மௌனங்கள் 13

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவின் POV

தலை வெடிக்கின்றது போலவே இருந்தது எனக்கு. பாதாளம்மென்று தெரிந்தே மூழ்கிக் கொண்டு இருக்கிறேன் நான். குழலி என்னை கொன்றுக் கொண்டு இருக்கிறாள். எங்கள் இருவருக்கும் இடையே உள்ள அந்த கண்ணுக்கு தெரியாத நூல் இப்போதெல்லாம் தினம் தினம் தடிமனாகிக் கொண்டு இருக்கிறது. சிலந்தி வலையென்று நான் நினைத்தது எஃகு கோட்டையாக மாறிக் கொண்டு இருக்கிறது.

காலையில் நான் அவளுக்கு தந்த முத்தம் என்னை மீறியது. இவ்வளவு பலவீனமாக நான் என்றைக்கும் உணர்ந்ததே இல்லை. அவளின் அருகில் அப்படியே சாய்ந்து விட்டது என் மனம். அவள் உதடுகள் அநியாய இனிப்பு. இந்த முத்தங்கள் இன்னும் சில மாதங்கள் தொடர்ந்தால் நான் சர்க்கரை வியாதி வந்தே இறந்து விடுவேன். என் வாழ்வின் முதல் முத்தமே இவ்வளவு இனிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை நான்.

அவளின் நினைவில் இருந்தேன் நான். போன் ஒலித்தது. தம்பி அழைத்திருந்தான். எடுத்து பேசினேன்.

"அண்ணா.. அங்கே உன்னை பிடிக்க தனிப்படை அமைச்சி இருக்காங்க. ரொம்ப சீரியஸா உன்னை தேடிட்டு இருக்காங்க. நீ சீக்கிரமா உன் வேலை முடிச்சாகணும்.." என்றான்.

எனக்கும் அவன் சொன்ன விசயம் பற்றி ஏற்கனவே தெரியும். கவனம் மூளையில் உண்டு. ஆனால் என் தலையெழுத்து.. ஒரு பேயிடம் மாட்டிக் கொண்டு உள்ளேனே.

"தங்சேயா உன்கிட்ட பேசணும்ங்கறாரு.." என்றவன் அவரிடம் போனை தந்தான்.

"ஹலோ.." என்றார். அவரின் குரல் கேட்டு பல நாட்கள் ஆகி விட்டது. அவரை ரொம்பவும் மிஸ் செய்கிறேன் நான். என் தந்தையை போன்றவர். சகோதரை போன்றவர். என் குருவாகவும் இருப்பவர்.

"தங்சேயா.. நல்லா இருக்கிங்களா.?" என்றேன்.

"ம்.. நே தெட்டமெட்ட எடத்துல எல்லாம வேற எடத்துல எருக்கேன்னு சொன்னாங்க.. நான் உன் மேல முழு நம்பெக்க வச்செருக்கேன்.. நீ என்ன செஞ்சாலும் அதல ஒரு காரணம் எருக்கும்ன்னு நம்பறேன்.. வெற்றெயோடு தெரும்பெ வா.." என்றார்.

அவர் பேசும் இ.. எ போலதான் உங்களுக்கு ஒலித்திருக்கும். அவர் சிரமப்பட்டு தமிழை கற்றுக் கொண்டார். ஆனாலும் நமது இயின் உச்சரிப்பு அவருக்கு சரியாக பிடிப்படவில்லை. ஆங்கில ஈயையும் தமிழ் ஈயையும் அவர் ஆரம்பத்திலேயே குழப்பிக் கொண்டதால் வந்த குழப்பம் இது. ஆனாலும் அவரின் பாசை எங்களுக்கு புரியும்.

"உங்க நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன் தங்சேயா.." என்றேன்.."

"நல்ல பையன்.." என்றவர் அதன் பிறகு பேசவில்லை.

"அண்ணா.." என்றான் தம்பி. அவனோடு சில நிமிடங்கள் பேசிவிட்டு போனை வைத்தேன்.

இனி இந்த கீழ் வீட்டுக்காரியை பற்றி நினைக்க கூடாது என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன்.

லேப்டாப்பை இயக்கிவிட்டு தீவிர மனதோடு அமர்ந்தேன். திட்டங்கள் அனைத்தும் தெளிவாக இருக்க வேண்டும் என நினைத்து அனைத்தையும் யோசித்து மனதுக்குள் பதிய வைத்துக் கொண்டேன்.

இரண்டாம் நாள் காலையில் அந்த கட்சி கூட்டத்திற்கு போய் சேர்ந்தேன். அறுபதாயிரம் பேர் வந்திருப்பதாக அந்த கட்சியின் தலைவர் சற்று முன் சமூக வலைத்தளத்தில் பதிந்திருந்தார்.

அறுபதாயிரம் பேரில் நாற்பதாயிரம் பேரையாவது இந்த பூமியில் இருந்து நீக்காமல் விட கூடாது என்று முடிவெடுத்திருந்தேன் நான். கட்சி கூட்டம் நடைபெற்ற இடத்தை விட்டு நூறடி தள்ளி காத்திருந்தேன். நான் கீழ்வீட்டு சண்டாளியை பற்றி நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் நால்வர் என்னை தேடி வந்தார்கள்.

"சார்.." என்றார்கள். நான் எண்ணத்திலிருந்து வெளியே வந்தேன். என் பேக்கில் இருந்த பாம்களை அவர்களிடம் தந்தேன். அனைவரும் பாமை பெற்று தங்களின் இடுப்பில் சொருகிக் கொண்டனர். பாம்மோடு நான் இணைத்திருந்த நாடாவை தங்களின் இடுப்போடு கட்டிக் கொண்டனர்.

"கேட் நம்பர் எய்ட்.." என்றேன். நால்வரும் தலையசைத்துவிட்டு கிளம்பினர். நான் காரில் ஏறி அமர்ந்தேன். எனது பணக்கார டிரைவர் பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அவன் ஏற்பாடு செய்த ஆட்கள்தான் பாம் வாங்கி சென்றவர்கள். வெறும் ஒரு லட்சத்திற்கு தற்கொலை செய்துக் கொள்பவர்களையெல்லாம் இங்கேதான் காண முடியும். அதே வெறும் ஒரு ஆயிரம் தந்தால் அடுத்த மனிதனையே வெட்டி தள்ளுபவர்கள்தானே சிலர்.? வறுமையும் பசியும் மனிதனை தலை கீழாக மாற்றும். இதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். என்னை பார்த்த பிறகும் கூட நம்ப மாட்டீர்கள்.

"ப்ளான் ஏ ஓவர்.." என்றேன்.

பாடல் முணுமுணுப்பதை நிறுத்திவிட்டு என்னை திரும்பி பார்த்தவன்.

"சூப்பர்.." என்றான்.

நான் என் பைனாக்குலரை எடுத்தேன். கட்சி கூட்டத்தை கவனித்தேன்.

எட்டாம் நம்பர் கேட்டில் இருந்த பாதுகாவல் வீரன் நான் அனுப்பிய ஆட்களை சோதனை செய்தான். மற்றவர்கள் அறியாதவாறு ஆயுதங்கள் கண்டறியும் சோதனை கருவியை ஆப் செய்து விட்டு அவர்களை சீரியஸ் முகத்தோடு சுற்றி சுற்றி வந்து சோதித்தான். நான்தான் ஏற்கனவே சொன்னேன்.. உங்கள் ஆயிரம் பேரை அழிக்க உங்களில் இருக்கும் ஒற்றை துரோகி போதுமென்று. பாம் கட்டி சென்றவர்களை விடவும் மிக பெரும் துரோகி இவன்தான். ஆனால் நிச்சயம் இது உங்களுக்கு புரியாது. ஏனெனில் நீங்கள் எப்போதும் அம்பை மட்டுமே பார்ப்பவர்கள். ஒருநாள் கூட நிமிர்ந்து வில் யார் என்று பார்க்காதவர்கள்.

நால்வரும் உள்ளே சென்றார்கள்.

"பாம் கட்டி போனாங்க இல்லையா.. அதுல ஒருத்தனோட குழந்தைக்கு ஏதோ ஆபரேசனாம். வீட்டுல இன்னும் ஒரு ஐம்பதாயிரம் தந்துடுறிங்களான்னு கேட்டான் நேத்து நைட் போன் பண்ணி.. சரியான பேராசை புவி இவங்களுக்கு.." என்றான் என் டிரைவர்.

இந்த டிரைவரை விடவும் அதிக பேராசை கொண்டவனை நான் பார்த்ததே இல்லை. ஆனால் இவன் அந்த மனிதனை பேராசை பிடித்தவன் என்கிறான். வாழ்ந்தால்தான் மற்றொரு லட்சம் சம்பாதிக்க இயலும் என அறியாத முட்டாள் அந்த பாம் கட்டி சென்றவன்.

டிரைவர் போன் செய்தான். அடுத்தடுத்து நான்கு அழைப்புகளை பேசினான்.

"நீங்க சொன்ன ஸ்பாட்ல ஆட்கள் உட்கார்ந்துட்டாங்க.." என்றான் டிரைவர்.

நான் காத்திருந்தேன். சற்று நேரத்தில் கட்சி கூட்டத்தின் மாபெரும் ஸ்பீக்கர்கள் அனைத்தும் செயல்பட தொடங்கின.

அந்த மாநில மொழியில் உரையாடினான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவன்.

நான் டேப்பில் அந்த நிகழ்ச்சியின் நேரலையை கவனிக்க ஆரம்பித்தேன்.

"அரை மணி நேரம் கழிச்சி பாமை வெடிக்க வைங்க.." என்றான் டிரைவர்.

"ஏன்.?" என்றேன் அவன் சொல்ல வந்தது புரியாமல்.

"அரை மணி நேரத்துல கூட்டம் நல்லா செட்டில் ஆகிடும்.." என்றான்.

எனக்கு காத்திருப்பு பிடிக்காது என்று இவனுக்கு தெரியவில்லை போலும்.

நான் என் கால் சட்டையின் இடது புற பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தேன். இந்த டிரைவர்தான் ஒரு வாரம் முன்னால் இதை வாங்கி வந்து தந்திருந்தான்.

"இங்கிருந்து கிளம்பலாம்.." என்றேன்.

அவன் புரிந்துக் கொண்டு காரை கிளப்பினான். எவ்வளவு சொத்துக்களுக்கு சொந்தக்காரன். மற்றவர்களின் அழிவில் சுகம் காண என்னோடு சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறான். தூரமாக வந்த பிறகு கையிலிருந்த போனை ஆன் செய்தேன். தூரத்தில் மிக மெதுவாக நான்கு டமார் சத்தங்கள் கேட்டது. அருகே இருந்து ரசிக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன். டேப்பின் திரை கருப்பாக மாறி பின்னர் வெள்ளை கோடுகளோடு ஓடியது.

கார் ஊர் நோக்கி கிளம்பியது.

"புவி நான் ஒரு சந்தேகம் கேட்கட்டுமா.?" என்றான் அவன் காரை ஓட்டியபடி.

"ம்.." என்றேன். இந்த இருநொடி இடைவெளியில் அந்த கொலைக்காரியை பற்றி நினைத்து விட்டேன் நான்.

"ஏன் ஆட்கள்.? எப்பவும் நீங்களேதானே செய்விங்க.?" என்றான்.

நான் என் உயிரை குடித்தவளின் நினைவிலிருந்து முழுதாக வெளி வந்தேன். அவனை பார்த்தேன். "வெறும் குண்டை விட தற்கொலை படை ஆட்களால் வெடிக்கப்படும் குண்டுக்கு சக்தியும், வலியும் அதிகம்.." என்றேன்.

இது அவனுக்கு முழுதாக புரிந்திருக்காது என்று தெரியும். ஆனால் மக்களுக்கு புரியும். எதிரிகள் நம்முள் இருப்பவர்களை நமக்கெதிராக பயன்படுத்துகிறார்கள் என்ற உணர்வு அவர்களின் மனதை எந்த அளவிற்கு உடைக்கும் என்று தெரியும்.

ஊருக்கு வந்து சேர்வதற்குள் நான்கு இடத்தில் வழி மறித்து விட்டார்கள். எல்லாம் அந்த குண்டு வெடிப்பின் பலன். ஆனால் என் டிரைவரின் அந்தஸ்த்தும் பணமும் அனைத்து கேட்டையும் திறக்க வைத்து விட்டது.

பணமுள்ளவன் சமூக தீங்கு செய்ய மாட்டான் என்ற மாயை இந்த உலகை விட்டு எப்போதுமே விலகாது.

என்னை என் வீடு இருந்த தெருவின் முனையில் விட்டுவிட்டு கிளம்பினான் அவன். நான் வீட்டிற்கு வந்தேன். மாடி படி ஏறினேன். ஆனால் சில நொடிகளில் மீண்டும் திரும்பி கீழே இறங்கினேன்.

எனக்கு அவள் வேண்டும். என் எண்ணத்தை நேர்ப்படுத்திக் கொள்ளவாவது அவள் வேண்டும். ஆசைப்படுவதை வாங்கிவிட்டாலோ அல்லது பயன்படுத்தி விட்டாலோ அந்த ஆசை தீர்ந்து விடும் என்று நினைக்கிறேன்.

அந்த வீட்டின் காலிங்பெல்லை அடித்தேன். சில நிமிடங்களுக்கு பிறகு வந்து கதவை திறந்தாள் அவள்.

நொடியில் உள்ளே புகுந்தவன் கதவை தாழிட்டு விட்டு அவளை பார்த்தேன். "நீ எனக்கு வேணும்.." என்றேன்.

அதிர்ந்துப் போய் விட்டாள். அவள் யோசிக்க இடம் தராமல் அவளின் இதழில் முத்தமிட ஆரம்பித்து விட்டேன்.

தோற்றுப் போனாள் அவள். என் உணர்வுகளிடமா இல்லை அவளினி உணர்வுகளிடமா என்று தெரியவில்லை. ஆனால் தோற்று விட்டாள். அவளின் தோல்வியை பற்றி கர்வம் இல்லை எனக்கு. அதே நேரம் குற்ற உணர்வும் இல்லை.

தன சேகரன் POV

நான் தன சேகரன். ஐ.பி.எஸ். நாட்டில் வெடித்துக் கொண்டிருக்கும் தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணம் யாரென்று அமைக்கப்பட்ட குழுவில் தலைமை நான். என் வயது முப்பது. பிரிலிமனரி தேர்வுக்கு பேருந்து ஏறும் முன்னே என் அத்தை மகள் கழுத்தில் மாங்கல்யம் பூட்டி விட்டதன் விளைவாய் இப்போது இரு குழந்தைகளின் தகப்பன் நான். சொந்த விசயங்கள் இத்தோடு போதும் என்று நினைக்கிறேன்.

ஐ.பி.எஸ் எனது கனவு. நாட்டுக்காக செயலாற்ற வேண்டும். நாட்டுக்காக சாதிக்க வேண்டும். என்ன நடந்தாலும் நாட்டுக்காகவே உயிர் தர வேண்டும். டிரெயினிங் முடித்த கையோடு வட மாநிலம் ஒன்றில் போஸ்டிங். ஆனால் வருடம் இரண்டு மாநிலங்கள் மாற்றப்பட்டேன். என்னால் தீயவர்கள் பலருக்கும் தொல்லை. நாட்டை காக்க வேண்டும் என்ற துடிப்போடு மேல் மட்டத்தில் இருந்தவர்கள் மனமே இல்லாமல்தான் என்னை ஒவ்வொரு முறையும் பணி மாற்றம் செய்தார்கள். ஒவ்வொரு முறையும் மாற்றம் செய்ய போகிறோம் என்று இரண்டு நாட்கள் முன்பாகவே தகவலும் தெரிவித்தார்கள். அந்த இரண்டு நாட்களில் நான் நினைத்த காரியத்தை முடித்தேன்.

இந்த நாட்டிலேயே அதிக என்கவுண்டர் செய்தவன் நான்தான் என்று போன வாரத்தில் கூட செய்தித்தாள்கள் என்னை பற்றி எழுதி இருந்தன. என்கவுண்டர் எனக்கு மிகவும் பிடிக்கும். நாட்டுக்கு தீங்கிழைப்பவர்களை கொல்லுகையில் கிடைக்கும் சந்தோசம் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.

இப்போது தரப்பட்டிருக்கும் பணியிலிருந்து என்னை மாற்ற மாட்டார்கள் என்று தெரியும். அதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்ள முடியாது என்னால். நான் என் முயற்சியை தாமதப்படுத்தும் ஒவ்வொரு நொடியும் நாட்டில் குண்டு வெடிப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும். இந்த செயலுக்கு காரணமான ஒவ்வொருவரையும் விரைவில் கொல்ல போகிறேன் நான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN