மணாளனின் மனம் 23

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முத்தமிழ் இரவெல்லாம் உறங்கவேயில்லை. உறங்கிக் கொண்டிருந்த புவனாவையே பார்த்துக் கொண்டு விடிய விடிய விழித்திருந்தான். அவளின் கன்னத்தில் இருந்த அறைந்த தடம் எப்போதோ மறைந்து விட்டது. ஆனால் அவனின் வருத்தம் மட்டும் தீரவேயில்லை.

அவளை அடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் அபிராமி என்றதும் கோபம் அவனை மீறி பொங்கி விட்டது. அந்த கோபத்தின் பலனாக இரவெல்லாம் உறக்கம் தொலைந்தது.

புவனாவின் முகத்தை பார்த்தே சலித்து விட்டான். அவளின் வட்ட முகம் ஏன் வட்டமாக இருக்கிறது என்று ஆராய்ந்தான். அப்பாவி போல் தூங்குபவளுக்குள் எவ்வளவு குட்டி சாத்தான்தனம் இருக்கும் என்று கணக்கிட்டு பார்த்தான். அவள் புரண்டு படுத்த வேளைகளில் அந்த பக்கம் சென்று அமர்ந்து அவளை கண்காணித்தான். சிவராத்திரியை போல் உறங்காமல் இருந்தவன் விடியற்காலையில் நான்கிற்கு மேல்தான் உறங்கினான்.

காலையில் அலார சத்தத்தில் எழுந்து அமர்ந்த புவனா வழக்கம் போல தன் வேலைகளை கவனிக்க சென்றாள். செல்லும் முன் வழக்கம்போல சில பல நொடிகள் நின்று தன் மணாளனின் முகத்தை பார்த்துவிட்டு சென்றாள். அவன் அறைந்தது கொஞ்சம் அவளுக்கும் வலித்தது. ஆனால் அதை அடுத்த நாள் காலையிலேயே மறந்து விட்டாள்.

முத்தமிழ் எழுந்து போது கண்கள் இரண்டும் எரிந்தது அவனுக்கு‌.

புவனாவிடம் கடலை காட்டிற்கு களை பிடுங்க போக சொல்லிவிட்டு மங்கை தேடி போனான்.

"மேடம்.. ஹெல்ப் மீ.. நான் நைட்டு முழுக்க தூங்கல.." என்றான் அழாத குறையாக.

மங்கை சிரித்தாள்.

"மிஸ்டர்.. உங்க மனைவியை கூட்டி வந்தா மட்டும்தான் இந்த பிரச்னையை தீர்த்து வைக்க முடியும். அறைஞ்சதுக்கு தற்கொலை பண்ணிப்பாளோ, திட்டினா தற்கொலை பண்ணிப்பாளோன்னு பயப்படுறவர் அந்த மாதிரி எதையும் செய்யாம இருக்கணும்.! ஏன் உங்க மனைவிக்கிட்ட வெறுப்பை காட்டுறிங்க.?" என்றுக் கேட்டாள்.

முத்தமிழ் தலையை பிடித்தபடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

"மேடம்.. அவ பண்ணது தப்பு மேடம்.. இன்னைக்கு நான் அவளை லவ் பண்ண ஆரம்பிச்சேன்னா அப்புறம் எங்க எதிர்காலமே அத்தோடு காலி. அவளுக்கு தேவையான எல்லா விசயத்துக்கும் தற்கொலை மிரட்டல் விடுவா.‌. எனக்கு இந்த மாதிரி பிளாக்மெயில்ஸ் சுத்தமா பிடிக்காது.." கண்களை தேய்த்துக் கொண்டு சொன்னான்.

மங்கை சிரிப்போடு அவன் முகத்தை பார்த்தாள். கவலை நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது அவனின் முகத்தில்.

"நீங்க ரொம்ப யோசிக்கிறிங்க தம்பி.. நீங்க அந்த பொண்ணை ஏற்கனவே லவ் பண்றிங்க. ஆனா அதை சொல்ல மனசு வரல. காரணம் அவங்க பண்ண தப்பு பிடிக்கல. இப்ப பிரச்சனை அவங்களுக்கு கிடையாது. உங்களுக்கு மட்டும்தான். அந்த பொண்ணு மறுபடி எதுவும் பண்ணிக்க மாட்டான்னு முதல்ல நீங்க நம்பணும். அதுக்கு அந்த பொண்ணு உங்களுக்கு அந்த நம்பிக்கையை தரணும். அடுத்து அந்த பொண்ணு சாகற கட்டத்துல நீங்களும் சேர்ந்து வாழ்ந்த அந்த சில நாட்கள்ல இருந்து நீங்களா வெளி வரணும். அப்பதான் அந்த பொண்ணை நார்மலா உங்களால பார்க்க முடியும். ஆனா இதுக்கெல்லாம் முன்னாடி நீங்க அந்த பொண்ணை லவ் பண்றதா அந்த பொண்ணுக்கிட்ட ஒத்துக்கணும். நீங்க லவ் பண்றிங்கன்னு உங்களுக்கு புரிஞ்ச பிறகுதான் இந்த பிரச்சனையிலிருந்து வெளி வர அளவுக்கான மைன்ட் செட் உங்களுக்கு வரும். அந்த பொண்ணோட தற்கொலை முயற்சி அவளோட குடும்பத்துல இருந்தவர்களை விட உங்களை அதிகமா பாதிக்க காரணம் நீங்க அந்த பொண்ணை லவ் பண்ணதுதான். இது நீங்கதான் புரிஞ்சிக்கணும்.." என்று விளக்கிச் சொன்னாள்‌.

முத்தமிழ் ஏற்கனவே தூங்காத காரணத்தால் தலைவலியில் இருந்தான். இப்போது இந்த மருத்துவர் சொன்னது அவனுக்கு இன்னும் அதிக தலைவலியைதான் தந்தது.

உயிரே போனாலும் அவனால் அவளிடம் காதலை சொல்ல முடியாது‌. ஏனெனில் அவன் கொண்ட பிடிவாதம் அப்படி.

மருத்துவமனையில் இருந்து திரும்பியவன் வீடு வந்ததும் படுத்து உறங்கினான். ஆனால் அத்தனை களைப்பிலும் உறக்கம்தான் வர மறுத்தது.

***

புவனாவிடம் இருந்தும், தன் மன உளைச்சலில் இருந்தும் தப்பித்து விட்டோம் என்ற நம்பிக்கையில் தன் நிச்சயத்தை எதிர்பார்த்து காத்திருந்தான் முத்தமிழ். ஆனால் புவனா விஷம் அருந்தியதும் அவனின் மொத்த நம்பிக்கையும் உடைந்துப் போய் விட்டது.

மருத்துவமனை வராந்தாவில் புவனாவின் குடும்பத்தோடு நின்றிருந்த தன் தங்கையை பார்த்தபோது அவளின் எதிர்காலமே கேள்வி குறியாகி விட்டது போல இருந்தது அவனுக்கு.

புவனாவின் மீது ஆத்திரமும், கோபமுமாகதான் அவள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தான். விஷ கசப்பின் வாசம் குப்பென்று நாசியில் வீசிய கணமே அவனின் மனம் இரண்டாய் உடைந்துப் போய் விட்டது. அவளின் அருகே வந்து அமர்ந்தவன் மௌனமாய் அழுதான். அவள் இறக்க கூடாது என்று ரொம்ப வேண்டினான்.

ஒத்துக் கொள்ள முடியாத காதலாக இருந்தாலும் கூட அவனுடைய காதல் காதல்தான்.

அவளை இழக்க விரும்பவில்லை அவன். எங்கேயாவது கண் காணாத இடத்தில் வாழ்ந்தாலும் அவளும் நலமாக வாழ வேண்டும் என்றுதான் நினைத்தான். அவளின் சிறுபிள்ளைத்தனமான காதலை மறந்துவிட்டு அவள் அவனுக்கு ஏற்ற ஒருவனை திருமணம் செய்து வாழ வேண்டும் என்று நினைத்தான். அதற்காகவே அவளை வெறுத்து திட்டி விரட்டினான்.

மரணத்தையும் அவள் தொட முயன்று விட்டது அவனை உண்மையிலேயே உடைத்து விட்டது. அவளின் சிறப்பை அப்போதுதான் உணர்ந்தது அவனின் மனம். அவள் இல்லாமல் போனால் பிறகு எப்படி பூமி விடியும் என்று யோசித்தான். அவள் தன்னை சுற்றி வந்த நாட்களை நினைத்து மருகினான். அவளின் காதல் மொழிகளை அசைபோட்டு உருகினான். அவளின் முகத்தை இந்த நேரத்திலேயேதான் நன்றாக பார்த்தான்.

அவளின் மரணம் நெருங்கி கொண்டிருந்ததை அவனாலும் உணர முடிந்தது. அவளை விட்டு தர விரும்பவில்லை அவன். அதனால்தான் தன் மௌன கண்ணீரால் அவளின் கரங்களை ஈரம் செய்வதை விட்டுவிட்டு தன் வாய் திறந்தான்.

"பு.. புவனா.. சாரி.. விட்டு போகாத.. ஐ லவ் யூ.! ப்ளீஸ் என்னை விட்டு போகாத.. உன் காதலை ஏத்துக்காதது என் தப்புதான். நான் முட்டாள். நான் உன்னை ரொம்ப நேசிச்சேன் புவனா. ஆனா உன்னோடு சேர்ந்து வாழவோ, இந்த காதல்ங்கற ஒரு கமிட்மென்ட்ல இணையவோ விருப்பம் இல்ல. அதனாலதான் உன்னை எவ்வளவு பிடிச்சாலும் விரட்டி அடிச்சேன். ஆனா அதுக்கு நீ தர தண்டனை ரொம்ப அதிகம் புவனா. நீ விட்டு போனா அப்புறம் நான் எப்படி சந்தோசமா வாழ்வேன்.? நிஜமா நேசிக்கிறேன் புவனா. நீ செத்துப் போனா என் லைப் முழுசா பாலைவனம். தயவு செஞ்சி திரும்பி வந்துடு புவனா. உன்னை என்னை விட்டு பிரியாம பத்திரமா பார்த்துக்கறேன்.. உன் நேசத்தை முழுசா ஏத்துக்கறேன். உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன். நீ கேட்ட வாழ்க்கையை உனக்கே தரேன் புவனா. ப்ளீஸ் வந்துடு.. தவிக்க விட்டு போயிடாத புவனா‌.. என் லைப்பே நீதான். இதை லேட்டா புரிஞ்சிக்கிட்டேன்ங்கறதுக்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை தராதே.. வந்துடு புவனா.. ப்ளீஸ் வந்துடு.." என்று சிறு குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி கெஞ்சினான்.

அவனுக்கு அவளின் பிடிவாதத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை. அதனால்தான் அவள் நிச்சயம் பிழைத்து விடுவாள் என்று நம்பினான். அவனின் நம்பிக்கை வீண் போகவில்லை. அவனின் வார்த்தைகளே அவளை எழுப்பி விட்டு விட்டது.

அவள் பிழைக்க தனது வார்த்தைகள்தான் முழு காரணம் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அவன் தந்த வாக்குபடியே அவளை திருமணம் செய்துக் கொண்டான். ஆனால் அவளின் தற்கொலை முயற்சியை அவன் மன்னிக்க விரும்பவில்லை. அதே போல அவளை திருமணம் செய்துக் கொள்வதாக மட்டும்தானே வாக்கு தந்தோம், காதலிப்பதாக வாக்கு தரவில்லையே என்று தனது செயலுக்கு தானே காரணமும் தேடிக் கொண்டான்.

என்னதான் அவள் பிழைத்து விட்டாலும் கூட அந்த மருத்துவ அறையையோ, அவளின் மேனியின் மீது வீசிய விஷம் கலந்த மரண வாசத்தையோ அவனால் மறக்க முடியவில்லை. அவளை அணைத்தால் கூட அந்த மருத்துவ அறை கசப்பின் நினைவால் அவனுக்கு குமட்டுவது போலவே இருந்தது‌.

அவளை விலக்கவும் முடியவில்லை. தனது விலக்கல் கண்டு அவள் மீண்டும் எதாவது செய்துக் கொள்வாளோ என்று பயமாக இருந்தது‌. அதே சமயத்தில் அவளை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. எங்கே தான் அவளை ஏற்றுக் கொண்டுவிட்டால் அவளுக்கு தனது தற்கொலை முயற்சி சரியானது என்ற எண்ணம் உருவாகி விடுமோ என்றும் பயந்தான்.

மதில் மேல் பூனையாய் அவனை வாட்டி வதைத்தது அவனின் மனம். நெருப்பும் பனியுமாக மாறி மாறி அவனை தொந்தரவு செய்தது அவளின் அருகாமையும், அவளின் காதல் உரைக்கும் புன்னகைகளும். தற்கொலை முயற்சி செய்த அவளுக்கு ஒருநாள் வேதனை. ஒருவார சிகிச்சை. ஆனால் தனக்கு ஏன் இத்தனை நாட்களாகியும் தீராத வேதனை என்று தன்னையே நொந்துக் கொண்டான்.

***

புவனா வயல்காட்டில் களை பறிக்கும் வேலையில் இருந்தாள். அவளுக்கு உதவியாக இருக்கட்டும் என்று நான்கு பெண்களையும் வர சொல்லி இருந்தான் முத்தமிழ்.

அந்த பெண்களோடு உரையாடிக் கொண்டே வேலை செய்கையில் அலுப்பே தெரியவில்லை புவனாவிற்கு‌. இருந்தும் முத்தமிழின் அருகாமையை வேண்டியது அவளின் ஏக்கங்கள்.

மணி பதினொன்றை தாண்டியது.

"ஏம்மா.. பண்ணையக்காரி காப்பி தண்ணி கொண்டு வாம்மா.." என்றாள் ஒருத்தி.

இந்த நேரத்திற்கு தேனீர் தர வேண்டுமா என்ற சந்தேகத்தோடு வீடு நோக்கி புறப்பட்டாள் புவனா. வீட்டிற்கு வந்து பாட்டியிடம் சொன்னபோது "போன் பண்ணியிருந்தா நான் தூக்கி வந்திருப்பேனே.!?" என்றாள்.

"பரவால்ல பாட்டி.." என்றவள் அவசரமாக காப்பியை போட்டு பிளாஸ்க்கில் நிறைத்துக் கொண்டு சில டம்ளர்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள். முத்தமிழ் உறங்குகிறான் என்று பாட்டி சொன்ன தகவலை கேட்டவள் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தோடு கிளம்பினாள்.

மதிய நேரத்தில் அந்த பெண்களோடே சேர்ந்து உணவை முடித்தாள். பிற்பகல் வேளையில் பாட்டி தேனீர் கொண்டு வந்தாள். செல்லும் முன் முத்தமிழ் தந்ததாக சொல்லி வேலைக்கு வந்த பெண்களுக்கான சம்பள பணத்தை புவனாவிடம் தந்துவிட்டு சென்றாள்.

ஐந்து மணியளவில் நிமிர்ந்து நின்றார்கள் பெண்கள்.

"பொழுது சாயுது கண்ணு.. நாங்க கிளம்பட்டுங்களா.?" என கேட்ட பெண்களிடம் பணத்தை சமமாக பிரித்து தந்தாள் புவனா. இன்னும் ஒரு நாளைக்கு வேலை இருக்கும் என்று தோன்றியது.

"நாளைக்கும் வந்துடுங்க அக்கா.." என்று சொன்னாள். அவர்களும் தலையசைத்துவிட்டு கிளம்பினார்கள். புவனாவிற்கு கைகள் இரண்டும் எரிந்தது. வயலில் வேலை செய்யும் போதெல்லாம் இப்படிதான் கை எரிந்தது. கைகளை ஊதிக் கொண்டவள் வீடு நோக்கி கிளம்பினாள்.

அவள் குளித்து விட்டு வந்து தலை பின்னிக் கொண்டிருந்த நேரத்தில் அறைக்குள் வந்தான் முத்தமிழ்‌.

அவளை சில நொடிகள் யோசனையோடு பார்த்தவன் "சாரி.." என்றான்.

புவனா திரும்பி பார்த்து புன்னகைத்தாள். "பரவால்ல மாமா.." என்றாள்.

அவளுக்கு இன்னும் இரண்டு அரை விட்டிருக்கலாம் என்று இப்போது தோன்றியது அவனுக்கு. அவளின் சகிப்புத்தன்மை கூட அவனுக்கு வருத்தம் தரவில்லை‌. எங்கே தன்னையும் அதே போல மாற்றி விடுவாளோ என்றுதான் பயந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Bhagi

Super next epi ku waiting
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN