மௌனங்கள் 3

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவின் POV

இறந்தவனின் வீடு மாளிகை போல இருந்தது. நாங்கள் சென்ற நேரத்தில் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. அரசியல்வாதிகள் எவ்வளவு தவறு செய்தாலும் உங்களுக்கு தலைவன்தான். அது நீங்கள் பெற்ற சாபம். இதை பற்றி நான் சொல்ல ஒன்றுமில்லை.

வரிசையாக நின்றிருந்தது கார்கள். அனைத்தும் உயர் ரகம். நான் அமர்ந்திருந்த காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் அந்த சிக்கலிலும் உள்ளே புகுந்து இறந்தவனின் வீட்டை ஒட்டியபடி காரை நிறுத்தினான். இவனை அழைத்து வந்தது உருப்படியான விசயம் என்று புரிந்தது.

காரில் அமர்ந்தபடியே உள்ளே நடப்பதை கவனித்தேன். கூட்டத்தில் எதுவும் சரியாக தெரியவில்லை. ஆனால்‌ செய்தி சேனல்‌ ஒன்று துக்க நிகழ்ச்சியை லைவ்வாக ஒளிப்பரப்பிக் கொண்டிருந்து. இறந்தவன் இப்போது ஆண்டுக் கொண்டிருந்தால் பத்து தொலைக்காட்சிகளாவது வரிசை கட்டி நின்றிருந்திருக்கும். முன்னால் மந்திரி என்பதால்‌ பாதுகாப்பும் கூட வழக்கத்தை விட குறைவாகதான் இருந்தது. இல்லையேல் இறந்தவன் எதிர் கட்சியை சேர்ந்தவன் என்பதால் இப்போதைக்கு போதிய செல்வாக்கு இல்லாமல் போயிருக்கலாம். இறந்தவனின் பிள்ளைகள் பிணத்தின் அருகே நின்றிருந்தனர். கண்ணாடி பேழைக்குள் இருந்த பிணத்தின் முகத்தை மறைத்த மலர் வளையங்களை எடுத்து கீழே வைத்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி. அவள் அவனின் மனைவியாக இருக்க கூடும். அவ்வப்போது கண்களை துடைத்துக் கொண்டாள்.

மலர் வளையத்தை டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவனிடம் நீட்டினேன். "இதை கொண்டு போய் பிணத்து மேல வச்சிட்டு வா.." என்றேன்.

அவன் கூட்டத்தை கவனித்தான்.

"உன்னால முடியாதா.?" என்றேன்.

"நான் பெரும் புள்ளிங்க.. என்னால முடியாம என்ன.? எக்ஸ் மினிஸ்டர்தானே.! பாதுகாப்பு கூட அவ்வளவா இருக்காது.." என்றவன் மலர் வளையத்தோடு இறங்கி சென்றான். காரில் அமர்ந்தபடி மடிக்கணினியில் லைவ் நியூஸை பார்க்க ஆரம்பித்தேன் நான்.

பூக்கடையில் பார்த்த பெண்ணின் முகம் மீண்டும் நினைவில் வந்தது. ஏனென்று தெரியவில்லை. அவளின் பார்வை மனதுக்குள் அச்சடித்தார் போல இருந்தது. என்னை ஏன் வெறிக்கிறாய் என்று அப்போதே அவளிடம் கேட்க தோன்றியது. ஆழ பார்வை பார்த்தாள் காணாததை கண்டது போல. கடைசிவரை அவளுக்கு ஆச்சரியம் குறையவேயில்லை. அவளின் புன்னகை என்னை ஏதோ செய்தது. பூக்களின் இடையே அவளும் ஒரு பூவாக நின்றிருந்தாள். நான் எந்த பெண்ணையும் வர்ணிப்பவன் அல்ல. எனக்கு பெண்களை பிடிக்கவும் பிடிக்காது. பெண்கள் பின்னால் சுற்றுவது எங்கள் குழுவில் தடை செய்யப்பட்டுள்ளது.

எத்தனையோ நாடுகள் சுற்றியாகி விட்டது. பலரும் வந்து மேலே விழுந்திருக்கிறார்கள் நான்தான் உலக அழகன் என்றெண்ணி. எனக்கு பிடிப்பில்லை. உலகத்தையே அழிக்க நினைக்கிறேன் நான். இந்த உலகத்தை உருவாக்கும் சக்தி பெண்கள். அதனாலேயே அவர்களை அடியோடு வெறுக்கிறேன்.

"அமைச்சர் மரிக்கொழுந்து இப்போது வந்துக் கொண்டிருக்கிறார். எக்ஸ் மினிஸ்டர் சங்கரனுக்கு இறுதி மரியாதை செய்ய வருகிறார்.." என்று தகவல் சொன்னான் ஒரு செய்தியாளன். நான் நேராக நிமிர்ந்து அமர்ந்தேன். பாக்கெட்டில் இருந்த என் செல்போனை எடுத்து கையில் வைத்துக் கொண்டேன்.

அந்த பணக்கார டிரைவரிடம் மலர் வளையத்தை தரும் முன்பே அதில் அந்த வெடிகுண்டு செல்போனை மறைத்து வைத்து விட்டேன்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றிருந்த போலிஸ் கனவில் கூட நினைத்திருக்காது இன்னும் சற்று நேரத்தில் இந்த இடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று. இந்த நாட்டில் மட்டுமல்ல இந்த உலகத்தில் கூட எங்கு வேண்டுமானாலும் எங்களால் வெடி குண்டு வைக்க முடியும். தங்க கட்டிகள் அடுக்கப்பட்ட அறைகளும், மதுபான பாட்டில்கள் அடுக்கப்பட்ட அறைகளும், பணத் தாள்களால் நிரம்பிய அறைகளுமே உங்களுக்கு விலைமதிப்பில்லாதவை. எங்களுக்கு தேவை அது எதுவும் இல்லை. எங்கள் தங்சேயா கேட்டால் உடனடியாகவே உலகின் பாதி தங்கத்தையும் பணத்தையும் அவரின் காலடியில் கொண்டு வந்து கொண்டுவார்கள் உங்களோடு கலந்து வாழும் துரோகிகள். எங்களின் அறுவடை முழுக்க மானிதர்கள் மட்டுமே. குப்பை தொட்டி, சாலையோர மரங்கள், அனாதை கார்கள், கூட்டம் நிறைந்த ஷாப்பிங் மால்கள்.. எங்கே வேண்டுமானாலும் எங்களால் வெடிகுண்டுகளை வைக்க இயலும். மக்களின் கூட்டம் அவ்வாறு. இதே உலகில் விரக்தியின் உச்சத்தில் வாழும் பாதி பேரை கூட எங்களால் மூளை சலவை செய்து எங்கள் கூட்டத்திற்கு அடிமைகளாக மாற்றி அவர்களின் முதுகில் வெடி குண்டுகளை கட்டி மக்கள் கூட்டம் நிரம்பிய இடங்களுக்கு அனுப்ப முடியும். இதை தவிர்க்க நீங்கள் மொத்த உலகத்தையும் சென்சாரின் கீழ் கொண்டு வருவீர்களே தவிர என் போன்றோரின் உரிமை குரல்களை காது கொடுத்து கேட்க மாட்டீர்கள். எங்களுக்கு ஏன் இந்த உலகின் மீது வெறுப்பு என்று யோசிக்க‌ மாட்டீர்கள்.

மரிக்கொழுந்து இறுகிய முகத்தோடு பிணத்தை நோக்கி நடந்தாள். நான் குண்டு வைக்க வந்தது இறந்த பிணத்திற்கு அல்ல. இறக்க போகும் இவளுக்குதான். இவள் என்ன தப்பு செய்தால் என்று கேட்கிறீர்களா.? இவள் நேர்மையாக உள்ளாள். அதுதான் தவறு. இந்த ஊரில் பல இடங்களில் குண்டு வெடிக்க வேண்டும் என்றால் அதற்கு முன் இவள் சாக வேண்டும். இல்லையேல் சுலபத்தில் எங்களை கண்டறிந்து விடுவாள் இவள். அதிகமாக செயல்பாட்டில் இருக்கும் மந்திரி இவள். தேவையில்லாத விசயங்கள் பலவற்றிலும்‌ தலையிட்டுக் கொண்டிருக்கிறாள். மற்றவர்கள் விச மரத்தை திட்டும் நேரத்தில் இவள் வேரை கண்டு பிடித்து அதை அழித்து விடும் அளவுக்கு அபாயமானவள். இவளை கொல்ல வேண்டும் என்று சொந்த கட்சி மந்திரிகளே காத்து கிடக்கின்றனர். ஏனெனில் நல்லவர்களை உங்கள் யாருக்கும் பிடிப்பதே இல்லை.

ஆயிரம் கெட்டவர்களை மெதுவாக அழிக்கலாம். ஆனால் ஒரு நல்லவரை கூட நாட்டில் விட கூடாது. இதை நான் முடிவு செய்யவில்லை. உங்கள் நாட்டு ஊழல்வாதிகள் எடுத்த முடிவு.

எனக்கு கார் ஓட்டி வந்தவன் ஏன் எனக்கு கார் ஓட்டி வந்தான் என்றால் இவளின் மரணத்தை காணதான். அவன் புதிதாக எடுத்திருக்கும் அரசாங்க டென்டருக்கு குறுக்கே நிற்பவள் அவள். அதனால் பல நூறு கோடிகள் அவனுக்கு நட்டமாகும். அதுவே இவன் கைக்கு டெண்டர் வந்தால் அதில் கால் பங்கு பணத்தில் தரமற்ற முறையில் பணியை செய்துவிட்டு மீதி பணத்தை தன் பேங்க் புத்தகத்தில் பிரிண்ட் போட்டுக் கொள்வான். அவளை நான் கொன்றால் லாபம் அடைவோரில் இவனும் ஒருத்தன். நான் இந்த நாட்டுக்கு வெடிக்குண்டு வைத்தால் இவன் கவலையேபட மாட்டான். செத்து போகும் சில ஆயிரை பேரை விட அவனுக்கு அந்த பல நூறு கோடிகள்தான் முக்கியம்.

அரசியல் கொலைகள் வரலாற்றில் எழுதப்படும். அதனால் அந்த கொலைகள் அனைத்தும் கைத்தேர்ந்த கொலைக்காரர்களாலேயே நடத்தப்படும் என்பது எழுதப்படாத சட்டம். இதே ஊரில் உள்ள கொலைக்காரன் செய்திருப்பான் இந்த கொலையை. ஆனால் நான் செய்ய காரணம் இந்த நாட்டில் அடுத்தடுத்து வெடிக்க இருக்கும் வெடிகுண்டுகளுக்கான முன்னோட்டத்தை பற்றி அறிவிக்கவே.

சென்றவன் வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்தான். வியர்த்திருந்த முகத்தை துடைத்துக் கொண்டான்.

அவன் வைத்து வந்த மலர் வளையம் மற்ற மலர் வளையங்களோடு சேர்ந்து தரையில் கிடந்தது.

மரிக்கொழுந்து பிணத்தின் அருகே சென்றாள். மலர் வளையத்தை வைத்தாள். இரு கைகளாலும் கும்பிட்டாள். அவளின் நேர்மைக்கு இது போன்ற ஒரு ஊழல்வாதிக்கு இறுதி மரியாதை செய்ய கூடாது. ஆனால் இதெல்லாம் அரசியல் மொய். இந்த கட்சியிலிருந்து இவள் சென்று மலர் வளையம் வைத்தால்தான் நாளை அந்த கட்சியிலிருந்து ஒருவன் வந்து இவர்கள் கட்சியின் தலைவருக்கு பிறந்த நாள் மாலை சூட்டுவான்.

மரிக்கொழுந்து வராத கண்ணீரை துடைத்துக் கொண்டாள். திரும்பினாள். நேரலையில் அவளது முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த நான் என் போனை எடுத்து எண்களை பதிந்தேன். "ட்ட்டமார்.." சத்தம் ஒலித்தது. ஆனந்தத்தில் கண்களை மூடி அந்த பரவசத்தை அனுபவித்தேன். இதே போன்ற ஒரு சுகத்தை உங்களால் எப்போதுமே அனுபவிக்க இயலாது.

"அம்மா.. அப்பா.. அச்சோ.." என்று கதறல்கள் காற்றில் மிதந்து வந்தது.

"போகலாமா.?" என்றான் டிரைவர். அவனின் குரல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. பயந்திருப்பான் போல.

"ம். போலாம்.." என்றேன் கணினி திரையில் தெரிந்த வெள்ளை கோடுகளை பார்த்தபடி. அருகே நின்று நியூஸை வாசித்துக் கொண்டிருந்தவர்கள் மட்டுமல்ல அந்த வீட்டுக்குள் உறங்கி கொண்டிருந்த கிழவர்கள் கூட இறந்திருப்பார்கள் இந்த வெடிக்குண்டுக்கு.

குழந்தைகள் உட்பட மொத்தமாக ஐநூத்தி எழுபது பேர் இறந்து போனதாக மறுநாள் நியூஸில் வாசித்துக் கொண்டிருந்தாள் ஒரு மங்கை. இந்த வகை வெடிக்குண்டுகள் ___ நாட்டில்தான் தயாரிக்கப்படுகிறது என்று மற்றொரு செய்தி சேனலில் வட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இது உண்மைதான். அந்த ___ நாட்டில்தான் இந்த வெடிக்குண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் தயாரித்தது எங்களின் குழுவேதான். தங்கத்தையும் போதை பொருட்களையும்‌ சுலபமாக கடத்தும்போது இந்த வெடிக்குண்டுகளை நாட்டிற்குள் கடத்தி கொண்டு வர முடியாதா என்ன.?

மறுநாள் மாலையில் வடக்கே இருந்த ஒரு நகரத்திற்கு கிளம்பினேன். அங்கே ஒரு மத வழிபாடு நடக்க இருக்கிறது. அதில் ஒரு பட்டாசை கொளுத்தி போட்டால் கூட போதும். மொத்த நாடும் இரண்டாக பிரிந்து நின்று கலவரத்தை செய்யும். பற்று வெறியாக மாறினால் அது உங்களுக்கே எமனாக மாறும். நான் சொன்னால் இதை நம்ப மாட்டீர்கள்.

மத வழிபாடு நடந்த இடத்திற்கு அருகில் உயர் தர வெடிப்பொருளை வைத்துவிட்டு நகர்ந்தேன். அன்றைய இரவில் டமீல் என்று வெடித்தது அது. வழிபாட்டில் கலந்துக் கொண்டிருந்த மக்களில் வெறும் அறுபது பேர் இறந்ததாக செய்தி வந்தது. அறுபது இலக்கு அல்ல. ஒரு ரிஸ்கிற்கு ஆறு லட்சம் பேர் இலக்கு. எங்களுடைய இலக்கு எப்போதும் தவறாது. சில நாட்களிலேயே கலவரம் ஆரம்பித்தது. கலவரத்தில் ஒரு லட்சம் பேர் இறந்தார்கள். நான் ஹோட்டல் அறையில் அமர்ந்தபடி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா என்று காத்திருந்தேன்.

நான் இங்கே வந்து ஒரு மாதம் ஓடிவிட்டது. மூன்று இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தது. போலிஸ் தீவிரமாக என் குழுவை தேடிக் கொண்டிருக்கிறது. நான் குழுவாக வரவில்லை. ஒற்றை ஆளாகவே அனைத்தையும் செய்துக் கொண்டிருக்கிறேன்.

நாட்டின் பாதி இடம் கலவரமாக இருக்கிறது. ஆனாலும் பாதி பேர் தான் உண்டு‌ தன் வேலை உண்டு என்று இருக்கிறார்கள்.

இன்னும் ஒரு மாதம் இருக்கிறது எங்களின் திட்டத்தை ஆரம்பிக்க. ஆமாம் நான் இன்னும் எங்களின் திட்டத்தை ஆரம்பிக்கவில்லை. இது வெறும் முன்னோட்டம்.

நகரம் நகரமாக சுற்றி அலைந்து விட்டு மீண்டும் அதே ஹோட்டல் அறைக்கு வந்தேன். எனக்கு டிரைவராக இருந்தவன் இப்போது பயத்தோடு என்னை பார்த்தான். ஆனால் என்னை பற்றி வெளியே சொல்ல மாட்டான். ஏனெனில் அவனும் சேர்ந்து மாட்டிக் கொள்வான். அவனுக்கு அவனின் பாதுகாப்பு முக்கியம்.

மாலை நேரத்தில் காலாற நடக்கலாம் என்றெண்ணி ஹோட்டலை விட்டு வெளியே வந்தேன்.

"நானும் உங்க கூட வரட்டா சார்.?" என்றான் அந்த டிரைவர்.

"இல்ல. நான் கொஞ்ச நேரத்துல திரும்பி வந்துடுவேன்.." என்று விட்டு கடைத்தெருவை நோக்கி நடந்தேன்.

கடை தெருவில் ஒரு ஓரத்தில் குழந்தை ஒன்று நின்றிருந்தது. கிழிந்த உடையோடு அழுக்கு முகத்தோடு கையேந்திக் கொண்டிருந்தது. அக்குழந்தையின் ஒட்டிய வயிறை பார்க்க முடியவில்லை என்னால்.

விரைவில் இது அத்தனையும் மாறும் சிறுமியே. இந்த மொத்த உலகத்தையும் எங்களோட குழு அழிக்கும். நீ அனுபவித்த பசியை மற்றவர்களும் அனுபவித்தபடி இறப்பார்கள்.

இப்போதெல்லாம் பிச்சை எடுப்போர் அனைவரும் பசியால் அல்ல. நாடு முன்னேறி விட்டது. பாதி பேர் ஒரு தலைவனின் கீழ் அவனுக்காக பிச்சையெடுக்கிறார்கள். பிச்சையாக கிடைத்த அரை வயிறு உணவையும் இன்னொருத்தனுக்கு‌ தந்துவிட்டு அவன் தரும் பாகத்துக்காக காத்திருக்க வேண்டும்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN