முகவரி 40 (final episode)

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மனைவியைக் காணவில்லை என்றதும் மிருடன் முதலில் நினைத்தது... ‘தன்னை மன்னிக்கவில்லை என்று சொன்னாளே... அதற்காக தனக்கு தண்டனை கொடுக்கத் தான் இப்படி செய்தாளோ.. இல்லை, திருமண விஷயத்தை நான் அவளிடம் சொல்லவில்லை என்ற கோபமோ?’ இப்படியாகத் தான் அவன் நினைத்தது.

ஆனால் தீவிரமாக தேடியும் மனைவி கிடைக்கவில்லை என்றதும் யாரோ அவளைக் கடத்தி விட்டார்களோ என்று பயந்தவன் இன்னும் பல வழிகளில் தன் தேடலை இவன் பலப்படுத்த, அவன் மனைவியோ... தானாக ஒரு இடத்திற்க்கு சென்று மறைந்து இருக்கிறாள் என்பதை அறிந்தவனுக்கு... கோபத்திலும் சற்று மனது நிம்மதியானது. ஆனால் அவளின் பேச்சும், செயலும் இவனுக்குள் மீண்டும் ஆத்திரத்தை அதிகப்படுத்த... முதலில் மனைவி கேட்டதைத் தன் பிடிவாதத்தால் நிராகரிக்கத் தான் நினைத்தான் இவன்.

பிறகு என்ன நினைத்தானோ... மேற்கொண்டு வாத விவாதங்களில் இறங்காமல்... ஏன், அவள் இருக்கும் இடத்தை தேடிப் பிடிக்க முயற்சிக்காதவனாக... மனைவி கேட்டதற்கு அனுமதித்தான் இவன். அதிலும் அவள் சொன்ன சங்கல்பம் என்ற வார்த்தையைக் கேட்டவனுக்கு... அவளுடன் இருந்து அதில் அவள் வெல்ல... ஒரு நல்ல கணவனாகத் தான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்ததால் கூட இருக்கலாம்.

மறுநாள் காலை பத்து மணிக்கு மிருடன் அலுவலகத்தில் உள்ள மீட்டிங் அறையில் அனைத்து பத்திரிகை ஆட்களும் குழுமி இருந்தார்கள். அங்கு… “எதற்கு மிஸஸ். மிருடவாமணன் நம்மை வரச் சொல்லி இருக்கனும்... என்ன விஷயம்?” இது தான் அங்கிருப்போரின் கேள்வியாக இருந்தது.

இவர்களுடன் மிருடனும் மனைவி என்ன செய்ய… சொல்லப் போகிறாள் என்பதை அறிந்து கொள்ள, தனக்கென இருக்கும் ஓய்வு அறையில் ஆர்வத்துடன் காத்திருந்தான். ஆதிக்கு விஷயம் தெரியாமல் இருக்காது... இவன் கொஞ்சம் அழுத்திக் கேட்டிருந்தால் அவனும் சொல்லி இருப்பான் தான். ஆனால் இவனுக்கு அதில் விருப்பமில்லை. மனைவியின் வாய் மொழியாகத் தெரிந்து கொள்ள விரும்பினான்.

சமையல் அறையிலிருந்து கிரீன் டீயுடன் ஹாலுக்கு வந்தவனின் கவனம் அங்கு சுவற்றில் புதைந்திருந்த எல்.ஈ.டி டிவியில் பதியவும்... சற்று நேரத்திற்கு எல்லாம் இந்த அலுவலக கட்டிடத்தின் பின்புற வாயிலில் வழுக்கிக் கொண்டு வந்து நின்றது அந்த கார். ஆதி இன்னோர் காரிலிருந்து வேகமாய் இறங்கி வந்தவன் வழுக்கி கொண்டு நின்ற காரின் கதவை, காலை வணக்கத்தை சொல்லிய படி இவன் திறந்து விட... ஒரு தலை அசைப்புடன் அதை ஏற்ற படி கம்பீரத்துடன் இறங்கினாள் அனுதிஷிதா.

அப்போது கையில் சில கோப்புகளுடன் ஒருவன் ஓடி வந்து ஆதியிடம் அதை சேர்ப்பிக்க... அதை கையில் வாங்கியவன் அனுவிடம் ஏதோ சொல்ல... புருவம் சுருங்க.. விழிகளில் கூர்மையுடன்... தன் ஆள்காட்டி விரலால் தாடையை சற்றே நீவிய படி இவள் தீவிரமாய் கேட்டுக் கொண்டிருந்த நேரம்... இவள் தாத்தாவின் நண்பரான அந்த D.C.P... இவளை நெருங்கி தன்னுடன் வந்தவரை இவளுக்கு அறிமுகப்படுத்த... தன் முக தீவிரத்தை மறைத்தவளாக சிறு புன்னகையுடன் அவருக்கு வணக்கம் சொல்லி இவள் இருவரையும் உள்ளே அழைத்துச் செல்ல...

இதையெல்லாம் மிருடன் கவனித்தாலும்... ஏனோ இது எதுவும் அவன் கருத்தில் படவே இல்லை. அவன் பார்வை வீச்சு முழுக்க தன்னவளின் உச்சந்தலையிலிருந்து பாதம் வரை தழுவியது. என்ன தான் அவள் சிரித்த முகமாக இருந்தாலும்... ஏனோ பகலவனை காணாத கமலமாக சிறிதே துவண்டு தான் காணப்பட்டாள் அவள். இந்த இரண்டு நாளில் உடலால் சிறிது இளைத்து தான் தெரிந்தால் அவள். அது ஏன் என்று அறிந்து கொண்டவனின் உதடுகளோ,
“பிறகு எதற்கு டி இந்த வீம்பு?” என்று கோபத்துடன் முணுமுணுத்தது.

அனு, ஒரு ராணியின் தோரணையுடன் மீட்டிங் ஹாலில் நுழைந்து தனக்குரிய இடத்தில் நின்றவள், “வெல்கம் டூ ஆல். வணக்கம்… நான் மிஸஸ். அனுதிஷிதா மிருடவாமணன்” நிமிர்வுடன் சொன்னவள் சேரில் அமர

மனைவியின் நிமிர்வையும்... அவளின் கணீர் குரலையும் கேட்டவனோ, “நீ மட்டும் பிசினஸ் வுமனா இருந்திருந்தா…. நான் எல்லாம் காலி டி!” என்று சிலாகித்தான் மிருடன்.

“உங்க எல்லோரையும் எதற்கு இங்கே வரச் சொன்னேன்னா... அதற்கு முன்னாடி... ஒரு விஷயம்.. என் தந்தை எக்ஸ் மினிஸ்டர் குணநாதன்னு உங்க எல்லோருக்கும் தெரியும்... அவருடைய ஒரே மகள் நான் தான் என்பதும் தெரியும். என் தந்தை அரசியல் மூலம் நிறைய நல்லதும் செய்திருக்கார்... அதேபோல் தவறும் செய்திருக்கார்.

அதில், ஒன்று சில வருடங்களுக்கு முன்பு ஒரு சமூக சேவகி ஒருவருக்கு நடந்த அநியாயத்தைப் பற்றி.. அதில் என் தந்தை செய்த கொடுமைகளைப் பற்றி சொல்லத் தான் உங்கள் எல்லோரையும் அழைத்திருக்கேன். அந்த சமுக சேவகி பெயர் சரளா... தற்போது அவங்க மனநல மருத்துவமனையில் இருக்காங்க. அப்படி அவங்க அங்கே இருக்க காரணம்... அவங்க மேல் சுமத்தப் பட்ட களங்கம் தான். அதற்கு என் தந்தை தான் முழுக்க முழுக்க காரணம்.

என் தந்தை, தன் பதவியைப் பயன்படுத்தி... மக்களுக்கும்... சுற்றுச்சூழலுக்கும் ஒவ்வாத காப்பர் தொழிற்சாலையை.. புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறுவ இருந்தார். அதை ஒரு சமுக ஆர்வலரா.. இவங்க தடுத்தாங்க. அதை மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்கத் தான்... அவங்க பெயரைக் களங்கப்படுத்தி... அவங்க இழிவான தொழில் செய்றவங்கன்னு.. அன்றைய டிவியிலும், பேப்பரிலும் இப்படியாக போலியான ஒரு பிம்பத்தை கொடுத்து வரவைத்தார். இதோ அன்றைய அந்த நாளிதழ்கள்” என்றவள் அங்கிருந்தவர் கையில் சில பழைய நாளிதழ்களை கொடுக்கச் சொல்ல,

“ஆனா அதில் வந்தது எதுவுமே உண்மை இல்லை… முழுக்க முழுக்க கட்டுக் கதை.. எல்லாமே பொய். சரளா அப்படிப் பட்டவங்க எல்லாம் இல்ல. உண்மைக்குப் பாடுபடும் நியாயமான பெண்மணி அவங்க. யாருக்காகவும் எதுக்காகவும் பயப்படாம துணிச்சலா பல போராட்டங்கள் செய்தவங்க. இன்னும் சொல்லப் போனா… தன்னலம் அற்றவங்க...” இவள் முடித்த நேரம்

பத்திரிகை நிபுணர் 1: “அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க மேம்?”

பத்திரிகை நிபுணர் 2 : “இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?”

பத்திரிகை நிபுணர் 3 : “இத்தனை வருஷம் இல்லாம இப்போ ஏன் இதை தோண்டி வெளியே கொண்டு வரீங்க?”

“ஆமாம், ஆதாரம் இருக்கு. ஒன்று இல்ல…. பல ஆதாரங்கள் இருப்பதால் தான் உறுதியா சொல்றேன். இதை ஏன் இன்று புதுசா தோண்டனும்... இப்போ யாரும் தோண்டல.. தனக்கு நடந்த அநியாயத்திற்கு, சரளா அம்மையார் அப்போதே போலீசில் கேஸ் கொடுத்திருக்காங்க. இப்போ அவங்க மனநல மருத்துவமனையில் இருப்பதால்.. அந்த கேஸ் அப்படியே தான் இருக்கு… யாரும் வாபஸ் வாங்கல. சோ, அதற்கான விசாரணைகள் இன்று வரை பல வருஷமா நடந்துட்டு தான் இருக்கு.

இதற்கு இடையில் சரளாவின் தங்கை வெண்பா... என்பவங்க தன் தமக்கைக்கு நியாயம் கேட்டு.. மகளிர் அமைப்பு... முதல்வர் என்று ஆரம்பித்து பிரதமர் வரை மனு கொடுத்திருக்காங்க…. அதற்கான நகல்கள் இதோ இதெல்லாம். சோ, இப்போ தீவிரமாய் விசாரித்ததால் உண்மை வெளியே வந்திருக்கு” என்று ஆணித்தரமாய் அறிவித்த அனு,

“இப்படி செய்யச் சொல்லி என் தந்தை எந்த நபரிடம் இதை ஒப்படைத்தாரோ... அவரே இன்று மாட்டிக் கொண்டார். ஆமாம் போலீஸ் அரஸ்ட் செய்துட்டாங்க. அவர்களுடன் என் தந்தை பேசிய உரையாடல் இந்த கேசட்டில் இருக்கு... அன்றைய தினம் நடந்த பணப் பரிவர்த்தனை விவரங்கள் இதில் இருக்கு” அதை எல்லாம் காண்பித்து டேப் ரெக்கார்டரையும் இவள் இசைக்க விட... அவள் தந்தை பேசியது அனைத்தும் அந்த ஹாலின் நிசப்தத்தில் துல்லியமாய் ஒலித்தது.

அனு உள்ளே நுழைந்ததில் இருந்து அசட்டையாய்.. கால் மேல் கால் போட்ட படி இறுமாப்புடன் அமர்ந்திருந்த மிருடன்... மனைவி தன் அக்கா சரளாவின் பேரைச் உச்சரித்ததும், உடல் தளர... கால்களைத் தளர்த்தி சோஃபாவின் நுனியில் வந்து அமர்ந்தவனோ.. தன் மனைவியின் இத்தகைய செயல்களைக் கண்டு வியக்காமல் அவனால் இருக்க முடியவில்லை.

மறுபடியும் அனுவே தொடர்ந்தாள்... “இந்த விஷயங்கள் அனைத்தையும் ஒரு போலீஸ் அதிகாரியா இந்த கேசை எடுத்து நடத்துபவர் உங்கள் அனைவரையும் அழைத்து சொல்லி இருக்கலாம். ஆனா எனக்கு அது முறையா படல... ஒரு பெண்ணுக்கு என் தந்தை செய்தது மகா பாவம்.. அதற்கு அவருக்கு மன்னிப்பே இல்ல. என்ன… தண்டனை கொடுக்கவும்… இப்போ அவர் உயிரோட இல்லை... அதனால் என் தந்தை கேட்க வேண்டிய மன்னிப்பை... அவரின் மகளா.. அவருடைய சார்பாக... உங்கள் அனைவரின் முன்னிலையில்.. சரளா என்ற அந்த அம்மையாரிடமும் அவரை சார்ந்த குடும்பத்தாரிடமும் நான் மன்னிப்பைக் கேட்டுக்கிறேன்...” என்றவள், எழுந்து நின்று கை கூப்பி... தலை வணங்கி இவள் மனதார மன்னிப்பு கேட்க.. அனுவின் செயலில் அங்கு ஒரு நிமிடம் அமைதி நிலவியது என்றால்…

தன் அக்காவுக்கு நடந்ததை தன் மனைவி சொல்ல… கேட்டுக் கொண்டு வந்தவனின் உடலோ.. இறுகிப் போய்.. மனமோ வேதனையில் தத்தளித்துக் கொண்டிருக்க.. இறுதியில் அவள் செய்த செயலைக் கண்டவன் இதை எதிர்பார்க்காதவனாக தான் அமர்ந்து இருந்த இடத்திலிருந்து அதிர்ச்சியுடன் எழுந்து நின்றவனோ, “என்ன பொண்ணு டி நீ... அன்று உன் தந்தைக்காக என் கிட்ட சண்டை போட்ட... இன்று அதே தந்தை செய்த தப்புக்கு உலகத்தார் முன்னிலையில்... என் அக்கா கிட்ட மன்னிப்பு கேட்கிற...” என்று அவன் உதடுகள் முணுமுணுத்த நேரம் அவன் மனசாட்சியோ... அவனையே காறித் துப்பியது.

“இப்படி ஒரு மன்னிப்பை அந்த குடும்பத்தாரிடம் கேட்கத் தான் உங்க எல்லோரையும் வரச் சொன்னது. இதை யாருக்கும் தெரியாமல் சொல்லி இருக்கலாம்... ஆனால் பகிரங்கமாய் அந்த அம்மையாருக்கு நடந்த அநீதிக்கு... நானும் பகிரங்கமாய் மன்னிப்பு கேட்கணும் தானே.. இது அவர்களுக்கு நியாயம் செய்ததாக ஆகாது தான்... இருந்தாலும் என் மனத்திருப்திக்காக... அதான் இந்த சந்திப்பு. இனி இந்த கேசைப் பற்றி... மேற்கொண்டு அனைத்து விவரங்களையும் இதை எடுத்து நடத்திய... உயர் அதிகாரி உங்களுடன் பேசுவார்” என்றபடி அங்கிருந்து விலகி இருந்தாள் அனு.

மிருடனுக்கு முதலில் புரியவே கொஞ்சம் நேரம் ஆனது.. பின் அனைத்தையும் நினைக்க நினைக்க... மூளைக்காரனான அவனுக்குள் ‘எவ்வளவு செய்திருக்காள் இவள்!’ என்று தான் தோன்றியது. உண்மை தான்.. அவள் தந்தை இப்படி எல்லாம் பேசியிருந்தாலும் அதை எல்லாம் சாட்சியாக விட்டு செல்ல குணநாதன் என்ன கிறுக்கா? ஆனால் அவர் அப்படி விட்டு சென்றதாக ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறாள்... ஆமாம் நம்பகமான டப்பிங் ஆர்டிஸ்டை வைத்து... தந்தையை போலவே பேச வைத்து... இன்னும் சில பேப்பர்கள் மூலம்.. அனைத்து ஆதாரங்களையும் தயார் செய்தவள் அனு தான்.

இது எல்லாம் மிருடனைப் பொறுத்தவரை சாதாரண விஷயம்... ஆனால் அனுவுக்கு இது பெரிய விஷயம். நிச்சயமாக தன் சக்திக்கு மீறி பெரிய மலையையே புரட்டிப் போட்டிருக்கிறாள் மக்கு என்று மிருடனால் பெயர் சூட்டப்பட்ட அவனின் சரிபாதி.

இவ்வளவு நேரம் இருந்த கம்பீரம் எல்லாம் தொலைய... “மிரூஊஊஊஊஊ....” அப்பப்பா… அடி வயிற்றில் இருந்து ஒலித்த அந்த குரலில் தான் எத்தனை ஏக்கம்... முகத்தில் தவிப்புடன் கணவன் அறைக்குள் நுழைந்தவள் அழைக்க...

“செல்லம்மாஆஆ....” மனைவிக்கு நிகரான தவிப்புடன் தன்னவளை இவன் எதிர் கொள்ள...

அதில் கங்காரு குட்டியாய் தன்னவனிடம் ஒட்டிக் கொண்டாள் அனு. அவனும் குழந்தை என தன்னவளைக் கையில் ஏந்தியவன்... தன் முரட்டு உதடுகளால் அவள் முகம் எங்கும் முத்தமிட.. ம்ஹும்... அவன் உதட்டில் இருந்த முரடு... ஏனோ அவன் முத்தத்தில் இல்லாமல் தான் போனது.

அது மட்டுமா... மனைவியை நேரில் கண்டால் கன்னம் கன்னமாக அறைவேன் என்றவன்... உன்னை உயிரோடு புதைப்பேன் என்று சவடால் விட்டவன்... இன்று கண்ணீரோடு தன்னவளை அர்ச்சித்துக் கொண்டிருக்கிறான். ஆமாம்…. மிருடன் அழுகிறான் தான். இந்தக் கண்ணீர்... தன் தமக்கைக்கு மனைவி செய்த நியாயத்திற்காக வந்ததல்ல. முழுக்க முழுக்க தன்னவள் மேல் கொண்ட காதலாலும்.. பிரியத்தாலும்.. பிரிவாலும் வந்தது.

“ஏன் டி... அப்படி செய்த... ஏன் டி.... என்னை விட்டுப் போன?” முத்தத்தோடு அவன் இதழ்கள் இதையே முணுமுணுத்தது.. ஏன் போனாள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் அவனுக்குத் தெரிந்தாலும்... ஏனோ காதல் கொண்ட அவன் மனதால் இப்படி கேட்காமல் இருக்க முடியவில்லை.

“என்ன மிரு இரண்டு நாளுக்கே இப்படி புலம்பறீங்க.. ஐந்து வருடம் என்னை விட்டுப் பிரிந்து இருந்தவரா நீங்க?” இவள் மனம் தாங்காமல் கேட்டு விட

மனைவியைக் கைகளில் ஏந்திய படி அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தவன்... பின் அவளைத் தன் மடியில் இறுத்திக் கொண்டு.. “அது, அன்று நீ என் கண் பார்வையில் இல்லைனாலும்... நான் வைத்த ஆட்கள் மூலம்... என் பார்வையில் தான் இருந்த. ஆனால் இந்த இரண்டு நாள் அப்படி இல்லையே... இது தான் விஷயம்னு நீ சொல்லியிருந்தா... நான் உனக்கு எல்லா வகையிலும் பக்க பலமா இருந்திருப்பேனே ஷிதா”

“அது வந்து... அது என்னனா.. நம்ம சரளா அம்மா...” என்று ஏதோ சொல்ல வந்தவள் நிறுத்தி கொண்டு “நான் அவங்களை அம்மான்னு கூப்பிடலாம் இல்ல?” என்று இவள் கேட்க

மிருடன், “தாராளமா... உனக்கு எனக்கு மட்டும் அவங்க அம்மா இல்ல... நம்ம பிள்ளைகளுக்கும் அவங்க தான் அம்மா” என்று சொல்லவும்

“பரணி அண்ணா... அவங்களுக்கு நடந்ததை மட்டும் தான் சொன்னார். இப்பவும் அவங்க மனநல மருத்துவமனையில இருப்பதை பற்றி என்னிடம் சொல்லல... அப்போ அவங்க உயிரோட.. இல்லை போலன்னு நானா நினைச்சிட்டேன். உங்க கிட்ட பேசும்போதும்.. அவங்களை பற்றி நான் கேட்கல... நீங்களும் சொல்லல. அப்போ அது தான்னு நானா முடிவு செய்திட்டேன். வெளிநாட்டிலிருந்து நான் வந்த பிறகு... ஒரு நாள் வெண்பா அண்ணி நம்ம கல்யாணத்தைப் பற்றி பேசினாங்க. அப்போ உங்களை வளர்த்த சரளா அம்மா நம்ம திருமணத்தைப் பார்க்க முடியாமல்... ஆஸ்பிடலில் இருக்கிறதைப் பற்றி சொல்லி வருத்தப்பட்டாங்க.

அப்போ தான் அவங்க உயிரோட இருக்கிறதே எனக்கு தெரிய வந்தது. அப்பவே முடிவு செய்திட்டேன்... நம் திருமணத்திற்கு முன்பாக அம்மாவுக்கு இப்படி ஒரு நியாயத்தை செய்யணும்னு. நீங்க ஊருக்கு வர்றதுக்குள்ள எல்லாம் முடிக்கணும்னு நினைத்தேன்.. ஆனா முடிக்க முடியல. இன்னொன்றும் எனக்கு உறுத்தியது... அது எப்படி நீங்க இதுவரை அவங்க விஷயத்தில் நியாயம் செய்யாமல் இருக்கலாம் சொல்லுங்க? இப்போ நான் செய்ததை எல்லாம்.. நீங்க எப்பவோ செய்திருக்கணுமே... அதெப்படி நீங்க அதைப் பற்றி யோசிக்காமல் விட்டீங்க... அதற்கு உங்களுக்கு தண்டனை வேணாமா... அதான் போறேன்னு மட்டும் சொல்லி கடிதம்.. எழுதி வச்சிட்டு போனேன். அவங்களுக்கு எதுவும் செய்யாமல் நம்ம திருமணம் நடப்பது எனக்கு சரியா படல.. அதுவும் ஒரு காரணம்.

இந்த இரண்டு நாள் உங்க தவிப்பையும் துடிப்பையும் கேட்டு எனக்கே வேதனையாக தான் இருந்தது... எனக்கும் கஷ்டம் தான். ஆனா அம்மா விஷயம் முடிகிற வரை நாம் பார்க்கவோ பேசவோ கூடாதுன்னு மனதால் சங்கல்பமே எடுத்திருந்தேன்... அதான் சொல்லல. உங்க கிட்ட சொல்லாமல் இப்படி செய்தேன்னு என் மேலே கோபமா மிரு?” இவள் தன் நீண்ட விளக்கத்தைக் கொடுத்தவள்.. இறுதியாய் அவன் மனம் அறிய கேட்க...

காதலோடு தன் மனைவியை இறுக்க அணைத்துக் கொண்டவன்... “நீ என் தேவதை டி.. நீ எனக்கு கிடைக்க நான் என்ன தவம் செய்தேன்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன்... இப்படி செய்வேனு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை டி.. அப்படி பட்ட எனக்கு கோபம் இருக்குமா சொல்லு?” என்றவன் காதலோடு அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு.. “உன்னை வைத்து உன் அப்பாவுக்கு தண்டனை கொடுக்கணும்... பழிவாங்கணும்னு தான் நினைத்தானே தவிர... அம்மா பேரில் உள்ள களங்கத்தை நான் துடைக்க நினைக்கல பாரு... இதுவே நான் அவங்களுக்கு மகன்னு சொல்றதுக்கே எனக்கு வெட்கமா இருக்கு...” இவன் உளமார வருந்த

பெண்ணவளோ தன்னவன் வருந்துவது தாங்காமல், “அப்படி எல்லாம் இல்ல மிரு...” என்று சமாதானத்தில் இறங்க

“நீ என்ன சொன்னாலும் அவங்களுக்கு மகனா இருக்க எனக்கு எந்த தகுதியும் இல்லை. விடு... எந்த சமாதானமும் சொல்லாத… விடு..” இவன் குரல் உறுதியுடன் வலியோடு... அதுவும் பிடிவாதத்துடனே ஒலிக்கவும், அமைதியானாள் பெண்ணவள்.

உண்மை தானே? ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது போல்... இவன் தன் கோபத்தாலும்... ஆணவத்தாலும்... இப்படி ஒன்றை செய்ய வேண்டும் என்று அறியாமல் இருந்து விட்டான் தானே… அதுவும் மனைவி செய்யும் வரை.. சில விஷயங்களில் சத்ரியனாய் இருப்பதைக் காட்டிலும் சாணக்கியனாய் இருப்பது சாலச் சிறந்தது. அதை இவன் அறியவில்லையே

சற்று நேரம் கணவனின் அணைப்பில் இருந்தவள்.. பின் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து, “என் அப்பா வந்தே தீரணும்னு சொன்ன அந்த காப்பர் தொழிற்சாலையை... சரளா அம்மா எதிர்த்தாங்கன்னு... அவங்க நினைத்ததுக்காகவே.. இன்று அந்த தொழிற்சாலை அங்கு எப்போதும் வரக் கூடாதுன்னு உங்க பவரைப் பயன்படுத்தி P.M கிட்ட பேசி எல்லாம் முடித்தீங்களே... இன்னும் பகிரங்கமா வெளியிடல… ஆனா நீங்க எல்லாம் முடித்ததா ஆதி சொன்னார். அப்போ அதை நீங்க அவங்களுக்காக செய்யலையா மிரு... அதிலேயே நீங்க அவங்க மகன் தான்னு தெரியலையா உங்களுக்கு?” இவள் கேட்க..

உண்மை தான்…. இனி புதுக்கோட்டையில் எங்குமே அப்படி ஒரு தொழிற்சாலை வராத அளவுக்கு செய்து விட்டான் மிருடன்.

தனக்காகவே தன்னிடம் வாதிடும் மனைவியின் நெற்றியில் முட்டியபடி.. கண்ணுக்கு எட்டாத புன்னகையுடன் அவளை நோக்கியவன், “மேடம் சொன்னா அப்பீல் ஏது.. எப்போதும் நான் சரளாம்மா மகன் தான்… சரியா?” என்று இவன் ஒற்றுக் கொள்ள

“ஹ்ம்ம்...” கணவன் டி ஷர்ட்டில் உள்ள “my love...” என்ற வாசகத்தைத் தன் விரல் நகத்தால் கீறியவள்... “இவ்வளவு நல்லது செய்கிற நீங்க... இந்த மரங்களையும் வெட்டாமல்... வேற தொழிலில் இறங்கி... கொஞ்சம் நல்லது செய்தா இன்னும் நல்லா இருக்குமே... செய்றீங்களா மிரு?” மனையாள் சன்ன குரலில் கேட்க

“நீ எதை சொல்ல வரேன்னு தெரியுது... அன்னைக்கு உன்னை லாக் பண்ண தான் உன் தாத்தா வீட்டு மரங்களை வெட்டினேன்... அதுக்காக பார்க்கிற மரத்தை எல்லாம் வெட்டுறவன் நான்னு நினைக்காத... தொழில்னாலும் இயற்கை வளம் மேல் எனக்கும் பற்று இருக்கு... நம்ம ஷோரூமில் இருக்கிற பொருட்கள் எல்லாம் இதற்கு செய்வதற்கேனே வளர்க்க படும் மரங்கள்.. எல்லாம் அந்தமானிலிருந்து இறக்குமதி ஆகுது.. சோ கவலைப்படாத...” எல்லா விஷயத்திலும் இவள் எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாளோ என்ற எண்ணத்தில் மனைவியை மனதிற்குள் சிலாகித்தபடியே இவன் விளக்கம் தர

“அப்படியா? நல்ல விஷயம் தான்... அந்த அந்தமான்... மரங்களையும் கொஞ்சம்...”

அவளை முடிக்கவிடாமல், “இங்க பார்... அந்தமான் மரத்தையும் விட்டுடுங்கன்னு ஆரம்பிக்காத... மூச்!” என்ற படி ஒரு விரலை அவளின் இதழின் மேல் வைத்தவன்... “அங்கேயிருந்து நமக்கு வருகிற மரங்கள் எல்லாம் இதற்குனே.. வளர்க்க பட்ட மரங்கள்.. போதுமா? அதனால் இதுக்கு மேல இதைப் பற்றி பேசக் கூடாது சரியா?” இவன் கறாராய் மறுபடியும் அழுத்தி சொல்ல

‘சரியான முசுடு முனுசாமி... ப்பா என்ன கறார்...’ என்று மனதிற்குள் கணவனைத் திட்டிய படி அவன் முக வடிவத்தைத் தன் ஆள்காட்டி விரலால் அளந்தவள் “இந்த இரண்டு நாளில் என்ன மிரு இப்படி இளைத்துப் போய் இருக்கீங்க..” இவள் கவலையாய் கேட்க

“அடி... போடி... இந்த இரண்டு நாளில்.. நான் உசுரோட இருந்ததே அதிகம்... இதில் இளைத்துவிட்டேனாம்... மகாராணி சொல்றாங்க...”

அவன் என்னவோ கேலியாகத் தான் சொன்னான். ஆனால் இது பெண்ணவளுக்கு வலித்தது. சூழ்நிலையை மாற்ற நினைத்தவள்... கணவனின் கீழ் உதட்டை இரு விரலால் பிடித்து இழுத்தவளோ, “இப்படி எல்லாம் பேசினீங்க.. அப்புறம் இந்த உதட்டுக்கு தண்டனை கொடுத்துடுவேன்… ஆமாம்...” கணவனைப் போல் இவள் போலியாய் மிரட்ட

அதற்கு எல்லாம் அசருபவனா மிருடன்.. அவன் தான் எப்போது… எப்போது என்று இருப்பவனாச்சே... அவள் கையைத் தட்டி விட்டவன், “அப்போ ஒரு நாளைக்கு ஆயிரம் முறை சொல்லுவேன்... கணக்கை நீ பார்க்கறியா... இல்ல நான் பார்க்கவா?” இவன் புருவம் உயர்த்தி அழுத்தமாய் கேட்க

இப்படி ஒரு பதிலை கணவனிடம் இருந்து எதிர்பார்க்காததால் இவள் “ஙே...” என்று முழிக்க

அதில் வாய் விட்டே சிரித்தவனோ, “ஆனா பாரு எனக்கு இந்த மாதிரி எந்த கட்டுப்பாடும் இல்லை. அதனால்...” என்றவன் அவள் செய்வேன் என்று சொன்னதை... தற்போது இவன் செய்து கொண்டிருந்தான். அதாவது.. தன்னவளின் இதழில் தீர்ப்பு எழுதிக் கொண்டிருந்தான் அவன். அதுவும் அவனுக்குப் பிடித்த வகையில்.

கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு வரும் போது... சரளாவையும் உடன் அழைத்து வந்து இருந்தார்கள். எல்லாம் அனுவின் பிடிவாதம் தான். “அவங்க என்ன கூச்சல் சத்தம் போட்டாலும் நான் பார்த்துக்கிறேன்... வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்க நான் பார்த்துக்கிறேன்...” இவள் சொல்ல

“பார்த்துக்க முடியாமல் இல்லை ஷிதா... அவங்க தினந்தினம் கதறி அழும் போது... அதை என்னால் பார்க்க முடியல.. என்னாலே சாதாரணமாகவும் இருக்க முடியல...” இவன் வேதனையோடு சொல்ல

“நான் தான் பார்த்துக்கிறேன்னு சொல்கிறேன் இல்ல... என் கிட்ட விட்டுடுங்க...” இவள் நம்பிக்கை தர பின் மருத்துவரிடம் பேச... அவர் சில ஆலோசனைகளைச் சொன்னவர்... முன்பு போல கத்தல் கூச்சல் எல்லாம் சரளாவிடம் இல்லை என்பதால் அவள் வீட்டுச் சூழலில் பழகுவது நல்லது என்று சொல்லி அனுப்பி வைக்க... தம்பியுடன் வீட்டிற்கு வந்த அக்காவைப் பார்த்ததும்... வெண்பா தமக்கையைக் கட்டிக் கொண்டு அழ... அவளோ மிரள

“அக்கா, சரளா ம்மா மிரளுறாங்க பாரு.. கொஞ்சம் அழுகையை நிறுத்து...” மிருடன் அதட்டலாய் சொல்லவும் தான் தன் அழுகையை நிறுத்தினாள் வெண்பா.

மிருடனை கட்டிக் கொண்ட கஜேந்திரன், “இப்படி ஒரு பொண்ணு கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும் மாப்பிள. நல்லா இரு டா...” என்று வாழ்த்த, நெகிழ்ந்து போனான் மிருடன்.

பிரஸ் மீட்டிங்கில் அனு பேசியதை கேட்ட பிறகு அன்று முழுக்க வெண்பாவிற்கு அனு புராணம் தான்.
‘பின்ன… எப்படி பட்ட பொண்ணு என் தம்பிக்கு மனைவியா கிடைத்திருக்கா!’ இதை கணவனிடம் சொல்லி சொல்லி வாய் ஓய்ந்து போனாள் அவள்.

ஜீவாவையும் மான்வியையும் அழைத்து வந்து சரளாவிடம், “என் பிள்ளைகள் க்கா..” என்று மிருடன் அறிமுகப்படுத்த

அதைக் கேட்டதும் சரளாவின் கண்களில் ஒரு ஒளி வந்து போனதோ... அதை இவன் உணரும் முன்னே...

“இவங்களை எப்படி கூப்பிடணும் டாடி?” ஜீவா தன் தந்தையிடம் கேட்க

“சரளாம்மா.. ன்னு சொல்லுங்க இரண்டு பேரும்...” தந்தை சொல்லவும்... இருவரும் ஒருசேர அவளை

“ஸ்ரளாம்மா..” என்று அழைக்க

முகம் விகாசிக்க விரல்கள் நடுங்க, இரு பிள்ளைகளின் தலையையும்... முகத்தையும் தொட்டுத் தடவினாள் அவள். பின் மனைவியை இவன் அறிமுகப்படுத்த... அதற்கு அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இருக்கவில்லை.

மிருடன் பயந்தது போல் சரளாவிடம் பழைய கத்தல் எதுவும் இல்லாமல் தான் இருந்தாள். எப்போதும் தனிமையில் அமர்ந்து வெறுமையாய் எங்கோ வெறிப்பது... அழவில்லை.. ஆனால் கண்ணில் இருந்து கண்ணீர் மட்டும் வழியும். அதற்கு யார் என்ன சமாதானம் சொன்னாலும் நிற்காத கண்ணீர்... மிருடன் அன்பாய் ஒரு வார்த்தை சொன்னால் நின்று விடும்.

அனுவுக்கே அதைக் கண்டு ஆச்சரியமாக இருக்கும். எவ்வளவு அன்பு இந்த மிரு மேல் என்று தான் அவளுக்கு தோன்றும். மிருடனின் பேச்சுக்கு பிறகு அடுத்து... சரளா கேட்பது ஜீவா மான்வி பேச்சைத் தான். அவர்கள் என்ன சொன்னாலும் தட்டாமல் ஏற்பார். வாய் ஓயாமல் பேசும் அந்த இருவரையும் எப்போதும் பேச விட்டு கேட்டுக் கொண்டிருப்பாள் அவள்.

திருமண நாளும் நெருங்க... சரளாவிடம் இவன் இவ்விஷயத்தை சொல்ல... அவளோ புருவங்களை சுருக்கியபடி தம்பியின் முகத்தை நோக்கவும்... “எங்களுக்குள்ள முன்பே திருமணம் நடந்துடுச்சு க்கா... இப்போ மறுபடியும் உங்க முன்னாடி செய்துக்கலாம்னு இருக்கோம்....” இவன் விளக்கவும் முதன் முறையாக அவள் முகத்தில் சிறு புன்னகையின் கீற்று. அந்த புன்னகை முகத்துடனே அனுவை அணைத்துக் கொண்டாள் அவள்.

குணநாதனின் மகள் அனுதிஷிதா என்பதையோ... சரளாவுக்காக அவள் இப்படி ஒரு நியாத்தை செய்தாள் என்பதையோ... யாரும் சரளாவிடம் சொல்ல வேண்டாம் என்றும் தானாகவே அவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று உறுதியாக சொல்லி விட்டாள் அனு.

திருமணத்தை மிகவும் எளிமையாக... தங்களுடனே முடிக்க ஏற்பாடு செய்திருக்க.. அன்றைய நாளும் விடிய... காலை பத்திலிருந்து பதினொன்று வரை முகூர்த்தம் என்பதால்... பரபரப்பு இல்லாமல் வீட்டில் இருந்தோர் எல்லோரும் நிதானமாகவே கிளம்பினார்கள். மிருடன் தங்கள் அறையில் உள்ள கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருக்க... அப்போது இன்றைய விழாவில் போட வேண்டிய ஆடையைத் தாயிடமிருந்து வாங்கிய மான்வி அங்கிருந்து ஓட எத்தனிக்க.. மகளைப் பிடித்தவள்,
“இப்போ எதுக்கு இந்த ஓட்டம்? கொடு.. அம்மா போட்டு விடுறேன்...”

“ம்ஹும்.... நான் அத்த கிட்ட தான் போட்டுப்பேன்...” மகள் பிடிவாதம் பிடிக்க

“அவங்க ஸ்ரீ அக்காவிலிருந்து சரளாம்மா வரை பார்த்துக்கணும்... அதிக வேலை வெண்பா அத்தைக்கு. இங்கே கொடு அம்மா உனக்கு டிரஸ் செய்து விடுறேன்...” அனு தன்மையாய் சொல்ல

“போ மம்மி... நீயும் டாடியும் எப்போ பாரு எங்களை விட்டுட்டு காணாமல் போய்டறீங்க. அப்போ எல்லாம் அத்த தானே எங்களை பார்த்துக்கிட்டாங்க? அதே மாதிரி இப்பவும் செய்வாங்க.. என்னை விடு” சொன்ன சின்ன வாண்டு அங்கே நிற்காமல் ஓடி விட.. அவள் சொன்னது என்னமோ எதார்த்தமாக தான் ஆனால் மகள் வார்த்தையில் கணவன் மனைவி இருவருமே சாட்டையால் அடி வாங்கியது போல் உணர்ந்தார்கள்.

அனு சுத்தமாய் அதிர்ந்து போய் அமர்ந்து விட.. மிருடன் அவளிடம் நெருங்கியவன், “ஷிதா...” இவன் அவள் தோள் தொட்டு அழைக்கவும், அதில் தன்னவன் வயிற்றில் முகத்தைப் புதைத்தவள்

“நம்ம கோபத்தால்... பிடிவாதத்தால்... எப்படி பட்ட முன்னுதாரணமா நம்ம பிள்ளைகள் முன்னால் இருந்திருக்கோம் மிரு!” இவள் கவலையாய் சொல்ல

“எனக்கும் புரியுது ஷிதா... இதோ இந்த நிமிடம் நாம் புதுசா நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்னு நினைத்துக்கோ... நினைக்க எல்லாம் வேண்டாம்... உண்மையிலேயே.. இன்று தான் நாம் சாஸ்திரம் சம்பிரதாயம் பார்த்து... தேவர்கள்... ரிஷிகள்... முனிவர்கள் என்று அனைவரும் ஒன்று கூட... உறவினர்களுடன்.. எல்லாரோட ஆசீர்வாதத்துடன்... வாழ்க்கையில் இணைகிறோம். இது ஒரு தொடக்கமா நமக்கு இருக்கும். கோபம்... பிடிவாதம்... வன்மம்... பழி... எல்லாத்தையும் தூக்கி தூரப் போட்டுட்டு... எல்லோரையும் போல மேன்மையான வாழ்க்கை வாழ்ந்து... நம்ம பிள்ளைகளுக்கு உதாரணமா இருப்போம் செல்லம்மா... என்ன நம்பு...” இவன் அவளுக்கு காதலுடன் நம்பிக்கை தர,

“நிச்சயமா வாழ்வோம் ங்க..” என்ற உறுதியுடன் சற்றே தெளிந்தது அவள் முகம்.

கோவிலில் திருமணம் என்பதால் இவர்கள் அனைவரும் கோவிலுக்குள் நுழையவும்.. இவர்களுக்கு முன்பே அங்கு வந்திருந்தார்கள் பரணியும், பார்கவியும் அவள் பெற்றோரும். இருவருடைய திருமணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தை எல்லாம் பேசி முடிய.. இதோ இன்னும் இரண்டு மாதத்தில் இவர்களுக்கும் திருமணம். திருமணத்திற்காக புதுக்கோட்டையிலிருந்து முனீஸ்வரனும்... அவர் மனைவி பார்வதியும் வந்திருக்க... அனைத்து வித சடங்குகளுடன் இனிதே நடந்து கொண்டிருந்தது விழா.

மான்வி, தந்தை பக்கத்தில் ஒட்டிக் கொண்டு அமர... ஜீவா, அனு பக்கத்தில் அவளுடனே ஒட்டிக் கொள்ள... சுற்றத்தார் முன்னிலையில் ஐயர் மிருடன் கையில் மஞ்சள் சரடை தர...

“இறைவா... இந்த தாலியைக் கட்டுற நான் இந்த வினாடியிலிருந்து என்னவளை என் உயிர் போகிற நிலையிலும் அவளை விட்டுப் பிரியாமல்.. மனம் ஒத்து ஒற்றுமையா... என் ஷிதாவுடன் நான் வாழ... அருள்புரிப்பா..” என்ற வேண்டுதலுடன் இவன் தன்னவளின் கழுத்தில் மஞ்சள் சரடை ஏற்றி மூன்று முடிச்சைப் போட

“இறைவா... இந்த தாலியோட அருமை தெரியாமல்... நான் முன்பு செய்ததை மன்னித்து... என் மிரு இப்போ கட்டும் இந்த தாலி நான் சாகும் வரை என் கழுத்திலிருக்கவும்... நாங்க இருவரும் மனம் ஒத்து ஒற்றுமையா வாழவும் அருள்புரிப்பா....” என்ற வேண்டுதலுடன்... தலை தாழ்த்தி அம் மாங்கல்யத்தை வாங்கிக் கொண்டாள் அனுதிஷிதா.

“ராமனது துன்பம் இனி நமக்குவரப் போவதில்லை
சீதைபட்ட வேதனையைச் சிந்தித்தால் துன்பமில்லை!
ஆதாரம் ஒன்றையொன்று அண்டி நிற்க வேண்டுமென்றே
ஓர்தாரம் கொள்கின்றோம் உடனிருந்து வாழ்கின்றோம்.
சேதாரம் என்றாலும் சேர்ந்துவிட்ட பின்னாலே
காதோரம் அன்புசொல்லிக் கலந்திருந்தால் துன்பமில்லை!”
எழுதியவர் கவியரசர். கண்ணதாசன்

பிணக்குகள் தீர்ந்து… மனதின் இறுக்கங்கள் மறைந்து.. இனி இவர்கள் இருவரின் வாழ்வும் மேன்மையுறும் என்ற நம்பிக்கையில் நாமும் விடை பெற்று கொள்ளலாம்...

நன்றி!
முடிவுற்றது...

வணக்கம் தோழமைகளே..

உங்களின் அமோக ஆதரவாலும்.. அன்பாலும் என்னுடைய ஏழாவது கதையான.. "எந்தன் முகவரி நீயடி.." என்ற படைப்பை முடித்து விட்டேன்.. இக்கதையில் என்னுடன் பயணித்த அனைத்து தோழமைகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.. மற்றும் பிரியங்கள்💖💖💖💖💖.
இன்று முதல் மிருடவாமணனும்.. அனுதிஷிதாவும்.. என்னிடமிருந்து விடை பெறுகிறார்கள்.. ஆனால் அவர்கள் இருவரும் வாசகர்களாகிய.. உங்கள் இதயங்களில் என்றும் நீங்கா இடம் பிடித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.. மீண்டும் நாம் அனைவரும் என்னுடைய அடுத்த படைப்பில் சந்திப்போம் நண்பர்களே

என்றும் உங்கள்
ஆதரவுடன்
உங்கள்

யுவனிகா 💜
 
P Bargavi

New member

Nice story
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN