குறிப்பேடு 16

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
படை வீரர்கள் சங்கீதவரனை கட்டி இழுத்து வந்தார்கள். அரண்மனையின் பாதாள சிறையில் அவரை அடைத்தனர்.

மரகதன் சாந்தவியை கைப்பற்றி தன்னோடு இழுத்துச் சென்றான். பாதாள சிறையில் இருந்த அவளின் தந்தையை கை காட்டினான்.

"உன் தந்தையின் விடுதலை வேண்டுமானால் என் ஆசைக்கு இணங்கு.." என்று சுலப கட்டளையிட்டான்.

சாந்தவி கண்ணீரோடு தன் தந்தையை பார்த்தாள். "தந்தையே நான் யாரையும் கொல்லவில்லை.. என்னை நம்புங்கள்.." என்றாள்.

"நீ பயப்படாதே சாந்தவி.. நமக்கு ஒன்றும் ஆகாது.. கடவுள் நம்மை கை விட மாட்டார்.. நமக்கு சோதனை தருபவர்கள் நிச்சயம் அழிவை சந்திப்பார்கள்.." என்று மகளுக்கு தைரியம் கூறினார் சங்கீதவரன்.

மரகதன் சிரித்தான். "அழிவா.? உங்கள் இருவரையும் என் காலடி பொருட்களாக மாற்றி காட்டுகிறேன்.." என்றவன் சாந்தவியின் தலைமுடியை பற்றி இழுத்துக் கொண்டு தனது அந்தபுரத்திற்கு சென்றான். சாந்தவிக்கு உயிர் போகும் வலி வந்து போனது.

"உன் அழகென்ற திமிரை அடக்கியே தீருவேன் நான்.." என்ற மரகதனை ஆத்திரம் தீராமல் பார்த்தவள் "உன் பதவி ஆணவ திமிரை நான்தான் அடக்க போகிறேன்.." என்று கர்ஜனையோடு சொன்னாள். அவனிடம் தாழ்ந்து போக அவளுக்கு மனமில்லை. ஆனால் அவனை எதிர்க்கும் வழியும் விளங்கவில்லை.

சிவா பிரேத மலையின் ஆரம்பத்தில் வந்து நின்றான். சுற்றிலும் பார்த்தான். வனத்தின் இருள் சற்று பயமுறுத்தியது. கையிலிருந்த போனில் டார்ச்சை இயக்கினான்.

சதாசிவத்திற்கு ஏற்கனவே பலமுறை போன் செய்து விட்டான். அவர் போனையே எடுக்கவில்லை. தினேஷின் உடல் இங்கிருப்பதாகதானே சொன்னார்கள் என்று சுற்றிலும் விளக்கொளி பாய்ச்சி தேடினான்.

காரிருள் அவனை தனக்குள் விழுங்க முயன்றது. வனத்தின் உள்ளே நுழைந்தான். திடீரென்று அந்த இடமே புயலால் ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்தது. வானின் ஒரு பக்கம் நிலா பளிச்சிட்டது. மறுபக்கம் அடை மழைக்கான மேகங்கள் தலையை தொடும் தூரத்தில் வந்து மிதந்தது.

சிவா தனக்கு எதிரே ஆடிக் கொண்டிருந்த ஆலமரத்தை அதிசயமாக பார்த்தான். அந்த மரத்தையே அவன் இப்போதுதான் பார்க்கிறான். இந்த மரம் திடீரென்று எப்படி இங்கே வந்தது என்று குழம்பினான்.

அந்த ஆலமரத்தின் இடையே இருந்து ஒளி கசிந்தது. சிவா கண்களை கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தான். அந்த ஆலமரம் இரண்டாக பிளவுற்றது. சிவா தன்னிலை இழந்தவனாக அந்த மரத்தை நோக்கி நடந்தான். மரத்தின் பிளவுற்ற பாகம் இவன் அருகே வந்ததும் இன்னும் அதிகமாக பிளவுற்றது. ஆள் நுழைய தோன்றிய இடத்தில் ஒரு படையே நுழையலாம் எனும் அளவிற்கு இடம் தென்பட்டது.

சிவா அந்த மரத்திற்குள் நுழைந்தான். மேலேயே இருந்தது அவனது பார்வை. ஆகாயம் பார்த்தபடி நடந்துக் கொண்டிருந்தவனை யாரோ கைப்பிடித்து நிறுத்தினார்கள். சிவா எதிரே பார்த்தான். சதாசிவம் நின்றிருந்தார்.

"சிவா நீ ஏன் இங்கே வந்த.?" என்றார்.

சிவா கண்களை கசக்கி விட்டுக் கொண்டு சுற்றிலும் பார்த்தான். குடல் அப்படியே புரட்டி எடுத்தது.

"இவ்வளவு பிணமா.?" என்றான் குமட்டலோடு.

"இது எங்களின் கோட்டை.." என்று கர்ஜனை குரல் ஒன்று கேட்டது. சிவா திரும்பி பார்த்தான். இரண்டாம் இளவரசன் சிவாவை பார்த்து சிரித்தான்.

"வருக வீரனே.. உனது வருகைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறது இந்த மாளிகை.." என்றான்.

சிவாவிற்கு அருவெறுப்பு கூடியது அவனை பார்க்கையில்.

"இந்த பிரேத மாளிகை எங்களுக்காக வடிவமைக்கப்பட்டது. எங்களுக்கு இறப்பே இல்லை. எங்களின் மரணமற்ற வாழ்க்கையில் சுவாரசியம் சேர்க்க நீயும் தேவை.." என்றான் மூன்றாம் இளவரசன்.

சிவா தினேஷை வினோதமாக பார்த்தான். "உனக்கு என்ன ஆச்சி தினேஷ்.?" என்றான்.

"நான் மரகதன்.. நீ என் சாந்தவியை தொட்டிருக்க.‌. அதுக்காக நான் உன்னை கொல்ல போறேன்.." என்றவன் கத்தியோடு அவனை நெருங்கினான்.

"சாந்தவி.. யாருன்னு கூட எனக்கு தெரியாது.. என்னை விடு.. நான் சிவா.. உன் பிரெண்ட்.." என்றபடி பின்னால் நகர்ந்தான் சிவா.

"இல்லை.. நீ சாந்தவியின் இதழ் தீண்டியதை நான் பார்த்தேன்.." என்று தினேஷ் சொல்லவும் மானசீகமாக நெற்றியில் அடித்துக் கொண்டான் சிவா. 'அவதான் முத்தம் தந்தா.. அதுக்கு நான் பழி ஆகணுமா.?' என்று நொந்துக் கொண்டான்.

"நான் அவளுக்காகவே வாழுறேன்.. அவ வேண்டுமென்பதற்காக நான் என்னவெல்லாம் செய்தேன் தெரியுமா.?" என்றவனை வெறுப்போடு பார்த்தார் சதாசிவம்.

"அவளுக்காகதான் ஒரு நாட்டையே அழித்தாயா.?" என்றார் கோபத்தோடு. ஆமென்று அவரிடம் தலையசைத்தான் தினேஷ். "ஆனால் நான் அழிக்கல.. இவங்கதான் அழிச்சாங்க.." என்று சகோதரர்களின் பக்கம் கை காட்டினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

சின்ன யூடிக்கு ரியலி சாரி.. நாளையிலிருந்து இந்த கதையோட யூடி வராது நட்புக்களே.. ஒரு பத்து பதினைஞ்சி நாட்கள் தாமதம் ஆகலாம். சாரி. மைன்ட் பிரெஷாகாம இந்த கதையை என்னால எழுத முடியாது. மீறி எழுதினாலும் கதையை சொதப்பி வச்சிடுவேன். அதனாலதான் கேப் விடுறேன். நட்புக்கள் என்னை புரிஞ்சிப்பிங்கன்னு நம்புறேன். இந்த கதைகளுக்கு பதிலா காதல் கடன்காரா அப்டேட் ஆகும். அந்த கதையை படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸை கொடுங்க. விரைவில் நம்ம சாந்தவியை கூட்டி வந்துடுறேன்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN