க வைத்து உனக்கு ஜாம்ஜாம்னு கல்யாணம் செய்யணும்னு அடிக்கடி சொல்லிகிட்டே இருப்பார்... ரொம்ப தைரியமா தான் பேசினார். ஆனா பார்… அந்த மனுஷன் என் கிட்ட பேசிட்டு வீட்டுக்குப் போனதும், உயிரை விட்டிருக்கார்.
அவர் ஆசைப் படி நீ இப்போ நல்லா இருக்கீயே… அதுவே போதும். உன் கணவர் வாமணன் பற்றி நல்ல விதமா நியூஸ்பேப்பரில் பார்க்கிறேன். ஆனால் இன்னும் எங்களுக்குள்ள பழக்கம் இல்லை” என்றவர் இன்னும் அந்த கேசைப் பற்றி சில தகவல்களைச் சொன்னார் அவர்.

அவள் கிளம்பும்போது அவர் மனைவி அவளை பூஜை அறைக்கு அழைத்துச் செல்ல... அங்கு வெள்ளி தாம்பாளத்தில் பூ பழங்களுடன் விலையுயர்ந்த புடவையும்... வெள்ளி குங்குமச் சிமிழும்... ஒரு ஜோடி தங்க வலையல்களும் இருந்தது. அதை அந்தப் பெண்மணி அனு கையில் கொடுக்க முன்வர...

“ஆன்ட்டி பூ மட்டும் எடுத்துக்கிறேன். இதெல்லாம் வேண்டாம்ங்க...” இவள் மறுக்க

“செல்வராஜ் அண்ணா… அதான்… உன் தாத்தா எங்களுக்கு எவ்வளவோ செய்திருக்கார் ம்மா... நீயும் எங்க பேத்தி மாதிரி தான்... மறுக்காம வாங்கிக்கோ அனு” வயது முதிர்ந்த அந்த பெண்மணி சொல்லவும்

‘என் தாத்தா பாட்டி உயிரோடு இருந்து இருந்தா இவர்கள் வயது தானே இருக்கும்’ என்று நினைத்தவள்... கண்ணீருடன் அவர்களை வணங்கி அதை வாங்கிக் கொண்டாள் அனு.

வீட்டிற்கு வந்தவளுக்கு பிள்ளைகளும் இல்லாததால் அதே தனிமை அன்று முழுக்க நடந்ததை இரவில் யோசித்தவளுக்கு... ‘சாகும்போது தாத்தா... என்னைத் தப்பா நினைக்கலை... எனக்கு திருமணம் ஆகிவிட்டது சொன்னது தான்... அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கு’ என்று கண்ணீருடன் நினைத்தவளின் மனமோ சிறிதே நிம்மதி ஆனது. பின்னே… எத்தனை நாள் தாத்தாவும் தன்னை தப்பாக நினைத்தாரோ என்று வருந்தியிருப்பாள்...

இப்படியே யோசித்துக் கொண்டு வந்தவளின் எண்ணங்கள்… காலையில் D.C.P சொன்ன ஒரு வார்த்தையில் வந்து நின்றது. அனுவுக்குத் தெரியாமல் அன்று அந்த ஹோட்டல் பாத்ரூமில் மறைந்திருந்தவன் தற்போது இரண்டு கண்களையும் இழந்து... வட மாநில பக்கம் பிச்சை எடுப்பதாக அவர் சொல்லி இருக்க…

அதை நினைத்தவளின் உதடுகளோ அவளையும் அறியாமல் “நிச்சயம் இது மிருவோட வேலையாகத் தான் இருக்கும்” என்று முணுமுணுத்தது. அந்த உச்சரிப்பில் அப்போது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது… இவள் காலையில் அழுத போது மிருடன் பேசியதோடு சரி... அதன் பிறகு மனைவியை அவன் தொடர்பு கொள்ளவில்லை. அதுவே அன்றைய இரவை சற்றே ஆசுவாசமாக கடந்தாள் அனு.

மறுநாள் … அந்த முன்னாள் மந்திரியின் வீடு சென்னை தாண்டி புறநகர் பகுதியில் இருப்பதால் காலை வேளையிலேயே தங்கள் பயணத்தைத் தொடங்கி விட்டார்கள் இருவரும். இவர்கள் வீட்டு வாசலில் இறங்கியதும், ஒரு பணியாள் வந்து இருவரையும் ஒரு அறைக்கு அழைத்துச் செல்ல, அங்கு சக்கர நாற்காலியில்... ஒரு கையும் காலும் செயலிழந்து... உதடு கோண அமர்ந்திருந்தார் அந்த மந்திரி.

அனுவுக்கு அவரை நன்கு தெரியும். ‘எப்படி கம்பீரமாக இருந்த மனுஷன் இன்று இப்படி இருக்கிறரே!’ என்று தான் அனுவுக்கு முதலில் தோன்றியது.

அவர் மனைவி தான் இவளை வரவேற்று தன் பக்கத்தில் அமரவைத்துப் பேசினார். அவருக்கு கூட உடல் தளர்ந்து போய் குரல் எல்லாம் மெலிந்து தான் ஒலித்தது. நேற்றைய தினம் D.C.P அவளிடம் பேசும்போது சொன்னதைத் தான் இன்று அவர் மனைவியும் அவளிடம் சொன்னார்.

கூடவே இவளுக்கு செய்த பாவத்தின் பலனாக பத்தே நாட்களில் திருமணம் முடிந்து மூன்றே மாதமான அவர் மகள் திடீரென மயங்கி விழ… என்ன ஏது என்று பரிசோதித்ததில் மூளையில் கட்டி என்று தெரியவர, அதற்கு சிகிச்சை மேற்கொண்டதில்... அவளின் இரண்டு கண் பார்வையும் பறிபோக... கருப்பையையும் எடுக்கும் சூழ்நிலையும் வர... மருமகனோ இவர் பெண்ணை விவாரத்து செய்து விட்டாராம்.

ஒரே பெண்... அவள் வாழ்வு இப்படி ஆனதே என்று தாய் தந்தை இருவரும் இவளிடம் கண்ணீர் விட்டு அழுதார்கள். நேற்று மாதிரி அனுவால் இன்று திடமாக இருக்க முடியவில்லை. அதிலும் மொட்டை அடித்து... எலும்பும் தோலுமாய்... ஒரு அறையில் இருந்த அந்த பெண்ணைப் பார்த்த பிறகு இதயம் கனத்துப் போனது அவளுக்கு.

கடைசியாய்... அந்த மந்திரி அனுவிடம் கையெடுத்துக் கும்பிட்டு... ஒரு கையுடன் மற்றொரு கையையும் அவர் சிரமப்பட்டு சேர்த்து வைத்து மன்னிப்பை வேண்டும் போது.. அனுவுக்கே பாவமாய் போனது.

“உன் அப்பா கிட்ட முன்பே மன்னிப்பு கேட்டுட்டோம். இருந்தாலும் நீயும் மன்னித்து விடுமா...” அந்த பெண்மணி மெல்லிய குரலில் வேண்ட

இவளுக்குள் அதிர்ச்சி… “என்ன ஆன்ட்டி சொல்றீங்க? என் அப்பாவுக்கு தெரியுமா!”

“தெரியும் அனு... என் பொண்ணுக்கு இப்படி நடந்து இனி குணப்படுத்தவே முடியாதுன்னு தெரிந்த பிறகு... ஒரு நாள் இவர் உன் அப்பாவை ஆஸ்பிட்டலுக்குப் போய் பார்த்தவர் நடந்ததை எல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்டிருக்கார்.

‘உன் பொண்ணு தர்மத் தாய் குணா. அந்த தாய்க்கு செய்த பாவம்... இன்று என் பொண்ணு வாழ்க்கையையே அழித்துவிட்டதுன்னு சொல்லி இருக்கார்’ அதைக் கேட்டு பேச முடியாத உன் அப்பா அழுதிருக்கார்... ஆனா எங்களை மன்னிக்கலை. எந்த தகப்பன் தான் மன்னிப்பார்? எல்லாம் நாங்க செய்த பாவம்” அவர் புடவை முந்தியால் வாயைப் பொத்திக் கொண்டு அழ... அனுவுக்கோ சங்கடமான நிலை.

பின் அங்கிருந்து கிளம்ப... “அண்ணா, கடற்கரை ஓரமா காரை நிறுத்திறீங்களா? நான் கொஞ்ச நேரம் காற்றாட நின்றுட்டு வரேன்” அனுவின் குரல் மெலிந்து ஒலிக்கவும்… அதன்படியே செய்தான் பரணி. அவன் காரை விட்டு இறங்கவில்லை.

இறங்கி நடந்தவளுக்குள்ளும் எதிரில் இருக்கும் கடலைப் போலவே பேரிறைச்சலாய் ஒரு ஒலி சுழன்று கொண்டே இருந்தது. ‘அப்போ… அப்பா இறக்கும் தருவாயில் நான் தப்பானவள் என்ற எண்ணத்துடனே இறக்கலையா... என் பேச்சை அவர் கேட்கலை தான்... என்னை நான் நிரூபிக்கலை தான்... ஆனால் அவர் பெண் அப்படிப் பட்டவ இல்லை என்பதை அவர் உணர்ந்தார் தானே...’ இதை நினைக்கும் போதே அவள் கண்ணில் கண்ணீர் பிரவாகம் ஆனது. அன்று ஒரு தகப்பன் தன் பெண்ணை இப்படி நினைக்கலாமா என்பதற்கு அழுதாள்... இன்று தான் நல்லவள் என்று தெரிந்து கொண்டாரே என்பதற்கும் அழுதாள்.

அங்கேயே ஒரு படகின் மறைவிலிருந்து எவ்வளவு நேரம் அழுதாளோ... இதை எல்லாவற்றையும் நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் மிரு விடாப்பிடியாக இருந்து... என்னை இவர்களை எல்லாம் பார்க்கச் சொன்னாரோ?’ என்று நினைத்த மாத்திரம் அவள் கண்ணீர் நின்று அவளிடம் இருந்து இவர்கள் விஷயங்கள் பின்னுக்குத் தள்ளப் பட...

‘ஆமாம்… நான் உன்னைப் பழிவாங்கத் தான் வந்தேன்’ என்ற கணவனின் வார்த்தைகள் முன்னுக்கு வர…

“அப்போ அவர் எதற்கு என்ன பழிவாங்க வந்தார்?” என்று முணுமுணுத்தது அனுவின் உதடுகள்.
 
P Bargavi

New member
N

“அப்போ அவர் எதற்கு என்ன பழிவாங்க வந்தார்?” என்று முணுமுணுத்தது அனுவின் உதடுகள். Nice
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN