முகவரி 39

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஒரு பெண்ணின் பெண்மை எங்கே அடிபட்டு, அவமானப்பட்டு நிற்கிறதோ... அங்கே அவளை மென்மையாலும்... தன் அன்பாலும்.. அக்கறையுடன் எவன் ஒருவன் தன்னோடு அள்ளி அரவணைத்து அவளின் மனத்துயரைத் துடைக்கிறானோ அவன் தான் உண்மையான புருஷன்! இல்லை இல்லை… நல்ல ஆண்மகன்!

இதைத் தான் பொட்டில் அடித்தார் போல்.. தன் கணவனுக்குச் சொல்லி விட்டு வந்திருக்கிறாள் அனு.

மிருடனுக்குமே, முன்பு தெரியாதது எல்லாம் இப்போது தெரிந்தது... புரிந்தது. தன்னுடைய ஆணவத்தால் தான் இழந்ததை விட தன் மனைவியும் மக்களும் இழந்தது அதிகம் என்பதை உணரந்தவன்... இதற்கு மேல் அவர்கள் இருவரையும் தன் கண்ணுக்குள் வைத்து காக்க நினைத்தான் அவன். இங்கு இவன் இப்படி நினைத்திருக்க… அங்கு அவன் மனைவியோ வேறு ஒன்றைச் செய்திருந்தாள்.

இவன் வேலை விஷயமாய் வெளிநாடு வந்ததால்... அதை முடித்து மிருடன் இந்தியா திரும்ப, மனைவி சென்ற நாளிலிருந்து மேலும் இரண்டு தினங்கள் ஆனது. அதுவரை கணவன் மனைவி இருவருமே பேசிக்கொள்ள வில்லை.
இவன் இன்று வீட்டிற்கு வர... வீட்டிலோ அவன் மனைவி இல்லை.

“ஷிதா எங்க க்கா?” இவன் தமக்கையிடம் விசாரிக்க

அவனை ஒரு முறை முறைத்தவள், “என்ன கேட்டா? அவ என் கிட்ட சொல்லிட்டுப் போறாளா... இல்ல... நீ தான் போகிற இடத்தை எல்லாம் என் கிட்ட சொல்லிட்டுப் போயிருக்கியா? எனக்கு தெரியாது. உங்களுக்கு எல்லாம் குடும்பம், பிள்ளைகள் எதுக்கு? இப்படியே ஏட்டிக்குப் போட்டி செய்திட்டு உட்கார்ந்து இருங்க... குடும்பம் விளங்கிடும்” அவள் இன்னும் சகட்டு மேனிக்குத் திட்ட...

அதை எல்லாம் கேட்க பொறுமை இல்லாதவனாக, பாதி பேச்சில் அங்கிருந்து விலகி தங்கள் அறைக்கு வந்தவன்... மனைவி ஏதாவது தனக்கு குறிப்பு வைத்து விட்டு சென்றிருக்கிறாளா என்று இவன் ஆராய… அப்போது அவன் கையில் கிடைத்தது டிரெஸ்ஸிங் டேபிள் மேலிருந்த அனு எழுதி வைத்துச் சென்ற கடிதம்.

இவன் எடுத்து அதைப் படிக்க, “நான் போகிறேன்... என்னைத் தேட வேண்டாம்” இதோ இது தான் அதில் வார்த்தைகளாக இருந்தது. இவனுக்கு வந்த கோபத்திற்கு, “நீ இப்படி செய்வேன்னு நினைக்கலை டி..” என்று பல்லைக் கடித்தவன்... “உன்னை யாரு விட்டது? இதோ வரேன்” என்றவன் வேகமாய் வெளியே வர...

“என்னத்தை சொல்ல… இப்போ இருக்க பிள்ளைகளுக்கு எல்லாம், தான் என்ற கொம்பு முளைக்குது... நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்... மதிக்காம உள்ளே போறான் பாரு... இதுங்களை எல்லாம்... என்னத்த...” வெண்பா இங்கே தன் அர்ச்சனையைத் தொடர்ந்து கொண்டிருக்க… அவளிடம் வந்தவன்,

“கொஞ்சம் நிறுத்தறியா க்கா...” மிருடன் குரல் ஓங்கி ஒலிக்கவும்… கப்சிப்பென வாயை மூடிக் கொண்டாள் வெண்பா.

“நீ எதுக்கு க்கா வீட்டில் இருக்க? இல்ல… எதுக்கு இருக்கன்னு கேட்குறேன்... ஒருத்தி எங்க போறா... வரான்னு பார்க்கிறதை விட அப்படி என்ன வேலை க்கா உனக்கு? ஏன் எல்லோரும் சேர்ந்து என்னை இப்படி படுத்துறீங்க... இனி அவளை நான் எங்கே போய் தேடுவேன்?” இவன் கோப மிகுதியில் இன்னும் சீற…

இதுவரை அனு... ஏதோ பக்கத்தில் சென்றிருக்கிறாள் என்று நினைத்து இயல்பாய் இருந்த வெண்பா, “என்ன டா.. என்ன ஆச்சு... அனுவுக்கும் உனக்கும் ஏதாவது பிரச்சனையா... அனு எங்க?” இவள் பதட்டமாய் கேட்க

“வீட்டில் இருக்கிற நீ என்னை கேளு. இந்தா… இதிலே பாரு” கடிதத்தை இவன் தமக்கையிடம் நீட்டவும்..

அதை வாங்கிப் படித்தவள், “ஈஸ்வரா! என்ன இந்தப் பொண்ணு இப்படி எழுதி வச்சிட்டுப் போயிருக்கா... நேற்று நீ ஜீவா கிட்ட எப்போ வருவேன்னு சொல்லிட்டு இருந்ததை எல்லாம் கேட்டாளே!... அதான் இன்று நீ வருவதற்குள்ள கிளம்பிட்டாளா? என் கிட்ட அண்ணி.. அண்ணின்னு நல்லா தானே பேசினா. இந்தக் குழந்தைகளை கூட அவ நினைக்கலையே... அய்யோ ஆண்டவா! இனி அந்தப் பிள்ளைகளுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?” வெண்பா சுத்தமாய் இடிந்து போனவளாய் வேதனையுடன் சோபாவில் அமர்ந்து விட…

“எங்க போய்ட போறா... எங்கே இருந்தாலும் அவளை தேடி கண்டுபிடிச்சிட மாட்டேன்?... பிடித்த பிறகு தானே இருக்கு அவளுக்கு..”

“என்ன டா... மிருடா சொல்கிற... கண்டுபிடிச்சிடுவியா... உன்னால் முடியுமா? அப்போ சீக்கிரம் போய் அழைச்சிட்டு வாடா. புள்ள தனியா... எங்க போய் எப்படி இருக்காளோ... போடா போய் குழந்தையை கூட்டிட்டு வா டா...” இவள் நிம்மதி குரலில் பரபரக்க

“ஆமா குழந்தை... இப்படியே குழந்தை குழந்தைன்னு அவளை கொஞ்சிட்டு இருங்க. வரட்டும் அவ... இந்த மிருடன் யாருன்னு அவளுக்கு காட்டறேன்....” என்று சூளுரைத்தபடி அங்கிருந்து விலகியிருந்தான் மிருடன்.

“இவன் இவ்வளவு நம்பிக்கையா சொல்லிட்டுப் போகிறான்... அப்போ அனுவை கண்டுபிடிச்சிடுவான்... இவங்க கல்யாணத்திற்க்கு நாள் குறித்த பிறகு... இந்தப் பொண்ணு அப்படி எங்கே போனா? மறுபடியும் இதுங்களுக்குள்ள பிரச்சனையா? அப்பனே ஈஸ்வரா... அவளை காண்பித்து கொடுத்துடுப்பா...” சற்றே நம்பிக்கை வர… இருந்தும் தன் வேண்டுதலை வைத்தாள் வெண்பா.

ஆமாம், போன முறை சவால் விட்டு மிருடன் எப்போது டெல்லி கிளம்பினானோ... அப்போதே இவர்கள் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து விட்டான் அவன். இப்போது தொழில் முறையாக அவசரமாக வெளிநாடு சென்றவன்... திரும்பி வரும் நாளைக் கருத்தில் கொண்டு அதை கணக்கிட்டு முன்பே.. நாள், நட்சத்திரம் எல்லாம் பார்த்து ஏற்பாடு செய்திருந்தான்.

அதில் சிலது வெண்பாவுக்குத் தெரியும். அனு இந்தியா வந்ததும் அவள் காதிலும் விஷயத்தைப் போட்டு விட்டாள் இவள். திருமணத்திற்கு எந்த மறுப்பும் அன்று சொல்லாமல் இருந்தவள் இதோ… இன்று அவளைக் காணவில்லை. அதுவும் என்னைத் தேடாதீர்கள் என்ற குறிப்புடன்.

மிருடனுக்குள் கோபம் இருந்தாலும் நம்பிக்கையும் இருந்தது. அந்த நம்பிக்கையுடன் தான் கிளம்பினான் அவன். தொழில்முறை எதிரிகளிடமிருந்தும், ஜீவாவின் உறவுமுறை எதிரிகளிடமிருந்தும் தன் குடும்பத்தைக் காப்பாற்ற... எப்போதும் ஒரு சில நிழல் மனிதர்களை தன் குடும்பத்தார்க்கு நியமித்து இருந்தான் அவன். இப்போது அவர்களைப் போனில் அழைத்து பேச பொறுமை இல்லாமல் இதோ அவர்கள் அலுவகத்திற்கே விரைந்து விட்டான்.

இவன் உள்ளே நுழைய... அதன் நிர்வாகியே அங்கு அமர்ந்து இருக்க... இவன் மனைவி காணவில்லை என்று சொல்லி மனைவியைக் கண்காணிக்க இருந்த நிழல் மனிதரை வரச் சொல்ல... வந்தவன் தனக்கு தெரியாது என்று கையை விரிக்க... கோபத்தில் முதன் முறையாக மனதிற்குள் பயம் வந்து குடிகொண்டது மிருடனுக்கு. அந்த நபர் எதிராளியிடம் விலை போய் விட்டானோ என்று சந்தேகத்தில் இவன் அவனை அடித்து உதைத்து கேட்க... அவனோ தனக்கு தெரியாது என்றே சொன்னான். பின் அனுவை இவன் கடைசியாய் பார்த்தது எப்போது என்று விசாரிக்க...

“சார்... மேம் வீட்டிலிருந்து கிளம்பி ஒரு மால் போனாங்க. நானும் அவங்களை கொஞ்சம் இடைவேளை விட்டு தான் தொடர்ந்தேன். திடீர்ன்னு ஒரு floor போனவங்க காணோம். எங்க தேடியும் மேடமை காணோம் சார். உங்க கிட்ட சொல்ல பயம் சார். அதான் இவ்வளவு நேரம் சொல்லலை...” அடிவாங்கிவன் வலியுடன் அனைத்தையும் ஒப்புவிக்க...

“இப்போ மட்டும் உன்னை சும்மா விட்டுடுவேன்னு நினைக்கிறியா?” என்றபடி தரையில் விழுந்து கிடந்தவனை மிருடன் ஓங்கி மிதிக்க எத்தனிக்க... அந்த நிர்வாகத்தின் உயர் அதிகாரி அவனைப் பிடித்து தடுத்தவர்... “வாமணன் சார், இவனை அடிக்கிறதுக்குப் பதில்... மேடம் போன மாலோட சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்தா ஏதாவது தெரியும். டைம் வேஸ்ட் பண்ணாமல் வாங்க, அங்கே போய் பார்க்கலாம்” என்ற படி அவனை இழுத்துச் செல்ல... ஒரு முறைப்புடன் அங்கிருந்து விலகினான் மிருடன்.

ஃபுட்டேஜில் அனு மால் வந்தது இருக்க... ஆனால் அவள் வெளியே சென்றது மட்டும் இல்லை. இவனுக்கு வந்த கோபத்திற்கு அந்த மால் நிர்வாகிகளை எல்லாம் சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தான் மிருடன். என்ன செய்து என்ன... அனுவை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வளவு நேரம் அவனுள் சிறிதே பயம் தொற்றிக்கொண்டு இருந்ததில்... தற்போது உள்ளுக்குள் நடுங்கவே ஆரம்பித்தான் அவன்.

அவனுக்கு இருந்த பயத்தில்... இனிமேல் யாரை அடித்து, மிரட்டி விரட்டி என்ன பிரயோஜனம்? என்று உணர்ந்தவன் தானே காரை எடுத்துக்கொண்டு மனைவியைத் தேட ஆரம்பித்தவன் தனக்கு தோன்றிய இடம்... நினைத்த இடம் எல்லாம் சுற்றினான். மனைவியைப் போல ஜாடையில் யாராவது தெரிந்தால்... வண்டியை நிதானிப்பவன்.. அவள் இல்லை என்றதும் பிறகு தேடல் பயணத்தை தொடர்ந்தான்.

ஊரிலிருந்து வந்த காலையின் போது இவன் பயணம் தொடர்ந்தது. இதோ மாலை மங்கி... இரவு கழிந்து மறுநாளுக்கான விடியலும் வந்து விட்டது. ஆனால் அவன் மனைவி தான் கிடைக்கவில்லை. தாகம், பசி, தூக்கம் மறந்தவனாக… மறந்தவன் என்ன மறந்தவன்… அதெல்லாம் அவனுக்கு நினைவிருந்தால் தானே? நேற்றிலிருந்து மனதிற்கும்... மூளைக்கும் இடையில் இப்படியான உணர்வுகள் அவனுள் உருண்டால் தானே அவனுக்கு இதெல்லாம் தெரியும்?

தம் தமக்கை, தம் பிள்ளைகள்… இவர்களைக் கூட மறந்தவனாக... உடல், எண்ணம்.. மூச்சு என்று அவன் நினைவு முழுக்க மனைவியே வியாபித்திருக்க... எங்கேயாவது காரை நிறுத்தி ஒரு பாட்டில் தண்ணீர் வாங்குபவன், அதில் முகம் கழுவிக்கொண்டு மறுபடியும் தேடல் வேட்டையை ஆரம்பிப்பான் அவன். விடிந்தும் தம்பி வரவில்லை என்றதும், வெண்பா இவனுக்கு அழைக்க... யாருடைய அழைப்பையும் எடுக்காமல் இருந்தவன்.. தமக்கை என்றதும் அழைப்பை ஏற்றவன், “என்ன க்கா… ஷிதா வீட்டுக்கு வந்துட்டாளா?” என்று இவன் எடுத்ததும் பரபரப்புடன் கேட்க

“என்ன டா என்னை கேட்கிற... அப்போ இன்னும் அனு கிடைக்கலையா டா?” என்று பதறியவள், “மிருடா.. நேற்று வீட்டை விட்டுப் போனவன் டா நீ. இன்று வரை எங்கே இருக்க… என்ன செய்ற... எனக்கு உன்னை நினைத்து தான் டா பயமா இருக்கு. நீ வீட்டுக்கு வா... நம்ம மாமாவும் அவருக்கு தெரிந்தவர்களை வைத்து அனுவை கண்டுபிடிக்க சென்று இருக்கார்.. நீ வீட்டுக்கு வாடா” வெண்பா அழுகையின் ஊடே கெஞ்ச

“ஊஹும்... அவ இல்லாமல் நான் வர மாட்டேன் க்கா… வந்தா அவளோட தான். அப்படி இல்லனா... என் பிள்ளைகளை நீ பார்த்துக்க க்கா... விட்டுடாத க்கா...” இவன் குரல் கம்மியது.

தம்பி அழுகிறான் என்பதை உணர்ந்தவள், “டேய்... என்ன இப்படி எல்லாம் பேசுற... அனு கிடைச்சிடுவா நீ வீட்டுக்கு வா டா.. மான்வியும்... ஜீவாவும் அப்பா... அப்பா.. ன்னு உன்னைத் தேடுதுங்குதுங்கா டா...” பிள்ளைகளைப் பற்றி சொன்னாலாவது தம்பி வீடு வருவானா என்ற எண்ணம் இவளுக்கு.

“ம்ஹும்... எனக்கு அவ தான் க்கா முதலில்... பிறகு தான் பிள்ளைகள். நீ போனை வை… நான் அவளைத் தேடி கூட்டிட்டு வரேன்” என்ற படி அழைப்பைத் துண்டித்திருந்தான் மிருடன்.

எந்த நம்பிக்கையில் அப்படி சொன்னானோ.. இல்லை எது அவனை உந்து தள்ளியதோ... தன் தேடல் பயணத்தை மறுபடியும் தொடர்ந்தான் இவன். மாலை நேரம் ஆதியுடமிருந்து இவனுக்கு அழைப்பு வர... அவசரமாய் அதை எடுத்தான் இவன். ஏனென்றால் முன்பே சொல்லியிருந்தான்… ஷிதாவை பற்றி தகவல் இருந்தால் மட்டும் தன்னை அழை என்று. அதனால் எடுத்தவன், “சொல்லு ஆதி… மேடம் வீட்டுக்கு வந்தாச்சா?” இவன் அதே அவசரத்துடன் கேட்க

“பாஸ்… அது வந்து… நீங்க கொஞ்சம் ஆபீஸ் வர முடியுமா?” ஆதி தடுமாறிய படி கெஞ்சலாய் அழைக்க

“என்ன டா… ஷிதா ஆபீஸில் தான் இருக்காளா? இதோ வரேன்...”

“இல்ல இல்ல பாஸ்... மேடம் இங்கே இல்ல. ஆனா நீங்க நேரில் வரணும்... ஒரு விஷயம்” ஆதி இன்னும் தயங்க

இவனுடைய இதயமோ படு வேகமாக துடித்தது. ‘அவளுக்கு... அவளுக்கு... காலையிலேயே ஏனோ அக்காவிடம் வாய் தவறி தன்னவள் இல்லை என்றால் என்ற வார்த்தையை சொல்லி விட்டேன். இப்போது அப்படி ஏதாவதா?... இல்லை அப்படி எதுவும் இருக்காது. மனதை திடப்படுத்தியவன்...

“என்ன ஆதி... ஏதாவது ஆஸ்பிடல்... ஆக்சிடெண்ட்...” இவன் சொல்ல முடியாமல் கண்ணில் கண்ணீருடன் திணற...

“ஐயோ பாஸ்... பாஸ்... அப்படி எல்லாம் இல்லை. நீங்க நேரில் வந்தா தான் பாஸ் விவரமா சொல்ல முடியும். மேடம்க்கு ஒண்ணுமில்லை பாஸ் அதை மட்டும் நான் உறுதியா சொல்கிறேன்... கொஞ்சம் வாங்க...” இவன் மன்றாடும் குரலில் அழைக்க

அந்த குரலுக்கு எவ்வளவு விரைவாக முடியுமோ... அவ்வளவு விரைவில் தன் அலுவலகத்தில் இருந்தான் மிருடன். இவன் தன் பார்வையால் அந்த அறையை வட்டமிட்ட படி டேபிளிடம் நெருங்க.. அவனிடம் எப்படி விஷயத்தை சொல்வது என்று ஆதி இன்னும் தயங்கிய படி ஒத்திகை பார்த்து கொண்டு இருக்க

அதை கண்டவன், “ஆதி.. இதென்ன மென்று முழுங்கற நேரமா இது? என்னன்னு சீக்கிரம் சொல்லு” இவன் ஒரு அதட்டல் போட

“பா...ஸ்... நாளைக்கு காலையில் பிரஸ் மீட்டிங் அரேஞ் பண்ண சொல்றாங்க மேடம்... உங்க கிட்ட சொல்லாமல் எப்படி செய்யறது…. அ...தா...ன்...” சொல்லி முடிப்பதற்குள் இவனுக்கு தொண்டை வறண்டு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டி கொண்டது.


என்னது மேடமா… நேற்றிலிருந்து இவனும் ஷிதாவை தேடுகிறான் தானே… இப்போது மேடம் சொன்னாங்கன்னு சொல்கிறான் அப்போ.. அவன் சொன்னதை தன்னுள் சரியாக வாங்காதவன் போல், “வாட்? சே அகெய்ன்...” இவன் கர்ஜிக்க

“பாஸ், எனக்கு எதுவும் தெரியாது பாஸ்... மேடம் தான் அப்படி செய்ய சொல்றாங்க” ஆதி உண்மையாகவே நடுங்கி விட்டான்
“பளார்...” இவன் கொடுத்த ஒரு அறையில்... எங்கோ போய் விழுந்தான் ஆதி. இதுவரை ஆதியை இவன் அடித்தது இல்லை.

“ஓஹோ... அப்போ உன் மேடம் இருக்கிற இடம் உனக்குத் தெரியும். அதாவது சம்பளத்தை என் கிட்ட வாங்கிட்டு உன் மேடம்க்கு நீ உழைத்தியிருக்க. அப்படி தானே?” இவன் மீண்டும் கர்ஜிக்க

“பாஸ்... நீங்க என் பாஸ்... ஆனா உங்களுக்கே பாஸ் அவங்க... அப்போ பெரிய பாஸ் சொல்வதை நான் கேட்கணும் தானே?” தைரியம் இல்லை என்றாலும் ஏதோ சொல்லி விட்டான் ஆதி.

“பெரிய பாஸ்.. ஹ்ம்ம்... நல்லா பேச கற்றுகிட்ட ஆதி. இதெல்லாம் உன் பெரிய பாஸ் டிரைனிங்கா... அப்புறம் வேற என்ன சொன்னாங்க உன் புது பாஸ்... எதற்காம் பிரஸ் மீட்டிங்?” மனைவி நன்றாக இருக்கிறாள் என்பதில்... இவனிடம் பழைய கம்பீரம் மீண்டு இருந்தது.

“அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க பாஸ். பிரஸ் மீட் ஏற்பாடு செய்யச் சொன்னாங்க. உங்களை கேட்காமல் எப்படின்னு...”

“என்ன டாஷ்க்கு இப்ப பிரஸ் மீட் வைக்கப் போறாளாம்?” வாய்க்குள் முணுமுணுத்தவன்

“முடியாது...” என்று ஒற்றை சொல்லாய் ஆதிக்கு பதில் தர

“பாஸ்...” அவன் தயங்கிய படி இழுக்க...

“ஆதி... நீ முழுசா... உன் பெரிய பாஸ் இருக்கிற இடத்திற்குப் போய் சேரணும்னா... ஒழுங்கா நான் சொன்னதை அங்கே போய் சொல்லிடு. கிளம்பு... இதைப் பற்றி நான் இதற்கு மேலே யோசிக்கணும்னா... இனி என்னுடைய பேச்சு வார்த்தை எல்லாம் உன் பெரிய பாஸ் கிட்ட மட்டும் தான். இப்போ நீ போயிட்டு உன் பாஸை இங்கே வந்து பேச சொல்லு...” இவன் உத்தரவாய் சொல்ல

அவன் தயங்கிய படியே வெளியேறினான். கண்கள் சிவக்க தான் அமரும் ரோலிங் சேரை குத்தியவன், “வா டி... வா.. இப்போ மட்டும் நீ வந்த... உன்னை கன்னம் கன்னமா அறைவேன் டி...” என்றவன் பின் ஆசுவாசமாய் அந்த சேரிலேயே அமர்ந்தான் அவன்.

இவன் வைத்த ஆட்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு.. இன்று வரை கண்டுபிடிக்க முடியாதா இடத்தில் அனு இருக்கிறாள் என்றால்... அப்போதே இவன் யோசித்திருக்க வேண்டும்... மனைவி தன் விரல் கொண்டே தன் விழிகளைக் குத்தியிருக்கிறாள் என்று. ஆனால் இவனுக்கு இருந்த பதட்டத்தில்... அதைத் தான் செய்யாமல் விட்டான் மிருடன்.

இவன் கண்கள் மூடி அமைதியாக அமர்ந்திருந்த நேரம்... அதை கெடுக்கவென்றே ஒலித்தது... அவனின் போன். அழைப்பது தமக்கை தான் என்றதும்... இவனுக்குள் கோபமும்... நிதானமும் ஒருங்கே தோன்ற... யோசனையுடன் அதை எடுத்து இவன் ஹலோ என்றதும்,

“தம்பி... ராஜா… ராசா.. கொஞ்சம் வீட்டுக்கு வரியா ப்பா...” எடுத்ததும் மிக மிக நிதானமாக இறங்கிய குரலில் கெஞ்சியது வெண்பாவின் குரல்.

“என்ன க்கா... உன் குழந்தை போன் செய்தாளா?”

உண்மை அது தான்... அனு வெண்பாவுக்கு அழைத்து பேசி இருந்தாள் “அது வந்து தம்பி...” இவள் திக்க

“அந்த இடியட் என்னை தவிர... எதற்கு க்கா... எல்லார் கிட்டவும் பேசிட்டு இருக்கா? அவளை ஒழுங்கா வீட்டுக்கு வரச் சொல்லு க்கா...” இவன் குரல் சீறியது.

“டேய், என்ன டா இப்படி எல்லாம் பேசுற?”

“இதற்க்கு மேலேயும் பேசுவேன் க்கா... எனக்கு இருக்கிற ஆத்திரத்துக்கு... நீ வைக் கா...” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டான் இவன்.

இவனுக்குள் கட்டுக்கடங்காத கோபம் குமிழியது. “எதுக்கு டி... வீட்டை விட்டுப் போன... இப்போ எதற்கு பிரஸ் மீட்... அதையும் என் கிட்ட பேசாம... செய்யச் சொல்கிற. நீ வீட்டுக்கு வராமல் நான் எதையும் செய்ய மாட்டேன் டி. இப்போ நான் நினைத்தாலும்... நீ இருக்கிற இடத்திற்கு என்னால் வர முடியும்... ஆனா அதை செய்ய மாட்டேன்... நீயே வா...” இப்படியே இவன் புலம்பிக் கொண்டிருந்த நேரம், அறையின் உள்ளே நுழைந்தாள் வெண்பா.

“தம்பி, உன்னை வீட்டுக்கு தானே வரச் சொன்னேன்?”

“அவ வராமல் நான் வர மாட்டேன் க்கா...” எதையும் முழுதாக காதில் வாங்காமல் இவன் பதில் தர...

“நீ பிரஸ் மீட் வைத்தா அவ வரேன்னு சொல்றா” தமக்கை எடுத்து சொல்ல

“முதலில் அவளை வீட்டுக்கு வந்து… எதற்கு வீட்டை விட்டுப் போனால்னு எனக்கு விளக்கம் கொடுக்கச் சொல்லு… பிறகு நான் அதை செய்கிறேன்”

“அண்ணி, நிச்சயம் இவர் கிட்ட விளக்கம் கொடுக்கிறேன்னு சொல்லுங்க. அதுக்கு முன்னாடி இந்த பிரெஸ் மீட்டுக்கு அனுமதிக்க சொல்லுங்க” அனுவின் குரல் தான்… வெண்பாவின் கைப்பேசியில் இருந்து ஒலித்தது... அதுவும் மிக அழுத்தமாய்.

மிருடனுக்கு புரிந்தது.. தன்னுடன் நேரடியாக பேச விரும்பாமல்… இப்படி அக்காவின் கைபேசி மூலம் தன்னுடையதை சாதிக்க முயற்சிக்கிறாள் என்று

அதனால் மனைவியின் குரலைக் கேட்டதும் இன்னும் கோபம் கொண்டவனாக, “ஏய்... வீடியோ கால் வா டி...” இவன் மனைவிக்கு உத்தரவு இட

“அண்ணி, நான் சொன்னதை அவரை செய்யச் சொல்லுங்க” இவள் சொன்னதையே திரும்ப சொல்ல

தாடை இறுக... “என் கிட்ட பேசு டி...” இவன் கர்ஜிக்க

“அண்ணி, நான் பேசுறேன்... அவரைப் பார்க்கிறேன். ஆனா எல்லாம் பிரஸ் மீட்டுக்குப் பிறகு தான்னு சொல்லுங்க..”

“இந்த நிமிஷம் நீ இருக்கிற இடத்தைக் கண்டு பிடித்து வந்தேனா... உயிரோட உன்னைப் புதைச்சிடுவேன் டி...” தன்னிடம் பேசாமல் அக்காவிடமே பேசுகிறாளே... இவனுக்குள் கோபம் கனன்றது.

“சரி… செய்யட்டும்... ஆனா அதையும் அவர் பிரெஸ் மீட்டுக்குப் பிறகு தான் செய்ய முடியும்னு சொல்லுங்க அண்ணி”

“திமிராடி... உனக்கு திமிரா... உன்னை...” கணவன் மனைவி இருவரின் பேச்சிலும் இடை புகுந்த வெண்பா

“மிருடா... அவ தான் பிரெஸ் மீட் வச்சா பார்க்கிறேன்னு சொல்கிறாளே... நீ கொஞ்சம் கேட்டா தான் என்ன டா...” என்க..

“முடியாது… முடியவே முடியாது. நீ போன வச்சிட்டு இங்கிருந்து போக்கா... நான் பார்த்துக்கிறேன்” மிருடன்

“ஐயோ... வேண்டாம் அண்ணி... வேண்டாம்... அப்படி மட்டும் செய்யாதீங்க...” அனு பதற

“அனு, அவன் தான் பிடிவாதம் பிடிக்கிறானே… நீ தான் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகக் கூடாதா?” வெண்பா அனுக்கு எடுத்துரைக்க

“நானும் அவர் மனைவி தானே அண்ணி... அப்போ எனக்கும் பிடிவாதம் இருக்காதா...” குரலில் மட்டும் இல்லாமல்.. அனு தன் செயலிலும் பிடிவாதத்திலேயே நிற்க...

“இவளை... சரி டி... நீ உன் பிடிவாதத்திலே நில்லு... நீயா நானான்னு பார்த்துக்கிறேன். ஆனா நீ சொன்னதுக்கு மட்டும் அனுமதிப்பேன்னு நினைக்காதே...”

“அனுமதிப்பார்... நிச்சயம் என் கணவர் அனுமதிப்பார் அண்ணி... என் மேல் வைத்து காதல் உண்மைனா.. நிச்சயம் அதுக்கு அவர் செய்வார்” அனு நம்பிக்கையோடு மொழிய

“அப்படி ஒரு காதலை உன் மேல் வச்சதால தான் டி... ரெண்டு நாளா நாய் மாதிரி... உன்னைத் தேடி தெருத் தெருவா திரிந்தேன். இதோ இப்போ கூட உன் கிட்ட கெஞ்சிட்டு இருக்கேன் பாரு...” இவ்வளவு நேரம் இருந்த திடம் விலக... ஆண் மகனுக்குத் தொண்டை அடைத்தது.

அதை மனையாளும் அறிந்து கொண்டவள், “ஒரு பெண் தன் வாழ்வில் தகப்பன்.. கணவன் பிள்ளைகள் என்று அடுத்து அடுத்து அவர்களுக்கான இடத்தைக் கொடுப்பா. ஆனா எனக்கு என் மிரு தான் அண்ணி முதலில். பிறகு தான் என் அப்பாவும்.. என் பிள்ளைகளும். அந்த அளவுக்கு இவர் மேலே உயிரையே வைத்திருக்கேன். அப்போ இந்த பிரிவு எனக்கு மட்டும் வலி வேதனை இல்லையா அண்ணி…” பெண்ணவளுக்கு அழுகையே வந்துவிட்டது.

மிருடன் எதிர்த்து எதுவும் பேசவில்லை. ஆனால் வெண்பா இதே வார்த்தையைத் தன் தம்பி சொல்லி கேட்டிருந்ததால், “இப்படி ஒருத்தர் மேலே ஒருத்தர் உயிரையே வச்சிருக்கீங்க... பிறகு எதற்கு இந்த பிரிவும் வேதனையும் அனு?” என்று கேட்க

“அண்ணி, நான் ஒரு விஷயத்தை நோக்கிப் போறேன்... மனதில் சங்கல்பமே எடுத்திருக்கேன். அதை நல்ல மாதிரி முடித்த பிறகு தான் அண்ணி என் உயிருடனே நான் சேர்வேன்...” அனு தன் உறுதியிலே நிற்க

“மிருடா...” இப்போது வெண்பா தம்பியை சமாதானம் செய்ய முனைய


“அக்கா.. போயிடு... என்னை கொஞ்சம் தனியா விடு... போ க்கா...” இவன் காட்டமாய் சொல்ல, செய்வது அறியாமல் வெளியேறினாள் வெண்பா. இவ்வளவு நடந்தும் மனைவி தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது மிருடன் மனதில் நங்கூரமாய் அமர்ந்தது... நீயா… நானா.. என்று கயிறு இழுக்கும் இந்த போட்டியில்… மிருடன் விட்டு கொடுப்பானா? மனைவிக்காக அவள் சொன்னதை செய்தானா?

பி. கு : அடுத்த பதிவில் கதை முடிய போகிறது தோழமைகளே... heart beat heart beat heart beat heart beat
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN