😍💘உனக்காக வாழ நினைக்கிறேன், அத்தியாயம்-9💘😍

Priyamudan Vijay

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
9

சில மாதங்களுக்கு பிறகு..

மொரிஸியஸில் அதே மருத்துவமனையில் மனஅதிர்ச்சியிலிருந்து மீழாத ஒருவருக்கு, கவுன்சிலிங்க் கொடுத்துக்கொண்டிருந்த அர்ஜுனின் முகத்தில் சிறிதும் எவ்வித உணர்ச்சியும் இல்லை.. அவன் நினைவெல்லாம் ஷண்மதியின் இறந்த உடலிலேயே இருந்தது. அன்றைக்கு கவுன்சிலிங்க்-கு வந்தவர் மன அழுத்தம் நீங்கி..அவ்விடத்தை விட்டு சென்றார். ஆனால் அர்ஜூனின் கண்களில் தாரைத் தாரையாக கண்ணீர் சிந்தியது.
அப்பொழுது நர்ஸ்..
“சார்.. அடுத்த பேஸண்ட்...?” என்று கேட்க,
“உள்ள வர சொல்லுங்க.” என்றான் அர்ஜூன். உள்ளே வந்தவர்,
“மே ஐ கம் இன் சார்?” என்க..
“யெஸ்..” என்று கூறிவிட்டு நிமிர்ந்து பார்க்க.. ஷண்மதி சிரித்த முகத்துடன் நின்றுக்கொண்டிருந்தாள்.
“ம..ம..மதி.....!!!” என்று அவன் பெரிய கண்கள் விரிய கேட்டவன் ஓடிச்சென்று அவளைக் கட்டித்தழுவிக்கொண்டான். அவனை ஆறுதலாய் அணைத்துக்கொடுத்தவள், அவன் தலையை வருடினாள்..
“என்னய விட்டு எங்கப்போயிருந்த நீ..? ஹான்? நீ செத்துட்டனே நினச்சேன் தெரியுமா?” என்று விம்மினான்..
“நான் சாகல அர்ஜூன். ம்யங்கிய நிலையில தான் இருந்தேன். என்னைய அன்னைக்கு வந்த போலிஸ் ஆபிஸர் தான் ஆஸ்பித்திரில சேர்த்தார். நான் சரி ஆவேனானே, தெரியாத நிலையில உங்ககிட்ட மீண்டும் நம்பிக்க கொடுக்க வேண்டானு நினச்சிருக்கார். அதான் உங்க கிட்ட சொல்லல.. இப்போ நான் முழுசா குணமடஞ்சுட்டேன். உங்களுக்கே உங்களுக்குனு வந்துட்டேன்.. நீங்க அன்னைக்கு மாடியில இருந்து கத்தினது என் காதுல கேட்டும் அந்த சந்தோஷத்த வெளிக்காட்டமுடியாத வலியில இருந்தேன்.. இப்போ உங்களுக்கே உங்களுக்குனு வந்துட்டேன்..இனி நம்மல யாருனாலயும் பிரிக்கமுடியாது..” என்று கூற்விட்டு அர்ஜூனை இறுகக்கட்டிக்கொண்டாள்.


அவளுக்காக வாழ்ந்த அர்ஜூன், அவளைத் திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக வாழத்தொடங்கினான்...
***** முற்றும் *****
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN