காதல் கடன்காரா 35

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கார்த்திக்கின் அருகே வந்து அவனை பின்னால் தள்ளினான் முத்தமிழ். கார்த்திக் தடுமாறி வயலில் விழுந்தான்.

"உன் வெட்டி சீன் எதையும் என்கிட்ட காட்டாதே! அன்னைக்கு நீ செஞ்ச காரியத்துக்கு உனக்கு துணை போன ஒருத்தன் கூட இப்ப எனக்கு பிரெண்ட் லிஸ்ட்ல கிடையாது. நீயும் எனக்கு பிரெண்ட் கிடையாது. என்னை பொறுத்தவரை நீ செத்துட்ட.."

வயலின் சேறும், பயிர்களின் ஈரமும் கார்த்திக்கின் முதுகையும் சட்டையையும் முழுதாக நனைத்து விட்டன. வழுக்கும் சேற்றில் மெதுவாய் நடந்து மேலேறி வந்து நின்றவன் சட்டையின் கை பகுதியில் இருந்த ஈரத்தை துடைத்தான்.

"தப்பு பண்ணிட்டேன். இல்லன்னு சொல்லல. அதுக்காக அப்படியே வெட்டி விட்டுட்டு போக போறிங்களா.? வெட்டிவிட எனக்கு விருப்பம் இல்ல.. என்னால விடவும் முடியாது. நான் நல்ல முறையாதான் கேட்கறேன், அவளை என்னோடு சேர்த்து வைன்னு.! இல்லன்னா உன் தங்கச்சியை விடவும் நான் அதிக ராங்கிக்காரனா மாறுவேன்.."

முத்தமிழ் பெருமூச்சோடு தூரமாய் கிடந்த மண்வெட்டியை பார்த்தான்.

"என்னை கொல்றதுல உனக்கு ஏன் இவ்வளவு ஆசைன்னு தெரியல. ஆனா என்னை கொன்னா கூட பேயா மாறி உன் தங்கச்சியை தேடி வருவேன் நான். இதான் உண்மை.." என்றவன் நண்பனை தாண்டிக் கொண்டு நடந்தான்.

"உன் தங்கச்சியை முன்னை விட இப்பதான் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு மச்சி.. அவளை வழிக்கு கொண்டுவர என்னால முடியும். ஆனாலும் உனக்கு நன்றிடா, என் தங்கச்சியை பழி வாங்காம விட்டதுக்கு! இதுக்கு நிச்சயம் நன்றிக்கடன் பட்டிருக்கேன்.." என்றவன் முத்தமிழ் ஆத்திரத்தோடு நிற்கும்போதே அங்கிருந்து சென்று விட்டான்.

அபிராமி பாடல் ஒன்றை முனகியபடி காரை செலுத்திக் கொண்டிருந்தாள். இந்த ஒரு வாரமாகதான் அவளின் முழு நிம்மதி திரும்பி வந்தது போலிருந்தது. இதே போல கார்த்திக்கை எப்போதும் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று ஆசைக்கொண்டாள்.

ஆனால் அவள் இதை எந்த நேரத்தில் ஆசைப்பட்டாளோ.? அவளின் பாதையில் வந்து நின்றிருந்தது கார்த்திக்கின் பைக். அதை ஓரம் கட்டிவிட்டு சென்றுவிடலாம் என்று அபிராமி நினைத்த வேளையில் கார்த்திக் பைக்கின் அருகே வந்து நின்றான்.

அபிராமி காரை அணைத்தாள். ஸ்டியரிங் வீலில் நெற்றியை முட்டினாள். "இவன்கிட்டயிருந்து விடுதலையே கிடைக்காதா.?" எரிச்சலோடு சொல்லியவள் சில நொடிகள் கழித்து நிமிர்ந்தபோது எதிரில் பைக் மட்டும் தனியே நின்றிருந்தது.

"என்னை தேடுறியா.?" காரின் இடதுப்பக்க ஜன்னலின் அருகே நின்றபடி கேட்டான் கார்த்திக்.

"உன்னை எதுக்கு தேடுறேன்.? அதுதான் அன்னைக்கே எல்லாம் நாடகம்ன்னு சொல்லிட்டேனே.? அப்புறம் ஏன் இன்னும் குறுக்க வந்து நிற்கற.?"

பதிலை சொல்லாமல் காரின் கதவை திறந்து உள்ளே அமர்ந்தான் அவன். கதவை பூட்டாமல் விட்டதற்கு அபிராமிக்கு தன் மீதே கோபம் வந்தது.

"ஐ லவ் யூ.." என்றவனை கைகளை கட்டிக்கொண்டு முறைத்தவள் "ஐ ஹேட் யூ.." என்றாள்.

"அன்னைக்கு நான் வெறுத்தேன். நீதான் காதலிக்க வச்ச.. இன்னைக்கு நீ வெறுக்கற.. இந்த டைம் உன்னை காதலிக்க வைக்கற பொறுப்பு என்னோடது. டீல் பிடிச்சிருக்கு அபிராமி.." என்றவனின் மீது தன் கைப்பையை தூக்கி வீசியவள் "காதல்ன்னு எந்த மண்ணாங்கட்டியும் இல்ல. நீ முதல்ல காரை விட்டு கீழே இறங்கு. உன்னை மாதிரி ஒருத்தனை காதலிக்கறதுக்கு பதிலா நான் முதலை இருக்கற குளத்துல கூட குதிப்பேன்.." என்றாள் கோபத்தோடு.

கார்த்திக்கிற்கு இறக்கை கட்டி பறக்க வேண்டும் போல இருந்தது. அவளின் பிடிவாதம் அவனை மயக்கிக் கொண்டிருந்தது. சிறு எரிச்சல் பேச்சை கூட வெறுப்பவன் அவன். ஆனால் அவள் இந்த திட்டு திட்டியும் அந்த வார்த்தைகளை வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டிருந்தான்.

"இவ்வளவு நாளா நான் உன்னை கட்டாயப்படுத்தினேன். அது என் சுயநலம். சாரி. ஆனா இனியும் என் டார்ச்சர் உன்னை தொடரும். அது நம் காதலுக்காக. உன் மேல நான் பைத்தியமான மாதிரி உன்னையும் என் மேல பைத்தியமா மாத்துவேன். நீ சொல்லாம செஞ்ச. நான் சொல்லிட்டு செய்றேன்.." என்றவன் அவளின் அருகே நகர்ந்தான். அபிராமி அவனை முறைத்தபடி பின்னால் நகர்ந்தாள். எட்டி அவளின் தாடையே பற்றியவன் அவளை தன் அருகே இழுத்தான்.

அபிராமி அவனின் தோளில் அடிக்க முயன்றாள். அவளின் நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்தவன் "அப்புறமா பார்க்கலாம்.." என்றபடி அவளை விட்டான்.

அபிராமி முகம் சுளித்தபடி நெற்றியை துடைத்துக் கொண்டாள்.

"உனக்கு என் மேல அவ்வளவு கோபமா இருந்திருக்கலாம். உன் கோபம் நியாயமானதுதான். நீ என்னை கத்தியெடுத்து குத்தி கொன்னிருக்கலாம். ஆனா பழிவாங்க நீ காதலை டூலா யூஸ் பண்ணியிருக்க கூடாது. பழி வாங்க நினைக்கறவங்களுக்கு காதல் ரொம்பவும் கெட்ட விசயம். உன்னை நீயே கொல்வதை போல அது.." என்றவன் காரை விட்டு இறங்கினான்.

"போடா மெண்டல்.." என்று எரிந்து விழுந்தவள் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள். போகும்போது கார்த்திக்கின் பைக்கை ஓரமாக இடித்து கீழே தள்ளிவிட்டு சென்றாள்.

கார்த்திக் பைக்கை எடுத்து நிறுத்தினான். "சாரி.." என்றான் பைக்கிடம்.

சிந்துவும் சுவாதியும் அந்த காபி ஷாப்பில் வந்து அமர்ந்தனர்.

"அவன் ஏன் நம்மை பார்க்கணும்.?" சுவாதி சந்தேகத்தோடு கேட்ட நேரத்தில் அவர்களின் முன்னால் வந்து அமரந்தான் கார்த்திக்.

"ஹாய்.." என்று கையசைத்தான்.

பெண்கள் இருவரும் பதில் சொல்லவில்லை. அவனை பார்வையாலேயே எடைப்போட்டனர்.

"சாரி.. நான் உங்க பிரெண்டை கட்டாயப்படுத்தி கூட்டிப் போயிருக்க கூடாது.."

"புரிஞ்சா சரி.." எங்கோ பார்த்தபடி சொன்னாள் சிந்து.

"புரிஞ்சது. அதை விட அதிகமா இன்னொன்னும் புரிஞ்சது.." என்றவனின் முகம் பார்த்தாள் அவள். என்னவென பார்வையால் கேட்டாள்.

"உங்க பிரெண்டை ரொம்ப மோசமா லவ் பண்றேன்.."

சிரித்தாள் சுவாதி. "இதைதான் அவளும் ஆசைப்பட்டா.. பைத்தியமாக்கி உங்களை சுத்த விடணும்ன்னு!"

"ஆனா நான் சும்மா சுத்த மாட்டேன். எனக்கு அவ வேணும்.." என்றவனை கோபத்தோடு பார்த்த சிந்து "மறுபடியும் தப்பு செய்யாதிங்க. அவ நல்லவங்களுக்கு மட்டும்தான் நல்லவ. நீங்க மறுபடி ஏதாவது செஞ்சா யோசிக்காம உங்களை பெட்ரோல் ஊத்தி எரிச்சிடுவா.." என்று எச்சரித்தாள்.

தலையை கோதிவிட்டபடி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்த கார்த்திக் "அவ அதை முதல்லயே செஞ்சிருக்கணும். காதல்ங்கற வலையை வீசி இருக்க கூடாது. அந்த வலை அவளையும்தான் சேர்த்து சிக்க வைக்கும்.." என்று முணுமுணுத்தவன் "அவளை நான் கரெக்ட் பண்ணனும். அதுக்கு உங்க இரண்டு பேர் ஹெல்பும் வேணும்.." என்றான்.

தோழிகள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"நாங்க.? அதுவும் உங்களுக்கு.? பாஸ் பகல் கனவு காணாதிங்க.! அபிராமிக்கு தெரிஞ்சா நாங்க காலி.." என்ற சிந்து எழுந்து நின்றாள்.

"உங்க இரண்டு பேரையும் என் தங்கச்சிங்க மாதிரி நினைச்சி வந்து ஹெல்ப் கேட்கறேன்.! உதவி செய்யாம கிளம்பினா எப்படி.?" அவனது கேள்வியால் மீண்டும் அமர்ந்த சிந்து "இந்த செண்டிமெண்ட் உங்களுக்கே ஓவரா தெரியலையா.?" என்றாள் கேலியாக.

"எனக்கு அவ வேணும். அதுக்காக என்ன வேணாலும் செய்வேன்.." என்றவன் கடை ஊழியர் கொண்டு வந்து வைத்த காப்பி கோப்பையை கையில் எடுத்தான்.

"நீங்களும் குடிங்க. இது லஞ்சம் கிடையாது. அன்பின் பரிமாற்றம்.." என்றான்.

"வாய் ஓவர்டி இவனுக்கு.." சிந்துவின் காதோரம் சொன்னாள் சுவாதி.

"அவளை பத்தி உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க. அவளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும், என்னவெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லுங்க.. நான் அவளை இன்ப்ரஸ் பண்ண உதவியா இருக்கும்.." என்றான் கார்த்திக் காப்பியை பருகி முடித்ததும்.

"அவளுக்கு கோபம் அதிகமா வரும். அவ நேரடியா கோபத்தை காட்ட முடியாத சமயத்துல இந்த மாதிரி எதையாவது செய்வா. நாங்க பிப்த் படிக்கும்போது அவ செய்யாத தப்புக்கு பிரேயர்ல நிற்க வச்சி திட்டிடாங்க எங்க மிஸ்.. அழுதபடி வீட்டுக்கு போனவ இரண்டு நாள் ஸ்கூலுக்கே வரல. ஆனா அப்புறம் வந்தா. அந்த மிஸ்ஸோடு ரொம்ப குளோஸ். மூணு நாலு மாசம் போச்சி. திடீர்ன்னு ஒருநாள் அந்த மிஸ் எங்க ஸ்கூல்லை விட்டுட்டு வேற ஸ்கூலுக்கு பணிமாறுதல் பெற்று போறாங்கன்னு பேசிக்கிட்டாங்க. ஆனா அதுக்கு காரணம் இந்த கண்மணிதான்.." என்ற சிந்துவை குழப்பமாக பார்த்தான் இவன்.

"எப்படி.?"

"ஸ்கூல் சம்மந்தமான ஒரு பைலை அவங்க எங்கேயோ மிஸ் பண்ணிட்டாங்களாம். அதனாலதான் ஸ்கூல் நிர்வாகம் பொறுப்பில்லாத டீச்சர்ன்னு இங்களை திட்டி அவங்களோட வேற ஸ்கூல்லுக்கு மாத்தியிருக்காங்க. அந்த மிஸ் தொலைச்ச பைலை ஒரு வாரம் கழிச்சி பூட்டியிருந்த பழைய கிளாஸ் ரூம்ல இருந்து எடுத்தாங்க. அந்த பைலை அந்த டீச்சர்கிட்ட இருந்து எடுத்து அந்த பழைய கிளாஸ் ரூமுக்குள்ள தூக்கி போட்டது என் பிரெண்ட்தான்.."

சுவாதி சொன்னது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"நடந்ததை எங்ககிட்ட சொன்னவ 'நான் செய்யாத தப்புக்கு எனக்கு தண்டனை தந்தாங்க, அப்படின்னா அவங்க செய்யாத தப்புக்கு தண்டனை கிடைக்கணும்தானே.?'ன்னு கேட்டா.! அவ எல்லோர் பார்வைக்கும் கெட்டவ கிடையாது. அதே மாதிரி எல்லார் பார்வைக்கும் நல்லவளும் கிடையாது. அவ பல்லாயிரம் மனுசங்களில் ஒருத்தி. அவளோட குணம் எங்ககிட்டயிருந்து மாறுப்பட்டது. ஆனா கொடூரமானது இல்ல..

தப்பு உங்க மேலதான். பழகிய மனுசங்களை கட்டிக்கவே ஆயிரம் யோசிக்கற உலகம் இது. நீங்க என்ன நம்பிக்கையில் அவளை கல்யாணம் செஞ்சிங்க.? திருடிட்டு போற பரிசுப்பெட்டிகள் எல்லாத்திலும் பவளமும், முத்துகளும் மட்டும்தான் இருக்கும்ன்னு நம்புறதை நிறுத்துங்க. இங்கே எத்தனையோ பரிசுப்பெட்டிகள் வெடிக்குண்டா கூட இருக்கலாம். சுயநல உலகத்துல அவங்கவங்களை கவனிச்சிக்கறதே பெரிய விசயம். தன்னைதானே காப்பாத்திக்க எல்லோரும் நேராவே நின்னு போராடுவங்கன்னு நினைக்காதிங்க. சிலர் இப்படி கூட ஆப்பு வைப்பாங்க. தப்பு அவங்க மேலதான். ஆனா அந்த தப்பை செய்ய தூண்டுற நம்ம மேலயும் ரொம்ப பெரிய தப்பு இருக்கு.

என்ஜாய் பண்ணி வாழ வேண்டிய வாழ்க்கையை நீங்களேதான் கெடுத்துகிறிங்க.? எந்த வினையா இருந்தாலும் எதிர்வினை உண்டு.. நீங்க மறுபடியும் ஏதோ திட்டத்தோடுதான் வந்திருக்கிங்க போல.! ஆனா எனக்கு என் பிரெண்ட் மேல பாசம் இருக்கு. அவ மறுபடியும் காயப்படுறதை நான் விரும்பல. அதே போல நீங்களும் உங்க லைப்பை ஸ்பாயில் பண்ணிக்க வேணாமேன்னுதான் இதை உங்ககிட்ட சொன்னேன். இது உங்களுக்கான எச்சரிக்கை. அவளை விட்டு ஒதுங்கி இருங்க. நான் கிளம்பறேன்.! நீங்க எங்களை சந்திச்சதை நிச்சயம் நான் அவக்கிட்ட சொல்ல மாட்டேன்.." என்ற சிந்து காப்பிக்கான பணத்தை எடுத்து மேஜையின் மீது வைத்தாள்.

"அன்பின் பரிமாற்றம் எனக்கு தேவையில்ல.." என்றபடி வெளியே நடந்தாள்.

கார்த்திக் சிந்துவை வாடிய முகத்தோடு பார்த்தான்.

"அவ போனா போறா விடுங்க.." சுவாதி இப்படி சொல்லவும் திரும்பி அமர்ந்தான் கார்த்திக்.

"என்ன தகவல் வேணாலும் என்கிட்ட கேளுங்க.. நான் சொல்றேன். ஏனா உங்க சின்சியாரிட்டி என்னை இம்ப்ரஸ் பண்ணிடுச்சி.." என்றாள்.

கார்த்திக் மகிழ்ச்சி பொங்க அவளை பார்த்தான். "அவளை பத்தி சொல்லுங்க. எனக்கு அறிமுகமான அபிராமிக்கும் இந்த அபிராமிக்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கு.." என்றான்.

"ஆனா நீங்க மறுபடியும் அவ கோபத்தை தூண்டி விடக்கூடாது. உங்க செயலால அவளை கெட்டவளா மாத்த கூடாது. டீலா.?" என்றாள். கார்த்திக் சரியென்று தலையாட்டினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN