மணாளனின் மனம் 17

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வீட்டிற்கு வந்த பிறகு புவனா‌ தனது அன்றாட வேலைகளை கவனிக்க சென்று விட்டாள்.

காய்ந்திருந்த துணிகளை பாட்டியே மடித்து வைத்து விட்டிருந்தாள். வீடும் சுத்தமாகதான் இருந்தது. வேண்டாம் என்று சொன்னாலும் எதற்கு இவர்கள் விடாமல் உதவி புரிகிறார்கள் என்று வருத்தப்பட்டாள் புவனா.

மாமியாருக்கு உதவியாக சமைக்க தேவையான பொருட்களை தயார் செய்து வைக்க ஆரம்பித்தாள்.

"நான் பண்ணிக்கிறேன் புவிம்மா.. நீயும் எத்தனை வேலைதான் செய்வ.?" என்றாள் யசோதா.

"நம்ம வேலையை நாமதானே அத்தை செய்யணும்.?" என்றவள் படப்படவென்று வேலைகளை செய்து முடித்தாள்.

யசோதா சமைக்க ஆரம்பித்தாள். சிங்கில் இருந்த பாத்திரங்களை சுத்தம் செய்து அதனதன் இடத்தில் வைத்த புவனா "நானே குழம்பு வைக்கட்டுமா அத்தை.?" என்றாள்.

மறுத்தாலும் விடமாட்டாள் என்பதால் சரியென்று தலையசைத்தபடி அடுப்படியை விட்டு நகர்ந்துக் கொண்டாள் யசோதா.

யசோதா கூடத்திற்கு வந்தபோது முத்தமிழ் தன் தங்கையோடு மெஸேஜில் பேசிக் கொண்டிருந்தான். மாமியாரின் அருகில் சென்று அமர்ந்தவள் இரவு நேர சீரியலை பார்க்க ஆரம்பித்தாள்.

தங்கையோடு பேசி முடித்த முத்தமிழ் போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு எழுந்து நின்றான்.

அவன் சமையலறைக்குள் நுழைந்தபோது புவனா ஆச்சரியமாக இவன் பக்கம் பார்த்தாள்.

"ஏதாவது வேணுமா மாமா.?" என்றாள்.

காலியாக இருந்த சமையல் மேடையில் ஏறி அமர்ந்தவன் "தயாவும் மதுவும் லவ் பண்ணி இருப்பாங்கன்னு எனக்கு தெரியவே தெரியாது.." என்றான்.

புவனாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. அவனாக உரையாடலை தொடங்கியது இதுவே முதல்முறை. கனவு போலவே இருந்தது. ஆனாலும்‌ இதற்கும் என்ன வருத்தத்தை கொண்டு வந்து இறக்க போகிறானோ என்று பயமாகவும் இருந்தது.

"உங்களை லவ் பண்ண என்னையே நீங்க திரும்பிப் பார்க்கல. உங்க பிரெண்ட்ஸோட லவ்வையா திருப்பிப் பார்த்திருக்க போறிங்க.?" சிறு குரலில் சிரிப்போடு சொன்னவளை ஆழமாக பார்த்தான்.

"நான் மதுவை கல்யாணம் பண்ணியிருந்தா தயாவுக்கு துரோகம் செஞ்ச மாதிரி ஆகியிருக்கும்.." வருத்தமாக சொன்னான்.

"அது எப்படி துரோகம் ஆகும்.? லவ் பண்ணியிருந்தா அதை மது அக்காதான் உங்ககிட்ட சொல்லி இருக்கணும். இல்லன்னா தயா அண்ணாவாவது சொல்லி இருக்கணும். அவங்க சொல்லாததுக்கு நீங்க துரோகம் செஞ்சதா எப்படி ஆகும்.? அதுவும் இல்லாம மது அக்காவும் உங்களை போலதான் மாமா. இரண்டு பேருக்கும் மைன்ட் செட் ஒன்னு. உங்களோட எதிர்பார்ப்புகள் ஒன்னு.. நீங்க கல்யாணம் பண்ணியிருந்தா உங்களுக்கு எல்லாமே செட் ஆகியிருக்கும்.. அந்த அக்கா தயா அண்ணாவை நினைச்சி கூட பார்த்திருக்க மாட்டாங்க.. நீங்களும் என்னை போல ஒருத்திக்கிட்ட மாட்டிக்கிட்டு இல்லாம நல்லா இருந்திருப்பிங்க.." என்றவளின் தோளை பற்றி படக்கென்று திருப்பினான். அவளின் கையிலிருந்த குழம்பு கரண்டி கை நழுவி தரையில் விழுந்தது.

இவன் எப்போது மேடையிலிருந்து இறங்கி வந்தான் என்பதை அறியாமல் திகைத்து நின்றிருந்தவளை முறைப்பாக பார்த்தான்.

"உனக்கு என்ன வந்துச்சி.? உன் செல்ப் கான்பிடன்சை மறந்துட்டு எதுக்காக இப்படி உன்னை நீயே தாழ்த்தி பேசுற.?" என்றான் கோபமாக.

அவனின் கரங்கள் பற்றியிருந்த தோள்கள் இரண்டும் வலித்தது.

"என்னோட தகுதி தராதரம் என்னன்னு நான் முதல்லயே புரிஞ்சிக்கிட்டு இருந்திருந்தேன்னா இன்னைக்கு நீங்க கஷ்டப்பட்டிருக்க மாட்டிங்க இல்ல.? பார்த்த உடனே பிடிச்சி போச்சி.. நினைக்க நினைக்க நெஞ்செல்லாம் உங்க முகமே பரவிடுச்சி. நானும் பலநாள் அழிக்க டிரை பண்ணி இருக்கேன். ஆனா மனசுல இருந்த காதலை கொஞ்சமா அழிக்க டிரை பண்ணா அது ஆகாயம் மாறி பரவுது.. தப்பு என் மேலதான்னு தெரியும் மாமா.. ஆனா என்னால என்னை கன்ட்ரோல் பண்ண முடியல. சாரி. உங்களை கஷ்டப்படுத்தணும்ன்னு நான் ஒருநாள் கூட நினைச்சதே இல்ல.. உங்க தங்கச்சி உங்களை ஒதுக்கி வச்சதாலதான் எனக்கு அவளையே பிடிக்காம போச்சி. மத்தபடி அவளையும் எனக்கு பிடிக்கும் மாமா. அவ எங்க அண்ணனை விட்டு பிரிஞ்சதும் உங்களை நான் எப்பவுமே சேர முடியாதுங்கற மாதிரி நிலமை வந்துடுச்சி. அப்பதான் அவளை ரொம்ப பிடிக்காம போயிடுச்சி.. ரொம்ப சுயநலவாதி மாமா நான். ஒரு காதல் என்னை இவ்வளவு சுயநலமா மாத்தும்ன்னு நான் நினைக்கவே இல்ல.." என்றவள் தன் கண்களில் இருந்த கண்ணீரை வெளியே வர விடக்கூடாது என்ற வைராக்கியத்தோடு இருந்தாள்.

முத்தமிழுக்கு வாயடைத்து போனது. எப்போதும் சொல்லும் காதல்தான். அப்போதும் இப்படி சொல்லியபடிதான் சுத்தி வந்தாள். இப்போதும் அதையேதான் சொன்னாள். 'பிடித்து விட்டது. காதலிக்கிறேன். நீங்கள் எவ்வளவு துரத்தியடித்தும் என்னால் உங்களை மறக்க முடியவில்லை.' இதையேதான் சொன்னாள்.

"நான் உங்க தங்கச்சி மாதிரியே படிச்சி நல்ல வேலைக்கு போயிருந்தா நீங்க என்னை ஏத்துக்கிட்டு இருந்திருப்பிங்களா மாமா.? நீங்க திட்டும் போதெல்லாம் திருப்பிப் பேசி உங்க கூட சண்டை போட்டிருந்தா என்னைப் பிடிச்சிருக்குமா.? இன்னும் கொஞ்சம் கலரா மது அக்கா போல உயரமா இருந்திருந்தா அப்பவாவது பிடிச்சிருக்குமா மாமா.?" ஏக்க குரலில் கேட்டாள்.

"நான்.." அவன் ஆரம்பிக்கும் முன் "குழம்பு அடி பிடிக்கற வாசனை வருது மாமா.." என்றவள் அவசரமாக திரும்பினாள். வேறு கரண்டி எடுத்து குழம்பை கிண்டி விட்டாள்.

"நான்.." முத்தமிழ் மறுபடியும் ஆரம்பித்த நேரத்தில் சமையலறைக்குள் வந்தாள் யசோதா.

அம்மாவை கண்டதும் விலகிய முத்தமிழ் புவனாவை ஒரு நொடி பார்த்துவிட்டு வெளியே நடந்தான்.

புவனா தரையில் கிடந்த கரண்டியை எடுத்து சிங்கில் வைத்தாள்.

மாமியார் பார்க்கும் முன் கண்களை துடைத்துக் கொண்டாள். ஆனால் யசோதாவுக்கு அவளின் சிவந்த கண்கள் தெரிந்தது.

"உனக்கும் அவனுக்கும் சண்டையா புவி.?" என்றாள் அருகில் வந்து.

"இல்ல அத்தை.. எங்களுக்குள்ள என்ன சண்டை.?" அவசரமாக பதில் சொன்னாள். 'சமாதானமே ஆகாத இடத்துல சண்டை எப்படி வரும்.?' என்று மனம் நொந்தாள்.

இரவு உணவை உண்ணும்போது முத்தமிழின் முகம் பார்க்கவில்லை புவனா.

சமையல் அறையிலிருந்த இரவு வேலைகளை முடித்துக் கொண்டு தாமதமாகதான் அறைக்கு வந்தாள் புவனா. கதவின் அருகிலேயே நின்றிருந்த முத்தமிழை ஆச்சரியத்தோடு பார்த்தாள். தனக்காக காத்திருந்தானா என்று நினைத்து குழம்பினாள்.

அவள் அறைக்குள் வந்ததும் கதவை தாழிட்டுவிட்டு வந்தவன் "புவனா நாம கொஞ்சம் பேசலாமா.?" என்றான்.

"பேசலாம் மாமா.." பயத்தோடு சொன்னவளை வருத்தமாக பார்த்தான்.

"நான் பேய் பிசாசு கிடையாது புவனா. நீ ஏன் பயப்படுற.?" என்றான் அவளின் அருகே வந்து.

புவனா பயம் நீங்காமலேயே அவனை நிமிர்ந்து நோக்கினாள்.

"ஆனா நீங்க கடவுள் மாதிரி ஆச்சே.. பயப்படணும் இல்லையா.?" என்றாள்.

முத்தமிழ் நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

"நீயா நினைச்சா நான் பொறுப்பா.?" என்றான் சிறு எரிச்சல் கலந்த குரலில்.

புவனா இடம் வலமாக தலையசைத்தாள். "என் காதல்ல நீங்க கடவுளோட இடத்துல இருக்கறது விசயம் இல்ல மாமா.. கடவுளை போல உங்களை நேசிக்கறது எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா நீங்க கடவுளை போலவே என்னால தொட முடியாத மாதிரி இருக்கிங்க.. உங்களுக்கு ஈக்வெல்லா என்னால ஆக முடியாதோன்னு ரொம்ப பயமா இருக்கு. காதலிக்கும்போது ஸ்டேட்டஸ் பத்தி எதுவும் தெரியவே இல்ல.. ஆனா இப்பதான் புரியுது. நீங்க ரொம்ப ஸ்ட்ராங்க். ரொம்ப படிச்சவர். ரொம்ப மெச்சூர்.. அன்னைக்கு நீங்க இதையெல்லாம் சொல்லும்போது புரியவே இல்ல மாமா.. விளையாட்டு போல இருந்தது. இப்ப தினம் உங்களோடு சேர்ந்து பழக ஆரம்பிச்ச பிறகு எல்லாமே புரிஞ்சி ரொம்ப பயமா இருக்கு.." என்றவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

"இப்ப கூட பயமாதான் இருக்கு மாமா.. முட்டாள் கழுதை மட்டும்தான் நான்.. நீங்க அப்படி திட்டும்போது கூட பிடிச்சிதான் இருக்கு. ஆனா இப்படி நார்மலா பேச ஆரம்பிக்கும்போதுதான் பயமே. ஏன் கட்டிப்பிடிக்கிறிங்கன்னும் தெரியல. உங்களோட நெருக்கமே ரொம்ப பயமா இருக்கு.." என்றாள் அவனின் நெஞ்சில் முகம் புதைத்தபடி.

"நான் எந்த ஸ்டேட்டஸ்ம் பார்க்கல புவனா.."

"பிறகேன் மாமா முத்தம் தந்திங்க.?"

"ஏனா நீ என் பொண்டாட்டி.."

"இதான் பயமா இருக்கு மாமா.. திடீர்ன்னு பேர் சொல்லி கூப்பிடுறிங்க.. நீங்களா பேச்சை ஆரம்பிக்கிறிங்க.. கட்டியெல்லாம் பிடிக்கிறிங்க. முத்தமெல்லாம் தரிங்க.. ஏன் மாமா.? நான் உங்களை அஞ்சரை வருசமா சுத்தி வந்தேன். ஒரு முறை கூட நீங்க என்னைப் பார்த்து சிரிச்சது இல்ல. கல்யாணமாகி ஒன்னேகால் மாசம் ஆகுது. நீங்க என் பேர் சொல்லி கூட கூப்பிட்டது கிடையாது. திடீர்ன்னு இன்னைக்கு இதையெல்லாம் பண்ணா எவ்வளவு பயமா இருக்கு தெரியுங்களா.? ஐயம் நாட் பர்பெக்ட். அப்புறம் ஏன் மாமா பொண்டாட்டிக்கிட்ட நடந்துக்கற மாதிரியே நடந்துக்கறிங்க.?" என்று கேட்டவளின் முகத்தை பற்றினான்.

"உனக்கு வாய் வலிக்குமா வலிக்காதா.? அப்பா.. எவ்வளவு பேசுற.." என்றான்.

புவனா பதில் பேச நினைத்தாள். ஆனால் பேசுவதை தவறு என்கிறானே என்று உதட்டை கடித்தபடி மௌனமானாள்.

"மதுவோடவும், அபியோடவும் தெரியாம உன்னை கம்பேர் பண்ணிட்டேன் ராசாத்தி. அதுக்காக இவ்வளவா யோசிப்ப.. உன்னோட விடாமுயற்சி எப்பவும் பிடிக்கும் எனக்கு. ஆனா இன்னைக்கு முழுசா மாறிட்ட.. உன்னை எவ்வளவு தாழ்த்திக்க முடியுமோ அவ்வளவு தாழ்த்திட்டு இருக்க.. சாயங்காலமே பேசலாம்ன்னு இருந்தேன். ஆனா அதுக்குள்ள தயா மது சண்டை போட்டுக்கிட்டாங்க.. இப்பவாவது பேசலாம்ன்னு வந்தா நீ விடாம டிரெயின் விட்டுட்டு இருக்க.." என்றான்.

'ஓவராதான் பேசிட்டமோ.?' என்று நினைத்தவள் "சாரி மாமா.." என்றாள்.

"இந்த சாரி மட்டும்தான் உன்னால சொல்ல முடியுமா.?" எனக் கேட்டான்.

"நான் சொல்வேன். ஆனா நீங்க அதுக்கும் திட்டுவிங்க.." என்றவள் அவளாகவே அவனிடமிருந்து விலகி நின்றாள்.

"தூங்கலாம் மாமா.. டைம் ஆச்சி.." என்றாள்.

அவளின் கைப்பற்றினான். திரும்பிப் பார்த்தாள். என்னவோ சொல்ல முயன்றது அவனின் விழிகள். இதழ்கள் துடித்தது. ஆனால் இறுக்கமாக இணைந்திருந்த இதழ்கள் பேசும் முயற்சியில் இறங்கவில்லை.

அருகில் வந்தவள் அவனின் நெஞ்சில் சாய்ந்தாள். அவனை சுற்றி கைகளை கோர்த்தவள் அவனை அணைத்துக் கொண்டாள்.

"என்ன ஆச்சி மாமா.? நாலஞ்சி நாளாவே இப்படிதான் இருக்கிங்க.! எதுவா இருந்தாலும் சொல்லுங்க மாமா.. என் கூட இருப்பது உங்களுக்கு பிடிக்கலன்னு மட்டும் சொல்லிடாதிங்க ப்ளீஸ்.. உங்க திடீர் மாற்றத்தை பார்க்கும்போது டைவர்ஸ் வேணும்ன்னு கேட்டுடுவிங்களோன்னு பயமா இருக்கு. உங்க தங்கச்சி இப்படிதான் என் அண்ணனை பழி வாங்கினா. அதே போல நீங்களும் இந்த ஒரு மாசத்தை சொர்க்கம் போல காட்டிட்டு இப்ப விலக்கி தள்ளிடுவிங்களோன்னு பயமா இருக்கு. நீங்க எங்கே போனாலும் நான் எதுவும் கேள்வியே கேட்க மாட்டேன். ஆனா அதுக்காக வைப்பாட்டி மட்டும் வச்சிடாதிங்க. ரொம்ப உடைஞ்சிடுவேன் மாமா.." என்றவளின் உச்சந்தலையில் முத்தமிட்டவன் "லூசுங்கறது சரியாதான் இருக்கு.. நான் உன்னை எப்பவும் விலக்கி தள்ள மாட்டேன். யோசிக்கவாவது கொஞ்சம் டைம் கொடுடி.. உன்கிட்ட நிறைய பேசணும்ன்னு எனக்கும் ஆசைதான். ஆனா எப்படி ஆரம்பிக்கறதுன்னு கூட தெரியாத அளவுக்கு நீ குட்டையை குழப்பி வச்சிருக்க.." என்றான்.

புவனா குழப்பத்தோடு அவனைப் பார்த்தாள். என்னிடம் பேச ஆசையா என்று வியந்தாள்.

முத்தமிழ் மறுநாள் காலையில் அவளை அலுவலகத்தின் வாசலில் இறக்கி விட்டான். "எனக்கு சைட்ல கொஞ்சம் வேலை இருக்கு.. சீக்கிரம் வந்துடுறேன்.." என்றுவிட்டு புறப்பட்டான். எப்போதும் அழைத்துச் செல்பவன் இப்போது தனியாக விட்டுச் சென்றது அவளுக்கு கவலையை தந்தது.

மனவியல் வல்லுநர் மங்கை என்ற போர்டை பார்த்துக் கொண்டே அந்த மருத்துமனை அறைக்குள் நுழைந்தான் முத்தமிழ்.

மங்கை அவனை அழைத்து அமர வைத்தாள். விவரங்களை சொன்னவன் பிரச்சனைகளையும் முழுதாக அவளிடம் சொன்னான்.

"தப்பு உங்க மேலதான்.." என்றாள் மங்கை.

கோபத்தோடு மங்கையை பார்த்தான் முத்தமிழ்.

"என்ன பிரச்சனையா இருந்தாலும் கடைசியா கொண்டு வந்து ஆண்கள் தலையில் இறக்குவதுதான் உங்களோட வேலையா.? இந்த உலகமே இப்படிதானா.?" என்று எரிச்சலாக கேட்டான்.

"ஹலோ பாஸ்.. இப்ப பிரச்சனை உங்களுக்குதானே தவிர, உங்க மனைவிக்கு கிடையாது. அவங்ககிட்ட தப்பு மட்டும்தான் இருக்கு. ஆனா உங்களுக்கு தப்போடு சேர்த்து இப்ப இப்படி ஒரு பிரச்சனையும் இருக்கு.." என்றாள்.

முத்தமிழ் தலையை ஒரு கையால் பிடித்தபடி மேஜையில் மறு கையை ஊற்றினான்.

"என்னை சரி பண்ண முடியாதா.?" என்றுக் கேட்டான்.

"தாரளமா.. ஆனா அதுக்கு உங்க மனைவி கூட இருக்கணும்.." என்றவளை அதிர்ச்சியோடு பார்த்தவன் "எதுக்கு டாக்டர்.? அவளுக்கு இது தெரிஞ்சா என்னை பார்த்து சிரிப்பா.? இதெல்லாம் ஒரு காரணமான்னு கேட்பா.." என்றான்.

"தான் நேசிக்கற ஒருத்தர் ஹர்ட் ஆகும்போது பயப்படுறது எல்லாருக்கும் பொதுவானதுதான். இதுல நம்ம நாட்டு ஆண்கள் அவார்டே வாங்கிடுவாங்க. பொண்டாட்டிக்கு பிரசவம் சிக்கலா போன பிறகு அவ நல்லாகி வந்த பிறகும் கூட அவளோடு செக்ஸ் வச்சிக்க பயந்த சிலர் இங்கே இருக்காங்க.. அம்மாவை பிரிய பயந்து கல்யாணமே வேணாம்ன்னு சொன்ன ஆண்களையெல்லாம் நீங்க நம்ம நாட்டுல மட்டும்தான் பார்க்க முடியும். மகள் கால்ல முள் பட்டா அப்பா கண் எரியும். தங்கச்சிக்கு அடிப்பட்டா அண்ணன்களுக்கு ரத்தம் வரும். உங்க மனைவி தற்கொலை பண்ணிக்க டிரை பண்ணதுல அவங்க தப்பிச்சிட்டாங்க. ஆனா அந்த பயத்துல நீங்க சேதாரமாகிட்டிங்க.. மரண பயத்தை அந்த பொண்ணு நல்லாவே காட்டிட்டான்னுதான் தோணுது. ஆனா இதுல தப்பு உங்க மேலதான். இதை நான் அடிச்சி சொல்வேன்.." என்றவளை அதே கோபத்தோடு பார்த்தான் அவன்.

அவனின் கோபத்தை அறிந்தவள் விளக்கிச் சொன்னாள். தன் மீது உள்ள தப்பை புரிந்துக் கொண்டவன் 'முட்டாள் கழுதையால வந்தது எல்லாம்..' என்று புவனாவை திட்டினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN