மணாளனின் மனம் 29

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவனா தனக்கு கட்டுப்பட்டுவிட்டாள் என்று நிம்மதி அடைந்தான் முத்தமிழ். அன்று இரவு நிம்மதியாக உறங்கினான். புவனாதான் உறங்காமல் அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

பெட்சீட் ஒன்றை போர்த்தியபடி அமர்ந்திருந்தவள் அவனின் முகத்தை விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த உடைகள் அனைத்தும் தரையில் தாறுமாறாக கிடந்தன.

'மனுசன் பயம் பயம்ன்னு சொன்னார்ன்னு அவர் சொன்னதை நம்பியிருக்கவே கூடாது..' என்று நினைத்தவள் பொய் கோபத்தோடு அவனை முறைத்தாள்.

'உடம்பெல்லாம் நிஜமாவே வலிக்குது.. சாது மிரண்டா காடு கொள்ளாதுன்னு சொன்னதை நான்தான் ஞாபகம் வச்சிக்கிட்டு இருந்திருக்கணும்..' என்று பொய்யாகவே சலித்தும் கொண்டாள்.

'அவருக்கு லவ்வுன்னா பயம். ஆனா லவ் பண்ண ஆரம்பிச்சா அதிலும் இதே மாதிரி பைத்தியக்காரதனமாதான் இருப்பாரோ.!? அதனாலதான் லவ் பண்ணவே பயப்படுறார் போல.. ஆனாலும் புவனா லவ்வுல உனக்கு அடிச்சது செம லக்குதான்.! இதுக்காக நீ இன்னும் அஞ்சி வருசம் இல்ல ஐம்பது வருசம் கூட காத்திருக்கலாம்..' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் அவனின் கன்னத்தை வலிக்காதவாறு மெள்ளமாக கிள்ளினாள். 'மை டியர் ஸ்வீட் பாய்.. உங்களுக்கு நேசம் பாசம் எதுவும் வேணாமோ.? நானும் காட்டல.. ஏனா உங்களின் விருப்பமே என் விருப்பமும்..' என்றபடி அவனின் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

'கல்யாண நாள் அன்னைக்கே இதுக்கெல்லாம் நேரம் குறிச்சி தந்தாங்க.. ஆனா இந்த மகராசனை கல்யாணம் பண்ணத்துக்கு சாங்கியம் சடங்குக்கு கூட அவசியம் இல்லாம போயிடுச்சே.!' என்று வருத்தப்பட்டாள்.

இவள் தன் மேல் சாய்ந்ததும் முத்தமிழின் கரங்கள் அனிச்சையாக அவளை அணைத்துக் கொண்டன.

காலையில் அலாரம் அதுவாக அடித்து அதுவாகவே ஓய்ந்து போய் விட்டது. சூரியன் சுள்ளென்று ஒளி வீசிய பிறகே கண்களை திறந்தான் முத்தமிழ். நெஞ்சில் பாரம் உணர்ந்து குழப்பமாக பார்த்தான். புவனா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். தலை கலைந்து, முகத்தில் ஆங்காங்கே சிவந்து அலங்கோலமாக இருந்தாள். ஆனால் அதிலும் பேரழகாகவே தெரிந்தாள் அவனுக்கு.

'மை வொய்ப்..' என்று இறுக்கமாக அணைத்துக் கொண்டான். கண்களை மூடியவனின் இதழ்களில் புன்சிரிப்பு ஓடியது. இரவின் நினைவில் வெட்கத்தில் அவனுக்கும் கன்னங்கள் சிவந்தது.

"புவனா.." அவளின் காதோரத்தில் மெல்லமாக அழைத்தான்.

புவனா விசுக்கென்று எழுந்து அமர்ந்தாள். அடுத்த நொடியில் பெட்சீட்டை எடுத்து தன்னை மறைத்துக் கொண்டாள்.

"என்னாச்சி மாமா.?" என்றாள் பதட்டமாக.

திருதிருவென விழித்தவன் "பொழுது விடிஞ்சிடுச்சி.. அதான் எழுப்பினேன்.." என்றான்.

"ஓ‌‌.." என்றவள் கடிகாரத்தை பார்த்தாள். "அச்சோ மணி ஏழரை.." அவசரமாக கீழிறங்கி அதே அவசர கதியில் உடைகளை அணிந்தாள்.

"சாரி மாமா தூங்கிட்டேன்.." என்றவள் அவசரம் குறையாமல் குளியலறைக்குள் புகுந்தாள்.

முத்தமிழுக்கு மனமெல்லாம் பரபரவென்றே இருந்தது. இரவின் மயக்கம் இன்னும் தீராமல் புரண்டுக் கொண்டிருந்தான்.

புவனா ஈர கூந்தலில் துண்டை முடிந்துக் கொண்டு குளியலறையிலிருந்து வெளியே வந்தாள். முத்தமிழ் அவள் பக்கம் திரும்பினான். அவள் அணிந்திருந்த மயில் நீல புடவை அவளையே தோகையாக மாற்றிக் காட்டியது போலிருந்தது அவனுக்கு. அவள் நேற்றை விட இன்று ஏனோ ஆயிரம் மடங்கு அழகாகி போனது போல தோன்றியத.

கூந்தலை அவசரமாக உதறி இரு பக்கமும் ஹேர் பின்னை குத்தி அப்படியே உலர விட்டவள் ஸ்டிக்கர் ஒன்றை நெற்றியில் ஒட்டிக் கொண்டு இவன் பக்கம் திரும்பினாள்.

"என்ன ஆச்சி மாமா.?" என்றாள் குழப்பமாக. அவனின் கண்கள் அவளை பார்வையால் மேய்ந்துக் கொண்டிருந்ததை அவளாலும் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் அவனின் முக மாற்றத்தை வைத்து எதையும் கணிக்க முடியாதே என்றுதான் அவனிடமே கேட்டாள்.

"நீ அழகா இருக்க தெரியுமா.?" என்றான்.

கன்னங்கள் சூடாவதை போலிருந்தது. இருந்தும் சிரமப்பட்டு தன் வெட்கத்தை மறைத்துக் கொண்டவள் "ஓ.. சரி மாமா.." என்றாள் தன் வழக்கமான குரலில்.

"இங்கே ஒரு நிமிசம் வாயேன்.." என்று இரு கைகளையும் நீட்டி அழைத்தான்.

"நா.. நான்.. எனக்கு வேலை இருக்கு.. நான் போறேன்.." என்றவள் அவசரமாக கதவை நோக்கி நடந்தாள். அவள் கதவை தாழ் திறக்கும் முன் அவளை சிறை பிடித்தான். அவனின் இரு கரங்களின் இடையே அப்பாவியாக நின்றுக் கொண்டிருந்தவள் "எனக்கு நிறைய வேலை இருக்கு.." என்றாள் தடுமாறிய குரலில்.

"இங்கேயும்தான் வேலை இருக்கு.." என்றவன் அவளின் இதழை நோக்கி குனிந்தான்.

"நீங்க இன்னும் பல் வி.." அவளை எங்கே முடிக்க விட்டான்?

முழுதாய் ஒரு நிமிடம் முடிந்துப் போனது. விலகி நின்றவனை கோபமாக பார்த்தவள் "எனக்கு வேலை இருக்கு.." என்றாள் பாதி கோபமும் பாதி சிணுங்கலுமாக.

"வேலைகளை சமாளிக்க உனக்கு திறமை இல்லன்னு என்கிட்ட நடிக்காத.." என்றவன் மீண்டும் அவளின் கழுத்தை நோக்கி குனிய அவனின் நெஞ்சில் கை வைத்து விலக்கி நிறுத்தியவள் "வேணாம் போதும்.." என்றாள்.

குழப்பமாக அவளைப் பார்த்தவன் "ஏன்.?" என்றான்.

"நேசம் பாசம் காட்ட கூடாதுன்னு சொன்னிங்க இல்லையா.? அதை விட மோசம் மோகம்.. உங்களை நான் மோகத்தால மயக்கினேன்னு ஒரு நாளைக்கு பழி போடுவிங்க.. நீங்க சொன்னது போல லிமிட்டோட இருந்துக்கறதுதான் கரெக்ட்.. நைட் ஒன்பதுக்கும் முன்னாடி என்னை எப்பவும் தொடாதிங்க.." என்றாள் கண்டிப்பு நிறைந்த குரலில்.

முத்தமிழ் அவளை முறைத்தான். 'எனக்கே கன்டிசன் போடுறியா குட்டி சாத்தானே.?' என்று மனதுக்குள் கறுவினான்.

"சீக்கிரம் போய் டிரெஸ்ஸை போட்டுக்கங்க.. இல்லன்னா நான் இப்படியே கதவை திறந்துடுவேன்.." என்று தாழ்பாளை நகர்த்திக் காட்டினாள்.

"வாய்தான் ஜாஸ்தின்னு நினைச்சேன்.. ஆனா உனக்கு திமிர் அதை விட ஜாஸ்தியா இருக்குடி.." என்றவன் குளியலறையை நோக்கி நடந்தான்.

"ஆமா.. உங்களுக்கு பைத்தியம் ஜாஸ்தியா இருக்கே அப்படிதான் இதுவும்.." என முனகியவள் தனது தினசரி வேலைகளை பார்க்க கிளம்பினாள். ஆனால் அதற்கு முன்பே பாட்டியும் யசோதாவும் வீடு வாசலை சுத்தம் செய்து சமைத்துக் கொண்டிருந்தார்கள்.

புவனா சமையலறைக்குள் நுழைந்தாள். யசோதாவின் காலில் விழுந்து வழக்கம் போல ஆசி வாங்கிக் கொண்டாள்.

"நல்லாரும்மா.!" என்று வழக்கம்போல சொன்ன யசோதா சமையலில் கவனமாக இருந்தாள்.

அத்தையின் அருகிலேயே நின்றுக் கொண்டிருந்தவள் "நான் குழம்பு வைக்கிறேன் அத்தை.." என்றாள் சில நொடி மௌனத்திற்கு பிறகு.

"நான் பண்ணிடுறேன்.. காப்பி ஆறி போச்சி பாரு.. சூடு பண்ணி குடிச்சிடு. அவனுக்கும் கொடுத்துடு.." என்றாள்.

புவனா காப்பியை சூடு செய்தாள். காப்பியை கோப்பைகளில் ஊற்றுகையில் கைகள் இரண்டும் நடுங்கியது.

முத்தமிழ் தன் முன்னால் நீட்டப்பட்ட காப்பி கோப்பையை பார்த்தான். கண்டு கொள்ளாதவன் போல கண்ணாடியில் தலை வாரினான்.

"மாமா காப்பி.." என்றாள்.

"நீயே குடி.." கோபத்தோடு சொன்னவனின் கையை பற்றி தன் பக்கம் திருப்பினாள்.

"மாமா.. இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயம் கிடையாது தெரியுதுங்களா.? நான் உங்க பேச்சை கேட்டதாலதான் விலகி நிற்கறேன்.. நான் உங்களை கவுக்க ஆசைப்படல.. நீங்க நீங்களா இருக்கணும்ன்னு ஆசைப்படுறிங்க.. அதுக்கு நானும் ஒத்துழைச்சி போகணும்.. உங்களுக்கும் எனக்கும் நடுவுல காதல் கிடையாது.. புருசன் பொண்டாட்டி உறவும் கிடையாது. இது அக்ரிமெண்ட் லைஃப்.. நைட் சொன்னதை அதுக்குள்ள மறந்துட்டிங்களா.?" கடுமையான குரலில் கேட்டாள்.

முத்தமிழுக்கு அனைத்தும் நினைவில்தான் இருந்தது. ஆனால் அவனின் கட்டுப்பாட்டை மீறி அல்லவா ஆசை பொங்கிக் கொண்டிருக்கிறது. அவன் சொல்லாமலேயே அவனின் மனம் அவளுக்கு புரிந்துப் போனது.

"நான் உங்களை லவ் பண்றேன். ஆனா அதை வெளியே காட்ட கூடாதுன்னு எப்படி கன்டிசனோ.. அது போல நீங்க என் மேல ஆசைப்பட்டாலும் காலை அஞ்சி டூ நைட் ஒன்பது வரை உங்க ஆசையை என்கிட்டயும் காட்ட கூடாது.. உடல் இரண்டும் இணைவது உங்களுக்கு எந்த மீனிங்கும் தராது‌. ஆனா இதுல எனக்கு மீனிங் இருக்கு. வெளிக்காட்ட கூடாத காதலாவே இருந்தாலும் எனக்கு மீனிங் இருக்கு.. நான் எப்படி உங்களுக்கு கட்டுப்படுறேனோ அது போல நீங்களும் என் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டுதான் ஆகணும்.. ஏனா எனக்கும் மனசு இருக்கு.!" என்றவளுக்கு கடைசி வாக்கியங்களை சொல்லும்போது மட்டும் குரல் கம்மி விட்டது. அவன் முன் இருந்தால் அழுது விடுவோமோ என்று பயந்து அவசரமாக அங்கிருந்து வெளியே வந்து விட்டாள்.

அவன் சொன்னது அவனுக்கு சுட்டுவிட்டது. வாரிய தலையை கலைத்துவிட்டுக் கொண்டான். சோகமாக தன் உருவத்தை கண்ணாடியில் பார்த்தான். 'காதலை கண்டுபிடிச்சவன் கையில கிடைச்சா வெட்டி போடணும்..' என்றுப் பற்களை அரைத்தான்.

அவனுக்கு காலை உணவு பரிமாற புவனா வரவில்லை. "அவ எங்கே.?" என்று அம்மாவிடம் கேட்டான்.

"மிளகா காட்டுக்கு மருந்தடிக்க வர சொல்லி இருந்தாளாம்.. அதான் அதை பார்க்க ஓடிட்டா.. நீ ஆபிஸ் போகும்போது வழியில அவளை கூட்டிக்க சொன்னா.." என்ற யசோதா "எதுக்குதான் இத்தனை வேலை செய்றாளோ.? அசல் உன்னை போலவே மாறிட்டா.. வேலை வேலைன்னே மாயுறா.. நாங்களா தேடி பிடிச்சிருந்தா கூட இப்படி ஒருத்தியை கண்டுபிடிச்சிருக்க முடியாது.." என்றாள்.

முத்தமிழுக்கு உணவு ஏனோ தொண்டையில் நெருடியது. அவனுக்கு ஏற்ற ஆளாக அவள் மாறிக் கொண்டிருக்கிறாள் என்ற விசயம் பயத்தையும் மகிழ்ச்சியையும் ஒரு சேர தந்தன.

அவன் வயலுக்கு வந்தபோது மருந்தடிப்பவனிடம் என்னவோ பேசிக் கொண்டிருந்தாள் புவனா. இவனின் வண்டி ஹாரன் சத்தம் கேட்டதும் பாய்ந்தோடி வந்தாள்.

"நீங்க சொன்ன மருந்தையே அடிச்சாச்சி மாமா.. இது மீதி காசு.." என்று பணத்தையும், மருந்து பாட்டிலையும் அவனின் கையில் தந்தாள்.

போன வாரத்தில் சொல்லியிருந்தான். நடுவில் தாய் வீடு சென்றதில் மறந்திருப்பாள் என்று நினைத்தான். ஆனால் மறவாமல் அவளின் வேலைகளை கவனத்தோடு செய்தது அவனுக்கு சிறு கர்வத்தை தந்தது.

இவள் அலுவலகம் வந்ததும் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் மதுமிதா. "நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா.?" என்றாள்‌.

"நானும்தான் அக்கா‌‌.." என்றவள் தாங்கி தாங்கி தன் அறைக்குள் நடந்துப் போன தயாளனை கண்டுவிட்டு "தயா அண்ணாவுக்கு என்ன ஆச்சி.?" என்றுக் கேட்டாள்.

"வீரனுக்கு கால் சுளுக்கி முட்டிக்கால் பெரண்டுடுச்சி.." உதட்டை கோணிக்கொண்டு சொன்னாள் மதுமிதா.

"அச்சோ பாவம்.." என்றாள் புவனா.

"அதெல்லாம் நல்லாகிடுவான்.." என்றவள் "நீ ஏன் உன் அம்மா வீட்டுக்கு போன.. தமிழ் உன்னை அடிச்சி ஏதும் வச்சிட்டானா.?" என்றுக் கேட்டாள்.

நேற்று வாங்கிய அறை நினைவில் வந்துப் போனது. அதே நேரத்தில் அவர்களை தாண்டிப் போன முத்தமிழுக்கும் அதேதான் நினைவில் வந்தது.

'அடிச்சது கொஞ்சம் ஓவர்தான்.. ஆனா சாரி கேட்டாலும் பிரயோஜனம் இல்ல.. இந்த விசயத்துல இவளுக்கு எங்கே சொரணை.?' என்று நினைத்தபடி கடந்துப் போனான்.

ஒரு வாரம் கடந்து சென்றது. முத்தமிழிடமிருந்து அதிகம் விலகிப் போனாள் புவனா. இரவை தவிர மற்ற நேரங்களில் அவனிடம் நெருங்கவில்லை. உணவு பரிமாறவில்லை. அவனோடு முன்பு போல சிணுங்கிச் சிணுங்கிப் பேசி வால் போல சுற்றிக் கொண்டிருக்கவில்லை. அவனாக அழைத்தால் மட்டுமே பேசினாள்.

அவளின் திடீர் மாற்றம் அவனைத்தான் அதிகம் பாதித்து விட்டது. அவள் விலகிச் செல்வது தனது நன்மைக்குதான் என்று தெரிந்திருந்தாலும் கூட அவனின் மனம் பேயாட்டம் போட்டு அவனைக் கொன்றது.
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN