காதல் கடன்காரா 33

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கார்த்திக் அண்ணனை குழப்பமாக பார்த்தான். "அவ என்ன செஞ்சா.?"

"ஆரம்பத்துல இருந்தே அவ நம்மக்கிட்ட நடிச்சி மட்டும்தான் இருக்கா.. நம்ம குழி காட்டுக்கு பாதை வேணும்ன்னு நாமும் பல வருசமா கேட்டுட்டு இருந்தோம்.. ஆனா இவ கேட்டதும் பக்கத்து காட்டுக்காரன் விட்டிருக்கான். ஏன் தெரியுமா.? இவ தன் பிறந்த வீட்டு பேக்ரவுண்டை வச்சி அவங்களை மிரட்டி இருக்கா.. அவங்க இந்த காட்டுக்கு வழி விடலன்னா அவங்களோட மொத்த காட்டையும் கார்னர் பண்ணி மொத்ததையும் இல்லாம பண்ணிடுவேன்னு மிரட்டி இருக்கா.." என்ற அண்ணனை கேலியாக பார்த்த கார்த்தி "அவங்க இதுக்கு பயந்துட்டாங்கன்னு என்னை நம்ப சொல்றியா.?" என்றான். அபிராமி இந்த விசயத்தில் மிரட்டி இருப்பாள் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை. அப்படி மிரட்டியே இருந்தாலும் இது அவனுக்கு வருத்தத்தை தரவில்லை.

மூர்த்திக்கு தம்பியின் தாடையிலேயே குத்து விட வேண்டும் என்று ஆசையாக இருந்தது.

"மண்டை மூளை கெட்டவனே.. அவ தன் பிறந்த வீட்டு பணத்தை வச்சி மிரட்டி இருக்கா. அவ நினைச்சா அவங்களை ஒன்னும் இல்லாம செஞ்சிடுவாங்கற ஒரு பிம்பத்தை அவங்க மனசுல ஏற்படுத்தி பாதைக்கான நிலத்தை வாங்கி இருக்கா.." என்றான்.

"ஓ.. என் பொண்டாட்டியும் திறமைசாலிதான் இல்ல.?" கசந்த புன்னகையோடு கேட்டவனை முறைத்த மூர்த்தி "பத்து பதினைஞ்சடி ரோட்டுக்கே அவங்களை அப்படி மிரட்டியவ உன் மேல இருக்கற கோபத்துல என்னவெல்லாம் பண்ணியிருப்பான்னு யோசிச்சியா.?" என கேட்டான் கடுப்போடு.

கார்த்திக்கிற்கு அது எதையும் கேட்க விருப்பம் இல்லை. அவனின் தேவை அபிராமி மட்டுமே.

தம்பியின் அமைதி கண்ட பிறகு மூர்த்திக்கு இன்னும் அதிக கோபம் வந்தது.

"இந்த அளவுக்கு உன் சொரணையை மழுங்க வச்சிட்டா இல்ல.? இன்னும் சொல்றேன் கேளு.." என்றவனை கை காட்டி நிறுத்திய கார்த்தி "வேணாம். நான் மீதியை அவக்கிட்டயே கேட்டுக்கறேன். அவ என்ன செஞ்சாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும்.." என்றவன் எழுந்தான்.

"போடா பைத்தியக்காரா.. இன்னமும் அவளையே நம்புற பார்த்தியா.. போ.. நிச்சயம் எல்லா உண்மையையும் சொல்வா.. அப்புறமாவது புத்தி தெளியுறியான்னு பார்க்கலாம்.." என்று திட்டினான் மூர்த்தி.

இவனின் கத்தல் குரல் கேட்டுவிட்டு ஓடி வந்தாள் யமுனா. "ஏன்டா கத்திட்டு இருக்க.? தம்பி எங்கே போறான்.?" என கேட்டாள்.

"அந்த கொலைக்காரியை பார்க்க போறான்.." எரிச்சலோடு சொன்னான் மூர்த்தி.

"அபிராமியா.? ஏன்டா இப்படி திட்டுற.?" குழப்பத்தோடு கேட்டாள்.

"கொலைக்காரிதான்ம்மா.. அவ செஞ்ச வேலைகள் அப்படி. நம்ம பழைய வீட்டுல சிலிண்டல் வெடிச்சதுக்கு கூட அவதான் காரணமோன்னு இப்பதான் தோணுது.." வெறுப்போடு சொன்னவனை அதிர்ச்சியாக பார்த்தாள் யமுனா.

அபிராமி இந்த அளவிற்கும் செல்வாள் என்று அவளால் நம்ப முடியவில்லை.

அபிராமியின் பார்வை பேராசிரியரின் முகத்தில் குடிக் கொண்டிருந்தது. அவர் சொல்வதை கவனத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள். பாடங்களை மனதில் பதிய வைத்துக் கொண்டிருந்தாள். பேராசிரியர் பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு வாசலை பார்த்தார்.

ப்யூன் நின்றிருந்தார். "பிரின்சிபால் அபிராமியை கூட்டி வர சொன்னாரு சார்.."

ப்யூன் சொன்னது கேட்டு எழுந்து நின்றாள் அபிராமி. பேராசியர் தலையசைத்ததும் வெளியே நடந்தாள்.

பிரின்சிபால் அறை நோக்கி நடந்தவளை "பாப்பா இந்த பக்கம்.." என்றார் ப்யூன்.

அபிராமி குழப்பத்தோடு அவரை பார்த்தாள்.

"உன் புருசன்னு சொல்லிக்கிட்டு மறுபடியும் அவன் வந்து கேட்ல நின்னு தகராறு பண்ணிட்டு இருக்கான். அதனால்தான் உன்னை கேட்டுக்கு கூட்டி வர சொல்லி இருக்காரு பிரின்சிபால்.."

கார்த்திக்கின் மீது கொலை வெறி வந்தது அபிராமிக்கு. விடாது சனியன் எனும்படி அவன் தன்னை டார்ச்சர் செய்வதாக எண்ணினாள்.

கேட்டின் அருகே நான்கைந்து பேராசிரியர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள். பிரின்சிபாலும் வாட்ச்மேனும் கடுப்பில் இருந்தார்கள். கார்த்திக் கேட்டின் வெளியே நின்றுக் கொண்டிருந்தான். அதே சோக முகம். பார்க்கையிலே எரிச்சல் வந்தது அபிராமிக்கு.

அபிராமி அருகே வந்ததும் அவளை முறைத்தார் பிரின்சிபால். "அன்னைக்கே உன்கிட்ட சொன்னேன். இன்னொரு முறை இப்படி ஏதாவது பிரச்சனை வந்தா உன்னை காலேஜை விட்டு வெளியே அனுப்பிடுவேன்னு! பிறகு ஏன் நீ இன்னும் அசால்டா இருக்க.? இவன் நம்ம காலேஜ்ல சூஸைட் பண்ண டிரை பண்ணதால நாங்க எத்தனை பிரச்சனைகளை ஹேண்டில் பண்ணினோம் தெரியுமா.? பணத்தை கொட்டி ஊடகங்களோட வாயை மூடி இருக்கோம்.." என்றவர் முந்தைய பிரச்சனையை விலக்கி சொன்னார்.

"சாரி சார்.. இனி எப்பவும் இப்படி நடக்காது.."

"உன்னோடு பேசணும்ன்னுதான் வந்திருக்கானாம். போலிஸ்க்கு போன் பண்ணலாம்ன்னு பார்த்தா மறுபடியும் ஏதாவது பண்ணி நம்மளை வம்புல மாட்டி விட்டுடுவானோன்னு பயமா இருக்கு.!" என்றார் அவர்.

"பத்து நிமிசம் சார்.. பேசிட்டு வந்துடுறேன்.. இனி என்னால எப்பவும் எந்த பிரச்சனையும் வராது. பிலீவ் மீ.." என்றவள் கேட்டை நோக்கி ஓடினாள்.

வாட்ச்மேன் பிரின்சிபாலை பார்த்தபடி கேட்டை திறந்து விட்டார்.

அபிராமி வெளியே வந்ததும் கார்த்திக்கின் முகம் பொலிவு பெற்றது. அவனை தூரமாக இழுத்துக் கொண்டு வந்தாள் அவள்.

"உன் பிராப்ளம்தான் என்ன மேன்.?" எரிச்சலோடு கேட்டாள்.

"உன்னை டிஸ்டர்ப் பண்ண நினைக்கல அபிராமி. என் அண்ணன் உன்னை பத்தி என்னவோ சொன்னான். நீதான் பக்கத்து காட்டுக்காரங்களை மிரட்டி பாதை வாங்கினேன்னு சொன்னான்.. இன்னும் என்னவோ சொன்னான். ஆனா எதையும் நீயா சொன்னாதான் எனக்கு சரியா வரும். உன் மேல இருக்கற கடுப்புல அவன் பொய்யை.."

"ஒரு வெங்காய பொய்யும் இல்ல. நான்தான் மிரட்டி வாங்கினேன். அதுக்கு இப்ப என்னங்கற.? பக்கத்து காட்டுக்காரனும் பிழைக்கட்டுமேன்னு நினைச்சி பதினைஞ்சடி ரோடு விடுறதால அவன் ஒன்னும் செத்துட போறதில்ல. பணத்துக்கு கேட்டும் கூட நிலத்தை தராம ஈஸ்வர் குடும்பத்துக்கு சொம்பு தூக்கிக்கிட்டு இருந்தான் அவன். அதான் மிரட்டினேன்.." என்றவளை ஆச்சரியத்தோடு பார்த்தான். அவள் செய்ததில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

"மறுபடியும் நீ வந்து என்னை டார்ச்சர் செய்ய கூடாதேன்னு இன்னைக்கே எல்லாத்தையும் சொல்றேன். நல்லா கேட்டுக்கோ.. உன் வீட்டுக்கு வந்த குடுகுடுப்பைக்காரன் என் செட்டப்தான். உனக்கு நான் செஞ்ச அத்தனை பணிவிடைகளும் நடிப்புதான். உன் அம்மாவுக்கு அடி பணிஞ்சி போனது, உன் அண்ணனுடனான நட்பு எல்லாமே பொய்தான். ஓகே.? ஈஸ்வருக்கு உடம்பு சரியில்லாம போக காரணமும் நான்தான். அவங்க வீட்டு சமையல்காரனும் என் செட்டப்தான். உடம்பை உருக்கும் மருந்தை ஈஸ்வரோட உணவுல கலந்து தர சொன்னவளே நான்தான். உங்க ஊர் பூசாரியும் என் ஆள்தான். அவர் நான் சொன்னது கேட்டுட்டுப் போய்தான் ஈஸ்வருக்கு சாபம், முன்னோர் வருத்தம்ன்னு கதை விட்டார். அதனாலதான் உன் பெரியப்பா சொத்தை பாதியா பிரிச்சி உங்களுக்கு கொண்டு வந்து தந்தாரு. அது மட்டுமில்ல.. நான் சொன்னதாலதான் அவங்க வீட்டு சமையல்காரன் உங்க பெரியப்பா மேல கேஸ் வெடிச்ச கேசை தூக்கி போட்டான்.." என்றவளை ஆச்சரியம் குறையாமல் பார்த்து நின்றான் அவன்.

"உன் குடும்பத்து மேல இருக்கற அக்கறையால இதை செஞ்சேன்னு நினைச்சிக்காத! ஐ ஹேட் யுவர் பேமிலி. உங்க பெரியப்பா சொத்தை தராதது என்னை பொறுத்தவரை சரின்னுதான் சொல்வேன். உழைப்பும் பொறுப்பும் ரத்தத்துல ஊறணும். டிவெண்டி போர் ஹார்ஸ்ம் சோம்பேறி மனசோடு இருக்கற உனக்கும் உன் பேமிலி மெம்பர்ஸ்க்கும் எந்த சொத்தையும் சுகத்தையும் அனுபவிக்கும் தகுதியே இல்ல. பிறகேன் அந்த கல்லு காட்டை மாத்தினேன்னு கேட்கறியா.. அது உங்க அப்பாவுக்காக. அவர் ஒருத்தர்தான் உங்க குடும்பத்துல கொஞ்சம் சுறுசுறுப்பா இருக்காரு. ஆனால் அவருக்கு நேரம் பத்தலையேன்னு உன்னை பழி வாங்கற கேப்ல அவருக்கு இந்த சின்ன ஹெல்பை செஞ்சேன்.."

அவர்களின் குடும்பத்தைதான் குறை கூறிக் கொண்டிருந்தாள் அபிராமி. ஆனால் கார்த்திக் அமைதியாகவே நின்றான். ஏனோ அவனால் கோபப்பட முடியவில்லை. அவள் சொல்வது சரிதான் என்று அவனின் மனமும் அவளுக்கேதான் காவடி தூக்கியது.

"அந்த சொத்தை பிரிச்சி வாங்க காரணம் உங்க குடும்பத்து மேல இருந்த பாசம் கிடையாது. அது அந்த ஈஸ்வர் மேல இருந்த கோபம். அவன் கோர்ட்ல தேவையே இல்லாம என்னை இழுத்ததோடு மட்டுமில்லாம அவன்கிட்ட கேள்வி கேட்க போன என் அண்ணன்கிட்டயே தேவையில்லாதது எல்லாம் பேசியிருக்கான். இது மட்டுமில்லாம சொத்துக்காக உன்னை கொல்ல டிரை பண்ணவன் அவன். அவனோடு எனக்கு கல்யாணம் நடந்திருந்தா அதே சொத்துக்காக என்னையும் கூட கொன்னிருப்பான். அதையெல்லாம் நினைச்சி பார்த்து கடுப்பாகிதான் அவன் சாப்பாட்டுல மருந்தை கலக்க வச்சேன். அவங்க அப்பன் என்னையும் சேர்த்து கேஸ் வெடிப்புல கொல்ல திட்டம் போட்டிருந்தான்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஈஸ்வருக்கு மருந்துக்கு பதிலா விஷத்தை வைக்க சொல்லி இருப்பேன்.." என்றவளை உணர்ச்சிகளற்று பார்த்து நின்றான். கேஸ் வெடிக்க தான்தான் காரணம் என்று சொல்லி விடுவாளோ என்று பயந்துக் கொண்டிருந்தான் அவன்.

"உன் பார்வையை பார்த்தவுடனே தெரியுது. ஆனா நான் கேஸ் வெடிக்க வைக்கல. அன்னைக்கே சொன்னதுதான், செய்யாத தப்புக்கு பழி சுமக்கறது எனக்கு சுத்தமா பிடிக்காது. என் முன்னோர்கள் அத்தனை பேரும் செஞ்ச புண்ணியம் அன்னைக்கு நான் கரெக்ட் டைம்க்கு தண்ணீர் குடிக்க எழுந்தது! ஆனா அந்த ஐடியா நல்லாருக்கேன்னு அதுக்கப்புறம்தான் எனக்கே தோணுச்சி.! ஆள் இல்லாத நேரத்துல வீட்டை கொளுத்தி விட்டிருந்தா அதுக்காகவாவது நீங்க கொஞ்சம் உழைச்சி புது வீடு கட்டியிருப்பிங்களோன்னு தோணுச்சி.. ஆனா மிஸ்ஸாயிடுச்சி.." என்றவள் அவனின் நெஞ்சில் சுட்டுவிரலை குத்தினாள்.

"நான் ரொம்ப கெட்டவதான். ஆனா நியாயமானவ.! நீ என்னை அழிச்ச.. நான் உன்னை அழிச்சேன். சரிக்கு சரி, பழிக்கு பழி சரியா போச்சி.. இதுக்கு மேலயும் வந்து என்னை டார்ச்சர் செய்யாதே.." என்றவள் திரும்பி நடந்தாள். அவளின் முன்னால் ஓடி வந்து நின்றான் கார்த்திக்.

கண்களை மூடி திறந்தவன் "அதுதான் எல்லாம் சரியா போச்சே.. அப்புறம் என்ன.? என்னோடு வாழ வா.." என்றான்.

கையை கட்டியபடி அவனை யோசனையோடு முறைத்தவள் "ஏன் வாழ வரணும்.? எனக்குதான் உன்னை பிடிக்கலையே.!" என்றாள்.

"எ.. என்ன செஞ்சா பிடிக்கும்ன்னு சொல்லு.. நாம ஒரு வருசம் தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்திருக்கோம். நீ என்னை ஒதுக்கி வைப்பதா நினைச்சி உன் லைப்பையும் அழிச்சிடாதே!"

"எக்ஸ்க்யூஸ்மீ.." அவன் முன் விரலை சொடுக்கிட்டவள் "தட்ஸ் நாட் தாம்பத்தியம் ராசா.. ஜஸ்ட் செக்ஸ்.. பொய் சொல்ல விரும்பல, எனக்கும் இன்ட்ரெஸ்ட் இருந்தது.. அதனாலதான் அதுக்கு செக்ஸ்ன்னாவது பேரு. இல்லன்னா ரேப் கணக்குல சேர்ந்திருக்கும்.." என்றாள்.

கார்த்திக்கிற்கு என்னவோ போலிருந்தது. அவளின் கன்னத்தில் பளீரென்று ஒரு அறையை விட்டு 'நம்ம காதலை கொச்சைப்படுத்தாதே..' என்று அதட்ட வேண்டும் போல இருந்தது. ஆனால் இடையில் நின்று என்னவோ தடுத்தது. 'ஏற்கனவே செய்த ஒரு தவறால்தான் இவள் உன்னை விட்டு சென்றால் என்பதை மறந்து விடாதே.!' என்று எச்சரித்தது மனம்.

"கொஞ்சம் கூட லவ் இல்லங்கறியா.? அன்னைக்கு புவி சொன்னது போல உன்னோடது வெறும் காமம்ன்னு சொல்றியா.? அதுக்கு மேல ஒன்னுமே இல்ல, ஒரு பர்சண்ட் கூட லவ் கிடையாதுங்கறியா.?"

அபிராமி பெருமூச்சு விட்டாள். "யெஸ்.. ரைட். இதைதான் சொல்ல டிரை பண்ணேன். எதுவும் இல்ல.. இதுக்கு மேலயும் இருக்காது.. ஒரு வருசம் உன்னோடு செக்ஸ் ரிலேசன்ஷிப்ல இருந்ததால என் புனிதம் கெட்டிருக்கும்ன்னா.. கெட்டுதான் போகட்டுமே.! அதை வச்சி நான் என்ன செய்ய போறேன்.? நீ என் மனசை உடைச்ச போதே என் லைப்ல நான் தோத்துட்டேன். என்னை நானே பாதுகாக்கும் என்னோட ஒரே வேலையில் தோத்து போயிட்டேன். இனி இந்த லைப்பை காப்பாத்தி வச்சி என்ன பண்ண போறேன்.? நீ என் குழப்பத்தை யூஸ் பண்ணி கடத்தி போனங்கறதை விட நீயெல்லாம் கடத்தி போகும் அளவுக்கு என் மைன்டை கேர்லெஸ்ஸா வச்சிருந்தேனேன்னுதான் எனக்கு கோபம். உன்னை பழி வாங்கிட்டேன். என்னை நானே பழி வாங்கிக்க நீ சொன்ன அந்த லைப்பே போச்சி மேட்டராவது இருந்துட்டு போகட்டும்.." என்றவள் "ஆனா இனியாவது நீ என்னை டார்ச்சர் செய்ய மாட்டேன்னு நம்புறேன்.." என்றபடி அவனை தாண்டி நடந்தாள்.

"அப்படியே இன்னொரு விசயம்.. உங்க அண்ணனை புதுசா வேலைக்கு சேர்ந்த இடத்துல நல்லா வச்சி கும்மி எடுக்கறாங்கன்னு உனக்கு தெரியாது இல்ல.! அவனோட ஹையர் ஆபிசர் எங்க தாத்தாவுக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவர்தான்.! அவனோட டிரான்ஸ்பரும் இந்த அடியாளின் கை வண்ணம்தான்.! என் அண்ணன் உன்னை அடிச்சதுக்கு சம்பந்தமே இல்லாம என்கிட்ட டீல் பேசிட்டான். லூசு பையன்.! இடையில அன்னைக்கு சனி ஞாயிறு மட்டும் இல்லாம இருந்திருந்தா இவ்வளவு தூரம் வந்த கதையே வேற மாதிரி இருந்திருக்கும். என்ன செய்ய விதி.. என்ஜாய் மச்சி.." என்றவள் கையசைத்துவிட்டு கல்லூரியை நோக்கி சென்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN