காதல் கடன்காரா 56

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிராமி கார்த்திக்கை விட்டு நகர்ந்து செல்ல முயன்றாள். அவளை கைப்பிடித்து நிறுத்தினான் கார்த்திக்.

"என்ன சொல்ல வர.. புரியல.." என்றான்.

"என்ன சொல்லணும்.? இந்த மைன்ட் இருக்கு பார்த்தியா.. இதுதான் பிரச்சனை.." என்று தன் நெற்றியை விரலால் குத்தி காட்டினாள்.

"ஐ ஹேட் யூ.. எந்த அளவுக்குன்னா என்னை நானே கொன்னா நீயும் செத்து போவியான்னு நினைக்கிற அளவுக்கு வெறுக்கறேன் உன்னை.. என் அம்மாவும் பாட்டியும் உனக்காக சப்போர்ட் பண்ணும்போது உன்னை குத்தி குத்தியே கொல்லணும் போல அவ்வளவு ஆத்திரம். நீ என்ன நினைக்கிற நீ ஒரு ஹீரோன்னா.. கிடையவே கிடையாது.. என் வாழ்க்கையோட பயங்கர வில்லன் நீ.. உன்னோட அவசர புத்தியால என்னையும் சேர்த்து அலைய வச்சிட்ட.. என்னையும் சாகாம சாகடிச்சிட்ட.." என்றவளை விசித்திரமாக பார்த்தான்.

மூன்று வருடங்களுக்கு முன்பு போல் இல்லை இந்த வெறுப்பு. இது ஏதோ வேறு ஒரு வெறுப்பு. அவள் கொண்ட இந்த வெறுப்பின் பரிமாற்றம் கண்டு பயந்தான் அவன்.

"நைட்டும் பகலும் நீ மட்டும்தான் என் மைன்ட்ல இருந்த. மனசை கல்லா மாத்திக்கிட்டு திரும்பி வருவேன்னு சொல்லிட்டு போனேன் இல்ல.. நான் பைத்தியக்காரியா திரும்பி வந்திருக்கேன். அபிசியலா பைத்தியம்ன்னு முத்திரை ஒன்னுதான் குத்தல.."

"அ..அபி.." அவனுக்கு ஏனோ பேச்சு தடுமாறியது.

"நான்.."

"நீ காரணம் இல்ல.. நான்தான். அப்கோர்ஸ் நான்தான்.." என்று நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

அதிகாலை நேரத்து நடைப்பயணம் வந்தவர்களில் சிலர் அபிராமியை வித்தியாசமாக பார்த்தபடி நடந்தனர்.

"அபிராமி.." அவளின் கையை பற்றினான்.

சட்டென்று அவனை தூர தள்ளினாள். "தொடாத.." என்றாள் எரிச்சலோடு.

கார்த்திக் நொந்து போன மனதோடு விலகி நின்றான்.

"இந்த உலகத்துல மிகப்பெரிய தப்பு என்ன தெரியுமா, ஒப்பீடுதான். இரண்டாவது பெரிய தப்பு எதிரியின் மீது காதல் வரது.. இங்கே யார் நல்ல அரசியல்வாதின்னு பார்த்து ஓட்டு போட்ட காலம் போயிடுச்சி. யார் குறைவான ஊழல் செய்வாங்கன்னு பார்த்து ஓட்டு போடுறோம். ஏனா நமக்கு வேற மாற்று இல்ல. அதே போலதான் இதுவும். இங்கே யார் நம்மை அதிகமா லவ் பண்றாங்கன்னு பார்த்துதான் லைப்பை ஒப்படைக்க வேண்டி இருக்கு. வாழ்க்கைக்கு லவ் முக்கியம்ன்னு உன்னை விட எனக்கு ரொம்ப நல்லா தெரியும். என் தாத்தா, அப்பா, அண்ணாவை விட அதிகமா லவ் பண்றவன் வேணும்ன்னு ஆசைப்பட்டேன். காதல் இல்லாம கூட இருந்திடலாம். ஆனா பத்தாத காதலை வச்சி நான் என்ன செய்வேன்.? லவ் ஓவர் டோஸ் வேணும் எனக்கு. உன்னை விட அதிகமதிகமா லவ் பண்ற ஒருத்தனை எங்கே போய் தேடி தொலையட்டும் நான்.?" கேட்டு விட்டு முகத்தை மூடிக் கொண்டாள் அபிராமி.

அவள் சொன்னது சரியாக புரியவே சில நொடிகள் பிடித்தது அவனுக்கு. புரிந்த பிறகு இது கனவா இல்லை இவள் உண்மையிலேயே பைத்தியமாகி விட்டாளா என்ற சந்தேகம் எழுந்தது.

அழுகிறாளோ என்ற கவலையில் அவளின் தோளை தொட்டான். சட்டென்று நகர்ந்துக் கொண்டாள் அபிராமி.

"நான் உன்னை அடியோடு வெறுக்கறேன் கார்த்திக்.. எதிரியை லவ் பண்றதை போல மோசமான ஒரு முட்டாள்தனம் கிடையவே கிடையாது. என் முதல் எதிரி நீ.! உன்னை எந்த ஒரு நொடியிலும் நான் விரும்பவே கூடாது. உன்னை நான் லவ் பண்றதுக்காகவே என்னை நானே வெறுக்கிறேன். ஏன் காதல் எப்படி இந்த காதல்.. எதுவும் புரியாது. அன்னைக்கு நீ உன் அண்ணன்கிட்ட சொன்ன, எங்கேயெல்லாமோ ஓடினேன். ஆனா எங்கே போய் நின்னாலும் வானமும் அவளே, பூமியும் அவளேன்னு! நீ சொல்லிட்ட.. என்னால வெளியே சொல்ல முடியல. இதான் வித்தியாசம். உன்னோடு காதல்ல விழுந்துட கூடாதுங்கற ஒரே ஒரு காரணத்துக்காக ஓடினேன். இந்த ஊரை விட்டு, இந்த மாநிலத்தை விட்டு, என் குடும்பம், பிரெண்ட்ஸ் எல்லாத்தையும் விட்டுட்டு ஓடினேன். எவ்வளவு வேகமா ஓடினேனோ அதை விட அதிக வேகத்துல வந்துடுச்சி உன் நினைவு. எவ்வளவு தூரம் ஓடினேனோ அதே அளவு மனசுக்குள்ள நெருங்கிடுச்சி காதல். மூணு வருசத்துல நீ எவளையாவது கல்யாணம் பண்ணி இருப்ப, நானும் நிம்மதியா இருக்கலாம்ன்னு திரும்பி வந்தேன். ஆனா என்னை சாகடிக்கறதுக்காகவே கல்யாணம் பண்ணிக்காம என்னை நினைச்சிட்டு இருக்க நீ.!" என்றாள் ஆத்திரத்தோடு.

அவனையும் அவளையும் பார்த்துக் கொண்டிருந்த நடைபயணிகள் ஆங்காங்கே நின்றனர். இவர்களை குறுகுறுவென பார்த்தனர். சிலர் போனை எடுத்து செல்பி எடுப்பது போல இவர்களை வீடியோ எடுக்க முயன்றனர்.

சுற்றிலும் இருந்தவர்களை பார்த்த கார்த்திக் அபிராமியின் கையை பிடித்தான்.

"என்னை விடு.." என்றாள் அவள்.

"அமைதியா கூட வா.." அடிக்குரலில் சொன்னவன் அங்கிருந்து அவளை இழுத்துக் கொண்டு நடந்தான்.

"எங்கே கூட்டிப் போற.?" என்றவள் தன் கையை விலக்கிக் கொள்ள போராடினாள்.

"பொது மக்கள் முன்னாடி படம் காட்ட உனக்கு அவ்வளவு ஆசையா.?" பற்களை கடித்தபடி கேட்டவன் தன் வீட்டிற்கு வந்தான். திறந்திருந்த கதவின் வழியே அவளை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.

"அதுக்குள்ள வாக்கிங் முடிஞ்சதா.?" வேட்டியும், தலையில் கட்டிய துண்டுமாக சமையலறை விட்டு வெளியே வந்த மேகமானன் அபிராமியை கண்டதும் துண்டை அவிழ்த்து உதறி தோளில் போட்டுக் கொண்டார்.

"அபிராமி.." என்றவரை என்ன ஏது என்று கூட கேட்க விடாமல் அவளை தன் அறைக்கு கூட்டிச் சென்றான் கார்த்திக்.

"மாப்பிள்ளை.." என்றவர் அவன் கதவை உள்பக்கம் தாழிட்ட சத்தம் கேட்டு நெற்றியை தேய்த்தபடி திரும்பிக் கொண்டார்.

"வம்பை கொண்டு வராம விட மாட்டான் போல.. அவங்க அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் தெரிஞ்சா ஆளுக்கொரு அருவாளை எடுத்துட்டு வருவாங்கடா.!" என்று தனக்கு மட்டும் கேட்கும்படி புலம்பினார்.

அபிராமி அந்த அறையின் நடுவே நின்றிருந்தாள்.

"உட்காரு.." என்று இருக்கையை கை காட்டினான்.

"நான் போகணும்.."

"இவ்வளவு தூரம் வந்த.. அஞ்சி நிமிசம் உட்கார்ந்து பேசிட்டு போறதால ஒன்னும் குறைய மாட்ட.. பேசி முடிக்கும் வரை இந்த பிரச்சனையும் தீராமலேயேதான் இருக்கும்.." என்றவன் இருக்கை ஒன்றில் அமர்ந்தான்.

"ஒரு வருசம் ஒன்னா வாழ்ந்திருக்கோம். நீ நடிச்சாலும் நான் உண்மையாதான் இருந்தேன். இப்பவும் அப்படிதான் இருக்கேன். தைரியமா வந்து உட்கார்ந்து பேசு.." என்றான்.

அபிராமி யோசனையோடு வந்து அமர்ந்தாள்.

"இப்ப சொல்லு.. நீ என்னை லவ் பண்றி.." அவன் முழுதாய் கேட்கும் முன்பே இவள் "ஆனா உன்னோடு வாழ எனக்கு இஷ்டம் இல்ல.." என்றாள்.

"கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. ப்ளிஸ்.." என்றவன் "நீ என்னை விரும்புறியா.?" எனக் கேட்டான்.

அபிராமி கண்களை மூடி ஆமென தலையசைத்தாள். கார்த்திக் கசந்து‌ சிரித்தான்.

"என்னை லவ் பண்றதுக்காக கோபமும், அவமானமும் படுறியா.?"

அபிராமி கண்களை திறந்து அவனை பார்த்தாள். கண்களில் அதிர்ச்சி அப்படியே தென்பட்டது.

"உன்னை மீறி நீ என்னை லவ் பண்ணிட்டன்னு தெரியுது. அதுக்காக ரொம்ப அசிங்கமா பீல் பண்றியா.?" மறுபடியும் கேட்டான்.

அபிராமி தரை பார்த்தாள்.

கார்த்திக்‌ நோகும் தன் மனதை கண்டுக் கொள்ள மறுத்தான்.

"அப்படிதான் பீல் பண்றன்னு தெரியுது.. உனக்கு என்னை தவிர வேற ஆப்சன் இல்லாம இல்ல.. ஆண்களில் பலரும் நல்லவங்கதான். நீ எந்த அளவுக்கு விரும்புறியோ அதை விட ஆயிரம் மடங்கு அதிகமா உன்னை விரும்புவோர் இருக்காங்க.." என்றான்.

அபிராமி பதில் சொல்லவில்லை.

"நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்காதது உனக்கு இப்படி ஒரு சங்கடத்தை தரும்ன்னு நான் எதிர்பார்க்கல. ஆனா என்னால என் மனசுக்கு துரோகம் செய்ய முடியாது. நீ இதுக்கு மேலயும் அவமானப்படுத்தினாலும் கூட உன்னை விலகி மட்டும்தான் இருப்பேனே தவிர உன்னை மறந்துட மாட்டேன்.. நான் இருக்கேன்ங்கறதை நீ மறந்துடு. உன் லைப்பை நல்லபடியா வாழு.." என்றான்.

அபிராமி தனக்கு முன்னால் இருந்த மேஜையில் கையை ஊன்றினாள். தலையை உள்ளங்கையில் தந்தாள்.

"உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது.? என்னால யாரையும் காதலிக்க முடியாது. காரணம் நீதான்.." என்றாள் அழுத்தமாக.

கார்த்திக் பொறுமையாக அவளை பார்த்தான். "என்ன செய்யணுங்கற.?" என்றான்.

"எதுவும் செய்யாத.. என் லைஃப்ல குறுக்க வராத.."

"ஆனா நான் வரலையே.." தயக்கமாக சொன்னான்.

"நான் சொல்றது உனக்கு புரியலையா கார்த்திக். என் மைன்டுக்குள்ள வராத. என் ஞாபகத்துலயோ என் கனவுலயோ வராத.. உன்னை நான் சந்திச்சிருக்கவே கூடாத ஒரு காலகட்டத்துக்கு என்னை கொண்டுப்போய் விடு.‌." என்றாள்.

"இல்ல அபிராமி.. நீ நல்லவனா யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ.. எல்லா பிரச்சனையுமே முடிவுக்கு வந்துடும். என்னை நம்பு.." என்றான்.

அவனை வெறித்தாள். இதை நான் நம்ப வேண்டுமா என்ற பார்வை அவளிடம் இருந்தது.

அவளின் கையை பற்றினான். அபிராமி இணைந்திருந்த கையை வெறித்தாள்.

"நடந்த எதையும் உன்னால மறக்க முடியலன்னு தெரியுது.. ஆனா நடந்ததை மாத்துற சக்தி எனக்கு இல்ல. என்னை மறக்கணும்ன்னு எவ்வளவோ டிரை பண்ணிட்ட.. இதையும் கடைசியா டிரை பண்ணு.. நிச்சயம் என்னை மறந்துடலாம்.." என்றான்.

அபிராமியின் தொண்டை குழி ஏறி இறங்கியது. தன் கையை தனியே எடுத்துக் கொண்டாள்.

எழுந்து நின்றாள்.

"அபிராமி.." அழைத்தான்.

அவன் முகம் பார்த்தாள்.

"பைத்தியக்கார மனசோட எனக்கு செட்டே ஆகாத உலகத்துல வாழ்ந்துட்டு இருக்கற மாதிரி இருக்கு கார்த்தி.. வீட்டுல என் பாட்டியும், அம்மாவும் என்னை அவ்வளவு வெறுக்கறாங்க. புருசன்ங்கறது கடவுளோட பதவி மாதிரி பார்க்கறாங்க.. ஒருவேளை அவங்க பிரஸர் இல்லாம இருந்திருந்தா உன்னோடு சேர்ந்து வாழ டிரை பண்ணாலும் பண்ணியிருப்பேனோ என்னவோ.? எந்த புத்துக்குள்ள எந்த பாம்பு இருக்கோன்னு சொற்றொடர் பயன்படுத்துவாங்க.. ஆனா என் மனசுக்குள்ள நீ ஏன் இருங்கேங்கறதுதான் ரொம்ப மோசமான கேள்வியா இப்போதைக்கு இருக்கு..

மூணு வருசம் தாண்டி வந்த பிறகும் எனக்கு கல்யாணம் ஆச்சோ, நான் யாரையாவது லவ் பண்றேனான்னோ நீ கேட்கல. ஆனாலும் லவ் மட்டும் பண்ணிக்கிட்டே இருக்க. இந்த உலகம் ரொம்ப சுயநலமாக இருக்கு கார்த்தி. ஆனா நானும் சுயநலமா இருப்பதுதான் தப்பு. இதுதான் பிரச்சனையே. நான் எவ்வளவு வெறுத்தாலும் உன்னை போல காதலிக்கறவன் இங்கே எங்க இருக்கான்.? என் அம்மா பாட்டியோடு ஒப்பிடும்போது உன் பேமிலி பரவால்லன்னு சொல்வேன். நான் உன்னோடு கொஞ்சினா உன் பேமிலியில் இருக்கும் எல்லோரும் என்னை கொஞ்சுவாங்க. எனக்கு உன் அம்மா மாதிரி ஒரு அம்மா இருந்திருக்கலாம்.

உன்னை மாதிரி ஒரு காதலனும் இருந்திருக்கலாம். பிடிக்கலன்னு சொன்ன காதலிக்கு இன்னொருத்தனை கட்டி வைக்கிறேன்னு சொல்லுற அளவுக்கு ஒரு காதலன் எங்கே கிடைப்பான்.?

இது இணையாத பாலம். தண்டவாளம் போல.. ஏன் சந்திச்சோம்.? ஏன் இதெல்லாம் கடந்து வந்தோம்.? உன்னை மறக்கவும் முடியல. உன்னை ஏத்துக்கவும் முடியல. சத்தியமா என் நிலமை யாருக்குமே வர கூடாது.. உனக்கும் கூட.!" என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN