முன்னுரை

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member


அபிராமி தன் முன் நின்றிருந்த தன் அண்ணனின் நண்பனை தயக்கமாக பார்த்தாள். அவனின் கையில் இருந்த விஷ மருந்தையும் கடிதத்தையும் பயத்தோடு பார்த்தபடி "நீங்க என்னை லவ் பண்றிங்களா.?" என்றாள்.

இல்லையென உடனடியாக தலையசைத்தான் கார்த்தி. "உன் அண்ணனை பழி வாங்கணும்.. அதுக்கு நான் உன்னை யூஸ் பண்ண போறேன்.. இது நியாயம் இல்ல. நீதி இல்ல.. எனக்கு ஆண்மை இல்ல.. இப்படி நீ எது வேணாலும் சொல்லிக்கோ.. நான் கவலைப்பட மாட்டேன்.." என்றான்.

மணமகளாய் மேடை ஏற போகும் சமயத்தில் இது என்ன புது வினை என்று பயந்த அபிராமி‌ "நான் உங்களோடு வர முடியாது.." என்றாள் திட்டவட்டமாக.

"நான் உன்னை கம்பல் பண்ணல.. நீ தாராளமா மேடை ஏறி கல்யாணம் பண்ணிக்க.. நான் இந்த லெட்டரை என் பாக்கெட்டில் பத்திரப்படுத்தி வச்சிட்டு இந்த விஷத்தை.." மேற்கொண்டு அவன் சொல்லாமலேயே விசயம் அவளுக்கு புரிந்தது.

"நான் செத்தா அதுக்கு காரணம் நீதான்னு இந்த லெட்டரை படிக்கறவங்க நம்புவாங்க.. நீ என்னை லவ் பண்ணல. நானும் உன்னை லவ் பண்ணல. ஆனா ஊருக்கு அதுவா முக்கியம்.? உண்மையை யார் தேடுவா.? ஆனா எல்லோரும் என் சாவுக்கு நீதான் காரணம்ன்னு உன்னை திட்டுவாங்க. உன் கழுத்துல தாலி கட்ட போறவனும் இந்த லெட்டரைதான் நம்புவான். உன் பேமிலி மானமே போகும்.. நீ அதை பத்தி கவலைப்படாம போய் அவன் கட்டுற தாலியை ஏத்துக்கோ.. என் உயிரை விட உன் அண்ணன்.. உன் குடும்பம் மானம்தான் உனக்கு ரொம்ப முக்கியம்.." என்றான் அவன்.

அண்ணனின் நண்பன் இதுநாள் வரை ஒரு வார்த்தை அனாவசியமாக கூட பேசிடாதவன்.. இன்று ஏன் இப்படி தன் கல்யாணத்தில் காலனாய் வந்து சேர்ந்தான் என்று புரியாமல் குழம்பினாள் அபிராமி. அவனோடு செல்ல மறுத்தால் இவள்தான் காரணமென்று எழுதிய கடிதத்தோடு இறந்து போவான் அவன். என்ன செய்வாள் அவள்.? எவனோ ஒருவன் சாகட்டும் என்று மணமேடை ஏறுவாளா.? இல்லை இந்த எவனோ ஒருத்தனுக்காக தன் திருமணத்திற்கு தானே எதிரியாவாளா.?

அவனோடு சென்றாலும் அவள் வாழ்க்கை நரகம். அவனோடு செல்ல மறுத்தாலும் அவள் வாழ்க்கை நரகம். என்ன செய்வாள் அபிராமி.?

ஒரு ஆன்டி ஹீரோ.? இல்லன்னா ஒரு ஆன்டி ஹீரோயின்.!? அபிராமி என்ன செய்ய போறா.? காதல் கடன்காரா.. இந்த கதையின் தேவை எனக்கு தேவை மக்களே..

போன வாரத்துல எனக்கு உடம்பு சரியில்லாம போச்சின்னு முன்னேயே சொன்னேன் இல்லையா.? உடம்பு நல்லாகிடுச்சி. ஆனா இந்த ப்ரெஷ்னெஸ் சட்டுன்னு வந்து சேராது இல்லையா.? ஒரு ரைட்டர்க்கு கதைதான் வாழ்க்கை. கதைதான் உலகம். ஏற்கனவே மூணு கதை போயிட்டு இருக்கு. ஆக்சுவலா அஞ்சி கதை போயிட்டு இருக்கு. அதுக்கான தகவலை ஒரு மாசமா சொல்ல நினைக்கிறேன். ஆனா அதுக்குன்னு டைம் வரல. மழைநிழா மின்னிதழ். மாசா மாசம் அமேசான்ல வெளியாகுது. அந்த மழைநிழா மின்னிதழ்ல ஒரு தொடர்கதை எழுத ஆரம்பிச்சிருக்கேன். கதை பேரு - என் வாழ்வின் பாதி நீ. உன் மரணத்தின் மீதி நான்..! இதை பத்தி தனி பதிவா போட நினைச்சேன். ஆனா இந்த காய்ச்சல் மயக்கத்தால பதிவு பண்ணாம விட்டுட்டேன். விரைவில் முன்அறிவிப்பு வெளியிடுறேன். அடுத்ததா சகாப்தம் தளத்துல நடைப்பெறும் வண்ணங்கள் தொடர்கதை போட்டிக்கு நானும் ஒரு மாசம் முன்னாடியே பேர் தந்திருக்கேன். கதை பேர் - கார்கால களவு. இன்னும் எபி பதிவு பண்ணல. இல்லன்னா அதை பத்தியாவது ஒரு போஸ்ட் போட்டிருப்பேன். அந்த இரண்டு கதையும் கூட மர்மம் திகில் சம்பந்தப்பட்டதுதான். அப்புறம் பிரதிலியில் மறுபடியும்ன்னு நடக்கற ஒரு தொடர்கதை போட்டியிலும் கதை எழுதிட்டு இருக்கேன். அதோட டைட்டில் - நட்சத்திரமடி நீ.

அஞ்சி கதை ஓடியும் அஞ்சும் திகில், மர்மம், கொலை, மரணம்ன்னே இருக்கு. நான் அடிப்படையில் ஒரு ரொமான்ஸ் நாவல் ரைட்டர். 18+ல எழுத வரலன்னாலும் ஹீரோவும் ஹீரோயினும் பல் இளிச்சிக்கிட்டே கதையை கடத்தணும். இல்லன்னா ஒருத்தரையொருத்தர் அடிச்சிக்கிட்டே இருக்கணும். படிக்கறவங்க மனசு சிரிக்கணும். அம்புட்டுதான் ஆசை. ஆனா ஓடுற அஞ்சி கதையும் நார்மல் ஜானர்ல இல்லங்கறதாலதான் இந்த பதிவு. இது ஒரு சாதாரண காதல் கதை. இந்த கதையை வச்சிதான் நான் மத்த கதைகளை கரெக்டா கொண்டு போயாகணும். இதுல மழைநிழா மின்னிதழ் கதை மாசம் ஒரு எபி எழுதினா போதும். மீதி கதைகளை எழுததான் ஸ்ட்ரென்த் வேணும். அந்த ஸ்ட்ரென்த் இந்த கதையில இருந்துதான் கிடைக்கும்ன்னு நம்புறேன். நீங்களும் உங்க ஆதரவை மறக்காம கொடுங்க மக்களே..

எந்த கதையை எப்ப அப்டேட் பண்ண போறேன்னு‌ எனக்கே தெரியல. ஆல் இஸ் வெல்லா எல்லாமும் நல்லபடியா நடக்கும்ன்னு நம்புறேன். ஆல்வேஸ் ஹேப்பி நட்புக்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN