என்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 2

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நினைவுகள்: 2

என்ன தான் நந்துவின் மனதில் அவளை வெறுக்கும்படியான எண்ணங்கள் கோபத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும், ஐயர் திருமாங்கல்யத்தை அவனின் முன் நீட்டும் போது எந்த ஒரு தயக்கமும் இல்லாமல், யாழினியின் கழுத்தில் முதல் முடிச்சைப்போட்டவனோ, “மோசக்காரி! என்னை நம்ப வைத்து ஏமாற்றிட்டே இல்ல? கடைசியில என்னை ஜெயிச்சிட்ட இல்ல?” என்று அவள் காதுக்குள்உறும்ப, அந்த நிலையிலும் அடுத்த இரண்டு முடிச்சைப் போட வந்த தன் தங்கையை ஒரே கை அசைவில் தடுத்து நிறுத்தியவன் அடுத்த இரண்டு முடிச்சையும் தானே போட்டு இதுவரை பாரிவேந்தனின் மகளாக இருந்த தன் எதிரியை, திருமதி கீதயாழினி சுவேஷ்நந்தனாக மாற்றிஏற்றுக்கொண்டான்.

ஒரு நிமிடம் அவன் சொன்ன வார்த்தைகள் தன் நெஞ்சில் கத்தியை சொறுகியது போல் துடித்துப் போனவள், தானிருக்குமிடம் உணர்ந்து, இயல்பு நிலைக்குத் திரும்பிவிட, ஆனால் நந்துவோ தன் இயல்புக்குத் திரும்பாமல் இருக்க, அதைப் பார்த்த கிருஷ்ணா, தன் தம்பியின் மாலையைச் சரி செய்வது போல்

“காலையில இருந்து என்னடா ஆச்சி? இப்படி டென்ஷனாவே இருக்க.. வியர்வை வேற வழியுது பார்.உன் உடம்புக்கு என்னமோனு வீட்டுல இருக்கிறவங்க எல்லாரும் கவலையா உன்னையே பார்க்கிறாங்க. அம்மா ஒரு படி மேலே போய் என்னைக் கூப்பிட்டு சைகையிலே அவனுக்கு என்ன பண்ணுதுனு கேளுனு சொல்றாங்க. கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருடா நந்தா” என்றான்.

அதைக் கேட்டு சற்றே இயல்பானவன், ஐயர் குங்குமம் வைக்கச் சொல்ல, அதை மனதால் ஏற்றே மனைவியின் நெற்றி, வகிடு மற்றும் திருமாங்கல்யம் என வைத்தான்.

பின் மணவறையைச் சுற்றச்சொல்ல, தன் சுண்டு விரலால் அவளின் சுண்டு விரலை இணைத்தவனோ, இதன் பிறகு உன்னை விடவே மாட்டேன் டி என்ற எண்ணம் கொண்டுதான் சுற்றி வந்தான்.

ஆனால் மெட்டி இடும் போது மட்டும், அவள் பாதத்தைப் பட்டும் படாமல் அதே சமயம் யாருக்கும் சந்தேகம் வராத படிபாத விரல்களை மட்டும் தொட்டவன், ஒரு வேகத்துடன் தன் கையிலிருந்த மெட்டியை அணிவித்து சற்றே பெருமூச்சு விட்ட படி நிமிர்ந்து, சுற்றி இருந்தவர்களைப் பார்க்க, யாரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை என்றாலும் யாழினி மட்டும் ஒருவித சுவாரஸ்ய பார்வையை செலுத்தியபடி சிரிப்பை வாய்க்குள் அடக்குவது தெரிந்தது .

‘குந்தாணி! அவ பாதத்தைத் தொடாம மெட்டி போட்டு இருக்கேன்.. அதுக்கு கொஞ்சம் கூட கவலைப் படாம லூசு மாதிரி சிரிச்சிட்டு இருக்கா பாரு’ என்று அவன் நினைக்க பாவம் அவனுக்குத் தெரியாதே? இப்படி முதல் நாளே மனைவியின் பாதம் தொடத் தயங்குகிற கணவன்மார்கள் எல்லாம் பிற்காலத்தில் மனைவியின் பாதமே சரணம் என்று பூஜிப்பார்கள் என்று.

பின் அவர்களை அமர வைத்து ஐயர் குடத்தில் மோதிரத்தை இட்டு எடுக்கச் சொல்ல அவள் சிரித்ததில் கடுப்பாகி இருந்தவனோ அவசரமாக குடத்திற்குள் கையை விட்டு துழாவி மோதிரத்தை வெளியே எடுத்தவன் மனையாளை ஒரு வெற்றிப் பார்வை பார்த்து “என்ன டி குந்தாணி! எப்போதும் உன்னை ஜெயிக்கவிட்டு விட்டு நான் சும்மா இருப்பேனு நினைக்கிறியா? இது தான்டி ஆரம்பம்.. இனிமே ஒவ்வொரு இடத்திலும் நான் ஜெயித்து உன்னைத் தோற்கடித்து மூலையில உட்கார வைக்கிறேன் டி” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லி அவன் சூளுரைக்க…

‘சற்று முன் அக்னி சாட்சியாக முப்பத்து முக்கோடிதேவர்கள் சாட்சியாக உன் இன்ப துன்பத்தில் இருந்து வெற்றி தோல்வி வரை சகலத்துக்கும் நான் துணை இருப்பேன் என்று சொன்னவரா இப்போது தன் ஈகோவுக்காக தன்னை தோற்கடிப்பேன் என்கிறார்? பார்ப்போம் இவர் கட்டிய மஞ்சள் கயிறு மேஜிக்கா இல்லை இவர் ஈகோவானு..’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள்

“ஐய.. பெரிய வேர்ல்டுகப்மேட்ச்ல ஜெயிச்சி, ஏதோ கப்பு வாங்கின மாதிரி இல்ல உதார் விடுறீங்க! எல்லாம் ஒரு மோதிரம் தானே? அதை நீங்களே வெச்சிக்கோங்க” என்று இவ்வளவு நேரம் இல்லாத துடுக்குத் தனத்துடன் அவள்,பதிலுக்குச் சொல்லி விட

அதற்கும் அவன் அவளை வெளிப்படையாவே முறைக்க அதில் கொஞ்சம் கூட அசராமல் “கொஞ்சம் முகத்தை சிரிச்ச மாதிரி வைங்க. எல்லோரும் நம்இரண்டுபேரைதான் பார்க்கிறாங்க. அப்பறம் மறுபடியும் உங்க அண்ணன், ஸ்கூல் பையனுக்குப் பாடம் எடுக்கிற மாதிரி, உங்களுக்குப் பாடம் எடுக்க ஆரம்பிச்சிடுவார்” என்று அவள், அவனை வார

‘செய்றது எல்லாம் செய்துட்டு எவ்வளவு கொழுப்பு பார்த்தியா இந்த குந்தாணிக்கு?’ என்று கண்ணில் கொலை வெறியுடன், அவளை மறுபடியும்அவன் முறைக்க

“அச்சச்சோ! அவசரப் பட்டு இப்பவே உன் வேலையை ஆரம்பிச்சிட்டியே பக்கி.. கட்டதுரை முறைக்கிறதைப் பார்த்தா ஒரு வாரத்திற்கு இவனிடம் நாம வம்பு வளர்க்க முடியாது போலவே! கொஞ்சம் அடக்கி வாசிடி’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவள் பிறகு கணவனிடம் வம்பு வளர்க்கவில்லை.

பிறகு அதே போல் பாலாடை சங்கை ஐயர் குடத்தில் இட, இதையும் தான்தான் எடுக்க வேண்டும் என்று எண்ணத்தில் நந்து குடத்திலிருந்து தேடி எடுக்க, யாழினியோ அவனின் கையைத் தன் கையோடு சேர்த்துக் கொண்டு அந்த சங்கைத்தங்கள் இருவரின் கையிலும் இருப்பது போல் பார்த்துக் கொள்ள, அந்த சங்கு இருவரின் கையில் தவழ்ந்த படி தான் மேலே வந்தது.

அதைப் பார்த்து ஐயர் “சீக்கிரமே புத்திர பாக்கியம் பிராப்தமாகட்டும்” என்று ஆசீர்வதிக்க

நந்துவின் பாட்டியோ‘அப்பனே முருகா! எண்ணி பத்தே மாதத்துல என் கொள்ளுப் பேரனை மடியில் போட்டுக் கொஞ்ச அருள் புரியப்பா. பழனியில உனக்குப் பால் காவடி எடுக்கிறேன்’ என்று மானசீகமாக வேண்டிக் கொண்டு கண்ணில் கனவுடன் கன்னத்தில் போட்டுக்கொள்ள,

. தாய் காந்திமதியோ அப்படி ஒன்று சீக்கிரமே நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உணர்ச்சி வசப்பட்டு ஏதோ சொல்ல வர, அதை உணர்ந்த பச்சையப்பனோ“மதி! எல்லாம் நல்லதே நடக்கும். எதையும் போட்டு குழப்பிக்காதே என்று மனைவியை ஆறுதல் படுத்த சற்று நேரம் அங்கு கனத்த மவுனம் நிலவியது.

இதுவும் ஏதோ ஒரு வகை விளையாட்டுச் சடங்கு என்று நினைத்து மனைவியின் அதிரடி நடவடிக்கையால் எரிச்சலில் இருந்தவனோ,தாய் தந்தையரின் முகத்தில் சந்தோஷத்தைக் காணவும் பேசாமல் இருந்து விட்டான்.

நிறைவு சடங்காக, ஐயர், மணமக்களை மணவறையை சுற்றி விட்டு,வீட்டுப் பெரியோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கச் சொல்ல, அதன்படியே செய்யப்போனவர்களுடன், “கல்யாணம் ஆகாத பிள்ளைங்க அவர்களுடன் சேர்ந்து சுற்றினா சீக்கிரம் கல்யாணம் ஆகும்” என்று சொன்ன பாட்டி விஜியையும் சுந்தரி மகள் சௌமியாவையும், அவர்களுடன் சுற்றச் சொல்ல..

‘ஏன்? எதுக்கு? என் மவ என்ன ஒன்னும் இல்லாத வக்கத்தவளா, இல்ல போக்கத்தவளா இன்னும் கல்யாணம் ஆகாம இருக்க.. எங்களுக்கு இருக்கிற சொத்துக்கும் சுகத்துக்கும் என் மவ அழகுக்கும் நீ நானு மாப்பிள்ளை வராங்க தான்.. எல்லாம் இந்த கிரகம் பிடிச்சவ தான் படிப்பு முடியறவரை எதுவும் வேணாம்னு சொல்றா” என்று நொடித்த சுந்தரியோ “இவன் என் மகளுக்குத் தாலி கட்டி உரிமையா அவ கைப் பிடித்து மணமேடையைச்சுற்றி வருவானு பார்த்தா இவன் எவளோ ஒருத்தியைக் கல்யாணம் பண்ணி மணமேடையைச் சுற்றும் போது என் மவ இவன் பின்னாடி சுற்றணுமா?’ என்று தன் கனவுக்குத் தடை போட்ட தன் அண்ணன் மகனை மனதிற்குள்ளே சாடியவர், அங்கு தயக்கத்துடன் நின்றிருந்த மகளைப்பார்த்து “இங்கே ஏன் டி நின்னு என் வாயைப் பார்க்கிற? போ போய்.. பந்தி ரெடியானு பாரு நான் வேற மாத்திரை போடணும்” என்று சொல்லி மகளைத் தன் தாய் சொன்னதைச் செய்ய விடாமல் விரட்ட அங்கிருந்து ஒடியே போனாள் சௌமியா.

உடனே அவள் தாய் ருக்மணி ஏதோ அவளிடம் சொல்லவர, அவரை அடக்கினார் சுந்தரியின் அப்பா. முதலில் தாத்தா பாட்டி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவன் பின் தன் தாய் தந்தையரில் இருந்து யாழினியின் அப்பா அம்மாவரை ஆசீர்வாதம் வாங்கினார்கள். யாழினியோ,அங்கிருந்த தன் மூத்த அண்ணன் சாரங்கனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, அவனோ, முகம் கனிய அவளை ஆசீர்வதித்து, நந்தனையும் தோள் அணைத்து அவன் கையுடன் தன் தங்கையின் கையை வைத்து, “நந்தா! உனக்கே தெரியும், யாழினி எனக்குத் தங்கை இல்லை என் மூத்த பொண்ணுனு. அப்படி தான் பிறந்ததிலிருந்து பார்த்தேன், வளர்த்தேன், அதனாலே…” என்றவர் சற்று நிறுத்தி மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் உணர்ச்சி வசப்பட்டு நின்றவர் பின் தன்னை சமாளித்துக்கொண்டு “நல்லா பார்த்துக்கப்பா” என்று சொல்ல

“நீங்க சொல்லணுமா அத்தான்? நான் நல்லா பார்த்துக்கிறேன். என்ன.. உங்க பொண்ணு இருக்கிற வெயிட்டுக்கு என் உள்ளங்கையில் வைத்துத் தாங்க முடியாது. ஆனா நிச்சயம் என் கண்ணுக்குள்ளே வைத்துப் பார்த்துக்குவேன்.அதுவும் ஒரு கண்ணுல பத்தாது அத்தான்,அதனால என் ரெண்டு கண்ணுகுள்ள வைத்துப்பார்த்துகிறேன்” என்று நந்து சிரித்த முகமாக உறுதி அளிக்க

‘அடப் பாவி! இவ்வளவு நேரம் வில்லன் நம்பியார் மாதிரி என்னைத் தோற்கடித்தே தீருவனு சபதம் எல்லாம் எடுத்த.. இப்போ என்னமோ காதல் மன்னன் அஜீத் ரேன்ஜ்க்கு என் அண்ணன் கிட்ட சீன் போடற!’ என்று மனதிற்குள் புலம்பியவள் கூடவே ‘விடு விடு யாழினி.. இவன் இப்படி நடந்துக்கிறதும் அதை நீ பார்க்கிறதும் என்ன புதுசா?’ என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டவள்

“இன்னும் ஒரு வாரம் இங்கே இருப்பீங்க தானே அண்ணா?” என்று கேட்க

“நான் இங்கே வரும்போது அப்படி தான்மாபிளான் போட்டோம்.ஆனா இன்னைக்குக் காலையில் அண்ணியை அவரசரமா வரச்சொல்லிபோன். அதனாலே இரண்டு நாளில் கிளம்புறோம்மா.
நந்தா, தப்பா நினைக்காதே யாரோ மாதிரி உடனே கிளம்பறோம்னு. அங்கே வெளிநாட்டுல இருந்தவரை எனக்கு எதுவும் தெரியல. இங்கு வந்த பிறகு இவ்வளவு சொந்தம் இருந்தும் நான் தனியா இருக்கேனு நினைத்து நினைத்து மனசு வலிக்குது. எங்கே நான் மனசால ரொம்ப பாதிக்கப்படுவேனோனு மெர்ஸி ஃபீல் பண்றா. அதான் கம்பெனியோட இந்த திடீர் முடிவுக்கு நானும் சரினு சொல்லிட்டேன்” என்று அவர் கவலை தோய்ந்த குரலில் சொல்லவும்,

“அத்தான்! சீக்கிரமே எல்லாம் நல்லதாவே நடக்கும். கவலைப்படாதீங்க” என்று நந்து சமாதானப்படுத்தவும்

“அப்படி நினைத்து மனசைத் தேற்றி தேற்றிப் பத்து வருடம் ஓடிப் போய்டுச்சு..” என்று அவர் பெருமூச்சு விட யாழினிக்கும் நந்துவுக்கும் அவரை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை.

தன் எண்ணத்திலிருந்து அவராகவே வெளிவந்தவர்,“இங்கே அடையார்ல என் நண்பனோட கெஸ்ட் ஹவுஸ்ல தான் தங்கி இருக்கேன். நான் கிளம்பறதுக்குள்ள ஒரு நாள் வீட்டுக்கு வாங்க” என்று இருவரையும் அழைக்க மெர்ஸியோ அவளுடைய ஆங்கிலம் கலந்த தமிழில்

“எஸ்.. வான்க யாழி அண்ட் நன்து! உங்கள்க்கு நான்க விருந்ந்து வைக்றோம். விவில் எக்ஸ்பெக்ட்”என்று யாழினியின் அண்ணியாக அவர்களை அழைக்க, இருவரும் வருவதாக வாக்களித்தார்கள்.

பாரிவேந்தர் ஆந்திராவில் தலைசிறந்த தொழில் அதிபர். கடந்த வருடம் கூட சிறந்த தொழில் அதிபருக்கான அவார்டைப் பெற்றவர். பாரிவேந்தருக்கும் அலமேலுவுக்கும் பிறந்த மூத்த மகன் சாரங்கன். யாழினியை விட பன்னிரெண்டு வயது பெரியவன். அதனாலேயே யாழினிக்கு இன்னோர் தந்தை. தன்னுடைய படிப்புக்காக லண்டன் சென்ற சாரங்கனுக்கு, அங்கு சவுத்ஆப்ரிக்காவில் இருந்து வேலை விஷயமாக லண்டன் வந்த ஐந்து வயது பெரியவளான மெர்ஸியுடன் காதல் ஏற்பட,அதை தன் வீட்டில் சொன்னபோது, ‘படிக்கத் தான் உன்னை அனுப்பினேன் காதல் பண்ண இல்லை’ என அவன் தந்தை எகிறினார். அவர்ருக்கு, நந்துவின் அக்கா ஈஸ்வரியை தன் மூத்த மருமகளாக்க எண்ணினார்.
அதனாலேயே சாரங்கனை, நந்து முதல் அனைவரையும் அத்தான் என்றே அழைக்க வைத்தார். இது ராஐபரம்பரை வம்சம்டா நான் எப்படி கருப்பா சுருட்டை முடியோட இருக்கிற நீக்ரோவைப்போய் என் மருமகள்னு சொல்லுவேன்? நல்ல கலரா அழகா ராஜா மாதிரி இருக்க உனக்கு ஏன் டா புத்தி இப்படிப் போகுதுனு தாய் புலம்ப கடைசி வரை அவன் காதலுக்கு இருவரும் சம்மதிக்கவே இல்லை.

அதனாலேயே சாரங்கனின் காதல், தன் பெற்றோரை எதிர்த்து, வீட்டை விட்டுப் போய் அவளைத் திருமணம் செய்ய வைத்தது. அது தெரிந்த பிறகு அவன் உறவே வேண்டாம் என்று விலகி விட்டார்கள் யாழினியின் பெற்றோர்.

முன்பு அவர் பேச்சைக் கேட்ட அவர்களின் பிள்ளைகளும் ஒரு வயதிற்கு மேல் எங்களுக்கு அண்ணன் குடும்பமும் வேண்டும் என்ற பாசத்தில் சாரங்கன் குடும்பத்துடன் பழக ஆரம்பித்தனர்.

அந்தப் பழக்கம் இன்று தங்கை திருமணத்திற்கு வரும் அளவிற்கு வளர்ந்து விட்டது.அப்பொழுதும், அவன் கல்யாணத்திற்கு வந்தாலும் வீட்டிற்கு வரக் கூடாது என்ற நிபந்தனையை விதித்தார் பாரிவேந்தர்.

ஜாதி மதம் மொழி நிறம் அழகு இதையெல்லாம் தாண்டினது தானே காதல்! இது எங்கே இங்கு நிறைய பேருக்குத் தெரிகிறது? சாரங்கனும் அவன் மனைவியும் நைஜீரியாவில் ஒரு பன்னாட்டுகம்பெனியில் நல்ல உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள். பத்து வயதில் ஒரு மகன் எட்டு வயதில் ஒரு மகள் என்று அன்று முதல் இன்று வரை ஒருவரை ஒருவர் தங்கள் காதலில் கட்டுண்டு தான் இருக்கிறார்கள்.

அடுத்து தம்பதிகள் இருவரும் யாழினியின் இரண்டாவது அண்ணனான மகேஷிடம் வர யாழினி எதுவும் பேசாமல் ஒரு வித குறுகுறுப்புடனே மகேஷைப் பார்த்துக்கொண்டிருக்க அவனோ அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து கொஞ்ச நேரம் கீழே, பின் பக்கத்தில் இருந்த மனைவி, அதன் பின் அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் என பார்த்தவன், இறுதியாக நந்துவின் முகத்தில் வந்து அவன் பார்வையை நிலைக்க,

அவன் ஒருவித அவஸ்தையில் இருப்பதை அறிந்த நந்தனோ “என்ன ஆச்சுங்க மகேஷ்? ஏதாவது ப்ராப்ளமா?” என்று கேட்க அவனை ஒரு வித கெஞ்சலுடன் பார்த்து, கண்ணாலேயே இப்போ எதுவும் கேட்காதே என்று இவன் கெஞ்ச

அவனுக்கு ஏதாவது உடலில் பிரச்சனையோ அல்லது அவன் மனைவி அருந்ததிக்கு ஏதாவதோ என்று பயப்பட, அந்த பயத்தின் காரணம் கூட அவள் மூன்று மாதம் கருவுற்று இருப்பதால்தான்.

மும்பையிலிருந்து இந்த திருமணத்திற்காக வர வேண்டாம் என்று குடும்பத்தில் இருப்பவர்களிலிருந்து மகேஷ் வரைஎவ்வளவு கெஞ்சியும் நான் வந்தே தீருவேன் என்று அவள் ஒற்றைக் காலில் நிற்க,வேறு வழியில்லாமல் மகேஷ் அழைத்து வந்தான். அதுவும் ஆயிரத்தெட்டு புத்திமதியோடு. இன்று கணவனுடன் சேர்ந்து அவளுடைய முகமும் ஒருவித அவஸ்தையில் இருக்கவும் அவளுக்கு தான் ஏதோ என்று நினைத்தவன்

“என்ன மகேஷ் இப்படியே நின்னுட்டு இருக்கீங்க? உங்க மனைவியக் கூட்டிட்டு வாங்க உடனே ஆஸ்பிடல் போகலாம்” என்று அவன் பரபரக்க…

“டேய் நந்தா! அப்படி எல்லாம் எதுவும் இல்லடா” என்று மகேஷ் வாய் திறந்தது தான் தாமதம்

“ஏ…..ய்…. நான் தான் ஜெயிச்சேன்.. நான் தான் ஜெயிச்சேன்..! என்று குதூகலித்தவள் “யாருகிட்ட பெட்டு வைக்கீறிங்க? என்கிட்டயேவா? இப்போ எனக்கு சீரா,நான் சொன்ன ரோல்ஸ் ராய்ஸ் கார் வேணும் சொல்லிட்டேன் மங்கி” என்று யாழினி செல்லமாக மிரட்ட

அதன்பிறகே நடப்பது புரிந்தது நந்துவுக்கு, “அறிவு இருக்காடி உனக்கு? ஏழு கழுதை வயசு ஆகுது. இன்னும் சின்னப் பிள்ளை மாதிரி விளையாடிட்டு இருக்க.. அதுவும் உன்னை விட ஐந்து வயசு பெரியவங்கள போய், டா போட்டு பேசறதும் மங்கினு கூப்பிடுறதும் என்ன இது?” என்று மனைவியைக் கண்டித்தவன், “மகேஷ்! நீங்களும் அவ கூட சேர்ந்துட்டு இப்படி பண்றீங்க? காரும் வேண்டாம்..ஒரு மோரும் வேண்டாம்.. நீங்க இப்போது போல எப்போதும் இருந்தா அதுவே எங்களுக்குப் போதும்” என்று மகேஷின் கைப்பற்றிக் கூறியவன்

பின் ஒரு வேகத்துடன் மனைவியின் கையைப் பிடித்துத் தன் புறம் இழுத்து அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “ஒழுங்கு மரியாதையா இதோட உன் நான்சென்ஸ் விளையாட்டை எல்லாம் நிறுத்திக்கோ. சும்மா இப்படியே பண்ணிட்டு இருந்த தாலி கட்டின முதல் நாளே சுற்றி இருக்கவங்களைக் கூடப் பார்க்காம உன்னைய அறைஞ்சி பல்லை எல்லாம் பேத்துடுவன்” என்று கர்ஜிக்க..

‘சே ஒரு விளையாட்டைக் கூட ரசிக்கிறது கிடையாது. எப்போதும் ஜெயில் வார்டன் மாதிரி மிரட்டிகிட்டே இருக்க வேண்டியது’ என்று கணவனை, யாழினி மனதுக்குள் அர்ச்சிக்கும் வேளையில்

அவள் ஜெயித்ததில் “எருமை பன்னி கோட்டான் பக்கி புல்டவுசர்”என்று மகேஷ் அவளின் காதைப் பிடித்துத் திருகியபடி அர்ச்சிக்கவும்.

“அச்சோ பாவா! பிளீஸ் என்னைக் காப்பாற்றுங்க” என்று யாழினி கணவனின் பின்னால் ஒளிய

“ஓ…. ஒரே நாளில் உன் புருஷன் பக்கம் நீ சாய்ந்திட்டியா? அவன் என்கிட்ட இருந்து உன்னைக் காப்பாற்றிடுவானா? ஏன் டா நந்து அப்படியா? என்று அவன் நந்துவைப் பார்த்துக் கேட்க..

“ஏமண்டி! இதி என்ன கொத்த பழக்கம்? நம்ம இன்ட்டி மாப்பிள்ளைய வாடா போடா சொல்றது? அந்தங்கா மச்சான் செப்பண்டி!” என்று மகேஷின் மனைவி சிறு குரலில் அவனைக் கண்டிக்க,அது பாம்பு காதான யாழினிக்கும் விழுந்து விட

“நல்லா கேளுங்க அண்ணிகாரு! இப்படி எல்லாம் மரியாதை இல்லாம என் புருஷனை நடத்தினா நாளை பின்ன நான் எப்படி உங்க வீட்டுக்கு வர்றது?” என்று இவள் சிரிப்புடன் கெத்து காட்ட

“நீ முதல்ல உன் அண்ணனுக்கு மரியாதை தந்து பேசுறியா?” என்று நந்து காட்டமாகக் கேட்கவும்

‘அட! இவர் என்ன சேம் சைடே கோல் போடறாரு.. உங்களை எல்லாம் ஃபுட் பால் டீமில் சேர்த்தா அவ்வளவு தான்.. இவர் இருக்கிற அணி பட்டை நாமம் தான் வாங்கும்’ என்று அவள் யோசித்துக்கொண்டு இருக்கும் போதே,

‘ஏய்.. செம பல்பு! இது தேவையா பர்கர்பன் உனக்கு?” என்று தங்கையை வாரியவன்

“சாரி மச்சான் உங்கள முன்பு நான் அப்படி கூப்பிட்டதுக்கு. அது.. சின்ன வயசுல இருந்து அப்படி பழகிட்டேனா அதான்.. ஆனா இனி மாத்திக்கிறேன்” என்றவன் கூடவே “நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே இப்படி தானு தெரியும் இல்லை? இன்னைக்கு ஒரு பெட்டு வெச்சா இந்த பர்கர்பன்!

கோவிலுக்குள்ளே வந்ததிலிருந்து திருமணம் முடிந்து கோவிலை விட்டுப் போகற வரை நான் முதல்ல இந்த அம்மா கிட்ட வந்துபேசமாட்டேன். இவளத்தான் பேச வெப்பேன்னு. இவ்வளவு நேரம் சமாளிச்சிட்டேன் மாப்பிள்ளை. ஆனா கடைசியில உங்க மூலமா இந்த பர்கர்பன்கிட்ட மாட்டிகிட்டேன். கடைசியில நான் தோற்றுட்டேன்” என்று என்ன தான் சோகம் போல சொன்னாலும் அவன் குரலில் சந்தோஷமே குடி கொண்டிருந்தது.

இது தான் மகேஷ்! சின்ன வயதிலிருந்து அவனும் யாழினியும் சேர்ந்து இருந்தால் அங்கு ரணகளமே நடக்கும். இடம் பொருள் பார்க்காமல் ஒருவர் முடி மற்றவர் கையிலும் அதே போல் ஆடையும் சிக்கி இருக்கும். இதனால் இருவரும் தாய் அலமேலுவிடம் வாங்காத அடி திட்டு இல்லை. ஆனால் இருவரும் மாற்றிக் கொள்ளத் தான் இல்லை.

சிறு வயதில் அவளிடம் அவன் வம்பு வளர்த்து யாழினி கோபித்துக்கொண்டோ இல்லை வீட்டல்உள்ளவர்களால் அவள் கோபமாக இருந்தாலும் அவளைச் சமாதானப்படுத்தும் முதல் ஆள் மகேஷ் தான். எப்படியாவது பல குரங்கு சேட்டை எல்லாம் செய்து தங்கையை சிரிக்க வைத்து விடுவான். அதனாலேயே யாழினிக்கு அவன் மங்கி மகேஷ்...ஆனான்
 
Last edited:

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN