கனவே 1

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கதையின் முக்கிய மாந்தர்கள்

மீரா - நாயகி.

சரோஜா - அம்மா

ராகவன் - அப்பா

சரண் - அண்ணன்

மைவிழி - அக்கா

கதிர் - அக்காள் கணவன்

பிருந்தன் - தம்பி

அதியன், செழியன் - அத்தை மகன்கள்

மகிழன்- நாயகன்

வசந்த் - தந்தை

ரோகிணி - தாய்

அகிலன் - அண்ணன்

வித்யா - அக்கா

வருண் - அக்காள் கணவன்

ஆரவல்லி - பாட்டி

எனக்கு வேறு முக்கிய வேலைகள் இல்லாதபட்சத்தில் இந்த கதை தினசரி அப்டேட்/ அன்லாக் ஆகும். பிரதிலிபியில் இந்திய நேரம் காலை ஆறு ஆறுக்கும், மற்ற தளங்களில் ஆறு டூ ஏழுக்குள்ளும் அப்டேட் ஆகும். கதையின் போக்கு சற்று அழுத்தமானது. ஆனால் நான் இந்த கதையில் யாரையும் கொல்ல மாட்டேன். அதனால் என்னை நம்பி நீங்கள் படிக்கலாம்.

கதைக்கு லைக், கமெண்டெல்லாம் வாரி வழங்கினால் நானும் ஹேப்பியாவேன்.

காலை பொழுது விடிந்துக் கொண்டிருந்தது.

"மகி.. தோசை சுடட்டா.?" பல் துலக்கிக் கொண்டிருந்த பேரனை பார்த்துக் கேட்டாள் பாட்டி ஆரவல்லி.

"நெய் தூக்கலா.!" பல்லை விளக்கிக் கொண்டே சொன்னான்.

பற்களை மிகவும் கவனமாக துலக்கியும் கூட உதடுகளின் மீது பிரஷ் பட்டு விட்டது. எரிந்தது. பல்லைக் கடித்துக் கொண்டே வாயை கொப்பளித்து முடித்தான்.

"பிசாசு.!" என்றுத் திட்டியவனுக்கு நேற்றைய மாலை பொழுது நினைவிற்கு வந்தது.

கல்லூரி முடிந்த நேரம் அது. இவனை இழுத்துக் கொண்டு பார்க் ஒன்றிற்குள் நுழைந்து விட்டாள் மீரா. கதையாக பேசினாள். அவளின் அருகே அமர்ந்து அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் இவன். அவளின் உதடு அசைவதை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்ததில் அவள் என்ன சொன்னாள் என்றே இவனுக்கு தெரியவில்லை.

இருள் சூழ்வதை கண்டு "மீரா.. டைம் ஆயிட்டு இருக்கு.!" என்றான் இவன் வெகு நேரத்திற்கு பிறகு.

"நாளைக்கு காலை வரைக்கும் நான் உன்னை விட்டுட்டு இருக்கணுமா.? போ மாட்டேன்.!" என்றவள் அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

சமீப காலமாக அவளின் காதல் கொஞ்சம் எல்லை மீறிதான் போய் கொண்டிருந்தது. அவனை விடவே மாட்டேன் என்றாள். நிழல் போல ஒட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்றாள். கல்லூரியில் உள்ள சக மாணவர்கள் கூட இவர்களை கண்டு கேலி செய்தார்கள்.

"பாட்டி வெயிட் பண்ணுவாங்க.!" என்றான் மகிழன்.

"அப்படின்னா என்னை கல்யாணம் பண்ணிக்கோ.. உன்னை வீட்டுக்கு அனுப்புறேன்.!" என்றாள் மீரா கண்களை சுருக்கியபடி.

புன்சிரிப்போடு அவளின் நெற்றியில் முத்தமிட்டவன் "இன்னும் அஞ்சி வருசம்.!" என்றான்.

சிணுங்கினாள் மீரா. "ஐ வாண்ட் யூ பேபி.!" அவனின் மீது படர்ந்தாள். அவள் முழுதாக படரும் முன் அவளை விலக்கி அமர வைத்தான்.

"நான் உன்னுடையவன். நீ என்னுடையவள்.. நம்மை யாரும் தனி தனியா கடத்தி போக போறது இல்ல.. படிச்சி முடிச்சி வேலைக்கு போய் அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்.." என்றான் மென்மையாக.

தினமும் இவளிடம் இதைதான் சொல்லிக் கொண்டிருக்கிறான். அவளுக்கு ஏன் புரியவில்லை என்றுதான் அவனுக்குப் புரியவில்லை.

"நாம வேணா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா.?" சில நொடிகளுக்கு பிறகு கேட்டாள் அவள்.

மகிழன் கவலையோடு பெருமூச்சி விட்டான். அவளின் வீட்டில் அவளின் பேச்சை யாரும் மீற மாட்டார்கள். இவனது பாட்டிக்கும் மீராவை பற்றி எல்லாமும் தெரியும். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும்தான் தெரியாது. ஆனால் அவர்களின் சம்மதம் பெற அவனால் முடியும். பிறகு ஏன் ரெஜிஸ்டர் மேரேஜ் என்று குழம்பினான்.

"உன்னை விட்டுட்டு இருக்க முடியல மகி.!" என்றவள் அவனின் உதடுகளை வருடினாள்.

"வயசும் வாலிபமும் இன்னும் தூரத்துல இருக்கு.. உன் மனசை கட்டுப்படுத்து மீரா."

மீரா முகம் வாட அவனை விட்டு நகர்ந்து அமர்ந்துக் கொண்டிருந்தாள். இருள் நன்றாகவே சூழ ஆரம்பித்து விட்டது இப்போது. பூங்காவில் ஒளிர விட்ட விளக்குகளில் ஒன்று கூட இவர்கள் இருந்த புல்வெளிக்கு வெளிச்சத்தை தரவில்லை.

"மீரா.." அவளை அழைத்தபடி தன் புறம் திருப்பினான் மகிழன்.

"உனக்கு என் ஆசை புரியுதா.?"

"புரியுது. ஆனா அதுக்குன்னு ஒரு நேரம் வரைமுறை எதுவும் இல்லையா.? இந்த வயசுல கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறோம்.? வெறும் இருபத்தியிரண்டுதான் ஆகுது.. அதிலேயும் உனக்கு ஒன்னரை கம்மி.. இந்த வயசுல கல்யாணம் பண்ணா எல்லாம் சிரிப்பாங்க மீரா.!"

"ஓகே ஒரே டீல்.. ஒரே ஒரு முறை தப்பு பண்ணலாம்.. அப்புறம் நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.!" என்றவளை அதிர்ச்சியோடு பார்த்தான் அவன்.

'மூளை குழம்பிடுச்சா இவளுக்கு?' என நினைத்தவன் "சாமி கண்ணைக் குத்தும் மீரா.!" என்றான் அரை இருளில் தெரிந்த அவளின் முகத்தைப் பார்த்தபடி.

"உனக்கு நான் வேணுமா சாமி வேணுமா.?"

நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"கொடுமை உன்னோடு.! கொஞ்ச நாளாவே உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு.. அதனால்தான் இப்படி கண்டதையும் யோசனை பண்ணிட்டு இருக்க!"

"நாம இரண்டு பேரும் பிரிய போறோங்கற மாதிரி என்னவோ ஒரு பீல்.. நெஞ்செல்லாம் படபடன்னு அடிச்சிக்கிட்டே இருக்கு.. அடிக்கடி தூக்கம் தெளியுற மாதிரி இருக்கு.!" சிறு குரலில் சொன்னவளின் கையை பற்றி மெள்ளமாக அழுத்தினான் மகிழன்.

அவ்வளவுதான் அவனின் வரம்பு. நெற்றியில் தரும் முத்தம் கூட அவனைப் பொறுத்தவரை எல்லை மீறிய ஒரு செயல்தான். ஆனால் மீரா அதற்கு நேர் எதிர். வெறுமனே பேசுவது என்றால் கூட கட்டிப்பிடித்து அமர்ந்து பேச வேண்டும் என்று நினைப்பவள் அவள். அவளை வைத்துக் கொண்டு இத்தனை வருடமாக தனது கற்பை காப்பாற்றுவதே மகிழனுக்கு பெரும் சோதனையாகதான் இருந்தது.

"டாக்டர்கிட்ட போய் செக் பண்ணலாமா.?" உண்மையான கவலையோடு கேட்டான்.

வேண்டாமென தலையசைத்தவள் "ஒன் டே உன்னை நான் ஹேண்டில் பண்ணிக்க சுதந்திரம் தந்தா போதும்.." என்றாள்.

மகிழன் நாக்கை கடித்துக் கொண்டான். 'பீலிங்.. அது இதுன்னு சொல்லி அவ வேற விசயத்துக்கு அடி போடுறா மகி‌.. பார்த்து பத்திரமா தப்பிச்சிக்க.!' என்றுத் தன்னையே எச்சரித்துக் கொண்டான்.

"அதுக்கு முதல்ல நாம கல்யாணம் பண்ணணும்.. அப்புறம் நல்ல நேரம் பார்க்கணும். அதுக்கப்புறம்தான் மத்ததெல்லாம். அதுக்கெல்லாம் முன்னாடி இரண்டு பேரும் படிச்சி முடிக்கணும்.. இப்ப நாம கல்யாணம் பண்ணா நம்ம இரண்டு பேர் வீட்டுலேயுமே தொடப்பக்கட்டையை எடுத்து விரட்டி விரட்டி அடிப்பாங்க மீரா.!" கவலையோடுச் சொன்னான்.

மீரா இடம் வலமாக தலையசைத்தாள்.

"ஐ லவ் யூ.. ஐ வாண்ட் யூ.!" இந்த இரு வாக்கியங்களையும் இந்த வாரத்தில் மட்டும் நூறாவது முறையாக சொல்கிறாள்.

"மீ டூ மீரா.. ஆனா உன்கிட்ட பேசிட்டு இருந்ததுல பார்க் குளோஸ் பண்ற டைம் ஆகுது.. வா நாம கிளம்பலாம்.!" என்றவன் எழ முயலும் முன் அவன் மீது பாய்ந்து விட்டாள் அவள். அவளோடு சேர்ந்து தரையில் விழுந்தான்.

"மீரா என்ன பண்ற.? இதெல்லாம் தப்பு.. எழு.!" அவளை தன் மேல் இருந்து தள்ள முயற்சித்தான்.

"உன்னை நாளைக்கு வரை விட்டு வைக்க எனக்கு சம்மதம். ஆனா ஒரு கிஸ் கொடு!"

நெற்றியை பிடித்தபடி புல் தரையில் பின்னந்தலையை சாய்த்தான் மகிழன்.

"பேய் ஏதும் பிடிச்சிடுச்சா மீரா.? உன் பழக்கம் எதுவும்." அவனை மேல பேசவிடவில்லை அவள். முதல் முத்தத்தை கட்டாயப்படுத்தி கொடுத்தாள். பெற்றாள் என்றும் சொல்லலாம்.

மகிழனுக்கு இதயம் அடித்துக் கொண்டது. பொது இடம். பைத்தியம் போல் தன்னை களவாடும் காதலி. தன் சுய ஒழுக்க கட்டுப்பாடு காற்றில் பறந்து விடுமோ என்ற கவலை.. எல்லாம் சேர்ந்து அவனுக்கு திகிலை தந்தது‌. ஆனால் அத்தனையையும் தாண்டி அவனால் அந்த முத்தத்தை ருசிக்கவும், ரசிக்கவும் முடிந்ததுதான் ஆச்சரியமே.

அவனின் கரங்கள் எப்போது அவளின் கூந்தல் காட்டுக்குள் புகுந்ததோ? அவளின் கரங்கள் எப்போது அவனின் தலைக்கும் தரைக்கும் இடையில் அகப்பட்டதோ?

நேரம் கடந்த வேளையில் அவனின் புத்திதான் முதலில் வேலை செய்தது என்றே சொல்லலாம். அவளை தன்னிடமிருந்து கீழே கடத்தினான். அவன் தன் மீது சாய்வான் என்று அவள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் துள்ளிக் குதித்து எழுந்து நின்றான்.

மீரா குழப்பத்தோடு எழுந்து அமர்ந்தாள்.

கலைந்த தன் தலையை கோதி விட்டுக் கொண்டவன் உதட்டில் எரிச்சல் கண்டு தொட்டுப் பார்த்தான்.

கீழ் உதட்டின் ஒரு ஓரத்தில் ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது.

"குரங்கு.!" மீராவை திட்டினான்.

"எரியுது. உன்னையெல்லாம்.." அதற்கு மேல் என்ன திட்டுவதென்று தெரியவில்லை.

"மகி.."

"கிளம்பலாம் மீரா.. எனக்கு தெரியாம டிரக்ஸ் ஏதாவது எடுத்துட்டு இருக்கியான்னு தெரியல.. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்.!" என்றவன் அவளுக்கு கை தந்து எழுப்பி விட்டான்.

மீரா கிடைத்தவரை லாபம் என்று நினைத்தபடி அவன் சொல்வதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு டிரக்ஸ் எதுவும் தேவை கிடையாது. அவனின் முகம் போதும் பித்து பிடிக்க. அவனின் வாசம் போதும் கிறங்கி நிற்க. அவனின் புன்னகை போதும் மயங்கி சரிய. அவள் ஒரு பைத்தியம். அவன் மீது அளவில்லா காதல் கொண்ட பைத்தியம்.

இருவரும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது அவனுக்கு மற்ற ஜனத்தை பார்க்க வெட்கமாக இருந்தது. யாராவது தனது உதட்டை கண்டு தவறாக நினைத்து விடுவார்களோ என்று முகம் சிவந்துக் கொண்டிருந்தான்.

மீராவோ அவனது கவலையை கண்டுக் கொள்ளாமல் வழக்கமான தனது காதல் மொழிகளை பேச ஆரம்பித்து விட்டாள்.

"நான் உன்னை கொஞ்சும் போது நீ எனக்கு குழந்தை.. ஆனா நீ என்னை கொஞ்சும் போது நீ எனக்கு வாலிபன். ஏன் எனக்கு இப்படி தோணுது.?" என்றாள் அவனைப் பார்த்தபடி.

"ஏனா நீ விசித்திரம்! பஸ் வருது.. வா போகலாம்.!" என்றவன் அவளை இழுத்துக் கொண்டு பேருந்தில் ஏறி நின்றான். கூட்டம் நிரம்பி வழிந்தது பேருந்தில். இல்லையென்றாலும் கூட அவனை உரசியபடிதான் பயணம் செய்திருப்பாள் அவள்.

"மகி.. உன் மூக்கு ரொம்ப அழகா இருக்கு.!" என்றபடி அவனின் மூக்கை பிடித்து ஆட்டினாள். அவனின் அருகில் நின்றிருந்த ஒரு கிழவர் அவர்கள் இருவரையும் விந்தையாக பார்த்தபடி வேறு பக்கம் திரும்பினார்.

அவளின் கையை பற்றினான்.

"அமைதியா இரு மீரா.!" என்று சிறு குரலில் எச்சரித்தான். அவளின் கையோடு சேர்த்து தன் கையையும் பஸ் கம்பியில் பிணைத்தான்.

மீரா பேருந்து விளக்கின் வெளிச்சத்தில் அவனை ரசித்துக் கொண்டே வந்தாள்.

"எவ்வளவு அழகு நீ! நம்பவே முடியல மகி! தங்கத்தால வடிச்சி வச்ச சிலை மாதிரியே இருக்க நீ! ஆனா ரொம்ப சாப்டாவும் இருக்க. ஆனா சிக்ஸ் பேக்கும் வச்சிருக்க.. இது எப்படி?" தலைசாய்த்து கேட்டாள் சந்தேகமாக.

சுற்றி நின்றிருந்த மனிதர்களைப் பற்றி ஒரு நொடியாவது கவலைப்படுகிறாளா என்று அவளுக்கு பதில் அவன் கவலைக் கொண்டான்.

"உன் லிப்ஸ் இருக்கு இல்லையா.." என அவள் அடுத்தது ஆரம்பிக்கும் முன் "உங்க ஸ்டாப்பிங் வந்துடுச்சி.!" என்று அவளை அழைத்துச் சென்று பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டான் மகிழன்.

கையை அசைத்து டாடா காட்டினாள். இவனும் பதிலுக்கு கையசைத்தான்.

வீட்டிற்கு வந்ததும் பாட்டியிடம் முகத்தை காட்டாமல் அறைக்கு நழுவி விட்டான். ஆனால் இரவு உணவின் போது பாட்டி பார்த்துவிட்டாள்.

"என்னாச்சி.?" என்றாள் கவலையாக.

"கீழே விழுந்துட்டேன்.!"

"பசங்களோடு சண்டை எதுவும் போடல இல்ல?" பயத்தோடு கேட்ட பாட்டியிடம் இல்லையென தலையசைத்தான்.

"உன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கேன் மகி.."

"நிஜமா சண்டை எதுவும் போடல பாட்டி!" சிணுங்கலாக சொன்னவனின் தலையை வருடி விட்டாள்.

"நல்ல பையனா நீ வளரணும்.!" என்றாள். அவன் சரியென தலையசைத்தான்.

"உங்க அப்பன் மதியம் போன் பண்ணான். 'அடுத்த வருசம் இங்கேயே அவனை படிக்க வைக்கலாம்ன்னு இருக்கேன். அவன்கிட்ட பேசி அனுப்பி வை'ன்னு சொன்னான்.. ஆனா நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். 'இங்கேயேதான் என் பேரன் படிப்பான். இங்கேயேதான் என் பேரனுக்கு நான் பொண்ணு கட்டி வைக்கப் போறேன். இங்கேயேதான் அவனை கட்டிப்போட்டு வச்சிக்க போறேன். நீ போனை வைடா'ன்னு சொல்லிட்டேன்.!" என்றாள்.

"தேங்க்ஸ் பாட்டி.!" என்றவன் மகிழ்ந்து புன்னகைத்தான். பாட்டி திருஷ்டி கழித்து நெட்டி முறித்தாள்.

"என் அழகு!" என்றுக் கொஞ்சினாள். பாட்டி இப்படி சொல்லவும் அவனுக்கு மீராவின் நினைவுதான் வந்தது.

இரவெல்லாம் உறக்கமே வரவில்லை. ஒற்றை முத்தத்தில் ஒருநாள் தூக்கத்தை பறித்து விட்டாளே என்று அவள் மீது கோபம் கொண்டான். ஆனால் அவளை நினைக்காமல் இருக்கவே முடியவில்லை. பின்னிரவில் உறங்கியபோது கூட கனவில் அவளோடுதான் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான் அவன்.

இப்போது காலையில் பல் துலக்கும் போதும் அவளின் நினைவுதான். அவள் அவனின் ஆன்மாவில் கரைந்தவள் என்பது அவனுக்கே தெரிந்த ஓர் உண்மை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN