மணாளனின் மனம் 24

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முத்தமிழ் புவனாவை சில நொடிகள் உறுத்துப் பார்த்தான். அவன் நகர முயன்ற நேரத்தில் "மாமா.." என்று அழைத்து நிறுத்தினாள் அவள்.

கூந்தலில் பூச்சரத்தை சூட்டிக் கொண்டே அவனின் அருகே வந்தாள்.

"உங்க தங்கச்சியோடு என்னை கம்பேர் பண்ணிக்க வேணாம்ன்னு சொன்னிங்க நீங்க. ஆனா உங்க தங்கச்சியை விட ரொம்ப கேவலமாதான் நீங்க என்னை பார்க்கறிங்க.. நான் உங்க தங்கச்சி மாதிரி புத்திசாலி கிடையாது. என்னை எவ்வளவு வேணாலும் சீப்பா நினைச்சிக்கங்க.. ஆனா என் லவ்வை சீப்பா நினைக்காதிங்க.. காதலிச்சி முட்டாளா இருக்க எனக்கும் கூட ஆசை கிடையாது.. நீங்க ஒருத்தர் என் லைஃப்ல வராம இருந்திருந்தா நானும் முட்டாளாகியிருக்க மாட்டேன்.." என்றவளின் கண்கள் கண்ணீரால் கண்ணாடியை போல மின்னியது.

அவளின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவன் தன்னை மீறி அவளை தன்னோடு இழுத்து அணைத்தான்.

"விடுங்க என்னை.." உடைந்த குரலில் சொன்னாள்.

"என் சொல்றதுன்னு தெரியல புவனா.." என்றான் சிறு குரலில்.

"என் மனசை உடைக்கிறது தவிர வேறு எதுவும் தெரியாது உங்களுக்கு.! தெரியாதனமா ஒரு காதல்ல விழுந்துட்டேன்.! இதுக்கு எவ்வளவு வலியை அனுப்பவிக்கணுமோ!?" அழுகை குரலில் புலம்பினாள்.

"நான் உன்னை அழ வைக்கணும்ன்னு நினைக்கல.." என்றான்.

"பின்ன லவ் பண்ணனும்ன்னு நினைச்சிங்களோ.? நீங்களே நல்லா பேசுறிங்க.. அப்புறம் நீங்களே எரிஞ்சி விழுறிங்க. ஏன் திட்டுறிங்கன்னும் புரியல. நீங்களா நெருங்கி வரிங்க.. நீங்களா விலகி போறிங்க.. நான் ஜடம் கிடையாது மாமா. மனுசிதான்.! என்ன செஞ்சா உங்க லவ்வை அடைய முடியும்ன்னு நினைச்சி டிரை பண்ணிட்டு இருக்க சாதாரண மனுசி நான்.! உங்களால என்னை ஏத்துக்க முடியலன்னா பரவால்ல விடுங்க. நான் பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துட்டு போறேன். ஆனா ஆசை காட்டி மோசம் பண்ணாதிங்க.. அன்பை காட்டாதிங்க.. நீங்க சின்னதா சிரிச்சிட்டு விலகினா கூட மனசு ரொம்ப உடையுது.." தான் அனுபவித்த வேதனைகளின் உண்மைகளை அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவனுக்கும் இதயம் நொந்தது. ஆனால் வெளியே சொல்லதான் மனம் வரவில்லை. அவளின் காதல் அவளை எந்த அளவிற்கு படுத்தி எடுக்கிறது என்பதைப் புரிந்துக் கொண்டவனுக்கு, அது போல வேதனைபட விருப்பம் இல்லை.

இதுவரை கார்த்திக்கையும், அபிராமியையும் வைத்து காதலிக்காமல் இருந்தவன் இப்போது இவளின் வேதனை கண்டே காதலை வெறுத்தான்.

காதலித்தால் இப்படிதான் வேதனை கொள்ள வேண்டும் போல என்று நினைத்து கவலைப்பட்டான். அவன் அதை சத்தமிட்டு சொல்லியிருந்தாலாவது 'ஒரு தலைக் காதல்தான் வேதனை தரும், இருவரும் காதலிக்கையில் இன்பமாய் இருக்கும்.!' என்றாவது சொல்லி இருப்பாள் புவனா.

"ஓகே.. இனி இப்படி செய்யல.." என்றவன் அவளை விட்டு விலகி நின்றான்.

"உன் பீலிங்க்ஸோடு விளையாடுறேன்னு எனக்கு தெரியவே இல்ல.. சாரி.. இனி உன்கிட்ட நெருங்கல.." என்றவன் அமைதியாய் அந்த அறையை விட்டு வெளியே நடந்தான்.

புவனா திரும்பினாள். தன்னை கண்ணாடியில் பார்த்தாள்.

"உனக்கு சமார்த்தியம் இல்ல புவனா.." என்றாள் கவலையாக. கலங்கும் கண்களை துடைத்துக் கொண்டாள்.

"ஆசைப்பட்டு சண்டை போட்டு வாங்கிய வரம் எப்பவும் சாபமாதான் மாறும்ன்னு நிறைய பேர் சொல்லி இருக்காங்க‌‌.. நான்தான் நம்பாம அதே மாதிரி வரத்தை வாங்கிட்டேன்.." சோகமாக சொன்னாள்.

இரவு உணவு உண்ணவே பிடிக்கவில்லை அவளுக்கு. முத்தமிழும் கூட உணவில் கோலம்தான் போட்டுக் கொண்டிருந்தான். 'அவளை விலக்கி வை, காதல் டேஞ்சர்' என்று ஒரு குரல் சொல்லியது. அதே நேரத்தில் 'பாவம் அவ.. அவளை ஏன் அழ வைக்கிற.?' என்றுக் கேட்டது இன்னொரு மனம்.

அவளை சமாளிப்பதை விட தன் மனதை சமாளிப்பதுதான் பெரிய கஷ்டமாக இருந்தது அவனுக்கு‌.

உறங்கும்போது ஆளுக்கொரு பக்கம் திரும்பி படுத்திருந்தனர். இருவருக்கும் மனம் பாறாங்கல்லாக இருந்தது. இதயத்தின் மீது நூறு டன் இரும்பை தூக்கி வைத்தது போல பாரமாக இருந்தது. மூளை வேலை செய்ய மறுத்தது.

மறுநாள் முழுக்க புவனாவிற்கு வயலிலேயே வேலை இருந்தது. எரிந்த கைகளை கூட கண்டுக் கொள்ள முடியாத அளவுக்கு மனதின் வேதனை சுட்டது.

அவளின் முகத்தை அவனாலும் பார்க்க முடியவில்லை.

வயலில் வேலை முடிந்த மறுநாள் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவர் மங்கையிடம் சென்றான்.

"இங்கே ஏன் மாமா வந்திருக்கோம்‌.?" பயத்தோடு கேட்டவள் மங்கையின் அறைக்குள் நுழையும் முன் "எனக்கு பைத்தியம் இல்ல மாமா.." என்றாள்.

பற்களை கடித்தபடி அவளை முறைத்தவன் "பைத்தியங்கள்தான் டாக்டரை தேடி வருவாங்களா.? மனசு வேதனை தீர்த்துக்க கூட வருவாங்க‌.." என்றான்.

'என்னவோ.. புதுசா இருக்கு..' என நினைத்தபடி மங்கையின் முன்னால் அமர்ந்தாள் புவனா.

"உங்க மனைவி பேரழகு.!" என்றாள் அவள்.

புவனாவிற்கு கன்னங்கள் சிவந்துப் போனது.

"மேடம்.. என் பிரச்சனையை இன்னையோடு தீர்த்துடலாம்ன்னு வந்திருக்கேன்.. ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க‌.. இவ மறுபடியும் தற்கொலை பண்ணிக்க கூடாது. அதுக்கு ஏதாவது பண்ணுங்க.." என்றான் முத்தமிழ்.

புவனா அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள்.

'அடப்பாவி மாமா.. நான் எப்போடா தற்கொலை பண்ண போறேன்னு சொன்னேன்.? ஏதோ ஒரு முறை தடுமாறிட்டா அதுக்குன்னு ஆளாளும் அதையே வச்சி செய்விங்களா.?' மனதுக்குள் கேட்டாள்.

"நீங்க கொஞ்சம் வெளியே இருங்க தமிழ்.." என்றாள் மங்கை.

முத்தமிழ் புவனாவை பார்த்தபடி வெளியே நடந்தான். அவளை இங்கே அழைத்து வந்தது தவறோ என்றும் மனம் கவலைக் கொண்டது. பிரச்சனைகளை பேசாத வரையிலும் அது தீராது என்றும் புரிந்து வைத்திருந்தான்.

மங்கையின் கன்சல்டிங் அறையின் வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்தான். தொடையில் வலதுக் கையை கையை ஊன்றியவன் தன் உள்ளங்கையில் முகத்தைப் பதித்தான்.

அரை மணி நேரம் கடந்தது. உள்ளே இருந்து யாராவது வந்து தன்னை அழைப்பார்களா என்று காத்திருந்தான். ஆனால் ஒரு மணி நேரம் தாண்டிய பிறகும் கதவு திறக்கப்படவில்லை.

உட்கார்ந்திருக்க பிடிக்காமல் எழுந்து நின்றவன் அந்த வராந்தாவில் சற்று நேரம் நடை பழகினான். அடுத்த அரை மணி நேரம் தீர்ந்து போனது.

இதற்கு மேல் முடியாது என்ற எண்ணத்தோடு அவன் கதவை திறக்க இருந்த நேரத்தில் உள்ளேயிருந்து வந்தாள் புவனா. அவளின் கன்னத்தில் இருந்த கண்ணீரின் காய்ந்த கோடுகள்தான் அவனுக்கு முதலில் தென்பட்டது.

"புவனா.." என்றவனை ஏறிட்டு பார்த்தாள். கண்கள் மீண்டும் கலங்கியது அவளுக்கு.

"என்னை என் அம்மா வீட்டுக்கு கூட்டிப் போறிங்களா.?" எனக் கேட்டாள்.

தேம்பி தேம்பி சோர்ந்துப் போயிருந்தது அவளின் குரல். இவளை இங்கே கூட்டி வந்தது பிரச்சனையை தீர்க்காமல் மேலும் வம்புகளை இழுத்து விட்டுவிட்டதோ என்று முத்தமிழுக்கு கவலையாக இருந்தது.

"ஆனா ஏன்.?" சந்தேகமாக கேட்டான்.

"சும்மாதான் மாமா.. அம்மாவையும் அப்பாவையும் பார்க்கணும் போல இருக்கு.!" என்றாள்.

மங்கையின் அறைக்குள் நுழைய இருந்தவனை கைப்பற்றி நிறுத்தினாள். "இனி இங்கே வேலை இருக்காது மாமா.." என்றாள்.

"புவனா.. நான்.."

"எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம் மாமா.. என்னை எங்க வீட்டுக்கு கூட்டிப் போங்க‌‌.." என்றாள்.

முத்தமிழ் அமைதியாக வெளியே நடந்தான். புவனா கன்னங்களை துடைத்தபடி வெளியே நடந்தாள்.

இருவரும் புவனாவின் வீட்டிற்கு வந்தபோது யமுனா மட்டும்தான் வீட்டில் இருந்தாள். மகளையும் மருமகனையும் அழைத்து அமர வைத்தாள். புவனா தரையை பார்த்த வண்ணமே அமர்ந்திருந்தாள்.

யமுனா காப்பி கொண்டு வந்து தந்தாள். புவனா வேண்டாமென்று தலையசைத்து விட்டாள். இவளுக்கு என்ன ஆனது என்ற சந்தேகத்தோடு காப்பியை குடித்தான் முத்தமிழ்.

புவனா தன் அறைக்கு சென்றாள். ஏனோ ஓவென்று அழ வேண்டும் போல இருந்தது. கட்டிலில் அமர்ந்தவள் முகத்தை மூடிக் கொண்டு விம்மினாள்.

"தற்கொலை வீரர்களின் முடிவா இல்லை கோழைகளின் முடிவாங்கறது மேட்டர் இல்ல.. சுத்தமான உறவுகளை தன்னைச் சுத்தி வச்சிருக்கும் யாரும் தற்கொலை பண்ணிக்க கூடாது. இது மட்டும் தெரியும். நீ ஒருத்தரையாவது உண்மையா நேசிச்சி, அந்த ஒருத்தங்களும் உன்னை உண்மையா நேசிக்கறாங்கன்னு நீ நம்பினா நிச்சயம் தற்கொலை முயற்சி செய்யவே கூடாது. சின்ன காயம் பட்டாலே துடிச்சி போறவங்களை உன் கூட வச்சிக்கிட்டு நீ தற்கொலை பண்ணிக்க டிரை பண்ணா அது அவங்க மனசை எந்த அளவுக்கு பாதிக்கும்ன்னு உனக்கு புரியல.!

உன் சொந்தங்கள் எவ்வளவு பயம் பயந்திருப்பாங்கன்னு ஒரு செகண்ட் யோசிச்சி பாரு. உன் இடத்துல உன் அம்மாவோ உன் அண்ணனோ விஷம் குடிச்சி படுத்திருந்தா நீ என்ன மாதிரி பீல் பண்ணி இருப்பன்னு நினைச்சி பாரு.." மங்கை தன்னிடம் சொன்னதை நினைத்து பார்த்தவளுக்கு அழுகைதான் வந்தது.

நான்கைந்து வருடங்கள் முன்பு அவளின் சின்ன அண்ணன் கார்த்திக் இப்படிதான் டிராமா என்றுச் சொல்லி விஷம் குடித்தான். டிராமா என்று தெரிந்திருந்தும் கூட பதைபதைத்து போனாள் புவனா. அந்த நிமிடங்களை அவளால் மறக்கவே முடியாது. அடுத்த நொடிகளே இல்லாமல் பூமியே நின்று விட்டது போல ஒரு பிரமை. அண்ணன் இல்லாமல் தன்னால் எப்படி வாழ முடியும் என்ற கேள்வி அவளை பூதாகரமாக தாக்கியது‌. அவனோடு பேசி சிரித்த நாட்களும், அவனின் அன்பில் திளைத்து வாழ்ந்த நாட்களும் அவளின் மூளையில் ஓடி ஓடி அவளை பைத்தியமாக்கியது. பிழைத்து விடுவான், இது வெறும் டிராமா என்று அவளுக்குள் சொல்லிக் கொண்டாலும் கூட மருத்துவர்கள் தோற்று விட்டால் என்ன ஆகுமோ என்று பயந்து விட்டாள். டிராமா என தெரிந்த தனக்கே அவ்வளவு பயமும், கவலையும் ஏற்பட்டு இருந்தால் சாவின் எல்லையில், மருத்துவர்களும் கை விரித்து விட்டு நிலையில் இருந்த தன்னால் அனைவரும் எவ்வளவு பயந்திருப்பார்கள் என்பதை யோசித்துப் பார்த்தாள்.

அறையின் கதவு மெள்ளமாக திறந்தது. நிமிர்ந்து பார்த்தாள். முத்தமிழ் தயக்கமாக உள்ளே வந்தான். அவளின் அறைக்குள் இன்றுதான் முதல் முறையாக நுழைந்திருந்தான். மறுவீட்டு அழைப்பிற்கு, மற்ற சீர் அழைப்பு என்று எதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை அவன். அவளும் இவனின் விருப்பமே முக்கியம் என்று பிறந்து வீடு வராமல் இருந்து விட்டாள்.

முத்தமிழ் அவளை வருத்தமாக பார்த்தான். அந்த அறையையும் பார்த்தான். யமுனா சுத்தம் செய்து வைத்திருந்தாள் அறையை. புவனாவை போலவே சிறியதாக அழகாக இருந்தது அறை.

"என்ன ஆச்சி புவனா.? அந்த டாக்டர் என்ன சொன்னாங்க.?" என்றுக் கேட்டபடி தயக்கமாக கட்டிலில் அமர்ந்தான்.

புவனா முகத்தை துடைத்துக் கொண்டு அவனை பார்த்தாள்.

"அவங்க சரியா சொன்னாங்க மாமா.. எல்லாமே சரியா சொன்னாங்க.. நான் எவ்வளவு முட்டாளா இருந்திருக்கேன்னு இன்னைக்குதான் புரிஞ்சது.. நிஜமா சாரி மாமா.. உங்களுக்கு கல்யாணம்ன்னு கேள்விப்பட்ட பிறகு வாழவே பிடிக்கல. வாழ்ந்தும் பிரயோஜனம் இல்லன்னு தோணுச்சி. அதான் தப்பு பண்ணிட்டேன். ஆனா உங்களுக்கு இது எந்த அளவுக்கு வலியை தரும்ன்னு நான் யோசிக்கவேயில்லை. நான் சாக மட்டும்தான் நினைச்சேனே தவிர என் சாவை வச்சி மிரட்டி உங்களை கல்யாணம் பண்ணனும்ன்னு நினைக்கல. உண்மையைதான் சொல்றேன் மாமா.. உங்களை உங்களாவேதான் அடைய ஆசைப்பட்டேனே தவிர உங்க மூளையை சிதைச்சி சிந்திக்க விடாத பொம்மையா மாத்தி வாழ நினைக்கல.." என்றாள் அழுகையோடு.

அவள் அழுவது அவனுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அவளுக்கு புத்தி வந்தால் சரியென்று நினைத்தான். எதுவாய் இருந்தாலும் சரியென்று அவளை தன்னோடு அணைத்துக் கொண்டவன் "சரி.. அழாதே.. எல்லாம் சரியா போயிடும்.!" என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN