காதல் கடன்காரா 29

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கார்த்திக் அபிராமியின் அருகே அமர்ந்தான். இடது கையால் தலையில் அடித்துக் கொண்டான்.

"சாரி அபிராமி.. நான்தான் பைத்தியம். தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டே இருக்கேன். நீ ஏன் இப்படி பண்ற.?" என கேட்டவனுக்கு கண்கள் இரண்டும் கலங்கியது. அவளின் கையை தொட்டு பார்த்தவன் அவளின் அருகே தலை சாய்த்தான்.

'மறுபடியும் நானேதான் தப்பா இருக்கேன். இவளுக்குன்னு டைம் தராம அவசரப்படுத்திட்டேன்..' வருத்தமாக நினைத்தவன் ஐந்தாறு நிமிடங்கள் கழித்து நிமிர்ந்தான். கலங்கிய விழிகள் சிவந்து போயிருந்தது.

முத்தமிழ் அவனை முறைத்து பார்த்தான். இன்னும் ஏன் இங்கே அமர்ந்திருக்கிறாய் என கேட்டது அவனின் பார்வை.

அபிராமியின் நெற்றியில் முத்தம் பதித்தான் கார்த்திக். விலகி நின்றவன் "இனி நான் இவளை டிஸ்டர்ப் செய்ய மாட்டேன்.." என்றுவிட்டு வெளியே நடந்தான்.

அவனின் வாடிய முகம் கண்டு முத்தமிழுக்கே ஒரு மாதிரியாக இருந்தது. கார்த்திக் அங்கிருந்து சென்ற சில நிமிடங்களுக்கு பிறகு கண்விழித்த அபிராமி அண்ணனின் முகத்தை பார்த்துவிட்டு "என்ன பீலிங்கா.?" என்றாள்.

முத்தமிழ் தங்கையின் கையை பார்த்தான். அவள் இவனின் பார்வையை உணர்ந்து டிரிப்ஸ் ஊசியை கழட்டி எறிந்து விட்டு எழுந்து நின்றாள். கையை அறுத்துக் கொண்டது போல மருத்துவரிடம் சொல்லி கட்டு போட வைத்தவள் ஒரு மணி நேரம் முன்புதான் இந்த அறைக்குள் வந்து படுத்தாள். கார்த்திக்கின் உருக்கமான குரலை இவளும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.

"அவனை பார்த்தா லேசா பாவமா தெரியுது. உன்னை உண்மையா லவ் பண்றான்னோன்னு நினைக்கிறேன்.." என்றவனின் காலை மிதித்தாள் அபிராமி.

"உண்மையான லவ்வா.? அதுவும் அவனா.?" என எரிச்சலோடு கேட்டவள் "உனக்கு அவனை பத்தி எதுவும் தெரியாது. அவனோடு வாழ்ந்த எனக்குதான் என் கஷ்டம் தெரியும்.. அவன் ஒரு சைக்கோ அண்ணா.." என்றாள்.

"என்னவோ போ.. அம்மா பேச்சை மீறி உன் நாடகத்துக்கு நானும் சேர்ந்துட்டு இருக்கேன்.." என்றான் சலிப்போடு.

"எல்லாமே உன்னால வந்ததுதானே.? நீ அவனோடு பிரெண்டுன்னு பழகாம இருந்தா இவ்வளவு பிரச்சனை வருமா.?" என்றவள் அந்த அறையை விட்டு வெளியே நடந்தாள். அவளை பின்தொடர்ந்து வந்த முத்தமிழ் "ஆனா அவன் எனக்கு பிரெண்டா இருந்த வரை நல்லவனாதான் இருந்தான். ஆனா இந்த வீணா போன ஈஸ்வராலதான் எல்லாமே வந்துச்சி.." என்றான்.

அபிராமி அண்ணனை திரும்பி பார்த்தாள். "அவன் உனக்கு நல்ல நண்பனே கிடையாது. அவன் சீட்டர்.." என்றவளின் தோளை பற்றியவன் அவளை அந்த பக்கம் திருப்பி நிறுத்தினான்.

"அங்கே பாரு.. ஈஸ்வர்.." என்றான்.

ஈஸ்வர் சிறப்பு மருத்துவர் ஒருவரின் அறையிலிருந்து வெளியே வந்தான். இவர்களை கவனிக்காமல் வாசலை நோக்கி நடந்தான்.

"உடம்புக்கு மறுபடியும் சரியில்லையோ.?" என்ற தன் அண்ணனை கிண்டலாக பார்த்தவள் "சாகட்டும்.. அதுதானே எனக்கும் வேணும்.." என்றாள்.

தங்கையின் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டவன் "அதுதானே.!" என்றான். இருவரும் சிரித்தபடியே அங்கிருந்து கிளம்பி சென்றார்கள்.

கார்த்திக் மௌனமாய் அமர்ந்திருந்தான். மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்த பிறகு அவன் யாருடனும் பேசவே இல்லை. எதையாவது வெறித்து பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.

புவனா முதல் இரு நாட்கள் முறைத்தாள். பின்னர் பேசாமலேயே வந்து அவனுக்கு உணவு பரிமாறினாள். அவன்தான் அவளை கூட நிமிர்ந்து பார்க்காமல் இருந்தான்.

பார்க்கும் இடமெங்கும் அபிராமியே தெரிந்தாள். புது வீட்டை அவனுக்கு பிடிக்கவேயில்லை. பழைய வீடு பழையதாக இருந்தாலும் அவள் இருந்தாள்.

கார்த்திக் மாடியிலிருந்து குதித்த அடுத்த நாளே கல்லூரி முதல்வர் அபிராமியை அழைத்து எச்சரித்தார். 'இதுவே கடைசி முறை, இனி இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்தால் கல்லூரியை விட்டு வெளியே அனுப்பி விடுவோம்..' என்று சொன்னார்.

அபிராமி மன்னிப்பு கேட்டு விட்டு வந்தாள். கார்த்திக் குதித்த கட்டிடத்தை பார்க்கும் போதெல்லாம் என்னவோ செய்வது போலிருந்தது. அதனால் அந்த பக்கம் திரும்புவதையே நிறுத்தி விட்டாள்.

கார்த்திக் வேலைக்கு சென்று விட்டு வந்த நேரம் போக மீதி நேரம் முழுக்க அபிராமியையே பின்தொடர்ந்தான். ஆனால் அவளுக்கு தெரியாமல்தான் தொடர்ந்தான்.

அபிராமி தோழிகளோடு சிரித்து பேசுவது கண்டு மனம் மகிழ்ந்தான். அவளை ரசிப்பது ஒன்றே தனது வேலை என்று நினைத்தான். அவன் பின்தொடர்வது அபிராமிக்கும் தெரிந்தேதான் இருந்தது. ஆனால் கண்டுக் கொள்ளாமல் இருந்தாள்.

ஒரு மாதம் நகர்ந்தது.

கரைந்து போய் விட்டான் கார்த்திக். அபிராமி அவனை காணும் போதெல்லாம் உள்ளுக்குள் மகிழ்ந்தாள்.

மன்னிக்கவும் நட்புக்களே.. சில காரணங்களால் என்னால் இன்று முழு யூடி தர இயலவில்லை. (அஞ்சி நாள் முன்னாடி ஒரு கமெண்ட்க்காக பதில் சொல்லியிருந்தேனே.. அன்னைக்கு எழுதிய எபிசோட்தான் இது. மைன்ட் சோகமாக இருந்ததால் இவ்வளவுதான் எழுத முடிஞ்சது அன்னைக்கு. அந்த எபி இன்னைக்குதான் பிரதிலிபியில் அன்லாக் ஆகியிருக்கு மக்களே. அதனாலதான் இன்னைக்கு இங்கே பப்ளிஷ்‌.)

இந்த குறையை அடுத்த யூடிகளில் சரி செய்ய முயற்சிக்கிறேன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN