மணாளனின் மனம் 42

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முத்தமிழின் காலில் தட்டினாள் புவனா. என்னவென்பது போல நிமிர்ந்துப் பார்த்தவனிடம் "இது நானா மாமா.?" என்றுப் கைபேசியைக் காட்டிக் கேட்டாள்.

முத்தமிழ் கவலையோடு அவளின் முகத்தை ஆராய்ந்தான்.

"நீ நிஜமாவே பைத்தியம் ஆயிட்டியா புவனா.?" என்றுக் கேட்டான்.

"இல்ல மாமா.. நீங்க என் போட்டோவை ப்ரொபைல் பிக்சரா வச்சிருப்பிங்கன்னு நான் நினைக்கவே இல்ல.." என்றாள் அவனை நேர்கொண்டு பார்க்காமல்.

"இதே போட்டோதான் இரண்டே முக்கால் வருசமா என் போன்ல இருக்கு.. நீ பார்க்காததுக்கு நான் பொறுப்பா.? இல்ல ஒரு சிம்பிள் பிக்சர்தான் உனக்கு அவ்வளவு முக்கியமா போச்சா.?" என்றுக் கேட்டான்.

அவனை முறைத்தாள்.

"சிம்பிள் பிக்சரா.? அப்புறம் ஏன் இரண்டே முக்கால் வருசமா வச்சிருக்கிங்க.?" என்று முனகியவளுக்கு இவையும் கூட காதலில்தான் சேரும் என்பதை தன் கணவன் அறியாமல் போய் விட்டானோ என்று சந்தேகமாக இருந்தது.

"நான் இந்த போட்டோவுல அழகா இருக்கேன் மாமா.!" என்றவளிடம் ஆமென தலையசைத்தான்.

"ம்.. அதனாலதான் வச்சிருக்கேன்.!" என்றான்.

அவனின் போனை ஆராய்ந்ததில் மதுமிதாவும், அபிராமியும், யசோதாவும்தான் அவனுக்கு அழைத்து பேசிய லிஸ்டில் இருந்தார்கள்.

"யார் நம்பரும் இல்ல மாமா.!" என்றுவிட்டு போனை திருப்பித் தந்தாள்.

"பார்த்துட்டியா.? அப்புறம் ஏன் நீயும் நானும் பிரிய போறோம்.?" என்றுக் கேட்டான்.

"இ.. இந்த விசயத்துக்கு இல்ல மாமா.. வேற ஏதாவது பிரச்சனை வந்துட்டா என்ன செய்றது.?" தன் விரல் நகத்தை பார்த்தபடி கவலையோடு கேட்டாள்.

அவளை அள்ளி தூக்கியவன் தன் மடியின் மீது அவளை வைத்துக் கொண்டான். புவனா அதிர்ச்சியிலிருந்து வெளி வரும் முன்பே அவளின் தலையை தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான். 'எதுக்கு இப்படி என்னை குழந்தை போல ட்ரீட் பண்றிங்க.?' என கேட்க தோன்றியது அவளுக்கு.

அவனின் கரங்களின் வளைவில் இருந்தவள் தயக்கமாக அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

"நான் உனக்கு எப்பவுமே டைவர்ஸ் தர மாட்டேன் புவனா.." என்றான்.

"என்னை சர்வாதிகாரியா நீ நினைச்சாலும் சம்மதம்.. உனக்கு சுதந்திரம் தராம அடிமைப்படுத்தி வச்சிருப்பதா நினைச்சாலும் சம்மதம்.. ஆனா என்ன ஆனாலும் சரி, நீ என்னை வெறுத்தாலும், என்னை வெட்டி கொன்னாலும் கூட நான் உனக்கு டைவர்ஸ் தரவே மாட்டேன்.!" என்றவனை இப்போது பயத்தோடு பார்த்தாள்.

"வில்லன் போலவே பேசுறிங்க மாமா.." என்று அவள் சொன்னதும் கலகலவென நகைத்தான்.

"அப்படியும் கூட வச்சிக்க.." என்றான்.

"ஆ.. ஆனா ஏன் மாமா.? நீங்க பிடிக்காமதானே என்னை கல்யாணம் பண்ணிங்க.? அபிராமிக்கு குழந்தை பிறந்துடுச்சி. அவளை என் அண்ணன் சும்மா கூட பிரிய மாட்டான்.. நியாயப்படி நீங்க சான்ஸ் கிடைச்சதும் என்கிட்ட இருந்து தப்பிக்கதானே டிரை பண்ணுவிங்க.?" என்றாள் அப்பாவியாக.

அவளின் முகத்தை தன் பக்கம் திருப்பினான். அவளின் வலது கன்னத்தில் சிறு முத்தம் இட்டான். "இரண்டே முக்கால் வருசம் முன்னாடி என்ன ஆச்சி தெரியுமா.? நீ ஹாஸ்பிட்டல்ல சாக கிடந்த.. எனக்கு அந்த ரூம்க்குள்ள நுழையவே கை கால் நடுங்கிடுச்சி.! எனக்கு உன்னை பிடிக்கும்.. ஆனா உன்னோட பிடிவாதம், உன் குணமெல்லாம் எனக்கு செட்டாகாத ஒன்னு.. அதனால்தான் உன்கிட்ட இருந்து தப்பிக்க டிரை பண்ணேன். ஆனா நீ சாக கிடந்தபோது ஒன்னு புரிஞ்சிக்கிட்டேன். நீ இல்லாம போயிட்டா அதுக்கப்புறம் என் வானத்துல சூரியன் சந்திரனே இருக்காதுன்னு. உன்னை தாண்டி ஒன்னுமே யோசிக்க முடியல அப்ப.! ஒருவேளை கொஞ்ச நாள் கழிச்சி சரியாகி இருப்பேனோ என்னவோ.. ஆனா அந்த இருபத்தி ஏழு மணி நேரத்தை கடக்கறதுக்குள்ள எனக்குப் பைத்தியமே பிடிச்சிடுச்சி.. ஒவ்வொரு செகண்டையும் கால தேவன்கிட்ட கெஞ்சி கெஞ்சி நகர்த்திட்டு இருந்தேன். அப்பதான் முடிவு பண்ணேன், நீ எனக்கு மறுபடியும் கிடைச்சா அதுக்கப்புறம் எப்படியொரு சூழ்நிலையிலும் உன் கையை விடவே கூடாதுன்னு.!" என்றவன் காதின் ஓரத்தில் உதடு பதித்தான்.

"ஆனா நீங்க என்னை டார்ச்சர்தான் பண்ணிங்களே தவிர லவ் பண்ணதா ஞாபகமே இல்ல.!" என்றாள் புவனா.

"ஆமா‌..‌‌ ஏனா நான் அப்படியொரு முடிவெடுத்த அந்த செகண்டலயே நீ என் மன உறுதியை உடைச்சிட்ட.! அதனால எனக்கு உன் மேல பயங்கர கோபம். உனக்கு புத்தி வர வைக்க என்ன செய்றதுன்னே தெரியல.. எனக்கு உன் பிடிவாதமெல்லாம் சுத்தமா செட் ஆகாது புவனா.. அதனாலதான் என்னால முடிஞ்ச அளவுக்கு உன்னை விலக்கி வச்சேன்.! இன்னமும் கூட நீ கேட்ட காதலை உன்கிட்ட காட்டவே கூடாதுன்னு மனசுக்குள்ள நெருப்பு எரியுது.!" என்றான்‌.

புவனா பயத்தில் எச்சில் விழுங்கினாள்.

"அ.. அப்படின்னா பழி வாங்கதான் எனக்கு நீங்க டைவர்ஸ் தரலையா.?" எனக் கேட்டவளிடம் மறுப்பாக தலையசைத்தவன் "நீ என்கிட்ட டைவர்ஸ் கேட்டதாலதான் நான் உன்னை பழி வாங்கவே ஆரம்பிச்சேன்.!" என்றான்.

புவனா அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.

"அடப்பாவி.. ஆனா எனக்கு எந்த டாட்ஸுமே கனெக்ட் ஆகலையே.!"

உதட்டை கடித்தபடி அவளை தயக்கமாக பார்த்தான். "ஆரம்பத்துல இருந்து உன் மேல எனக்கு ஹேட்டும் லவ்வும் சரி சமமா இருந்தது புவனா. அதை நான் மறுக்கவே மாட்டேன்.! ஆனா நீ.. நீ.." மேலே சொல்ல தயங்கியவன் சிரமப்பட்டு "நீ ஏதோ ஒரு விதத்துல க்யூட்டா இருந்த.." என்றான் எங்கோ பார்த்தபடி.

புவனாவிற்கு ஹார்ட் அட்டாக்கே வரும் போல இருந்தது அவன் சொன்னதை கேட்டு.

"விழவே கூடாதுன்னு நினைச்சிக்கிட்டு விழுந்துட்டு இருந்தேன். ஆனா நீ டைவர்ஸ் கேட்டதும் கடுப்பாகிடுச்சி.! உன் புத்தியும், எண்ணங்களும் எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை.. அதனாலதான் அப்படியொரு கன்டிசன் போட்டேன். நேர்மையா சொல்லணும்ன்னா எனக்கு உன்னை தவிர எந்த பொண்ணு மேலயும் லஸ்ட் வந்ததே கிடையாது. உனக்கும் என்னை தவிர வேறு ஒரு ஆணை பற்றிய எண்ணங்கள் வருவதுல எனக்கு துளியும் விருப்பம் இல்ல.. அதனால்தான்.." என்றவன் மீதி சொல்லாவிட்டாலும் அவளுக்கு புரிந்துதான் இருந்தது.

சில வருடங்களுக்கு முன்பு அவன் காமத்தை முன்னிறுத்தி தன் காதலை ஒப்பிட்டு பேசியபோது கோபம் கொண்டவளுக்கு இப்போது ஏனோ எண்ணங்கள் வேறு விதமாக தோன்றியது. அவனுக்கும் தான் மட்டும், தனக்கு அவன் மட்டும் என்பது பிற்போக்குதனமான எண்ணமா, இல்லை பேராசை எண்ணமா என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவன் தன் மீது காமமும் கொண்டிருக்கிறான் என்பது அளவுக்கு அதிகமாகவே சந்தோசத்தை தந்தது என்பதுவும் உண்மையே.

"ஆனா இதையெல்லாம் இப்ப ஏன் சொல்றிங்க.? ஒருவேளை உங்க பாப்பாவுக்காக அட்ஜஸ்ட் பண்றிங்களா.?" என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

அவனின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

"உன் முட்டாள் மூளையை திருத்துற வழி எனக்கு தெரியலையே.! நீ மறுபடியும் டைவர்ஸ் கேட்ட.. நான் என்ன செஞ்சி தொலையட்டும்.? பழைய புவனாவா இருந்திருந்தா இரண்டு அறை தந்தா உனக்கு அறிவு வந்திருக்கும்.. ஆனா இப்ப கொஞ்சம் வளர்ந்து தொலைஞ்சிருக்கியே.! எப்படி சொல்லி புரிய வைக்கிறது.?" என்றான் கோபத்தோடு.

"அப்படின்னா நான் டைவர்ஸ் கேட்காம இருந்திருந்தா 'நீ நீயா இருந்தாதான் எனக்கு பிடிக்கும்'ன்னு சொல்லியிருக்க மாட்டிங்க.. அப்படிதானே.?" என்று அதிர்ச்சியோடு கேட்டாள்.

முத்தமிழ் பதில் சொல்லாமல் கூரையையும் சுவற்றையும் பார்த்தான்.

"தெரிஞ்சிருந்தா ரொம்ப நாள் முன்னாடியே டைவர்ஸ் கேட்டிருப்பேன்.!" என்று முனகியவளின் தாடையை பற்றியவன் "தமிழ்லதான் சொன்னேன்டி.! என்கிட்ட இன்னொரு முறை டைவர்ஸ் கேட்காதே.. நான் சைக்கோ கில்லரா மாறி உன்னை கொன்னுட்டு நானும் தற்கொலை பண்ணிப்பேன்.!" என்றான் ஆத்திரத்தோடு. ஆனால் அதன் பிறகே தான் சொன்ன வார்த்தையின் அர்த்தத்தை உணர்ந்தான்.

அதிர்ச்சியோடு புவனாவை பார்த்தான். கசப்பாக சிரித்தவள் "அவங்களுக்கு வரும்போதுதான் வயித்து வலியும், தலைவலியும் கொல்லுது இல்ல.! அவங்கவங்க பீலிங்ஸ் அவங்கவங்களோடது.. ஒருத்தர் தற்கொலை செஞ்சிக்க கூடாதுன்னு யார் வேணாலும் பாடம் எடுக்கலாம்.! ஆனா திமிரையும், வலியையும், வெறுமையையும் ஒன்னு சேர்ந்து பீல் பண்ணும்போதுதான் கஷ்டம் தெரியும் கண்ணா.!" என்றாள்.

முத்தமிழ் பதிலுக்கு சிரித்தான்.

"கோபத்துல விட்ட வார்த்தை அது.. உன்னை மாதிரி நான் முட்டாள் கிடையாது.!" என்றுத் திட்டினான்.

'இப்பதான் உன் லைன்ல கிராஸ் ஆகி இருக்காரு.. நீயே சொதப்பி வச்சிடாத புவி..' என்று தனக்குள் எச்சரித்துக் கொண்டவள் "உங்க அப்பா ஏன் மாமா இப்படி பண்ணாரு.?" என்றுக் கேட்டுப் பேச்சை மாற்றினாள்.

முத்தமிழின் முகம் நொடியில் வாடிப் போய்விட்டது.

"அவர் இப்படி செய்வாருன்னு நான் நினைக்கவே இல்ல.. எங்க அம்மா அவர் மேல உயிரையே வச்சிருந்தாங்க.." என்றவன் கவலையோடு புவனாவின் தோளில் முகம் புதைத்தான்.

"எங்க அம்மாதான் பாவம்.!" என்றான் அழாத குறையாக.

"உங்க அப்பா நல்லவர்ன்னுதான் நினைக்கிறேன் மாமா.!" என்றவளிடம் இல்லையென தலையசைத்தவன் "அவர் இந்த வீட்டை விட்டுப் போய் நாலு வருசம் ஆச்சி. நாலு வருசமா மனைவியை மறந்துட்டவர் எப்படி நல்லவரா இருப்பாரு.? நான் எத்தனை முறை அவரை கூப்பிட்டு இருக்கேன் தெரியுமா.? எப்ப கூப்பிட்டாலும் இன்னும் கொஞ்ச நாள்ன்னு சொல்லியே தள்ளி போடுவாரு.. ஹீ இஸ் எ சீட்டர் புவனா.." என்றான் கோபமாக.

"இன்னொரு பொம்பளையோடு பிரெண்ட்ஷிப் வேற.. எங்க அம்மா கொஞ்சம் பழங்காலம் மாதிரிப்பா.. அவங்களுக்கு இந்த பிரெண்ட்ஷிப்பெல்லாம் புரிஞ்சிக்க தெரியாது.. இத்தனை வருசம் கூடவே வாழ்ந்த இவருக்கு என் அம்மாவோட குணம் பத்தி தெரிஞ்சிருக்கணும் இல்லையா.?" என்றுக் கேட்டான் கவலையாக.

புவனா அவனின் முதுகை வருடி விட்டாள்.

"எல்லாம் சரியா போயிடும் மாமா.." என்றவள் "நீங்க என்னை புரிஞ்சிக்கிட்டிங்களா மாமா, முழுசா.?" என்றுக் கேட்டாள்.

முத்தமிழ் அவள் முகத்தைப் பார்த்தான். ஆமென தலையசைத்தான்.

"என் அறிவை சிதைக்கும் முட்டாள் கழுதை நீ.! என்னையும் உன்னை போலவே மாத்திட்டு இருக்கும் பிடிவாத பிசாசு.! என் ஆணவத்தை உடைக்க வந்த குட்டிச் சாத்தான். என் கோபம், காதல், எரிச்சல், குழப்பம், சந்தோசம், கஷ்டம்ன்னு எல்லாத்துக்குமான சாவியை உன் கண்ணுக்குள்ள வச்சிருக்கும் கபட வேடதாரி.!" என்றான்.

திட்டுகிறானா கொஞ்சுகிறானா என்று புவனாவிற்கு சுத்தமாக விளங்கவில்லை. அதிசயமாக இன்றேதான் நான்கு வார்த்தைகள் கூடுதலாக பேசியிருந்தான். ஆனால் அதையும் புரியும்படி பேசாமல் போய்விட்டானே என்ற கவலையில் இருந்தாள் அவள்.

ரவீந்தர் கோபத்தோடு தனது அறையில் நடந்துக் கொண்டிருந்தார். கையிலிருந்த தாலியை நொடிக்கொரு தரம் பார்த்தார். மஞ்சளில் நனைந்திருந்த தாலி கயிறு அது. ஒவ்வொரு முறை முகத்தின் முன்னால் கொண்டு வந்து பார்க்கும்போதும் அதன் வாசம் அவரின் மூக்கை துளைத்தது. கோபமாக வந்தது. ஆத்திரமாக வந்தது. தான் சொல்ல சொல்ல கேட்காமல் வீட்டை விட்டு வெளியே போய் விட்டாளே என்று ஆங்காரமாக வந்தது.

என்ன செய்வதென்று தெரியவில்லை அவருக்கு.

பாக்கெட்டில் இருந்த போன் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தார். ஏதோ புது எண். எடுத்துப் பேச கூட மனமில்லாமல் போனை தூக்கி சுவற்றில் அடித்தார்.

"எல்லாம் இந்த கருமத்தால வரது.." என்று திட்டினார்.

"இந்த வயசுல கூட ஒரு ஆம்பளை தன் போன் நம்பரை நம்பிக்கையோடு வெளியே தர கூடாது போல.. எப்படியெல்லாம் வில்லங்கம் வந்து சேருது.!" என்றுப் புலம்பினார்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN