காதல் கடன்காரா 24

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரவெல்லாம் மழை பெய்துக் கொண்டே இருந்தது. பத்து மணிக்கு மேல்தான் கார்த்திக் அபிராமியின் வீட்டிலிருந்து விலகி நடந்தான். திரும்பி செல்ல மனமே இல்லை அவனுக்கு. ஆனால் வீட்டில் அம்மாவும் மற்றவர்களும் தேடுவார்களே என்று நினைத்து கிளம்பினான்.

தொப்பலாக நனைந்து வீட்டிற்கு வந்தவனை கோபத்தோடு முறைத்தார் அப்பா. "எங்கேடா போன இவ்வளவு நேரம்.? போன் பண்ணா ஸ்விட்ச் ஆப்ன்னு வருது.. இந்த மழையில கூட உன் பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு வெளியே போய் சுத்தணுமா.?" என்று திட்டினார்.

கார்த்திக் சோகமாக சென்று சோஃபாவில் அமர்ந்தான்.

"டேய் சோபாவை ஈரம் செய்யாதே‌.." என்று‌ திட்டியபடி வந்த புவனா "இந்த சுடிதார் நல்லா இருக்கா.? நானும் அம்மாவும் சாயங்காலம் கடைக்கு போய் வாங்கி வந்தோம்.." என்றாள் புதிதாக அணிந்திருந்த உடையை சுட்டிக் காட்டி.

அம்மா வாசலை எட்டி பார்த்தாள். "அபிராமி எங்கேடா.?" என்றாள்.

"அவ அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டா.." என்றவனை அனைவரும் குழப்பத்தோடு பார்த்தனர்.

"ஏ.. ஏன்.?" தயக்கமாக கேட்டாள் புவனா.

"என்னோடு சண்டை போட்டுட்டு போயிட்டா.." என்றவன் நடந்ததை விவரித்தான்.

"வேலைக்கார பொண்ணு செஞ்ச தப்புக்கு அண்ணி ஏன் உன்கிட்ட கோச்சிக்கறா.? சரியான திமிர் அண்ணா அவளுக்கு.." புவனாவிற்கு இந்த முறையும் வாய் நிற்காமல் போய் விட்டது.

நிமிர்ந்து பார்த்து முறைத்த கார்த்திக் "உன் வேலையை பாரு.. நான் என் பிரச்சனையை சரி பண்ணிப்பேன்.." என்றான் எரிச்சலோடு.

அபிராமியின் கோபம் திமிராக தென்படவில்லை அவனுக்கு. அது அவள் தன் மீது வைத்துள்ள காதலின் வெளிப்பாடு என்றே எண்ணினான். அவள் ஈஸ்வரோடு சாதாரணமாக பேசியதை தாங்க இயலாதவன் இவன். அப்படி இருக்கையில் தான் எவளோ ஒருத்தியோடு நெருங்கி இருப்பதை கண்டால் அவளுக்கு கோபம் வரதானே செய்யும் என்று நினைத்தான்.

"அவளுக்கு போன் பண்ணி கொடுடா.. நான் அவளோடு பேசுறேன்.." என்றாள் அம்மா. இந்த இடைப்பட்ட மாதத்தில் மருமகளோடு மனதாலும் நெருங்கி விட்டவளுக்கு தான் அழைத்தால் மருமகள் வந்துவிடுவாள் என்று நம்பிக்கை.

கார்த்திக் தன் போனை பாக்கெட்டிலிருந்து எடுத்தான். மழைநீரில் ஊறி போயிருந்தது. புவனா ஓடிச்சென்று தன் போனை எடுத்து வந்தாள். அபிராமிக்கு அழைத்தாள். போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.

"போன் ஆப்ன்னு வருதும்மா.." என்றவள் அசட்டு தைரியத்தோடு முத்தமிழின் எண்ணுக்கு அழைத்தாள். இந்த பிரச்சனைகள் வரும் முன்பே கார்த்திக்கின் போனிலிருந்து முத்தமிழின் நம்பரை எடுத்து விட்டிருந்தாள் புவனா‌.

அபிராமி வீடு திரும்பி விட்டாள் என்று அம்மா அவளுக்கு பிடித்தது அனைத்தையும் சமைத்து வைத்திருந்தாள். அன்றுதான் வயிறு நிறைய உண்டது போலிருந்தது அபிராமிக்கும் மற்றவர்களுக்கும்.

"அவன் மேல கேஸ் தரலாமா.?" அப்பா உணவு சாப்பிடுகையில் கேட்டார்.

அபிராமி இடம் வலமாக தலையசைத்தாள். "அவனை கொன்னா கூட என் கோபம் தீராதுப்பா.. என் மொத்த ஆத்திரமும் தீராம அவனை உங்க கையில ஒப்படைக்க மாட்டேன் நான்.. ஊர்ல உள்ள மத்த பொண்ணுங்களை போல முக்காடிட்டு உட்கார்ந்து, அவன் என்ன செஞ்சாலும் பதிவிரதம்தான் முக்கியம்ன்னு அடங்கி போவேன்னு நினைச்சிட்டான் போல‌. அவனுக்கு என்னை பத்தி தெரியலப்பா.. தெரிய வச்சிட்டு அப்புறம் அவனை தீர்க்கலாம்.." என்றாள்.

"ஓவரா செல்லம் தந்து வளர்த்தியதுல கெட்டு போயிட்ட நீ.. என்ன இருந்தாலும் அவன் உன் புருசன்டி.." என்ற பாட்டியை தாத்தாவும் அப்பாவும் முறைத்தார்கள்.

"மனசுல நான் நினைச்சாதான் அவன் புருசன்.. இல்லன்னா அவன் மனுசன் கூட கிடையாது.. இது என் விளையாட்டு.. நீங்க யாராவது குறுக்கே வந்தா உங்களைத்தான் முதல்ல கொல்லுவேன்.." என்று எச்சரித்து விட்டு எழுந்து சென்றாள் அபிராமி.

"இவ பொண்ணு இல்ல.. பூகம்பம்ன்னு அவனுக்கு தெரியல.. எல்லாம் அவன் விதி பாட்டி.. நீ ஏன் கவலைப்படுற.." என்றுவிட்டு முத்தமிழும் எழுந்தான்.

உணவை முடித்துக் கொண்டு வந்து அபிராமியின் அறையில்தான் அமர்ந்தான் முத்தமிழ். தங்கை வெகுநாளாக பிரிந்திருந்தது மிகவும் மன கஷ்டத்தை தந்து விட்டது.

"அங்கிருக்கும் போது அவன் உன்னை ரொம்ப அடிச்சிட்டானா அபிராமி.?" தயக்கமாக கேட்டான்.

தனது அலமாரியை சரி செய்துக் கொண்டிருந்த அபிராமி "ம்.. இரண்டு முறை அறைஞ்சிட்டான் பரதேசி.." என்றாள் எரிச்சலோடு. அறை இன்னும் வலிப்பது போலிருந்தது அவளுக்கு.

"இத்தனை நாள் கேப்ல நீ அவனை லவ் பண்ணிடுவியோன்னு நினைச்சிட்டேன் நான்.." என்றவனை திரும்பி பார்த்து சிரித்தவள் "நானா.? அவனோடா.? அதுக்கு பதிலா நெருப்புல கூட குதிப்பேன்.. கட்டாய தாலிக்கு சின்னதா ஆட்டம் காட்டி விட்டுடலாம்ன்னுதான் பார்த்தேன். ஆனா நீ தொட்டதும் மறுபடியும் என்னையே கார்னர் பண்ணான் பார்த்தியா.. அப்போதான் ரொம்ப கடுப்பாயிடுச்சி. இவ வழியில ஏன்டா கிராஸ் ஆனோம்ன்னு நினைச்சி அழணும் அவன்.." என்றாள்.

முத்தமிழ் பெருமூச்சு விட்டான். "நான்தான் அவனை அடிச்சி தப்பு பண்ணிட்டேன்.." என்றான்.

"அது அவன் விதி.." என்றவள் கோபத்தோடு அண்ணனின் முன் வந்து நின்றாள்.

"அவன் என்னவெல்லாம் டார்ச்சர் பண்ணான்னு உனக்கு தெரியாது.. தலைமுடியை லூசா விட்டிருந்தா கூட குத்தம்ன்னு சொல்றான்.. அவனையெல்லாம் கொல்லாம விட்டா அது எனக்கு அவமானம்.." என்றாள்.

முத்தமிழ் சற்று பின்னால் தள்ளி அமர்ந்தான். "ஓகே.. ஓகே.. அதுக்காக என்னை கடிச்சி தின்னுடாதே.." என்றான்.

அபிராமி தன் கோபத்தை விட்டுவிட்டு புன்னகைக்க முயன்றாள். "உன்னோடு ஒரு அக்ரிமெண்ட்.. அந்த பொண்ணு மேல இருக்கற லவ்வுலயோ இல்ல அந்த பொறம்போக்கு மேல இருக்குற நட்பினாலயோ வந்து என்னை தடுக்க பார்த்த கொன்னுடுவேன்.." என்றாள்.

முத்தமிழ் மறுப்பாக தலையசைத்தான். "ச்சே.. ச்சே.. நான் அந்த பொண்ணை லவ் பண்ணல.." என்றான் அவசரமாக.

"இதுக்கும் மேலயும் கூட லவ் பண்ணிடாதே.. சரியான வாயாடி.. அந்த குடும்பமே நெகடிவ் திங்கிங்கால ஊறி போன குடும்பம்.. அவங்களோடு இரண்டு நாள் பழகினா கூட நாமளே நமக்கு நாளைக்கெல்லாம் சாவு வந்துடும்ன்னு நம்பிடுவோம். நீயெல்லாம் எப்படிதான் அவனோடு இத்தனை வருசம் பழகினாயோ‌.?" என்றாள் கடுப்போடு.

அவன் பதில் சொல்ல இருந்த நேரத்தில் அவனது போன் ஒலித்தது.

"புது நம்பர்.. இந்த நேரத்துல ஏன் போன் வருது.?" என்றபடி அந்த போன் அழைப்பை ஏற்க இருந்தவனின் கையை பற்றி நிறுத்தினாள் அபிராமி. போன் நம்பரை பார்த்தவள் "இது அந்த குட்டி கத்திரிக்காதான்.. உன்னோடு நூல் விட போன் பண்றான்னு நினைக்கிறேன்.." என்றாள்.

"இந்த டைம்க்கா.? அதுவும் நீ வீட்டுக்கு வந்திருக்கும் போதா‌.?" என்றவன் அழைப்பேற்று பேசினான். தங்கையின் பார்வை புரிந்து போனை ஸ்பீக்கரில் வைத்தான்‌.

"ஹலோ.. நான் புவி.. புவனா.. கார்த்திக்கோட தங்கச்சி.." என்று அவள் சொல்லவும் அபிராமி அண்ணனை கேள்வியாக பார்த்தாள்.

"ம்.. சொல்லுங்க.." என்றவனுக்கும் அவளை போலவே வார்த்தை திக்கியது.

"அபிராமிக்கிட்ட போன் தரிங்களா தம்பி.? நான் கார்த்தியோட அம்மா பேசுறேன்.." என்றாள் யமுனா.

முத்தமிழ் போனை தங்கையின் புறம் நீட்டினான். அபிராமி கண்களை தேய்த்து தலையை சாய்த்து ஏதேதோ சைகை காட்டினாள்.

முத்தமிழ் புரிந்துக் கொண்டவனாக தலையசைத்தான். "அபிராமி ரூமையே திறக்கலைங்க.. வந்ததுல இருந்து அழுதுட்டே இருக்கா.. நாங்களும் எவ்வளவோ கூப்பிட்டு பார்த்துட்டோம்.. ஏன் அழறான்னு கூட தெரியல.." என்றவன் தங்கை இன்னும் என்னவோ சொல்ல சொல்லி உதடு அசைப்பதை கண்டான்.

"ஓகே.." என்று சத்தமில்லாமல் சொன்னவன் "ராசாத்தி மாதிரி என் தங்கையை நாங்க வளர்த்தினோம்.. ஆனா நீங்க இப்படி அழ வச்சி அனுப்பி இருக்கிங்க.. சாத்தின கதவை திறக்கவே மாட்டேங்கறா.. அழுகற சத்தம் தவிர வேற எதுவும் கேட்க மாட்டேங்குது.." என்றான்.

"தமிழ்.. ப்ளீஸ் அவளை பத்திரமா பார்த்துக்கோ.. நான் நாளைக்கு வந்து அவளோடு பேசுறேன்.." என்ற கார்த்திக்கு அந்த ஊரிலிருந்து திரும்பி வராமல் அங்கேயே காவலுக்கு இருந்திருக்கலாமோ என்று இப்போது தோன்றியது.

கார்த்திக்கிற்கு பதில் அளிக்க விரும்பவில்லை முத்தமிழ். தங்கையின் முறைப்பை பார்த்துவிட்டு "ம்.." என்றான். உடனே தொடர்ப்பையும் துண்டித்தான்.

"எழுந்து உன் ரூமுக்கு போ.. எனக்கு தூக்கம் வருது.." என்றாள் அபிராமி.

"குட் நைட்.." என்று விட்டு எழுந்து நடந்தான் முத்தமிழ்.

மறுநாள் காலையிலேயே இந்த வீட்டிற்கு வந்தான் கார்த்திக். தாத்தாவும் அப்பாவும் அவனை முறைத்தனர்.

"வாங்க தம்பி.." என்று பாட்டிதான் அழைத்தாள். அவள் பாசாத்தோடுதான் அழைத்தாள்.

முத்தமிழ் தன் அறையிலிருந்து வெளியே வந்தான். நண்பனை உணர்ச்சியற்ற பார்வை பார்த்தான்.

"அ.. அபிராமியோடு பேசணும்.." என்றான்.

"அவ ரூம்ல இருக்கா.." என்று அவளது அறை பக்கம் கை காட்டினான் முத்தமிழ். அவனது முகம் இரும்பு போல இருந்தது.

கார்த்திக் அபிராமியின் அறையருகே வந்து கதவை தட்டினான். "அபிராமி.." என்றான்.

உள்ளிருந்து விம்மல் சத்தம் மட்டும் வந்தது. "அ.." நேற்றிலிருந்து அழுதுக் கொண்டே இருக்கிறாளே என்று அவனுக்கு வருத்தமாக இருந்தது. தவறு செய்யாவிட்டாலும் கூட அவள் அழுகைக்கு காரணம் தன் தவறே என்று எண்ணினான்.

"அபிராமி.. கதவை திற.. என்னோடு பேசு.." என்றான்.

விம்மல் சத்தத்தை தவிர வேறு எதுவும் கேட்கவில்லை அவனுக்கு.

"தம்பி நீங்க வெளியே கிளம்புங்க.." என்றார் தாத்தா.

கார்த்திக் தயக்கத்தோடு அவரை பார்த்தான்.

"உண்மையை சொல்லணும்ன்னா உங்களை எங்க வீட்டு மருமகனா ஏத்துக்கற அளவுக்கு எங்களுக்கு இன்னும் பக்குவம் வரல.. நேத்து அபிராமியை அழ வச்சி அனுப்பியதுக்கே உங்களை ஒரு கை பார்த்திருப்போம் நாங்க.. ஆனா புருசன் பொண்டாட்டி சண்டையில குறுக்க வர வேணாமேன்னு இருக்கோம்.. அவளுக்கு உங்க வீட்டுக்கு வர தோணுற அன்னைக்கு வருவா.. இப்ப கிளம்புங்க.. இனி வீட்டு பக்கம் வராதிங்க.. எதுவா இருந்தாலும் அவளோடு வெளியே வச்சி பேசிக்கங்க.." என்றார் கண்டிப்பு குரலில்.

கார்த்திக்கிற்கு கோபம் வந்தது. அதே சமயம் இயலாமையும் உண்டானது. வேறு வழி இல்லாமல் திரும்பி சென்றான்.

அவன் சென்று சிறிது நேரம் கழித்து முத்தமிழ் சென்று தங்கையின் அறை கதவை தட்டினான். அபிராமி கதவை திறந்தாள்.

"என்ன.?" என்றாள்.

"அழுதியா.?" என கேட்டவனிடம் தன் கையிலிருந்த போனில் இசையை ஒலிக்க விட்டாள். இசைக்கு பதிலாக யாரோ விம்மி அழும் சத்தம்தான் அதில் கேட்டது.

"இவனுக்காக அழற மாதிரி நிறைய முறை நடிச்சிட்டேன்.. இப்ப டயர்ட்.." என்றாள்.

"என்னவோ போ.. அவனை அடிச்சி கொன்னா வேலை முடிஞ்சிடும்.. நீ என்னடான்னா.." என்று புலம்பியபடி வெளியே நடந்தான் அவன்.

கார்த்திக் சோகமாக அமர்ந்திருந்தான். அபிராமி வீட்டை விட்டு சென்று ஒரு வாரம் ஆகிவிட்டது. தினமும் அவளின் பிறந்தகம் சென்று வாசலில் காவல் நின்றான். அபிராமி வெளியே வருவாளா என்று காத்திருந்தான். அவள் வெளி வரவில்லை. அந்த வீட்டில் வேலை செய்யும் வயதான பெண் மட்டும் இரக்கப்பட்டு இவனோடு கொஞ்சம் பேசினாள். அவளிடமும் நிறைய முறை தூது அனுப்பி வைத்தான் கார்த்திக். ஆனால் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

இவன் சோகமாக அமர்ந்திருந்த வேலையில் "தம்பி.. கார்த்திக் தம்பி.." என்று யாரோ வீட்டின் கதவை தட்டி அழைத்தார்கள்.

கார்த்திக் எழுந்து சென்று பார்த்தான். அபிராமியின் வீட்டில் வேலை செய்யும் அதே பாட்டிதான் வந்திருந்தாள்.

"எங்க சின்ன பாப்பா மயக்கம் போட்டு விழுந்துடாங்க தம்பி.. இங்கிருந்து வந்ததுல இருந்து சாப்பாடே சாப்பிடல.. நேத்து தமிழ் தம்பி பாப்பாவை கன்னத்துல அறைஞ்சி கூட சாப்பிட சொன்னாரு. ஆனா பாப்பா சோறு வேணாம்ன்னு அழுதுகிட்டே படுத்துடுச்சி‌. இன்னைக்கு காலையில ரூமை சுத்தம் செய்ய உள்ளே போனேன். பாத்ரூம்ல பாப்பா மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்ததும் பயந்தே போயிட்டேன் நான்.." என்றாள்.

நடிப்பு தொடரும்

அனைத்து நட்புக்களின் கவனத்திற்கு... ஐபி (உள்டப்பி, இன்பாக்ஸ்) கமெண்ட் ஒன்னுக்கான பதில் இது. தயவு செய்து நீங்களும் படிங்க. ப்ளீஸ்..

இது ஆன்டி ஹீரோ ஆன்டி ஹீரோயின் ஸ்டோரி.. இதுல வர இரண்டு பேருமே கேடிங்கதான்.🙄 இது வெறும் கதை.. நான் ஒரு குட்டி ரைட்டர்ங்கறதால எனக்கு சீரியலுக்கு கதை எழுததான் வாய்ப்பு வரல.🤧. அட்லீஸ்ட் இங்கேயாவது கிறுக்கலாமேன்னு கிறுக்கிட்டு இருக்கேன்.

ஆன்டி ஹீரோ ஆன்டி ஹீரோயின்ங்கறது தப்புன்னு சொல்றிங்க. கண்டிப்பா நிஜத்துல தப்புதான். ஆனா கதையிலும் தப்பா.? விஷம் குடிக்க ஆசை. ஆனா குடிக்க முடியாது. ஏற்கனவே குடிச்சவங்க படுற சித்திரவதையை பார்த்து புரிஞ்சிக்கணும். அது போலதான் இதுவும்.

அபிராமி ஆன்டி ஹீரோயின்தான். இதிலேயும் மாற்றம் கிடையாது. வில்லின்னு கூட வச்சிக்கங்க. ஹீரோ ஒரு வில்லன். வில்லன் வில்லியை எப்படி காதல்ல விழ வச்சாரு.. இப்படி கூட வச்சிக்கங்க.. (இந்த கதையில சஸ்பென்ஸே இல்ல. ஏனா நான்தான் எல்லாத்தையும் உங்ககிட்ட முன்னாடியே சொல்லிடுறேனே.. ஏனா நான் எல்லாத்தையும் சொன்ன பிறகு கூட விமர்சனங்கள் மனதை தாக்கும்படிதான் வருது.. உள்டப்பி கமெண்ட்ல (இதே தளமா இல்ல மத்த தளமான்னு குறிப்பிட விரும்பல) கேரக்டரை திட்டுறதே இல்ல.. என்னை மட்டும்தான் திட்டுறிங்க.. கதையின் கதாபாத்திரங்களை மட்டும்தான் நான் உருவாக்குறேன். அவங்க பேசுறது செய்யறது எல்லாம் என் செயல் கிடையாது. அந்த இடத்துல அந்த கேரக்டர் அந்த ஒரு சூழ்நிலையில் என்ன செஞ்சிருப்பாங்கன்னு மட்டும்தான் யோசிச்சி எழுதுறேன்.

இப்ப கூட சொல்றேன். ஆன்டி ஹீரோ ஆன்டி ஹீரோயின் கதை பிடிக்காதுன்னா என்னோட மத்த கதைகளை படிங்க. சிலர் கதை படிக்க காரணம் மன அழுத்தம் போகணும்ன்னுதான். இந்த கதையை படிச்சி உங்களுக்கு மன அழுத்தம் வர வேணாம்.🙏 கேரக்டரை ரசிச்சி என்னவெல்லாம் செய்றா இந்த அபி, என்னவெல்லாம் செய்றான் இந்த கார்த்தின்னு கற்பனை கதாப்பாத்திரங்களை கற்பனையா நினைப்பவர்கள் மட்டும் படிங்க.

கதையோட கோடு கூட கோணையா போக கூடாதுன்னா சாரி மக்களே.. இந்த கதை கோணலான ரங்கோலி மட்டும்தான். நான் வெறும் கட்டம் செவ்வகத்தை வச்சி இந்த கதையை எழுதல.

இவ்வளவு டென்சன் ஆகணுமான்னு பலரும் நினைக்கலாம். இந்த கதை இப்படிதான் போகும்ன்னு சொன்ன பிறகும் அதையே திருப்பி திருப்பி விமர்சிக்கும்போது கதை எழுத மனசு வருமா.?

முன்னையெல்லாம் ஒரு விமர்சனத்துக்கும் ஓடி வந்து பார்ப்பேன். ஆனா இப்ப பயந்து பயந்து நோட்டிபிகேஷன் பார்க்கறேன். கார்த்திக் நாய்.. இப்படி திட்டுங்க.. எனக்கு சிரிப்பு மட்டும்தான் வரும். ஆனா உங்ககிட்ட இருந்து இந்த மாதிரி ஒரு எபியை எதிர் பார்க்கல.. இது எவ்வளவு கஷ்டம் தரும் தெரியுமா மக்களே.. நான் வக்கிரமாவோ ஆபாசமாவோ எழுதல. நியாயமா சொல்லுங்க.. இங்கே ஓடுற சீரியல்கள் முன்னாடி என் கதை எவ்வளவு பெட்டர்ன்னு. பிரச்சனையையே முன் வைக்காம எப்படி ஒரு கதைக்கு கன்டென்ட் தேடட்டும் நான்.? ஒரு அன்பான ஹீரோ அன்பான ஹீரோயின்.. இவங்க இரண்டு பேரும் வாழ்ந்தாங்க. இந்த கன்டென்டை என்னன்னு எழுதட்டும் நான்.?

ஹீரோ ஒரு தப்பு பண்ணா அதுக்கு ஹீரோயின் என்ன செய்வா.? ஹீரோயின் தப்பு பண்ணா ‌ஹீரோ என்ன செய்வான்.? இதான் இந்த கதை கன்டென்ட்.

டெய்லி எபி தரதுக்கு பதிலா முழுசா எழுதிட்டு வந்து ஒரே கதையா அப்லோட் பண்ணிடலாமான்னு கூட யோசனை வருது..🤧 மத்த எந்த கதைக்கும் இல்லாத ரீட்ஸ் இந்த கதைக்கு இருக்கு. ஏனா ஆன்டி ஹீரோ ஆன்டி ஹீரோயினியை மக்கள் படிக்க பல காரணங்கள் இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம். அதை நான் வெளிப்படையா சொல்ல விரும்பல.

கார்த்திக் லவ்வர்ஸ்க்கு ஒரு வேண்டுகோள்.. உங்க ஹீரோ ரிவென்ஜ் எடுப்பாரு. ரிவென்ஜ் எடுக்கற அளவுக்கு ஏன் போகுதுன்னு அடுத்தடுத்த எபி படிச்சா உங்களுக்கே புரியும்.. ரிவென்ஜ் நிச்சயம் ஸ்வீட் ரிவென்ஜ்தான். அதுலதான் அவரு ஒரு ஹீரோ மாதிரியே நடந்துப்பாரு. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். அதனால அதுவரை நீங்களாவது என்னை திட்டாம அபியை மட்டும் திட்டுங்க..😔

அடுத்து ஒன்னு.. தயவுசெஞ்சி என்னையை கூட திட்டுங்க.. ஆனா மத்த நட்புக்களோட விமர்சனங்கள் சரி கிடையாதுங்கற மீனிங்கல அவங்க கமெண்ட்ல போய் விமர்சனம் செய்யாதிங்க. ப்ளீஸ்.🙏 (இது இன்னொரு தளத்துல சந்திச்ச பிரச்சனை. இருந்தாலும் இங்கேயும் முன்கூட்டியே பதிவு பண்றேன்ப்பா)

ஒவ்வொருத்தர் மன நிலையும் வேறு வேறானது. நானும் எஸ். உஷாராணி நாவல்கள் எல்லாத்தையும் தேடி படிச்ச ஆள்தான். மயங்குகிறாள் ஒரு மாது கதையை அம்பது டைம் படிச்சிருப்பேன். அதுவும் வெறும் மூணே நாள்ல.. வாட்ல நான் படிச்ச ஆங்கில கதைகள் முக்கால்வாசி ஆன்டி ஹீரோ டைப்தான். எல்லா ஆன்டி ஹீரோ கதையிலும் பெண்மை எந்த இடத்துல தடுமாறி விழுந்ததுன்னு கோபத்தோடுதான் தேடி படிச்சேன். ஆனாலும் படிச்சேன். பெண்மையெனும் கோபம் உள்ளுக்குள் கொழுந்து விட்டு எரியும் அதே நேரத்திலும் ஆன்டி ஹீரோ கதைகளை படிப்பேன். ஏனா ஆன்டி ஹீரோ கதையை படிக்க காரணங்கள் உண்டு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம்.

சு.தமிழ்செல்வி நாவல்கள் உண்மையை அடிப்படையாக கொண்டது. ஆனா எஸ். உஷாராணி நாவல்கள் கற்பனையை அடிப்படையாக கொண்டது. நட்சத்திரம் உண்மை. கடன்காரன் கற்பனை. அவ்வளவே. நன்றிகள். (இந்த பதிவு யார் மனசையாவது புண்படுத்தி இருந்தா மன்னிக்கவும். இது ஐபி கமெண்ட்க்கான பதில் மட்டுமே)

மீம் எதுக்காகன்னா ஜாலி மூடுக்காக.. அது எதையும் சீரியஸா எடுத்துக்க வேணாம்.🙂
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN