மணாளனின் மனம் 49

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"டமிழ்.. எனக்கு பெரிய பார் சாக்லட் வாங்கி வா.!" என்ற மதியை முறைத்தாள் புவனா.

"டேடி.. எனக்கும் சாக்கோலெட்.!" நிலா மதியிடமிருந்து போனை பிடுங்கிச் சொன்னாள்.

எதிரில் இருந்தவன் என்ன சொன்னானோ.? இரு வாண்டுகளும் அத்தோடு போனை வைத்து விட்டன.

"இன்டா அம்மு.. போன்.!" என்று புவனாவிடம் கொண்டு வந்து போனை நீட்டிய நிலா அறையை விட்டு வெளியே நடந்தாள். மதியும் அவளை பின்தொடர்ந்தான்.

மாலையில் வேலை முடிந்து வருகையில் சாக்லேட்ஸோடு வந்தான் முத்தமிழ். மகனும் மகளும் ஆளுக்கொரு தோளில் ஏறிக் கொண்டார்கள். இருவரையும் அணைத்தபடி சென்று கட்டிலில் அமர்ந்தவன் "இந்தாங்க சாக்லேட்ஸ்‌‌.." என்றுத் தந்தான். குழந்தைகள் அவனுக்கு முத்தத்தை வாரி வழங்கிவிட்டு சாக்லேட்ஸோடு ஹாலுக்கு ஓடின.

வந்ததிலிருந்து பாராமுகமாக இருக்கும் மனைவியை கவனித்துக் கொண்டிருந்தான் முத்தமிழ். எப்போதும் வீட்டுக்கு வந்தவுடன் குழந்தைகளை முந்திக் கொண்டு முத்தமிடுபவள் அவள்தான்.

இரவில் குழந்தைகள் உறங்கிய பிறகு அவர்களை விட்டு நகர்ந்து வந்தான். புவனா கட்டிலின் ஒரு ஓரமாக படுத்திருந்தாள். அவளின் தோளில் தட்டினான்.

"புவி.."

வெடுக்கென்று திரும்பியவள் அவனின் கையை தட்டி விட்டாள்.

"என்னாச்சி.?"

"உங்களுக்கு என் மேல லவ்வே இல்ல!"

"மறுபடியும் என்ன.?"

"மதி உங்களை பேர் சொல்லி கூப்பிட்டான். ஆனா நீங்க என்னை மட்டும் பேர் சொல்லி கூப்பிட கூடாதுன்னு சொல்றிங்க.!" கோபத்தோடு சொன்னவளை கண்டு நெற்றியில் அடித்துக் கொண்டவன் "இன்னுமா நீ இதை மறக்கல.? நாலு வயசு குழந்தையும் நீயும் ஒன்னா.?" என்றான்.

"நானும் குழந்தைதான் பையா.!" என்றவளின் நெற்றியில் விரலை சுண்டி விட்டான்.

"ஸ்‌‌.." வலித்து விட்டது. நெற்றியை தேய்த்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

"நீ குழந்தை இல்ல.. குட்டிச் சாத்தான்.! அதுவும் இல்லாம உன் மகன் அவன். அதனாலதான் உன்னை மாதிரியே வாலா இருக்கான்.!" என்றவனை முறைத்தவள் "இந்த போங்காட்டமே ஆகாது ராசா.. அது உங்க மகன்.. இரண்டுமே என் பேச்சை கேட்கறது இல்ல.. இரண்டும் உங்க செல்லம் மட்டும்தான்.!" என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு.

"நீயும் என் செல்லம்தான்.!" தாடையை பிடித்துக் கொஞ்சியவனை முகத்தை சுளித்தபடி பார்த்தவள் "பொய் சொல்லாதே தமிழ்.!" என்றாள்.

இவள் இன்றைக்கு விட போவது இல்லை என்று அவனுக்குப் புரிந்துப் போனது.

"சரி.. நீயும் நானும் தனியா இருக்கும்போது உனக்கு பிடிச்ச மாதிரி கூப்பிட்டுக்கோ.!" என்றான்.

"பேய் பிசாசுன்னு கூடவா மாமா.?"

"ம்.." என்றவனை சந்தேகமாக பார்த்தவள் "எருமை.. யானை.." என்றுக் கேட்டாள்.

முத்தமிழ் விழிகளைச் சுழற்றினான்.

"கெட்ட வார்த்தையை தவிர வேற எப்படி வேணாலும் கூப்பிட்டுக்கோ.. ஆனா ரூமுக்கு வெளியே மாமாங்கற வார்த்தையை தவிர வேற ஏதாவது யூஸ் பண்ணன்னா மகளே சங்கை கடிச்சி ரத்தம் குடிச்சிடுவேன்.!" என்று எச்சரித்தான்.

"சரி மாமா.!" என்றவள் அவனைப் பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.

இவளின் அணைப்பே காரணமோ இல்லை அவனே காரணமோ.. இவளோடு சேர்ந்து பின்னால் சாய்ந்தான் அவன்.

அவனின் நெஞ்சிலிருந்து நிமிர்ந்து பார்த்தாள்.

"இன்னும் ஒன்னு இரண்டு வருசத்துல நான் கடனை அடைச்சிடுவேன் மாமா.!" என்றாள்.

"குட் கேர்ள்.."

"ஐ லவ் யூ.!" என்றவள் அவனின் கழுத்தில் முகம் புதைத்தாள்.

"மாமா நாம இப்படியே தூங்கலாமா.?"

"ம்.." என்றவனின் கரங்கள் அவளை சுற்றி வளைத்தன.

"நாளையிலிருந்து எனக்கும் சாக்லேட் வாங்கிட்டு வாங்க.."

"ம்.." என்றவனுக்கு சிரிப்பு வந்தது.

நாட்கள் அப்படியே நகர்ந்தது. குழந்தைகளும் வளர்ந்தன.

இரண்டு வருடங்கள் ஓடி விட்டது. புவனா தான் செய்த தண்ட செலவின் கடனை முத்தமிழிடம் தந்தாள்.

"இனி வட்டி செலவு இருக்காது. அந்த வட்டி காசை வச்சி நான் கோடீஸ்வரி ஆக போறேன்.!" என்றாள் நிம்மதி பெருமூச்சி விட்டபடி. இந்த பணத்தை சம்பாதித்ததில் அவளுக்கு கிடைத்த ஒரே லாபம் அவளுக்கு வயலின் மீது வந்த காதல்தான். முதுகலை பட்டதாரி ஆகி விட்டவளுக்கு மேலே படிக்கவும் விருப்பம் இல்லை. வேறு வேலைக்கு செல்லவும் விருப்பம் இல்லை. இந்த வயலும் வாழ்வுமே மிகவும் திருப்தியாக இருந்தது.

முத்தமிழ் சிரிப்போடு பணத்தை பெற்றுக் கொண்டான்.

"மாமா ஒரு உண்மையை சொல்லட்டா.? இப்படி ஆள் தின்னும் வட்டியை பார்த்த பிறகு எனக்கு ஒரு சேலை எடுக்கறதா இருந்தா கூட ஆயிரம் முறை யோசிக்கிறேன்.." என்றாள்.

"ச்சே.. ச்சே.. அப்படி இருக்காத.. அத்தியாவசிய செலவுகளை கூட செய்யாம சேர்த்து காசை சேர்த்து வச்சி என்னப் பண்ண போறோம்.?" என்றான்.

"அதுவும் சரிதான்.!" என்றவள் "உங்ககிட்ட காசு இருக்கா மாமா? என் நகைகளை மீட்டு தரிங்களா.? கழுத்தெல்லாம் பொசுக்குன்னு இருக்கற மாதிரி இருக்கு.. இன்னும் வருசம் ஆகும்ன்னா பரவால்ல.. இல்ல இந்த கடனுக்காகதான் இத்தனை வருசம் மீட்காம வச்சிருந்திங்கன்னா மீட்டுட்டு வந்துடுங்க.!" என்றாள்.

"ம். சரி.." என்றவன் மறுநாள் அவளின் நகைகளை திருப்பி தந்தான்.

"எங்க அப்பா ஆசையா செஞ்சி தந்தது.!" என்றவள் கழுத்து சங்கிலி ஒன்றை கையில் எடுத்த நேரத்தில் அவளின் கையை தடுத்தான் முத்தமிழ்.

"ஒரு பரிசு.!" என்றவன் அவளின் கண்களை கர்ச்சீப்பால் கட்டினான்.

ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அவளை கண்ணாடியின் முன் நிறுத்தி அவளின் கண்களை திறந்து விட்டான்.

புவனா கண்களை கசக்கிக் கொண்டு எதிரே பார்த்தாள். தன் கழுத்தை பார்த்தாள். இரண்டு ஆரங்களும், ஒரு நெக்லஸும் அவளின் கழுத்தில் இருந்தது. இது போல ஒரு செட் கழுத்து நகை வாங்க வேண்டும் என்று பல நாளாக சொல்லிக் கொண்டிருந்திருக்கிறாள்.

"கவரிங்கா மாமா.?" அவனைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள்.

"தங்கம் ராசாத்தி என்னை போலவே.!"

"ஆனா எனக்கா.?"

"நீ இப்படி கேட்பன்னு தெரிஞ்சிருந்தா நான் எனக்கு மைனர் சங்கிலி வாங்கிட்டு வந்திருப்பேன். நல்லா பெரிய பட்டை சங்கிலி போட்டுட்டு ரோட்டுல நடந்துப் போனா.."

"ரவுடி பயன்னு நினைச்சி நாய் துரத்தி இருக்கும்.!" அவன் சொன்னதை புவனா முடித்து வைத்தாள்.

"பொறாமை உனக்கு.!"

"அது சரி உங்களுக்கு ஏது காசு.?"

"உன் காசுதான்.. உன்னோட இத்தனை வருச சம்பாத்தியம்.!" அவன் சொன்னது கேட்டு அதிர்ச்சியோடு திரும்பியவள் "புரியல.." என்றாள்.

அவளை கண்ணாடியின் பக்கம் திருப்பியவன் அவளின் தோளில் தன் தாடையை பதித்தான்.

"இது உன் உழைப்பு புவனா.. நான் எந்த வயலையும் அடகு வைக்கல.! உன்கிட்ட சும்மா சொன்னேன். என்னோட சேமிப்பு பணத்துல இருந்துதான் ஹாஸ்பிட்டல் செலவு பண்ணேன்.!"

அதிர்ச்சியோடு கண்ணாடியில் தெரிந்த அவன் பிம்பத்தை பார்த்தாள். "நிஜமாவா.?" என்றாள்.

"ம்.." என்று அவன் தலையசைக்கவும் அவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.

"ஏன் மாமா.?"

"ஏனா நீ என் ப்ராப்பர்டி.!" என்றவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.

"அப்படின்னா இத்தனை வருச வட்டி.!" குழப்பமாக கேட்டவளிடம் மேஜை மேல் இருந்த ஒரு நகை பெட்டியை கை காட்டினான்.

"நிலாவுக்கு.!" என்றான்.

அவனை தள்ளி விட்டுவிட்டு திரும்பி நின்றாள்.

"அசலை விட வட்டி அதிகமாச்சே.!"

சிரித்தவன் ஆமென தலையசைத்தபடி அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

"சொந்த பொண்ணோடு போட்டி பொறாமை வேணாம் புவனா.. உன்னை விட வெறும் அஞ்சரை சவரன்தான் அவளுக்கு அதிகம்.. எப்படியும் அவ பெரியவளாகி அதை யூஸ் பண்ணும் முன்னாடி நீ அதையெல்லாம் யூஸ் பண்ணி பழசு பண்ணிதானே வைப்ப.?" என்றான் சிரிப்போடு.

புவனாவிற்கு உடனே ஒத்துக் கொள்ள மனமே இல்லை. அதே சமயம் தன் பிள்ளையோடு போட்டியா என்று தன் சில்லறை தனத்தை நினைத்து தன்னையே சமாதானம் செய்துக் கொண்டாள்‌.

"நீங்களும் நல்லா பொய் பேசுறிங்க மாமா.!"

"ஆமா.. அம்மணி அரிச்சந்திரன் வாரிசு.. நானும் எங்க அப்பாவும் நல்லா பேசி பழகியதே இல்ல மாமான்னு அன்னைக்கு ஒரு நாள் புருடா விட்டியே அது என்னவாம்.?" என்றான் கேலியாக.

புவனா அதிர்ச்சியோடு விழித்தாள்.

"ஆ.. ஆனா.."

"எப்படி தெரியும்ன்னா நீ பொய் சொன்ன அன்னைக்கே தெரியும்.. குட்டிச் சாத்தான் நீ.. என்னையே இத்தனை டார்ச்சர் பண்ற.. உங்க அப்பாவும், அண்ணன்களும் உன்னை பாரா முகமா நடத்தியிருந்தா அவங்க இன்னேரம் அதோகதி ஆகியிருப்பாங்களே.! அது மட்டுமில்ல உங்க அப்பாவும் நீயும் கொஞ்சிக்கிட்டதெல்லாம் நானும் பார்த்திருக்கேன்.!"

புவனா நாக்கை கடித்தபடி தரையை பார்த்தாள்.

"அப்பவே தெரியும், நீ சொன்னது பொய்யுன்னு.! உன்னால எவ்வளவு தூரம் போக முடியுதுன்னு பார்க்கலாமேன்னுதான் நானும் அமைதியா இருந்தேன்.!"

"ஆனாலும் நீங்க ரொம்ப மோசம் மாமா.!" முகத்தைத் திருப்பிக் கொண்டு சொன்னாள். அவளே சற்று நேரம் கழித்து யோசனையோடு அவன் புறம் திரும்பினாள்.

அவன் தலையணைகளுக்கு உறைகளை மாற்றிக் கொண்டிருந்தான். அவன் முன்பு வந்து நின்றவள் "ஆனாலும் இது தப்புன்னு தோணுது மாமா.. என் உயிரை நான்தான் காப்பாத்திக்கணும்.! நீங்க நான் தந்த காசை வச்சிக்கிட்டு இருந்திருக்கணும்.!" என்றாள்.

"இது ஒரு சுயநலம் புவி.." என்றவன் தலையணையை வைத்துவிட்டு திரும்பினான்.

"உன் லைஃப் இப்ப எனக்கு மட்டுமே சொந்தம். அது மூலமா உன் மாங்கா மண்டைக்கு சொல்ல வருவது என்னன்னா எனக்கு சொந்தமான உயிரை நீயா எடுத்துக்க உனக்கு எந்த வித உரிமையும் கிடையாது.! இதுக்கு முன்னாடி உன் உயிருக்கு சொந்தக்காரர் கடவுள். ஆனா இப்ப நான்தான்.! சோ டேக் கேர்.." என்றான் கன்னத்தை தட்டி.

"தே.. தேங்க்ஸ் மாமா.!" என்றாள். அதை தவிர என்ன சொல்வதென்றும் தெரியவில்லை.

முத்தமிழ் அவளின் உதடுகளை வருடினான்.

ஏதோ யோசனை வரவும் நிமிர்ந்தவள் "ஏன் மாமா, நான் ஏழே முக்கால் வருசம் கஷ்டப்பட்டு உழைச்சது எல்லாம் இந்த தம்மாதூண்டு நகைக்குதான் வந்ததா.?" என்றாள் அழாத குறையாக.

எத்தனை நாள் உழைப்பு! எத்தனை ஆயிர துளி வியர்வைகள்! எவ்வளவு யோசனைகள்! எவ்வளவு செயல்பாடுகள்! ஆனால் அது அத்தனையும் இந்த கழுத்து நகைக்குதான் சமமா?

"பின்ன நீ தந்த எட்டு லட்சத்தை வச்சி தாஜ்மகால் மாதிரி ஒரு மாளிகையா கட்ட முடியும்.?" என்றான் கிண்டலாக.

"ஆனா நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா.?"

"அதுக்கென்ன செய்ய.? நானும் கூடத்தான் அந்த காசை சேர்த்து வைக்க எவ்வளவோ கஷ்டப்பட்டேன்.! இந்த நகையையாவது வருசம் முழுக்க நீ ஆசையா போட்டுட்டு இருக்கலாம். இல்லன்னா இந்த நகையை அடமானம் வச்சி ஏதாவது உருப்படி பண்ணலாம். ஆனா நான் உன்னை திரும்ப கொண்டு வர செஞ்ச செலவு.. வெறும் ஒரு வார செலவு.. நீ உயிரோடு வந்தேங்கறது எனக்கும் சந்தோசம்தான். ஆனா நீ செஞ்ச காரியத்துக்கு அது வெட்டி செலவேதான்.!" என்றான்.

நட்டம் புவனாவின் நெஞ்சை வாட்டியது. கஞ்ச பிசினாரிதனம் கற்றுக் கொண்டதில் இது ஒரு பிரச்சனை.

"அதையே நினைக்காத விடு.." என்றவன் அவளின் சோக முகம் கண்டுவிட்டு அவளின் இதழ் நோக்கி குனிந்தான்.

"வேணாம் மாமா.. இந்த புள்ளைங்க வந்துடும்.!"

"நான் போய் கதவை லாக் பண்ணிட்டு வரேன்.!" என்றவனின் கை பற்றி நிறுத்தியவள் "வேணாம்.. அவங்க இரண்டு பேரும் வந்து கதவை பட் பட்டுன்னு தட்டுவாங்க.. வெளியே தாத்தா பாட்டி அத்தை மாமாவெல்லாம் இருக்காங்க.. எல்லோரும் நம்மை என்னன்னு நினைக்க மாட்டாங்க.?" என்றாள்.

அவள் சொன்னதும் சரிதான். இருவரும் எப்போது எந்த நேரத்தில் வருவார்கள் என்றே கணிக்க முடியாது.

"புவி.. நாளைக்கு அவங்களுக்கு ஸ்கூல் இருக்குதானே.?"

ஆமென தலையசைத்தவளை குறும்பாக பார்த்தவன் "நாளைக்கு நான் லீவ்.!" என்றான் கண்ணடித்து.

"எனக்கு என்னவோ நாம கள்ள காதலர்கள் போலவே இருக்கு மாமா.!" கன்னத்தில் கை வைத்தபடி கட்டிலில் அமர்ந்துக் கொண்டு சொன்னாள்.

"இன்னும் டூ இயர்ஸ்.. அவங்களை தனி ரூம் அனுப்பிடலாம்.. ஆனா அது வரைக்கும் கொஞ்சம் என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்க.." என்றவன் அமர்ந்திருந்தவளின் மீது விழ இருந்த நேரத்தில் "அம்மு.. டேடி.." என்று கத்தியபடியே கதவை திறந்துக் கொண்டு உள்ளே ஓடி வந்தாள் நிலா.

அவளை பின்தொடர்ந்து ஓடி வந்த மதி "என் அம்மா.!" என்றபடியே புவனாவின் மடியில் ஏறி அமர்ந்து கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

"இல்ல.. என் அம்மு.!" என்றபடியே நிலாவும் புவனாவின் மறுபக்கம் ஏறி அமர்ந்தாள்.

முத்தமிழ் புவனாவின் அருகே அமர்ந்து அவளின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

"நோ.. என் அம்மா.!" என்றான்.

மதி எழுந்து நின்று அவனின் கையை விலக்கி விட்டான். "டோன்ட் டச் மை மாம்.!" என்றான் ஒற்றை விரலை காட்டி.

"யசோம்மாதான் உன் அம்மு.. இது என் அம்மு.!" என்றாள் நிலாவும் புவனாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு.

"புவி.. நீ முன்னாடி சொன்ன அதே காதலர்கள் போலதான் இருக்கோம் நாம.!" என்றான் முத்தமிழ் கவலையோடு.

இரவில் குழந்தைகள் இரண்டும் பல் துலக்க சென்றிருந்தார்கள்.

"லவ் யூ மாமா.!" என்றபடி முத்தமிழின் வலது புஜத்தில் தலை சாய்ந்தாள் புவனா.

"லவ் யூ டூ புவி.!" என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட இருந்த சமயத்தில் "பாத்ரூம்க்குள்ள பேய்.. அது மதியை பிடிச்சி சாப்பிட போகுது.!" என கத்தியபடியே வந்து கட்டிலில் ஏறினாள் நிலா.

"இல்ல.. அது நாளைக்கு வரை காத்திருந்து இந்த நிலாவைதான் பிடிக்க போகுது.!" மதியும் அவளைப் போலவே கத்திக் கொண்டு வந்து கட்டிலில் ஏறினான்.

நிலா அதற்கும் முன்பே புவனாவை தள்ளி விட்டுவிட்டு அவள் தலை சாய்ந்திருந்த அதே புஜத்தில் இவள் சாய்ந்துப் படுத்துக் கொண்டாள். மதி வந்து முத்தமிழின் மறு பக்கத்தில் ஒண்டிக் கொண்டான்.

"டேடி கதைச் சொல்லு.!" என்று அவனின் வாயில் விரலை நுழைத்து அவனது பற்களைக் கீறினாள் நிலா.

"வாயில கை வைக்காத.." நிலாவின் குட்டிக் கையை எடுத்து விட்டபடியே சொன்ன முத்தமிழ் சட்டென்று "அம்மா.."வென கத்தினான்.

திரும்பிப் பார்த்தான். அவனின் மறுபக்கம் படுத்திருந்த மதி முத்தமிழின் நெஞ்சில் இருந்த முடிகளை பிய்த்து எறியும் வேலையில் ஈடுப்பட்டிருந்தான். அவனின் கையில் பட்டென்று ஒரு அடியை விட்டான் முத்தமிழ்.

"வலிக்குது அப்பு.!" என்றான்.

"அப்படின்னா நீ கதை சொல்லு.!" என்றான் அவன்.

மதி மீண்டும் தன் முடிகளை அறுவடை செய்யும் முன்பு "ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்.!" என்று கதையை ஆரம்பித்து விட்டான் முத்தமிழ்.

இருவரும் "உம்.." கொட்டிக் கொண்டிருந்தார்கள். கதை சுவாரஸ்யமாக போய் கொண்டிருந்தது. நிலாவை தன்னோடு நெருக்கமாக அணைத்துக் கொண்ட முத்தமிழின் கரம் மனைவியை தேடி நகர்ந்தது. அவனை தேட விடாமல் புவனா தன் கரத்தை அவனின் கரத்தோடு இணைத்துக் கொண்டாள். மெல்ல எழுந்துப் பார்த்தான். புவனா நிலாவை ஒட்டியபடி படுத்திருந்தாள்.

அதற்குள் மதி முத்தமிழின் தலை முடியை பற்றி இழுத்து கீழே படுக்க வைத்துக் கொண்டான்.

"அந்த இளவரசிக்கு என்ன ஆச்சி டேடி.?" என்று கேட்டாள் நிலா.

மீண்டும் கதைக்குள் நுழைந்தான் அவன். ஆனால் அவனின் கரம் மட்டும் புவனாவின் கரத்தை இறுக்கமாக பற்றியிருந்தது.

"கவியால அந்த இளவரசியோட உலகமே அழிஞ்சி போச்சாம். ஆனாலும் அவளோட அன்பு மறையலையாம்.." என்று அவன் தொடர..

நான் இங்கேயே முற்றும் போட்டுடுறேன் மக்களே.. இல்லன்னா இவன் சிறகொடித்த தேவதை கதையை இங்கேயே முழுசா சொல்லிடுவான் போல..

முற்றும்.

கதை எப்படின்னு எல்லோரும் ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா நானும் ஹேப்பியாவேன்.

இதுவரை இந்த தொடருக்கு ஆதரவு அளித்து வந்த அனைத்து நட்புக்களுக்கும் நன்றிகள். உங்களின் வோட்ஸ்க்கும் கமெண்ட்ஸ்க்கும் எனது நன்றிகள். ஊக்குவிப்பு ஸ்டிக்கர் தந்த நட்புக்களுக்கும் நன்றிகள்.. சைலண்ட் ரீடர்ஸ்க்கும் எனது நன்றிகள்.

லாஸ்ட் எபி.. டைம் இருந்தா இங்கேயாவது ரிவ்யூ டைப் பண்ணுங்க நட்புக்களே..

கதையின் சொதப்பல்களை சொன்னால் நானும் திருத்திப்பேன்.

இந்த கதை பிடிச்சா லைக் பண்ணுங்க.. இந்த கதை பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் பண்ணுங்க. கதை ரொம்ப பிடிச்சா உங்க பிரெண்ட்ஸோடு ஷேர் பண்ணுங்க.. அடுத்தடுத்த தொடரின் அறிவிப்புகளை உடனே பெற என்னை பாலோவ் பண்ணுங்க..

நாளை முதல் கை சேராயோ கனவே தொடர் அப்டேட்/ அன்லாக் ஆகும். எல்லோரும் அந்த கதைக்கு நாளைக்கு இதே நேரத்திற்கு வந்து விடும்படி இப்போதே அன்போடுக் கேட்டுக் கொள்கிறேன். அந்த கதையோட டீசர் நான் இங்கே லாஸ்ட்ல தரேன்..

அப்புறம்.. ஒரு மேட்டர் என்னன்னா.. வாசக நட்புக்களிடம் ஒப்படைத்ததில் இந்த நாவல் எனக்கு 24வது நாவல். ரொம்ப நாளா இது 25ன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இது 24தான் வருது 😭. கணக்குல கூட வீக்கு நானு.😭

சரி வாங்க நாம நம்ம 24வது நாவலையே கொண்டாடுவோம்.

இதுவரை வாசகர்களின் கைகளில் சேர்ந்த எனது நாவல்களின் பட்டியல்.

1. காதலிக்க கற்றுக் கொள் (25.11.2015 கண்மணி இதழில் வெளியானது)

2. என்னுயிர் தோழி (மார்ச் 2016ல் சசிநிலையம் பதிப்பகம் மூலம் வெளியானது)

3. உயிரே உனக்காக (ஜூன் 2016ல் இராமு நிலையம் பதிப்பகம் மூலம் புத்தகமாக வெளியானது)

4. மார்கழிப் பனிப் பூக்கள் (டிசம்பர் 2016ல் இராமு நிலையம் பதிப்பத்தாரால் புத்தகமாக வெளியிட்டப்பட்டது)

5. ஜன்னல் நிலவு (டிசம்பர் 2016ல் இராமு நிலையம் பதிப்பக்கத்தாரால் புத்தகமாக வெளியிட்டப்பட்டது)

6. நெஞ்சமெல்லாம் உன் நினைவு (ஜூலை 2017ல் இராமு நிலையத்தின் மூலம் புத்தகமாக வெளியானது)

7. பண்ணைப் பூக்கள் (8.3.2017ல் கண்மணி வார இதழில் புத்தகமாக வெளிவந்தது)

8. பூச்சூட வந்தேன் (2019ல் அருணோதயம் மூலம் புத்தகமாக பதிப்பிக்கப்பட்டது)

9. கை பிடித்த கண்ணாலா(ளா) (அமேசான் கிண்டிலில் மின் புத்தகமாக உள்ளது. குக்கூ எப்.எம் ஆப்பில் ஆடியோ நாவலாகவும் உள்ளது)

10. எந்தன் நேசம் (அமேசான் கிண்டிலில் மின் புத்தகமாக உள்ளது.)

11. காதல் சர்வாதிகாரி (அமேசான் கிண்டிலில் மின் புத்தகமாக உள்ளது)

12. வெதின்ஸா நகரத்து இராஜகுமாரி (பிரதிலிபியில் உள்ளது)

13. செங்காந்தள் (அமேசான் கிண்டிலில் மின் புத்தகமாக உள்ளது)

14. காதலிழையில் (அமேசான் கிண்டிலில் மின் புத்தகமாக உள்ளது. யூடியூப்பில் முழு ஆடியோ நாவலும் உள்ளது.)

15. வெதின்ஸா (பிரதிலிபியில் உள்ளது)

16. கழீழியத்தின் பேரரசி (பிரதிலிபியில் உள்ளது)

17. சிக்கிமுக்கி (அமேசான் கிண்டிலில் மின் புத்தகமாக உள்ளது)

18. ஓர் ஆன்மாவின் குறிப்பேடு (நான் எழுதும் அனைத்துத் தளத்திலும் உள்ளது.)

19. மௌனமாய் சில மரணங்கள் பாகம்1 (நான் எழுதும் அனைத்துத் தளங்களிலும் உள்ளது)

20. நட்சத்திரமடி நீ (வாட்பேட் மற்றும் பிரதிலிபியில் உள்ளது)

21. காதல் கடன்காரா (நான் எழுதும் அனைத்துத் தளங்களிலும் உள்ளது.)

22. கார்கால களவு (சகாப்தம் தளத்தில் உள்ளது(போட்டிக்கதை)

23. காதலெனும் நெடும்வனத்தில் (நான் எழுதும் அனைத்து தளங்களிலும் உள்ளது)

24. மனதைக் கொடுடா மணாளா (இந்த கதைதான் மக்களே!

25. இதயப்புறா (நோஷன் பிரஸ் மூலம் புத்தகமாக வந்த எனது கவிதைத் தொகுப்பு)

26. மௌனமாய் சில மரணங்கள் பாகம் 2 (ஆன்கோயிங்கில் உள்ளது)

27. கை சேராயோ கனவே (நாளையிலிருந்து அப்டேட்)

28. சிறகொடிந்த தேவதை (அப் கமிங் நாவல்)

29+++++1000 (😁மெதுவா வரும்)

கை சேராயோ கனவே தொடரின் டீசர்..

மகிழனுக்கும் மீராவுக்குமான காதல் கதை இது.

மீரா யாரையும் மதித்தது கிடையாது. அனைவரையும் எடுத்தெறிந்து பேசுபவள். யாரிடமும் நல்ல பேர் எடுக்க விரும்பவில்லை அவள். வீட்டில் இருந்தோர் கூட அவளை திமிர்க்காரி என்றுதான் திட்டுவார்கள்.

அடங்கவே பிடிக்காதவள் பெட்டி பாம்பாக சுருங்குவது மகிழனிடம் மட்டும்தான். பல வருட காதல் அவர்களுடையது. எட்டாவதிலிருந்து காதல் என்றுச் சொல்லி தன் அக்காவிடம் கூட வாங்கி கட்டிக் கொண்டவள்தான் இந்த மீரா.

அனைவரிடம் ஒரு மாதிரி நடப்பவள் மகிழனிடம் மட்டும் வேறு மாதிரி இருப்பாள். அவளின் உலகமே அவன் மட்டும்தான் என்று பித்து பிடித்தார் போல காதலித்துக் கொண்டிருந்தாள்.

மகிழனுக்கு இவளை அதிகம் பிடிக்கும். இவளுடனான காதலை பொக்கிஷம் போல சேர்த்து வைத்திருந்தான்.

ஆனால்..

வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியோடு மட்டுமே நகர்வது இல்லை. அவர்களின் காதல் கண்டு யாரின் கண் பட்டதோ.? இல்லை வாழ்வே விளையாட நினைத்ததோ.?

அவன் பிரிந்தான் விதியால். அவள் பிரிந்தாள் சதியால்.

நீயின்றி நான் இல்லை என வாழ்ந்த இரு ஜோடி புறாக்கள் அவை.

விதியால் பிரிந்தவன் பிரிவின் காரணம் சொல்லிச் சென்றிருக்கலாம். பிரிவின் வேதனையை தாங்க இயலாமல் கதறிக் கொண்டிருந்த மீரா தன் வாழ்வில் இப்படி ஒரு சதி நடக்கும் என்று கனவில் கூட நினைக்கவேயில்லை.

பிரிந்து சேருகையில் காதல் அப்படியே இருக்கலாம். ஆனால் வாழ்க்கையும் அப்படியே இருக்குமா.?

சேருவார்களா இருவரும்.? ஆனால் அவளின் உடைந்த மனம் ஒட்டுமா.? இவனின் நிலைதனை அவள் புரிந்துக் கொள்வாளா.? அவளின் வேதனையைதான் இவனால் மாற்றி அமைக்க முடியுமா.?

தெரிந்துக் கொள்ள அந்த கதையை படிக்கவும்..😉

நன்றிகளுடன் உங்கள் CRAZY WRITER
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN