கனவே 15

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மைவிழி தங்களின் வீட்டிற்குள் வந்த இளைஞனை கண்டு அவனை நெருங்கினாள்.

"யார் நீங்க?" என்றாள்.

"நான்.. மகிழன்!"

அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தவள் "எந்த மகிழன்?" என்றாள். ஒருவேளை தான்தான் மகிழனின் முகத்தை மறந்து விட்டோமோ என்று குழம்பினாள் அவள்.

"உங்களுக்கு அறிமுகமான அதே மகிழன்தான். உங்களோடு கொஞ்சம் பேசணும். உங்க பேரண்ட்ஸோடும் பேசணும்.." என்றான்.

மைவிழி மீராவின் அறை பக்கம் பார்த்தாள்.

"அவ.. அவக்கிட்ட சொல்ல வேணாம்." என்றான்.

மைவிழி அவனை வீட்டின் மறு பக்கம் அழைத்துச் சென்றாள். அப்பாவின் அறைக்குள் நுழைந்தாள்.

"யார் இவர்?" என கேட்டவரிடம் அனைத்தையும் விவரித்தான் மகிழன்.

மைவிழி பரிதாபத்தோடு அவனைப் பார்த்தாள். அவனுக்கு உண்டான அத்தனை பிரச்சனைகளுக்கும் தன் தங்கைதான் காரணம் என்பதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

இந்த சில நாட்களில் நிறைய பிரச்சனைகளை சந்தித்து விட்டதாலோ, இல்லை மீராவின் கண்ணீரை பார்த்துப் பார்த்து சலித்து விட்டதாலோ என்னவோ மகிழன் மீது அவருக்கு கோபம் கூட வரவில்லை. முற்றும் துறந்த ஞானியின் நிலையில் அமர்ந்தபடி அவனை பார்த்தார்.

"என் தங்கச்சி சார்ப்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன். ஆனா நீங்க நல்ல முறையில் சொல்லிட்டு அவளை விட்டு விலகி போயிருக்கலாம். உங்களாலதான் அவ இப்ப அரை ஜீவனா இருக்கா." என்றாள் கோபத்தோடு.

"சின்ன பிள்ளைங்க விளையாட்டா வாழ்க்கை போயிடுச்சி. உங்களால அவளுக்கு நிறைய நஷ்டம். அதையெல்லாம் உங்கக்கிட்ட சொல்ல விரும்பல. எல்லாம் அவ விதி. அவளை மறந்துட்டு போய் நீங்களாவது உங்க வாழ்க்கையை பாருங்க." என்றார் அப்பா.

மகிழன் இடம் வலமாக தலையசைத்தான்.

"எனக்கு எல்லாம் தெரியும். எல்லாம் நான் செஞ்ச தப்புதான். அவ மேல எந்த தப்புமே இல்ல. நான் அவளை விட்டுப் போனதும் தப்பு. சொல்லாம போனதும் தப்பு. நான் செஞ்ச தப்புக்கு என்ன செய்றதுன்னே தெரியல. ஆனா நான் என்ன செஞ்சாலும் அதுக்கு உங்க அனுமதி வேணும்." என்றான்.

மகிழன் சொன்ன விசயம் கேட்டு சிரித்தார் அப்பா.

"எங்க பொண்ணு உயிரோடு இருப்பதே எங்களுக்கு போதும்ப்பா. நீங்க யாரும் வாழ்க்கை தர அளவுக்கு அவ வாழ்க்கை மோசம் கிடையாது. அவ விதியை இனி அவளே பார்த்துப்பா. தயவு செஞ்சி போயிடுங்க இங்கிருந்து. அவ உங்களை பார்த்தா அவளோட மனசு இன்னும் அதிகமா வருத்தப்படும். அவளே அவ கஷ்டத்துல இருந்து வெளியே வந்துப்பா.."

அப்பா மேலும் சொல்லும் முன் அவரின் காலில் விழுந்தான் மகிழன்.

"ப்ளீஸ் மாமா. அவ என்னுடையவ மாமா. அவளை இப்படி விட என்னால முடியாது. நான் செஞ்ச தப்புக்கு நான்தான் தண்டனை அனுபவிக்கணும். அவ ஏன் அழணும்? தயவு செஞ்சி என்னை மன்னிச்சி ஏத்துக்கங்க.!" என்றான்.

அப்பாவும் மைவிழியும் அதிர்ச்சியில் விழி விரித்து நின்றனர்.

"என் கால்ல விழுந்துட்டு.. எழுப்பா.." என்றார்.

நெடுஞ்சாண் கிடையாக கிடந்தவன் இடம் வலமாக தலையசைத்தான். "அவ இல்லாம என்னால வாழவே முடியாது. இவ்வளவு நாளா தப்பு பண்ணிட்டேன். இனியாவது அவ வாழட்டும். அனுமதி கொடுங்க மாமா!" என்றான்.

அப்பா மைவிழியை பார்த்தார். மைவிழி சுவற்றை வெறித்தாள்.

"இது செட் ஆகாது. நீங்க கிளம்புங்க மகிழன். இனியாவது நல்ல வாழ்க்கை வாழுங்க.. கதிரும் மத்தவங்களும் வெளியே போயிருக்காங்க. அவங்க வந்தா பிரச்சனையாகும். அப்புறம் நீங்க வந்தது மீராவுக்கும் தெரியும். அவ மனசொடிஞ்சி அழுவா. அவ அழுதே சாக எங்களுக்கு விருப்பம் இல்லை. நடந்தது அத்தனையும் கெட்ட கனவா நினைச்சி மறந்துட்டு நீங்க உங்க வாழ்க்கையை வாழுங்க." என்றாள் அவள்.

"சிஸ்டர்.. நான் உங்களை ரொம்ப நம்பினேன். நீங்களே இப்படி சொல்றிங்களே.. எல்லோரும் இப்படி ஒதுங்கிப் போனா அப்புறம் அவ லைஃப் என்னாகறது? என் லைஃப்தான் என்னாகறது? ஏதோ பருவ பிள்ளைங்க கொஞ்சம் அசால்டா சின்ன தப்புங்க பண்ணிட்டோம். அதுக்காக அப்படியே கல்லை கட்டி கடல்ல தள்ளி விட்டுடுவிங்களா?" எனக் கேட்டவன் மாமனாரின் காலை இன்னமும் விடவேயில்லை.

"இந்த சில்லறை பசங்க சகவாசமே எங்களுக்கு வேணாம். போய் உங்க வீட்டு பெரியவங்களை கூட்டி வா. எதுவா இருந்தாலும் நான் அவங்களோடு பேசிக்கிறேன்." என்றார் அப்பா.

மகிழன் மெதுவாக எழுந்து நின்றான். சட்டையை துடைத்து விட்டுக் கொண்டான்.

"என் பேரண்ட்ஸ் நாளைக்கு வருவாங்க மாமா.." என்றுவிட்டு வெளியே நடந்தான்.

அப்பா தலையை சிலுப்பிக் கொண்டார்.

"எல்லாம் விதி." என்றார்.

மாலையில் கதிரும் மற்றவர்களும் வீடு வந்தார்கள். மைவிழி அவர்களை தனி அறைக்கு அழைத்து விசயத்தைச் சொன்னாள்.

"அவனைக் கழுத்தைப் பிடிச்சி வெளியே துரத்தாம சம்பந்தம் பேசி முடிச்சிருக்கிங்களா?" என எரிந்து விழுந்தான் அதியன்.

"சத்தம் போட்டு பேசாதிங்க. இது எதுவும் மீராவுக்கு தெரியாது.." எச்சரித்து விட்டு கதவை தாளிட்டு விட்டு வந்தாள் மைவிழி.

"அவன் வந்ததும் எங்களுக்குப் போன் பண்ணி இருக்கலாம் இல்ல? அவனை கொன்னுட்டு அப்புறம் நீதி நேர்மை பேசி இருக்கலாம்." என்றுச் சிறு குரலில் கத்தினான் செழியன்.

"நடந்தது எல்லாத்துக்கும் அவன் மட்டும்தான் காரணம் விழி. ஆனா அத்தனையும் மறந்துட்டு அவனோடு பேசியிருக்க. உன்னை இவ்வளவு நாளும் ரொம்ப உயர்வா நினைச்சிருந்தேன் நான்." கதிர் சொல்லி முடித்த நேரத்தில் அவனருகே வந்து அவனின் காலில் மிதித்தாள் மைவிழி.

"என்ன? நான் உயர்ந்தவன்னு உன்கிட்ட பட்டயம் எழுதி தந்தேன்னா? நீ யோக்கியத்தோட மறு உருவம் மாதிரி என்னை எடை போட்டுட்டு இருக்க.." என்று திட்டியவளை கண்டு அமைதியாக வாயை மூடிக் கொண்டான் கதிர். அதற்கு மேல் அவளிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் அளவிற்கு அவன் அப்பாவி அல்ல. வலித்த காலை உதறி விட்டுக் கொண்டான்.

"விழி.. அவங்க சகவாசம் நமக்கு வேணாம். மீராவுக்கும் அவனுக்கும் ஒட்டாது." அமைதியாக எடுத்துக் கூறினான் செழியன்.

"ஏன் அவளோட கற்பு கெட்டுப் போச்சி, அதனால அவளுக்கும் அவனுக்கும் செட் ஆகாதுன்னு சொல்றியா?" எனக் காட்டமாக கேட்டாள்.

அதியன் இல்லையென்று தலையசைத்தான்.

"இது மீராவுக்கு பிரச்சனைகளைதான் கொண்டு வரும். அவ ரொம்ப நொந்துப் போயிருக்கா. இவனை பார்த்தாலே மறுபடியும் பிரச்சனைதான் வரும்."

மைவிழி அவர்கள் மூவரையும் கேலியாக பார்த்தபடி சென்று நாற்காலியில் அமர்ந்தாள்.

"அவன் ஒன்னும் அவளை ரேப் பண்ணல. மீரா மேல உங்களுக்கு இருந்த பாசம் இந்த பிரச்சனைக்கு பிறகு கருணையா மாறிடுச்சி. நாய்க்குட்டியை பாதுகாக்குற அதே கருணை. அவளுக்கு அந்த கருணை தேவையா கூட இருக்கலாம். ஆனா எனக்குப் பிடிக்கல. அவனும் அவளும் லவ் பண்றாங்க. முகம் சிதைஞ்சதும் அவன் பயந்துட்டான். இவ ஏத்துக்காம போயிட்டா என்ன பண்றதுங்கற பயம். அவனோட நிலையில் இருந்துப் பார்த்தா அவனோட மனநிலை உங்களுக்கும் புரியும். அவன் அடிச்சதை காரணம் காட்டி இவளை இப்படி பண்ணது அந்த பசங்க. ஆனா தப்பு மீரா மேலயும் இருக்கு. அவளை யார் அவங்களை நம்ப சொன்னது? அந்த மாதிரி சந்தர்ப்பம் உருவாக மகி காரணம்ன்னா அதுல சிக்கிய மீரா மேலேயும் துளியாவது தப்பு இருக்கு. அவங்க காதலிச்சாங்க. அவங்க பிரச்சனைகளை சந்திச்சாங்க. இப்ப அவங்களே வாழவும் ஆசைப்படுறாங்க. அவங்களுக்கு புத்தி வேணா நாம சொல்லலாம். ஆனா அவங்களை தடுத்து நிறுத்த நமக்கு எந்த உரிமையும் கிடையாது.." என்றாள்.

மைவிழி சொன்னதை அவர்களால் உடனே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதே சமயம் மறுத்து சொல்லவும் மனம் வரவில்லை.

நான்கைந்து நாட்கள் கடந்தது. இடையில் மீரா ஒருமுறை வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்று கதிரால் பிடிக்கப்பட்டு மீண்டும் அறைக்குள் சிறை வைக்கப்பட்டாள்.

மகிழனின் பெற்றோர் மீராவின் குடும்பத்தோடு சில முறை போனில் பேசி இருந்தார்கள்.

ஒரு நாள் காலையில் மீரா எழும்போதே "இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வராங்க.." என்றுச் சொன்னாள் மைவிழி.

மீரா கனவு காணுகிறோம் போல என்றெண்ணி மீண்டும் படுக்கையில் விழுந்தாள்.

"உன்னைத்தான் மீரா. தயவுசெஞ்சி இன்னைக்காவது இந்த கையை கீறுவது, காலை கீறுவதுன்னு பண்ணி வைக்காம நல்ல பொண்ணா இரு. இது உன் நல்லதுக்குதான்." என்றாள் மைவிழி.

மீரா படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள். அதிர்ச்சி அப்படியே அவளிடம் தெரிந்தது.

"என்னக்கா சொல்ற?" எனக் கேட்டாள்.

மைவிழி அந்த அறையை சுத்தம் செய்துக் கொண்டே திரும்பி இவளைப் பார்த்தாள்.

"உன்னைப் பொண்ணு பார்க்க வராங்க."

"நா.. நா.. என்னை பத்தி எல்லாம் தெரியுமா?" தயங்கிக் கேட்டவளிடம் ஆமென தலையசைத்தாள் அவள்‌.

"பட் ஐ லவ் மகி!" தரைப் பார்த்துச் சொன்னவளின் அருகே வந்து கவலையாக தலையை வருடி தந்தாள் மைவிழி.

"விட்டுட்டு போனவனை நினைச்சி வாழ்வதைப் போல முட்டாள்தனம் ஏதும் இல்ல. உன் லவ் எவ்வளவு வேணாலும் உயர்வா இருக்கட்டும். ஆனா எதிர் சைட்ல எந்த ரியாக்சனும் இல்லாத போது காத்திருந்து என்ன லாபம்? வர பையனை பாரு. பேசு. பழகு. அப்புறம் உன் முடிவை சொல்லு. உன்னை மீறி உன் வாழ்க்கையில் எதுவும் நடந்துட போறது இல்ல.!" என்றாள்.

மீராவின் கீழ் இமைகள் நனைந்தது.

"அன்னைக்கு எனக்கு அப்படி நடக்க காரணம் நான்தானா?"

மைவிழி பெருமூச்சி விட்டாள்.

"கண்டவனையும் நம்பி போனது உன் தப்புதான். எல்லோரும் நம்ம அப்பாவை மாதிரி, நம்ம மாமாக்களை மாதிரி, சரணை மாதிரி, மகியை மாதிரியே இருப்பாங்கன்னு நம்பியது உன் தப்புதான். உள்ளுணர்வுக்கு கொஞ்சமாவது மரியாதை தந்திருக்கணும் நீ!" என்றாள்.

மீராவின் கன்னங்கள் நனைந்தது. எதுவும் சொல்லவில்லை அவள்.

ஒன்பது மணி வாக்கில் "சுடுதண்ணி ரெடி.. வந்து குளி.." என்று மைவிழி அழைக்கவும் படுக்கையிலிருந்து கீழே இறங்கியவள் "பொண்ணு பார்க்க வரவங்க நட்டு கழண்டவங்களா? நடக்காத காரியத்துக்கு எதுக்கு டைம் வேஸ்ட் பண்றாங்க?" எனக் கேட்டபடியே குளியலறை நோக்கி நடந்தாள்.

குளியலறையின் கதவை உள்தாழ்பாள் போட்டு விட்டு கதவின் மீது சாய்ந்து நின்றாள் மைவிழி.

மீரா தனது உடைகளை களைய ஆரம்பித்தாள். அவள் தற்கொலை முயற்சிகளை ஆரம்பித்த பிறகு அவளைக் குளிக்கும்போது கூட தனியாக விடவில்லை மைவிழி.

மீரா வென்னீரை எடுத்து தலையோடு ஊற்றினாள்.

"இந்த குளியல் என் கஷ்டங்களையும் சேர்த்து கழுவிட்டா நல்லாருக்கும் இல்ல?" எனக் கேட்டாள்.

மைவிழி தங்கையின் முகம் பார்த்தாள். தலையோடு வழிந்த தண்ணீரில் கண்ணீரும் கலப்பது பார்க்கும்போதே புரிந்தது.

"காலம் கழுவிடாத கஷ்டம் இந்த பிரபஞ்சத்துலயே கிடையாது.!" என்றாள்.

மீரா சிரித்தாள். வலி கலந்த சிரிப்பு.

"ரொம்ப நோகுது அக்கா. ஆனா அதுல காமெடி என்ன தெரியுமா? என்னையும் பொண்ணு பார்க்க வராங்கங்கற சேதிதான். ஆனா சிரிப்புதான் வரல. என் வாழ்க்கையே நாடகம் போல இருக்கு!" என்றவள் நடுங்கும் விரல்களோடு ஷேம்பு பாட்டிலை எடுத்தாள்.

அவள் எப்போதும் பயன்படுத்தும் அரப்பு தூள் கேட்பாரற்று ஷெல்பின் மீது கிடந்தது. மகிழனுக்காக என்றுச் சாக்குச் சொல்லி மாதத்திற்கு அரை கிலோ அரப்பு தூளை காலி செய்பவள் இன்று குளிப்பது கூட வீண் என நினைத்து சும்மாயிருந்தாள்.

மைவிழி மேல் ஜன்னலில் தெரியும் முருங்கை மரத்தை வெறித்தபடி அமைதியாக இருந்தாள். அவளின் குழந்தையை மாமியார் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மீராவுக்கு ஆக்ஸிடென்ட் ஆன நாளிலிருந்தே பாதி நாட்கள் இங்கேதான் இருந்தார்கள் கதிரும் இவளும். இந்த ஒரு மாதமாய் முழுதாக இங்கேயே தங்கி விட்டார்கள்.

குழந்தையின் நினைவு வந்தது மைவிழிக்கு. அப்புறமாக போன் செய்து பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

குளித்து முடித்து உடையை மாற்றிக் கொண்டு வந்தாள் மீரா. மைவிழி கதவை திறக்க இருந்தாள். அவளின் கையை பற்றி நிறுத்தினாள் மீரா.

என்னவென்பது போல தங்கையை பார்த்தாள்.

"மாமாக்கிட்டயும் மத்தவங்ககிட்டயும் சாரி கேட்டேன்னு சொல்லு அக்கா. அவங்க மேல தப்பு இல்ல.. நான் எவ்வளவோ கன்ட்ரோல் பண்ணாலும் ஜென்ஸ் யாராவது பக்கத்துல வந்தா உடம்பு நடுங்க ஆரம்பிச்சிடுது. அவங்க என்னை தப்பா நினைக்க வேணாம். நான் அவங்க யாரையும் துளி கூட தப்பா நினைக்கல.. ஆனா.." என்றுத் திணறியவளை தன்னோடுச் சேர்த்து அணைத்துக் கொண்டாள் மைவிழி.

மகிழன் பேசியதன் அர்த்தம் இப்போது கொஞ்சம் புரிந்தது அவளுக்கும்.

மைவிழி மீராவிற்கு தலை வாரி விட்டாள்.

"டைம் பாஸ்க்கு பொண்ணு பார்க்க வராங்க அக்கா. அதுக்கு அலங்காரமெல்லாம் செய்யணுமா? பார்த்த செகண்டே பொண்ணு வேணாம்ன்னு சொல்லிட்டு கிளம்ப போறாங்க. அதுக்கு எதுக்கு இவ்வளவு கேர் எடுத்து ரெடி பண்ணி விடுற?" வருத்தமாக கேட்ட மீராவின் நெற்றிக்கு பொட்டு வைத்து விட்டவள் "உன்னை நாங்க கட்டாயப்படுத்தல. அவங்களுக்கு உன்னை பத்தி முழுசா தெரியும். அதுக்கு மேல உன் இஷ்டம். காலம் முழுக்க இப்படியே இருப்பதா இருந்தாலும் உன் இஷ்டமே. ஆனாலும் இப்படி அவசரப்படுத்துறதுக்கு ரொம்ப சாரி. உன்னை பழையபடி கொண்டு வர எங்களுக்கு தெரியல.‌" என்றாள்.

அக்காவின் பீடிகை மீராவுக்கு புரியவில்லை.

மதிய நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டதாக சொல்லி மீராவை அழைத்துக் கொண்டு கூடத்திற்கு சென்றாள் மைவிழி. மீராவிற்கு சிரிப்பு வரும் போலவே இருந்தது. சிரமப்பட்டு அமைதியாக இருந்தாள்.

கூட்டத்தை விட்டு ஒரு ஓரமாகவே தங்கையை நிறுத்தினாள் மைவிழி. ஆண்கள் யாரையாவது நெருங்கி நின்று விட்டு பிறகு தங்கை கை கால் நடுக்கத்தோடு சிரமப்படுவதை விரும்பவில்லை அவள்.

"பூ வச்சிக்க மீரா.." என்றபடி எழுந்து வந்தாள் வித்யா.

எங்கேயோ கேட்ட குரல் போல இருக்கவும் மீரா நிமிர்ந்துப் பார்த்தாள்.

வித்யா பூ சரத்தோடு இவளருகே வந்தாள். மீரா அமர்ந்திருந்த மற்றவர்களை பார்த்தாள்‌. மகிழனை இந்த நிலையில் பார்ப்பதற்கு பதிலாக நெருப்பில் குதிக்கவும் அவள் தயார். அவளின் முகத்தில் தெள்ள தெளிவாக தெரிந்த பயத்தை கண்டு விட்டு அவளின் புஜத்தை பற்றினாள் மைவிழி. மீரா இங்கிருந்து ஓடி விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவளுக்கு.

ரோகிணியும் வசந்தும் ஒரு சோஃபாவில் அமர்ந்திருந்தனர். அவர்களின் அருகே மகிழனை போல கொஞ்சம் சாயல் உள்ள ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். மகிழன் உயரம் இருக்கலாம். உருவம் மட்டும் கொஞ்சம் ஒல்லியாக இருந்தது. அவனருகில் குழந்தை ஒன்றை மடி மீது வைத்தபடி அமர்ந்திருந்தான் ஒருவன்.

மீரா வெளிறிப் போனவளாக தன் புஜத்தை அக்காவிடமிருந்து உருவிக் கொள்ள முயன்றாள்.

"அமைதியா நில்லு மீரா.." என்று அவளின் காதோரம் கடித்தாள் மைவிழி.

மறுப்பாக தலையசைத்தவளுக்கு முகமெல்லாம் வியர்த்து விட்டது. அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றாள். வித்யாவால் பூ சூட முடியவில்லை.

"ஹாய் மீரா.." என்றபடி எழுந்து நின்ற அந்த இளைஞனை பயத்தோடு திரும்பிப் பார்த்தாள் மீரா.

"நான் அகிலன். உன் எக்ஸ் லவ்வர் மகிழனோட அண்ணன். உன்னைக் கல்யாணம் பண்ணிக்க வந்திருக்கேன் நான்!" என்றான்.

மீராவின் உள்ளங்கைகள் கூட வியர்த்து விட்டது. தலை கிறுகிறுப்பது போல இருந்தது. அக்காவின் மீது சாய்த்துக் கொண்டாள். அம்மா பார்த்து விட்டு இவளருகே ஓடி வந்தாள்.

"இந்தா மீரா தண்ணி குடி.!" என்று சொம்பை நீட்டினாள்.

மீரா நடுங்கும் கரத்தோடு தண்ணீரை குடித்து முடித்தாள்.

கை நடுக்கத்தால் பாதி தண்ணீர் சேலையில் சிந்தியது.

"பயப்படும் அளவுக்கு ஒன்னும் இல்ல. நான் சிங்கம் புலி இல்ல!" என்றவனை வெறித்துப் பார்த்தவள் "சாரி நீங்க தப்பான இடத்துக்கு வந்திருக்கிங்க." என்றாள் தடுமாற்றமாக.

எதிரில் இருந்தவன் பேண்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் விட்டபடி விட்டத்தை பார்த்தான். பெருமூச்சி விட்டுவிட்டு இவளைப் பார்த்தான்.

"என் தம்பி படிக்க போன இடத்துல ஒரு இங்கிலீஸ்கார பொண்ணை காதலிச்சி அங்கேயே கல்யாணமும் பண்ணிக்கிட்டான். நீ.." அவன் சொல்வதை நிறுத்தி விட்டு மீராவின் கண்ணீரைப் பார்த்தான்.

சில நொடிகள் மௌனமாக இருந்தவன் "அவனுக்கு உன் மேல ப்ரியம் இல்ல. ஆனா அவன் செஞ்ச தப்பாலதான் உனக்கு இப்படி இரண்டு ஆக்சிடென்ட் ஆச்சி. நாங்க பாவம் புண்ணியத்துல அதிக நம்பிக்கை உள்ள குடும்பம். அவன் செஞ்ச தப்பை எங்களால சரி செய்ய முடியாது. அவனோட கல்யாணத்தையும் இதுக்கு மேல எங்களால் மாத்த முடியாது. அட்லீஸ்ட் அவனுக்கு பதிலா நாங்களாவது பரிகாரம் பண்ணலாம்ன்னுதான் வந்திருக்கோம். உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா பாதி பாவமாவது போகும்ன்னு எங்க பாட்டி நம்புறாங்க.!" என்றான்.

மீரா தனக்குள் சிரித்தபடி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

அப்பாவை பார்த்தாள். அவர் அமைதியாக அமர்ந்திருந்தார். மாமன்கள் யாரையும் வீட்டில் காணவில்லை. சரணும், பிருந்தனும் கூட அங்கே இல்லை. எல்லோரும் வேண்டுமென்றே இந்த சந்தர்ப்பத்தில் தன்னை சிக்க வைத்து விட்டுத் தப்பி ஓடி உள்ளார்கள் என்றுப் புரிந்துக் கொண்டாள்.

நிற்கவே சிரமம். பேசுவது அதை விட சிரமம்.

இந்த இடைவேளையில் எப்படியோ பூவை அவளின் கூந்தலில் சொருகி விட்டு குழந்தையோடு இருந்த ஆணின் அருகே சென்று அமர்ந்துக் கொண்டாள் வித்யா.

மீரா நடுங்கும் கரத்தை இறுக்கிக் கொண்டாள்.

"சா.. சாரி! உங்களோட பரிகாரம் எனக்குத் தேவையில்ல. நீங்க கிளம்பலாம்." என்றாள்.

மீரா அங்கிருந்து திரும்பினாள்‌. அவள் கிளம்ப முற்படும் முன் அவளின் எதிரே வந்து நின்றான் அகிலன்.

மீரா உடல் நடுங்க மைவிழியை ஒட்டிக் கொண்டாள். மைவிழி எதிரில் நின்றவனை மன்னிப்பு கோரும் விதமாக பார்த்தாள்.

"உன் அனுமதி கேட்க எனக்கும் ஆசைதான். ஆனா என் தம்பி செஞ்ச தப்புக்கு உன் வாழ்க்கை வீணா போறதை நான் விரும்பல!" என்றான்.

மீரா இல்லையென தலையசைத்தாள்.

"என் மகியால என் வாழ்க்கை எப்படி வீணா போகும்?" சிரமத்தோடு மூச்சு விட்டபடி கேட்டவள் "அவனுக்கு கல்யாணம் ஆனதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. கால் சீக்கிரம் நல்லாகிடும். எல்லாமே நல்லாகிடும்." என்றாள் வராத புன்னகையை சிரமப்பட்டு வரவைத்தபடி.

அகிலன் அவளின் தாடையை பற்றினாள். மீராவின் நடுங்கும் உடம்பை பொருட்படுத்தாமல் தாடையை உயர்த்தினான். கழுத்தில் வட்டமாக காயங்கள் இருந்தது. எத்தனை முறை தூக்கு மாட்ட முயன்றாள் என்று அவனால் கணக்கிட முடியவில்லை. மீராவின் இதயம் பல மடங்காக துடித்துக் கொண்டிருந்தது.

அவளின் கையை பற்றினான். அவன் மணிக்கட்டை பற்றும் போதே ஆறாத காயம் அவனின் உள்ளங்கையில் கசகசத்தது. மீரா வலியோடு தன் கையை பின்னுக்கு இழுக்க முயன்றாள்.

"நல்லா இருக்கற மாதிரி எனக்கு ஒன்னும் தோணல." என்றான் அவன்.

அவளின் முகத்தில் தெரிந்த வலியை கண்டுவிட்டு "அவ கையை விடுடா.!" என்று திட்டினார் வசந்த்.

"ஓ.. சாரி!" கையை விட்டுவிட்டு பின்னால் நகர்ந்தவன் கர்ச்சீப்பை எடுத்து தன் கையை துடைத்துக் கொண்டான்.

மீராவுக்கு இவனை பார்க்கும் போதே பிடிக்கவில்லை. 'ச்சே.. என்ன இது? முதல்ல உனக்கு எப்ப மகியை பிடிக்காம போச்சி?' எனத் தன்னையே கேட்டுக் கொண்டாள்.

"இது என் லைஃப். நான் ஹேண்டில் பண்ணிப்பேன். நீங்க போகலாம்." என்றாள்.

"தண்ணி சொம்பை சுயமாக தூக்க முடியல. நீ உன் லைப்பை ஹேண்டில் பண்ண போறியா?" கேலியாக கேட்டவனை முறைத்தாள் மீரா.

"எல்லை மீறிய பேச்சு. உங்களுக்கு தெளிவாவே சொல்லிடுறேன். நான் மகியை ரொம்ப லவ் பண்றேன். அவனை மறக்க இந்த ஜென்மத்துல என்னால முடியாது!" என்றாள்.

"அது உன் கவலை!" என்று விட்டேறியாக சொன்னவனை பயத்தோடு பார்த்தவள் "மகியோட அண்ணன் ஒரு சைக்கோ!" என்று முணுமுணுத்தாள்.

தங்கையின் சொல் கேட்டு வெகு நாளைக்கு பிறகு மைவிழிக்கு சிரிப்பு வந்தது. அவசரமாக வாயை பொத்திக் கொண்டாள்.

"நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க விரும்பல. மகியோடு நான் வாழ்ந்ததே இன்னும் பத்து ஜென்மத்துக்கு தாங்கும். ப்ளீஸ் நீங்க போயிடுங்க. நீங்க மகிக்கு துரோகம் செய்றது அவனுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவான்!" என்றாள் மீரா.

அகிலன் தன் போனை எடுத்தான்.

"அவன்கிட்ட விசயத்தை சொல்லிட்டுதான் வந்தேன். அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. இன்னும் சொல்ல போனா உன்னை பத்தியோ என்னை பத்தியோ அவனுக்கு எந்த கவலையும் இல்ல.. உனக்கு சந்தேகமா இருந்தா போன் பண்ணி தரேன்‌.‌ பேசுறியா?" எனக் கேட்டான்.

மீரா அவசரமாக தலையசைத்தாள். இப்போதுதான் திருமணம் முடித்து நல்வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். அவனோடு பேசி அவனின் மனநிலையையும் சோகத்தில் ஆழ்த்த விரும்பவில்லை அவள். அவன் நல்லபடியாக வாழ்கிறான் என்ற விசயமே அவளுக்கு பெரு மகிழ்ச்சியை தந்தது.

"இது பாவ புண்ணிய கணக்குக்காக பண்ற கல்யாணம்தான். மத்தபடி வேற எதுவும் இல்ல. உனக்கு இது சரி வராதுன்னா கூட ஓகே. இதுக்கு இன்னொரு பிராயச்சித்தம் இருக்கு." என்றவன் அவளை விட்டு நகர்ந்து நின்றான்.

அது என்ன பிராயச்சித்தம் என்று கேட்கவும் விரும்பவில்லை மீரா. அவர்கள் இங்கிருந்து சென்றாலே போதும் என்று இருந்தது அவளுக்கு.

"அப்பா அவனை இந்தியா வர வைங்க. அவனை ரத்த மாதேவிக்கு பலி தந்துடலாம். இந்த பொண்ணோட பாவம் நம்ம வீட்டை சுத்தாம இருக்கணும்ன்னா அதுக்கு அவனை பலி தந்தா போதும்னு நினைக்கிறேன்!" என்றவன் தன் தந்தையை நோக்கி நடக்க இருந்த நேரத்தில் அவசரமாக அவனின் கையை பற்றினாள் மீரா.

"வா.. வாட்? யாரை.. யாரை பலி தர போறிங்க?" என்று அலறலாக கேட்டாள்.

"அது உனக்கு அநாவசியம்ன்னு நினைக்கிறேன்!" என்றவன் தன் கையை பார்த்தான். இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்தது அவளின் கரம்.

"ப்ளீஸ்.. மகியை ஏதும் பண்ணிடாதிங்க.. அவனுக்கும் இந்த பிரச்சனைகளுக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இல்ல. என் பாவம் எதுவும் உங்க வீட்டை சுத்தாது. நான் ப்ராமிஸ் பண்ணி கூட தரேன் ஆனா அவனை டிஸ்டர்ப் பண்ணாதிங்க. ப்ளீஸ்!" என்றாள்.

அகிலன் அவள் பேசியதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல நின்றான்.

"அப்பா நீங்களாவது சொல்லுங்க.. மகிக்கு ஏதாவது ஆனா நான் நிஜமா செத்துடுவேன்!" என்றாள்.

அவளை தன் பக்கம் திருப்பினான் அகிலன்.

"நீ நார்மலாவே இல்ல. அதனாலதான் அவனுக்கு ஏதாவது ஆகிட்டா நீ செத்துடுவேன்னு சொல்ற. அப்புறம் அந்த பாவமும் எங்களைதான் சுத்தும். உனக்கு நல்ல புத்தி வேணும். அதுக்காகவாவது அவனை பலி தரணும்ன்னு நினைக்கிறேன்!" என்றான்.

"நோ.. ப்ளீஸ்.. நீங்க சொல்றது எதுனாலும் கேட்கிறேன். அவனை மட்டும் விட்டுடுங்க!" என்றாள் அவனின் சிவந்த கண்களை பயத்தோடு பார்த்தபடி.

"இந்த லவ்வர்ஸை வழிக்கு கொண்டு வருவதெல்லாம் ரொம்ப சுலபம் போல. ப்ளாக்மெயில் நல்லா வொர்க் ஆகுது!" என்றவனின் தொனியில் கேலி ஒலித்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN