காதல் கடன்காரா 32

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சகோதரனை வருத்தமாக பார்த்த மூர்த்தி "நான் இப்பதான் வந்தேன்.. நீ ஏன்டா இப்படி இருக்க.?" என்றான்.

கார்த்திக் அண்ணனை பார்த்து புன்னகைத்தான். "எனக்கு என்னண்ணா.. நல்லாதான் இருக்கேன்.!" என்றவனின் கண்களில் கொஞ்சம் கூட ஒளியே இல்லை என்பது மூர்த்திக்குதானே தெரியும்.

"அப்படி என்னதான் பிரச்சனை உங்களுக்குள்ள.? நல்லாத்தானே இருந்திங்க.!"

"அதாண்ணா எனக்குமே தெரியல.. நல்லாதான் இருந்தோம். திடீர்ன்னு என்னோடு சண்டை போட்டுட்டு போனா.. போய் கூப்பிட்டா இதுவரை நடந்தது எல்லாம் நாடகம், எனக்கு உன்னை பிடிக்கலன்னு சொல்றா.." என்றவன் மடியில் வைத்திருந்த கையில் தன் முகத்தை புதைத்தான்.

மூர்த்தி அவனின் முதுகை வருடி விட்டான். அபிராமி ஏன் இப்படி சொன்னாள் என்று அவனுக்கு புரியவில்லை.

"ஏன் அண்ணா அவளுக்கு என்னை பிடிக்கல.? நான் அவளை நல்லாதானே பார்த்துக்கிட்டேன்.? அவன்னா எனக்கு உயிர்ண்ணா.! அவ சொன்னா என்ன வேணாலும் செய்வேன். என்னை ஏண்ணா விட்டுட்டு போனா.?" உணர்ச்சிகள் தேய்ந்த குரலில் கேட்டான்.

"பேசி பார்க்கலாம்டா அவக்கிட்ட.. அதை விட்டுட்டு ஏன் நீ இப்படி உன்னையே உருக்குலைச்சிக்கிட்டு இருக்க.?" வருத்தமாக கேட்டான் மூர்த்தி.

நிமிர்ந்தவன் அண்ணன் முகம் பார்த்தான். "எத்தனையோ முறை கூப்பிட்டு பார்த்துட்டேன் அண்ணே. என்னோடு வரவே மாட்டேங்கிறா.. விஷம் குடிக்கறேன்னு சொன்னா கூட குடிச்சிட்டு சாவுன்னு சொல்றா.." என்றான்.

அபிராமி இப்படி சொல்லி இருப்பாள் என்பதை அவனால் நம்ப இயலவில்லை. அவள் இவர்களோடு வாழ்ந்த ஒரு வருட காலமும் ஒரு இடத்தில் கூட கோணலாகாத வாழ்க்கை. பிறகு எப்படி இவர்களால் அவள் சொல்வதை நம்ப முடியும்.?

"நீ எழுந்து போய் ஷேவ் பண்ணிட்டு குளிச்சிட்டு வாடா.. நாம அவக்கிட்ட போய் பேசலாம்.."

மறுப்பாக தலையசைத்தான் கார்த்திக். கூரை புடவையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். "அவ வர மாட்டா.." என்றான்.

"பிரச்சனை என்னன்னாவது தெரிஞ்சிக்கலாம் வாடா.. அவங்க பேமிலி சைட், இல்ல வேறு ஏதாவது பிரச்சனையால இப்படி ஏதாவது சொல்றாளோ என்னவோ!"

அண்ணன் சொன்ன காரணமாக இருக்கலாமோ என்ற ரீதியில் யோசித்து பார்த்தான் கார்த்திக்.

மாலை வேளை. சூரியன் மேற்கிலிருந்த மலை தொடர்களை அணைத்துக் கொள்ளும் ஆசையில் அவற்றை நோக்கி கைகளை நீட்டிக் கொண்டிருந்தது.

அபிராமி தன் வயல் பகுதிகளை சுற்றி பார்க்க கிளம்பினாள். ஒரு வருடம் பிரிந்து இருந்ததற்கு தினம் வயலில் ஓடி குதித்து விளையாடினாலும் ஏக்கம் குறையவில்லை.

நெற்பயிர் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தது. நெல்லங்காட்டின் ஒரு ஓரத்தில் தப்பித்து முளைத்திருந்தது சில முத்து சோள பயிர்கள்.

நெல் வயலை தாண்டி இருந்த காடுகளில் சோளம்தான் விதைத்திருந்தார்கள். தானியம் எடுத்துச் செல்லும்போது இங்கே சில சிந்தியிருக்கும் போல‌. சோளக்கதிர் அரையாய் முற்றி இருந்தது. கதிரை உடைத்து எடுத்தாள். நெருப்பில் சுட்டு உண்டால் சுவையாக இருக்குமே என்று நினைத்தவள் நெருப்பிற்கு இப்போது எங்கே போவது என்ற யோசனையோடு பச்சையாகவே ஒவ்வொரு சோள முத்துக்களாக கடித்து உண்ண ஆரம்பித்தாள்.

"டேஸ்ட்டுன்னா இது டேஸ்ட்.." என்றபடியே வரப்பின் ஓரத்தில் நடந்தாள்.

அவள் பிஞ்சு சோளத்தின் ருசியை சுவைத்துக் கொண்டிருந்தபோது போன் ஒலித்தது.

முத்தமிழ்தான் அழைத்திருந்தான். எடுத்து பேசினாள்.

"மூர்த்தியும் கார்த்தியும் உன்னை தேடி இங்கே வந்தாங்க.." என்றான் அவன்.

அபிராமி யோசித்தாள். "அவங்களை அடிச்சி துரத்திடு.. அவன் முகத்தை பார்த்தாலே கடுப்பாகுது.!"

"இல்ல.. அதுக்குள்ள அம்மா நீங்க வயல்காட்டுக்கு போயிருக்கன்னு சொல்லிட்டாங்க. அவங்க அங்கே கிளம்பிட்டாங்க. நீ குறுக்கு வழியில் வீட்டுக்கு வந்துடு.." என்றவன் இணைப்பை துண்டித்து கொண்டான்.

அபிராமி தன் கையிலிருந்த கதிரை பார்த்தாள். சுற்றிலும் கரண்டு விட்டதில் வெறும் நார்தான் இருந்தது. தூக்கி எறிந்தாள். அந்த வயலின் கடைசி வரை சென்று வரலாம் என்று நினைத்தவள் இப்போது கடுப்பில் இப்படியே திரும்பிக் கொண்டாள்.

'அம்மாவுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.?' என நினைத்தவள் 'அவன் வந்தாதான் என்ன.? அந்த முகரக்கட்டையை இன்னொரு முறை பார்த்துட்டு கடந்து போக வேண்டியதுதான்..' என்றெண்ணினாள்.

அவள் தன் வயல்காட்டை விட்டு வெளியே வந்த அதே நேரத்தில் மூர்த்தி அவளின் முன்னால் வந்து நின்றான். கார்த்திக் அவனின் அருகே ஒட்டியபடி நின்றிருந்தான். பார்வைக்கு என்னவோ பரிதாபமாகதான் இருந்தான். ஆனால் அபிராமிக்குதான் வெறுப்பு மட்டுமே நெஞ்சில் குடிகொண்டிருந்தது.

அபிராமி கையை கட்டியபடி அவர்கள் இருவரையும் பார்த்தாள். "என்ன வேணும்.?" என்றாள். அவளின் குரலே மூர்த்தியை தடுமாற வைத்தது. அவன் பார்த்த அபிராமி இல்லை அவள். முற்றிலும் மாறுப்பட்டு இருந்தாள்.

"ஏன் விட்டு வந்துட்ட அபிராமி.? நாங்க உனக்கு எந்த கொடுமையும் செய்யல.." என்றவனை இளக்காரமாக பார்த்தவள் "நிஜமாவா.?" என்றாள்.

"ஒரு பொண்ணோட கல்யாணத்தன்னைக்கு அவளை பிளாக்மெயில் பண்ணி கடத்திட்டு வருவது.. அவளோட அண்ணன் தங்கை பாசத்துல சும்மா இரண்டு தட்டு தட்டியதுக்கு அவனை பிடிச்சி ஜெயில்ல போட்டுட்டு, அதுக்கும் அந்த பொண்ணையே கார்னர் பண்றது.. இதெல்லாம் உங்களுக்கு கொடுமை மாதிரி தெரியலையா.?" நாக்கை சுழற்றியபடி கேட்டவளை கோபத்தோடு பார்த்தான் மூர்த்தி.

தம்பியை பார்த்தான். இப்போதாவது அவனுக்கு புத்தி வரும் என்று நினைத்தான். ஆனால் அவனோ அபிராமியை ஏக்க பார்வை பார்த்தபடியேதான் நின்றுக் கொண்டிருந்தான்.

"அப்ப உன் மூளையை வாடகைக்கு விட்டிருந்தி.." மூர்த்தி முடிக்கும் முன்பே அவனின் வயிற்றில் ஒரு குத்து விட்டிருந்தாள் அபிராமி.

அடி கொஞ்சம் பலம்தான். வயிற்றை பிடித்தபடி அதிர்ச்சியோடு அவளை பார்த்தான். திருப்பி தாக்க கூட முடியாத அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்து விட்டான்.

"உனக்கு ஒரு வெங்காயமும் தெரியாது.. என் மைன்ட் எந்த அளவுக்கு குழம்பி போயிருந்ததுன்னு இந்த புண்ணாக்குக்கும் கூட தெரியாது.." என்று கார்த்திக்கின் நேரே விரல் நீட்டியவள் "நீங்க நினைக்கிற ஆள் நான் கிடையாது. நான் வேற.. என் மைன்ட் செட் வேற.. தலையெழுத்தேன்னு, என் மைன்டை நானே ரிலாக்ஸ் பண்ணிக்கிறதுக்காக இவனை சுத்தல்ல விடணுமேன்னு டிராமாவை ஆக்ட் பண்ணேன். என் ப்ளான் எக்ஸ்பைரி ஆகிடுச்சி. இதுக்கு மேல் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல.." என்றாள்.

மூர்த்தி சிலையாய் நின்றிருந்தபோதே அவனை தாண்டிக் கொண்டு சென்றாள்.

"இவ்வளவு ராங்கிக்காரியா இருக்கா.. கல்யாணத்துக்கு முன்னாடி இவளை கவனிச்சதில்லையா நீ.?" குழப்பத்தோடு கேட்டான் மூர்த்தி.

கார்த்திக் இடம் வலமாக தலையசைத்தான். அவன் முத்தமிழோடு இணைந்து பலமுறை அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளான். ஆனால் அபிராமியை கவனித்து பார்த்தது இல்லை. அவனுக்கு அந்த தேவையும் கூட இருந்ததில்லை.

"திமிரு அதிகம் இவளுக்கு. ஒரு வருசம் நடிச்சிருக்கா.. ச்சை.. இவக்கிட்ட போய் ஏமாந்திருக்க. ஏமாந்ததும் இல்லாம இப்படி எருமை மாட்டு மேல மழை பெஞ்ச மாதிரி நிக்கற.!" என்றான் கோபத்தோடு.

கார்த்திக் தூரத்தில் சென்றுக் கொண்டிருந்த அபிராமியையே பார்த்துக் கொண்டிருந்தான். மங்கும் மாலை வெயிலில் சித்திரம் போலிருந்தாள்.

"இவ கிடக்கறா.. இப்பவாவது புத்தியை யூஸ் பண்ணு.. இவளை விட்டுடு.." என்றான் மூர்த்தி தம்பியின் கைப்பிடித்து.

கார்த்திக் அண்ணனிடமிருந்து கையை விடுவித்துக் கொண்டான். "அவதான் எனக்கு எல்லாமும்.." என்றான்.

மூர்த்தி கோபத்தோடு முறைத்தான். "அப்படின்னா நாங்க யாரும் வேணாமா.?"

கார்த்திக் அண்ணனை நிமிர்ந்து பார்த்தான். "அறுபது வயசாகும்போது உன் பையன்கிட்ட கேட்டுட்டு அரை மணி நேரம் வந்து என்னை பார்ப்ப நீ.! அப்ப எனக்கு நீ தேவையே இல்ல. ஆனா அவ எண்பது வயசிலும்‌ எனக்கு வேணும். இருபத்து நாலு மணிநேரமும் என் கூடவே வேணும்.!"

மூர்த்தி அவனை வெறித்தான்.

"நல்லா மயக்கி வச்சிட்டா.."

அண்ணனை விட்டு விலகி நின்ற கார்த்திக் "என் பொண்டாட்டியை பத்தி தப்பா பேசாதே.! எங்களுக்குள்ள என்னவோ இருக்கட்டும். நீ குறுக்க வராதே.!" என்றவன் அபிராமி சென்ற திசையில் ஓடினான்.

மூர்த்திக்கு ரத்தம் கொதிப்பது போலிருந்தது. தம்பியை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று குழம்பினான். இப்படியே போனால் தம்பி பைத்தியமாகி செத்து விடுவான் என்று அவனுக்கு பயம்.

மாலை வெயிலை அவ்வப்போது பார்த்து கண்ணடித்தபடி நடந்துக் கொண்டிருந்த அபிராமியின் கையை ஓடி வந்து பற்றினான் கார்த்திக். நொடியில் பயந்து விட்டாள் அவள். ஆனால் சட்டென்று பயத்தை சரிசெய்துக் கொண்டு அவனை முறைத்தாள்.

"உனக்கு இன்னும் என்ன எழவு வேணும்.?" என்றாள். அவளின் வெறுப்பான வார்த்தைகள் அவனை ஊசியாய் தைத்தது.

"அபிராமி.. சாரி.. ப்ளீஸ். என்னோடு வா.!" கெஞ்சலாக அழைத்தான்.

அவனின் நெஞ்சில் கை வைத்து தூர விலக்கி தள்ளியவள் "தயவு செஞ்சி என்னை விட்டுடு.. உனக்கு தேவையான சொத்து உனக்கு கிடைச்சிடுச்சி. அப்புறம் என்ன ***க்கு நான் உனக்கு வேணும்.?" என்றாள் கோபத்தோடு.

கார்த்திக் நெற்றியில் அறைந்துக் கொண்டான். "சாரி. தப்பு பண்ணிட்டேன்.! பெரிய தப்பு பண்ணிட்டேன். உன்னை அழ வச்ச அத்தனை செகண்டுகளும் தப்பு. உன்னை கட்டாயப்படுத்தின அத்தனை நிமிடங்களும் தப்புதான். ப்ளீஸ். மன்னிச்சிட்டு என்னோடு வா. உன் விருப்பத்துக்கு மாறா இனி எதுவுமே செய்ய மாட்டேன் நம்பு.! நீ இல்லாம செத்துடலாம் போலிருக்குடி.!" என்றவனின் இமைகள் ஈரத்தால் மின்னியது.

அபிராமி பற்களை கடித்தாள். "இன்னும் நீ சாகல. நீ செத்தாலும் நான் உன்னோடு வர மாட்டேன்.! அவ்வளவுதான். உன்னை, உன் குடும்பத்தை, உன் வீட்டை, உன் ஊரை எதையும் எனக்கு பிடிக்கல.. ஒரு வருசம் நடிப்புக்காக பொறுத்துட்டு இருந்தது எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்ததுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். இனியாவது நான் நிம்மதியா இருக்க விருப்பப்படுறேன்.." என்றவள் அவனிடமிருந்து விலகி நடந்தாள்.

"நீ என்ன சொன்னாலும்.."

நடந்தவள் திரும்பினாள். அவன் முழுதாய் சொல்லும் முன்பே "செத்து போ.." என்றுவிட்டு வீடு நோக்கி நடந்தாள்.

கார்த்திக்கிற்கு மணலில் புரண்டு கதறியழ வேண்டும் போல இருந்தது. அவனின் பிடிவாதங்களை, அவனின் கோபங்களை, கடைசியில் அவனின் ரோசங்களையும் கூட மொத்தமாக மாற்றி விட்டாள் அவள்.

தினமும் காதலை ஊட்டினாள். ஆனால் அது அத்தனையும் நஞ்சு என்று இப்போது சொல்கிறாள். ரசித்து உண்டவன் எப்படி அதை விஷமென நம்புவான்.?

திரும்பி சென்று விடத்தான் நினைத்தான் மூர்த்தி. ஆனால் உடன் பிறந்த பாசம் செல்ல விடவில்லை. அதனால் ரோசத்தை ஒதுக்கி தள்ளிவிட்டு சென்று தம்பியை இழுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றான். கார்த்திக் அசையும் சிலை போலவே ஆகிவிட்டான்.

வீட்டிற்கு வந்த பிறகு அபிராமியை திட்டி தீர்த்தான் மூர்த்தி. "இத்தனை நாள் நடிச்சிருக்கான்னு கூட தெரியாத அளவுக்கு ஏமாந்திருக்கோம். அது எல்லாத்தையும் விட முக்கியமா அவ இவனை பைத்தியமாக்கிட்டா.." என்றான்.

கார்த்திக்கிற்கு அண்ணனின் வாயை உடைக்க வேண்டும் என்று தோன்றியது. அபிராமியை பற்றி யார் தரம் குறைவாக சொன்னாலும் அவர்களை மிதிக்க வேண்டும் என்ற அளவிற்கு கடுப்பானது மனம்.

அடுத்த நாள் அண்ணன் தன்னிடம் சொன்ன வார்த்தைகளை கூட நம்பவில்லை அவன். அந்த அளவிற்கு அபிராமியை மட்டுமே நம்பினான்.

"தப்பு உன்மேலதான். அவளை பத்தி தெரியாம மாட்டிக்கிட்ட.! முத்தமிழை விட ஏழு பங்கு திமிர். அவங்க தாத்தாவை விட ஐம்பது மடங்கு சூழ்ச்சிக்காரி.. அவ நமக்கு எதுவுமே நல்லது செய்யல.. அவ கூடவே இருந்துட்டு நமக்கே பல ஆப்பு வச்சிருக்கா.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN