மணாளனின் மனம் 19

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முத்தமிழ் காப்பி கேட்கும் முன்பே அவனுக்கு காப்பி கொண்டு வந்து தந்தாள் புவனா.

'அதிசயம்.. மூளையெல்லாம் தானாவே வேலை செய்யுது போல..' என்று ஆச்சரியப்பட்டான் முத்தமிழ்.

"மாமா நான் அழகா இருக்கேனா.?" வெட்க முகத்தோடு கேட்டவளை தலை முதல் கால் வரை பார்த்தான்.

அழகாகதான் இருந்தாள்.

"அவ்வளவு கேவலமா இல்ல.. ஏன் கேட்கற.?" என்றவனை முறைப்பாக பார்த்தவள் "உங்களுக்கு ஒத்துக்க மனசே வராதா மாமா.?" எனக் கேட்டாள்.

"நான் அழகாதான் இருக்கேன்னு உங்களை சொல்ல வைக்கிறேன் பாருங்க.." என்று உதடு சுழித்து சொன்னவள் தனது இருக்கையை நோக்கி நடந்தாள்.

"அழகாதான் இருக்க தாயே.!" முத்தமிழ் சட்டென்று சொல்லவும் புன்னகையோடு திரும்பினாள்.

"நான் அப்படி சொல்லலன்னா அதுக்கும் விஷத்தை குடிச்சி வச்சாலும் வச்சிடுவ நீ.!" என்று முனகினான். புவனாவின் புன்னகை முகம் நொடியில் வாடி போனது.

"சா.. சாரி மாமா.." என்றவள் தலை குனிந்தபடி சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள்.

அவளை சுற்றி உள்ளவர்கள் இப்படி சொல்லும் போதெல்லாம் அவளுக்கு அது தண்டனையாக இருந்தது‌. முட்டாள்தனமான முடிவு என்று அனைவரும் திட்டுகிறார்கள். அவளுக்கும் அது புரிகிறது. ஆனால் அந்த நேரத்தில் என்ன செய்வது என்பதை அவள் அறியவில்லை. மீண்டும் இதுபோல ஒரு நிலை வந்தாலும் அதையேதான் செய்வோம் என்று அவளுக்கே தெரியும்.

முத்தமிழ் புவனாவின் வாடிய முகத்தை பார்த்துவிட்டு தன் முகத்தை தேய்த்துக் கொண்டான். எந்த பக்கம் நடந்தாலும் முட்களாக நிறைந்திருந்தது வாழ்க்கை.

மதுமிதாவுடன் வாதாடி விட்டுப் போன தயாளன் அன்று மாலை வரையில் அலுவலகம் திரும்பவில்லை.

நடந்ததை இடைவேளை நேரத்தில் முத்தமிழிடம் கேட்டு அறிந்துக் கொண்டான் சத்யா.

"இவங்க ஏன்டா இப்படி இருக்காங்க.?" என்றான் புலம்பலாக.

"லவ் இஸ் டேஞ்சர்.." என்றான் முத்தமிழ். ஆமென தலையசைத்தான் சத்யா.

உணவை முடித்துக் கொண்டு அலுவலகத்தின் பின்னால் இருந்த வராண்டாவில் நின்று மூர்த்தியோடு போனில் பேசிக் கொண்டிருந்தாள் புவனா.

"நாங்க இந்த வாரம் வரோம் அண்ணா.." என்றாள் இவள்.

"வாம்மா.. நானும் சுவாதிக்கிட்ட சொல்றேன்.." என்ற மூர்த்தி பேசி முடித்துவிட்டு போனை வைத்தான்.

புவனா கார்த்திக்கிற்கு போன் செய்ய முயன்ற வேளையில் "புவி.." என்று தயக்கமாக ஒலித்தது மதுமிதாவின் குரல்.

திரும்பிப் பார்த்தாள். மதுமிதா கதவோர சுவரில் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தாள்.

"சொல்லுங்க அக்கா.." என்றபடி அவளின் அருகே வந்தாள் புவனா.

"புவனா.. நான் உன்னை பிரச்சனையில் மாட்டி விடணும்ன்னு நினைக்கல. காலையில் போலிஸ்ல கேஸ் தரலாம்ன்னு சொன்னது தயா மேல இருந்த கோபத்தால மட்டும்தானே தவிர உன்னை பிரச்சனையில் சிக்க வைக்க இல்ல.. என்னால உனக்கும் தமிழுக்கும் நடுவுல சண்டை வரணும்ன்னு நான் கனவுல கூட நினைக்கல. ப்ராமிஸ்.." என்றாள் அவளின் கையை பற்றியபடி.

இவள் சொன்ன பிறகுதான் இதிலும் ஒரு வில்லங்கம் இருக்கிறது என்று புவனாவிற்கும் புரிந்தது. தயாவை அடித்ததற்கே சண்டையிட்ட தமிழ் இப்படி கேஸ் தந்திருந்தால் தன்னை இன்னும் திட்டி இருப்பான் என்று புரிந்தது. தயாவின் மீது காட்டிய கருணை ஏதோ ஒரு வழியில் தனக்கும் உதவியுள்ளது என்பதை புரிந்துக் கொண்டவளுக்கு தன் கருணையை நினைத்து சந்தோசமாக இருந்தது.

"நான் உங்களை தப்பா நினைக்கல அக்கா.." என்றவள் அப்போதுதான் அவளின் உதடுகளை பார்த்தாள். உதடு அதிகம் சிவந்து சில இடங்களில் கீறல் போல காயங்கள் கூட இருந்தது.

"உங்க உதடுக்கு என்ன ஆச்சிக்கா.?" கேட்கவே தயக்கமாக இருந்தது அவளுக்கு. ஆனாலும் என்ன ஆனதோ என்று அறியும் ஆவலில் கேட்டு விட்டாள்.

மதுமிதா சினந்துப் போன முகத்தோடு தன் உதட்டை புறங்கையால் துடைத்தாள். கீறல்களில் இருந்து சிறு சிறு துளிகளாக ரத்தம் வெளி கசிந்தது. அவளின் ஆத்திரம் எந்த அளவுக்கானது என்பதை புவனாவாலும் புரிந்துக் கொள்ள முடிந்தது.

"கதவுல இடிச்சிக்கிட்டேன்.." என்றவள் மீண்டும் உதட்டை தேய்த்தாள். மதுமிதாவின் இதழ்களை பார்க்கையில் புவனாவிற்கே வலித்தது.

'பேய் வெறுப்பா இருக்கே.! இவ்வளவு வெறுப்பா இருக்கறவங்ககிட்ட தயா அண்ணா அப்படி நடந்திருக்க கூடாது.. பாவம் மது அக்கா.. தயாண்ணா மேல இருக்கற கோபத்துல தன்னையே இப்படி காயப்படுத்திக்கறாங்க..' கவலையோடு நினைத்தாள் புவனா.

"மருந்து போடுங்க அக்கா.. சரியா போயிடும்.." இதை தவிர வேறு என்ன சொல்வதென்று அவளுக்கு தெரியவில்லை.

"புவனா.." மதுமிதாவோடு அவள் முழுதாய் பேசி முடிக்கும் முன்பே முத்தமிழ் அவளை அழைத்து விட்டான்.

"மாமா கூப்பிடுறாரு அக்கா.. நான் போறேன்.." என்றவள் அவசரமாக ஓடினாள்.

புவனா வந்தபோது முத்தமிழ் அவளுக்காக அறையின் நடுவில் நின்று காத்திருந்தான்.

"வந்துட்டேன் மாமா.." என்றபடி உள்ளே ஓடி வந்தவள் அவன் நிற்கும் தோரணை கண்டு தயங்கிப்போய் ஓரடி பின்னால் நகர்ந்தாள்.

"என்னாச்சி மாமா.?" என்றாள்.

"எங்கே போன இவ்வளவு நேரம்.?" அதிகாரமாக கேட்டவனை சிணுங்கலாய் பார்த்தவள் "எங்க அண்ணன் கூட போன் பேசிட்டு வர போனேன் மாமா.." என்றாள்.

முத்தமிழ் அவளை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு சென்று தன் இருக்கையில் அமர்ந்தான். "இனி இங்கேயே உட்கார்ந்து போன் பேசு.. கண்ணை விட்டு மறைஞ்சின்னா கொன்னுடுவேன்.." என்றான்.

'திடீர்ன்னு இவருக்கு என்ன ஆச்சி.?' என குழம்பியவள் அமைதியாக தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.

தீர்ந்துக் கொண்டிருக்கும் கட்டுமான பொருட்களை பட்டியலிட்டு அவனிடம் நீட்டினாள்.

முத்தமிழ் ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்து விட்டு அவற்றை ஆர்டர் செய்தான்.

மதுமிதாவை தேடி வந்தான் சத்யா. கட்டிட வடிவமைப்பை கணினியில் வரைந்துக் கொண்டிருந்தவள் இவனை கண்டுவிட்டு "எனக்கு வேலை இருக்கு சத்யா.. நாம அப்புறம் பேசலாம்.." என்றாள்.

"நாங்க மட்டும் வெட்டியா இருப்பதா நினைப்பா உனக்கு.? ஆனாலும் ஓவர் சீன்ம்மா நீ.." என்றவன் தன் கையிலிருந்த பேப்பர்ஸை அவளின் முன் வைத்தான்.

"கொஞ்சம் சரி பார்த்துட்டு ஓகே பண்ணு.. அடுத்த வேலையை கவனிக்கணும்.." என்றவன் முகத்தை திருப்பிக் கொண்டு கிளம்பினான்.

'இவன்கிட்ட போய் பல்பு வாங்கிட்டோமே.!' என்று நெற்றியில் அடித்துக் கொண்டாள் மதுமிதா.

அதே நேரத்தில் திரும்பி வந்தான் சத்யா. "ஆமா.. உனக்கும் தயாவுக்கும் நடுவுல என்ன பிரச்சனை.." என்றான்.

பற்களை கடித்தபடி நிமிர்ந்த மதுமிதா அவனை ஆக்ரோஷமாக பார்த்தாள்‌. "நான் கிளம்பறேன் பத்ரகாளி.. நீ உன் வேலையையே பாரு.." என்றவன் கையை தலைக்கு மேல் தூக்கி வணங்கிவிட்டு திரும்பி நடந்தான்.

மதுமிதா கடுப்போடு அவனை முறைத்த நேரத்தில் அவளின் கைபேசி ஒலித்தது. எடுத்துப் பேசினாள்.

"மிஸ் மதுமிதா.?" எனக் கேட்டார் எதிரில் இருந்தவர்.

"யெஸ்.." என்றாள்.

"நாங்க லோக்கல் போலிஸ் ஸ்டேஷன்ல இருந்து பேசுறோம் மேடம்.. உங்க பிரெண்ட் தயாளன் ஒரு பெண்ணை ரேப் பண்ணியிருக்காரு. அவரே வந்து சரணடையவும் செஞ்சிட்டாரு. பாவம் அந்த பொண்ணு. இன்னமும் அழுதுட்டே இருக்கு.. தயாளன்கிட்ட அவரை பற்றிய டீடெயில்ஸ் கேட்டபோது இந்த நம்பர் தந்தாரு." அவர் முழுதாய் சொல்லும் முன் இவளின் கையிலிருந்த போன் நழுவி தரையில் விழுந்தது. கலங்கும் கண்களை அவளால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

தடுமாறி எழுந்தவள் அவசரமாக அறையை விட்டு வெளியே ஓடினாள்.

முத்தமிழை புவனாவும், புவனாவை முத்தமிழும் மாறி மாறி ரகசியமாக பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த அறைக்குள் புயல் போல நுழைந்தாள் மதுமிதா.

"தமிழ்.. தயா லாக்அப்ல இருக்கான்.." தேம்பியழுதபடி சொன்னவளை அதிர்ச்சியோடு பார்த்துவிட்டு இருவரும் எழுந்து நின்றார்கள்.

"மது அழாம இரு.. என்ன ஆச்சின்னு பொறுமையா சொல்லு.." என்றான் முத்தமிழ்.

"எல்லாம் என்னாலதான்.." என்று நெற்றியில் அறைந்துக் கொண்டாள் மதுமிதா. "நான் என்ன சொல்றேன்னோ அதுக்கு நேர்மாறாதான் அவன் செய்வான்னு தெரிஞ்சும் நான்தான் அவனை தூண்டி விட்டுட்டேன்.. எல்லாம் என்னாலதான்.." என்றவள் "ஏதோ ஒரு பொண்ணை ரேப் பண்ணிட்டான்னு ஜெயில்ல இருக்கான்.." என்றாள் அழுகையை நிறுத்தாமல்.

அதிர்ச்சியில் உறைந்துப் போனார்கள் இருவரும். புவனாவிற்கு தயாளனை நினைத்துப் பார்க்கையில் லேசாக பயம் வந்தது. மதுமிதா தன்னிடம் கேஸ் தர சொல்லி கேட்ட ஒரே காரணத்திற்காக ஒரு பெண்ணை அவன் ரேப் செய்வான் என்று நினைக்கவேயில்லை புவனா.

"நாம போகலாம்ப்பா.. என்னன்னு பார்க்கலாம்.. நீ அழாம இரு.." என்று சமாதானம் சொன்னான் முத்தமிழ்.

புவனா மதுமிதாவின் அருகே வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.

"அழாதிங்க அக்கா.. வேணும்ன்னே திமிரா இருக்காங்கன்னா அதுக்கு நாம எப்படி காரணமாக முடியும். நீங்க கடுப்பேத்திய உடனே ரேப் பண்றாருன்னா அவர்தான் கெட்டவரே தவிர நீங்க கிடையாது. உங்களை அழ வைக்கணும்ன்னு, உங்களை பழி வாங்கணும்ன்னுதான் அவர் இப்படி பண்ணி இருக்காரு. இதுக்கு நீங்க காரணமே இல்ல.." என்றாள்.

முத்தமிழ் புவனாவை வெறித்தான். அவள் சொன்னதை தன் மனதுக்குள் திருப்பி திருப்பி நினைத்துப் பார்த்தான். நண்பன் மற்றும் தோழியின் நிலையால் கவலையாக இருந்தும் கூட அவனுக்கு தன் நிலையை எண்ணி சிரிப்பாக வந்தது.

"இல்ல.. நான் அவனை உசுப்பேத்தி விட்டிருக்க கூடாது.. அவன் இன்னைக்கு இவ்வளவு கெட்டவனா பொறுக்கியா இருக்கான்னா அதுக்கு நான்தான் காரணம்.." என்று அழுதபடி சொன்னாள்.

சத்யா போனோடு இவர்களிடம் ஓடிவந்தான்.

"தமிழ்.. தயா கேஸ்ல மாட்டிக்கிட்டான்டா.." என்றவன் மதுமிதாவின் அழுகையை கண்டுவிட்டு வாயடைத்து நின்றான்.

"இ.. இவ.." மதுமிதாவிடம் பேச்சு தர தயக்கமாக இருந்தது அவனுக்கு.

"இவளை கூட்டிக்கிட்டு ஸ்டேஷன் போ. நான் பின்னாடியே வரேன்.." என்ற முத்தமிழ் தனது கம்ப்யூட்டரை அணைத்து வைத்தான். மேஜையில் இருந்த பொருட்களையெல்லாம் எடுத்து வைக்க தொடங்கினான்.

மதுமிதா கண்களை துடைத்தபடி சத்யாவின் பின்னால் நடந்தாள். துடைக்க துடைக்க கண்ணீர் வந்துக் கொண்டே இருந்தது அவளுக்கு‌. புவனா அவர்களின் பின்னால் சென்றாள். வாசலோடு நின்று விட்டாள்.

அவர்கள் இருவரும் மதுமிதாவின் காரில் ஏறி செல்வதை கவலையோடு பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் புவனா. அவளின் தோளை தட்டினான் முத்தமிழ்.

"வா நான் உன்னை வீட்டுல விட்டுடுறேன்.." என்றான்.

"ஏன்.. நானும் ஸ்டேசன் வருவேன்.." என்றவளை முறைத்தவன் அலுவலகத்தை வெளியே பூட்டினான்.

"உனக்கு அங்கே என்ன வேலை.?" என்றவன் சாவியை பாக்கெட்டில் பத்திரப்படுத்தினான்.

"மது அக்கா அழறாங்க.. நீங்க அந்த அக்காவுக்கு பிரெண்ட்ஸ் மாதிரியே நடந்துக்கல. அவங்களுக்கு ஆறுதல் கூட சொல்லல.." என்றவளை கண்கள் சாய்த்து பார்த்தவன் "ஆறுதல் சொன்னாதான் அதிகம் அழுகை வரும்.. அவ ஒன்னும் குழந்தை இல்ல.. உன்னை மாதிரி உதவாக்கரையும் இல்ல.." என்றான்.

படிகளில் இறங்க இருந்தவனை கைப்பிடித்து நிறுத்தினாள் புவனா. என்ன எனும்படி திரும்பிப் பார்த்தான் அவன்.

"அன்னைக்கு உங்களுக்கு சோகமா இருந்ததுன்னுதானே நீங்க உங்க அம்மா கூட தூங்க போனிங்க.. ஆறுதல் வேணும்ன்னு நீங்களும் நினைச்சிங்கதானே.? அப்புறம் ஏன் மது அக்காவுக்கு ஆறுதல் வேணாம்ன்னு சொல்றிங்க.?" என்றாள்.

"அரை டிக்கெட் மாதிரி இருந்துட்டு எப்படிப்பட்ட கேள்வியெல்லாம் கேட்கறா.?" என முனகியவன் வாசலில் நின்றிருந்த பைக்கை உயிர்ப்பித்தான்.

"ஸ்டேசன் போங்க மாமா.. மது அக்கா பாவம்.." என்றபடியே பின் இருக்கையில் அமர்ந்தாள் புவனா.

இருவரும் காவல் நிலையம் வந்தபோதும் மதுமிதாவும் சத்யாவும் காவல் அதிகாரி ஒருவரின் முன்னால் அமர்ந்துக் கொண்டிருந்தார்கள். மதுமிதா இன்னமும் அழுதுக் கொண்டேதான் இருந்தாள். சத்யா அவளை தன் தோளில் சாய்த்தபடி அமர்ந்திருந்தான்.

"அந்த பொண்ணை டாக்டர்க்கிட்ட அனுப்பி இருக்கோம் சார்.. இவர் அந்த பொண்ணை தாக்கி இருக்காரு. அந்த பொண்ணோட உடம்பெல்லாம் ரத்த காயம்.." காவல் அதிகாரி சொன்னது கேட்டு விசும்பினாள் மதுமிதா. அவளின் பின்னால் வந்து நின்ற புவனா அவளின் தோளை ஆறுதலாக பற்றினாள்.

"மெடிக்கல் ரிப்போர்ட் கிடைச்சதும் இவர் மேல குற்றம் உறுதி ஆகிடும். இவரை போல ஆட்களை எல்லாம் நீங்க ஏன் உங்களோடு வச்சிருக்கிங்க.?" எனக் கேட்டார் அவர்.

முத்தமிழ் லாக்அப்பை பார்த்தான். தயாளன் சுவரோடு சாய்ந்து அமர்ந்திருந்தான். எதிரே இருந்த கதவு கம்பிகளை வெறித்துக் கொண்டிருந்தவன் நண்பர்கள் பக்கம் பார்க்கவேயில்லை.

"அந்த பொண்ணுக்கு இப்படி ஆக நான்தான் காரணம்.." என்று சொல்லி அழுதாள் மதுமிதா.

"நாங்க இவருக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவோம். அந்த பொண்ணை நினைச்சி அழாதிங்க.. ப்ளீஸ்‌.." என்றார் எதிரே அமர்ந்திருந்த அதிகாரி. மதுமிதாவின் அழுகை கண்டு அவருக்கே மனம் வாட்டமுற்றது.

முத்தமிழ் லாக்அப்பின் அருகே சென்றான்.

"ஏன்டா இப்படி.? அன்னைக்கு வீரவசனம் பேசின.. இன்னைக்கு என்ன பண்ணி வச்சிருக்க.?" என்றான் பற்களை கடித்தபடி.

தயாளன் சிரித்தபடியே எழுந்து நின்றான்.

"நான் அப்படிதான்னு சொன்னபோது நீங்க யாரும் நம்பல.. தப்பே செய்யாம கெட்டவனா இருப்பதை விட தப்பு செஞ்சிட்டு கெட்டவனா இருந்துட்டு போறேனே.." என்றவனை தூக்கிப்போட்டு மிதிக்க வேண்டும் போல கோபம் வந்தது முத்தமிழுக்கு.

"உன்னை நம்பலன்னா அதுக்காக எதுவும் செய்வியா.?" கோபத்தோடு கேட்டபடி அங்கே வந்தான் சத்யா.

"கண்டிப்பா.. நான் யாருக்கு நல்லவனா இருக்கணும்.? நேத்து வரை பிளேபாய்.. இன்னையிலிருந்து ரேப்பிஸ்ட்.. இப்பதான் எனக்கு குளுகுளுன்னு இருக்கு.." என்றான் தனக்கு முன்னால் வந்து நின்ற மதுமிதாவை வெறித்தபடி.

"தயவுசெஞ்சி அவளை இங்கிருந்து போக சொல்றிங்களா.? அவளுக்கு அவ்வளவு வருத்தமா இருந்தா அந்த பொண்ணுக்கிட்ட போய் அழ சொல்லு.. ஏன் என் முன்னாடி நின்னு அழறாளாம்.?" என்றான் மதுமிதாவை எரிச்சலாக பார்த்தபடி.

கண்களை மறைத்த கூந்தல் கற்றைகளை ஓரம் ஒதுக்கி விட்டுக் கொண்டு தயாளனை பார்த்தாள் மதுமிதா.

"நான் உனக்காகதான் அழறேன்டா பொறுக்கி.." என்றாள் தன் முகத்தை இருகரங்களாலும் மூடியபடி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN