மணாளனின் மனம் 39

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மதிய உணவு உண்ணுகையில் மதுமிதாவோடு கொஞ்சி கொஞ்சி பேசினாள் புவனா.

"இவரை லவ் பண்ணதுல எனக்கு எத்தனையோ நட்டங்கள் ஏற்பட்டு இருக்கு அக்கா.. ஆனா நீங்களும் தயா அண்ணாவும், சத்யா அண்ணாவும் எனக்கு கிடைச்சது இந்த காதல்ல கிடைச்ச ஒரே லாபம்.." என்றாள்.

'வர வர கொழுப்பும் வாயும் அதிகமாதான் போயிட்டு இருக்கு இவளுக்கு.!' என்று கடுகடுப்போடு நினைத்தான் முத்தமிழ்.

'என்னவோ கோல்ட் வார் நடக்குது.. இவங்களுக்கு பஞ்சாயத்துக்கு போனா சண்டையை முடிக்கும் முன்னாடி நம்மளை முடிச்சிடுவாங்க..' என நினைத்த சத்யா முத்தமிழையும், புவனாவையும் கண்டும் காணாதது போல உணவை உண்டான்.

"சத்யா அண்ணா.. நான் இன்னைக்கு உங்களுக்கு பிடிச்ச கத்தரிக்கா பொரியல் பண்ணி கொண்டு வந்திருக்கேன்.. சாப்பிட்டு பாருங்க.." என்று அவனுக்கு பொரியலை பரிமாறினாள்.

முத்தமிழ் அவளை வெறித்தான். இது போல தனக்கு ஒரு நாளாவது பரிமாறி இருப்பாளா என்று எரிச்சலடைந்தான்.

மதுமிதாவோடு குழைந்து குழைந்து பேசினாள் புவனா. "தயா அண்ணா நீங்க உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி.. அதனாலதான் மது அக்கா உங்களுக்கு கிடைச்சிருக்காங்க.." என்று பாராட்டினாள்.

"ஆனா தமிழ் அளவுக்கு யாரும் அதிர்ஷ்டசாலியா இருக்க மாட்டாங்க.." என்ற சத்யாவை கேள்வியாக பார்த்தான் முத்தமிழ்.

"ஆனா ஏன்.?" அவன் சொல்லும் காரணத்தை அறிந்துக் கொள்ளும் ஆவலில் கேட்டாள் மதுமிதா.

"இந்த உலகத்துல பணத்தை விடவும் பற்றாக்குறையா இருப்பது அன்பும் காதலும்தானே.!? இவனை ஒரு பொண்ணு முழுசா எட்டு வருசமா லவ் பண்ணி இருக்கா.. இவனை மறக்க முடியாம விஷம் குடிச்சி இருக்கா.. நமக்கெல்லாம் எங்கே.? குணத்தை பார்த்து லவ் பண்றவங்க இங்கே எங்கே இருக்காங்க.?" என்றுச் சலிப்போடுக் கேட்டான்.

முத்தமிழ் அலட்சியமாக நண்பனை பார்த்தான்.

புவனா கசப்பாக சிரித்தாள்.

"அதெல்லாம் சும்மா அண்ணா.. கண்டவுடனே காதலிக்கிறது, காதலுக்காக விஷம் குடிக்கறதெல்லாம் கதைகளிலும் காவியங்களிலும் வேணா பாராட்டப்படலாம் அண்ணா.. ஆனா நிஜத்துல முட்டாள்ங்கற பெயர் மட்டும்தான் கிடைக்கும். இப்படி பண்றதெல்லாம் உண்மையிலேயே முட்டாள்தனம்தான் அண்ணா.. இவர் அப்பவே படிச்சி படிச்சி சொன்னாரு.. இவருக்கு என் லவ்வை பார்த்து பொறாமைன்னு நினைச்சி நான்தான் நம்பாம போயிட்டேன்.!" என்றாள்.

முத்தமிழ் அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு உணவுக்கு பார்வையை திருப்பினான்.

"நல்லா யோசிச்சி பார்த்தா காதலே முட்டாள்தனம்தான் புவி.. தேவைப்படுறவங்களுக்கு காதல் சொர்க்கம். வெறுப்பவங்களுக்கு அது பயங்கரமான நரகம். தூரத்துல இருந்து பார்ப்பவங்களுக்கு கானல் நீர். பக்கத்துல வந்தாலும் அது எரிமலை குழம்புதான்.." என்று அடுக்கிக் கொண்டே சென்ற தயாவின் முன் கையை நீட்டி நிறுத்தினாள் மதுமிதா.

"இப்ப நீ என்ன சொல்ல வர.?" என்றுக் கேட்டாள்.

"அந்த காதல் புரியணும்ன்னா எதிராளியும் அதே அளவுக்கு லூசா இருக்கணும்.. அப்பதான் அவங்க இரண்டு பேர் காதலும் ஒரே கோட்டுல சிங்காகும்.!" என்றான்.

"வாவ்.. பெரிய கண்டுபிடிப்பு.." என்று கேலி செய்த முத்தமிழ் உணவை முடித்துக் கொண்டு எழுந்து நின்றான். புவனாவும் அவனோடு சேர்ந்து எழ முயன்றாள். அவளை முறைத்தவன் "முழுசா சாப்பிட்டு வா.." என்றான்.

"அப்படின்னா நான் சாப்பிட்டு முடிக்கும்வரை நீங்களும் உட்காருங்க.." என்று இருக்கையை கைக் காட்டினாள் புவனா.

'என்னவோ நடக்குது.!' மனதில் நினைத்தான் தயா.

முத்தமிழ் அவளை கேலியாக பார்த்தான்.

"ஒரு பேமிலியில் கொஞ்சம் பேர் மட்டும் இருக்கும்போது அந்த கொஞ்ச பேர்ல கடைசி ஆளும் சாப்பிட்டு முடிக்கும்வரை மத்தவங்களும் அவங்களோடு உட்கார்ந்து காத்திருப்பாங்க.. அதுதான் மெச்சூரிட்டி.!" என்றாள் ஒற்றை கண்ணை அடித்தபடி.

முத்தமிழ் பார்வையை சுழற்றினான். "அந்த ஒரு ஆள் சாப்பிட ஒரு மணி நேரம் கூட ஆகும். அதுவரைக்கும் எல்லோரும் உட்கார்ந்து இருக்கணுங்கறது முட்டாள்தனம்.!" என்றான் எரிச்சலாக.

"ஓ.. நாளை பின்ன உங்க பாப்பா தட்டுல இருக்கும் சாப்பாட்டுல பாதியை கீழே இறைச்சிட்டு ஒன்னு இரண்டு வாய் மட்டும் சாப்பிட ஒரு மணி நேரம் டைம் எடுத்துக்கிட்டா அப்பவும் உங்க பாப்பாவை தனியாவே விட்டுட்டு போயிடுவிங்களா.?" என்றுக் கேட்டாள் சாதத்தில் கோலமிட்டபடி.

முத்தமிழ் அவளை முறைத்தபடி மீண்டும் இருக்கையில் அமர்ந்தான்.

"என்கிட்ட வாதாடிட்டு இருந்த டைம்க்கு நீ சாப்பாட்டை சாப்பிட்டு முடிச்சிருக்கலாம்.!" என்று குற்றம் சாட்டியவன் "அதுவும் இல்லாம என் பாப்பாவை உன்னோடு ஒப்பிட்டு பேசாத.. அவ உன்னை மாதிரி முட்டாளா இருக்க மாட்டா.!" என்றான் அடிக்குரலில்.

புவனா தன் உதட்டை கடித்தாள். உணவிருந்த பாக்ஸை மூடி வைத்துவிட்டு எழுந்து நின்றாள்.

"மது அக்கா.. எனக்கு லேசா தலைவலி.. நான் லீவ் எடுத்துக்கிறேன்.." என்றவள் சாப்பாட்டு பேக்கில் முத்தமிழின் காலி டிபன் பாக்ஸையும் எடுத்து நிரப்ப ஆரம்பித்தாள்.

அவளின் கையை பற்றினான் முத்தமிழ். அவளின் செயலுக்கு தன் விழிகளினால் விளக்கம் கேட்டான்‌.

"தலைவலி மாமா.." என்றவளுக்கு குரல் லேசாக உடைந்திருந்ததை கண்டவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஹாஸ்பிட்டல் போலாமா.?" என்றுக் கேட்டவனிடம் மறுப்பாக தலையசைத்தாள்.

"நான் வீட்டுக்கு போறேன்.."

"ஆனா எப்படி போவ.? பஸ்ஸுக்கும் இன்னும் டைம் இருக்கு.. நீ ரூம்ல ரெஸ்ட் எடு.. நான் சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வந்துடுறேன்.. இரண்டு பேரும் போகலாம்.." என்றான்.

சரியென தலையசைத்தவள் கையை சுத்தம் செய்துக் கொண்டு அவர்களின் அலுவலக அறைக்கு சென்றாள்.

"இங்கே என்னவோ நடக்குது.!" கத்தரிக்காய் பொரியலை சாப்பிட்டபடியே சொன்னான் சத்யா.

"ஆமா.. அவங்க இரண்டு பேரும் மறைமுகமா போர் பண்ணிட்டு இருக்காங்க.." என்றாள் மதுமிதா.

முத்தமிழ் தனது மேஜையின் டிராயரில் தலைவலி மருந்தை தேடி எடுத்துக் கொண்டு வந்து புவனாவின் முன்னால் வைத்தான். கண்களை மூடி இருக்கையில் தலை சாய்ந்து இருந்தவள் அரவம் கேட்டு கண்களை திறந்தாள். கலங்கிய விழிகளோடு அவனை வெறித்தாள்.

"ரொம்ப வலியா.?" அவளின் நெற்றியை தொட முயன்றான். புவனா அவனின் கையை தட்டி விட்டாள்.

"போயிடுங்க மரியாதையா.. என் பக்கத்துலயே எப்பவும் வராதிங்க.." என்று சிறு குரலில் சீறினாள்.

முத்தமிழுக்கு அவளின் கோபம் புரியவில்லை. "எதுக்கு இப்ப புதுசா சீன் போட்டுட்டு இருக்க.?"

பற்களை கடித்தபடி எழுந்து நின்றாள்.

"நான் ஒரு விசயம் நடக்கவே கூடாதுன்னு ரொம்ப பயந்தேன்.. இப்ப அது நடந்துடுச்சி.. நான் மெச்சூரா பிகேவ் பண்ண நினைச்சாலும் உங்களோட குணம் என்னை அப்படி நடக்க விட மாட்டேங்குது.!" என்றவளை குழப்பமாக பார்த்தான்.

"நமக்கு குழந்தை வேணாம்ன்னு நான் ஆசைப்பட்டேன்!" என்றவள் அவனின் கண்களில் தெரிந்த அதிர்ச்சியை கண்டு திகைத்தாள். ஆனால் அதற்குள் அவனின் விழிகள் பழைய நிலைக்கு வந்து விட்டது.

"நமக்கு ஒரு குழந்தை பிறந்தா நீங்க அந்த குழந்தைக்கு காட்டுற அன்பை பார்த்து நான் அந்த குழந்தை மேல பொறாமை பட்டுடுவேனோன்னு பயந்தேன் நான்.!" அவள் சொன்னது கேட்டு தடுமாறியது அவனின் இதயம்.

"கொஞ்சம் முன்னாடி நீங்க உங்க பாப்பாவை புகழ்ந்து பேசியதும் நான் பொறாமையா பீல் பண்ணேன்.!" என்றவள் அவனின் அலட்சியத்தை கண்டுவிட்டு "இதெல்லாம் மேட்டரான்னு உங்களுக்கு தோணுது இல்ல.. ஆனா எனக்கு தோணுது.. உங்களால நான் பைத்தியமா மாறிட்டு இருக்கேன். அதோ அந்த டேபிள் மேல தலை வச்சி தூங்கிட்டு இருக்கிங்கன்னு அந்த டேபிளை கூட கொட்டி வச்சேன் நான்.. ஒரு நாள் என் மடியில் படுத்து தூங்கி இருக்கிங்களான்னு கேட்க தோணுது.. எனக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாத மாதிரி தோணுதுதானே உங்களுக்கு.! நீங்க உங்க பைக்கை மேல காட்டுற பாசத்துல பாதியை என் மேல காட்ட மாட்டிங்களான்னு நான் பீல் பண்ணாத நாளே இல்லை.." என்றாள் ஆத்திரத்தோடு.

"ரொம்ப சில்லியா இருக்கு.!" என்றவன் அவளை விட்டு விலகி நடந்தான்.

பற்களை அரைத்தவள் "டேய் லூசு பயலே.. உன்னையெல்லாம் உங்க அம்மா பெத்ததுக்கு பதிலா.. சில்லியா இருக்காம்.. மெண்டல் மண்டையா.! இதே ஊர்ல எத்தனை அழகான பசங்க இருக்காங்க.. எந்த ஜென்மத்துல பாவம் பண்ணேனோ.. உன்கிட்ட மாட்டிக்கிட்டு சாகறேன்.! எந்த அளவுக்கு உன்னை லவ் பண்றேனோ அதே அளவுக்கு உன்னை வெறுக்கறேன்.. இதுக்குதானே ஆசைப்பட்ட.. நல்லாரு.. நீ மட்டும் நல்லாரு.." என்றாள்.

முத்தமிழ் அவளை சில நொடிகள் வெறித்துவிட்டு சென்று தனது இருக்கையில் அமர்ந்தான். அவளின் கோபம் உண்மையிலேயே சில்லறைதனமாகதான் தோன்றியது அவனுக்கு.

வெறும் இரண்டு நாட்களில் இரண்டு வருடத்தை கடந்தது போல இருந்தது.

புவனா அதன் பிறகு அவனோடு பேசவேயில்லை. முத்தமிழ் இரண்டு மணி நேரத்தில் தனது வேலைகளை முடித்துவிட்டு எழுந்து வந்தான்.

"போலாம்.." என்றான்.

புவனா அவனை கடுப்போடு முறைத்தபடியே எழுந்துக் கிளம்பினாள்.

வீட்டிற்கு இவர்கள் வந்தபோது முத்தமிழின் தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். புவனா அவரிடம் நலம் விசாரித்துவிட்டு நடந்தாள். முத்தமிழ் தன் தந்தையோடு சிறிது நேரம் பேச்சு கொடுத்துவிட்டு கால் மணி நேரம் கழிந்த பிறகு அறைக்கு வந்தான்.

அவன் கதவை சாத்தியதும் அவனை அணைத்துக் கொண்டாள் புவனா.

"இ.. இப்ப என்ன.?" என்றான். இவ்வளவு நேரம் கோபமாக இருந்தவள் இப்போது அணைத்துக் கொண்டது அவனுக்கு புரியவேயில்லை.

நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். "ஐ லவ் யூ மாமா.!" என்றாள்.

முத்தமிழ் அவளின் முகத்தை உற்று பார்த்தான். "முன்னதானே சண்டை போட்ட.?" என்றான்.

"யோவ்.. மெண்டல் மாமா.. அது சண்டை இல்லைய்யா.. ஆதங்கம்.! சண்டை போடுற அளவுக்கு வக்கு இருந்திருந்தா நான் ஏன்ய்யா உன்னோடு குப்பை கொட்டிட்டு இருக்க போறேன்.?" என்றுக் கேட்டாள்.

"என்னவோ.?" என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு "நான் குளிக்கணும்.! கொஞ்சம் அழுக்கா இருக்கேன்.!" என்றான்.

"பரவால்ல மாமா.!" என்றவள் அவனின் நெஞ்சில் தலை சாய்த்தாள்.

முத்தமிழுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளின் தூரம் எதுவரை என்ற எண்ணத்தோடு அவளோடு விளையாடுவது பிடித்திருந்தது.

"நான் அப்ப சூஸைட் டிரை பண்ணேன் இல்லையா, அப்ப நான் ஒரு லெட்டர் எழுதி வச்சிருந்தேன்.!"

"என்ன.?" அவளின் உச்சந்தலையில் தாடையை வைத்தபடி கேட்டான். அவனின் கரம் அவளை அணைத்து பல நிமிடங்கள் ஆகி இருந்தது.

"என் சாவுக்கு யாரும் காரணம் இல்லன்னு.!"

"ஓ.." என்றவனிடம் "அப்ப அறிவு இல்ல.. இல்லன்னா என் சாவுக்கு நீங்கதான் காரணம்ன்னு எழுதி வச்சிட்டு விஷம் குடிச்சிருப்பேன்.!" என்றாள்.

முத்தமிழ் அவளை முறைத்தான்.

"கொலை செய்றவங்களை விட கொலை செய்ய தூண்டியவர்களுக்கே தண்டனை அதிகமாம். அப்படின்னா என்னை தற்கொலை செஞ்சிக்க தூண்டின உங்க மேலதானே தப்பு.?" என்றாள்.

முத்தமிம் பெருமூச்சோடு அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

"நீ இன்னும் வளரவே இல்ல புவனா.. ரொம்ப டிரை பண்ணிட்டு இருக்கன்னு தெரியுது.. ஆனாலும் ரொம்ப நாளாகும்ன்னு நினைக்கிறேன்.!"

புவனா பீஸ் போன பல்பாக முகம் வாடி போனாள். அவனை விட்டு விலகி நின்றாள்.

"உன்னை மாதிரி இன்னும் நாலு பொண்ணுங்க ஒருதலை காதல்ங்கற பேரை சொல்லி உன்னை போலவே சூஸைட் டிரை பண்ணி இருந்து அவங்க எல்லோரும் என் மேலேயே பழி போட்டிருந்தா என்னாகியிருக்கும்.? நான் சாதாரண மனிதன்.. இந்த மாதிரி திமிர் பிடிச்ச வில்லங்கங்களுக்கு பலியாக முடியாது.. உனக்கு எப்படி மனசு இருக்கோ அதே போல எனக்கும் மனசு இருக்கு.. ஐ லவ் யூ.. ஆனா நான் என் லவ்வை எனக்கு பிடிச்சதாலே வெளிக்காட்டணுமே தவிர உனக்கு பிடிச்சதால வெளிக்காட்ட முடியாது.!" என்றான்.

புவனா உதட்டை கடித்தபடி யோசித்துப் பார்த்தாள். அவன் சொன்னதில் பாதிதான் விளங்கியிருந்தது.

"நீங்க என்னை லவ் பண்றிங்கதானே.? அப்படின்னா அந்த லவ்வை காட்டுங்க.." என்றாள் அப்பாவியாக.

அவளின் தாடையை பற்றியவன் அவள் மூக்கின் மீது முத்தமிட்டான்.

"நான் எதுவும் பண்ணல.. ஆனாலும் நீ என் பின்னாடி பைத்தியமா சுத்தின.. சுத்துற.. சுத்திட்டே இருப்ப.. அது போல நானும் உன் பின்னாடி சுத்தணும்ன்னுதான் ஆசைப்படுறேன்.. ஆனா மனசுல தோணலையே.! லவ்வை ரொம்ப நேச்சரா வெளிக்காட்டணும்.. கட்டாயத்தாலோ காரணத்தாலோ வரக் கூடாது.!" என்றான்.

"நேத்தும் இன்னைக்குதான் எனக்கு புத்தி தெளிஞ்ச மாதிரி இருந்தது. மறுபடியும் குழப்பி விட்டுட்டிங்க.." என்றாள் தலையை சொறிந்தபடியே.‌

"நான் என்ன பண்ணனும்.? எனக்கு நிஜமா தெரியல மாமா.! நான் என்ன பண்ணா உங்களுக்கு என்னை பிடிக்கும்.? நான் என்ன பண்ணா என்னோடு காதல் மொழியெல்லாம் பேசிவிங்க.?" என்றுக் கேட்டாள்.

"என்னை டார்ச்சர் பண்ணாத.. உன்னையும் டார்ச்சர் பண்ணிக்காதே.. ஓவர் சீன் போடாதே.! அழுது வடியாதே.! நீ நீயா இரு.. நீ நீயா இருந்தது ரொம்ப கொஞ்ச நாள்தான். நீ ரொம்ப டிபிகல்ட்.. என்னை எப்பவும் பயமுறுத்துற!" என்றான்.

புவனா தனக்குள் தடுமாறினாள்.

"நீ.. நீங்கதானே லவ்வை காட்ட கூடாதுன்னு சொன்னிங்க.."

"ஆனா நான் உன் சந்தோசத்தை தொலைக்க சொல்லல.. உனக்கு என் காதல் சந்தோசத்தை தருது இல்லன்னு சொல்லல.. ஆனா இந்த காதல் மட்டும்தான் சந்தோசம்ன்னு நீ நினைக்கிறது எனக்கு பிடிக்கல.. நானும்தான் லவ்வை வெளிக்காட்டல.. ஆனா நான் சந்தோசமாதான் இருந்தேன்.. சின்ன சின்ன விசயத்திலும் சந்தோசத்தை தேடுற ஒரு பொண்ணு வேணும் எனக்கு. என் மனைவி கள்ளியாவும், கத்தாழையாவும் இருந்தாலும் சந்தோசமே, ஆனா நீ சொன்ன சூரியகாந்தியாவோ, தாமரையாவோ இருக்கவே வேணாம்.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN