நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றாலை சுழற்சியில் உன் சுவாசமே...01

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் 01


இரவு இரண்டு மணியாக இருக்க அந்த ஊரே அமைதியாக இருந்த நேரத்தில் ஒரு பெண்ணின் கேவல் சத்தம் மட்டும் அந்த ஊரை துளைத்து கொண்டு இருந்தது...அவளது கேவல் சத்தம் யாருக்கும் கேட்காமல் போக அவளது வீட்டின் ஒரு அறையில் வெளிச்சம் கூட வர விடாமல் செய்து அந்த அறையில் ஒரு ஓரத்தில் முடங்கி கிடந்தாள்...நிமிடங்கள் மட்டுமே கடந்து கொண்டு இருக்க அவளது அழுகை நின்றபாடில்லை..அவளது மனம் முழுவதும் பயமே நிறைந்து இருந்தது...அவளது உடல்களில் பல சிராய்ப்பு காயங்கள் அடித்ததற்கான அறிகுறிகள் இருந்தது. சில சிராய்ப்புகளில் இருந்து இரத்தம் கூட வர தொடங்கியிருந்தது..அவளது நிலையை கண்டு வானம் கூட கதறி அழத் தொடங்கியது மழையின் மூலமாக‌..அந்த நேரத்தில் கூர்க்கா அந்த தெருவில் விசில் அடித்த படியும் டார்ச் லைட் காட்டியபடியும் நடக்க ..,,அந்த வெளிச்சம் அவளது அறையில் வந்து ஒரு நொடிக்கும் மிகாமல் இருந்து விட்டு செல்ல அந்த வெளிச்சத்தை கண்ட அவள் மேலும் பயந்து போய் தன் இரு கால்களையும் அவளது கரங்களை வைத்து பிடித்துக்கொண்டு கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.அவளது அந்த பயம் அவளை நடுக்கத்தில் கொண்டு வர செய்ய அவளது அழுகை மேலும் அதிகரித்தது.அவளால் இன்று நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.தனது பிறப்பே இவர்களுக்கு ஒரு கேலி பொருளாக இருக்கும் என அந்த பதினைந்து வயதுடைய சிறுமிக்கு தெரியவில்லை.எதனால் தனக்கு இப்படி ஒரு நிலமை..??? தான் இப்படி பிறந்ததற்கு நான் பொறுப்பாக முடியாதே .அப்படி இருக்கையில் என்னை ஏன் இவர்கள் அனைவரும் குற்றம் கூறுகிறார்கள்.என் உடலில் ஏற்பட்ட மரபணு மாற்றத்தை ஏன் இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.முடிந்தவரை அழுதவள் அவளது தந்தை கடைசியாக கூறிய வார்த்தை அவளது செவியினுள் கேட்டுக்கொண்டே இருந்தது..அன்று காலை...தன் அம்மாவிடம் சென்றவன் " அம்மா எனக்கு ஏதோ ஒரு மாதிரியா இருக்கு மா .ஏனோ தெரியல சங்கோஜமா இருக்கு . இதெல்லாம் எதனாலன்னு எனக்கு புரியல " என்று தன் அன்னையான விமலாவிடம் புலம்ப"எதையாவது நினைச்சிட்டு இருக்காத ராசா .சீக்கிரம் போய் கிளம்பு ஸ்கூலுக்கு லேட் ஆகுது பார் " என்று சொல்லி அவனை அனுப்பி வைக்க அவனும் வேறு வழியில்லாமல் அறைக்கு சென்றான்.அறைக்கு வந்தவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.குளித்து முடித்து வெளியே வந்தவன் கப்போர்டில் இருந்து அவனது பள்ளி சீருடையை அணிந்துக் கொண்டான் விசிலடித்தபடியே..அதன்பின் அவன் அவனது வேலைகளை சரியாக செய்து முடித்துவிட்டு அறையை விட்டு வெளியேறி கீழே வந்தான்..வந்தவன் சாப்பிட்டு முடித்து விட்டு அவனது தங்கை விதுஷாவை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றான்.விதுஷா இவனை விட ஒரு வயதே சிரியவள். விதுஷாவும் அவனும் ஒரே வயிற்றில் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் போல் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள்..அவனுக்கு ஒன்று என்றால் விதுஷா துடிப்பதும் விதுஷாவிற்கு ஒன்று என்றால் அவன் துடிப்பதும் என இவர்களின் அண்ணன் தங்கை வாழ்வு ஒருவருக்காக ஒருவர் என சென்றது...பள்ளிக்கு சென்றவர்கள் விதுஷாவை வகுப்பில் விட்டுவிட்டு அவனது வகுப்பிற்கு சென்று அமர்ந்துக் கொண்டான்..வகுப்பிற்கு வந்தவன் யாரும் இல்லாத காரணத்தினால் டெஸ்கில் தலை வைத்து படுத்திருக்க அவனை அவனது நண்பர்கள் வந்து தட்டி எழுப்பி விட்டனர்..அவனது நண்பன் ஒருவன் அவன் தோளில் கைப் போட்டு அவன் பக்கத்தில் அமர அவனுக்கு ஏதோ ஒரு மாதிரியாக இருக்கவே நெளிந்தான்.அதனை கண்ட அவன் தோழன் " ஏன்டா இப்படி ஏதோ ஒரு பொண்ணு மேல கைப் போட்ட மாதிரி இப்போது நெளியுற " என்று அவனை கிண்டலடிக்க..."தெரியல டா ஆனா ப்ளிஸ் எதுவா இருந்தாலும் மேல கைப் போடாமா பேசு எனக்கு எதோ ஒரு மாதிரி கூச்சமா இருக்கு " என்றான் .அதனை கேட்ட அவனது நண்பர்கள் நகைக்க அதில் ஒருவன் " ஏன்டா இப்படி பொண்ணு மாதிரி பேசிட்டு இருக்க " என்று சொல்லி சிரிக்க...ஏனோ அந்த இடத்தில் அவனுக்கு கஷ்டமாக இருந்தது.சில நாட்களாகவே அவன் இப்படி தான் இருக்கிறான். பசங்களில் பக்கத்தில் இருக்கவே கஷ்ட பட்டான் அவன். அதில் அவன் தந்தை ராமராஜன் டிவி பார்க்கும் போது கைகளை தோளில் போடுவதே எதோ நெருப்பில் நிற்க்கின்றமாறு உணர்ந்தான்.தன் தங்கை வீட்டிற்கு வந்தவுடன் போடும் கவுனை போட்டு பார்க்க வேண்டும் போல் ஆசை அவனுள் எழும்பியது..இதை விட தன் அன்னை உபயோகிக்கும் மஞ்சல் குங்குமம் முகத்திற்கு போட அழகு சாதனை பொருட்கள் என அனைத்தையும் உபயோகிக்கும் ஆசை அவனுள் எழவே செய்தது..அவன் மனதை கடிவாளம் போட்டு வெகு சிரம பட்டு கட்டி வைத்தான்...அவன் மனது இதை பற்றி எல்லாம் சிந்தித்து கொண்டு இருக்க வகுப்பிற்குள் கணக்கு ஆசிரியர் உள்ளே நுழையவும் அவனது சிந்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு வகுப்பை கவனிக்க தொடங்கினான்...சிறிது நேரம் வகுப்பு எடுத்த அவர் ,ஒரு சம்மை கொடுத்து போட சொல்ல மாணவர்களும் அதை போட முயற்சித்தனர்.சிறிது நிமிடங்களுக்கு பிறகு ராசாவை (இப்போதைக்கு அப்படி கூப்பிட்டுக்கலாம் பா ) அழைத்து "நான் கொடுத்த சம்ம போட்ல வந்து போடு " என்க...ராசாவும் அவர் கூறியது போல் எழுந்து சென்று அந்த சம்மை போட தொடங்கினான்...ஆசிரியர் கூப்பிட்ட அடுத்த நொடியே தனது பள்ளி பையை பத்திர படுத்தி அடியில் வைத்தவன் எழுந்து சென்று கணக்கை போடத் தொடங்கினான்.இவனின் செய்கையை கண்ட இவனது நண்பர்கள் அவன் சென்ற நேரத்தில் அதை எடுத்து ஒவ்வொரு zipபாக திறந்து பார்த்துக் கொண்டே வர ,கடைசி zipயை திறந்து பார்த்தவன் அதிர்ச்சி அடைந்தான்.அதை இன்னும் சிலரிடம் காட்டி கிசுகிசுக்க , சத்தம் அதிகமாக வரவும் ஆசிரியர் "எதுக்கு இப்படி சத்தம் போட்டுட்டு இருக்கீங்க .,பாருங்க பொம்பளை பிள்ளைங்க எவ்வளவோ அமைதியா கணக்கு போட்றாங்கன்னு. நீங்களும் தான் இருக்கீங்களே ஒரு சம்மு கூட ஒழுங்கா போடுறதில இதுல பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை " என்று திட்ட அதில் ஒரு மாணவன் வெகுண்டு எழுந்து " சார் இந்த ராசாவோட பேக்ல பாருங்க எல்லாம் கேர்ள்ஸ் ஐட்டம்ஸா இருக்கு " என்று எழுந்து நின்று சொல்லசம்ம போட்டு கொண்டு இருந்த ராசா பாதியிலே விட்டுவிட்டு அந்த மாணவனை நோக்கி வேக நடையிட்டு வந்தவன் அவனின் பேக்கை அவர்களிடமிருந்து பிரித்து பத்திர படுத்திக் கொண்டான்.அவனின் செய்கையில் ஆசிரியருக்கு ஏதோ வித்தியாசம் தோன்ற, அவனை கண்டு சிரித்து கொண்டிருந்த மாணவர்களை அடக்கினார்.அதன் பின் ராசாவை அமர சொல்ல அவனும் சென்று அமர்ந்து கொண்டான். எதுவும் பேசவும் இல்லை பேச விடவும் இல்லை. அமைதியாக அந்த வகுப்பு முடியும் அமர்ந்து வகுப்பை கவனித்தான். ஆனால் மற்ற மாணவ மாணவிகள் எல்லாம் அவனை பற்றி மட்டுமே பேசிக் கொண்டு இருந்தனர்.வகுப்பு முடியவும் ஆசிரியர் சென்று விட , மாணவர்கள் அனைவரும் அவனை சூழ்ந்து கொண்டு நின்றனர்."டேய் !! ஏன் டா இப்படி மஞ்சள் குங்குமம் பொட்டு சீப்புன்னு எல்லாம் கேர்ள்ஸ் ஐட்டம்ஸா வச்சி இருக்க " என்று கேள்வி கேட்டு அவனை பார்க்க ,அவனோ அமைதியாக அமர்ந்திருந்தான்."ஏன் டா இப்படி எதுவும் பேசாமா அமைதியா இருக்க ..?? உன் தங்கச்சிக்காக வாங்கி வச்சிருக்கியா என்ன " என்று மற்றொருவன் கேட்டு நகைக்க"இல்லை " என்று தலையை ஆட்டி மட்டும் வைத்தான்.அதன் பின் ஒருவருக்கொருவர் ஏதேதோ பேசிக் கொண்டு அந்த இடத்தை விட்டு சென்று விட்டனர்.இப்படியே நாட்கள் நகர , ராசா அமைதியாகவே பள்ளியில் வளம் வந்தான்.அன்று ஏதோ வகுப்பு நடந்து கொண்டு இருக்க ,அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவன் எதர்ச்சையாக கையை பார்க்க அது மஞ்சள் நிறத்தில் இருப்பதை கண்டான்‌."டேய் ! என்ன டா கை எல்லாம் மஞ்சளாக இருக்கு " என்று கேட்க"அதெல்லாம் ஒன்னும் இல்ல " என்றவன் " நீ கொஞ்சம் தள்ளி உக்காரியா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு " என்று விட்டு பெண்கள் அமரும் இருக்கையை அவனை அறியாமலே ஆசையாக நோக்கினான்.சிறிது நேரத்திலே " ஷேல் ஐ கோ ஃபார் ரெஸ்ட் ரூம் சார் " என்று ராசா அந்த ஆசிரியரிடம் கேட்க"சரி சீக்கிரமா பொய்ட்டு வா " என்று அனுப்பி விட அவனும் வேகமாக ரெஸ்ட் ரூம் வரை வந்தவன் அப்போது கேர்ள்ஸ் ரெஸ்ட் ரூம்மை விட்டு வெளியே வந்த குழந்தையை கண்டவன் அங்கே சென்று செல்ல வேண்டும் என்று மனது அடித்துக் கொள்ள ,வேகமாக அதிற்குள் நுழைந்து கொண்டான். அதனை கண்ட அவனது கணக்கு ஆசிரியர் அவருக்கு தெரிந்த மருத்துவருக்கு அழைத்து பேசினார்." டாக்டர்.! எனக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் கொஞ்ச நாளாவே வித்தியாசமா பிஹேப் பண்றான் அதுக்கு என்ன ரீசன்னா இருக்கும் " என்று தனது கேள்வியை கேட்க"முதல நீங்க அந்த பையனோட வித்தியாசத்தை கொஞ்சம் சொல்லுங்க " என்று அந்த மருத்துவர் கேட்ககணக்கு ஆசிரியரும் ராசாவின் நடவடிக்கைகளை கூறினார். அதனை கேட்டுக்கொண்ட மருத்துவருக்கு புரிந்தது இது எதனால் என்று.."சொல்லுங்க டாக்டர் ஏன் அவன் இப்படி பிஹேவ் பண்றான் " என்று கேட்க"சொல்றேன் . அவன் இப்போ திருநங்கையா மாறிட்டு இருக்கான் சார் " என்றார் அந்த மருத்துவர்.இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் " எப்படி சொல்றீங்க டாக்டர் " என்று அவர் கூறியதை நம்ப முடியாமல் கேட்டார்." திருநங்கைகள்னா ஆணுக்குரிய அனைத்து உடல் அமைப்புகளையும் கொண்டு, ஆணாகத்தான் பிறப்பாங்க. ஆனா அவங்க பிறப்பில் ஆண் உடலுடனும் மனதால் பெண்ணின் , செயல், குணாதிசயம் போன்றவை அவர்களிடம் இருக்கும். குழந்தைகள் அவங்களோட பருவ வயது வரும்வரை அவுங்க பெணாகவோ ஆணாகவோ தான் வளருவாங்க. பருவ வயது வந்த பிறகு பெண் குழந்தை இருப்பதை போல் தாமும் இருக்க வேண்டும் என்ற ஆவல் வரும். அதே போலவும் செய்யவும் செய்வாங்க உதாரணத்துக்கு சொல்லனும்னா அவுங்க விளையாட்ற மாதிரி விளையாட செய்வாங்க . கேர்ள்ஸ் யூஸ் பண்ற திங்ஸ் எல்லாம் யூஸ் பண்ண செய்வாங்க. ஆனாலும் அவுங்களுக்கு நாம பையன் தான் உறுதியா இருப்பாங்க. எப்போ அவுங்க இந்த மாதிரி ஆண்ல இருந்து பெண்ணா சேஞ்சஸ் ஆகுறாங்களோ அப்பவே அவுங்களோட பாடி லேங்வேஜ் ,பேசுறது நடக்குறதுன்னு எல்லாம் பெண் தன்மைக்குறியது அதிகரிக்கும் . பதினாலு வயதுன்னு வரும்போது ஆண், பெண் இருவருமே பருவமாற்றம் அடைவாங்க. பெண் வயதுக்கு வருவதும், ஆணுக்கு விந்து உற்பத்தி தொடங்குவதும் அப்போ தான் நிகழும்.ஒரு சிறுவன் திருநங்கையாக இருக்கும் பட்சத்தில் பருவ மாற்றத்தின் போது அவனுக்குள்ளும் சராசரியான ஆணுக்குரிய ஹார்மோன் சுரக்கத் தொடங்கிவிடும். உயிரணு உற்பத்தியும் தொடங்கும். அதே நேரத்தில், அதைவிட வேகமாக பெண்தன்மைக்கான குணாதிசயமும், செயல்பாடும் அவனுக்கும் வளரும்."இப்படி தான் ஆண் குழந்தைகள் திருநங்கையா மாறுறாங்க சார். அவுங்களுக்குள்ள இருக்கிற பெண் தன்மைகள் எல்லாம் பெண்கள் செய்வதை கண்டு அவுங்கள ஈர்க்க செய்து அப்படியே செய்ய வைக்கும் சார் . இப்படி இருக்கிறவுங்களுக்கு அவுங்களோட பெற்றோர்கள் துணை இருந்தாலே போதும் அவுங்க இந்த சொசைட்டிய ஃபேஸ் பண்ணிப்பாங்க சார் " என்றார் அந்த மருத்துவர்.அனைத்தையும் கேட்ட கணக்கு ஆசிரியர் தன் மாணவனுக்கு நல்லது செய்யனும் என்றெண்ணி முதல்வரை கண்டு அனைத்தையும் கூறினார்.அதன் பின் அவனது பெற்றோருக்கு அழைத்து பள்ளிக்கு வர சொல்லி வைத்தார்.இருவரும் பதறியடித்து ஓடி வந்தனர்.. ராமராஜன் மற்றும் விமலாவிடம் நடந்ததை கூற இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது...விமலா அழுகையிலும் ராமராஜன் கோபத்திலும் என வெவ்வேறு நிலையில் இருந்தனர்.அவனை அழைத்துக்கொண்டு வேகமாக வீட்டிற்கு வந்தனர்...அவர் கோபமாக இருப்பதை கண்ட அவன் தந்தையின் பக்கத்தில் சென்று அவர் புஜத்தின் மேல் கை வைக்க அவனின் கையை உதறியவர் " நீ எல்லாம் என்னை தொடாத எனக்கு அசிங்கமா இருக்கு " என்றவர் அவரது பெல்ட்டினால் அவனை அடிக்க தொடங்கினார்." ஏங்க அவன் நம்ம பையன்ங்க " என்று விமலா அழுகையுடன் சொல்ல " இனி இவன் ச்சீ இவ எப்படி நம்ம பையனா இருப்பா இவன் தான் அறவாணியா மாறி இருக்கானே " என்று கோபத்தில் கத்தி அவனை கீழே தள்ளிவிட்டார்...அவன் தன் தந்தை செய்கையில் அதிர்ந்தவன் எழுந்து நிற்க அவர் கூறியதை கேட்டு திகைத்து போய் நின்றான்...அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அங்கேயே பக்கத்தில் இருந்த தூணை பிடித்து நின்றுக்கொண்டான்.அந்த நேரம் பார்த்து விதுஷா பள்ளியில் இருந்து வர " அண்ணா " என்றவாறு அவனை கட்டிக் கொண்டாள்...அவள் அணைத்துக் கொண்ட அடுத்த நொடி விதுவை அவனிடம் இருந்து பிரித்து விட்டு அவளை தன் புறமாக நிறுத்திக் கொண்ட ராமராஜன் "இனி இவன் உனக்கு அண்ணன் கிடையாது " என்றார்..."அப்பா நான் என்ன பா பண்ணேன் எதுக்கு தங்கச்சிய என்கிட்ட இருந்து பிரிக்கிறீங்க " என்று அவன் அழுகையுடன் கேட்க..." என்ன இனி இந்த கேவலமான வாயால இருந்து என்ன அப்பான்னு கூப்பிடாதா .இனி எனக்கு ஒரு பொண்ணு மட்டும் தான். உன்ன இனி எங்க கூட வளர்த்தா என்னோட கவுரவம் என்னாகுறது . அப்புறம் என்ன இந்த ஊருல யாரும் மதிக்க மாட்டாங்க " என்றவர்." எனக்கு இப்படி ஒரு பையன் பிறக்கலைன்னு நினைச்சிக்கிறேன் .இப்படி ஒன்னு பிறந்து அது என்னோட வாரிசா இருக்க நான் விரும்பல அதுக்கு நீ சாகுறதே மேல் " என்று கடுங்கோபத்தில் கடுங் சொற்களால் தன் மகனாக பிறந்து இப்போது திருநங்கையாக மாறிக் கொண்டு இருந்த அவளை காயப் படுத்திக் கொண்டு இருந்தார் ராமராஜன்.இதை அனைத்தையும் கண்டும் எதிர்த்து பேச முடியாத நிலையில் கண்ணீரே கதி என்று அழுது கொண்டிருந்தார் விமலா."அப்பா... அம்மா.." என்று அழுகையுடன் கூற ராமராஜன் தன் மனைவி பிள்ளையை அழைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டார்..சிறிது நேரத்திற்கு முன்பு நடந்ததெல்லாம் அவள் நினைவில் வந்தது..இறுதியாக அவன் தந்தை கூறிய வார்த்தைகள் எல்லாம் வர கண்ணீர் பெருகியது." எனக்கு இப்படி ஒரு பையன் பிறக்கலைன்னு நினைச்சிக்கிறேன் .இப்படி ஒன்னு பிறந்து அது என்னோட வாரிசா இருக்க நான் விரும்பல அதுக்கு நீ சாகுறதே மேல் " என்ற வார்த்தைகள் மட்டுமே அவளது எண்ண வோட்டத்தில் மிதக்க காலின் நடுவில் தலை கவிழ்ந்து இருந்தவள் நிமிர்த்தி ஒரு முடிவுடன் எழுந்து அந்த அறையில் இருந்த கத்தியை கொண்டு தன் மணிக்கட்டில் அறுத்துக் கொண்டாள்.மணிக்கட்டில் இருந்து இரத்தம் வேகமாக வெளியேற அதை விட அவள் கண்களில் இருந்து கண்ணீர் கரைபுரண்டு வந்தது.அவளால் கையில் ஏற்பட்ட வலியை விட மனதில் ஏற்பட்ட வலியை தான் தாங்க முடியவில்லை..அவள் கண்கள் மெதுவாக சொருக அந்த இடத்திலே மயங்கி சரிந்தாள்..சரியும் போது அவள் அவளது அன்னை அப்பா தங்கச்சி விதுஷா என குடும்பத்தோடு எடுத்த புகைப்படம் கண்ணில் பட அதை பார்த்தவாறே இமை மூடும் போது அவளது அன்னையின் குரலில் இதழியன் என்ற பெயரின் உச்சரிப்பு அவளின் செவிக்கு எட்டியது. அதை கேட்டவள் புன்னகையுடன் மயங்கி சரிந்தாள்.~ சுவாசிக்கும்...
___________________

ஹாய் மக்காஸ்...

இது என்னோடு புது மற்றும் வித்தியாசமான முயற்சி. இதுல அவுங்கள பத்தி போட்றது எல்லாம் நான் கூகுள் பண்ணி தான் போட்றேன். எதாவது தவறு இருந்தால் சொல்லுங்க.

கண்டிப்பா மாத்திக்கிறேன்...

 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top