குறிப்பேடு 14

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சதாசிவத்திற்கு பயத்தில் கால்கள் இரண்டும் நடுங்கின.

"இது என்ன இடம்.?" என்றார் முஸ்தபாவிடம்.

"தெரியல சார்.." என முஸ்தபா சொல்லிய நேரத்தில் அவர்களுக்கு நேர் எதிரே இருந்த கதவு ஒன்று திறந்தது. அது திறந்த பிறகே அது கதவு என்றே தெரிந்தது. அந்த கதவும் கூட மனித தலைகளால்தான் உருவாக்கப்பட்டிருந்தது.

திறந்த அறையிலிருந்து வெளியே வந்தனர் இரு இளைஞர்கள். அவர்கள் இருவரையும் அந்த டைரியில் பார்த்ததாக ஞாபகம் சதாசிவத்திற்கு. இரண்டாம் மற்றும் மூன்றாம் இளவரசர்கள் இருவரும் என்பதை புரிந்துக் கொண்டார் முஸ்தபா.

தீப்பந்தம் ஒன்றை தூக்கி வந்தான் இரண்டாம் இளவரசன். முஸ்தபாவும் சதாசிவமும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த இடத்தை சுற்றி இருந்த ஐந்தாறு இடங்களில் பந்தங்களை பற்ற வைத்தனர். அந்த இடம் இப்போது ஜொலித்தது.

"இது எங்களது அரண்மனை தந்தையே.." என்றான் மூன்றாம் இளவரசன்.

சதாசிவம் அதிர்ச்சியோடு சுற்றி பார்த்தார். பிணங்களின் வாடைதான் காற்றில் மிதந்துக் கொண்டிருந்தது. பிணங்களால்தான் அந்த மாளிகையே வடிவமைக்கப்பட்டிருந்தது. தலையும், கையும், காலும், பிணங்களின் இன்னும் பலவிதமான உறுப்புகளும் அந்த மாளிகையின் சுவர்களில் அப்படியே தெரிந்தது.

நாற்றம் தாளாமல் மூக்கை பிடித்துக் கொண்டிருந்த சதாசிவத்தின் அருகே வந்தான் இரண்டாமவன். "இந்த அரண்மனைக்கு நீங்கள் வருவிங்கன்னு ரொம்ப வருசங்களா காத்திட்டு இருந்தோம் தந்தையே.." என்றான்.

"நான் உங்க அப்பா இல்ல.." என்றவரை பார்த்து சிரித்த மூன்றாமவன் "எல்லாரும் இதைதான் சொல்றாங்க. அதுவும் ஒவ்வொரு முறையும் இதைதான் சொல்றாங்க.. செத்த பிறகு என் வார்த்தைகளை நம்புவிங்க நீங்க.." என்றான். 'எல்லாம் கண்கட்டி வித்தை..' என்று மனதுக்குள் முனகினார் சதாசிவம்.

"கண்கட்டி வித்தை இல்ல.." என்றபடி பக்கவாட்டு அறையிலிருந்து வெளியே வந்தான் தினேஷ்.

"தினேஷ் உனக்கு என்ன ஆச்சி.?" என்று சதாசிவம் கேட்டார்.

"நான் மரகதன் தந்தையே.. எனது சாந்தவிக்காக பிறந்தேன் நான்.. சாந்தவிக்காக இறந்தேன் நான்.. இனியும் இறப்பேன். பிறப்பேன்.." என்றான்.

"இதெல்லாம் பொய்.. தினேஷ் நீ செத்துட்ட.." என்றவரை பார்த்து சிரித்தவன் "நான் செத்துட்டேன்னுதான் எனக்கே தெரியுமே.." என்றவன் தன் கைகளை அசைத்தான். சுவற்றில் இருந்த பிணங்களின் கண்கள் அனைத்தும் திறந்துக் கொண்டன.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN