நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றாலை சுழற்சியில் உன் சுவாசமே... 02

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் 02

மருத்துவமனையில் மருத்துவர்கள் எல்லாம் அவளின் உடலிற்கு தேவையான இரத்தத்தை செலுத்துவதற்கான இரத்தத்தை ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர்.


அவளது இரத்தம் O -ve என்பதால் அந்த நேரத்தில் எங்கேயும் கிடைக்காமல் போக இரத்தம் வேண்டி அவளுக்காக ப்ளேட் பாங்கிற்கு கால் செய்தனர்...


அதிக இரத்தம் வெளியானதால் இதழினி உயிருக்கு போராடி கொண்டு இருக்க அவளை சேர்த்தவர்கள் மூச்சை பிடித்துகொண்டு நின்றிருந்தனர்..


இதழினியை மருத்துவமனையில் சேர்த்த மாதவி என்போரின் மகனும் O - ve என்பதால் அவனை அழைத்தார்.


உடனே மொபைலை உயிர்பித்த அவன் " சொல்லுங்க அம்மா " என்க


"நீ இப்போ எங்க டா இருக்க எத்தன மணிக்கு ஊருக்கு வருவ..??" என்று கேள்வி கேட்க..


" நான் ஊருக்கு வந்துட்டேன் மா .இப்போ இல்லத்துக்கு தான் பொய்ட்டு இருக்கேன் " என்று கூற


"சரி அப்போ உடனே XXX ஹாஸ்பிடல்க்கு வா இங்க ஒருத்தருக்கு உன்னோட உதவி தேவை படுது சீக்கிரமா வா டா " என்று துரித படுத்த அதை உணர்ந்த அவன் " சரி மா நான் எவ்வளோ சீக்கிரம் வர முடியுமோ வந்துடுறேன்" என்று அழைப்பை அணைத்துவிட்டு வண்டியை ஹாஸ்பிடல் நோக்கி திருப்பினான்.


சிறிது நேரத்தில் அவர் புதல்வனும் வர அவனது ப்ளேட் சாம்பிளை எடுத்துச் சென்று டெஸ்ட் செய்தனர்..


அவனுடனான இரத்தம் அவளுக்கு ஒத்து போகவே வேகமாக செவிலியர் ஒருவர் வந்து அவனை அழைத்துச் சென்றனர்..


சிறிது நேரத்திலே அவனிடமிருந்து இரண்டு யூனிட் இரத்தம் எடுத்தவர்கள் அவளுக்கு அதை நரம்பின் வழியாக புகட்டின்னர்.


இரத்தம் கொடுத்த அவன் மாதவியிடம் சென்று அவர் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டு உறங்கினான் அசதியில்...


அவனை ஆதரவாக தட்டிக் கொடுத்த படியே அறையினுள் இருக்கும் இதழினிக்காக ப்ரார்த்தனை செய்து கொண்டு இருந்தார்...


கிட்ட தட்ட மூன்று மணி நேரம் கடந்திருந்த நிலையில் அவளுக்கு இரத்தம் ஓர் அளவிற்கு ஏறியிருந்தது. அதில் அவளது உடல் நிலை சிறிது தேரியிருந்தது .


செவிலியர் அவ்வப்போது வந்து வந்து பார்த்துக் கொண்டு சென்றனர்.


மடியில் உறங்கிக் கொண்டு இருந்த மகனின் தலையை இறக்கி வைத்தவர் பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்றார்..


"ரொம்ப நன்றி விநாயகப்பா அந்த பொண்ண காப்பாத்தினதுக்கு . அந்த பொண்ணோட உயிர காப்பாத்துற உதவிய எனக்கு கொடுத்து அத செய்ய வச்சிருக்கீங்க இதுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன் நான் செஞ்ச பாவத்துக்கு இனி அந்த பொண்ண நானே வளர்க்க போறேன் " என்று மானசியமாக வேண்டிக் கொண்டார்...


ஒரு மணி நேரம் கழித்து மெதுவாக இமைகளை பிரிக்க முயன்றாள் அவள்.


அதனை கண்ட செவிலியர் வெளியே காத்திருந்த மாதவியை அழைத்துக் கூறிவிட்டு மருத்துவரை காணச் சென்றார்.


மாதவியின் மகன் சிறிது நேரத்திற்கு முன்பே எழுந்ததால் ரெஃபிரஷ் ஆகி வர சென்றிருந்தான்.


மாதவி வெளியே காத்திருக்க மருத்துவர் உள்ளே சென்று அவளை செக் செய்து விட்டு வெளியே வந்தார்.


மாதவி பரிதவிப்புடன் காத்திருக்க " அந்த .." என்று சொல்ல வந்தவர் எப்படி அவர்களை சொல்வது என்று தெரியாமல் தவிக்க அதை புரிந்துகொண்ட மாதவி " அவள்ன்னு சொல்லுங்க டாக்டர் " என்றிட அவரும் அதன்படியே சொன்னார்.


" அந்த பொண்ணுக்கு இப்ப எந்த பிரச்சனையும் இல்ல. நிறைய இரத்தம் லாஸ் ஆனதால அவுங்க டையர்டா ஃபீல் பண்ணுவாங்க மத்த படி வேற எந்த பிரச்சனையும் இல்ல " என்றுவிட்டு சென்றார்..


மாதவி உள்ளே வந்து பார்க்க அவளோ துவண்ட முகத்தோட கவலையே சுரப்பமாக அமர்ந்திருந்தாள்..


இதை கண்ட மாதவிக்கு கஷ்டமாக இருக்க அவளது கைகளை ஆதர்வாக பற்ற சுயநினைவு பெற்றவள் வேகமாக கையை எடுத்துக் கொண்டாள்..


கையை எடுத்தது வருத்தமாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் " உன் பேர் என்ன மா " என்று வாஞ்சனையாக கேட்க


அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாகவே இருந்தாள்..


அதேநேரம் மாதவியின் புதல்வன் உள்ளே வருவதற்கு டோரை பிடித்த நொடி அவனுள் ஏதோ செய்தது. இதயம் படபடக்க தொடங்கியது. எங்கே இதயம் உடலில் இருந்து வெளியே வந்துவிடுமோ என்ற பயம் கூட வந்துவிட்டது...


அதே உணர்வுகளுடனே கதவை திறந்து உள்ளே வந்தவன் கண்டது திருநங்கையாக மாறியிருந்த அவளை தான். சிறிது சிறிதாக பெண்ணவளின் சாயல் பெற்றிருந்தது.


உள்ளே வந்தவன் தன் அம்மாவை பார்த்து " அம்மா நீங்க விடிய காலைல இருந்து இங்க இருக்கீங்க எதுவும் குடிச்சிருக்க மாட்டிங்க போய் டி இல்லன்னா காபியாவது குடிச்சிட்டு வாங்க மா " என்று அவரை வழுக் கட்டாயமாக அனுப்பி வைத்தான் அவன்..


"ஹாய் மிஸ் " என்றவன் நிறுத்தி " சாரி உங்க பேர் தெரியல உங்க நேம் கொஞ்சம் சொல்லுங்க "என்று இடைவெளி விட்டு " ஐம் அனலன் " என்றான் கை நீட்டிய படி...


அவன் தனது பெயர் கேட்கவும் அவனிடம் பார்வையை திருப்பியவள் எதுவும் சொல்லாமல் அவனையே பார்க்க


அதை உணர்ந்த அவன் " உங்க நேம் சொன்னதுக்கப்புறம் என்னைய எவ்ளோ நேரம் வேணாலும் பாக்கலாம் " என்று நக்கலடிக்க


அதை உணர்ந்தவள் அவனை முறைத்து விட்டு " ஐம் இதழியன் " என்று ஒரு ஊந்துதலில் அவள் அவனுக்காக அவர்கள் பெற்றோர் வைத்த பெயரை சொல்ல..


" இனி உன்னோட நேம் இதழியன் இல்ல இதழியனி " என்றான் அதில் இதழியனி என்ற வார்த்தையை அழுத்தி சொல்ல..


அவளுக்கு அப்போதே புரிந்தது இதுவரை பையனாக இருந்தவன் இனி இங்கே இவ்வுலகில் ஒரு திருநங்கையாக வாழ வேண்டும் என்று தோன்றவே இதுவரை இருந்த சிறிது நிம்மதி கூட அவளை விட்டு பறந்தது போல் தோன்றியது...


அதற்கு தகுந்தாற்போல் அவளது முகம் சோகத்தில் மூழ்குவதை கண்ட அனலனால் எதுவும் செய்ய முடியாமல் போக தானும் இதே மாதிரியான நிலையை கடந்து வந்திருப்பதால் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது..


அவளது சோகத்தை மாற்ற நினைத்த அவன் அவள் பக்கத்தில் அமர்ந்து பேச்சு கொடுக்க தொடங்கினான். ஆனால் அவளிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராமல் போக சோர்ந்து போனான்..


அதற்குள் மாதவி உள்ளே வர அனலன் எழுந்து நின்றான்..


"ஏன் மா இவ்வளவு நேரம்..??" என்று அன்னையை பார்த்து கேட்க


" டி குடிச்சிட்டு வரும்போது டாக்டர் கூப்பிட்டார் டா அதான் அவுங்கள போய் பாத்துட்டு வந்தேன் " என்றார்.


" டாக்டர் என்ன சொன்னாங்க " என்று கேட்டு வைக்க


" இன்னைக்கே டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிட்டாங்க டா.. நாம இவள கூட்டிட்டு இல்லத்துக்கு போலாம் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சிட்டு " என்றார்..


" நான் ஏன் உங்க கூட வரனும் எங்க‌ என்னோட அம்மா அப்பா நான் அவுங்க கூட எங்க வீட்டுக்கு தான் போவேன் " என்று இதுவரை அமைதியாக இருந்த இதழியனி பேச


" உங்க அம்மா அப்பா எங்க இருக்காங்க டா சொல்லு உன்ன கொண்டு போய் அங்க விட்டறேன் " என்று மாதவி கேட்க..


வீட்டு முகவரியை கொடுத்தவள் " என்னைய அங்க கொண்டு போய் விட்டுடுங்க ப்ளிஸ் " என்று விட்டு அமைதியாகி விட்டாள்..


ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்து விட்ட அனலன் அவர்கள் இருந்த அறைக்கு வந்து " எல்லாம் ஓவர் மா நம்ப கிளம்பலாம் " என்றுவிட்டு விருட்டென்று அந்த இடத்தை காலி செய்தான்..


பின்னர் , அனலன் இதழியனியையும் மாதவியையும் அழைத்துக்கொண்டு இதழியனி வீட்டிற்கு சென்றான்..


மாதவி முதலில் சென்று கதவை தட்ட சிறிது நொடியில் கதவை திறந்தார் விமலா...


" யார் நீங்க ..??" என்று கேட்டு முடிப்பதற்குள் " அம்மா " என்ற சத்தத்துடன் மாதவியின் முன் இதழியனி வர


" அங்கேயே நில்லு " என்ற கோபக் குரல் உள்ளே இருந்து வரவே அன்னையை நோக்கி வந்த கால்களுக்கு தடைப் போட்டு நிறுத்தினாள்...


"எங்க வந்த எங்களுக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தையும் எடுத்து போகலாம்னு வந்துருக்கியா.." என கோபமாக ராமராஜன் கேட்க..


" அப்பா " என்று அழுகையுடன் கூற


"யாருக்கு யாரு அப்பா அது எல்லாம் நேத்தோட முடிஞ்சு போச்சி. நீ செத்து பொய்ருப்பன்னு நினைச்சேன். நீ கை அறுத்துக் கிட்டத தெரிஞ்சு தான யாருக்கும் தெரியாம ரோட்டுல தூக்கி போட்டுட்டு வந்தேன். நீ செத்துருப்பன்னு நினைச்சி சந்தோஷமா இருக்கலாம்னு பார்த்தா எங்க உசுர எடுக்குறதுக்கே திரும்ப வந்து நிக்கிற " கோபக் குரலில் விஷத்தை கக்க அது சரியான இடத்தில் பாய்ந்தது..


இதனை கேட்ட இதழியனி அதிர்ச்சி அடைந்து அப்படியே சிலை போல் நின்றிருந்தாள்...


ராமராஜனின் பேச்சினை பதினெட்டு வயதான அனலனுக்கு கோபம் கொப்பளிக்க அதை கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டு இருந்தான்...


" சார்..!!அவ உங்க பொண்ணு எதுக்காக இப்படியெல்லாம் பேசுறீங்க . திருநங்கையா மாறுனதுக்கு அவ என்ன பண்ணுவா இது இயற்கையா நடந்த விஷயம் அவ பிறப்பால ஆணா இருந்து பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ தொடங்குறாங்க . இதுல உங்களுக்கு என்ன பிரச்சினை வர போகுது சொல்லுங்க " என்று கோபம் தாளாமல் மாதவி பொரிந்து தள்ள...


அவர் என்ன கூற வருகிறார் என்று கூட புரிந்து கொள்ள முடியாத படி அவரது கோபம் அவரை வைத்திருந்தது..


"நீங்க சொல்றத‌ எல்லாம் கேக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை " என்றார்.


இதழியனி தான் அவரது தந்தையின் பேச்சை கேட்டு சிலைப் போல் ஆனவள் அடுத்து நடந்த எதுவும் அவள் காதில் விழாமல் போனது . தங்கையின் அன்புடன் அழுகையில் வரும் குரலே அவளை பூவுலகம் நோக்கி வர வைக்கப் பட்டது...


"அண்ணா " என்று அழுகையுடன் ஒடி வந்த விதுஷாவை பார்த்து இரு கைகளையும் விரித்து காட்டிய இதழியனியின் கையில் சிக்காமல் பாதுகாத்தார் ராமராஜன்.


விதுவை தன் புறம் நிறுத்தி வைத்த ராமராஜன் விமலாவின் கைகளை இறுக்க பற்றிக் கொண்டு " இன்னும் ஒரு நிமிஷம் இங்க இருந்தீங்க மரியாதை கெட்டுடும் " என்று சொல்லி கதவை சாற்ற முயல....


அன்னையின் பின் இருந்தவன் முன் வந்து இதழியனியின் கையை பற்றி " நீங்க இப்ப வேண்டாம்னு வெறுத்து ஒதுக்கிற உங்க அதுவும் நீங்க பெத்த பொண்ண பெரிய ஆளாக்கி உங்க முன்னாடி ஏன் உங்களுக்கு போட்டியா என் இதழிய நான் கொண்டு வந்து காட்டறேன்.உங்கள மாதிரி ஆளுங்க இருக்கிறதுனால தான் இன்னும் இந்த சமுதாயத்துல திருநங்கைக்குன்னு ஒரு அந்தஸ்து கிடைக்கிறது இல்ல. சமுதாயம்னா நீங்க நான்னு நாமன்னு சேர்ந்தது தான் சமுதாயம்.அத புரிஞ்சிக்க கொஞ்சம் முயற்சி பண்ணுங்க சார். பெற்றோர்களா இருக்கிற நீங்களே இப்படி பண்ணா மத்த எல்லாரும் என்ன தான் பண்ணுவாங்க சொல்லுங்க. நீங்க வேணா பாருங்க உங்களுக்கு போட்டியா இவள கொண்டு வந்து நிறுத்த தான் போறேன். " என்று இதுவரை அமைதியாக இருந்த அனலன் சபத மிட...


அதை பார்த்து நக்கலாக சிரித்தவர் உள்ளிருந்து கதவை இழுத்து சாத்தி விட்டார்...


" அம்மா வாங்க மா போகலாம் " என்று கூறி அவளின் கையை இறுக்க பிடித்து அழைத்து வந்து காரில் அமர வைத்தவன் இல்லம் நோக்கி வண்டியை விட்டான்...


நேராக வண்டி வந்து நின்றது ரெயின்போ இல்லத்திற்கு தான் . முதலில் மாதவி இறங்கியவர் இல்லத்திற்குள் சென்று ஆர்த்தி எடுத்து வந்தார்..


அதற்குள் இதழியனி காரில் இறங்கி சுற்று புறத்தை பார்க்க விரும்பாமல் ஏதோ பொம்மை போல் அங்கே அவனுடன் நின்றிருந்தாள்...


அந்த ரெயின்போ இல்லத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருந்தனர். சிறிதாக அமைக்கப்பட்டதாக இருக்கவே அங்கு சிலர் மட்டுமே இருந்தனர்..


ஆர்த்தி எடுத்து திருஷ்டி கழித்து அவளை உள்ளே அழைத்து வந்தனர் அதுவும் அனலனுடன். இந்த நிகழ்வு தெரிந்து செய்யப்பட்டதோ அல்லது தெரியாமல் செய்யப்பட்டதோ ஆனால் விதி அதன் இணையை அதனுடன் சேர்த்தது..


வீட்டிற்குள் வந்தவளை அவளுக்கான அறையை காட்டி அனுப்பி வைத்தனர்.. அங்கிருந்த எவரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை...


அவளின் எண்ணம் முழுவதும் ஆட்கொண்டது அவளின் தந்தை பேசியதே...


அந்த இரவே அனலன் தன் அன்னையை தேடி சென்றான்.


"அம்மா " என்று கூப்பிட " சொல்லு அனல் " என்றவாறே அவரது வேலையை பார்க்க


"அந்த பொண்ண எப்படி மா நீங்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனீங்க " என்று கேட்க


"உன்ன கூப்பிட பஸ் ஸாடண்டு வரும் போது தான் டா அந்த பொண்ணு ரோட்டுல மயங்கி விழுந்திருந்தா அதுவும் குப்பதொட்டி பக்கத்துல நான் யாரோ சின்ன பையன் குடிச்சிட்டு இப்படி கிடக்கிறான்னு தான் நினைச்சேன் .ஆனா அவளோட கையில இரத்தம் வரத பாத்ததும் அவளோட கைய தூக்கி பாத்தா சூசைட் அட்டம்ட்பு பண்ணிருக்கது தெரிஞ்சது அதான் அவள உடனே என்னோட ஃப்ரண்ட் இருக்கிற ஹாஸ்பிடல சேர்த்து போலிஸ் கேஸ் ஆகாம பாத்துக்கிட்டே. அப்போ தான் தெரிஞ்சது அவ ஒரு திருநங்கைன்னு " என்றார்.


"சரி மா " என்றவன் அந்த இடத்தை விட்டு சென்றான்...


ஒருவாரம் இதேபோல் கழிய அவளை பழைய நினைவுக்கு கொண்டு வரும் பொருட்டு அனலன் தான் சென்று வந்த ட்ரிப் பற்றி அவள் இருக்கும் போது கூறி மகிழ்வான்.


அதை அவள் செவியினுள் சென்றாலும் அவள் மனதிலோ இல்லை மூலையிலோ பதியவில்லை...


அவன் செய்த அனைத்து விடயங்களுக்கும் அவனுக்கு பூஜ்ஜியமே கிடைக்க அவளின் எண்ண ஓட்டத்தை புரிந்து அதை மாற்றும் வழி அறிந்து அவளின் எதிர்ப்பையும் மீறி அவளை காரில் ஏற்றி எங்கோ அழைத்துச் சென்றான்...~சுவாசிக்கும்

 

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Super epi.... I hate ramarajan paavam இதழினி
 

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இது தான் இப்போ திருநங்கைகளோட நிலைமை... சட்டத்தில் அவங்களுக்கு இடம் கிடைத்த போதிலும் சமூகத்தில் இதுவரை அவங்தளுக்கான இடம் கிடைக்கவில்லை😢😢😢
Waiting for next epi Ashu ma😍😍😍
 
OP
Ashwathi

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இது தான் இப்போ திருநங்கைகளோட நிலைமை... சட்டத்தில் அவங்களுக்கு இடம் கிடைத்த போதிலும் சமூகத்தில் இதுவரை அவங்தளுக்கான இடம் கிடைக்கவில்லை😢😢😢
Waiting for next epi Ashu ma😍😍😍
ஆமா அக்கா.. இந்த சமுதாயமா இருக்கிற நாம அவுங்கள ஏத்துக்க மாட்டேங்கிறோம்...😣😢
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN