காதல் கடன்காரா 10

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவனா கார்த்திக்கின் கழுத்தை கட்டிக் கொண்டாள். "சாரி அண்ணா.. பசிக்குதுன்னு சாப்பிட போயிட்டேன்.. சாரி அண்ணா.." என்றாள் அழுதபடி. கழுத்தை கட்டியபடி மேலே படுத்திருந்தவளின் இதய துடிப்பு கார்த்திக்கிற்கும் என்று கேட்டது. தறிக் கெட்டு துடித்துக் கொண்டிருந்தது அவளின் இதயம். அதிகம் பயந்து விட்டாள் போல.

அழுதவளின் தோளில் வருட கூட முடியவில்லை அவனால்.

"எனக்கு ஒன்னும் இல்ல.." என்றான்.

புவனா அழுதபடியே எழுந்து நின்றாள். ஈஸ்வரை திரும்பி பார்த்தாள். விஷ பாட்டிலோடு நின்றிருந்தவனை பயத்தோடு பார்த்தவள் "தயவு செஞ்சி இங்கிருந்து போயிடுங்க அண்ணா.. இனி இவன் உங்களோட எந்த வம்புக்கும் வர மாட்டான்.." என்றாள் குரல் நடுங்க.

"மெண்டல்.." என்றான் கார்த்திக்.

திரும்பி பார்த்தாள். "அவன் கையில இருக்கும் விஷத்தை பிடுங்கு.." என்றான்.

புவனா குழம்பி போனாள். "சட்டுன்னு பிடுங்கு.." இவனின் அவசரத்தில் அவள் அந்த பாட்டிலை பிடுங்கிக் கொண்டாள். கார்த்திக்கின் போனாலும், புவனாவின் திடீர் வருகையாலும் குழப்பமும்,பயமுமாக நின்றிருந்த ஈஸ்வர் தன் கையிலிருந்த விஷ பாட்டிலை அந்த நேரத்தில் தக்க வைத்துக் கொள்ளாமல் விட்டு விட்டான்.

விஷ பாட்டிலை முதுகிற்கு பின்னால் மறைத்து வைத்துக் கொண்ட புவனா "இனி உனக்கு ஒன்னும் இல்ல அண்ணா.." என்றாள்.

ஈஸ்வர் வியர்த்த நெற்றியை துடைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். எப்படியோ தப்பித்தால் போதும் என்றது அவனின் நிலை.

அவன் அந்த அறையை கடந்த பிறகு தன் தங்கையை பார்த்தான் கார்த்திக்.

"அந்த பாட்டிலை கழட்டி எனக்கு விஷத்தை கொடு.." என்றான் கார்த்திக்.

புவனா அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள்.

"என்ன உளறுற.?" என்றவளை சோகமாக பார்த்தவன் "இது நல்ல சான்ஸ் அவனை பழி வாங்க.." என்றான் ஈஸ்வரை குறிப்பிட்டு.

மறுப்பாக தலையசைத்தவள் "முத்தமிழ் அடிச்சதுல தலையில் அடிப்பட்டு பைத்தியமாகிட்ட நீ.!" என்றான்.

புவனாவின் போன் ஒலித்தது. எடுத்து பார்த்தாள். பெரியவன் போன் செய்திருந்தான். சற்று முன் அவன்தான் போன் செய்து இந்த அறையில் நடக்கும் விசயங்களை பற்றி அவளிடம் சொன்னான். கேட்டதும் ஓடி வந்து விட்டாள் புவனா.

அழைப்பை ஏற்று காதில் வைத்தாள். "ஸ்பீக்கர்ல போடு.." என்றான் மூர்த்தி.

கார்த்திக் தந்த அதிர்ச்சியில் இருந்தவள் யோசிக்காமல் அவன் சொன்னது போல செய்தாள். "வந்தேன்னா அந்த நாயை செருப்பால அடிப்பேன்னு சொல்லு.." என்றான் அவன்.

"டேய்.. இது நமக்காகதான்டா.." என்றான் கார்த்திக்.

"***.. நமக்குன்னு கை கால் இருக்கு. எதையாவது செஞ்சி வச்சின்னா நானே வந்து உன்னை கொன்னுடுவேன்.." என்றான் அவன்.

"உனக்கும் இவளுக்கும் சேர்த்து நான் வேலை செய்றேன். உங்களுக்காகவும் சேர்த்து நான் ரிஸ்க் எடுக்கறேன்.. மரியாதையா இரண்டு பேரும் ஹெல்ப் பண்ணுங்க.. இந்த கால் ரெக்கார்டை வச்சி ஈஸ்வரை அரெஸ்ட் பண்ணிடு நீ.." என்றான்.

"லூசு மாதிரி பேசாதடா.. பயமா இருக்கு.." என்றாள் புவனா.

"சொத்துல பாகம் கேட்டு வருவிங்க இல்ல அப்ப மிதிக்கிறேன் இரு உன்னை.. மெண்டல்.‌. நான் இருக்கிறது ஹாஸ்பிட்டல்ல.. நீ விசத்தை தந்துட்டு உடனே போய் டாக்டரை கூட்டி வா.. நானும் பிழைச்சிப்பேன். ஈஸ்வரையும் பழி வாங்கலாம்.." என்றான்.

புவனா ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக அவனை பார்த்தாள். இவனின் ஐடியா இப்போது சரியென்று தோன்றியது. ஆனாலும் பயமாக இருந்தது.

"ஏற்கனவே சாக கிடக்கிற. விஷம் குடிச்சா நீ செத்துடுவடா பரதேசி.." என்றான் மூர்த்தி.

"ரிஸ்க் நான் எடுக்கிறேன். நோகாம நோம்பு கும்புட போற உங்களுக்கு என்னடா வந்தது.? ஹெல்ப் பண்ணி தொலைங்கடா.." என்றான் கார்த்திக்.

மூர்த்தியும் யோசித்தான். புவனாவும் யோசித்தாள்.

"சரி.. பாப்பாம்மா உடனே போய் டாக்டரை கூட்டி வந்துடு.." என்றான் மூர்த்தி.

புவனா யோசனையோடு "சரி.." என்றாள். "ஆனா கொஞ்சமாதான் தருவேன்.." என்றாள்.

"கொஞ்சமாவே கொடு தங்கம் புள்ளை. நான் உனக்கு அதிகமா சொத்து பங்கு தரேன்.." என்றான் கார்த்திக்.

புவனா அவனின் கன்னத்தில் இடித்துவிட்டு விஷத்தின் மூடியை கழட்டினாள்.

"வில்லத்தனம் பண்றோம் நாம.." என்றாள் சிரிப்போடு.

"ஆமா.. வில்லனுக்கு வில்லன்.." என்று கண்ணடித்தான் கார்த்திக்.

"என் கை அடியில் போன் இருக்கு. அதை எடுத்துக்கோ. ஆதாரத்தை வேற யாராவது எடுத்துக்க போறாங்க.!" என்றான்.

புவனா அந்த போனை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டாள்.

விஷ பாட்டிலை கழட்டியவள் யோசித்து பார்த்து விட்டு விசத்தை விரலால் தொட்டு அவனின் உதட்டில் தடவினாள்.

"பாப்பா ரொம்ப பாசமா இருக்காத. ரிஸ்க் நான் எடுக்கறேன்.. கொஞ்சமாவது ஹெல்ப் பண்ணு.." என்றான்.

"ரொம்ப பயமா இருக்குடா.." என்றபடியே சிறிதளவு விஷத்தை அவனின் வாயில் ஊற்றினாள் புவனா. கைகள் நடுங்கியது. "உனக்கு பைத்தியம் ரொம்ப முத்திடுச்சி. நீ செத்துட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்ல. பேயா வந்து என்னை ஏதும் பிடிச்சிடாத.." என்றாள்.

கார்த்திக் சிரித்தான்.

கால் பாட்டில் விஷத்தை தந்த புவனா அதற்கு மேல் தரவில்லை. கால் பாட்டில் குடித்தாலே இறந்து விடுவோம் என்பதை அவனும் சொல்லவில்லை‌. அதை அறிந்த மூர்த்தியும் போனின் மறு முனையில் இருந்தான்.

பாட்டிலை அப்படியே தரையில் போட்டு விட்டு கதவை நோக்கி வேகமாக நடந்தாள் புவனா.

"அமுலு.." என்று அழைத்தான் கார்த்திக்.

திரும்பி பார்த்த தங்கையிடம் "நேத்து சாயங்காலம் வந்துட்டு போன அபிராமி இன்னைக்கு மதியமாகியும் வரல‌. அதனால்தான் நான் விஷம் குடிச்சேன்னு அவக்கிட்ட சொல்லு. ஈஸ்வர் மேட்டரை சொல்லாத.." என்றான்.

"ஏன்டா பாவி.?" என்றாள் அதிர்ச்சியாக.

"புருசனை விட்டுட்டு போனா இல்ல.. கொஞ்ச நாளைக்கு பீல் பண்ணட்டும்.." என்றவனுக்கு கண்கள் சொருகியது.

"லூசு பையன்.. டைம்மை வேஸ்ட் பண்ணிட்டான்.." என்று புலம்பிய புவனா அவசரமாக வெளியே ஓடினாள்.

"புவி.." என்றபடி அந்த வராந்தாவில் வந்த அம்மாவை கண்டுக் கொள்ளாமல் மருத்துவர் இருந்த அறை நோக்கி ஓடினாள்.

"டாக்டர்.. என் அண்ணன் வாயெல்லாம் நுரையா இருக்கு. அவன் கட்டில் அடியில பாய்சன் பாட்டில் இருக்கு.. ப்ளீஸ் வந்து பாருங்க.‌." என்று மருத்துவரிடம் அழுதபடி அழைத்தாள் புவனா.

டாக்டர் அவசரமாக தன் இருக்கையிலிருந்து எழுந்தார். "இது இம்பாசிபில்.. அவரால கை காலை கூட அசைக்க முடியாது.." என்றபடி ஓடி வந்தார் மருத்துவர்.

"எனக்கும் அதான் புரியல டாக்டர்.." என்றபடி கண்களை துடைத்த புவனா கைகளில் விஷத்தின் வாசனை வருவதை கண்டு அவசரமாக கையை துப்பட்டாவில் அழுந்த துடைத்தாள்.

மருத்துவர் கார்த்திக்கின் கண்களை திறந்து பார்த்தார். அவனின் வாயோரம் நுரை கட்டியிருந்ததையும் பார்த்தார். அவன் விஷம் அருந்தியதை புரிந்துக் கொண்டவர் அதன் பிறகே தரையில் கிடந்த விஷ பாட்டிலை கண்டார். கையில் எடுத்தவர் அதிர்ச்சியோடு கார்த்திக்கை பார்த்தார்.

"ஓ மை காட்.. இது ரொம்ப டேஞ்சரான பாய்சன். சீக்கிரம் சிகிச்சை தரலன்னா காப்பாத்தவே முடியாது.." என்றவர் அவசரமாக தன் போனை எடுத்து மற்றொரு மருத்துவருக்கு போன் செய்தார். "அவசர கேஸ்.." என்றவர் விசயத்தை விவரிக்க ஆரம்பித்தார்.

மருத்துவர் முதல் உதவிகளை செய்ய ஆரம்பித்து விட்டார். புவனாவிற்கு பயமாக இருந்தது. "என்ன ஆச்சி டாக்டர்.?" என்றாள்.

"ரொம்ப சீரியஸ்ம்மா.. காப்பாத்த முடியாம கூட போகலாம்.. எப்படி விஷம் இங்கே வந்ததுன்னு தெரியல. விசயத்தை கண்டுபிடிக்கணும்.." என்றவர் தன் கர்ச்சீப்பை அவளிடம் நீட்டினார். அதை பத்திரமா எடுத்து அந்த மேஜை மேல வைம்மா.. கை ரேகைக்கு தரலாம்.." என்றார்.

புவனாவிற்கு இதயம் ஒருநொடி நின்று விட்டது. டாக்டர் தந்த கர்ச்சீப்பை வாங்கி விஷ பாட்டிலை எடுத்தவள் அதை வைத்தே டாக்டர் அறியா வண்ணம் அவசரமாக துடைத்து விட்டு மேஜையின் மீது வைத்தாள்.

சற்று நேரத்தில் மருத்துவர் கூட்டம் அங்கே வந்து சேர்ந்தது. "நீ கொஞ்சம் வெளியே போம்மா.." என்று நர்ஸ் ஒருவர் புவனாவை வெளியே அனுப்பினார்.

வாசலில் குழப்பமாக நின்றிருந்த அம்மா "என்னடி நடக்குது உள்ளே.? தூங்கிட்டு இருப்பவனை பார்த்துட்டு இப்பதானே அந்த பக்கம் போய்ட்டு வந்தேன் நான்.." என்றாள்.

"அண்ணன் விஷம் குடிச்சிட்டான் அம்மா‌‌.." என்று கதறி அழுதாள் புவனா. யமுனா நெஞ்சில் கை வைத்தபடி பின்னால் இருந்த சுவரின் மீது சாய்ந்தாள்.

"அம்மா.." என்று அவளை பிடித்து அமர வைத்தாள் புவனா.

"இவன் ஏன்டி இப்படி என்னை கொல்றான்.? என்னை பாடையில ஏத்திட்டுதான் நிம்மதியா இருப்பானா.?" என்று புலம்பலாக அழுதாள் யமுனா.

புவனாவும் அம்மாவோடு சேர்ந்து அழுதாள். யமுனா அழுதபடியே தன் இடுப்பில் இருந்த செல்போனை எடுத்தாள். கணவனுக்கு அழைத்து அழுதபடியே விசயத்தை சொன்னாள். முருகன் உடனே வருவதாக சொல்லி விட்டு போனை வைத்தார்.

சிகிச்சை நடந்த அறையின் வாசலில் உயிரை கையில் பிடித்தபடி நின்றுக் கொண்டிருந்தாள் புவனா. 'டேய் அண்ணா என்னை கொலைக்காரி ஆக்கிடாதடா.. எப்படியாவது எழுந்துடுடா..' என்று மனதுக்குள்ளயே நூறு முறை சொன்னாள்.

டாக்டர்களும் நர்ஸ்களும் அடிக்கடி உள்ளேயும் வெளியேயும் ஓடிக் கொண்டு இருந்தார்கள்.

"நர்ஸ் எங்க அண்ணனுக்கு எப்படி இருக்கு.." என்றவளை முறைத்தான் அவர்.

"அடிப்பட்ட உடம்பு. பிழைச்சா பார்க்கலாம்.." என்றார் கோபமாக‌. "ஒரு பேஷண்டை பார்த்துக்க கூட உங்களால் முடியாதா.? உங்களால முடியாதுன்னா முதல்லயே சொல்ல வேண்டியதுதானே நாங்களே யாராவது ஒருத்தர் கவனிச்சிக்கிட்டு இருந்திருப்போமே.! நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு காப்பாத்திய உயிர் தெரியுமா இது.. உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அலட்சியம்.?" என்று திட்டி விட்டு சிகிச்சை நடந்த அறைக்குள் சென்றார் அவர்.

அபிராமிக்கு அன்று மாலையில்தான் செய்தி வந்து சேர்ந்தது. அவன் விஷம் அருந்தியதாகதான் ஊர் முழுக்க செய்தி பரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. அபிராமி வந்து சேர்ந்த பிறகு ஈஸ்வரை கைது செய்யலாம் என்று காத்திருந்தான் மூர்த்தி.

முத்தமிழிடம் வந்த மூர்த்தி "உன்னாலதான் என் தம்பி பாய்சன் சாப்பிட்டான்.. உன்னை ஆயுள் கைதியா ஆக்காம விட மாட்டேன்.." என்றான்.

விஷம் அருந்திய கார்த்தி இறந்து போக வேண்டும் என்று கடவுளை வேண்டினான் முத்தமிழ்‌. ஆயுள் தண்டனை கூட அவனால் ஏற்றுக் கொள்ள முடியும். அவனின் குட்டி தேவதைக்கு தீங்கு விளைவித்தவன் உயிரோடு இருக்க கூடாது என்று நினைத்தான்.

அபிராமி நடுங்கும் உடம்பும் தறிக்கெட்டு துடிக்கும் இதயமுமாக தன் அறையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள். கார்த்திக் அவளின் மூளையில் எண்ண சிதைவை தந்து விட்டான். அவளை உடைத்து விட்டான். அவளுக்குள் பயத்தை தந்து விட்டான். இவள் தன் வீட்டை விட்டு செல்வதை பற்றி மனமுடைந்தபடி யோசித்த நேரத்தையே அவளுக்கு எதிராக திருப்பி விட்டு விட்டான் அவன். சற்று முன் போன் செய்திருந்த யமுனா "என் புள்ளையை கொன்ன நீ நல்லாவே இருக்க மாட்ட.." என்று சாபமிட்டாள் இவளுக்கு.

"அந்த எல்லை முனியப்பன் என் வேண்டுதலை நிறைவேத்திட்டாரு.. அடுத்த ஞாயிறு கிடா வெட்டலாம்.." என்றார் தாத்தா கார்த்திக்கின் செய்தி கேட்டு. ஏனெனின் அவருக்கு வந்த தகவல் கார்த்திக் இறந்து விட்டான் என்று. அது வதந்திதான். ஆனால் அதை இவர்தான் அறியவில்லை அப்போது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN