மணாளனின் மனம் 16

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தயாளன் தன்னைத் தாண்டிச் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் புவனா. அவளின் தோளில் கை ஒன்று பதிந்தது.

"கிளம்பலாமா மாமா.?" என்று திரும்பிப் பார்த்துக் கேட்டாள். முத்தமிழ் தயாளனின் முதுகை வெறித்துக் கொண்டு நின்றிருந்தான்.

"போகலாம்.. ஆனா நீ ஏன் அவனை பார்த்துட்டு நின்னுட்டு இருக்க.?" என்றான் சந்தேகமாக.

"நானும் அவரும் ஒரே பாதையில் கிராஸ் பண்ணிக்கிட்டோம் மாமா.‌." என்றவள் முத்தமிழின் பைக் நின்றிருந்த இடம் நோக்கி நடந்தாள்.

"அவன் தனியா இருக்கும்போது அவன்கிட்ட பேச டிரை பண்ணாத.." என்றான். சரியென தலையசைத்தாள் புவனா.

இருவரும் அலுவலகம் நோக்கி கிளம்பினர்.

"பார்க்க கொஞ்சம் நல்லவர் போலதான் இருக்காரு.. தெரியாம கை பட்டத்துக்கு மன்னிச்சி இருக்கலாமோன்னு தோணுது.. ஆனா அந்த நேரத்துல அறையதானே தோணும்.?" அவனின் முதுகில் தலை சாய்த்தபடி கேட்டாள் புவனா.

முத்தமிழுக்கு கடுகடுவென்றே இருந்தது.

"எப்பவும் மூணாவது மனுசங்களை பத்தியே எதுக்கு நினைக்கற.?" என்றுக் கேட்டான்.

புவனாவிற்கு குழப்பமாக இருந்தது.

"உங்களை பத்தி மட்டுமே நினைக்கணும்ன்னு சொல்றிங்களா மாமா.?" குறும்போடு‌ கேட்டவளை சைட் மிரரில் பார்த்தவன் தன் முகத்தின் நெளிவு சுளிவு அவளுக்கு தெரியாது என்கிற எண்ணத்தில் ரகசியமாக புன்னகைத்தான்.

"ஹிஸ்ட்ரியை பத்தி நினைச்சி தொலை கழுதை.." என்றான் எரிச்சலாக.

புவனாவிற்கு‌ முகம் வாடி விட்டது.

"ஹிஸ்ட்ரி மேல ஆசைப்பட்டேன். ஆனாலும் கடைசி வரை பாஸ் பண்ணல நான்.. அதேபோல உங்களை லவ் பண்றேன். இதுலயாவது பாஸ் ஆவேனான்னு தெரியல மாமா.." சிறு குரலில் வருத்தமாக சொன்னாள்.

அலுவலத்தின் முன்னால் பைக்கை நிறுத்தினான் முத்தமிழ். புவனா கீழிறங்கினாள். அவளோடு சேர்ந்து இறங்கியவன் "ஹிஸ்ட்ரி உனக்கு பிடிக்குமா.?" என்றுக் கேட்டான் அதிர்ச்சியோடு.

'கேட்டுடுச்சா.?' என்று ஆச்சரியப்பட்டவள் அவனை பார்த்து ஆமென தலையசைத்தாள்.

"ரொம்ப பிடிக்கும்.. எல்லாமே ஒரு ஸ்டோரி. எல்லாருடைய கதைகளுமே வலிகளும் புது மாற்றங்களும் நிறைஞ்சது. மொழி, இனம், நாடு, மனிதம்ன்னு ஒவ்வொன்னும் எப்படி உருமாற்றம் அடைஞ்சதுன்னு தெரிஞ்சிக்கும் போதெல்லாம் ஒரு மாதிரி பீல் ஆகும். ஹிஸ்ட்ரி படிக்கும்போது நானே அங்கே வாழுற மாதிரி இருக்கும் மாமா.." என்றாள்.

ஆச்சரியம் குறையாமல் அவளைப் பார்த்தான் அவன்.

"அப்புறம் ஏன்டி இன்னும் அரியர்ஸோடு சுத்திட்டு இருக்கற.?" அதிர்ச்சி குறையாமல் கேட்டான்.

அவனின் நெஞ்சில் குத்தினாள் புவனா. "எல்லாம் உங்களால வந்ததுதான்.. என்னைக்கு உங்களை பார்த்தேனோ அன்னைக்கே என் மொத்த மூளையிலும் கரையான் புகுந்துடுச்சி. நான் என் காலேஜ் புக்ஸை தொட்டு அஞ்சரை வருசம் ஆச்சி மாமா.." என்று விரல்களை உயர்த்திக் காட்டியவளை விழிகள் விரித்துப் பார்த்தான்.

"ஏன்டி.?" இதை தவிர என்ன கேட்பது என்று அவனுக்கே தெரியவில்லை.

"எத்தனை முறை சொல்றது.? உங்க தங்கச்சி மாதிரி எனக்கு அறிவு இல்லையே. காதல்ல விழ தெரிஞ்ச எனக்கு எப்படி எழணும்ன்னு தெரியாம போயிடுச்சி. என் அண்ணனோடு இருந்த ரோசம் உங்க தங்கச்சியை கலெக்டரா மாத்துச்சி.. ஆனா உங்களோடு எனக்கு இருந்த ஒன்சைட் லவ் என்னை முழுசா புதை குழிக்குள்ள மூழ்க வச்சிடுச்சி. என்னால மீளவே முடியல.." என்றவள் அவனை நெருங்கி நின்றாள்.

தன்னை பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களை கோபத்தோடு பார்த்தாள்.

"எல்லாரும் ஒரே மாதிரி கிடையாது மாமா.. உங்க தங்கச்சி போல எனக்கு விவேகம் கிடையாது. வேகம் கிடையாது. காதலை மனசுல புதைச்சிக்கிட்டு காதலன் முன்னால பெரிய ஆளா மாறி காட்ட தெரியாது‌. நீங்க என்னைப் பார்த்துச் சிரிச்சா மட்டும்தான் என்னால அன்னைக்கு நாளை ஹேப்பியா வாழ முடியும். இப்படி நிலவை போல வெளிச்சத்தை பிரதிபலிக்கற வாழ்க்கைக்காக நான் ஒன்னும் கேவலமா பீல் பண்ணல.. எனக்கு என்ன வரும், என்னால என்ன முடியும்னாவது புரிஞ்சி வச்சிருக்கேன். அதுவே போதும். நான் பர்ஸ்ட் டைம் லவ்வை சொன்னபோதே நீங்க எனக்கு ஓகே சொல்லி இருந்திங்கன்னா இன்னேரம் நானும் பி.ஜி முடிச்சிருப்பேன். என்னை உங்களுக்கு பிடிக்கலங்கறது நான் வாங்கிட்டு வந்த சாபம் மாமா.. இப்பவும் கூட நீங்க எனக்கு வாழ்க்கையை பிச்சையாதான் போட்டிருக்கிங்களே தவிர பரஸ்பர காதல் இல்லன்னு தெரியும்.. அதுக்காகவெல்லாம் நான் பீல் பண்ணிட்டு இருக்க மாட்டேன். நீங்க என்னை லவ் பண்றிங்களாங்கறதை விட நான் உங்களை எவ்வளவு லவ் பண்றேங்கறதுதான் எனக்கு முக்கியம்.." என்றவள் அவன் சிலையாய் நின்றுத் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திரும்பி உள்ளே நடந்தாள்.

முத்தமிழ் தலையை கோதி விட்டுக் கொண்டான். அலுவலகத்தின் படிகளிலேயே அமர்ந்துக் கொண்டான். புவனாவை நிறுத்தி எவ்வளவோ சொல்ல வேண்டும் என்று சொல்லியது மனது. ஆனால் சொல்ல வேண்டாம் என்றும் அதே மனது கட்டளையிட்டது. இரு வேறு யோசனைகளுக்கு இடையே தடுமாறி நின்றான்.

புவனாவிற்கு அழுகை அழுகையாக வந்தது. அவளும் இந்த ஐந்தரை வருடங்களில் எவ்வளவோ முயன்று இருக்கிறாள். ஆனால் மனதுக்குள் இருந்த காதல் விஷம் போல பரவி அவளை செயல்படாமல் செய்து விட்டது. முத்தமிழுக்கு தன் தங்கையை போன்ற ஒரு பெண்ணைதான் பிடிக்கும் என்று அவளுக்கும் தெரியும். ஆனால் அவள் புத்தகங்களை உள்ளதை அறிந்துக் கொள்வதை விட முக்கியமாக இருந்தது அவனின் புன்னகைத்தான். அவன் தன்னைப் பார்த்து ஒரு சிறு புன்னகை புரிந்திருந்தால் அதுவே தன் இதயத்திற்கான உரமாக மாறி இருக்கும் என்பது அவளின் எண்ணம். தன்னை அவன் திரும்பி பார்க்க மாட்டானா என்ற ஏக்கத்திலேயே தன்னை சுற்றியிருந்த மற்றவர்களையும் மறந்து விட்டாள்.

அதீத காதல் அனைத்து இடங்களிலும் பாராட்டப்படுவதில்லை. ஒருதலைக் காதலாக இருக்குகையில் எவ்வளவு காதலித்தாலும் அது சுவரோடு பாடப்பட்ட மென்னிசை ராகம்தான் என்று அவளுக்கே தெரியும்.

ஒருதலைக் காதலில் மட்டும்தான் காதலித்தவர்களுக்கு முட்டாள் பட்டம் வரமாக கிடைக்கிறது என்று எண்ணியவளுக்கு கண்ணீர் கன்னங்களில் கோடிட்டது. இன்னொருவர் ஏற்றுக் கொள்ளும்வரை அனைவரின் காதலுமே ஒருதலைக் காதல்தானே என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.

முத்தமிழ் படிகளில் இருந்து எழுந்து நின்றான். அவன் உள்ளே நடக்க இருந்த நேரத்தில் தயாளனின் கார் வந்து வாசலின் ஒரு ஓரத்தில் நின்றது. முத்தமிழை கண்டவன் கண்டும் காணாதது போல அவனை தாண்டி நடந்தான்.

"தயா.." முத்தமிழின் அழைப்பில் நின்றவன் திரும்பிப் பார்த்தான்.

"என்ன தமிழ்.? இந்த ஆபிஸ்ல நான் இருப்பது உங்களுக்கு பிடிக்கல. அவ்வளவுதான.? இந்த ப்ரோஜக்ட் முடிஞ்சதும் நானே விலகிக்கிறேன்.. அதுவரைக்கும் உங்க யார் முன்னாடியும் நான் வர மாட்டேன்.." என்றவன் அலுவலகத்திற்குள் நுழைந்தான்.

"ஹேய் தயா.." அவனை துரத்தி நடந்தான் முத்தமிழ்.

மணி ஐந்தை தாண்டியது கண்டு வீட்டிற்கு புறப்படலாம் என்று கிளம்பிய சத்யாவும், மதுமிதாவும் இவர்கள் இருவரையும் கண்டு நின்றார்கள்.

"என்ன தமிழ்.?" புருவங்களை உயர்த்தியபடி அவனை திரும்பிப் பார்த்தான் தயாளன்.

"உன்கிட்ட கோபப்பட எனக்கு உரிமை இல்லன்னு சொல்றியா நீ.?" முத்தமிழும் நண்பனின் அதே கோபத்தோடு கேட்டான்.

"என்ன ஆச்சி.?" எனக் கேட்டபடி அருகே வந்தான் சத்யா.

"இவன் நம்ம குரூப்பை விட்டு விலக போறேன்னு சொல்றான்.." முத்தமிழ் சொன்னது கேட்டு சத்யாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மதுமிதாவிற்கும் கூட சிறிது கோபம் வந்தது.

"தயா.. ஒரு சின்ன பிரச்சனை.. அதுவும் உன் மேல தப்பு.." என்று ஆரம்பித்த சத்யாவை வெறித்தான் தயாளன்.

"நான் பிரிய காரணம் என் மேல உள்ள தப்பு கிடையாது. நீங்க என் மேல வச்ச உச்சபட்ச நம்பிக்கைதான்.." என்று அவன் கத்தியதும் சத்யாவும் முத்தமிழும் நெற்றியில் அடித்துக் கொண்டார்கள்.

"நீ ஒன்னும் யோக்கியம் கிடையாது தயா.." மதுமிதா சொல்லி முடிக்கும் முன் அவளின் கழுத்தை நெரிக்க நீண்டு விட்டது தயாளனின் கரம். பற்களை கடித்தபடி கையை கீழிறக்கினான்.

"நான் யோக்கியம் கிடையாதுதான்.. அதுக்காக நான் பொம்பளை பொறுக்கியும் கிடையாது. இதுவரைக்கும் நாற்பது பேரோடாவாவது படுத்திருப்பேன்தான்.. ஆனா தங்கச்சி மாதிரி ஒரு பொண்ணை.. அதை விட முக்கியமா என் பிரெண்டோட வொய்ப்கிட்ட தப்பா நடந்துக்க டிரை பண்ணுவேன்னு நீங்க எப்படி நினைக்கலாம்.. இதுவரைக்கும் நான் செக்ஸ் வச்சிக்கிட்ட அத்தனை பெண்களும் அவங்களாக வந்தவங்கதான். பணத்துக்காக சுகத்துக்காக மட்டுமே வந்தவங்க.. அவங்களை தவிர நான் வேற ஒருத்தியை கூட மிஸ்யூஸ் பண்ணது கிடையாது. பார்க்கற பெண்களோடு எல்லாம் படுத்து எழ நான் ஒன்னும் பொறுக்கி கிடையாது. நான் தப்பானவனா இருந்தாலுமே எனக்குன்னு தனி ரெஸ்பான்ஸ்பிளிட்டி.." அவன் முடிக்கும் முன் அவனின் கன்னத்தில் வேகமாக ஒரு அறையை விட்டாள் மதுமிதா.

"கேட்கற எனக்கே காது இரண்டும் கூசுது தயா.. உன் யோக்கிய லட்சணத்துக்கு நீ உன்னை நல்லவனா காட்ட டிரை பண்ணாத.." என்றாள் ஆத்திரத்தோடு.

இந்த முறை அவளின் கழுத்தை பற்றி விட்டான் தயா.

"டேய் அவளை விடுடா.." என்று நண்பர்கள் இருவரும் அவனை விலக்க முயற்சித்தார்கள். ஆனால் அவனின் இரும்பு பிடி விலகவேயில்லை. மதுமிதா சிலையாக நின்றிருந்தாள். அவனை முறைப்பதை நிறுத்தவேயில்லை.

"இத்தனை வருசமா நீயும்தான் என்னோடு இருக்க.. நீ என்னை வேணாம்ன்னு சொல்லி விலகிப் போன பிறகு உன் சுண்டு விரலை கூட நான் டச் பண்ணது கிடையாது.! நான் நினைச்சிருந்தா உன்னை ரேப் கூட பண்ணி இருக்கலாம். ஆனா அப்படி பண்ணாம ப்ராஸ்டியூட்கிட்ட போய்ட்டு வரேன் பார்த்தியா.. அதுலயே என் யோக்கியம் இருக்கு.." என்றவனின் மணிக்கட்டை பற்றினாள் மதுமிதா. அவனின் கையை விலக்கி தள்ளினாள். தயாளன் சொன்னதை கேட்ட பிறகு நண்பர்கள் இருவரும் கையை விலக்கிக் கொண்டு விட்டிருந்தார்கள். தயாளனும் மதுமிதாவும் விரும்பியிருப்பார்களா என்று குழம்பினார்கள்.

தயாளனின் கன்னத்தில் மீண்டும் அறைந்தாள் மதுமிதா.

"எங்கேயாவது கண் காணாத இடத்துக்கு போய் செத்துடு தயா.. எப்பவும் என் கண் முன்னாடி வரவே வராத.." என்றவள் அவனை விலக்கி தள்ளிவிட்டு வெளியே நடந்தாள்.

தயா அவளை திரும்பிப் பார்த்து முறைத்தான்.

"அதுக்கு முன்னாடி நீ போய் செத்துடு. நான் ஹேப்பியா இருப்பேன்.." என்றான்.

வாசலை தொட இருந்த மதுமிதா திரும்பிப் பார்த்தாள். தன் வலதுக் காலில் இருந்த காலணியை கழட்டினாள். அவள் செய்வதை கண்டுவிட்டு தயாளனும் தனது ஷுவை கழட்டினான். அவளின் காலணி இவன் மீது விழுந்த அதே நேரத்தில் இவனின் ஷூ அவளின் மீது விழுந்திருந்தது.

"போடா பொறுக்கி.." என்று எரிந்து விழுந்தபடி ஒற்றை கால் செருப்பையும் கழட்டி விட்டுவிட்டு அங்கிருந்து சென்றாள் மதுமிதா‌.

"ச்சை.. கருமம்.. இவளை எல்லாம் ஏன்தான் பெத்தாங்களோ.?" தலையில் அடித்துக் கொண்ட தயாளனும் அங்கிருந்து கிளம்பினான்.

"மதுமிதா அக்காவும் தயா அண்ணாவும் லவ் பண்றாங்களா.?" புவனாவின் குரல் கேட்டு சிந்தை தெளிந்த நண்பர்கள் இருவரும் அவள் புறம் திரும்பி பார்த்தார்கள்.

புவனாவின் முகத்தில் காய்ந்த கண்ணீர் கோடுகளின் தடம் அப்படியே‌ தெரிந்தது. அவளின் கேள்வியை நெஞ்சில் அசை போட்டான் முத்தமிழ். காதலித்து இருப்பார்கள் என்றுதான் தோன்றியது. ஆனால் மதுமிதாவின் குணத்திற்கு அவனை அவ்வளவு சீக்கிரத்தில் விரும்ப மாட்டாளே என்ற குழப்பமும் வந்தது.

"இத்தனை வருசமும் கூடவே இருந்தாங்க இரண்டு பேரும். ப்ளேபாய்ன்னு அவனை திட்டிட்டே இருப்பவ அவனோட குணம் பிடிக்காம திட்டினான்னு நினைச்சேன். இப்ப பார்த்தா அவனையே பிடிக்காமதான் திட்டியிருப்பான்னு தோணுது.." என்ற சத்யா "என்ன கருமமோ.!? இவ ஏத்துக்கலன்னுதான் அவன் இப்படி ஒருத்தனா மாறி இருப்பான்னு நினைக்கிறேன். நீ ஏத்துக்கலன்னு புவி சிஸ்டர் விஷம் குடிச்சாங்க.. ஒருதலைக் காதல்ங்கற பேர்ல அரை மெண்டலா சுத்துறவங்க எல்லாம் என் கண்ணுக்கு மட்டும்தான் தெரியறாங்க போல.." என்றான்.

புவனா அவனை முறைத்ததை கூட கவனிக்காமல் அலுவலகத்தின் வாயிலை நோக்கி நடந்தான்.

"டைம் ஆச்சி.. வா வீட்டுக்கு போகலாம்.." என்றான் முத்தமிழ். புவனா மொத்தமாக தலையசைத்து விட்டு அவனை பின்தொடர்ந்தாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN